• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நான் நீ நடுவில் பேய் -4

writer naga

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 23, 2024
40
57
18
Chinna Rettaiyurani Ramanathapuram
[


தொடர்_4
***********


👻👻👻நான் நீ நடுவில் பேய்👻👻👻
************************""""""**********"


இதுவரை...


"கூல் கூல் டி எதுக்கு டி இப்போ டென்ஷன் ஆகுற ?அவளைத்திசைதிருப்பச் சொன்னேன்"


"ஹாஹா பயந்துட்டீங்களா?" என்று சொல்லிச் சிரித்தாள்


இனி...


" என்ன டி கிண்டலா ? "


"பின்ன என்னங்க ..?"


"அவகிட்ட என்ன விளையாட்டு உங்களுக்கு அவமேல கண்ணு அதானே...."


"அடிப்போடி ஒரு பேயோட குடும்பம் நடத்தவே முடியல இன்னொரு பிசாசா
என்னால முடியாதுடி"
என்றவனின் தோள்பட்டையில் ஓங்கி ஒரு அடிவைத்தாள்


"எத்தனை நாள் கோவம் டி இந்த அடி அடிக்கிற?"


"சாரிங்க சாரிங்க சும்மா விளையாட்டுக்குக் கையைப் பொத்தி அடிச்சேன் நல்லா விழுந்துடுச்சு"


"இது தெரியாம பண்ணினது போல இல்லையே ?"


"இல்லைங்க நிசமாவே நான் வேணும்னு பண்ணல "


"சரி சரி விடு உன் ஆசை நிறைவேறிடுச்சுல ..."


"இல்லைங்க ...சொன்னா புரிஞ்சுக்கோங்க .."


"அதுதான் தெரிஞ்சிடுச்சே இனி என்ன ?" என்று முகத்தை முறைத்தாற்போல் வைக்க...


"அதான் சொல்றேன்ல டா என்னடா ஓவரா பண்ற ?
நீ பார்க்கிற பார்வையிலேயே தப்பு இருக்குனு கண்டுபிடிச்சிட்டேன்டா.."


"உன்னை என்ன பண்றது இரு" என்றவாறு அவனைத் தலைக்குமேல் தூக்கி வீசப்போனாள்


"ஏய் விடுடி விடுடி " என்று பாபு கத்துவதைக் கேட்டு ஓடிவந்த வனிதா


"மது என்னடி இது அவரை கீழ இறக்குடி ...இப்ப இறக்கப் போறியா இல்லையா? "என்று கத்த ...சுயநினைவு வந்த மது அவனைக் கீழே போட்டாள்.


"என்னடி பண்ற ?அவரை எதுக்குடி இப்ப தூக்கின ?"


"நானா அவரையா எப்போ தூக்கினேன் ? "


"என்ன விளையாடுறியா? பாரு அந்த மனுசன் எப்படி கிடக்குறார்னு
உனக்கு கிறுக்கு ஏதும் பிடிச்சிருச்சா?"


"மச்சினிகூட கிண்டலுக்கு பேசினா நீ இப்படி பண்ணுவியா
உன் புருஷன யாரும் தின்னுடமாட்டோம் புரியுதா?"


"ஏய் ஏய் இப்போ எதுக்குடி லூசு மாதிரி பேசுற?"


"எது நான் லூசு மாதிரி பேசுறனா?
சொல்லுவடி சொல்லுவ
புருஷனை இப்படி பாடாய்ப்படுத்துறியேனு கேட்டா நான் லூசா?"


"பின்ன வாலும் தெரியாம, தலையும் புரியாம நான் அவரைத் தூக்குனேன்னு சொல்ற?


அவர் வெயிட் என்ன என் வெயிட் என்ன?"
"நான் எப்படி டி தூக்கமுடியும்?"


"பின்ன நானா தூக்கினேன்?"


இருவரும் வாக்குவாதம் செய்ய வனிதாவிடம் கண்ணைக் காட்டினான் பாபு.


அவளுக்குச் சூழ்நிலை புரிய , "சரி சரி
போய்த்தூங்குங்க விளையாடுற நேரமில்லை " எனச்சொல்லி நகர...


"ஏன்டி மருதாணி வைக்கலையா ?"


"வேண்டாம் கல்யாணத்துக்கு சேர்த்து வச்சிக்கலாம் "


"அப்போ வச்சுவிடுனு சொன்ன ?"


"ஆமா ஆனா இப்போ வச்சா ஒன்வீக்ல அழியாது பிறகு நல்லா இருக்காது."


"சரி இப்போ அரைச்ச மருதாணியை என்ன பண்றது ?"


"நீயே வச்சுக்க...."


"நானா மணப்பொண்ணு ?"


"சும்மா , யார்வேணா வைக்கலாம்
போயி வச்சிக்கோ "


"வேண்டாம் டி யாராவது வச்சிக்கிடட்டும் "


"சரி விடு அம்மாவுக்கு மாத்திரை கொடுத்தியா நீ?"


"ம்ம் சரி போய் நேரத்தோடு தூங்கு" என்று சொல்லிவிட்டு பாபுவைப் பார்க்க...


அவன் பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தான்.
"என்னங்க ஆச்சு ?"


"ஓ....ன்னுமில்ல....நீ படு...."


"ஏன் முகம் வியர்த்து இருக்கு,என்னாச்சுங்க?"


"இவ தெரிந்து பேசுறாளா இல்லை தெரியாம பேசுறாளா ?"
"இவ்வளவு நேரம் ஏதோ பொம்மையைத் தூக்கின மாதிரி தூக்கிச் சுத்திட்டு இப்போ என்னாச்சுனு கூலா கேட்கிறா.."


"உண்மையிலே அந்த ஜெனி உடம்புல இருந்த ஆவி மது உடம்பில் வந்திருக்குமோ ?"


காலையில் முதல் வேலையாக இதற்கு முடிவு கட்ட வேண்டும்
என்று எண்ணிக்கொண்டவன்
""ஒன்னுமில்ல நீ தூங்கு "என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் படுத்தான்.


****


பூனையின் பிராண்டலால் ஏற்பட்ட காயத்தால் வலிவர முனகியபடியே படுத்திருந்த அம்மாவின் குரல் கேட்டு எழுந்து வந்த வனிதா.


"என்னம்மா ஆச்சு ?"


"என்னனு தெரியலடி கையெல்லாம் ஒரே எரிச்சலா இருக்கு உள்ளுக்குள்ளே நெருப்பாய் எரியுது."


"ஆன்டிபயாட்டிக் ஊசி போட்டா வலி தெரியாதே மா உனக்கு ஏன் அப்படி இருக்கு ?"


"தெரியலடி ஆனா எரியுது "


"இரு டாக்டர்கிட்ட ஒரு ஃபோன் போட்டு கேட்கிறேன் " என்று தனது ஃபோனை பார்க்க அது ரூமில் மறந்து வைத்துவிட்டு வந்தது ஞாபகம் வர அதையெடுக்க அவளது ரூமுக்கு போனாள்


அதற்கு முன்னிருந்த அறையில் வெளிச்சம் தெரிய அக்காவும் மச்சானும் இன்னும் தூங்காமல் என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள் என்று எட்டிப் பார்த்தாள்.


மது, பாபுவின் மீது ஏறி உட்கார்ந்து அரைத்து வைத்திருந்த மருதாணியை அவனது முகத்தில் பூசிக்கொண்டு இருக்க...பாபு அவளிடமிருந்து தப்பிக்க முடியாமல் திணறிக்கொண்டு இருந்தான்.

" என்னடி பண்ற மது?
ஏய் உன்னைத்தான் ...".என்று அவளின் தோளைத்தொட்டுத் திருப்ப பளார் என்று அறைந்தாள்.


என்னடி அடிக்கிற?


"யாருடி நீ இவனுக்கு மேக்கப் போட்டா உனக்கென்னடி வலிக்குது
எப்பப்பாரு அடுத்தவ புருஷனுக்கே அலையுறீங்க ?"


"நிம்மதியா சந்தோசமாக இருக்க விட மாட்டீங்களா ?"


"என்ன டி பேசுற நீ , நான் எங்கடி உன் புருஷனை வளைச்சு போட பார்த்தேன்
அப்பாண்டமா பேசுற"


"பின்ன என்புருஷனை உன் அக்கா பங்கு போட்டுகிட்டா
இப்போ நீ அவனையே சுத்தி சுத்தி வர்ற"


"கொஞ்ச நேரம் சந்தோசமா இருக்கலாம்னா இதோ தொரந்த வீட்டுல நாய்மாதிரி நுளஞ்சிட்ட
வெட்கமாக இல்லை."


"பொறுமைக்கும் எல்லையிருக்குடி
யார்டி நீ ?" என்று பளார் என்று அறைவிட மதுவின் உடம்பிலிருந்த ஆவி வெளியேற மது ஆவென்று கத்தியவாறு கீழே விழுந்தாள்..


வனிதா ஓடிவந்து தண்ணீரை மதுவின் முகத்தில் தெளிக்கக் கொஞ்ச நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்து வர..
தனது முகத்தைக் கழுவிவிட்டு வந்தான் பாபு.


"மச்சான் உங்களுக்கு ஒன்னுமில்லையே"


"இல்லமா , அவளைப்பாரு" என்றபடி கண்ணாடியைப்பார்க்க முகம் முழுவதும் அலங்கோலமாக மருதாணியை பூசி வைத்திருந்தாள் மது.


"யாருடி என்னை அடிச்சது ?"


"நீதான் டி என்னை அடிச்ச "


"நான் எதுக்கு டி உன்னை அடிக்க போறேன்.
ஆமா எங்க அவரு ?"


"எதுக்கு மறுபடி அவரைக் கொடுமைப்படுத்தவா ?"


"என்னடி உளறுற?"


பாபு வெளியில் வர ...அவனது முகம் முழுவதும் மருதாணி கறை படிந்து இருக்க ....
"என்னடி இது கூத்து ?
யாருடி இப்படி பண்ணினது?"


"காலைல பொண்ணு பார்க்க வரும்போது இவரை யாராவது பார்த்தால் என்ன நினைப்பாங்க
எது எதில் விளையாடுறது தெரியாதா?
அவர்மேல இப்படி பூசிருக்க.."


"எது ...நானு பூசினேன்?


"என்னடி கிண்டலா ?"


"அப்போ அவரா பூசிக்கிட்டாரா அவர் என்ன பைத்தியமா ?"


அவர் இல்லடி நீதான் பைத்தியம்
இங்க பாரு என்று அவளின் கைகளையெடுத்துக்காட்ட..


என்னடி இது நான் எப்போ மருதாணி வச்சேன் ?


"நீ எங்கடி வச்ச அவர் முகத்துல தேய்ச்ச"


"ஐயோ நானா சாரிங்க
எனக்கு எதுவும் தெரியாது மன்னிச்சிடுங்க"


"இப்போ பேசி என்னாகப்போகுது
விடு "


"மச்சான் மெகந்தி ரிமூவல் கிரீம் இருக்கு நான் போட்டுவிடுறேன் அரை மணி நேரத்திலே இதெல்லாம் போயிரும் கவலைப்படாதீங்க"


"இப்ப என் கவலையெல்லாம் இங்க இருக்கிற அமானுஷ்ய சக்தியைப்பத்தித்தான் நாளை உன்னைப் பொண்ணு பார்த்துப் போகிறவரை எதுவும் நடக்கக்கூடாது."


"சாமி வேற ஹாஸ்பிடல்ல இருக்காராம் "


"மச்சான் ஒரு யோசனை நம்ம பொண்ணு பார்க்கிற நிகழ்ச்சியை நம்ம குலதெய்வம் கோவிலில் வச்சா என்ன?""


"சூப்பர் ஐடியா வனி ஆனால் நாம அதை மாப்பிள்ளை வீட்டுல சொல்லலையே "


"இப்போ சொல்லுங்க"


"இப்போ தூங்கிட்டுத்தானே இருப்பாங்க "


சும்மா ட்ரை பண்ணலாம்ல"


"ஃபோன் பண்ணிப்பாருங்க..."


பாபு தனது ஃபோனை எடுத்து மாப்பிள்ளை வீட்டுக்கு போன் போட்டான்


எதிர்முனையில் வயதான ஒருவர் ஹலோ என்றார்


"உங்களுக்கு யார் வேணும்?"


"ஐயா அங்க சுந்தேரசன்_கண்மணினு..."


"அப்படி யாரும் இல்லையே "


"இந்த நம்பர்தான் தந்தாக.."


"இந்த நம்பர் என் வீட்டு நம்பருங்க.."


"அங்க வசந்த்னு ?"


"ஆமா ஒரு பையன் இருந்தான் "


"இருந்தான்னா இப்போ இல்லையா
ஆமா இது செங்கல்பட்டுத்தானே?"


"ஆமா செங்கல்பட்டு சிவதாசபுரம்தான்"


"அப்போ அங்க சுந்தேரசன்_கண்மணினு...யாரும் இல்லைங்கிறீங்க"


"உண்மையைத் தான் சொல்றேன் தம்பி நீங்க என்வீட்டு ஃபோனுக்கு பண்ணியிருக்கீங்க "


"நாலு வருசத்துக்கு முன்ன வசந்த்னு ஒரு பையன் இங்க குடியிருந்தான்"


"எனக்கு பிள்ளைமாதிரி இருப்பான் எல்லா வேலையும் செய்வான்
இப்ப இல்லை மனசுக்கு கஷ்டமா இருக்கு"


"ஆமா நீங்க ஏன் அவனைக் கேட்கிறீங்க?"


"அந்த பையன்தான் என் மச்சினிச்சியைப் பொண்ணுபார்க்க வர்றதா தரகர் சொன்னார்"


"நல்லா விசாரிச்சீங்களா அந்த பையன்தானான்னு?"


"ஆமாங்க ஐயா "


"இருக்காது வாய்ப்பே இல்லை."


"உங்க வீட்டில் குடியிருந்து விட்டுப் போனதுக்காக அந்த பையன்மேல உங்களுக்கு கோபம் இருக்கலாம் அதுக்காக ..."
"அந்த பையன் இல்லைனு சொல்றது எப்படி ஐயா ?"


"தம்பி உங்கள யாரோ நல்லா ஏமாத்தி இருக்காங்க "


"என்னங்கய்யா சொல்றீங்க ?"


"அந்த பையன் நல்ல பையன் இல்லையா ?"


"என்ன தம்பி நீங்க சொல்றதைக் கேட்டுப் பேசமாட்டீங்களா ?"


"அந்த பையனைப் புள்ளமாதிரி சொன்னேன் நீங்க தப்பா சொல்றீங்க."


"மன்னிச்சுக்குங்க ஐயா சொல்லுங்க"


"வசந்த் ஊரைவிட்டோ வீட்டைவிட்டோ போகல தம்பி"


"பின்ன ?"


"இந்த உலகத்தை விட்டே போயிட்டான்.
வேலைபார்த்துட்டு வரும்போது ஒரு லாரி வந்து மோதி ஸ்பாட்லயே இறந்துட்டான் அவனுக்கு அம்மா அப்பா யாருமில்லை.நான்தான் எல்லா கடமையும் முடிச்சேன்"


"அவன் உங்க வீட்டு பெண்ணைக் கட்டிக்கிறேனு சொல்றது எப்படி முடியும்?"


இதையெல்லாம் கேட்ட பாபுவுக்கு வியர்க்கத்தொடங்கியது


அப்படியானால்? வசந்த்?






தொடரும்....


எழுத்தாளர் நாகா
 
  • Haha
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
417
91
43
Tirupur
👻 பேயோட புருஷனை அக்கா எடுத்துக்கிட்டாளா? இதென்ன புது வில்லங்கம் 🤔

அடுத்த வில்லங்கம் 🤣 ஆன் தி வே

👻 மாப்பிள்ளை