• இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏

நான் நீ நடுவில் பேய் _19

writer naga

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 23, 2024
40
57
18
Chinna Rettaiyurani Ramanathapuram
தொடர்_19
***********


👻👻👻நான் நீ நடுவில் பேய்👻👻👻
************************""""""**********"


இதுவரை..


தனது தம்பியிடம் இத்தனை விசாரணை நடத்திய நவீன் கண்டிப்பாக இங்கு வர வாய்ப்புள்ளது ஒரு வாரம் காலம் இந்த இடத்தைக் காலி செய்து எங்காவது போக வேண்டும் என்று நினைத்தாள் மாயா.


இந்த சூழலில் எங்கு போவதென யோசிக்க தனது முன்னே நிழலாடுவதைப் பார்த்து நிமிர்ந்தவளுக்கு அதிர்ச்சி.


இனி...


இரண்டு முரட்டு ஆசாமிகள் தனக்கு முன்பாக நின்றிருக்க ...
யா...யார்..நீங்க ...என்று கேட்டாள்
மாயா


"நாங்க யாருன்னு சொல்லுறது இருக்கட்டும் ஆமா இங்க கார்த்தி மாயாங்கிறது யாரு ?"


"ஏன்..எதுக்குக் கேட்கிறீங்க ?"


"அப்ப நீதானா அது ..."


"எது நான் தானா ?"


"போலீஸ்க்கு தகவல் கொடுத்தது நீதானே ?"


""இ...இல்லை..."


நொண்டியா இருக்கும்போதே இந்த திமிரா என்று அவளது தலைமுடியைப் பிடித்து இழுத்தான் ஒருவன் அவள் கீழே விழ ஜெனி ஓடி வந்தாள் .
அவளை ஒருவன் எட்டி உதைக்க அவள் ஓடிப்போய் விழுந்தாள்
கார்த்தியும் பாட்டியும் ஒளிந்து கொள்ள அவர்களைத் தரதரவென்று இழுத்துவந்தான் இன்னொருவன்.


அடுத்த பத்து நிமிடத்தில் ஐவரையும் காரில் ஏற்றிக்கொண்டு வெளியேற
இன்ஸ்பெக்டர் நவீன் தனது போலீஸ் ஜீப்பை நிறுத்திவிட்டு இறங்கி வந்து பார்த்தான் அங்கே பொருட்கள் சிதறிக் கிடக்க உள்ளே போய் பார்த்தார்.


அங்கே யாரும் இல்லை யாரோ அவர்களைக் கடத்திப்போய் இருக்கக்கூடுமென அவரது உள்ளுணர்வு சொல்ல உடனே கன்ட்ரோல் ரூமுக்கு ஃபோன் போட்டு சந்தேகப்படுற மாதிரி வர வண்டியை கண்காணிக்கச் சொல்லிவிட்டு தனது காரை எடுத்துக்கொண்டு ஸ்டேஷனுக்கு விரைந்தார் .


*"********


சுரேஷ் சொன்னதுபோல் ரீட்டா அவர்களைக் கண்காணிக்க ஹோட்டல் ஷெரட்டன் வந்ததோடல்லாமல் யாரோ இருவருடன் மிக நெருக்கமாக எதையோ பேசிக்கொண்டு இருப்பதைப் பார்த்த வசந்த் ரீட்டாவை கொல்ல வேண்டும் என்று நினைத்தான்.


"என்ன மச்சான் இப்போ நம்புறியா ?"


"நம்பாமல் எப்படி இருப்பது அதான் நம் கண்முன்னாலேயே நிக்குறாளே
அவளை .....என்று எழுந்தவனை ...
இழுத்துப்பிடித்து
"பொறு வசந்த் அவ யாரு என்ன எதுக்காக உன்னை லவ் பண்றதா சொல்லி ஏமாத்துறா ?
அவளுக்கு பிண்ணனி என்ன ?
எல்லாம் தெரியனும்னா நாம் பொறுமையில்லாமல் இருக்கக்கூடாது ."


"வெயிட் அவ என்னதான் பண்ணுறா பார்க்கலாம் "


"இல்லை மச்சான் அவளை என் கையில்தான் கொல்லனும் விடு என்னை ..."


"அட முட்டாளே நீயா போய் மாட்டிக்கப்போறியா ?
அவளைப் பார்த்தால் பணத்துக்காக பண்றவமாதிரி தெரியல .
எனக்கு என்னமோ அவ டிபார்ட்மெண்ட் ஆளுமாதிரி தெரியுது கூட இருக்கவனுகள பாரு "


"ஆமாம் மச்சான் எனக்கும் சந்தேகம் இருக்கு.


"அதான் சொல்றேன் வெயிட் .இன்னும் கொஞ்சம் நேரம் பார்க்கலாம் பிறகு நாம் இங்கிருந்து கிளம்பிடுவோம்


"சரி மச்சான்."


"நீ வீட்டுக்கு போயிட்டு அவகிட்ட ஏதும் கேட்காத அவளுக்கு எந்த சந்தேகமும் வரக்கூடாது "


"ம்ம் ஆனால் எனக்கு ஆறவே மாட்டிங்குது மச்சான்."


"புரியுது வசந்த் ஆனால் நாம் பார்க்கிற தொழில் வெரிடேஞ்சர்
இந்த தொழிலைப் பத்தி யாருக்கோ உண்மை தெரிஞ்சிருக்கு அதுக்கு சரியான ஆதாரம் தேடித்தான் ரீட்டா வந்திருக்கணும்"


"சரி நீ இதுபத்தின டீடெயில் ஏதும் அவகிட்ட சேர் பண்ணியிருக்கியா ?"


"இல்லை மச்சான் அப்போ சரி
ஆனாலும் அவ மேல ஒரு கண்ணு வச்சிக்கோ
நாளை அவளுக்கு தெரியாம
பாந்தர் ஸ்ட்ரீட்ல இருக்க டீ சாப் வந்திடு "


"அங்கயா அது சின்ன கடையாச்சே"


"ஆமா அதுதான் நமக்கு இப்போ சேஃப் யாருக்கும் டவுட் வராது."


"சரி மச்சான் ரீட்டா கால் பண்ணிக் கேட்டால் என்ன சொல்ல?"


"பிஸினஸ் வேலையா வெளியபோனேன் சொல்லு எக்காரணம் கொண்டும் ஹோட்டல் ஷெரட்டன் பத்தி நீயா சொல்லாதே."


"ஓகே மச்சான்"


"அப்புறம் சொல்ல மறந்துட்டேன் ,அவ கண்களைப் பாரு சுத்தியும் மேயுது சோ நம்மைத்தேடுறா அதனால் ஹோட்டல் ஷெரட்டன் நாம் வரலனு அவ நினைப்பா "


"அப்போ என்ன பண்றது ?"


"அவளா கேட்காமல் நீயா சொல்லாதே
ஒருவேளை கேட்டால் நீயெதுக்கு வந்தனு கேளு அவ ஆஃப் ஆகிடுவா."


அவளால் ஏதும் பிரச்சனை வருமா மச்சான்


"அவளால் பிரச்சினை வராது ஆனால்
அவளே பிரச்சினை தான்"


"நாளை டீல் முடிஞ்சதும் அவளைப்போட்டுத்தள்ளிட்டு இந்தியா போயிடுவோம்"


"அவளைத் தீர்த்துக்கட்டினா போலீஸ் நம்மை சும்மா விடாது தெரியும்ல?"


"அது தெரியாமலா நான் சொல்றேன்
அதுக்குதானே நீ போலோனியம் 210 வச்சிருக்க ?"


"அ..அது..அது உனக்கெப்படி தெரியும் ?"


"நீ அந்த பெட்டியில் இருந்த ஒரு பாட்டிலை எடுத்துக்கொண்டு போய்விட்டது எனக்கு தெரியும்"


"என்ன மச்சான் சொல்ற தெரிஞ்சுமா என்னை மன்னிச்சு விட்ட.?"


"அதனால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை சோ விட்டுட்டேன்."


"வெரி தேங்க்ஸ் மச்சான்"


"நோ நீடு தேங்க்ஸ் என்னைக் காட்டிக்கொடுக்காதவரை உனக்கு பிரச்சனை இல்லை."


"நீ என் சாமியா எனக்கு வாழ்க்கை தந்தவன் நான் எப்படி ?"


"டோன்ட் எமோஷனல் நமக்கு அது செட் ஆகாது மறந்துவிடாதே
நம்ம பிஸினஸ் டேஞ்சர் யாரையும் நம்பக்கூடாது"


"ஓகே மச்சான் "என்று இருவரும் பின்வாசல் வழியாக கிளம்ப..
ரீட்டா அவர்களைக் தேட ஆரம்பித்தாள்.



வசந்த் சுரேஷ் இருவரும் ஹோட்டல் ஷெரட்டன் விட்டு வெளியேற அவர்களுக்காக காத்திருந்த ரீட்டா அவர்களைத் தேட ஆரம்பித்தாள்.


வந்தவனில் ஒருவன் "மேம் அவர்கள் இங்கு வரவில்லை போல அவங்க பிளான் மாத்தயிருப்பாங்களோ இல்லை நம்மைப் பற்றிய தகவல் யாராவது தந்திருப்பாங்களோ ?"


"வாய்ப்பில்லை ஆனந்த், வசந்த் எது இருந்தாலும் என்கிட்ட மறைக்க மாட்டான் "


"இவ்வளவு கான்பிடென்ட் எப்படி மேம் ?"


"ஏன்னா அவனை காதல் வலையில் அல்லவா மூழ்க வைத்திருக்கிறேன் "


"ஒருவேளை உண்மை தெரிஞ்சா ?"


"உயிர் போயிடும் "


"என்ன இவ்வளவு அசால்டாக சொல்றீங்க?"


"பாம்பு புற்றுகிட்ட போனா உயிர் போனாலும் போகும்னு தெரியாம இருக்க நான் என்ன பைத்தியமா ?"


"இல்லை மேம் அது வந்து ..."


"என்ன வந்து ? ..."


"தெரிஞ்சே நீங்க போய் மாட்டிக்கிட்டீங்களோனு..."


"இல்லை ஆனந்த் ..இவங்களை மாதிரி தேச விரோதிகளை நாம் சும்மா விடக்கூடாது ..."


"அதுக்காக அவங்க இடத்துக்கே போய் ..."


"இப்ப அது முக்கியம் இல்லை தொடர்ந்து மர்மமான முறையில் பெரிய பெரிய தொழிலதிபர்கள் இறந்துட்டு வர்றாங்க யாராலும் அதுக்கு காரணம் கண்டுபிடிக்க முடியல ..ஆனா கடைசியில் இருந்த வசந்த் இப்போ நம்பர் ஒன் இடத்துக்கு வந்திருக்கான்."


"அதுவே எனது சந்தேகத்துக்கு காரணம் ."


"அப்போ நீங்க அரெஸ்ட் பண்ணி விசாரிக்கலாமே மேம் ? "


"இல்லை ஆனந்த் எவிடென்ஸ் இல்லாம இப்படி பட்ட பிசினஸ்மேன்களை நாம் ஒன்னும் பண்ண முடியாது"


"அப்ப என்னதான் பண்றது ?"


"அதுக்கான சந்தர்ப்பத்துக்காக தான் காத்திருக்கிறோம் . இன்னிக்கு நடக்க இருந்த மீட்டிங்ல கையும் களவுமாக பிடிச்சிடலாம்னு இருந்தோம் பட் எங்கோ தப்பு நடந்திருக்கு "


"சரி நீங்க கிளம்புங்க சீஃப் கிட்ட விசயத்தைச் சொல்லிடுங்க "என்று ரீட்டா கிளம்பினாள்.


வெளியில் வந்தவள் வசந்த்க்கு ஃபோன் போட்டாள்.
"ஹனி எங்க இருக்கீங்க ?"


"நான் வீட்டில் இருக்கிறேன் டார்லிங்"


"என்னது வீட்டிலா இன்னிக்கு மீட்டிங் போறேன்னு சொல்லிட்டு வீட்டில் இருக்கீங்களா ? அப்போ என்னை வெளியில் கூட்டிப்போக பிடிக்காமல் தானே அவாய்ட் பண்ணுனீங்க போங்க உங்க கூட பேசமாட்டேன்" என்று செல்லமாக பொய்யாக ஒரு கோபத்தைக்காட்டினாள் ரீட்டா.


"தனக்கு வந்த அடக்கமுடியாத கொலைவெறியைக் காட்டிக்கொள்ளாமல் இல்லை டார்லிங் கிளம்பும்போது மீட்டிங் கேன்சல்னு தகவல் அப்செட் ஆகி படுத்துட்டேன் தலைவலி "


"அச்சச்சோ மீட்டிங் கேன்சலா அப்போ மறுபடி எப்போ ?" என்று அதிர்ச்சியாகக் கேட்க ..


"ஆமா நீயேன் அதைக்கேட்கிற ?
அவ்வளவு இம்பார்ட்டண்டா அந்த மீட்டிங்?"


"இல்லையா பின்ன நீங்க அதையே காரணம் காட்டி என்னை விட்டு தனியா போறீங்க தானே அது முடிஞ்சா என்கூடவே இருப்பீங்க அதான்."


"ஓ அப்படியா ஓகே சரி நீ எங்கே போன ?"


"ஷாப்பிங் போனேன் "


"என்ன வாங்கின ?"


"ஒன்னும் வாங்கல நீங்க இல்லாம எதுவும் பிடிக்கல சோ திரும்பி வாரேன்"


"என்னை வாங்கத்தானே காத்திருக்க" என்று இரட்டை அர்த்தத்தில் கூற அது அவளுக்கும் புரியாமலே ச்சீ போங்க என்று சிணுங்கினாள்.


அவளது வருகைக்காக காத்திருந்தான் வசந்த்.


*************


கார்த்திக் சொன்ன தகவல்களை வைத்து மாயாவைத் தேடிவந்த நவீன் அங்கு மாயா குடும்பம் இல்லாததைக் கண்டு தேட ஆரம்பித்தான்.


வீட்டில் பொருட்கள் சிதறிக்கிடந்ததும் சில இடங்களில் பொருட்கள் உடைந்து கிடந்ததையும் பார்க்கும்போது இது ஏதோ கடத்தல் என்பதை அறிந்து உடனே கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் சொல்லிவிட்டு விரைந்த இன்ஸ்பெக்டர் நவீன் ....நாலாபக்கமும் போலீஸை முடுக்கி விட்டுத் தேட ஆரம்பித்தார்.


****


மாயா மற்றும் அவளது குடும்பத்தைக் கடத்திவந்த அந்த நால்வர் நேராக அந்த பாழடைந்த பங்களாவினுள் இழுத்து வந்து கட்டிப்போட்டார்கள்.


அதில் ஒருவனுக்கு ஃபோன் வர
எடுத்து "ஹலோ பாஸ் நீங்க சொன்ன மாதிரியே போலீஸ் வர்றதுக்குள்ள அவளையும் அவ பேமிலியையும் தூக்கிட்டோம் .நம்ம பங்களாவில் தான் வச்சிருக்கோம்."


எதிர்முனையில் " நல்லா பார்த்துக்கோங்க நாளை நான் வந்ததும் போட்டுத்தள்ளிடலாம்" என்று சொல்லிவிட்டு ஃபோனைத் துண்டித்தான்.


"என்னடா சொன்னாரு பாஸ் என்று மற்றொருவன் கேட்க..நாளை போட்டுத்தள்ளிடுவோம்னு சொன்னாரு "


"அதுக்கு எதுக்குடா ஒருநாள் வெயிட் பண்ணனும் ? "


"அட கிறுக்கா பாஸ் அவளை பார்க்கணுமாம் அவர் கையால் கொள்ளணும்னு நினைக்கிறார் "


"அது சரி வாங்க போய் சாப்பிட்டு வரலாம் " என்று கூப்பிட நால்வரும் கிளம்பிப்போனார்கள்.
மயக்கம் தெளிந்த ஜெனி "மாயாகிட்ட இங்க என்னடி நடக்குது ?"


"யார் இவங்க ஏன் நம்மை கடத்தி இருக்காங்க அவங்களுக்கும் உனக்கும் சம்பந்தம் ?" என்று கேட்க அமைதியாய் தலைகுனிந்து கொண்டாள்


ஜெனி கோபமாகப் பார்த்தாள்.


*********
தொடரும்


எழுத்தாளர் நாகா
 
  • Love
Reactions: Kameswari