• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நான் பார்த்த முதல் முகம் நீ..! NPMMN EPI 17

Kriya

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 31, 2025
19
1
3
chennai
வெளியில் வந்த ஆரண்யா காரில் ஆதி அமர்ந்து இருப்பதை பார்த்து உள்ளே ஏறி அமர

ரொம்ப அழகா இருக்க ஆரா என்றான்.

கொஞ்சம் முகம் சிவக்க தேங்க்ஸ் என்று அவள் சொல்ல
அவள் கைகளை பற்றி தன் நெஞ்சில் வைத்தவன் உன்னை இப்படி பார்த்ததும் fastடா துடிக்க ஆரம்பிச்சது இன்னும் நிக்கலை என்று அவன் மன துடிப்பை அவளிடம் காட்ட
தயங்கியபடி அவனிடம் கைகளை கொடுத்து விட்டு அமர்ந்து இருந்தாள்.

ஏனோ!! காலேஜ் வந்து நிற்கும் வரை அவன் அவள் கைகளை விடவே இல்லை, ஹாஸ்டெல் போரியா காலேஜ் போலாமா என்று அவன் கேட்க

காலேஜ் போலாம் காவ்யா மெசேஜ் பண்ணா எல்லாரும் assemble ஆக ஆரம்பிச்சிட்டாங்களாம் என்று அவள் சொல்ல
சரி என்று காலேஜ் entranceயில் இறக்கி விட்டவன் கார் பார்க் பண்ணிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு சென்றான்

அவளுக்கு நிற்பதா இல்லை செல்வதா என்று தடுமாற்றத்துடன் நின்று இருக்க பிளேசர் அட்ஜஸ்ட் செய்த படி ஆதி அவளிடம் நடந்து வந்தான்.

அவள் கைகள் பிசைந்த படி அங்க இங்க பார்த்து கொண்டு நிற்க

போலாமா? என்று கேட்க

நான் முன்னாடி போறேன் நீங்க வாங்க என்று சொல்ல

அவளை முறைத்தவன் அதுலாம் முடியாது நீ என்கூட வா, அப்போதான் இனிமேல் நீ இருக்க 2 வர்ஷம் யாரும் உன்னை டிஸ்டர்ப் பன்ன கூடாது நீ ஆதியுடைய ஆள்ன்னு எல்லாருக்கும் தெரியட்டும் என்று அவன் கெத்தாய் சொல்ல

ஆத்தாடி என்ன இப்படி சொல்றீங்க என்று அவள் அதிர்ந்து பார்க்க

அல்ரெடி இன்னைக்கு என்னை நீ ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட்ட, ரொம்ப கொன்றோல் பண்ணிட்டு இருக்கேன் இப்படி க்யூட் ரியாக்ஷன் எல்லாம் கொடுத்து கொள்ளாதடி என்று அவன் கிசுகிசுப்பாய் பேச

அவர்கள் இருவரையும் பார்த்த காவ்யா ஓடிவந்தாள்.

வாவ் ஆரு செம்ம க்யூட்டா இருக்கடி என்று அவள் கன்னத்தை கிள்ள

ஆதி அவளை முறைத்தான்.

ஆதி இவ என் பெஸ்ட் ப்ரெண்ட் காவ்யா என்று அவனிடம் சொல்ல

தெரியும் தெரியும் உன்கிட்ட சண்ட போட்டா முறைப்பது இவங்க தான் என்று அவன் சொல்ல

அவள் அப்படி தான் என்று சிரிப்புடன் சொன்னவன்.
சரி ஆல் தி பெஸ்ட் டின்னர் அப்போ மீட் பண்ணலாம் என்று சொல்ல

அவள் எல்லாம் பக்கமும் தலை அசைக்க, நீ வர என்று சொல்லியவன் அவன் கன்னத்தை லேசாய் தட்டி விட்டு முன்னாடி செல்ல
காவ்யா அதிர்ச்சியா இருவரையும் பார்த்து கொண்டு இருந்தாள்.

என்னடி சம்திங் சம்திங் கன்பர்ம்மா? என்று சந்தோஷமாய் கேட்க

என் குடும்பத்தை பற்றி தெரியும் தானே அது எல்லாம் நடக்காதுடி, இந்த நிமிஷம் நான் சந்தோஷமா இருக்கேன், உனக்கு தெரியும் ஆதியை எனக்கு பிடிக்கும்னு அவர் கேட்ட போது பொய் சொல்ல தெரியலை பிடிக்கும் என்று சொல்லிட்டேன். ஆனா ஆதி கொஞ்சம் தீவிரமாய் இருக்கார்டி, பயமா இருக்கு என்று அவள் சொல்ல

ஹெய் காங்கிராசுலேஷன்ஸ்!! உனக்கு தெரியும் தான எத்தனை பேரு ஆதி பின்னாடி சுத்துறாங்கன்னு ஆனா அவருக்கு உன்னை தானே பிடித்து இருக்கு யூ ஆர் லக்கி டி சந்தோஷமாய் இரு

நீ நினைச்ச மாறி படிச்சு ஒரு வேலையுடன் வெளியில் வா அப்ரம் உங்க வீட்டில் என்ன சொன்ன என்ன., நீ ஆதியை கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆகு என்று அவள் சொல்ல

பாக்கலாம் என்று கொஞ்சம் நம்பிக்கை இல்லாமல் சொன்னவள் சரி வா என்ன சாங் பாட போற, என்று கேட்க

பாடும் போது கேளு என்று சொல்ல

ரொம்பதாண்டி சரி போ நான் விஜய் கேங் எங்க இருக்காங்க பார்த்துட்டு பக்கத்தில் இடம் புடிச்சு வைகுறேன் நீ பாடிட்டு அங்க வா என்று சொல்ல

இருவரும் ஆடிட்டோரியம் நோக்கி சென்றனர்.

ஸ்ரீநிதி அன்கரிங் பன்ன விழா கோலகலமாய் ஆரம்பித்தது, பிரின்சிபால் ஹாட் எல்லாரும் அமர்ந்து சிறு உரை பேசிவிட்டு நீங்க எல்லாரும் என்ஜாய் பண்ணுங்கள் என்று சொல்லிவிட்டு செல்ல

அடுத்த நொடியில் இருந்து ஆட்டம் பாட்டம் ஆரம்பித்தது, முதலில் ஆரண்யா பிரபாகரன் ப்ரம் கம்ப்யூட்டர்ஷியன்ஸ் டிபார்ட்மென்ட் போர் வோகல் வெல்கம் பண்ணிடலாம் என்று சொல்ல

அவர்கள் கிளாஸ் பெண்கள் பக்கம் இருந்து சத்தம் வந்து அவளை உற்சாக படுத்தினர், ஒரு பக்கம் சீனியர்ஸ் அமர்ந்து இருக்க

இரண்டாவது வரிசையில் ஆதி அமர்ந்து இருந்தவன். ஃபோன் எடுத்து கேமரா ஆன் செய்தபடி அவளை பார்த்து கொண்டு இருந்தான்.

என்ன மச்சான் வீடியோ எடுக்க போரியா என்று அருகில் அமர்ந்து இருந்த அவன் நண்பன் கேட்க

ஆமா என்று சொன்னவன் ஆரண்யாவை பார்க்க அவள் கண்கள் அத்தனை பெரிய கூடத்தில் அவனை தேடியது அது உணர்ந்து சின்ன புன்னகையுடன்.
டேய் எழுந்து உக்காரு டா என்று சொல்ல
என்ன மச்சான் என்று புரியாமல் பிரவீன் கேட்க
டேய் எழுடா என்று சொல்ல

உடனே அவனும் முழித்தபடி எழ அந்த பக்கம் இரண்டாவது வரிசையில் எழுந்த நபரை அவள் பார்க்க அருகில் ஆதி அமர்ந்து வீடியோ எடுத்து கொண்டு இருப்பதை பார்த்து விட்டால்.
சரி உக்கார் என்றவன் இந்த பிடி வீடியோ எடு ஷேக் இல்லாம ஒழுங்கா எடு என்றவன் சாய்ந்து அவள் பாட்டை ரசிக்க நன்றாய்
சாய்ந்து கொண்டு அமர்ந்தான்.

பின் கண்கள் மூடி அவள் பாட ஆரம்பிக்க

ஆதி கண்கள் விரிய அவளை பார்த்தான்.

அவன் அம்மா குரலில் அத்தனை முறை அந்த பாட்டை கேட்டு இருப்பான் இன்று தன்னவளாய் நினைக்கும் ஒருவள் குரலில் அதே பாட்டு அவனுக்கு அத்தனை நிறைவாய் இருந்தது
பல உணர்ச்சிகள் அவன் அந்த பாட்டை தன்னை மறந்து கேட்க ஆரம்பித்தான்.

அலைபாயுதே... கண்ணா, என் மனம் அலைபாயுதே
ஆனந்த மோகன வேணுகானம் அதில்
அலைபாயுதே... கண்ணா, என் மனம் அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில்
அலைபாயுதே... கண்ணா...


நிலைபெயராது சிலைபோலவே நின்று...
நிலைபெயராது சிலைபோலவே நின்று,
நேரமாவதறியாமலே மிக விநோதமாக முரளீதரா என் மனம்
அலைபாயுதே... கண்ணா...


தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே...
தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே...
திக்கை நோக்கி என் புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே
கனித்த மனத்தில் உருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா
கனித்த மனத்தில் உருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா
ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து மகிழ்த்தவா
கலை கடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலென களித்தவா
கதறி மனமுருக நான் அழைக்கவோ இதர மாதருடன் நீ களிக்கவோ
கதறி மனமுருக நான் அழைக்கவோ இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ, இது முறையோ, இது தர்மம் தானோ?
இது தகுமோ, இது முறையோ, இது தர்மம் தானோ?!
குழலூதிடும் பொழுது ஆடிடும் குழைகள் போலவே மனது வேதனை மிகவொடு
அலைபாயுதே... கண்ணா, என் மனம் அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில்
அலைபாயுதே... கண்ணா...!


அவள் பாடி முடிக்க அரங்கம் முழுவதும் பலத்த கரோதோஷம் எழுந்தது அத்தனை இனிமையான குரல் trained சிங்கர் போல் அவள் பாட ஆதி அவள் குரலில் உருகி தான் போனான்.

பாடி முடித்து அவள் தேங்க்ஸ் சொல்லிவிட்டு இறங்க,அவள் கண்கள் ஏன்னோ ஆதியை தான் பார்த்துக்கொண்டு இருந்தது.
அவன் கைகள் தட்டியபடி கண் அடிக்க அவளுக்கு அவன் பாராட்டிய இருக்க சந்தோஷமாய் மேடை விட்டு இறங்கினால்.

அடுத்து ஆட்டம் பாட்டம் என்று 2 மணி நேரம் நிகழ்ச்சி செல்ல, அதன் பின் டான்ஸ் floor மற்றும் டின்னர் என்பதால் எல்லாரும் அடுடிட்டோரியம் விட்டு செல்ல வேண்டும் அனௌன்ஸ் செய்தவர்கள் அதற்கு முன் நம் சீனியர் ஆதி ஓட் ஆப் தேங்க்ஸ் சீனியர்ஸ் எல்லார் சார்பா பேச வரார் என்று ஸ்ரீநிதி சொல்ல

உடனே மாணவிகள் பக்கம் அத்தனை கூச்சல்

ஆரண்யாவோ கொஞ்சம் மிரண்டு தான் போனாள் இத்தனை பேருக்கு ஆதியை பிடிக்குமா என்று, அவள் சுற்றிய இந்த ஒரு வர்ஷத்தில் அவன் எந்த பெண்ணிடமும் பேசி பார்த்தது இல்லை ஆனால் பெண்கள் அவன் கிளாஸ் மனாவிகள் என்று அவனை பார்க்க பேச என்று ரசிகை கூட்டம் இருப்பது அவளுக்கு தெரியும் ஆனா இந்த அளவிற்கு எதிர்பார்க்கவில்லை

அவன் கையில் மைக் உடன் மேடை ஏறியவன்.

தேங்க்ஸ் யூ மு லவ்லி ஜூனியர் இந்த மாறி ஒரு சென்டு ஆஃப் மத்த காலேஜ் எல்லாதுலையும் நடக்குமா என்று தெரியலை இது மாறி ஸ்கூல் ஒரு விதத்தில் முக்கியம் என்றால் காலேஜ் அதை விட முக்கியமாய் நான் பார்க்கிறேன், இங்கு படிப்பு வேலை மட்டும் இல்லை எல்லார் வாழ்கையும் காலேஜ்யில் தான் முடிவு ஆகிறது.
சோ எல்லாரும் என்ஜாய் பண்ணுங்க அதே சமயம் உங்களுக்கு பிடிச்சதை உங்க லைப் எப்படி இனிமேல் இருக்கனும் என்று நீங்க நினைக்குறீங்களோ அதற்கும் சேர்த்து work பண்ணுங்க.
இந்த காலேஜ் நிறையா மெமோரிஸ் நிறையா விஷயம் கத்துக்குடுத்தூர்க்கு ஐ அம் வெரி கிரேட்ஃபுல் போர் தட்.
மீண்டும் எதச்சு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் நம்ம எல்லாரும் மீட் பண்ணலாம் லெட்ஸ் கெட் கனெக்ட் அண்ட் ஹெல்ப் ஈச் அதர் இன் career லைப் எனிதிங்.
தேங்க்ஸ் ஒன்ஸ் அகைன் போர் திஸ் அமேசிங் டே
பை என்று அவன் பேசி முடிக்க

சீனியர் நீங்க கமிட்டெட்டா? என்று பெண்கள் பக்கம் இருந்து குரல் வர
ஆரண்யாவிற்கு அந்த கேள்வி அத்தனை படபடப்பாய் இருந்தது இந்த கர்ல்ஸ்க்கு சென்ஸ் இல்லை இப்படியா ஸ்டேஜியில் இருப்பார்கிட்ட கேட்பாங்க
மேனர்ஸ் இல்லை என்று அவள் மனதிற்குள் திட்டி கொண்டு இருக்க

அவனோ புன்னகையுடன், நோ பர்சனல் questions கர்ல்ஸ் என்றான் சிரிப்புடன்
பிளீஸ் சீனியர் இந்த கேள்வி ரொம்ப நாளா எங்களுக்கு இருக்கு என்று அவனை விடாது கேட்க

சிரிப்புடன் இந்த காலேஜ் career மட்டும் இல்லாமல் லைப்வும் நம்மக்கு சேர்த்து கொண்டுக்கும் சொலிர்ந்தேன் இல்லையா அந்த லைப் என் பியூச்சர் வைப் தான்.
i am கமிட்டட் என்றவன் ஸ்டேஜ்யில் இருந்து இறங்க, எல்லாரும் கைதட்டகள் அதிர்ச்சிகள் உடன் இருந்தனர்.

பிரவீன் இறங்கி வந்த ஆதியை பார்த்து வாயை பிளக்க, யாருக்காச்சு சொன்ன கொன்றுவேன் என்றவன் வா போலாம் என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.

ஆதி ஆரண்யா வருவார்கள் 💜