அத்தியாயம் 11
"அப்பத்தா! தோசை வேணுமான்னு அம்மா கேட்டுச்சு!" என்று ராதிகா வர,
"ராத்திரி ஒன்போது மணிக்கு தான் உன் அம்மா கேட்டுவிடுவாளா?" என்றார் புஷ்பமும்.
"நான் தான் புதுசா ஒண்ணு ட்ரை பண்ணி பார்த்தேன் அப்பத்தா! அது நல்லா வர்ல. அப்புறம் தான் அம்மா தோசை ஊத்துது. அண்ணே எங்க? சாப்பிடங்களா?" என்றாள்.
"அவே சாப்பிட்டு அப்பவே ரூம்க்கு போய்ட்டான். நானும் தூங்க தான் போறேன்" என்று சொல்லவும் தன் அன்னையிடம் சென்று கூறினாள் ராதி.
அதன்பின் வெற்றி புஷ்பத்திற்கு அழைக்க, "என்னலே இந்நேரத்துக்கு கூப்பிடுத? சௌக்கியம் தான?" என்றார் எடுத்ததும் புஷ்பம்.
"நீ இருக்கியான்னு பார்க்க தான் கூப்பிட்டேன்!" என்றவன் சொல்லில்,
"உறங்குத நேரத்துல என் வாயை கிளறாம என்னனு சொல்லு!"
"அப்பத்தா! பந்தல்காரங்க போன் பண்ணினாங்க ஆறு மணிக்கு. நான் சொல்ல மறந்துட்டேன்!" என்றான் வெற்றி.
"அதை சக்திகிட்ட சொல்ல தான?"
"அண்ணேனுக்கு போன் போட்டேன். பிஸினு வருது!" என்றதுமே புஷ்பம் சிரிக்க,
"வாய் சுளுக்கிறாம!" என்று கிண்டல் செய்தவன்,
"அண்ணிகிட்ட பேசிட்டு இருந்தா என்னைய அண்ணே கரடியா நினைக்கும்ல அதான் உன்கிட்ட சொல்லுதேன். நாளைக்கு விடிஞ்சு ஆறு மணிக்கெல்லாம் பந்தல்காரங்க வந்துடுவாங்களாம்"
"பந்தக்கால் நடவே நாளை கழிச்சு தானலே!"
"ஆமா அப்பத்தா! பேனர்க்கு இடம் சொல்லிருந்தேன். கூடவே மேடை ஒண்ணு போட சொன்னோமே! அவக வசதிய பாத்து வச்சுட்டு போவாங்களா இருக்கும். அண்ணேகிட்ட சொல்லிரு!" என்று சொல்ல,
"நீ எப்ப வார? ஒரு வாரம் கூட இல்ல கல்யாணத்துக்கு!" என்றார் புஷ்பம்.
"அப்பத்தா! நாளைக்கு எக்ஸாம் அப்பத்தா! நேத்து தான கிளம்பி வந்தேன்? லீவ் போட்டா சோலி முடிஞ்சிரும். முடிச்சுட்டு கிளம்பிருவேன். இன்னும் ரெண்டு எக்ஸாம் தான? எழுதிட்டு எழுதிட்டு ஓடியாந்துர மாட்டேன்!" என்றான் வெற்றியும்.
வெற்றியிடம் பேசிவிட்டு புஷ்பம் சக்தியிடம் விஷயத்தை சொல்லலாம் என நினைத்தவர் பின் காலையில் எழுப்பிக் கொள்ளலாம் என விட்டுவிட்டார்.
"என்ன பதிலையே காணும்?" சக்திவேல் அலைபேசியை காதில் இருந்து எடுத்துப் பார்த்து கேட்க, அப்போதும் அமைதி தேன்மலரிடம்.
"ஹெலோ! இருக்கியா தேனு?"
"ம்ம்!"
"என்ன ம்ம்? நான் கேள்வி கேட்டேன்!"
"அதுக்கு என்ன பதில் சொல்ல?" என்றவள் குரல் உள்ளே சென்றிருந்தது.
"முடியும் முடியாது. இதை சொல்ல என்ன?"
"சொல்ல தெரியல!" என்றாள் மீண்டும் அதே குரலில்.
"மறுபடியும் கேட்குறேன். யோசிச்சு சொல்லு! வாழ போறோம்! என்கூட நீ உன் கூட நான்" மீண்டும் அவன் கேட்க,
"இதெப்படி என்னனு நான் சொல்ல?" என்றுவிட்டாள் அவனை முடிக்க விடாமலே!
வாழ்க்கை அதன் போக்கில் எடுத்துக் கொண்டு இப்பொழுது தான் கல்லூரி வாசலை விட்டு வெளி வந்திருப்பவளிடம் அவன் கேள்வி அதிகப்படி தான்.
"ஏன் சொல்ல முடியாது?" என்றவன் சன்னமான புன்னகை அவளுக்கு கேட்டாலும்,
"ஸீ மிஸ்டர் சக்திவேல்!" என்ற அவள் அழைப்பில் இன்னும் புன்னகை விரிந்து கண்கள் ஒளிர்ந்தது சக்திவேலிடம்.
"முடியுமா முடியாதான்னு பதில் சொல்ல இதென்ன கேம்'மா? வேற வழி இல்லைல? ஓவரா பேசுற என்னை நீங்க சமாளிச்சு தான் ஆகணும். ஒண்ணுமே தெரியாத அப்பாவி என் பேரன்னு அப்பத்தா நம்புற உங்களை நான் சமாளிச்சு தான் ஆகணும். அவ்வளவு தான்" என்றாள்.
"அப்ப ரெடியாகிட்ட இல்ல கல்யாணத்துக்கு?" சிரித்தபடி கேட்டான்.
"அப்பவே மூணு மாசம் முன்னாடி பக்கத்துல வந்து நின்னு போட்டோ எடுக்கும் போதே தெரிலயா?" என்றாள் அவளும்.
இன்னும் ஐந்து நாட்களில் நிச்சயம் அடுத்த நாள் திருமணம்.
புடவை எடுப்பது, அதை தைப்பது என பெண்ணிற்கான வேலைகள் எல்லாம் முன்பேயே முடித்து தயாராய் வைத்தாகிற்று. கூடவே தேன்மலருக்கு பிடித்த விதமாய் புடவையை அவளே தேர்வு செய்து அதற்கான டிசைனர் ப்ளௌஸ் என எல்லாம் அவள் விருப்பம் மட்டுமே!
இனி அவர்கள் இருவருக்கான நேரங்கள் தான் அனைத்துமே! அதுவும் அவள் கல்லூரி முடித்த நாள் ஆரம்பித்து அத்தனை அழைப்புகள் தேன்மலருக்கு சக்திவேலிடம் இருந்து.
அதற்கு முன்பும் அழைப்பான் தான் என்றாலும் அளவாய் தான் பேசி வைப்பான். என்னவோ படிப்பில் இருப்பவள் கவனத்தை தான் திருப்பிட கூடாது என ஒரு எண்ணம்.
அதுவும் அவளின் பரீட்சை நேரத்தில் தான் செய்தி அனுப்பவதோடு நிறுத்திக் கொண்டான். அது புரிந்தது போல சீண்ட என்றே தேன்மலர் அவனுக்கு அழைத்து வைப்பாள்.
"படி தேனு!" என்பவனுக்கு தான் தெரியும் அவன் அவஸ்தை.
"படிடா பரமா! அதை தான சொல்றிங்க?" என கேட்டு அவள் சிரிக்க,
"உனக்கு சிரிப்பா இருக்குல்ல? எக்ஸாம் முடியட்டும்!" என்று மட்டும் சொல்லி வைத்துவிடுவான்.
இதோ இப்பொழுது அவள் தான் மாட்டிக் கொண்டு விழித்தாள் அவனிடம். அத்தனை பேசினான். அவன் ஆசைகளை எல்லாம் வாய்விட்டு இன்னமும் சொல்ல தெரியவில்லை அவனுக்கு. ஆனாலும் ஏதோ ஒன்றை பேசிக் கொண்டே இருக்க, அவன் மனதை புரிந்து கொண்டாள் தேன்மலர்.
முதலில் தேன்மலருக்கு அவனைப் பார்க்கும் பொழுது அத்தனை பயம் இருந்ததை எண்ணி இப்பொழுதெல்லாம் அத்தனை சிரிப்பு வரும் அவளுக்கு.
அதையும் அவனிடமே சொல்லி சிரிக்க, அவனுக்கு தான் வெட்கமாகிப் போனது.
"இப்போ பயமில்ல உனக்கு அப்படி தானே?" என்று முறைத்தான் என்றால்,
"ஆமா ஏன் பயப்படணும்?" என்று அவள் சொல்லிவிட,
"இந்த வார்த்தையை எப்பவும் மீற கூடாது. பாத்துக்குறேன்!" என்றிருந்தான் சக்திவேல்.
அடுத்தநாள் வெற்றி சொன்னவர்கள் வந்து பார்த்து அளவை எடுத்துக் கொண்டு செல்ல,
"சக்தி!" என வாசலில் நின்றவனை அழைத்தார் கோமளம்.
"சொல்லுங்க சித்தி!" என அவன் வர,
"பால் பாயாசம் செஞ்சேன்! கொஞ்சம் மலரு வீட்டு வரை போய்ட்டு வந்துறேன்!" என்று சொல்லவும் அவனும் தலையாட்ட,
"கிளம்பிட்டியா டி!" என சத்தமிட்டார் கோமளம் ராதிகாவிடம்.
"கழுதை வயசாகுது. இன்னும் சின்ன புள்ள மாதிரி பிறந்தநாளுக்கு அது வேணும் இது வேணும்னு அடம். அந்த மனுஷனும் கூறில்லாம வாங்கியாற கிளம்பியாச்சு!" என்று கோமளம் சொல்லிக் கொண்டிருக்க,
"நீங்க மட்டும் பால் பாயாசம் யாருக்காக செஞ்சீங்க சித்தி?" என்றான் சக்திவேல்.
"பால்பாயசமும் புது போனும் ஒன்னா?" கோமளம் கேட்க,
"ஆனா பாசம் ஒண்ணு தானே? இல்ல ண்ணே!" என புத்தாடையில் வந்து நின்றாள் ராதிகா.
"எப்படி இருக்கு ண்ணே!" என்ற கேள்விக்கு,
"அவன்கிட்ட அழாத குறையா அடம்பண்ணி வாங்கிட்டு நல்லாருக்கான்னு கேட்டா நல்லா இல்லைனா சொல்லுவான்?" என்றார் கோமளமும்.
"நான் ஒன்னும் அடம் பண்ணல! கேட்டதும் அண்ணே வாங்கியாந்து தந்துட்டு" என்றவள்,
"போலாமா?" என்று கேட்க,
"ரெண்டு நிமிஷம்! வந்துடுறேன் ராதி!" என்றவன் சட்டையை மாற்றிக் கொண்டு புஷ்பத்திடமும் சொல்லிக் கொண்டு வந்தான்.
"கொட்டி வச்சுடாத! ஆட்டாம கொண்டு போ!" என்றெல்லாம் கோமளம் சொல்லி அனுப்பிட, வழியில் நின்ற சக்திவேல் பூவை வாங்கி தங்கைக்கு கொடுத்துவிட்டு, தனியாய் தன்னவளுக்கும் வாங்கி வைத்துக் கொண்டான்.
ராதிகா முதலில் தேன்மலர் வீட்டிற்குள் சென்றுவிட, இவன் பின்னோடு மெதுவாய் சென்றான்.
"ராதிகா!" என வரவேற்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவள்,
"நீ மட்டுமா வந்த?" என்று வாசலைப் பார்க்க, சக்திவேல் வந்து கொண்டிருந்தான்.
பார்த்ததும் மலர்ந்தவள் "வாங்க!" என்று சொல்ல, அருகில் சென்று பூவைக் கொடுத்தான்.
"பால் பாயாசம் அண்ணி! அம்மா குடுத்தாங்க!" என ராதிகாவும் கொடுக்க, வாங்கிக் கொண்டவள், அவர்களை அமர சொல்லி தண்ணீர் கொடுத்துவிட்டு,
"அம்மாவும் அப்பாவும் ஒருத்தங்களுக்கு மட்டும் பத்திரிக்கை விட்டுப் போச்சுன்னு குடுக்க போனாங்க!" என்று சொல்லி அன்னைக்கு அழைத்துவிட்டு காத்திருக்க, அழைப்பை ஏற்ற சந்திராவிடம்,
"ம்மா! அவங்க வந்திருக்காங்க!" என்று தேன்மலர் சொல்லவும் இதழ்களுக்குள் சிரித்து அத்தனை சாதாரணமாய் தெரிய சக்திவேல் அமர்ந்திருக்க,
"அவங்க தான் ம்மா!" என மீண்டும் அவள் சொல்லவும், காட்டிக் கொள்ள கூடாது என நினைத்த ராதிகாவும்,
"அவங்களா? எவங்க?" என வாய்விட்டு சிரித்தாள்.
"உன்னை கொன்னுடுவேன்!" என தேன்மலர் ராதிகாவிடம் சொல்லிவிட்டு அலைபேசியில் கவனத்தை கொண்டு சென்றவள்,
"ம்மா! எப்ப வர்றிங்க?" என்றாள் அன்னை கூறியதற்கு பதில் சொல்லாமல்.
"எது?" என மீண்டும் அதிர்ந்தவள் சக்திவேலைப் பார்க்க, புருவங்களை சுருக்கிப் பார்த்தான் அவன்.
"ம்மா!" என்று சிணுங்கியவளைவிட்டு கண்களை அகற்றவில்லை சக்திவேல்.
"சரி!" என்று சொல்லி போனை வைத்தவள்,
"பத்து நிமிஷத்துல வந்துடுவாங்களாம். இருக்க சொன்னாங்க உங்களை!" என்றவள்,
"நான் காபி கொண்டு வர்றேன்!" என்று பாவமாய் சொல்ல, அப்போது தான் புரிந்தது அவள் அதிர்வின் காரணம்.
சட்டென நியாபகம் வந்தவளாய் தேன்மலர் "ராதிகா! என் கூட வா!" என காபி போட அவளை அழைக்க,
"ராதி! இந்த ட்ரெஸ்ல போட்டோ எடுக்கணும் சொன்ன இல்ல? இங்க நில்லு!" என்று சக்திவேல் சொல்லவும்,
"ரைட் ரைட்!" என்ற ராதிகா அவன் கூறிய இடத்திற்கு சென்று நிற்க,
"போய் காபி போடு!" என்றான் நமட்டுப் புன்னகையுடன் தேன்மலரிடம்.
"உங்களை..." என்றவள் உள்ளே செல்ல, சக்திவேல் ராதிகாவைப் புகைப்படம் எடுக்க, அடுத்த பத்து நிமிடங்களில் எல்லாம் வந்துவிட்டனர் சந்திரா ஜெகதீசன் இருவரும்.
"வாங்க தம்பி!" என்று வரவேற்ற சந்திரா,
"என்ன டி இது?" என டம்ப்ளரில் இருந்ததைப் பார்த்து கேட்க,
"பால் பாயாசம். இன்னைக்கு ராதிகா பர்த்டே! அதான் கோமளம் அத்தை குடுத்து விட்ருக்காங்க!" என்று சொல்ல,
"நான் கூட நீ போட்ட காபியோன்னு நினச்சுட்டேன்!" என்று அன்னை சொல்ல, புன்னகையை அடக்க முடியாமல் உதடுகளை கடித்து புருவங்களை நீவிக் கொண்டு திரும்பிக் கொண்டான் சக்திவேல்.
"அவங்க வந்திருக்காங்க அவங்க வந்திருக்காங்கனு சொல்றா! யாருன்னு நான் நினைக்க? அன்னைக்கே உன்னை மாமானு சொல்ல சொன்னேன்ல?" என்ற சந்திரா சொல்லில் தேன்மலர் விழி ஓரமாய் சக்திவேலைப் பார்க்க, நொடி நேரத்தில் அவளைப் பார்த்து கண் சிமிட்டி இயல்பாகி இருந்தான் அவன்.
இவள் தான் அதில் அங்கும் இங்குமாய் பார்த்து படபடத்த மனத்தை அடக்க முடியாமல் நின்றாள்.
அங்கே இன்னும் சந்திராவின் புலம்பல்கள் தீரவில்லை சக்திவேலிடம்.
"காபி போட்டு குடு வாறேன்னு தான் சொன்னேன். அதுக்கும் முழிப்பாளேன்னு தான் அளவும் சொல்லி வச்சேன். நீங்க கொண்டாந்த பாயசத்தை உங்களுக்கே ஊத்தி தந்து வேலையை முடிச்சிருக்கா!" என அத்தனை குற்றப் பத்திரிக்கை வாசிக்க,
"ம்மா!" என பல்லைக் கடித்தாள் தேன்மலர்.
"அவிங்க அப்பா கொஞ்சம் அதிக செல்லம். இப்போ நீங்க கிளம்புனதும் பொண்ணுக்கு வரிஞ்சு கட்டி என்கிட்ட சண்டைக்கு வருவார்!" என அதையும் சொல்ல, புன்னகையுடனே கேட்டுக் கொண்டிருந்தான் சக்திவேல்.
"இங்க தான் அவ இஷ்டத்துக்கு விட்டுட்டோம்! புஷ்பம் ஆத்தாட்ட சொல்லி நாலு போடு போட்டு எல்லாம் கத்துக்க சொல்லுங்க!" என்றும் சொல்ல,
"மொத்த இமேஜூம் கிளோஸ்!" என தலையில் கைவைத்து நின்றாள் தேன்மலர்.
தொடரும்..