...
தொடர்_14
***********

நான் நீ நடுவில் பேய்

************************""""""**********"
இதுவரை...
மது தனது ஃபோனை எடுத்துப்பார்த்தாள் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது .
தூரத்தில் நரியின் ஊளையிடும் சத்தம் கேட்க ஆரம்பித்தது.
சரி இனி நிக்க வேண்டாம் என்று அவள் பின்னால் அனைவரும் நடக்கலானார்கள்.
முன்னால் சென்றுகொண்டிருந்த பாட்டியின் முகத்தில் குரூரப் புன்னகை வெளிப்படத் தொடங்கியது
இனி....
பாட்டி மது குடும்பத்தைக் கூட்டிக்கொண்டு அந்த இடத்தைவிட்டுக் கிளம்பிய கொஞ்ச நேரத்தில்...கத்துக்குட்டி மெக்கானிக்கைக் கூட்டிக்கொண்டு வந்தான்.
"காரில் இருந்தவர்களைக் காணாது
சுத்திச் சுத்தி வந்தான் .
"சார் என்ன தேடுறீங்க ?"
"கார்ல மூனு பேரை விட்டுட்டு வந்தேன் அவங்களைக்காணோம்."
என்ன சார் நீங்க இந்த இடத்தில் யாருமே இந்த நேரத்தில் வரப் பயப்படுவாங்க ஏதோ உதவினுதான் நானே வந்தேன்.
"சரி எத்தனை ஆண்கள் இருந்தாங்க "
"மூணு பேரும் பொண்ணுங்க தம்பி "
"நல்ல ஆளுசார் நீங்க...நடுக்காட்டில் பெண்களையா விட்டீங்க "
"சரி சரி பர்ஸ்ட் இந்த இடத்தில் நீண்ட நேரம் நிக்க முடியாது .முதலில் இந்த டயரை மாற்றிவிடலாம் பிறகு பார்க்கலாம்" என்று டயரை மாற்றிவிட்டு வர ...
"ஏதோ ஒயர் கருகின வாடை வருது
பேனட்டை கழற்ற வேண்டும் சாவியைப் போடுங்க என்றான் மெக்கானிக்"
"சாரி தம்பி வர்ற அவசரத்துல கார் சாவியை விட்டுட்டுத்தான் வந்தேன்
இல்லையே அவங்க எடுத்துட்டு போயிருப்பாங்களோ?"
"இப்போ என்ன பண்றது சார்
அவங்களைத் தேடுறதா? சாவியைத் தேடுறதா ?"
"எப்படியோ பண்ணுங்க சார். நான் கிளம்புறேன் இனி இங்க நிக்க முடியாது என்று பைக்கை ஸ்டார்ட் செய்ய என்ன தம்பி நீங்க இப்படி நடுவழியில் விட்டுப்போறீங்க ?"
"பின்ன என்ன சார் சாவி இல்லாத காரை என்ன பண்ண முடியும்?"
"ஆளுங்க வேற காணோம்னு சொல்றீங்க ஏதோ உதவினு வந்தேன்
வந்தவேலை முடிஞ்சது கிளம்புறேன் நீங்க பணம் கூடத் தரவேண்டாம் "
"இல்ல தம்பி என்னை பக்கத்துல ஊர்ல இறக்கிவிட்டுப் போகவாவது செய்யுங்க."
"சரி சார் வாங்க" என்றான் மெக்கானிக்
"இருவரும் கிளம்புமுன் ஏதேச்சையாக திரும்பிய கத்துக்குட்டி
பேனட்டில் ஏதோ எழுதியிருப்பதைக் கண்டு தம்பி கொஞ்சம் நிறுத்துங்க" என்று சொல்லி இறங்க ..
"என்ன ஆச்சு சார்"
"ஒன்னுமில்லை பேனட்டில் ஏதோ கிறுக்கி இருக்கு அதான்."
அவனும் பைக்கை நிறுத்திவிட்டு கீழே இறங்கி வந்து எழுதியிருந்ததைப் படித்தான்.
#ஊருக்குள்_வராதே_உயிர்_மிஞ்சாது
என்று எழுதி இருந்தது.
படித்ததும் மெக்கானிக் உடல் நடுங்க ஆரம்பித்தது .
"சார் இது ஏதோ பெரிய பிரச்சினை மாதிரி தெரியுது நீங்க போங்க சார் நான் வரல "என்று சொன்னான்.
"என்ன தம்பி எவனோ வேணும்னு பண்ணியிருப்பான் அதுக்காக பயந்துட்டு வரமாட்றீங்க
நான் கூட இருக்கேன்ல பயப்படாதீங்க" என்று சொல்ல...
"வேண்டாம் சார் வேணும்னா பைக்கைக்கூட எடுத்துக்கோங்க ஆளைவிடுங்க நீங்க உயிரோடு இருந்தா வந்து பார்க்கிறேன் " என்று
சாவியை வண்டியிலேயே விட்டுவிட்டுத் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடினான் .
"ஏய் ஏய் நில்லுப்பா " என்று அவனை கூப்பிட்டும் நிற்காததால் பைக்கை எடுத்துக்கொண்டு ஊருக்குள் போனான் கத்துக்குட்டி.
************
மனைவியும் மக்களும் சென்னை ஏர்ப்போர்ட்டிற்கு வந்த செய்தி கண்டு அதிர்ச்சியான வசந்த் அடுத்துப்பேசுவதற்குள் அவனை யாரோ தலையில் அடிக்க மயக்கத்திற்குப் போனான்.
அவனைத் தரதரவென இழுத்துப் போய் ஒரு மூலையில் கிடத்திவிட்டு
அவனது ஃபோனை எடுத்து வசந்தின் மனைவிக்கு ஃபோன் போட்டது அந்த உருவம் .
"ஹலோ என்னங்க ஆச்சு திடீர்னு கட் ஆகிடுச்சு "
"ஹலோ நான் மாயா பேசுறேன் .சார் முக்கியமான மீட்டிங்ல இருக்கார்.
நீங்க ,நான் சொல்ற அட்ரஸ்க்கு ஒரு டாக்ஸில வந்துடுங்க" என்று பதிவைக் கூட கேட்காமல் ஃபோனைத் துண்டிக்க..
வசந்த் மனைவிக்கு பதட்டம் தொற்றிக்கொள்ள உடனே ஒரு டாக்ஸியைப்பிடித்து அவள் சொன்ன முகவரிக்குக் கிளம்பினாள்.
********************
பாபு தொடர்ந்து மந்திரத்தை உச்சரித்து கொண்டிருக்க ஜெனி எப்போது நிறுத்துவான் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்க
அவன் கவனம் சிதறாமல் இருக்க ..அவனை நேரிடையாகத் தாக்க முடியாது என்று தெரிந்த ஜெனி ...
தந்திரமாக அவனது ஃபோனுக்கு ஃபோன் போட்டது.
அவன் அப்போதும் ஃபோனை எடுக்காமல் இருக்க..
அவனது வாட்ஸ் அப்பிற்கு நான்கைந்து மெசேஜ் களைத் தட்டிவிட்டது
அவன் மந்திரத்தைச் செபித்தபடி அதை ஆன் செய்து பார்க்க ..
"நாங்க போன கார் ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு இப்படிக்கு மது "
என்றிருந்தது.
அவனது நாக்கு குழற ஆரம்பிக்க
அவன் என்ன செய்கிறான் என்று தெரியாமல் கழுத்தில் இருந்த கயிற்றை அறுத்தெரிய ஜெனி அவனது உடலில் உள்நுழைந்தது.
அங்கிருந்த அனைத்தையும் கலைத்துவிட்டு ஆக்ரோசமாக எழுந்து நடக்க ஆரம்பித்தான் பாபு.
பாபுவிற்குள் புகுந்த ஜெனி தனது வேலையைக்காட்ட வெளியில் இருந்த வண்டியை எடுத்துக்கொண்டு நேராக தனது மனைவி மச்சினி அத்தை இருக்கும் இடத்துக்கு விரைந்தான்.
கத்துக்குட்டி மெக்கானிக் பைக்கில் வந்துசேரவும் பாபு வந்து சேரவும் சரியாக இருந்தது.
பாபு கத்துக்குட்டியைப் பார்த்துச் சிரித்தான்.அவனும் பதிலுக்கு சிரித்தான் இருவரும் வீட்டிற்குள் நுழைய ஒரு தொங்கு ஊஞ்சலில் பாட்டி அமர்ந்திருக்க மது அவளது தங்கை அம்மா மூவரும் முட்டிபோட்டு இருக்க ...ஒரு மூலையில் சுரேஷ் அவன் நண்பன் முருகன் கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடக்க..பாட்டி வெற்றிலையைக் குதப்பியபடி குரூரமாகப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
கத்துக்குட்டியும் பாபுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு இருக்க
இன்னொரு அறையிலிருந்து மாயா
வசந்தைத் தரதரவென இழுத்து வந்தாள் .
திடீரெனக் கதவு தட்டப்பட பாபு போய் கதவைத் திறந்தான்.அங்கே வசந்த் மனைவியும் அவனது இரு குழந்தைகளும் நின்றிருக்க இருவரையும் உள்ளே இழுத்து கதவைத் தாளிட்டான்.
யாருங்க நீங்க ? என்னை எதுக்கு உள்ளே இழுத்தீங்க என்று கேட்டுக்கொண்டே நிமிர்ந்து பார்க்க அங்கே நிறைய பேர் நின்றுகொண்டு இருக்கத் தன் கணவனைத் தேடினாள் .
ஒரு மூலையில் குப்புறப்படுத்தவாறு ஒருவன் கிடக்க ஓடிப்போய் திருப்பிப் பார்த்தாள் அவன் வசந்த்.
இப்போது பாபு மற்றும் மாயா உடலில் இருந்த ஜெனி வெளியேறி பாட்டிக்குள் புகுந்து கொள்ள பயங்கரமான குரலில் ஆக்ரோசமாக கத்தினாள் அந்த வீடே அதிர..
அனைவரும் ஒருவரையொருவர் பிடித்துக் கொண்டு ஒதுங்கினர்.
பாபு கத்துக்குட்டியைப் பார்த்து என்னடா நடக்குது இங்க ...கோவிலுக்கு கூட்டிப்போறேனு எங்க பேமிலியை இங்க கொண்டு வந்து விட்டிருக்க ..
ஆமா இவங்கெல்லாம் யாரு இவங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் ?என்று கேட்க ...
அமைதியாய் நின்றான் கத்துக்குட்டி
உன்னைத்தான்டா கேட்கிறேன்
நீயும் இதுக்கு உடந்தையா சொல்லுடா என்று அவனது சட்டையைப் பிடித்து கேட்க...
அதுவரை அமைதியாய் இருந்த கத்துக்குட்டி ஓங்கி ஒரு அறைவிட்டான் அனைவரும் அப்படியே ஆடிப்போனார்கள்.
முகத்தைத் தடவியபடியே என்னடா அடிச்சிட்ட ..
பின்ன அடிக்காம கொஞ்சுவாங்களா ?
என்னடா சொல்ற ? அப்போ.... நீ ?...
ஹாஹா ஹாஹா என்று பேய்ச்சிரிப்போடு பாட்டிக்கு பின்னால் போய் நின்றான் கத்துக்குட்டி......
******************
" மாயா ...மாயா ..."
"என்ன பாட்டிமா "
"ஜெனி எங்க ரொம்ப நேரமா காணோம் ."
"அவ தம்பியைக் கூட்டிகொண்டு கடைக்குப் போயிருக்கா "
"இந்த நேரத்தில் எதுக்கு கடைக்குப்போறா ...செத்துப்போன செல்வி பேயா அலையுறதா பேசிக்கிறாங்க..
ஏற்கனவே உடம்பு வேறு சரியில்லை
இதுல காத்துக்கருப்புனு...."
"பாட்டி பாட்டி நீயே பயமுறுத்திடுவ போல ...
பாவம் அவளே சின்னப்பொண்ணு இப்படியா பயமுறுத்துவ அவகிட்ட ஏதும் சொல்லிடாத ..."
"அடியே உனக்கும் பதினைந்து வயது ஆகுது அறிவு இருக்கா?"
"அதுகென்ன பாட்டி இந்த காலத்திலும் பேய் பிசாசுனு சொல்லி குழந்தைகளைப் பயமுறுத்துவது தப்பு இல்லையா ?"
"எங்க டீச்சர் சொல்லியிருக்காங்க பேய் பிசாசு எல்லாம் இல்லை உங்களைப் பயமுறுத்த பெரியவங்க சொல்லுற கட்டுக்கதைனு .."
"ஆமாடி அம்மா நான் கதைசொல்றனா உன்கிட்ட பேசி என்ன ஆகப்போகுது
வரட்டும் அவகிட்டயே சொல்றேன்..."
"நீ வேற பாட்டி அவளே இப்பத்தான்
வெளியில் போய்வரா அவளையும் வீட்டுக்குள்ளேயே பூட்டிவைக்கப் பாக்குறியா ? "
"அவ வயசுக்கு வந்து இரண்டு மாசம் கூட ஆகலை அதுக்குள்ள இந்த மசங்கல்ல (மாலைநேரம்) ஊர் சுத்துனா காத்து கருப்பு அடிக்காதா?"
"மறுபடியும் அதையே சொல்லாத
சரி விடு நான் அவளைப்போய் அழைச்சிட்டு வாரேன் "என்று எழுந்து தனது வாக்கிங் ஸ்டிக்கை எடுக்க...
"இருடி அம்மா நீயே முடியாதவ நீ போனா உங்கம்மா என்னைத் திட்டுவா நான் போய் கூட்டிவாரேன்" என்று கிளம்பினாள்.
"பாட்டி மறந்துடாதே "
"எதை மறந்துடாதே சொல்ற ?"
"அந்த பேய் மேட்டரை ...ஜெனிக்கும் தம்பிக்கும் சொல்லிப் பயமுறுத்திடாதே"
"சரிடி பெரிய மனுசி உங்க அம்மாகிட்ட கூட பேசிடுவேன் உன்கிட்ட பேசறதுதான்டி பயமா இருக்கு."
"அது ..."என்று தல ஸ்டைலில் சொல்லிவிட்டு உள்ளே போனாள்.
"என்னடி அம்மம்மா கிட்ட வாய்க்கு வாய் அடிக்கிற " என்று கட்டிலில் படுத்தபடி கேட்ட அம்மா வசந்தாவிடம்
"அதெல்லாம் ஒன்னுமில்லைமா
பேய் பிசாசுனு பயமுறுத்ததாதேனு சொன்னேன்."
"பாட்டி சொல்றது நல்லதுக்குத்தானே"
"அதுக்காக பாப்பாவையும் தம்பியையும் பயப்பட வைக்கணுமா ?" என்றாள்
"சரிடி மகாராணி அதைவிடு நீ போய் கஞ்சி கரைச்சு எடுத்துவரியா பசிக்குது"
"சரிமா "என்றபடி உள்ளே போனாள் மாயா.
"நாம இறந்து போயிட்டா இந்த புள்ளைங்கள யாரு பாத்துப்பா உடம்புல அழகு இருக்குற வரை வந்தவனெல்லாம் இப்போ கண்டும் காணாமலும் போறானுக.."
"எல்லாம் என் தலைவிதி கட்டுனவன் சரியா இருந்திருந்தா இந்த பிழைப்பு வந்திருக்குமா ?"
இரண்டு பொட்டைபுள்ளைக பெரிய மனுசி ஆகிட்டாங்க சின்னவனுக்கும் வயது ஏழு ஆகிடுச்சு அம்மாவுக்கும் வயசு ஆகிடுச்சு .என்ன ஆகுமோ கருமாரி நீதான் என் புள்ளைகளுக்கு தொணையா இருக்கணும் "என்று வேண்டிக்கொண்டாள்.
மாயா கஞ்சி கரைச்சு எடுத்துவரவும்
வாங்கிக் குடிக்காமல் அதே யோசனையில் இருந்தாள் வசந்தா.
"என்னமா யோசனை ..?"
"ஒன்னும் இல்லையே.."
"என்கிட்டயேவா நீயும் என்ன யோசிப்பனு தெரியும்மா ?"
"உனக்கு ஒன்னுமில்லை சும்மா அதையே நினைச்சிட்டு இருக்காதே..."
"அதையெல்லாம் பத்திக் கவலைப்படல மாயா நான் இல்லனா இந்த வீட்டுக்கு கண்ட நாயிங்க வந்துடுமோனு பயமா இருக்கு"
"அம்மா நீயேன் அதை நினைக்கிற அதான் அந்த சாக்கடையிலிருந்து மீண்டு வந்துட்டில..பிறகு ஏன் அதைப்பத்தி நினைக்கிற ?"
"இல்லை மாயா தேன் எடுத்தவன் பொறங்கையை நக்கும் இருக்க மாட்டானுக."
"நீங்க பெரிய பொண்ணுக ஆனது தெரிஞ்சா இப்படி இருக்க மாட்டானுக ."
"அம்மா நீ பயப்படாதே நான் இருக்கவரை எவனும் இங்க வரமுடியாது."
"நீ நார்மலா இருந்தா நான் கவலைப்பட மாட்டேன்டி"
"இது கடவுளோட வேலை அதுக்கு நீ என்ன பண்ணுவ ? "என்று மாயா சொன்னதும்
தேம்பித் தேம்பி அழுதாள் வசந்தா
"எதுக்குமா அழற ?"
"என்னை மன்னிச்சிடுடி"
"நீ என்ன தப்புமா செஞ்ச உன்னை மன்னிக்க ?"
அவளது கையைப்பிடித்தபடி அவள் சொல்ல ஆரம்பிக்க...மாயா அப்படியே
சாய்ந்து உட்கார்ந்தாள்.
தொடரும்
எழுத்தாளர் நாகா