• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நான் வாழும் நாள் மட்டும்! 16

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
841
634
93
Chennai
அத்தியாயம் 16

"உன் அம்மா கூட பிறந்த சித்தி வீட்டுல விருந்துக்கு கூப்பிட்டாக சக்தி! உன்கிட்ட கேட்டுக்க சொன்னேன்!" என்று புஷ்பம் கேட்க, யோசனையாய் அமர்ந்தான் சக்திவேல்.

கோவிலில் பொங்கல் வைத்து சாப்பிட்டு உறவுகள் என தங்கி இருந்த சிலரும் மதியம் கிளம்பிவிட, மாலை நேரம் அமைதியாய் இருந்தது சக்திவேல் இல்லம்.

"ஒரு வாரம் போகட்டும் அப்பத்தா! முதல்ல இங்கனயே நிறைய இருக்கே." என்றான்.

"அதுக்கு தான் நான் எதுவும் சொல்லிக்கல. நாளைக்கு மாமியார் வீட்டு விருந்துக்கு போய் நீ தங்கிட்டு நாளன்னைக்கு வந்தா போதும். அஞ்சாம் பக்கம் தான் தங்கதுரை உன்னைய விருந்துக்கு கூப்பிடனும்னு சொல்லிருக்கான்!" என்று சொல்லவும்,

"ம்ம் சரி அப்பத்தா!" என அவன் பேசிக் கொண்டு அமர்ந்திருக்க,

"ஸ்ஸ்ஸ்... ஆஆ.." என கையை உதறிக் கொண்டு ராதிகாவுடன் அப்பொழுது தான் வீட்டிற்குள் வந்தாள் தேன்மலர்.

"என்ன மலரு?" என புஷ்பம் எழுந்து கொள்ள, புருவம் சுருக்கிய சக்திவேல் அருகே அவள் வந்து நிற்கவும்,

"ண்ணே! அண்ணிக்கு கையில சூடு பட்டிருச்சு! நீங்க தான ஒரு மருந்து வச்சிருப்பிங்க?" என்றாள் ராதிகா.

"விருந்துக்கு முன்ன பக்கத்து வீடு தான்னாலும் அங்க போவாதன்னு சொன்னேன் தானத்தா உன்னை?" என்று புஷ்பம் எழுந்து மருந்தை எடுக்க, மனைவியை முறைத்தான் சக்திவேல்.

"தனியா போகாதனு தான அப்பத்தா சொன்னிங்க? அதான் இவங்களும் வந்து என்னை அங்கவிட்டுட்டு தான இங்க வந்தாங்க?" என பதிலுக்கு கேட்டுவிட்டு, கணவனை ஓரக் கண்ணால் பார்த்து வைக்க, மருந்தை கொண்டு வந்து சக்தியிடம் கொடுத்தார் புஷ்பம்.

"எப்படி பட்டுச்சு?" என்று கேட்டு சக்திவேல் மருந்தைப் பூச,

"நான் தான் ண்ணே சாண்ட்விச் செஞ்சேன்! அண்ணி நானும் பழகிப் பாக்கேன்னு இப்படி கையில சுட்டுக்குச்சு!" என்றாள் ராதிகாவே.

"வராததை எல்லாம் எதுக்கு த்தா செஞ்சுகிட்டு. சாப்பிட்டியா இல்லையா?" என்று புஷ்பம் தான் கேட்டார்.

"இன்னும் இல்ல!" என்ற ராதிகா,

"நீங்க இங்க இருங்க அண்ணி! அண்ணேனுக்கும் சேர்த்து நான் எடுத்துட்டு வர்றேன்!" என எழுந்து ஓடினாள் வெளியே.

"லைட்டா எரியும்!" சக்திவேல் சொல்லவும் தான் எரியவே ஆரம்பித்தது கைகளில் தேன்மலருக்கு.

"ரொம்ப வலிக்குதோ?" புஷ்பம் அருகில் வந்து கைகளைப் பிடித்து கேட்க,

"ம்ம்!" என்றவள் பற்களைக் கடித்து நின்றாள்.

"என்னத்தா நீ!" என்ற புஷ்பம் கவலையாய் பார்க்க,

"சரியாகிடும் அப்பத்தா! கொஞ்ச நேரம் தான் வலிக்கும்!" என்ற சக்திவேல் தேன்மலரைப் பார்க்க, கணவனை முறைத்து நின்றாள் அவள்.

"இந்தா வாரேன்!" என்று புஷ்பம் கோமளம் வீட்டிற்கு செல்ல,

"எதுக்கு இந்த வேலை உனக்கு? டீ போடவே நீ மூணு வருஷ கோர்ஸ் போகணும்!" என்றான் சக்திவேல் கிண்டலாய்.

"ப்ச்! ராதிகா என்னை விட சின்ன பொண்ணு தான? அவளே இதெல்லாம் பண்றால்ல? அதான் கோமளம் அத்தை என்னை எதுவும் நினைச்சுக்க கூடாதேன்னு ட்ரை பண்ணேன்!" என்றவள் காற்றை இழுத்து கைகளில் ஊதிவிட,

"ஹ்ம்ம்! அவ உன்னை விட சின்ன பொண்ணு தான். ஆனா நீ பெரிய பொண்ணு இல்ல. புரியுதா!" என்றவன் மீண்டும் கையை இழுத்துப் பார்த்தான்.

"பொத்துருச்சு தேனு!" என்றவன் இன்னும் கொஞ்சம் மருந்தை எடுக்க,

"வேணாம் வேணாம்! இது கூட வலிக்காது போல. அது ரொம்ப காந்தல் குடுக்குது!" என்றாள் கைகளை இழுத்து.

"ஆனா சட்டுன்னு சரியாகிடும். நீ கையை தண்ணில வச்சுடாத! இங்க என் கூட இருக்க சொன்னா தனியா ஆட்டம் போட கிளம்புனல்ல?" சக்திவேல் கேட்க

"ப்ச்! உங்க சாபம் தான் போல!" என்றாள் கைகளை உதறிக் கொண்டு.

"ம்ம்!" என்றவன் பார்வையில்,

"என்ன?" என சந்தேகமாய் அவள் கேட்க,

"முத்தம் குடுத்தா சரியாகிடுமாம். அதான் ட்ரை பண்ணி பார்க்கலாமான்னு பார்த்தேன்!" என்றான் நமட்டுப் புன்னகையோடு.

"குடுங்க!" என சட்டென்று கையை நீட்டிவிட்டாள். அதில் தான் மருந்தை பூசிவிட்டானே! எப்படி குடுப்பானாம்? என அவள் நீட்டி இருக்க, நொடி நேரத்தில் அங்கும் இங்கும் என பார்வையை செலுத்தியவன் அந்த கையைப் பிடித்து இழுத்த விளைவில் அதை எதிர்பாராதவள் அவனுக்கு வெகு அருகில் வந்துவிட, அத்தனை அழுத்தமாய் சடுதியில் அவள் இதழில் முத்தமிட்டு விலகி இருந்தான்.

"அண்ணே!" என கையில் சாண்ட்விச்சுடன் ராதிகா வர, தேன்மலர் தலையில் வலிக்காமல் ஒரு கொட்டு சக்திவேல் வைத்தபின் தான் தெளியவே செய்தாள் அவள்.

"என்னவோ பண்ணீங்க தானே?" என தேன்மலர் கேட்கும் நேரம் ராதிகா இவர்கள் அருகேயே வந்திருக்க, அத்தனை கள்ளப் புன்னகை சக்திவேலிடம்.

"இரு நானும் உன் கூடவே வர்றேன்!" ராதிகாவிடம் தேன்மலர் சொல்ல,

"அம்மா வர கூடாதுன்னு சொல்லுச்சு அண்ணி! விருந்துக்கு முன்னாடி வந்ததுக்கு தான் கையில காயம் ஆகிடுச்சாம். அதனால அண்ணே கூட விருந்துக்கு வந்த அப்புறம் இங்கேயே கூட இருக்கட்டும். இப்ப வர வேண்டாம்னு சொல்லுச்சு!" என்றாள் ராதிகா.

"சாப்பிட்டு மேல ரூம்க்கு போய் ரெஸ்ட் எடு! சரியாகிடும்!" சக்திவேல் சொல்ல,

"பரவால்ல! நான் இங்கேயே இப்படி உக்காந்தே ரெஸ்ட் எடுத்துப்பேன்!" என்றாள் அங்கே சட்டமாய் அமர்ந்து கொண்டு தேன்மலர்.

"சொல்ற எதையும் கேட்குறதே இல்ல!" சக்திவேல் முறைப்புடன் சொல்ல,

"நான் மட்டும் தான்ல?" என்ற முணுமுணுப்பு தேன்மலரிடம்.

"நான் போய் வெற்றி அண்ணேனுக்கு செஞ்சு வைக்குறேன். பிரண்ட்ஸ் கூப்பிட்டாங்கனு போச்சு!" என ராதிகா சென்றுவிட,

"வலிக்குதா இன்னும்?" என்றான் அவளருகில் வந்து அவள் சாப்பிட்டதை தானுமாய் வாங்கிக் கொண்டும் வம்பு செய்து கொண்டும்.

அடுத்தடுத்த நாட்கள் இருவருக்கும் பட்டாம்பூச்சியாய் பறந்து திரிந்த காலங்கள்.

அத்தனை ரசனையாய் ஒவ்வொரு நாளும் சக்திவேல் பார்வை தேன்மலரிடம் விழ, அதற்கெனவே தன்னை அத்தனைக்கு கவனித்துக் கிளம்ப ஆரம்பித்தாள் தேன்மலர்.

அவனிடம் வம்பு செய்து அகப்படுவதும் அதற்கு அவன் தரும் இனிய தண்டனைகளும் என நாட்கள் அனைத்தும் வாழும் சொர்க்கங்கள் தான்.

மூன்றாம் நாள் காலை கிளம்பி தேன்மலர் பெற்றோர் வீட்டிற்கு செல்ல, அங்கே அவர்களுக்கு தனியே அத்தனை உபசரிப்பு.

தந்தை ஜெகதீஸன் அருகே அமர்ந்து அந்த வீட்டில் உள்ள ஒவ்வொருவர் பற்றியும் அவள் புகழ்ந்து பேச, சக்திவேல் அவர்களைப் பேசவிட்டு அமர்ந்து புன்னகைத்திருந்தான்.

மாலை கோவிலுக்கு இருவருமாய் சென்று வர என சக்திவேல் கேட்கவும் சரி என ஜெகதீஸன் சொல்லிவிட, தென்மேலரை தனியே அழைத்து வந்தான்.

அவளுக்கு என சாப்பிட வெளியே வாங்கிக் கொடுக்க,

"நீங்க கொஞ்சமா டேஸ்ட் பார்க்கலாம் இல்ல?" என்றாள் தேன்மலர்.

"கொஞ்சமோ அதிகமோ! எதுவும் ஒத்துக்காது. அப்புறம் கஷ்டமாகிடும். நீ சாப்பிடு!" என்று சொல்லி அவன் வாங்கிக் கொடுத்தவற்றை சாப்பிட்டு வந்த கையோடு வீட்டிலும் மாட்டி சந்திராவிடம் அத்தனை பேச்சுக்களையும் வாங்கிக் கொண்டாள்.

வீட்டிற்கு வந்ததும் "இதுல காபியும் வடையும் இருக்கு. சக்திகிட்ட குடுத்துட்டு உனக்கு வந்து எடுத்துக்கோ!" என அன்னை சொல்ல,

"அவங்களுக்கு மட்டும் குடுங்க ம்மா! எனக்கு மாமா வெளில வாங்கிக் குடுத்தாங்க!" என்று சொல்ல, அவ்வளவு பேச்சுக்கள் சந்திராவிடம்.

"உன்னை யாரு அத்தைகிட்ட சொல்ல சொன்னது?" அவர்கள் அறைக்கு வந்ததும் சக்திவேல் சிரிக்க,

"ப்ச் ஏதோ நியாபகத்துல சொல்லிட்டேன் போங்க! கழுதை வயசாச்சு சமைக்கக் கத்துக்காம ஹோட்டலுக்கு நான் தான் உங்களை கூட்டிட்டு போனேன்னு அவ்வளவு திட்டு!" என பாவமாய் அவள் சொல்ல,

"அப்போ நீ என்ன சொல்லிருக்கணும்?" என்றான் வலிக்க கன்னம் பிடித்து இழுத்து.

"ஆஹ்!" என்றவளுக்கு அவன் சொல்ல வருவது புரியவே இல்லை.

"என் வீட்டுக்காரர் தான வாங்கித் தந்தார்னு நீ திருப்பி கேட்டிருக்க வேண்டாமா?" என்றதும் தான்,

"ஆமால்ல!" என அவள் விழிக்க, அந்த விழியில் இதழ் பதித்தவன்,

"ஹ்ம்ம் நெக்ஸ்ட் டைம் சொல்லி பாரு! உன்னை திட்ட மாட்டாங்க!" என்றான்.

"அம்மாகிட்ட கூட கல்யாணமாகிட்டா எதிர்த்து பேசலாம் போல இல்ல?" என அவனிடம் கண்ணடிக்க,

"வாலு!" என காதைப் பிடித்து திருகியவன் தன் கைகளுக்குள் அவளைக் கொண்டு வர அமைதியாகிவிட்டாள்.

அவள் காதோடு அவன் கன்னம் உரச நிற்க, "ஏன் மாமா! உங்க அம்மா உங்களைத் திட்டி இருக்காங்களா?" என்றாள்.

"ம்ம் நிறைய!" என்றான் பின்னிருந்து கைகளை மாலையாய் கோர்த்து அணைத்தவன்.

"நீங்க என்ன சேட்டை பண்ணுவீங்க?" என்று அவள் கேட்கும் நேரம் அவன் கைகள் அவள் இடையை தழுவ,

"மாமா!" என திரும்பி அவன் நெஞ்சில் சாய்ந்து ஒரு அடி வைத்தாள்.

"இந்த சேட்டையை கேட்கல. அத்தை திட்டுற அளவுக்கு என்ன சேட்டை பண்ணுவீங்கனு கேட்டேன்!"

"உன்னை மாதிரி வாலு இல்ல நான். ஆனா திட்டு வாங்கி இருக்கேன். அம்மாக்கு நான் படிச்சு வேலைக்கு போக தான் ஆசை. ஆனா நான் ஸ்கூல் லீவ்க்கு காலேஜ் லீவுக்கு எல்லாம் அப்பா கூட தோட்டத்துக்கு வயலுக்குன்னு வேலையை கத்துக்க போயிருவேன். அது பிடிக்காது அம்மாக்கு. அதுக்காக தான் நிறைய திட்டு வாங்கிருக்கேன்!" என்றான்.

"அப்புறம் இன்னொன்னு!" தன் கழுத்தில் அவன் கைகள் ஊர்வலம் வரவும் அவள் கேட்க,

"கேளு டி தேனம்மா!" என்றான் சிறு புன்னகையுடன்.

"கோச்சுக்க கூடாது. வருத்தப்படவும் கூடாது!"

"அப்படி என்ன கேட்க போற நீ?" என்றான் என்னவாய் இருக்கும் என்ற எண்ணத்தோடு.

"அத்தையை மிஸ் பண்றிங்களா நீங்க?" கேட்கவும் அதில் புன்னகைத்தவன் அவள் நெற்றி முட்டி நிற்க,

"சொல்ல வேண்டாம் நினைச்சா வேண்டாம் மாமா!" என்றவளுக்கு அவனின் இந்த புன்னகை உள்ளுக்குள் திட்டுக்கிட வைத்தது.

"உன்கிட்ட சொல்லாம என்ன தேனு எனக்கு?" என்றவன்,

"மிஸ் பண்றேன் தான். தினமுமே! ஆனா என்ன பண்ண? மீனாட்சி அம்மா இல்லாம அப்போலாம் இந்த சக்திவேலுக்கு எதுவுமே இல்ல" என்றவன் அணைப்பின் இறுக்கம் அதிகமாய் அவளை இழுக்க,

"மாமா!" என்றதும் கொஞ்சமாய் விட்டுப் பிடித்தவன்,

"ஆனா வெற்றிக்காக நான் இப்போ என்னைய மாத்திகிட்டேன். அம்மா அப்பா போனப்போ நான் காலேஜ் படிச்சுட்டு இருந்தேன். வெற்றி எட்டாங்கிளாஸ் தான் படிச்சுட்டு இருந்தான். அவன் என்ன பண்ணுவான்? அதுக்காக மாறினேன். இப்போ பெருசா தெரியல. அதுக்கெல்லாம் சேர்த்து அப்பத்தாக்கு நான்னா உசுரு!" என்றவன் கண்கள் கனிந்தது அவரை எண்ணி.

"இதோ இப்போ தான் இந்த அழகு மீனாட்சியை எனக்கு கொடுத்திருக்கே என் அம்மா!" என்றான் அழுத்தமாய் அவள் நெற்றியில் முத்தமிட்டு சில நிமிடங்கள் அப்படியே நின்று.

தொடரும்..
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,726
617
113
45
Ariyalur
😄😄😄😄😄😄😄தேனுக்கு ஒரு நாள்லயே பயம் ஓடி போய்டுச்சு சக்திவேல் கிட்ட இனி இவ கிட்ட அவன் தான் மாட்டிகிட்டு முழிக்க போறான்
 
  • Haha
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
841
634
93
Chennai
😄😄😄😄😄😄😄தேனுக்கு ஒரு நாள்லயே பயம் ஓடி போய்டுச்சு சக்திவேல் கிட்ட இனி இவ கிட்ட அவன் தான் மாட்டிகிட்டு முழிக்க போறான்
ஆமா டா