• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நான் வாழும் நாள் மட்டும்! 17

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
841
634
93
Chennai
அத்தியாயம் 17

திருமணம் முடிந்து ஒரு மாதம் கழிந்திருந்தது. அருகில் இருக்கும் சொந்த பந்தங்கள் விருந்து எல்லாம் முடிந்து இன்று தான் சக்தி வேல் அன்னையின் சொந்த தங்கை அழைப்பினை ஏற்று அங்கேயும் சென்று விருந்து முடித்து இரவு தான் வீட்டிற்கு வந்து சேர்ந்தான் சக்திவேல் தேன்மலருடன்.

"இருட்டுததுக்கு முன்னாடி வர கூடாதா சக்தி!" புஷ்பம் கேட்க,

"பேய் அடிச்சிக்குமா அப்பத்தா?" என கிண்டல் பேசினாள் தேன்மலர்.

"ம்ம் பேயை உன் பேத்தி அடிச்சிருவா!" என்று சொல்லி அறைக்கு சென்றான் சக்திவேல்.

"சாப்பிட மாவு இருக்கு மலரு! தோசை போடவா? மதியமே வச்ச சாம்பாரும் இருக்கு!" புஷ்பம் சொல்ல,

"எனக்கு வேண்டாம் அப்பத்தா! அவங்களுக்கு மட்டும் நானே தோசை சுட்டுக்குறேன். நேரமாச்சுல்ல? நீங்க போய் தூங்குங்க" என்றாள் தேன்மலர்.

"யாத்தே! ஒரு மாசத்துல தோசை சுட படிச்சிட்டியாக்கும்?" புஷ்பம் அதிசயம் காட்ட,

"அப்பத்தா!" என முறைத்தவள்,

"ராதிகிட்ட தான் படிச்சுட்டு இருக்கேன். ஒரு நாள் பிரியாணி செஞ்சு உங்களை எல்லாம் அசத்தல.." என்று சொல்லி திரும்ப, சட்டையை மாற்றிவிட்டு வந்து நின்றிருந்தான் சக்திவேல்.

"உன் முதல் பிரியாணியை சாமிக்கு விட்ருவீயாம். ரெண்டாவது பிரியாணி அந்த வெற்றி பயலுக்கு" என்று புஷ்பம் கணக்கு சொல்ல, சக்திவேல் சிரித்தான் அதைக் கேட்டு.

"ஏன்? உங்க மூத்த பேரனுக்கு தான் மொத்த பிரியாணியும்!" தேன்மலர் சொல்ல,

"அவனுக்கு கடை சாப்பாடே ஒத்துக்காது. இதுல உன் சாப்பாடு வேறயா ஆத்தா? பாவம் என் பேரன். வெற்றி பய தான் என்னத்த வாயில போட்டாலும் அரைச்சு தள்ளிருவான்!" என்று சொல்ல, எப்போதும் போல அன்றும் கலகலப்பாய் இருந்தது சக்திவேல் வீடு.

அடுத்த நாள் காலை தேன்மலருக்கு முன்பே எழுந்துவிட்டான் சக்திவேல். விளக்கு எதுவும் இன்றி மொபைல் டார்ச்சை ஆன் செய்து வைத்து அவன் கப்போர்டை திறந்தான்.

"மாமா!" என்றவள் சத்தத்தில்,

"முழிச்சுட்டியா தேனு?" என்றவன் விளக்கை போட,

"இவ்வளவு காலையிலேயே என்ன பண்ணிட்டு இருக்கீங்க?" என்றாள் அவன் தயாராகிவிட்டதை உணர்ந்து மெதுவாய் எழுந்து.

"டைம் இருக்கு நீ தூங்கு தேனு! நான் தோட்டம் வரைக்கும் போய்ட்டு வர்றேன்!" சக்திவேல் சொல்ல,

"நானும் வரவா?" என்றாள் உடனே கண்கள் பளிச்சிட,

"இப்ப வந்து என்ன பண்ண போற? அங்க எனக்கு வேலை இருக்கு தேனு. ஒரு பத்து மணிக்கு தயாரா இரு வயல் பக்கம் போய்ட்டு வருவோம்!" என்றதும் சரி என்றவளிடம் சிறிதாய் சில்மிஷம் செய்து அவன் கிளம்பிவிட, மீண்டும் விட்ட உறக்கத்தை தொடர்ந்தாள் அவள்.

காலை சொன்னது போலவே அவளை அழைத்துக் கொண்டு வயலுக்கு சென்றான்.

"உன் அப்பா இடம் கூட இங்க இருக்குல்ல?" சக்திவேல் கேட்க,

"எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க?" என்றவள்,

"அதோ அங்க தான் இருக்கு. ஆனா அப்பா அங்க எதுவும் பண்ணறது இல்ல!" என்றாள்.

"ம்ம் தெரியும். லீஸ்ல விட்ருக்காங்க!" என்றான்.

"எப்படி மாமா எல்லாமே தெரிஞ்சு வச்சிருக்கீங்க?"

"பின்ன! அதனால தான படிச்ச வேலைக்கு போகாம பிடிச்ச வேலையை செய்ய முடியுது!"

"ஆனாலும் கெத்து தான் நீங்க!" என்றதும் அவன் சிரிக்க,

"நிஜமா! கல்யாணத்துக்கு முன்னாடி கூட சக்திவேல்னு சொன்னா அப்படியே டெரரா தான் உங்க ஃபேஸ் நியாபகம் வரும் எனக்கு!" என்றதும் அவன் நின்று புருவம் உயர்த்த,

"அது அப்போ!" என்றவள்,

"ஆனா அப்பா எப்பவும் சக்திவேல் தம்பினு தான் சொல்லும். நிலம் வாங்கணும் நாத்து நடனும்னு என்ன விஷயம்னாலும் சக்திவேல் தம்பிகிட்ட கேட்டு ஆள் ஏற்பாடு பண்ணனும்னு தான் அப்பா சொல்லுவாங்க!" என்றாள்.

"அது என்னோட எட்டு வருஷ உழைப்போட பயன். அதை விடு! அதென்ன டெரர் ஃபேஸ்? அப்படி என்ன பண்ணிட்டேன் நான்?" சக்திவேல் வயலுக்கு உள்ளே கிணற்றுக்கு அருகே வந்ததும் அவள் முன் நின்று கேட்க,

"அது தெரியல! அப்படியே பதிஞ்சிருச்சு!" என்றவளை அவன் அப்படியே பார்த்து நிற்க,

"ப்ச்! முதல்ல பொண்ணு பார்க்க அப்பத்தா வந்துச்சுல்ல? அப்ப எனக்கு கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்ல. அதுவும் உள்ளூர்ல...." என்றதும் அவன் பார்வை சுருங்க,

"அறியாத வயசுல தெரியாம அப்படி நினைச்சுட்டேன். ப்ளீஸ்!" என கண்களை சுருக்கியவனைப் பார்த்து அவள் கெஞ்சல் பார்வை பார்த்து,

"அசலூர்ல ஐடிக்காரனை கல்யாணம்.... பண்ணிட்டு....." என்றவள் முடிக்காமல் இழுத்தாள்.

அவன் முகம் பார்த்து நேருக்கு நேர் இப்பொழுது அதை சொல்லிட முடியவில்லை. தன் நினைவு எவ்வளவு அபத்தம் என அவள் விழிக்க,

"ஹ்ம்!" என்றவன் முன்னால் நடந்தான்.

"மாமா! அது முன்னாடி!" என்றாள் அவன் கைப்பிடித்து சிணுங்கி.

"நான் எதுவும் சொல்லலையே தேனு!" என்றவன் தொடர்ந்து நடக்க,

"என் வாய் தான் அடங்க மாட்டுது!" என வாயில் அடித்துக் கொண்டவள்,

"நீங்க எதுவும் சொல்லல. அது தான் கஷ்டமா இருக்கு. உங்க கண்ணும் கூட இப்ப என்னவோ சொல்லுது" என்று சொல்ல, மீசைக்கு அடியில் அவன் புன்னகை ஒளிந்திருந்தது.

"மா... மா!" என்றதோடு அவன் கைப்பிடித்து நின்றுவிட,

"வேலைக்கு அங்கங்க ஆளு இருப்பாங்க தேனு! நடந்துட்டே பேசு! அந்த பக்கம் தென்னந்தோப்புக்குள்ள போயிடுவோம். இளநீர் குடிக்கலாம்!" என்று சக்திவேல் சொல்ல, சட்டென முகம் வாடி அமைதியாகிவிட்டாள்.

நிச்சயம் அவன் என்னவோ நினைத்துக் கொண்டான் என தான் அவள் நம்பினாள். அப்படி இல்லை என்று அவன் சொல்லவில்லை தானே? அது தான் அவளை பாதித்தது. கூடவே அவன் பேச்சை மாற்றியதும்.

"ஹ்ம்ம் அப்புறம்?" என்றவன் அவள் கைகளை தானே பிடித்துக் கொண்டு வரப்புகளில் நடந்தான்.

"என்ன அப்புறம்?" என முகம் தொங்கிக் கொண்டு அவள் கேட்க,

"அதான் உங்க அப்பாவை என்னவோ சொல்லிட்டு வந்தியே!" என்றதில் என்னவென்றே நியாபகம் வரவில்லை அவளுக்கு.

"சரி அப்ப இந்த கதையே சொல்லு! அசலூர் போய்?" என்று சக்திவேல் கேட்க,

"நீங்க கையை விடுங்க. நான் வீட்டுக்கு போறேன்!" என்றவள் கைகளை உருவிக் கொண்டு திரும்பி கோபமாய் நடக்க,

"ஏ தேனு!" என எதிர்பாராமல் அவள் உருவிக் கொண்டு திரும்பியதில் அவன் சுதாரிக்கும் முன் அவள் திரும்பி நடக்க ஆரம்பித்திருக்க,

"அட இரு தேனம்மா!" என ஒரே எட்டில் அங்கும் இங்குமாய் பார்த்துவிட்டு அவள் கைகளை இறுக்கமாய் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தான் தென்னந்தோப்பை நோக்கி.

"இப்ப என்ன? அசலூர்ல ஐடில வேலைல இருக்கவனை கல்யாணம் பண்ண நினைச்ச! அவ்வளவு தான? சரி அதான் நடக்கலையே! நானும் தான் நஸ்ரியாவை கல்யாணம் பண்ணிக்க நினச்சேன்.. பகத்து தட்டிகிட்டு போகலையா? எனக்கு குடுத்து வச்சது அவ்வளவு தான். இதெல்லாம் ஒரு விஷயம்னு பேசிக்கி...." என்றவன் முடிக்கும் முன் அவன் கைகளில் ஒற்றை கையை கொடுத்திருந்தவள் இன்னொரு கையால் அவன் முதுகில் மொத்தி எடுத்தாள்.

"குடுத்து வச்சது அவ்வளவு தானா? அப்போ நான் என்ன தக்காளி தொக்கா?" என கேட்டு கேட்டு அடிக்க, முதலில் கொஞ்சம் வாங்கிக் கொண்டவன்,

"ஏன் டி படுத்துற!" என அவன் ஒற்றை கையில் அவளின் இரண்டு கைகளையும் பற்றிக் கொண்டு மீண்டும் அங்கும் இங்கும் பார்த்தான்.

"இப்படி நல்ல பிள்ளை மாதிரி ஆள் இருக்கானு அங்க இங்க பாக்குறது. ஆள் இருந்தா அப்பாவி! ஆள் யாரும் இல்லைனா அடப்பாவி! சரியான கேடி தெரியுமா நீங்க" என அவள் வாயில் கைவைத்துக் கொண்டு முறைக்க, அத்தனை சிரிப்பு சக்திவேலுக்கு.

"எவ்வளவு கோவம் வருது உனக்கு! அதே மாதிரி தான் எனக்கும். ஆனா உன் அளவுக்கு இவ்வளவு கோவமெல்லாம் இல்ல. நம்மாளுக்கு நம்மள பிடிக்கலையேனு கொஞ்சம் கடுப்பாகிட்டேன். அவ்வளவு தான்" என்றான் அதையும் சிரித்தபடியே.

"பிடிக்கலைனா! நான் என்ன இப்ப பிடிக்கலைனா சொன்னேன்?" முறைத்து தேன்மலர் கேட்க,

"உனக்கு எப்ப என்னை பிடிக்கலையோ அப்பவே எனக்கு உன்னை ரொம்பவே பிடிச்சிருந்ததே தேனம்மா. அப்ப டிசப்பாயின்மென்ட் வரும் தானே எனக்கு?" என கேட்க, மௌனமாகிவிட்டாள் அவள்.

"என்னனு கோவில் திருவிழால என் கண்ணுல மாட்டினியோ! மூணு வருஷமும் வேற எத்தனை பொண்ணுங்கள அப்பத்தா கொண்டு வந்து குவிச்சிருக்கும் தெரியுமா? ஒண்ணு கூட மனசுல ஒட்டல. இப்ப சொல்லு... என் இடத்துல நீ இருந்து சொல்லு!" என்றதும் மனமெல்லாம் என்னவோ செய்தது தேன்மலருக்கு.

அதில் அவள் கண்கள் தன்னைப் போல கலங்கிவிட,

"ஹே என்ன தேனு!" என்றவன் முறைக்க,

"வீட்டுக்கு போவோமா?" என்றாள்.

"ஏன்? இளநீர் வேண்டாமா?" சக்திவேல் கேட்க,

"எனக்கு கட்டிக்கணும்!" என்றாள் முறைத்தபடி.

"தேனு!" என்றவன் கண்கள் நம்பமுடியாமல் அகலமாக,

"எமோஷனல் ஆகிட்டியா?" என்றான் அவள் தோள்களை கட்டிக் கொண்டு அவள் தலை கலைத்து.

"ரிலாக்ஸ்! வீட்டுக்கு போய் கண்டிப்பா கட்டிக்கலாம் ஒட்டிக்கலாம். என்னவேனா பண்ணிக்கலாம்!" என்று சொல்ல,

"சாரி மாமா!" என்றாள் நிஜமாய் வருந்தி. மனம் முழுதும் அவன் வாய் வார்த்தைகளில் அவனோடு சுருண்டு கொண்டது.

அத்தனை சீக்கிரத்தில் அவன் வாய்வழி இந்த மாதிரியான உண்மைகளை அவன் சொல்லிவிடுவதில்லை.

இன்றைய அவள் சொல் அவனை பாதித்த விதம் தான் அவன் வாய் திறக்க காரணம் என்று புரிந்து மனம் வருந்தியவள் வெதும்பி தான் போனாள்.

"ப்ச் தேனு! என்ன நீ? எனக்கு உன்னை அப்பாவே பிடிக்கும். இப்ப பிடிக்காம போகுமா? எப்பவும் தேனு தான் எனக்கு. எதாவது தேவையில்லாம மூளைக்கு வேலை குடுக்காத! வா!" என மீண்டும் கைகோர்த்து அழைத்துக் கொண்டான் அவனுடன்.

அங்கே மொத்தமாய் தன் இடத்தை எல்லாம் சுற்றிலும் சுற்றி வந்தவர்கள் அதிகமாய் பேசிக் கொண்டனர்.

இருவருக்குமான நேரமாய் அமைந்தது அந்த சிறு வயல் நேரம்.

மீண்டும் வீட்டுக்கு வரும் போது மணி இரண்டைத் தொட்டிருந்தது.

"ண்ணே! இங்க பாரு! வாங்கிட்டேனே!" என வாசலிலேயே சக்திவேல் வரவுக்காக காத்திருந்த வெற்றி தன் கையில் இருந்ததை சக்திவேல் கைகளில் கொடுக்க, காலையே அவன் சொல்லி சென்றிருந்ததால் ஒரு புன்னகையுடன் சக்திவேல் அதை கைகளில் வாங்க,

"என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க!" என அதே இடத்தில் சக்திவேல் தேன்மலருடன் நிற்கும் நேரம் இருவரின் காலிலும் விழுந்திருந்தான் வெற்றி.

தொடரும்..
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,726
617
113
45
Ariyalur
😄😄😄😄😄😄😄தேனு கிட்ட கேட்குற ஏடா கூடமான கேள்வியும் கேட்டுட்டு நஸ்ரியாவை பிடிச்சிருக்குன்னு சொல்லி சமாளிக்குறான்
 
  • Haha
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
841
634
93
Chennai
😄😄😄😄😄😄😄தேனு கிட்ட கேட்குற ஏடா கூடமான கேள்வியும் கேட்டுட்டு நஸ்ரியாவை பிடிச்சிருக்குன்னு சொல்லி சமாளிக்குறான்
🤣🤣🤣