• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நான் பார்த்த முதல் முகம் நீ..! NPMMN EPI 14

Kriya

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 31, 2025
19
1
3
chennai
"என்ன உரிமையா? என் உரிமை என்னனு மேடம்க்கு தெரியாதா இல்லை நான் நியாபக படுத்தடுமா?" என்று இவன் கேட்க

ஆரண்யா அவன் கேள்வியில் தடுமாறினாள், ஆதி?? என்று அவள் ஏதோ சொல்ல வர

அடுத்த நொடி அவளை தன் அருகில் பிடித்து இழுத்தவன் அவள் இதழ்களை முற்றுகை இட்டான். அத்தனை மென்மை அவன் செயலில், அவள் ஒரு நொடி திகைத்தாள்.

அவள் தலை கொஞ்சம் பாரமாக இந்த மென்மை தனக்கு அத்தனை பரிச்சியமாய் ஒரு நொடி இருக்க இவள் மனம் வேகமாய் அடித்து கொள்ள ஆரம்பித்தது.

ஆதி என்ற வார்த்தை தவிர அவன் மனமும் இதழ்களும் வேற எதும் உச்சரிக்கவில்லை.

அவன் தன் இதழ் ஒற்றலை நீடித்து கொண்டே செல்ல ஒரு கட்டத்தில், அவள் அப்படியே மயங்கி அவன் மேலே விழ
சின்ன புன்னகையுடன் அவளை தாங்கி பிடித்தவன் மெல்லமாய் அவள் அறைக்குள் தூக்கி சென்றான்.


இனி

அவளை அந்த நிலமையில் விட்டு வந்து இருக்கவே கூடாது, எத்தனை வர்ஷத்துக்கு பின் செத்து போன உணர்வுகள் எல்லாம் இவளால் மட்டுமே மீட்டு எடுக்க படுகிறது அவன் இல்லை என்று யோசித்தாலும் அது அத்தனை உண்மையா இருந்தது.
அருகில் உறங்கி கொண்டு இருந்தவளை பார்த்தவன் இதழால் சிரிப்பிலும் கண்கள் கலங்கியும் இருந்தது

5 வருடத்திற்கு முன்

காலேஜ் பேர்வெல், ஜூனியர் மாணவர்கள் சீனியர் மாணவர்களுக்கு விடை கொடுக்கும் படி ஆடல், பாடல் அது இல்லாமல் உணவுகள் என்று அனைத்தும் காலேஜ் க்ரௌண்ட் யில் ஏற்பாடு செய்ய பட்டு இருந்தது.

ஆரண்யா அவள் நண்பர்களுடன் அமர்ந்து இருக்க மற்றவர்கள் டான்ஸ்க்கு பிராக்டிஸ் செய்து கொண்டு இருந்தனர், அப்போது அவள் கிளாஸ் மேட் ரிஷிக்கா அவர்களை நோக்கி ஓடிவந்தவள்.
"நம்ம கிளாஸ் ஸ்ருத்தி, அம்மாக்கு உடம்பு சரி இல்லையாம் ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணிற்காங்க, இப்போ இன்ட்ரொடக்ஷன் சாங் பாடுறதுக்கு ஆள் வேணும் "என்று சொல்ல

காவ்யா அருகில் இருந்த ஆரண்யாவை பார்த்தாள் இருவரும் பள்ளியில் இருந்து ஒன்றாய் படித்தவர்கள் என்பதால் அவளுக்கு நன்றாக தெரியும் ஆரண்யா நன்றாக பாடுவாள் என்று ஆரண்யா அவளை பார்த்து மெல்லமாக வேண்டாம் என்று தலை அசைக்க இங்கு ரிஷிகாவோ பதறி கொண்டு இருந்தாள் "hod திட்ட போறாறு, இப்போ யாரை பாட சொல்றது?" என்று பதட்டமாக

"பாவம்டி" என்று காவ்யா ஆரண்யாவிடம் சொல்ல அவள் மௌனமாய் இருக்கவும்

"ரிஷிகா என்ன மாறி சாங்ஸ்?"

"எதுனாலும் ஓகே சம்திங் சினி டிவோஷனல் அதுமாறி இருந்தா ஓகே ""என்று சொல்ல ஆரண்யா நல்லா பாடுவா என்று சொல்ல

"ஹை நிஜமாவா ஆரண்யா? பிளீஸ் டி எதச்சு பிரிபேர் பண்ணிக்கோ ஈவினிங் 6க்கு உன் ஷோ தான் ஃபர்ஸ்ட்" என்று சொல்ல

"லாஸ்ட் மினிட்ல புரோகிராம் ஸ்பாயில் ஆக வேண்டாம் என்று தான் பாடுறேன், ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் இனிமேல் எதுக்கும் நான் பாட மாட்டேன் இப்போவே சொல்லிட்டேன்" என்று சொல்ல

"சரி டி உன் இஷ்டம் இன்னைக்கு மட்டும் பாடி குடுத்துடு தாயே அதுவே போதும் "என்று அவள் சொல்ல

"ஹம் சரி !" என்று தன் ஃபோன் எடுத்து பாடல்களை சர்ச் செய்ய ஆரம்பித்தால்.


"சரி நீ சாங்ஸ் பார்த்துட்டு இரு ஆரண்யா நான் விஜய் கிட்ட பேசிட்டு வரேன் " என்று ஓடினாள்

ஓடும் அவளை நிமிர்ந்து பார்த்தவள், இப்படி நேசிக்கிறதுக்கு கூட குடுப்பினை வேணும் போல என்று அவள் நினைக்க

அந்த சமயம் அவள் அருகில் ஆதி வந்து அமரந்தான்.

திரும்பியவள், ஆதி என்று தெரிந்ததும் அந்த இடத்தை விட்டு நகர போக

"என்ன மேடம் அதிசயமா புக் இல்லாமல் க்ரௌண்ட் பக்கம் எல்லாம் வந்து உக்காந்து இருக்கீங்க?" என்று நக்கலாய் கேட்டபடி ஷூ லேஸ் கட்டி கொண்டு நிமிர்ந்து அவளை பார்க்க

அவளும் அவனை பார்த்தாள், கிரவுண்டில் விளையாடி வந்து இருக்கான் போல, வேர்வை சொட்ட அவன் குனிந்து லேஸ் கட்ட இரண்டு சொட்டு தரையில் விழுந்தது

என்னோ சட்டென்று அவன் வேர்வை தொடைக்க கைகள் பரபரத்தது. அந்த உணர்வை அடைக்கி கொண்டவள்

ஈவினிங் ப்ரோக்ராம் rehearsal பண்ணிட்டு இருக்காங்க அதான் சும்மா பிரெண்ட்ஸ் கூட வந்து உக்காந்தேன் என்று அவள் சொல்ல

"ஹம் அது சரி., நீ என்ன பாட போரியா ஆட போரியா சும்மா வேடிக்கை பார்க்குறதுக்கு எதுக்கு இப்படி வெயில உக்காந்துட்டு இருக்க ஹாஸ்டெல் போ" என்று அவன் உரிமையா சொல்ல

அவன் ஒரு நொடி இமைக்க மறந்து பார்த்தால் இப்படி ஒரு நாள் கூட ஆதி தன்னிடம் இப்படி எல்லாம் பேசியது இல்லை இப்படி கூட இவனால் தன்மையா பேச முடியுமா? என்று ஆச்சரியமாய் அவனை பார்த்தபடி இருக்க

அவனோ நிமிர்ந்தவன் அவள் ஒற்றை பக்க தோளில் போட்டு இருந்த துப்பட்டா நுனியை எடுத்தவன் சாதரணமாய் நெற்றியை துடைக்க
ஆரண்யா அந்த நொடி பதறியே விட்டாள், என்ன பண்றீங்க என்று அவள் அதிர்ச்சியா கேட்க

க்ளோத் எதும் இல்லை இவளோ ஸ்வெட் ஆகுது பார்த்தல, அதான் இவளோ பெருசு சும்மா தானா இருக்கு அதான் யூஸ் பண்றேன் என்று சொல்ல

கோவமாய் அவனை முறைத்தவள் "எப்படி நீங்க என் துப்பட்டாவை என் பர்மிஷன் இல்லாமல் யூஸ் பண்ணாளாம் ?"என்று கடுப்பாய் கேட்க

"என் பர்மிஷன் இல்லாமல் நீ எப்படி என் கூலர்ஸ், என் ஐடி கார்ட், என் கார் செயின் எல்லாம் எடுக்கலாம்" என்று அவன் நிதானமாய் அவளை பார்த்து கேட்டான்

ஆரண்யா அதிர்ந்து அவனை பார்த்தாள்.

5 மீன்ஸ் டைம் உனக்கு கார் பார்க்கிங் வா என்று சொன்னவன் வேகமாய் நடக்க

அதிர்ச்சியுடன் நின்று இருந்தாள்.




ஆதி ஆரண்யா வருவார்கள்💜



ஹாய் பிரெண்ட்ஸ்


waiting for யுவர் replies


பை