• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நான் பார்த்த முதல் முகம் நீ..! NPMMN EPI 15

Kriya

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 31, 2025
19
1
3
chennai
"என்ன மேடம் அதிசயமா புக் இல்லாமல் க்ரௌண்ட் பக்கம் எல்லாம் வந்து உக்காந்து இருக்கீங்க?" என்று நக்கலாய் கேட்டபடி ஷூ லேஸ் கட்டி கொண்டு நிமிர்ந்து அவளை பார்க்க

அவளும் அவனை பார்த்தாள், கிரவுண்டில் விளையாடி வந்து இருக்கான் போல, வேர்வை சொட்ட அவன் குனிந்து லேஸ் கட்ட இரண்டு சொட்டு தரையில் விழுந்தது

என்னோ சட்டென்று அவன் வேர்வை தொடைக்க கைகள் பரபரத்தது. அந்த உணர்வை அடைக்கி கொண்டவள்

ஈவினிங் ப்ரோக்ராம் rehearsal பண்ணிட்டு இருக்காங்க அதான் சும்மா பிரெண்ட்ஸ் கூட வந்து உக்காந்தேன் என்று அவள் சொல்ல

"ஹம் அது சரி., நீ என்ன பாட போரியா ஆட போரியா சும்மா வேடிக்கை பார்க்குறதுக்கு எதுக்கு இப்படி வெயில உக்காந்துட்டு இருக்க ஹாஸ்டெல் போ" என்று அவன் உரிமையா சொல்ல

அவன் ஒரு நொடி இமைக்க மறந்து பார்த்தால் இப்படி ஒரு நாள் கூட ஆதி தன்னிடம் இப்படி எல்லாம் பேசியது இல்லை இப்படி கூட இவனால் தன்மையா பேச முடியுமா? என்று ஆச்சரியமாய் அவனை பார்த்தபடி இருக்க

அவனோ நிமிர்ந்தவன் அவள் ஒற்றை பக்க தோளில் போட்டு இருந்த துப்பட்டா நுனியை எடுத்தவன் சாதரணமாய் நெற்றியை துடைக்க
ஆரண்யா அந்த நொடி பதறியே விட்டாள், என்ன பண்றீங்க என்று அவள் அதிர்ச்சியா கேட்க

க்ளோத் எதும் இல்லை இவளோ ஸ்வெட் ஆகுது பார்த்தல, அதான் இவளோ பெருசு சும்மா தானா இருக்கு அதான் யூஸ் பண்றேன் என்று சொல்ல

கோவமாய் அவனை முறைத்தவள் "எப்படி நீங்க என் துப்பட்டாவை என் பர்மிஷன் இல்லாமல் யூஸ் பண்ணாளாம் ?"என்று கடுப்பாய் கேட்க

"என் பர்மிஷன் இல்லாமல் நீ எப்படி என் கூலர்ஸ், என் ஐடி கார்ட், என் கார் செயின் எல்லாம் எடுக்கலாம்" என்று அவன் நிதானமாய் அவளை பார்த்து கேட்டான்

ஆரண்யா அதிர்ந்து அவனை பார்த்தாள்.

5 மீன்ஸ் டைம் உனக்கு கார் பார்க்கிங் வா என்று சொன்னவன் வேகமாய் நடக்க

அதிர்ச்சியுடன் நின்று இருந்தாள்.


இனி


ஆரண்யாவிற்கு அடுத்து என்ன செய்வது என்றே தெரியாமல் அவள் முழித்து கொண்டு இருக்க என்னோ அவள் உள் மனமோ அதிசயமாய் ஆதியே உன்னிடம் பேசனும் என்று சொல்றாங்க இந்த chance மிஸ் செய்து விட்டால் அதன் பின் எப்போதும் நீ அவரை மீட் செய்ய முடியாமல் போய்விடும்.

போ ஆரண்யா போ என்று அவள் மனம் கூற

பெருமூச்சுடன் கார் பார்க்கிங் சென்றாள்.

அங்கு கார் டிக்கி ஓபன் செய்தவன் அவன் அணிந்து இருந்த டிஷர்ட் கழட்டி விட்டு வேற டிஷர்ட் தேடிக்கொண்டு இருக்க அவனை அந்த கோலத்தில் பார்த்த ஆரண்யா மனம் படபடக்க ஆரம்பித்தது, அவன் சிவந்த தேகத்தில் கொஞ்சம் ஒல்லியாக தான் இருந்தான் ஒரு வேலை இவன் ரொம்ப ஹைட் என்பதால் ஒல்லியா இருக்கானோ என்று ஒரு மனம் கேட்க இல்லை எப்போமே விளையாட்டு என்று ஓடிக்கொண்டு இருப்பதால் ஒல்லியா இருக்கான் என்று இன்னொரு மனம் சொல்ல
ஒரு வழியா அவன் டிஷர்ட் எடுத்து விட்டு திரும்ப தன்னை அத்தனை உற்று பார்த்து கொண்டு இருக்கும் ஆரண்யாவை பார்த்தவன் கண்கள் மின்னியது.

"ஆம்பளைங்களை பார்த்ததே இல்லையா ?"என்று அவன் நக்கலாய் கேட்க
பதில் சொல்ல முடியாமல் திணறியவள் இல்லை என்று வேகமாய் தலை அசைக்க பின் ஐயோ என்று தலையை தட்டியபடி குனிந்து நின்றாள்.

டிஷர்ட் அணிந்தவன் அவள் அருகில் வர அவன் கால் தடம் அருகில் வருவது தெரிந்தாலும் தலை தூக்காமல் கீழே பார்த்து கொண்டு படபடப்பாய் நின்று இருந்தாள்.

அருகில் வந்தவன் அவள் தாடை தொட்டு நிமிரவைக்க அவன் கண்களை அத்தனை அருகில் பார்த்தவள் மனம் அத்தனை படபடப்பாய் அதை தாண்டி அவன் வேர்வையின் வாசம் என்று ஒரு முழு ஆண்மகனாய் அவன் மனதுக்குள் நிறைந்தான் ஆதி.

அவள் கண்களை பார்த்தவன் "உனக்கு என்னை பிடிக்குமா?" என்று கேட்க

அவள் விழி விரிய என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அவனை அதிர்ச்சியா பார்க்க

அவள் விழி மொழியில் மொத்தமாய் தடுமாறிதான் போன்னான்.

"சொல்லு ஆரண்யா உனக்கு என்னை பிடிக்குமா?" என்று மெல்லிய குரலில் அவளிடம் கேட்க
"ஹம்" என்று தலை அசைத்தவள் பின் இல்லை என்று வேகமாய் தலை அசைக்க

அடுத்த நொடி ஆதி சத்தமாய் சிரிக்க ஆரம்பித்தான்.

அவன் சிரிப்பு அத்தனை கவர்ச்சியாய் வேற இருக்க ஆரண்யா சொக்கி தான் போனாள்.

"சரி வா" என்று அழைத்தவன் அவளை கார் உள்ளே உக்காரா சொல்ல எங்க? இல்லை நான் வாரலை என்று அவள் நிற்க

"உன்கிட்ட பேசனும் வா வெளிய போலாம் ஈவினிங் பங்ஷன் முன்னாடி உன்னை கூட்டிட்டு வந்துறேன்" என்று அவன் சொல்ல

"இல்லை காவ்யா தேடுவா நான் வரலை" என்று அவள் சொல்ல
மெலிதாய் சிரித்தவன்.
உடனே அவள் கையில் இருந்த ஃபோன் புடுங்க அது உடைந்து அத்தனை பழைய மொபைல்லாக இருந்தது அவள் முன் எதையும் காட்டி கொள்ளாமல் ஓபன் செய்ய பாஸ்வோர்டு கூட போட்டு இல்லாமல் இருப்பதை பார்த்தவன், "பாஸ்வோர்டு கூட போட மாட்டியா?" என்று கேட்க

"இல்லை அப்பா, அப்போ அப்போ செக் பண்ணுவாங்க" என்று அவள் சொல்ல

சுத்தம் என்று முணுமுணுத்தவன், காவ்யா நம்பருக்கு மெசேஜ் அனுப்பி விட்டு வா போலாம் என்று ஃபோன் எடுத்து அவன் பாக்கெட்டில் வைத்து விட்டு அவளை கார்யில் உக்காரவைத்தான்.

பின் நேராய் ஒரு ரெஸ்டாரண்ட் செல்ல.

அத்தனை தயக்கம் அவளுக்கு கொஞ்சம் ஹைஃபையாக இருந்த ரெஸ்டாரண்ட் அவளை மிரள வைத்தது, அய்யயோ கையில காசு கூட இல்லையே, ஒரு வேளை இவனிடம் அடிக்கடி சண்ட போட்டதுக்கு பழிவாங்க கூட்டிட்டு வந்து இருக்கானோ, அப்படியே அவன் கிளம்பிட்டா என்ன பண்றது,

இங்க எல்லாமும் மாவு ஆட்ட சொல்வாங்களா? என்று அவள் முழித்து கொண்டு இருக்க

அவள் முகத்தை வைத்து "தன்னை எப்படி எல்லாம் நினைத்து இருப்பாள்" என்று புரிந்துகொண்டவன்.

"உன்னை அப்படியே விட்டு போராதா எல்லாம் எனக்கு எந்த ஐடியாவும் இல்லை,ஒழுங்கா வா" என்று அவள் கை பிடித்து அழைக்க

"இல்லை இல்லை நானே வரேன் "என்று கைகளை விலக்கி கொண்டு அவள் வர

முதலில் அவள் அமர சேர் இழுத்த படி அவன் நிற்க மெதுவாய் அதில் அமர்ந்தாள். பின் அவன் எதிரில் சென்று அமர்ந்தவன்.

மெனு கார்ட் அவர்களிடம் நீட்ட, அவனே நூட்ல்ஸ், மஞ்சூரியன், பிரியாணி, சூப் என்று வரிசையா ஆர்டர் செய்துவிட்டு
செம்ம பசி, விளையாடிட்டு வந்தேன்ல என்று சொன்னவன்.

இது எல்லாம் சாப்பிடுவல என்று கேட்க

ஹம் என்று தலை அசைத்தாள்.

பின் அவள் சுற்றி முற்றும் பார்க்க அவனோ அவளை தான் பார்த்துக்கொண்டு இருந்தான்.

ஆரண்யா!! அவன் அழைக்க

ஹான் என்று அவனை உடனே அவள் திரும்பி பார்க்க

சாரி என்றான்.

அவள் புரியாமல் அவனை பார்க்க

"இல்லை உன்கிட்ட நான் ரொம்ப ரூடா நடந்து இருக்கேன், சாரி" என்றான்

"நானும் தான் உங்களை மரியாதை குறைவா பேசி இருக்கேன், திமிர்புடிச்சவங்க என்று திட்டி இருக்கேன் அப்போ நானும் சாரி சொல்லனுமா?" என்று அவள் அவனிடம் கேட்க

அதில் மெல்லமாய் சிரித்தவன் வேண்டாம்." நீ திட்டினது எல்லாம் சரி தான் இது வரை யாரும் என்னை அப்படி எல்லாம் சொன்னது இல்லை, நீ தான் முதல் முறை என்னை அப்படி சொன்ன, உன் மேல செம்ம கோவம் வரும் என் அம்மாகிட்ட சொன்னேன் ஒரு நாள் நீ என்னை இப்படி சொன்னதை எல்லாம்.

அம்மாவும் "ஆமா கண்ணா நீ அப்படி தான் இருக்க" என்று சொன்னாங்க
தென் எங்கிட்ட ப்ராமிஸ் கூட வாங்கினாங்க இனிமேல் நம்ம பண பலம், பெரு புகழ் எல்லாம் நீ சம்பாரிச்சது இல்லை இது எதுலையும் நீ உரிமை எடுத்துக்க கூடாது உனக்கான ஐடென்டிடி நீ உருவாக்கனும் என்று அதுக்கு அப்பிரம் தான் எனக்கு நிறையா விஷயம் புரிஞ்சிது, நீ எந்த அளவிற்கு உன் ஐடென்டிடி பத்தி பேசின நான் ரொம்ப கேலி பண்ணிட்டேன் இ பீல் ரியலி வெரி பாட் போர் மை பிஹேவியர் என்று அவன் சொல்ல

அவள் ஆச்சரியமாய் அவனை பார்த்தாள்.

இத்தனை தன்மையான ஆதியை அவள் பார்த்ததே இல்லை. உங்க அம்மா ரொம்ப கிரேட், தான் பசங்க செய்யுறது கரெக்ட்ன்னு இல்லாமல் இந்த வயசுலையும் உங்களுக்கு எடுத்து சொல்லி இருக்காங்க பாருங்க, அவங்க கிட்ட என்னுடைய தேங்க்ஸ் அண்ட் ரெகார்ட்ஸ் சொல்லிடுங்க என்று அவள் சொல்ல

முடியாது என்றான்

அவள் புரியாமல் அவனை பார்க்க, "அம்மா இறந்துட்டாங்க 1 மாசம் ஆச்சு "என்று அவன் சொல்ல

அவளுக்கு அத்தனை அதிர்ச்சியா இருந்தது, "என்ன ஆதி சொல்றீங்க? எப்படி? அதனால் தான் போன மாசம் காலேஜ் வரலையா?" என்று அவள் அடுத்த அடுத்த கேள்விகள் கேட்டு கொண்டே போக

ஹம் என்றவன்

கொஞ்ச நாள் முடியாமல் இருந்தாங்க டாப் ஸ்பெஷலிஸ்ட் எல்லாதையும் காட்டிடோம் பைனல் ஸ்டேஜ் கான்செர் ஒன்னும் பன்ன முடியலை என்றான்

ஆரண்யாவிற்கு கண்கள் கலங்கியது. ஐ ஆம் சாரி என்றால்

அதற்குள் சாப்பாடு கொண்டு வர, அவளுக்கு எல்லாம் வற்றையும் வைத்து அந்த பிளேட் அவளிடம் அவன் கொடுக்க

நானே என்று அவள் ஆர்ம்பிக்கும் போது

"கம் ஆன் ஆரண்யா இந்தா சாப்புடு" என்று அவன் கொடுக்க

தேங்க்ஸ் என்று வாங்கிக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்.

"பிடிச்சிற்க்கா?" என்று அவன் கேட்க

"நல்லா இருக்கு" என்று மெல்லமாய் சொன்ன படி சாப்பிட ஆரம்பித்தாள்.

"என்னை தேடுனியா?" என்று அவன் கேட்க

அவள் புரியாமல் அவனை பார்க்க

"ஒரு மாசம் நான் காலேஜ் வரலை என்று சொன்னியே என்னை தேடுனியா?" என்று அவன் கேட்க

அவனிடம் எப்படி பொய் சொல்வது என்று தெரியவில்லை, அவள் ஏதோ யோசிக்க

"எந்த பொய்யும் நீ யோசிக்க வேண்டாம் பிளீஸ் என்கிட்ட ஒப்பனா பேசு" என்று அவன் சொல்ல

கண்கள் மூடி திறந்தவள், "ஆமா" என்றால்

"ஏன்?"

"தினமும் பார்பேன் அதான்" என்று அவள் தயங்க.

"எப்போல இருந்து உனக்கு என்னை பிடிக்கும் ?"என்று அவன் கேட்க

"ஃபர்ஸ்ட் டிபேட் முடிஞ்சு நீங்க கோவமாய் உக்காந்து இருந்தீங்க இல்லையா அப்போவே பிடிக்கும்" என்று அவள் சொல்ல

"வாட்?" என்று அவன் கேட்க

"ஆமா!! நீங்க கோவ பட்டது எனக்கு பிடிச்சது, நீங்க ரொம்ப உண்மையா இருந்தீங்க என்று தோணுச்சு, யாரும் இது போல் நான் பார்த்தது இல்லை அதும் இல்லாமல் என்னை படிக்க வைக்குறதுக்கு எனக்கு டிரஸ் வாங்கி குடுக்குறதுக்கு என்று எல்லாதுக்கும் எங்க அப்பா கண்ணக்கு பார்த்துட்டு இருப்பார், என் பணத்தில் உனக்கு இது செஞ்சேன் அது செஞ்சேன் என்று சொல்லிட்டு இருப்பார், எனக்கு வீட்டில் இருப்பதே ஒரு அந்நியமான விஷயமா தான் இருக்கும், எனக்குனு எதுமே சொந்தம் இல்லாத மாறி இருக்கும் ஆன உங்க வீட்டில் உங்களுக்கு இவளோ உரிமை இருந்தா நீங்க அவளோ கர்வமாய் உங்க அப்பா சம்பாரிச்சை சொல்லி இருப்பீங்க அதனால் எனக்கு உங்களை பார்கும் போது சந்தோஷமாய் இருந்தது".

என்று அவள் சொல்லி முடிக்க

அவனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை இப்படி கூட ஒரு பெண்ணால் யோசிக்க முடியுமா? என்று தான் தோன்றியது தனக்குன்னு சொந்தமாய் எதுமே இல்லை என்று அவள் சொன்ன வார்த்தை அவனுக்கு ஏன் என்று தெரியாமல் வலித்தது.

உன் பேமிலி எங்க இருக்காங்க? திருச்சியில் ஒரு சின்ன வில்லேஜ், நான் அம்மா , அக்கா அப்புறம் அப்பா, ரெண்டு பேருமே பொண்ணா பொறந்ததில் அவருக்கு ரொம்ப கோவம் போல, வீட்டு வேலை செய்ய மட்டும் தான் பெண்கள் என்று அவருக்கு ஒரு எண்ணம், ஸ்கூல் படிக்கும் போது ஒரு மேம் வந்து இருந்தாங்க அவங்க பெண்களுக்கு படிப்பு ரொம்ப முக்கியம் அது தான் அவங்களின் எதிர்காலத்திற்கு நல்லதுன்னு நான் 8த் படிக்கும் போது ஸ்டேஜ்யில் பேசினாங்க, அதில் இருந்து எப்படியாச்சு படிச்சு நல்ல வேலை போனும் சம்பாரிக்கணும் என்று மட்டும் தான் என் எண்ணமா இருக்கு என்று அவள் சொல்ல

அவள் சொல்லும் விதம் அவள் முக பாவனை எல்லாம் அவனை அத்தனை கவர்ந்தது, என்ன இவ இவளோ அழகாய் இருக்கா என்று அவளை மெய்மறந்து பார்த்து கொண்டு இருந்தான்.

கொஞ்சம் வெளுத்த நீல நிற சுடிதார், காதில் ஒரு சின்ன ஜிமிக்கி, கழுத்தில் ஒரு ஸ்டார் பெண்டண்ட் செயின், eyebrow த்ரெட்டிங் மட்டும் செய்து இருப்பாள் போல தோழிகளுடன் சேர்ந்து அத்தனை நேர்த்தியா இருந்தது அதற்கு நடுவில் சின்ன கருப்பு போட்டு கண்களில் மை அவளோதான் அவள் அலங்காராம் ஆனால் அத்தனை லட்சணமாய் அழகாய் இருந்தாள் மாசு மரு இல்லாத அத்தனை வழவழப்பான கன்னங்கள் மாநிறத்திற்கு மேல் ஒரு நிறம் அவளை அவன் ரசிக்க ரசிக்க அவன் உடம்பு அவனை அறியாமல் சூடேறியது.

"ஆரண்யா என்னை கல்யாணம் பணிக்கிறியா?" என்று அவன் கேட்க

என்ன ? என்று அவள் எழுந்தே விட்டாள்.

ஹே!! கூல் கூல் உக்கார் முதலில் என்று அவன் சொல்ல அவளுக்கு அத்தனை படபடப்பாய் பயமாய் இருந்தது.

இங்க பார், நம்மக்குள்ள நிறையா சண்டை வந்து இருக்கு, பட் அதை தாண்டி உனக்கு என் மேல் ஒரு ஈர்ப்பு வந்தது இல்லையா, நீ என்னை அடிக்கடி பார்ப்பதை நானும் பார்த்து இருக்கேன், ஏன் இந்த பொண்ணு நம்மை பார்க்குது என்று எனக்கு பல கேள்வி இருக்கும், ஆனால் என் அம்மா என்னை விட்டு போகும் போது ஆரண்யாகிட்ட நீ சாரி கேட்கணும் யாரையும் இனிமேல் நீ ஹர்ட் பன்ன கூடாதுன்னு மட்டும் என்கிட்ட ப்ராமிஸ் வாங்கினாங்க.

நான் காலேஜ் வராத நாளில் ஒரு நாள் உன்னை பார்க்கியில் உக்காந்து படிக்கிறதை பார்த்தேன், ரொம்ப வெறுமையா அம்மா போனதும் ரொம்ப லோன்லியா இருந்தேன் உன்னை பார்த்ததும் அப்படி ஒரு சந்தோஷம் எப்படி சொல்றது தெரியலை அப்பறம் நான் காலேஜ் வராத ஒரு மாசமும் உன்னை பார்க்கில் மட்டும் ஈவினிங் பார்த்துட்டு போவேன்.
பேசனும் என்று நினைப்பேன் எதோ ஒன்னு தடுத்துட்டே இருந்துச்சு நாளையில் இருந்து காலேஜ் வர மாட்டேன் ப்ராஜெக்ட் விஷயமா மும்பை போறேன், இனிமேல் உன்னை பார்க்கவே முடியாதுன்னு நினைக்கும் போது வெளிபடையா சொல்றேன் ஆரண்யா எதோ கஷ்டமா இருக்கு. உன்கிட்ட பேசிடனும்னு தான் காலேஜ் வந்தேன். விளையாடிட்டு உன்னை தேடி வரலாம் என்று தான் நினைத்தேன், நீ கிரௌண்டில் இருப்ப என்று எக்ஸ்பெக்ட் பண்ணலை அதான் உடனே உன்னிடம் பேசனும் என்று தோன்னுச்சு.
ஏன் என்னை பார்த்த? என்று கேட்டு சாரி சொல்லலாம் என்று தான் நினைச்சு கூட்டிட்டு வந்தேன் ஆன உன்கூட இருக்கும் போது என் மனசு அவளோ அமைதியா இருக்கு இந்த அமைதி இந்த உற்சாகம் நான் யார்கூடவும் இது வரை உணர்ந்தது இல்லை எனக்கு லைப் புல்லா இந்த உணர்வு வேணும் என்று நினைக்கிறேன்.

"நீ படி வேலைக்கு போ உனக்கு உன் லைப் என்ன பண்ணனுமோ எல்லாமே பண்ணு ஆனா கல்யாணம் மட்டும் என்னை பண்ணிக்கிறியா? "என்று அவன் கேட்க

கண்கள் விரிய அவனை பார்த்து கொண்டு மட்டும் இருந்தாள்.
இத்தனை எளிமையா இவனால் எவளோ பெரிய விஷயத்தை ஒரு மணி நேரத்தில் முடிவு செய்து பேசிவிட்டான் நிஜமா அவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை

"அவள் அப்படியே சிலையா அமர்ந்து இருக்க என்ன மா?" என்று அவன் கேட்க

"நீங்க ரொம்ப அவசர படுறீங்க, என் குடும்பம் பத்தி உங்களுக்கு இன்னும் புரியலை கல்யாணம் எல்லாம் நான் நினைத்தே பார்க்காத விஷயம் என் லைப்யில் அப்படி ஒரு நடந்தா கூட அது என் அப்பா யாரை முடிவு செய்றாரோ அந்த பையனை தான் பண்ற மாறி இருக்கும். நீங்க என் லைப்யில் அந்த நிலா மாறி தூரத்தில் நின்று நான் ரசிக்க மட்டும் தான் முடியும் மத்த படி ஏணி வைத்தால் கூட நம்ம இருவருக்கும் எட்டாது. நம்ம போலாமா?" என்று அவள் கேட்க

ஒரு புன்னகையுடன் "என்னை பத்தி உனக்கு சரியா தெரியலை ஆரண்யா சரி ஒரு விஷயம் மட்டும் சொல்லு என்னை கல்யாண பண்ற சூழல் வந்தால் நீ கல்யாணம் பண்ணிப்பியா? என்று அவன் சொல்ல

நடக்காத விஷயம் என்று மனதில் அவள் நினைத்தாலும் ஒரு வேளை அந்த நிலா கீழ இறங்கி எனக்காக வருது என்றால் பண்ணிக்கிறேன் போதுமா கிளம்பலாம் டைம் ஆச்சு என்று அவள் சொல்ல

அவளை பார்த்து புன்னகைத்தவன் தேங்க்ஸ் என்று சொல்லிவிட்டு, சரி வேற ஏதச்சு சாப்பிடுறியா? என்று கேட்க

"இல்லை டைம் ஆச்சு காலேஜ் போனும்" என்று சொல்ல

"இப்போ போய் என்ன பன்ன போற?" அது வந்து ஈவினிங் பாடனும் அல்ரெடி இன்ட்ரோ சாங் பாடுற பொண்ணு வரலையாம் அவங்க ஹாஸ்பிடல் அட்மிட் பண்ணிர்க்கநாளா அதான் காவ்யா என்னை கோர்த்து விட்டாள். என்று சொல்ல

"நீ பாடுவியா ?"என்று கேட்க

"எதோ கொஞ்சம் அப்பாக்கு பாடினால் பிடிக்காது அதனால் எப்போவும் பாட மாடேன் இன்னைக்கு ஒரு எமர்ஜென்சின்னு என்ன பண்றதுனு புலம்பிட்டு இருந்தாங்க அதான் பாட ஒத்துக்கிட்டேன்" என்று அவள் சொல்ல

"உன் அப்பா ரொம்ப விளங்கமான ஆள் தான் போலையே, அப்போ ஈவினிங் உன் பாட்டு கேட்க ரொம்ப ஆவலாய் இருக்கேன்" என்றான்.

அப்போது அவள் மொபைல்யில் இருந்து ஃபோன் வர
பாக்கெட்டில் இருக்கும் அவள் ஃபோன் எடுத்து அவளிடம் கொடுத்தான்

காவ்யா தான் கால் செய்து இருந்தாள். இருவரும் காரில் அந்த சமயம் வந்து அமர அவளிடம் ஃபோன் எடுத்து கொடுத்தான்.

"என்னடி வெளிய போயிர்க்க? யார் கூட இருக்க?"

"அது வந்து ஆதி சீனியர் கூட" என்று அவள் சொல்ல ஆதி அவளை திரும்பி பார்த்தான்.

"பாரேன் அவுட்டிங்கா என்னடி தைரியம் வந்து ப்ரொபோஸ் எதச்சு பண்ணிடியா என்ன? "என்று காவ்யா சிரிப்புடன் கேட்க

"அடியே சும்மா இருடி வந்தேனா இருக்கு உனக்கு" என்று அவள் சொல்ல

காவ்யா பேசியது இவனுக்கு அத்தனை தெளிவாய் கேட்டது அவள் ஃபோன் ஓட நிலமை அப்படி.

சரி அதை விடு, ஈவினிங் நீ saree கட்டணுமாம் இப்போதான் ஸ்ரீநிதி வந்து சொல்லிட்டு போறா என்று சொல்ல

"என்னது sareeயா என்கிட்ட இல்லையேடி உங்கிட்ட இருக்கா?"

"ஒன்னு இருக்கு வா பார்த்துக்கலாம்" என்று அவள் சொல்ல

"சரி டி நான் சாப்பிட்டேன் நீ வெய்ட் பண்ணிட்டு இருக்காத சாப்பிடு" என்று அவள் சொல்ல

"ஓ!! சரி சரி லன்ச் டேட்டா நடத்து நடத்து ? "என்று அவள் கலாய்க்க

"அடிவாங்கதடி" என்று சொன்ன ஆரண்யாக்கு அத்தனை தர்மசங்கடமாய் இருந்தது.

"ஓகே பை சிக்கிரம் வந்துடு ரெடி ஆகனும் இல்லையா" என்று அவள் சொல்ல

"ஹம் பை" என்று வைத்து விட்டாள்.

"காவ்யா ரொம்ப குளோஸ்சா? "

"ஆமா அவளால் தான் எனக்கு அப்போ அப்போ சிரிக்க கூட தெரியும் என்றே தெரியும் அத்தனை சுட்டி நான் கொஞ்சம் சாட் ஆனாலும் அவளால் தாங்க முடியாது அவளுக்கு என்னை அவளோ பிடிக்கும், எங்க ஊரில் அவங்க குடும்ப ஒரு பெருசு ஆன அவ அந்த மாறி எதும் பார்க்காமல் அத்தனை சகஜமாய் இருப்பாள் அதிலும் அவள் அப்பா அம்மா அத்தனை பிரெண்ட்லியா இருப்பாங்க அவ கூட இருந்தாலே சந்தோஷமா இருக்கும் எனக்கு " என்று அவள் சொல்ல

அவள் பேசுவதை கேட்டபடி கார் ஓட்டி கொண்டு இருந்தவன் ஒரு கடையில் போய் நிறுத்த

"எதுக்கு இங்க?" என்று அவள் கேட்க

"saree வாங்கலாம் வா" என்று அவன் அழைக்க

"ஐயோ அது எல்லாம் வேண்டாம் பிளீஸ்" என்று அவள் பதற

"பிளீஸ் ஆரண்யா, எனக்கு எதாச்சு உனக்கு கிப்ட் பண்ணனும் என்று தோணுது அதுலையும் உன் ப்ரெண்ட் சொன்ன மாறி நம்ம ஃபர்ஸ்ட் லன்ச் டேட் அப்போ நான் உனக்கு கிப்ட் பண்ணனும் இல்லையா?" என்று அவன் கேட்க

அப்போ அவள் பேசினது எல்லாம் கேட்டுடானா? என்று உணர்ந்தவள் தலை குனிய

"வா போலாம்" என்று அவன் அழைக்க

"அதுலாம் வேண்டாம்" என்று அவள் மறுக்க

"எனக்காக வா" என்று அவன் அழைக்க அவள் குரலில் என்ன இருந்ததோ அவள் இறங்க

இருவரும் உள்ளே நுழைந்தனர், என்ன மாறி saree வேணும் என்று அவன் கேட்க

தெரியலையே எதச்சு சிம்பிளா இருந்தா போதும் அந்த பொம்மைக்கு போட்டு இருக்காங்களே அந்த மாறி ஓகே என்று அவள் சொல்ல சரி வா என்று அவளை ஒரு பக்கம் அழைத்து சென்றவன் அந்த மேன்னிகுயின் போட்டு இருக்க saree காடுங்க என்று அவன் சொல்ல

அந்த கலெக்ஷன்ஸ் எல்லாம் எடுத்து கொடுத்தனர், பிளாஸ் உடனே stitch செய்து கொடுப்பீங்களா?

"எஸ் சார் கீழ டெய்லர் இருக்காங்க 1 ஹௌர்ல குடுத்துடுவாங்க, இல்லனா ரெடிமேட் ப்ளவுஸ்ம் இருக்கு நீங்க மேட்ச் பண்ணிக்கலாம்" என்று சொல்ல

"சரி ஓகே" என்றவன்

"ஆரா!! பாரு எது புடிச்சு இருக்கோ எடுத்துக்கோ "என்று அவன் சொல்ல

அவள் முழித்து கொண்டு இருக்க

அங்கு இருந்த புடவைகள் அனைத்தும் எடுத்தவன் பாட்டில் க்ரீன் கலர் சாரி ஒன்றை எடுத்து அவள் மேல் வைக்க
அவள் தோளில் அவன் கைகள் உரச ஏதோ மின்சாரம் தாக்கியது போல் அந்த சின்ன உரசலில் உணர்ந்தவள் அவனை பார்க்க அவன் அத்தனை சாதாரணமாய் இருந்தான்.

ஆனால் இவளுக்கு தான் ஆதியுடன் இருப்பது ஏதோ கனவில் வாழ்ந்து கொண்டு இருப்பது போல் இருந்தது.
ஒரு முடிவுடன் ஒரு ரெட் சாரீ எடுத்தவன் "இது ரொம்ப அழகா இருக்கு உனக்கு ஒகேவா?" என்று அவன் கேட்க

அவனையே பார்த்து கொண்டு இருந்தவள் பின் அந்த சாரீ பார்க்க

அழகாய் இருந்தது எதற்சியா அவள் விலை பாக்க 7000 என்று இருக்க என்னது ஏழாயிரமா என்று அவள் அதிர
அருகில் இருந்த அவனுக்கு அது தெளிவாய் கேட்டது.

"அதனால என்ன உனக்கு புடிச்சு இருக்கா? "

"இல்லை வேண்டாம்" என்று அவள் சொல்ல.
"மேடம் இது எல்லாம் ஒரிஜினல் மைசூர் சில்க் சாரீ "என்று அந்த சேல்ஸ் கேர்ள் சொல்ல

அவனை பார்த்தவள் "வேண்டாம்" என்று சொல்ல
"நீங்க இதை பேக் பண்ணுங்க தென் இவங்க அளவு எடுத்துட்டு எங்களுக்கு கொஞ்சம் சிக்கிரம் ஸ்டிட்ச் செய்து கொடுத்துங்க ஈவினிங் பங்ஷன் இருக்கு" என்று அவன் சொல்ல

"சரி சார் "என்ற பெண் உடனே டெய்லரை அழைத்து மேலே வர சொல்ல

ஒரு ஆண் டெய்லர் வந்தான் அவனை பார்த்ததும்

முகம் சுருங்கியவன் "லேடீஸ் யாரும் இல்லையா?" என்று கேட்க

சின்ன punnagaiyudan "நான் எடுக்கிறேன் சார்" என்றவள் டெய்லர் என்ன என்ன அளவு வேணும் என்று சொல்ல சொல்ல அதை எல்லாம் அந்த சேல்ஸ் கர்ல் எடுத்து கொடுக்க

கொஞ்சம் தள்ளி நின்று ஃபோன் பார்த்து கொண்டு இருந்தான் ஆதி.
டெய்லர் செல்ல அந்த பெண் ஆரண்யாவிடம் நீங்க ரொம்ப லக்கி மேடம் உங்க பாய்பிரண்ட் பக்கா ஜென்டில்man என்று சொல்ல
ஆரண்யா இதழில் சின்ன புன்னகை புரிய ஆதி "போலாமா ஆரா ?"என்று கேட்க

அவன் அழைப்பில் அவள் விழி விரிய அவனை பார்க்க
கண்சிமிட்டினான்.
முதல் முறை அவன் செயலில் முகம் சிவந்தவள் அதை மறைக்க முடியாமல் முன்னாடி செல்ல
சின்ன புன்னகையுடன் அவனும் பின் தொடர்ந்தான்.

"என்னை ஏதோ பண்ணிட்டா "என்று ஆதி மனதில் புலம்பியபடி தலையை அழுத்த கொதி அவள் பின்னாடி சென்றான்.
பில் பே செய்ய கவுண்டர் பக்கம் வந்தவன் ஏதோ நினைவு வர அவளிடம் வந்து saree உள்ளே போட இன்ஸ்கிர்ட் வேணும் இல்லையா? என்று அவன் கேட்க
எதே?? என்று அவள் அதிர்ந்து அவனை பார்க்க

என்னடி வேணும் தானா எதுக்கு இப்படி முழிக்கிற என்று அவன் கேட்க

என்ன நீங்க இப்படி எல்லாம் பேசுறீங்க?
யம்மாடி புதுமை பெண்ணே, மத்தது எல்லாம் வாய் கிழித்து இல்லையா, இது எல்லாம் சாதாரண விஷயம் பட்டிக்காடு மாறி முழிச்சிட்டு இருக்காத பசங்களுக்கு தெரியாத விஷயமா இது எல்லாம், அதிலும் இதை எல்லாம் உன்னிடம் தான் நான் உரிமையா பேச முடியும் நீயும் என்னிடம் தான் உரிமையா கேட்கணும் புரியுதா போ போய் வாங்கிட்டு வா என்று அவன் சொல்ல
ஒரே நாளில் எனக்கு எத்தனை முறை இவன் ஹார்ட் அட்டாக் கொடுப்பான் தெரியலையே இப்படி கூடவா பசங்க இருக்க முடியும் என்று நினைத்தவளுக்கு ஆதி அத்தனை ஆச்சரியமான விஷயமாய் தான் இருந்தான் 1 வருடம் அவன் பின் சுற்றி இருக்கிறாள் தான் அவன் கண்ணியமானவன் என்று தெரியும், ஒரு விளையாட்டு பையன், கொஞ்சம் இல்லை அதிக திமிர் பிடித்தவன், ரொம்ப புத்திசாலி, அழகானவன் கம்பீரமானவன் சிறந்த பேச்சாளார் என்று அவனை பற்றி அவளுக்கு நிறையா விஷயம் தெரியும் அத்தனையும் ரசித்து இருக்கிராள் ஆனால் இன்று அவன் முற்றிலும் புதிதாய் இருந்தான் அதும் இது எல்லாம் அவளிடம் மட்டுமே என்று அவள் நினைக்க அவளுக்கு அத்தனை தித்திப்பாய் இருந்தது.
இந்த ஒரு நாள் போதும் ஆதி என் வாழ்க்கை முழுவதும் இந்த நினைவுகளில் வாழ்ந்துவிடுவேன் என்று நினைத்தவள்

இன்னர் செக்சன் சென்று ஒரு ரெட் இன்ஸ்கிர்ட் வாங்கி கொண்டு வந்தால்.அதையும் பில் செய்து வாங்கி கொண்டவன்

"ஒன் ஹௌர் என்ன பன்றது?" என்று அவன் கேட்க

"தெரியலையே " என்று அவள் சொல்ல

மணியை பார்த்தான் 1.30 மணி ஆகி இருந்தது.

"சரி என் வீட்டுக்கு போலாமா" என்று அவன் கேட்க

அவள் அதிர்ந்தாள். பயமா?
அப்படிலாம் இல்லை நான் எப்படி உங்க வீட்டுக்கு என்று தயங்க
எப்போ இருந்தாலும் நீ அந்த வீட்டுக்கு வந்து தான் ஆகனும் மேடம் என்று அவன் சொல்ல, அவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியலை

"சரி வா போலாம்" என்று அழைத்தவன் நேராய் அவன் வீட்டுக்கு சென்றான்





ஆரண்யா ஆதி வருவார்கள் 💜


படிப்பவர்கள் ஒரு கமெண்ட் செய்தால் நல்லா இருக்கும்.
உங்கள் விமர்சனகள், பாராட்டுக்கள் என்னை இன்னும் நல்ல கதை களத்தை எழுத உதவும்.
நன்றி