...
தொடர்_8
***********

நான் நீ நடுவில் பேய்

************************""""""**********"
இதுவரை...
ஆபரேட்டர்கிட்ட சொல்லி லைட் ஆஃப் பண்ணிட்டு
" எங்க இருக்கு ஒன்னும் காணோமே
நேரத்தை வீணடிச்சிட்டீங்க போங்கம்மா "
என்று திரும்ப மேனேஜர் முகத்தின் முன் வந்து நின்றது அந்த கோரமுகம்.
இனி...
சுரேஷ் _ஜெனிகிட்ட பேயாவாது பிசாசாவதுனு கிண்டல் பண்ணி விட்டுத் திரும்பிய மேனஜர் இன் முன்னால் பாதி எரிந்த நிலையில் வந்து நின்ற கோரமுகத்தைப்பார்த்து மயங்கி விழ...
சுரேஷும் ஜெனியும் விழுந்தடித்து ஓடினார்கள்.
தனது ஹேண்ட்பேக்லிருந்து கார் சாவியைத் தேடி எடுத்து ஸ்டார்ட் செய்வதற்குள் அந்த பேய் அவர்களின் முன் வந்து நிற்க...
அதன் மீது மோதி வண்டியை வேகமாக ஓட்டினாள் ஜெனி.
சுரேஷ் பின்னால் திரும்பி அந்த பேய் வருகிறதா என்று பார்க்க அவள் வேகத்தை ...அதிகரிக்க வேகம் நூறைத்தொட்டது.
எதிரில் வந்த காரின்மீது மோத இருந்த கடைசிவினாடி அந்த கார் அவர்களைக் கடந்து செல்ல அங்கிருந்த பள்ளத்தில் இறங்கிக் கவிழ்ந்தது.
அதன்பிறகு என்ன நடந்ததென இருவருக்கும் தெரியவில்லை.
பின்னால் வந்த வாகனத்தில் இருந்தோர் ஆம்புலன்ஸ்க்கு ஃபோன் போட்டு அவர்களை ஹாஸ்பிடலில் சேர்த்தனர்.
************
வீட்டின் நிலைக்கதவில் மோதித் தலையில் அடிபட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்த கத்துக்குட்டிக்கு மயக்கம் தெளிய..தனது ஃபோனை எடுத்து நேரத்தைப் பார்த்தான் .
மணி இரவு ஏழு என்று காட்டியது.
ஐய்யோ இன்று பாபுவைப் பார்க்க வரேன்னு சொன்னேனே என்னாச்சு எனக்கு என்று தலையைத் தடவ இரத்தம் உறைந்து பிசுபிசுனு இருந்தது.
பதறியடித்து எழுந்து முகத்தைக்
கழுவிவிட்டுக் கண்ணாடி முன் அமர்ந்து மந்திரங்களை ஓத தலையிலிருந்த காயம் தானாக மறைந்து பழைய நிலைக்கு வந்தது.
தனது ஃபோனை எடுத்து பாபுவுக்கு ஃபோன் போட்டான்
"பாபு ஃபோனை எடுத்து ஹலோ எப்படிடா இருக்க?
என்னாச்சு ?
உன் ஃபோனை யாரெடுத்தது நீண்ட நேரமாக அடித்தும் பதிலில்லை."
"இன்று வாரேன்னு சொன்ன, எந்த பதிலும் சொல்லாம போயிட்ட, ஃபோனை வேற எடுக்கலனு பயந்துட்டேன் தெரியுமா?"
"எனக்கு என்னடா ஆகப்போகுது
திடீர்னு கொஞ்சம் வேலை ஃபோன் வேற ஒர்க் ஆகல "னு பொய் சொல்லிச் சமாளிக்க...
"சரிடா எப்ப வர்ற?"
"இதோ கிளம்பிட்டேன் காலைல வந்துடுவேன் நீங்க ரெடியா இருங்க "
"சரிடா நீ இருக்க தைரியத்துலதான் இருக்கேன்.
அந்த பேய்க்கு என்ன வேணும்னு தெரியல.
இப்படி பாடாய்ப்படுத்துது"
"நீ எதையும் யோசிக்காதடா , நான் வந்துடுவேன்."
"ம்ம் வைக்கட்டுமா?"
"சரி வை" என்று சொல்லிவிட்டுத்
தனது பையில் சில மாந்த்ரீகப் புத்தகங்களை எடுத்து வைத்தான் கத்துக்குட்டி.
*******
" என்னடா இவன் இவ்வளவு தடங்கலுக்குப் பிறகும் கிளம்புறானே என்று நினைத்துக்கொண்டு நிக்கிற தானே ?" என்று கண்முன்னே தெரியாமல் நின்றிருந்த ஜெனியிடம் சொல்ல.....
"அது சரி நான் வந்தது எப்படி தெரியும் ?"
"ஹாஹா நீ வந்தது மட்டுமில்ல உன்பின்னால் மூணுபேரு நிற்பதும் தெரியும்" என்றதும் ஜெனி திரும்பிப்பார்த்தது.
யாரென்று தெரியாத மூன்று பேய்கள் நின்றுகொண்டிருந்தன.
*********
தொபீரென்று அடுப்படியில் பாத்திரம் விழுந்து உருள மது ஓடிப்போய்ப் பார்த்தாள்
ஜெனி ஆக்ரோசமாகப் பாய்வதற்குத் தயாராக இருந்தது.
நீண்ட நேரமாகியும் மதுவைக் காணவில்லை என்று அடுப்படிக்கு வந்த பாபு மதுவைக் கண்டு அப்படியே நின்றான்.
மதுவும் ஜெனியும் அமர்ந்து பேசிக்கொண்டு இருப்பதைப்பார்த்த பாபு அப்படியே அதிர்ச்சியில் நின்றான்.
"வாங்க என்ன அப்படி பார்க்குறீங்க ?"
"யார்கிட்ட பேசுறனு தெரிஞ்சுதான் பேசுறியா மது?"
" தெரியாமலா பேசுறேன்
நம்ம ஜெனிகூடத்தான்"
"என்னது நம்ம ஜெனியா ?" என்று அவளது தோளைத்தொட ...
மது திரும்பிப்பார்த்தாள்.
முகம் முழுவதும் அழுகிப் புழுவைத்து
நாசித் துவாரங்களிலிருந்து இரண்டு
புழுக்கள் நெளிய பற்கள் தெரிய
சிரித்தாள்.
அருகில் ஜெனி தேவதை மாதிரி அமர்ந்து இருந்தாள்.
"வனி "என்றபடி விழுந்தடித்து கிச்சனில் இருந்து வெளியே ஓடிவர..
"என்ன மாமா என்னாச்சு ?"
"அ..ங்க.அங்க.."
"அங்க என்ன ?"
"மது..மது.."என்று உளறினான் பாபு.
"அட போங்க மாமா" என்று உள்ளே சென்று பார்த்தாள் வனிதா.
"என்னடி வேணும் ?"
"ஒன்னும் வேணாம் , எதுக்கு மாமா
மது மதுனு உளறுறாரு
என்ன சொன்னாய் ?"
"நான் என்னடி சொல்ல?"
"அவர் பிரண்ட் வர்றத்துக்குள்ள மனுசனுக்குப் பைத்தியம் புடிச்சிடும் போலயே."
"சரிக்கா நீ பாரு டென்ஷன் ஆகாத,அவரை என்னனு கேட்கிறேன்" என்று வெளியேறினாள்.
மது பலமாகச் சிரித்தாள் கூடவே ஜெனியும்.
*******
" என்ன மாமா
மது வேலை தானே பார்த்துட்டு இருக்கா சும்மா எதுக்குக் கத்துனீங்க ?"
"மது... பேய் ?"
"சும்மா இருங்க மாமா அவளைக் கிண்டல் பண்றதே வேலையா போச்சு?"
"அந்த ஜெனியால் ரொம்பத்தான்
நீங்க பயந்து போய் இருக்கீங்க."
"நானா , நம்பு வனி அவ உடம்புல ஜெனி புகுந்திட்டா அவ முகமெல்லாம் அழுகி..."
"ஸ்டாப் ஸ்டாப் மாமா கேட்கவே அருவெறுப்பா இருக்கு
அவ எவ்வளவு அழகா இருக்கா நீங்க இப்படி சொல்றீங்க ?"
"உன் அக்கா அழகு இல்லைனு எப்போ சொன்னேன் ?
அந்த ஜெனி அவ முகத்தை அப்படி ஆக்கி வச்சுருக்கு"
"சும்மா இருங்க மாமா அவ நல்லாத்தான் இருக்கா
நீங்க ஜெனி பயத்துல இருக்கீங்க அதான்"
"இல்ல வனி உண்மையைத்தான் சொல்கிறேன்" என்று சொல்ல..
மது டீயோடு வந்தாள்
"இரண்டு பேரும் என்னைப்பத்தி என்ன பேசுறீங்க ?" கேட்டாள்.
பாபு அவளைப்பார்த்து பயந்தபடியே டீயை வாங்கினான்.
"என்னங்க நான் பேயா ? ஏன் என்னை பார்த்துக் கத்துனீங்களாம் ?"
"ஒன்னுமில்லை "என்று சமாளித்தான்
இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே ஹார்ன் பெல் அடித்தது.
**********
ஜெனியும் சுரேஷும் கண்விழிக்க
நர்ஸ்," எப்படி நடந்தது இந்த ஆக்ஸிடென்ட் ? "என்று கேட்டாள்
"குறுக்கே நாய் வந்துவிட்டது,
சரி நாங்க எப்படி பிழைச்சோம் ?"
"நல்லவேளை நீங்க சீல்ட் பெல்ட் போட்டிருந்ததால் தப்பிச்சீங்க.
கார்தான் கொஞ்சம் டேமேஜ் ஆகிடுச்சுனு சொன்னாங்க."
"பரவாயில்லை நாங்க பிழைச்சதே போதும்" என்றாள் ஜெனி.
அந்த பேயின் முகம் வந்து போக சுரேஷ் அதிர்ச்சியிலேயே இருந்தான்.
"டாக்டர் வந்ததும் நீங்க வீட்டுக்குப்போகலாம்
இப்ப ரெஸ்ட் எடுங்க" என்று சொல்லிவிட்டு நர்ஸ் கிளம்பிப்போனாள்.
ஜெனி சுரேஷ் பக்கம் திரும்பி " பேபி உனக்கு ஒன்னுமில்லையே ?"
"இல்ல ஹனி உனக்கு பிரச்சினை இல்லையே ?"
"இல்லை ரொம்பப் பயந்துட்டேன்
தேங்க் காட்" என்றாள்.
"ஆமா ஹனி நானும்" என்றான்.
"சரி பேபி நீ எதுவும் யோசிக்காதே.
ரெஸ்ட் எடு ஈவினிங் பாத்துக்கலாம்" என்றாள்.
*************
வசந்த் கனடாவிலிருந்து இந்தியா வருவதற்கு ஏர்ப்போர்ட்டில் காத்திருந்தான்.
அம்பிகா ஃபோன் செய்தாள் .
"சொல்லுங்க மா "
"எத்தனை மணிக்கு பிளைட் அரைவ்வல், தம்பிய வரச்சொல்லவா?"
"வேண்டாம் மா நான் ஏர்போர்ட் டாக்ஸில வந்துடுறேன்."
"உன்கூட மாலினி வர்றாளா ?"
"இல்லம்மா குழந்தைகளுக்கு இது எக்ஸாம் டைம்
எனக்கு லீவ் கெடைச்சதே பெரிய விசயம் "
"எப்போ பார்த்தாலும் இதைத்தானடா சொல்ற ?"
"எப்போடா பிள்ளைங்களைக் கண்ணில் காட்டுவ உன் இஷ்டத்துக்கு கல்யாணம் பண்ணின?
அப்புறம் பாரீன்லயே செட்டிலான ?
புள்ளைங்களுக்கு வயசும் அஞ்சு ஆச்சு ..."என்று புலம்ப...
"அம்மா புரிஞ்சுக்கோங்க இந்த சம்மர்ல கண்டிப்பா அவங்க வருவாங்க "
"நான் இப்போ வர்றது பிசினஸ் விசயமா "
"சரி சரி நீ பாத்துவா "என்றாள் அம்பிகா
"சரிமா அலோன்ஸ் பண்றாங்க செக் இன் போறேன் பை என்று சொல்லி ஃபோனைத் துண்டுத்துவிட்டு ட்ரோலிபேக்கை இழுத்துக்கொண்டு நடந்தான்.
"எக்ஸ் க்யூஸ் மீ கொஞ்சம் வழிவிட முடியுமா ?" என்று ஒரு பெண்குரல் கேட்கத் திரும்பிப்பார்த்தான் வசந்த்.
மாயா நின்றிருந்தாள்.
தொடரும்....
எழுத்தாளர் நாகா