தொடர்_11
***********

நான் நீ நடுவில் பேய்

************************""""""**********"
இதுவரை...
உடனே பணிப்பெண்ணை அழைத்து தகவலைச் சொல்ல ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவசர சிகிச்சைக்கு அவனைத் தூக்கிச்சென்றார்கள்.
பின்னாலேயே அவளும் ஓடினாள்.
இனி...
வசந்த் மூர்ச்சையாகிக் கிடக்க மாயா செய்த அலறலில் மருத்துவமனைக்கு தூக்கிச்செல்லப்பட்ட வசந்த்துக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டு இருந்தது.
வெளியில் பதட்டத்தோடு நின்றிருந்தாள் .
அவனது மூச்சுக் குழாயில் முதல் நாள் இரவு அருந்திய குளிர்பானம் அடைத்துக்கொண்டு இருந்தது
அவனது நெஞ்சில் அழுத்த .....ஹ்ஹ் ஆஆ என்றபடி அவன் வாயை பிளக்க ..அடைத்திருந்த குழாய் திறந்து மூச்சு வரை ஆரம்பித்தது.
வசந்த் கண்ணைத் திறந்து பார்க்க..
மருத்துவமனையில் இருப்பதைக்கண்டு என்னாச்சு எனக்கு நான் எப்படி இங்க வந்தேன் என்று கேட்டான்.
"ஒன்றுமில்லை நிதானம் ஜஸ்ட் மூச்சுத்திணறல் அவ்வளவு தான் இப்போ ஓகே யு வில் பி ஆல்ரைட்
சோ டோண்ட் ஒர்ரி " என்றார் டாக்டர்.
அடுத்த அரை மணி நேரத்தில் வசந்த் நார்மலாகி வர செக்_இன் முடித்து வசந்தும் மாயாவும் வெளியில் வந்தார்கள்.
இருவரும் ஏர்போர்ட் டாக்ஸியில் ஏறிக்கொள்ள
மாயா பேச ஆரம்பித்தாள்.
"சரி சார் இப்போ உங்களுக்கு தேவை ரெஸ்ட் ,அப்புறம் ஆபீஸ் ஒர்க் பார்க்கலாம் சரியா ? "என்றாள்
"இல்லை மாயா எனக்கு பத்துநாள் தான் லீவ் எல்லா சைட்டும் பார்க்கணும் "
"பதினோராம் நாள் அங்க ஜென்ரல்பாடி மீட்டிங் இருக்கு ."
"சோ வாட் சார் ?
இன்னிக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்துச்சு இதே போல் ஆகியிருந்தா ?"
"முதலில் உடம்பைக் கவனிங்க சார் அதுக்கு பிறகு வேலை பார்க்கலாம்."
"ஓகே நான் தம்பிவீட்டுக்கு போயிட்டு நாளை ஆபீஸ் வாரேன் சரியா?"
"என்ன சார் நீங்க ? அங்க உங்களை யார் கவனிச்சுப்பா ? அவங்களுக்கு இந்த நேரத்தில் எதுக்கு தொந்தரவா இருக்கப்போறீங்க "
"பின்ன என்ன பண்ணட்டும் மாயா பேசாம ஆபிஸ் ஹெஸ்ட் ஹவுஸ் போயிடுறேன்"
"நீங்க அங்க வர்றீங்கனு அவங்களுக்கு சொன்னீங்களா ?
எந்த ஏற்பாடும் பண்ணியிருக்க மாட்டாங்க "
"ஆமா அதனால் என்ன அங்க வாட்ச்மேன் வேலு இருப்பார் அவர்கிட்ட ஃபோன் பண்ணிச் சொல்லிட்டா போதும் உடனே அரேஞ்ச் பண்ணப்போறார் "
"ஏன் சார் இப்ப அவங்களை தொல்லை பண்ணனும் ?"
"சரி இப்ப என்ன பண்ணனும்னு நினைக்கிறீங்க மாயா?"
"எங்க வீட்டுக்கு வாங்க சார்"
"இல்லை மாயா உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு தொல்லையாகாதா ?"
"இல்லை சார் இது நான் மட்டும் இருக்கும் வீடு கொஞ்ச நாள் முன்னாடி தான் வாங்கினேன்.
இரண்டு கோடி சொன்னாங்க ஒன்னு பத்துக்கு முடிச்சேன்" என்று தன் திறமையை பெரிதாகக் காட்டினாள்.
"நீங்கள் ஒரு ஆளு இருக்கவா ?"
"ஆமா சார் ஏன் ?"
"சும்மா தான் ஆமா உங்க ஃபேமிலி எங்க இருக்காங்க ?"
"இங்கதான் சார் வேளச்சேரி "
"பின்ன அவங்களையும் உங்களோட தங்க வைக்கலாமே ?"
"பண்ணலாம்சார் அந்த வீட்டில் யார் இருப்பா ?"
"அதுவும் சரிதான் ."
"இது குறைஞ்ச விலைக்கு வந்ததால் வாங்கினேன் யாரும் இல்லாம வீட்டைச் சும்மா போடக்கூடாதுனு
நான் இங்க வந்துட்டேன் ஆபீஸ் பக்கம்தானே"
"நல்லது நான் "
"சரி எப்போ மேரேஜ் பண்ணப்போறீங்க ?"
"இப்ப என்ன அவசரம் சார் ?"
"இப்பவே உங்களுக்கு முப்பது இருக்குமே ?"
"என்னைப்பார்த்தா அப்படியா தெரியுது ?"
"இல்லை சின்ன வயசு மாதிரிதான் இருக்கீங்க."
"அப்பறம் எப்படி சார் அப்படி சொன்னீங்க ?"
"உங்க பயோடேட்டா பார்த்தேன் ."
"ஓ சாரி, ஒரு நல்ல வரன் வரட்டும் சார் பார்க்கலாம்"
என்று இருவரும் பேசிக்கொண்டு வர..
டாக்ஸி டிரைவர் இருவரையும் திரும்பித் திரும்பிப் பார்த்து கொண்டு வந்தான்.
அதை வசந்தும் மாயாவும் பார்த்தும் பார்க்காத மாதிரி இருந்தார்கள்.
அவனது பார்வையில் ஏதோ தவறாகப் பட அந்த தெருவின் முனையிலேயே இறங்கிக்கொள்ள வேண்டும் என்று வசந்திடம் சைகை செய்தாள்.
மாயா வீட்டின் முன்னிருந்த தெருமுனையில் இறங்கிக்கொண்டு டாக்ஸியைக் கணக்கு முடித்து அனுப்பினாள்.
இருவரும் அங்கிருந்து நடந்து வந்து வீட்டிற்குள் நுழைய வேலைக்காரி வேலையை முடித்து விட்டு வெளியேறினாள்
"என்ன வள்ளி வேலையெல்லாம்
முடிஞ்சுதா ?"
"முடிஞ்சுது மா "என்று கிளம்ப..
"நில்லு வள்ளி இரண்டு நாள் நீ வர வேண்டாம் நீ இந்தா பணம் நான் ஃபோன் பண்ணும்போது வா" என்றாள்
"சரிங்கம்மா " என்று அவள் அகன்று போக ..
"எதற்கு மாயா அந்த பொண்ணை வரவேணாம்னு சொல்ற ? "
"இல்லை சார் அவ லீவ் கேட்டு இருந்தா அதான் "
"வீட்டு வேலை யார் செய்வா ?"
"நான் செய்வேன் சார் "
"பரவாயில்லையே ,
சரி நான் பிரஷ்_அப் ஆகிட்டுவர்றேன் பாத்ரூம் எங்க இருக்கு ?"
"இங்க எல்லாமே அட்டாச்டுதான் சார்."
என அறையைத் திறந்து விட்டாள்.
"தேங்க்ஸ் மாயா ."
எதுக்குசார் தேங்க்ஸ் .?"
"பிளைட்ல மூச்சு திணறினப்போ காப்பாத்தி இப்ப இங்க கூட்டி வந்தவரை உங்களோட அன்பு ரொம்ப பெரிசு"
"அதெல்லாம் ஒன்றுமில்லை நீங்க சீனியர் மேனேஜர் இது என் கடமை
நீங்க ஒர்ரி பண்ணிக்காதீங்க"
" குளிச்சிட்டு வாங்க நான் சாப்பாடு ரெடி பண்றேன்" என்று அவளும் தனது
அறைக்குள் நுழைந்து குளித்துவிட்டு நைட் கவுனுக்குள் நுழைந்து கொண்டு சாப்பாடு தயார் செய்ய போனாள்.
வசந்த் பிரஷ்_அப் ஆகிவிட்டு வெளியில் வர டைனிங் டேபிளில் சுடச்சுட ஆவி பறக்க இன்ஸ்டன்ட் புட் ரெடி பண்ணி வைத்திருந்தாள் மாயா.
வாங்க சார் சாப்பிட என்று அவள் அழைக்க அப்போதுதான் அவளைப் பார்த்தான் வசந்த்.
பாரீன் வீடுகளில் இரவில் மட்டும் உடுத்தும் நவநாகரீக ஆடையோடு உடலைக் காட்டியபடி நின்றிருக்க..
தலையைக் குனிந்து கொண்டான்.
"என்ன சார் சாப்பிடாம எதையோ யோசித்துக்கொண்டு இருக்கீங்க?"
"சாப்பிடுங்க" என்று சுடச்சுட சோறும் ரசமும் கூடவே கூட்டுப்பொரியலும் வைக்க..
இத்தனை வேகத்தில் சமைத்தாளா என்று நினைத்தபடி தலையை நிமிராமலே சாப்பிட ஆரம்பித்தான்.
"சார் உங்க மனைவி குழந்தைகள் எல்லாம் எப்படி இருக்காங்க ?"
"இங்கலாம் வரமாட்டாங்களா ?" என்று சகசமாகப்பேச. வசந்த்க்கு மட்டும் ஏனோ உறுத்தலாகவே இருந்தது.
"வருவாங்க மாயா இரண்டு மூன்று மாசத்தில் ."
"வந்தா இங்கதான் கூட்டி வரணும் சரியா ?" என்று அன்புக் கட்டளை பிறப்பித்தாள்
"சரி மாயா எனக்குப் போதும் நீங்க சாப்பிடுங்க ,எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு " என்று பாதியிலே எழுந்து போக..
"என்ன சார் வச்ச சாப்பாடு வச்சபடி இருக்கு, இப்படி சாப்பிட்டா உடம்பு என்னாகும்?"
"ஓ என் சமையல் பிடிக்கலையா?"
"அப்படியெல்லாம் இல்லை மாயா
மனுசன் போதும்னு சொல்றது சாப்பாடு மட்டும் தான்
முடிஞ்சவரை மட்டும் தான் சாப்பிட முடியும்?"
"அதுவும் சரிதா ஆனால் பாதிதானே சாப்பிட்டு இருக்கீங்க?"
"சரி டேபிளட் போட்டுத் தூங்குங்க" என்று சொல்ல...
வசந்த் "ஓகே சி யூ" என்று தனது அறைக்குப் போனான்.
அவள் சாப்பிட்டு எழுந்து பாத்திரங்களை எடுத்து வைத்துவிட்டு
அவளும் தன் அறைக்குப் போனாள்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வசந்த் உடலில் ஒரு கை தழுவ தூக்கதிலே நெளிந்து கொண்டு இருந்தான்
மெல்லமெல்ல அவனது முகத்திற்கருகே ஒரு முகம் வந்து நிற்க..பதறி எழுந்தான்..
நரபலி கொடுத்து தான் நினைத்த வரத்தைப் பெற முயன்று தோற்ற சண்டிச்சாமியார் ஜெனியைப் பலிவாங்க அவளைத் தேடிப்புறப்பட்டான் .
அதுவரை தன்னை அடைத்திருந்த
உண்மையான உடலை மறைத்து இளம்வயது தோற்றத்திற்கு மாறினான்.
அவளது முகத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்து ஓவியமாக்கி அதனை கையில் எடுத்துக்கொண்டு நேராக அந்த நகருக்குள் நுழைந்தான்.
***
போலீசில் சிக்கிய காரை எடுத்துவருகிறேன் என்று போன ஜெனி வராததால் தூங்காமல் இருந்தான் சுரேஷ்.
எப்போது விடிந்தது என்று தெரியவில்லை ,எழுந்து வெளியே வந்து பார்த்தால் ஜெனி காரை எடுத்து வந்திருந்தாள்.ஜேனியைத்தேடி உள்ளே வர நல்லதூக்கத்தில் இருந்தாள் ஜெனி.
அவளை எழுப்ப வேண்டாமென நினைத்து அப்படியே எதிரில் இருந்த டீக்கடைக்கு நடந்தான்.
******
கேரளக் காரரின் தேனீர்க்கடை
" சேட்டன் ஒரு டீ "
என்று வந்து அமர்ந்தான் முருகன்
"மச்சி எனக்கு ஒன்னு சொல்லு" என்று பின்னால் வந்த சுரேஷ் தோளைத் தொட ..
"என்னடா எங்க ஏரியாவில் இருந்து வர்ற?"
"ஆமா மச்சி ஜெனி வீட்டுக்கு வந்தேன்
அவ வெளியில் போயிட்டா அதான் டீ சாப்பிடலாம்னு வந்தேன் ."
"என்ன மச்சி சொல்லுற ? இங்க யாரு ஜெனினு ?"
"அதோ அந்த வீட்டில் இருக்கும் பொண்ணு பேரு ஜெனிதானே"
"அங்க ஏது மச்சி பொண்ணு அந்த வீட்டில் யாருமே இல்லையே ."
"ஒரேவொரு பாட்டிதான் இருந்துச்சு அதுவும் இரண்டு வருசத்துக்கு முன்னாடி வந்துடுச்சு
அந்த வீட்டுக்கு யார் ஓனர்னே இன்னும் தெரியாமத்தான் கேஸ் போகுது."
"அதுசரி நைட் புல்லா அங்கதான் தங்குனியா ?"
"ஆமா ஏன் ? "
"அது பேய் பங்களானு சொல்றாங்க உள்ளே போனா உயிரோடு வரமுடியாது சொல்றாங்களே நீ எப்படி ? " என்று சந்தேகத்தோடு கேட்டவனைப் பார்த்து
அதிர்ச்சியில் "என்ன மச்சி சொல்ற ?
பயங்காட்டாதேடா..நானே ஏற்கனவே நடக்குற சம்பவங்களைக் கண்டு குழம்பிப்போய் இருக்கிறேன்."
இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருக்க..பின்னால் வந்த அந்த சண்டிச்சாமியார்
"ஹலோ சார் இந்த பொண்ணைப் பார்த்திருக்கீங்களா ?"என்று ஜெனியின் போட்டோவைக்காட்ட முருகன் இல்லையென்றான்.
அதனை வாங்கிப்பார்த்த சுரேஷ் அதிர்ச்சியானான் சாட்சாத் ஜெனியே தான்.
"இவங்களை நீங்க ஏன் தேடுறீங்க?"
"நான் ஒரு டிடெக்டிவ் சார்
எனக்கு ரொம்ப வேண்டியவங்களோட பொண்ணுங்க ."
"வீட்டை விட்டு வந்துருச்சு அவங்க அம்மா தேடித்தரச் சொல்லியிருக்காங்க."
"ஓ ..இந்த தெருவில் இப்படி யாரும் இல்லைங்க ."
"சரி சார் பார்த்தால் இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்" என்று அவன் நீட்டிய கார்டை வாங்கிக்கொண்டான்.
"அவன் நகர்ந்து போக..ஹலோ சார் அந்த போட்டோவை நான் போட்டோ எடுத்துக்கொள்ளலாமா?" என்று கேட்டான்.
"ஓ எஸ் தாராளமாக .."என்று சொல்ல
சுரேஷ் போட்டோ எடுத்துக்கொண்டான்.
அந்த சண்டிச்சாமியார் போனபின்..
"என்ன மச்சி அவன் யாரோ ஒரு பொண்ணைத்தேடி வந்திருக்கான் அவன்கிட்ட போய் போட்டோ கேக்குற?"
"ஆமா அவனும் ஏதோ ஜெனினு தான சொன்னான் அப்போ நீ சொன்ன ஜெனியைத்தான் தேடி வந்திருப்பானோ ?"
"ஆமா அவளைத்தான் தேடி வந்திருக்கான் இதோ பாரு" என்று அவன் கையில் இருந்து எடுத்த போட்டோவை காட்ட..
"இதான் ஜெனியா சரி மச்சி ஜெனியோட வேறு போட்டோ இருக்கா " என்று முருகன் கேட்க..
"நானும் அவளும் சேர்ந்து நிறைய எடுத்துருக்கோம் இரு காட்டுறேன்"னு
ஃபோனை நோண்ட அதில் அவனோடு இருந்த ஜெனி ,போட்டோ எதிலும் இல்லை .
"என்ன மச்சி நீ மட்டும் தனியா நிக்கிற ?"
"அதான் மச்சி நானும் பார்க்கிறேன்"
என்றவன் விழுந்தடித்து அந்தோ வீட்டுக்குள் ஓடினான்...
அங்கே தூங்கிக்கொண்டிருந்த ஜெனி.....
தொடரும்
எழுத்தாளர் நாகா