தொடர்_5
***********
நான் நீ நடுவில் பேய்
************************""""""**********"
இதுவரை...
"அவன் உங்க வீட்டு பெண்ணைக் கட்டிக்கிறேனு சொல்றது எப்படி முடியும்?"
இதையெல்லாம் கேட்ட பாபுவுக்கு வியர்க்கத்தொடங்கியது
அப்படியானால்? வசந்த்?
இனி...
"இதென்ன கொடுமை ஆசை ஆசையாய் மச்சினிக்கு கல்யாணம் பண்ணிப் பார்க்கலாம்னா
நடக்குறது எல்லாம் தப்பா இருக்கே?"
"ஃபோனில் பேசுபவர் உண்மை சொல்றாரா இல்லை பொய் சொல்றாரா ? புரியாமல் குழம்ப..
கடைசியில் அந்த தரகரிடமே கேட்டால் என்ன? "என்று தோன்றியது.
"தரகருக்கு ஃபோன் போட்டால் அந்த மனிதன் ஃபோனை எடுத்தபாடில்லை
அடச்சே அவசரத்துக்கு அடிச்சா எடுக்க மாட்றான் என்ன தொழில் பண்றான் "என்று எரிச்சலோடு திரும்ப..
வனிதா அவனை என்ன என்பதுபோல் பார்க்க..
"ஃபோன் எடுக்கலையே"
"மணி இரண்டு மாமா இந்த நேரத்தில் எவன் ஃபோனை எடுப்பான் ?"
"அதுவும் சரிதான்"
"ஆனால் காலைல நாம சொல்ல வேண்டிய செய்தியை மாப்பிள்ளை வீட்டுக்கு எப்படி சொல்றது?"
"நடக்கிறதுதான் தான் நடக்கும் மாமா
நாம் நினைச்சா மாத்தவா முடியும்?"
"அது இல்லை வனி.. மாப்பிள்ளையே
இல்லைனு அந்த பெருசு சொல்லுது
அதான் பயமே"
"ஏதும் மனக்குழப்பத்துல இருப்பாரோ?"
"தெரியல வரி ஆனா அவரு தெளிவா பேசுறாரு "
"இப்ப என்ன பண்றது மாமா?"
"நீ அக்காகூட இரு
நான் தரகரை எப்படியாவது பிடிச்சு
என்ன நிலவரம் கேட்கிறேன்"
என்று ஃபோனோடு நகர்ந்தான்.
"சரி மாமா "என்று மயக்கத்தில் படுத்திருந்த மதுவோடு போய்ப்படுத்துக்கொண்டாள்.
மீண்டும் தரகரை முயற்சி செய்ய ஃபோன் பிசி என்று வந்தது
"இந்த நேரத்தில் நமது ஃபோனை எடுக்காமல் யாரிடம் பேசுவார் "என்று யோசித்து கொண்டு இருக்க...
தரகரே அழைத்தார்.
"சொல்லுங்க தம்பி ஃபோன் பண்ணியிருக்கீங்க போல..
என்ன இந்த நேரத்தில்...?"
"ஆமா தரகரே ..வசந்த் பத்தி விசாரிக்கத்தான் "
"என்ன தம்பி நீங்க நைட் இரண்டு மணிக்கு மாப்பிள்ளை பத்தி விசாரிக்க என்ன இருக்கு ?"
"விடிஞ்ச பின்னாடி கேட்டால்தான் என்ன?
மாப்பிள்ளை ஓடியா போறார் நாளைக்கு பொண்ணு பார்க்கத்தானே வாராரு "
"அதுதானே சிக்கல் "
"ஏன் தம்பி பொண்ணு பார்க்க வர வேண்டாம்னு சொல்லணுமா?"
"இல்ல தரகரே"
"பின்ன என்ன பிரச்சினை திடீர்னு வந்து மாப்பிள்ளை பத்தி...?"
"ஐய்யோ சொல்ல வர்றதைக் கேட்டுட்டு சொல்லுங்க "
"சொல்லுங்க தம்பி ."
"மாப்பிள்ளை வீட்டுக்கு போயிருக்கீங்களா?
எவ்வளவு நாளா தெரியும் அவரை?"
"அவர் வீடு தெரியாது தம்பி ஒரு ஆறுமாதமாக தெரியும் நல்ல பழக்கம்
சமத்தான பையன் பெரியவங்களை நல்லா மதிப்பான்"
"ஓ நிறுத்துங்க நிறுத்துங்க என்ன சொன்னீங்க அவனை ஆறு மாதமாகத்தான் தெரியுமா?"
"ஆமா தம்பி ஏன்?"
"ஓ சிட் அவன் இறந்து நான்கு வருஷம்
ஆச்சாம் ஆனால் நீங்கள் ஆறு மாதத்திற்கு முன் தான் பழக்கம் சொல்றீங்க ?"
"என்ன தம்பி சொல்றீங்க செத்துப்போனவனா பொண்ணு பார்க்கச் சொல்லி என்கிட்ட வந்தான்?"
"ஆமாம் தரகரே
நீங்களா அவனுக்கு பொண்ணு பார்க்கிறேன் என்று சொன்னீங்களா ? இல்லை அவனா பொண்ணு பார்க்கச் சொன்னானா ?"
"அது...ஓ நியாபகத்துக்கு வந்திருச்சு
அவன்தான் தம்பி வந்தான்
அவனோட அம்மா அப்பா ஜாதகம் கொண்டு வந்து கொடுத்து நல்ல வரனா பார்க்கச் சொன்னான்."
"இன்னொரு டவுட் ,சரி நீங்க வனிதாவைப்பத்தி எப்பவாவது அவன்கிட்ட பேசுனீங்களா?"
"இல்லையே தம்பி"
"நல்லா யோசனை பண்ணிச்சொல்லுங்க ."
"ஒருதடவை ஒரு பெரிய இடத்துல
வனிதா போட்டோ காட்டி பேசிட்டு இருந்தேன் ஆனா அவங்க பொண்ணை பாரீன் கூட்டிப்போயிடுவோம்ன்னு சொன்னாங்க "
"அதை உங்க பாப்பா ஏத்துக்கல,அத்தோடு அந்த சம்பந்தத்தை விட்டுட்டேன் பிறகு ஒருமுறை டீக்கடையில் ஒருத்தர்கிட்ட ஒரு நல்ல பொண்ணு இருக்குனு சொல்லிட்டு இருந்தேன்
அப்போ அந்த பையன் வந்தான் அதுக்கு அப்புறம் தான் அடிக்கடி மீட் பண்ணினோம் ."
"ஓ குட்னஸ் சரி இப்போ அவனோடு ஜாதகம் உங்ககிட்ட தானே இருக்கு."
"ஆமா தம்பி பொண்ணு ஓகே சொல்லிட்டா கொடுக்கலாம்னு இருந்தேன் ."
"அதை கொஞ்சம் செக்பண்ணிப்பாக்க முடியுமா?"
"ஏன் தம்பி?"
" அதுல ஒரிஜினல் அப்பா அம்மா அட்ரஸ் இருக்கானு பார்க்கணும் "
"இதோ ஒரு நிமிசம்" என்று
வாங்கி வைத்திருந்த பத்து பதினைந்து ஜாதகங்களைப் புரட்டிப்பார்க்க ..
வசந்த் கொடுத்த ஜாதகம் மட்டும் காணவில்லை.
"தம்பி நல்லா தேடிட்டேன்பா அந்த ஜாதகம் மட்டும் காணோம் எங்க வச்சேனு தெரியலைப்பா"
"நீங்க வச்ச இடத்தில் இருக்காது தரகரே ஏன்னா அவனும் நிசமில்லை அவன் கொடுத்ததும் நிசமில்லை பிறகு எப்படி இருக்கும்.?"
"அப்போ அவன் பேயா தம்பி.?"
"அது இவ்வளவு நேரமா உங்களுக்கு புரியலையா தரகரே ."
"ஐய்யோ ஐய்யோ காசுக்கு ஆசைப்பட்டு அநியாயமா பேய்கூடவா இத்தனை நாள் பேச்சு வச்சிருந்தேன்."
"சரி விடுங்க தரகரே இனி வரமாட்டான் வந்தா எனக்கு தகவல் சொல்லுங்க."
"சரி தம்பி "
"நன்றி தரகரே சரி நீங்க தூங்குங்க"
"இனி எங்க தூங்குவது
அதான் கிலி பிடிக்க வச்சிட்டீங்களே" என்று சிரித்தபடி போனைத் துண்டித்தார் தரகர்.
***
"என்ன இது கொடுமை ?
இப்போ போய் மாப்பிள்ளையாகவே வர ஆரம்பிச்சிடுச்சு "
அது சரி ஏன் ஜெனி உடம்புல
வந்து பிறகு மது உடம்புல வந்து அந்த பூசாரியை வேற தாக்கி....என்று நினைத்துக்கொண்டு இருக்கும்போதே...
அப்படினா உண்மை தெரிந்த தரகர்...
ஐயோ ...என்று திரும்ப தரகருக்கு ஃபோன் போட ..
"என்ன தம்பி மறுபடி ஃபோன்?"
"நீங்க நல்ல இருக்கீங்கதானே"
"என்ன தம்பி இப்படி கேட்கறீங்க ?
இப்பத்தான் ஏ பேசுனோம்
நல்லாத்தான் இருக்கேன்."
"கொஞ்சம் கவனமா இருங்க" என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே ஒரு பூனையின் உறுமல் தெளிவாக கேட்டது ...தரகரின் குரல் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி இருந்தது.
பாபுவின் முகம் வியர்த்துக்கொட்டியது.
தரகருக்கு எதோ ஆகிவிட்டது மட்டும் புரிந்தது .
ஆனால் பாவம் அந்த மனுசன், நாம் கேட்கப்போக அவரை பலிவாங்கிடுச்சு
அதே நேரத்தில் நாம்மோடு பயணிக்கிற ஒவ்வொருவரிடமும் தனது சுயரூபத்தைக் காட்டுகிறது அந்த பேய்.
யார் அது ?
எதற்காக என்னோடு உள்ளவர்களும் பலி வாங்குகிறது
எனக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்?
இல்லை என் மனைவிக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்?
ஆனால் சம்பந்தம் இல்லாம எதற்கு மற்றவரை கொல்கிறது ?
இப்படி பல கேள்விகள் அவனுக்குள் எழும்ப ..
"என்னங்க இங்க என்ன பண்ணுறீங்க?" என்று மது தோளைத்தொட..
திடுக்கிட்டு" அஅஅஅதுதுது..."
"என்னங்க நாக்கு டைப் அடிக்குது
என்னாச்சு?"
"சரி இந்த நேரத்தில் நீ எங்க இங்க ?"
"ரெஸ்ட்ரூம்போக எழுந்தேன் வனி என்கூட தூங்கிட்டு இருந்தா உங்களைக் காணோம்னு தேடி வந்தேன்."
"நீ மது தானே ?"
"அதுல என்னங்க சந்தேகம் ?"
"இங்க கிட்ட வா" என்று அவளைக் கிள்ள..
"எரும எரும எதுக்கு கிள்ளுறீங்க?"
"பேய்னு நினைச்சேன் "
"காலம்பூரா உங்களைக் கட்டிகிட்டதுக்கு பேய் பிசாசுனு பேச்சு கேட்டுத்தான் ஆகணும் என்ன செய்ய?"
"சரி நேரத்தில் தூங்குங்க காலைல மாப்பிள்ளை வீட்டார் வரப்போறாங்க"
"அடியே மறுபடியுமா?"
"ஏங்க அப்படி சொல்றீங்க?"
"அப்ப நடந்த எதுவுமே உனக்கு தெரியாதா?"
"என்ன நடந்தது ?"
"சரி சரி நீ தூங்கு காலைல பேசிக்கொள்ளலாம் "
"என்னங்க ஆச்சு எதையோ மறைக்கிறீங்க?"
"அது வந்து" என்று ஆரம்பித்தவன் "ஒன்னுமில்லை" என்று நிறுத்திக்கொண்டான்
"ஏதோ சொல்ல வந்தீங்க "
"காலைல பொறுமையா சொல்றேன் நீ வா" என்று உள்ளே அழைத்துப்போனான் .
வனி கட்டிலில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க... இருவரும் பெட்சீட் எடுத்து கீழே விரித்து படுத்தனர்.
**********
காலை 8 மணிவரை எப்படி தூங்கினோம் என்று தெரியாமல் அனைவரும் உறங்க ..
வனிதா அம்மா எழுந்துவந்து மதுவை எழுப்பினாள்.
"மது என்னடி பண்ற ?
காலைல மாப்பிள்ளை வீட்டார் வருவதற்குள் எல்லாம் தயார் பண்ண வேண்டாமா?"
"அதைத்தான் மா அவர்கிட்ட சொன்னேன் ,அவரு ஏதோ சொல்றாரு "
"என்னம்மா சொன்னாரு மாப்பிள்ளை ?"
"அவர்கிட்ட தான் கேட்கணும் "
"எழுப்பு அவரை "..என்றாள் மது அம்மா
"என்னங்க நேரமாச்சுங்க எழுந்திருங்க "
என்று அவனைத் தட்டி எழுப்ப ..
"எதுக்குடி இப்போ கத்துற ?"
"எதுக்கு கத்துறனா ?"
"மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துடப்போறாங்க"
"எந்த மாப்பிள்ளை வீட்டுக்காரங்க?"
"அதாங்க நம்ம வனிக்கு பார்த்த வரன்தான்."
"எது அந்த பேயா ?"
"என்னங்க விளையாட்டு பேயி பிசாசுனு
போய்ரெடியாகுங்க" என்று கிளப்பிவிட..
"போய் நீ உன் தங்கச்சியை எழுப்பு" என்றதும்
"அடியே மணப்பொண்ணு மாதிரியாடி இருக்க இப்படி நீயும் தூங்குற?"
"விடுடி எனக்குத் தூக்கம் தூக்கமாய் வருதுன்னு ஆ,...வ்" என்று கொட்டாவி விட்டபடி மீண்டும் விழுந்து படுத்தாள்.
"என்ன நடக்குது இங்க ?"
"ரெண்டு பேரும்சேர்ந்து ஏதோ பிளான் பண்றாங்கபோல மா "என்றாள் மது.
"என்னப்பா இது ஒன்னுமே புரியல
மாப்பிள்ளை வீட்டார் வர்றாங்களா இல்லையா ?"
"இல்லை அத்தை அவங்க உண்மையான மாப்பிள்ளையே இல்லை."
"பிராடுங்க அத்தை அதனால் அவங்க வரமாட்டாங்க"
"என்னப்பா சொல்லுறீங்க நம்மள அந்த தரகர் ஏமாற்றிவிட்டாரா ?"
"அந்த தரகருக்கே தெரியாது அத்தை.
அவர் பாவம் "
"ஃபோன் போடுங்க கேட்போம் "
"நாம் ஃபோன் போட்டாலும் எடுக்க மாட்டாரு "
"ஏன் அந்தாளும் ஓடிப்போயிட்டாரா?"
"இல்லை அத்தை அவரு செத்துப்போயிட்டாரு "
"என்னப்பா சொல்றீங்க?"
"மாப்பிள்ளை ஓடிப்போயிட்டார் தரகர் செத்துட்டார்னு புதுப்புதுக் கதையா சொல்றீங்க ?"
"அதுதான் உண்மை அத்தை வனிக்கு பார்த்த மாப்பிள்ளை இறந்து நான்கு வருசமாச்சாம்"
"அந்த பையன் உருவத்தில் வந்த எந்த கெட்ட ஆத்மாவோ வனியைத் திருமணம் செஞ்சு நம்ம குடும்பத்தைச் பழிவாங்க திட்டம் போட்டது ,அது தெரிந்ததும் தரகரைக் கொன்னுடுச்சு."
"ஐயோ அடுத்து நம்மதானோ,?"
"இருக்கலாம் அத்தை ஆனா அதுக்குள்ள நாம் நம்ம குலதெய்வம் கோவிலுக்குப்போய் பொங்கல் வச்சிடணும்."
"கேரளா மந்திரவாதிகிட்ட டேட் கேட்டுருக்கேன்.அவரு வர்றதுக்குள்ள நாம் கோவில் போயிட்டு வந்துடணும்"
"சரிப்பா முதலில் அதை ரெடி பண்ணுங்க ."
"அதிலும் ஒரு சிக்கல் அத்தை நாம் இந்த வீட்டைவிட்டு வெளியே போக முடியாது"
"பிறகெப்படிங்க நாம் கோவில் போறது?"
"அதுக்குத்தான் என் பிரண்ட் கத்துகுட்டி ஒரு ஐடியா சொல்லியிருக்கான்"
"அதுயென்னங்க கத்துகுட்டி பேரே வித்தியாசமா ?"
"அவன் அமானுஷ்ய சக்திகளைப்பத்தி ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கான்.
அவனுக்கு ஆத்மாக்களை உணரக்கூடிய சக்தி இருக்கிறது"
"அவன் இப்பக்கூட எந்த பேயைப்பத்தியாவது கட்டுரை எழுதிட்டு இருப்பான் ."
"நாளை நம்மை அவன் வந்துதான் அழைச்சிட்டு போகணும் அதுவரை நாம் இங்கதான் "என்று பாபு சொல்லிமுடிக்க...
"என்னங்க இது சோதனை ? இதுக்கு முடிவு?"
"அது அவன் வந்தாத்தான் தெரியும்" என்று பாபு சொல்ல...
ஜெனி அவர்களை நோக்கி வந்தது.
அதேநேரத்தில் தனது அறையில்
அமானுஷ்ய சக்திகளைப்பத்தி எழுதிக்கொண்டு இருந்த கத்துகுட்டியின் பின்புறம் இரண்டு பேய்கள் முறைத்துகொண்டு இருந்தன.
தொடரும்....
எழுத்தாளர் நாகா