• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிஜம் - 15

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
92
106
33
Salem
தன் நண்பனை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான் ஆதவன். அவனோ தன் இறுதியான முடிவு இது தான் என்பது போல் நின்றிருந்தான்.

"இப்போ எதுக்குடா இப்படி பாத்துட்டு இருக்க.. நான் தான் நீ சொன்னதுக்கு ஓகே சொன்னேன் இல்லை அப்புறம் என்னடா.." என்றான் அவனின் வெறித்த பார்வையை பொருத்துக் கொள்ள முடியாமல்.

" எதுக்கு நீ சரின்னு சொன்னா.." அவனின் குரலில் அத்தனை வலி இருந்தது.

தனக்குப் பிறகு தன் நண்பனை பார்த்துக் கொள்வதற்கு யார் இருக்கிறார்கள் என்ற எண்ணமே அவனின் வாழ்வையும் துறக்க துணிந்தான்.

ஆனால் அவன் எடுத்த அத்தனை முடிவுக்கும் முட்டுக் கட்டையாய் இருக்கும் விடயத்தை நொடியில் மறந்து போனான்.

"இங்கே பாரு மச்சான்.. நான் என்ன கல்யாணமே நான் பண்ணிக்கலைன்னா சொன்னேன்.. பன்றேன் டா என்னோட எல்லா விஷயங்களும் தெரிஞ்சு என்னை நேசிக்குற ஒருத்திய நான் கட்டிக்குறேன்.. ஆனா அது இப்போ நடக்க கூடிய விஷயமா சொல்லு பாக்கலாம்.." என்றான் தன் நண்பனுக்கு புரிய வைக்கும் நோக்கத்துடன்.

"சரிடா அப்போ நானும் இப்படியே இருக்குறேன்.. உனக்கு எப்போ கல்யாணம் ஆகுதோ அப்போ நான் பண்ணிக்குறேன்.." என்றான் தீர்மானமாய்.

" அப்படியே அறைஞ்சேன்னு வையி.. நீ என்ன பேசுறேன்னு யோசிச்சியா.. அதுவரைக்கும் ரூபி வீட்ல அவளை அப்படியே வச்சிருப்பாங்களா டா.." என்றான் கோபமாய்.

" பரவாயில்லை அவ வெயிட் பண்ணலைன்னா வேற யாரையாவது கட்டிக்க சொல்லு.." என்றான் நிர்தாட்சன்யமாய்.

"ஆதவ் என்ன பேசுற நீ.. ஒரு பொண்ணு உன்னையே தொடர்ந்து வந்தா அவளோட காதல் உனக்கு கிள்ளுகீரையா போயிடுச்சா டா.. இதோ பாரு அவ வேற யாரையும் கட்டிக்க மாட்டா.. அப்படி ஒரு சூழ்நிலை வந்த அவளோட உயிரை போக்கிக்குவாளே ஒழிய இன்னொருத்தன் கட்டுற தாலிய வாங்கிக்க மாட்டா.. உனக்கு என் மேல இருக்கற நட்பும் அன்பும் உண்மைனா இந்த கல்யாணம் நடக்கனும்.. இல்லை உன் இஷ்டம் போலத்தான் இருப்பேன்னு சொன்னா ஓகே இனி இந்த அகஸ்டின் எப்பவும் உன் கண்ணில் படமாட்டான்.. இனி நான் உன்னை பாக்கவே கூடாது.. ரைட்.." என்றான் இறுதியாக.

இனி உன்னிடம் பேச எதுவும் இல்லை என்பதை போல சென்றவனை வந்து வழி மறித்தவன்,

"டேய் என்ன டா உன் மனசுல நினைச்சது எல்லாம் பேசுற.. இப்போ என்ன அவளை நான் கல்யாணம் செய்துக்கனும் அவ்வளவு தானே.. பன்றேன் பண்ணி தொலையுறேன்.." என்றான் வேண்டா வெறுப்பாய்.

அவனின் அந்த பேச்சு அகஸ்டினுக்கு சிரிப்பை தான் வரவழைத்தது. தன் நண்பன் தன் மேல் வைத்த பாசம் புரியாமல் இல்லை. அவனின் சிறுபிள்ளை தனமான செய்கை கூட சிரிப்பை கொண்டு வந்தது.

"டேய் மச்சான் காமெடி பண்ணாத டா.. என் மேல கோபமா இருக்கற மாறி கூட உன்னால நடிக்க முடியலை இல்லை தெரியலை.. ஏன்டா இப்படி சிரிப்பை கொண்டு வர்ற.. கெட் ரெடி பார் யுவர் மேரேஜ் நண்பா.." என்று சொல்லவிட்டு சென்று விட்டான்.

வெளியே வந்தவன் தனது அலைபேசியில் அழைப்பில் இருந்த ரூபினியிடம், "போதுமா மா.. உங்க கல்யாணம் நடக்க போகுது.. சந்தோஷமா இரு.. நான் உங்க அப்பாகிட்ட வந்து பேசுறேன்.." என்றான் ஆறுதலாய்.

"அண்ணா இவரை வற்புறுத்தி கல்யாணம் செய்யறது தப்பு தானே அண்ணா.." என்றாள் தன்னவனுக்கு ஆதரவாக.

"அவன் ஏன் கல்யாணம் வேணாம்னு சொன்ன காரணம் தப்பு டா.. எனக்காக உன்னை அவன் ஒதுக்கறது தப்பு டா.. அதுமட்டுமில்லாம அந்த இடியட் க்கு உன்னை பிடிக்காம இல்லை.. அதீதமான பிடித்தம் தான் உனக்கு நல்ல வாழ்க்கையை கொண்டு வரணும்னு அவ கெட்ட பேரு வாங்கினான்.. மத்தபடி உன்னை அவனுக்கு நிரம்ப பிடிக்கும் டா.." என்று அவளையும் சமாதானம் செய்து அவர்களின் கல்யாண ஏற்பாட்டை அவனே முன் நின்று செய்தான்.

ஆதவன் சார்பாக அவனே ரூபினியின் தந்தை ராபர்ட்டிடம் சென்று பேசினான். ஒளிவு மறைவு இல்லாத அவனின் பேச்சு அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அதுவும் ஆதவனை அவருக்கு முன்பே தெரியும். இரண்டு முறை பிளட் டெனெட் செய்யும் இடத்தில் பார்த்திருக்கிறார்.

அதுவும் இருவரின் நட்பும் பாசமும் அகஸ்டினுக்காக ஆதவன் தன் வாழ்வையே விடத் துணிந்தது என்று இருவரிடமும் நிறைய பிடித்தம் இருந்தது. ரூபினி நிறைய கூறியிருக்கிறாள் அகஸ்டினை பற்றியும் அவனை தமையனாக ஏற்றுக் கொண்டதை பற்றியும். அவரும் அவனை தன் மகனாக ஏற்றுக் கொண்டார்.

மிகவும் பிரம்மாண்டமாக தன் நண்பனின் திருமணத்தை ஏற்பாடு செய்தான் அகஸ்டின். ஆதவனின் தாய் தங்கை தமையன் அவர்களின் குடும்பம் என அனைவரும் விருந்தாளியாக வந்து விட்டு சென்றனர்.

அதை பெரிதாக ஆதவனும் கண்டு கொள்ளவில்லை. அவனின் வாழ்வு அகஸ்டினை சுத்தி மட்டுமே. அதை அவனவளும் அவளின் குடும்பமும் உணர்ந்தே இருந்தது.

இனிதான் அவர்களின் திருமணம் முடிந்து அன்றே அவனின் இல்லத்திலே முதலிரவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

அழகான குங்கும கலர் சிறிதாய் பார்டர் வைத்த புடவையில் நெற்றி வகிட்டில் காலையில் அவன் வைத்த குங்குமம்.. கழுத்தில் அவளவன் கட்டிய மஞ்சள் கயிற்றில் கட்டிய தாலி.. முகத்தில் நாணம் படர புன்னகை பூசிய முகத்துடன் அவளவனின் அறைக்கு வந்தாள் பெண்ணவள்.

அந்த வீட்டில் பெண் என்று யாரும் இருக்கவில்லை அவளின் தாயை தவிர.. ஆதவனின் தாய் தங்கை அண்ணன் மனைவி என அனைவரும் மண்டபத்துடன் தங்கள் வேலை முடிந்ததாய் பெட்டி கட்டி விட்டனர்.

இதோ இப்பொழுது கூட அவளின் தாய் காயத்ரி தான் அவளை தயார் செய்து விட்டு அகஸ்டின் அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு சென்று விட்டான் அவளை கதவை சாத்திக் கொள்ள சொல்லிவிட்டு.

எல்லோரும் சென்றதும் அவளும் கதவை சாத்திவிட்டு பால் செம்பை எடுத்துக் கொண்டு அவளவனின் அறைக்கு சென்றாள்.

முன்பே சென்ற அறை தான்.. ஆனால் இன்று புதிதாய் முளைத்த உறவு பெண்ணவளுக்கு வெட்கத்தை கொடுத்தது.

மெதுவாய் அவனின் அறைக்குள் கதவை திறந்து வந்தாள்.. உள்ளே வந்தவள் கண்டது வெற்று அறையைத் தான்.. அங்கே அவளவன் இல்லை.. பால்சொம்பை டேபிளில் வைத்து விட்டு அவனை தேடினாள்.

பால்கனியில் நின்றிருந்தான். சிரித்தபடி அவனருகே சென்றாள். அவன் தோளில் கை வைத்து,

"அத்தான் இங்கே என்ன பன்றீங்க.." என்று வினவினாள்.

அவளின் ஸ்பரிசம் பட்டு திரும்பினான் அவளிடம். அவன் கண்கள் கலங்கியிருந்தது.. அதை கண்டவளுக்கு மனம் மிகவும் வலித்தது.

" அத்தான் என்னை பிடிக்காம தான் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டீங்களா.. நானும் உங்களை காயபடுத்திட்டேனா அத்தான்.." என்றாள் அலைபாய்ந்த விழிகளுடன்.

அவளின் அலைபாய்ந்த விழிகளில் எதைக் கண்டானோ அவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டான்.. நேரம் ஆக ஆக அவனின் அணைப்பு இறுகியதே தவிர கொஞ்சமும் இளகவில்லை.

அவனை தன்னிடம் இருந்து விலக்க முயன்றாள் பெண்ணவள். ஆனால் அவனோ அவளை விட்டு சிறிதும் விலகாமல் அவளை கட்டித் தழுவிக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் அவளின் முதுகுபுறம் ஈரமாவதை தொடர்ந்து அவனை தன்னிடமிருந்து வலுக்கட்டாயமாக விளக்கியும் அவனின் கண்களை கண்டாள்.

அந்த கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.. அதை தன் விரல் கொண்டு துடைக்க முனைந்தவளின் கைகளை பிடித்துக் கொண்டு அதில் தன் முகத்தை பதித்தான்.

அவளின் உள்ளங்கையில் அழுத்தமாய் முத்தமிட்டான்.

அவனின் உதடுகள், "சாரி டி.." என்று முனுமுனுத்தது.

"அய்யோ அத்தான் எதுக்கு இப்படி பன்றீங்க.. நான் தான் சொல்லிட்டேனே நீங்க கேட்ட ஸ்பேஸ் எடுத்துக்கலாம்.. எப்போ அண்ணாவுக்கு கல்யாணம் ஆகுதோ அப்பவே நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் போதுமா.. இது தானே நீங்க என்கிட்ட கேட்க நினைச்சது.." என்றாள் சிரிப்புடன்.

" ஹனி உனக்கு வருத்தமா இல்லையா டி.." என்றான் அவளின் தலையை வருடியபடி.

" இல்லைங்க அத்தான்.. எனக்கு சந்தோஷமா தான் இருக்குது.." தன்னவனை நினைத்த கர்வத்துடன்.

அவளை கூட்டிக் கொண்டு பால்கனியில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்தவன் அவளின் மடியில் படுத்துக் கொண்டான்.

தாய் மடியின் சுகத்தை அறியாதவன் ஆதவன்.. படிக்கும் வயதில் வேலை தேடிய ஓட்டம்.. பசி தாகம் இதில் போராட்டமான வாழ்வில் எங்கிருந்து தாயின் மடியில் சுகமான நித்திரை கொள்ள முடியும்.

அனைத்தும் அவன் சம்பாதித்த போது அவனின் உறவுகள் அவனை விட்டு விலகி விட்டன.

இன்று தாரத்தின் மடியில் படுத்தான் சுகமாய்.. அவளின் கைகளை அவனின் தலையை கோத செய்தான்.

சிரித்தபடி அவனின் தலையை கோதியவள் அவனின் நெற்றியில் முத்தமிட்டாள்.

அந்த ஒற்றை முத்தம் சொன்னது அவனின் வாழ்வில் அவளின் இடத்தினை.

அவளின் மடியில கண்மூடியபடி, "ஹனி ஒரு பாட்டு பாடுடி.." என்றான் கண்களை மூடியபடி.




ஆஆ... ஆஆஆ.... ஆ... ஆ....
ஆஆ... ஆஆஆ ...ஆ... ஆஆஆ....
ஆஆ... ஆஆ.... ஆஆ....
ஆஆ.... ஆஆ... ஆஆ... ஆஆ...

ஆராரோ பாட்டுப் பாட நானும் தாயில்லை
உன் பேர் சொல்லி வாழ்த்து கூற நீயும் சேயில்லை
இது போல உறவுமில்லை இனி என்றும் பிரிவதில்லை
இது போல உறவுமில்லை இனி என்றும் பிரிவதில்லை
ஆரிராராரோ பாட்டுப் பாட நானும் தாயில்லை
உன் பேர் சொல்லி வாழ்த்து கூற நீயும் சேயில்லை


மார்பிலே போட்டு நான் பாட வழிதான் இல்லையே
மடியிலே போட்டுதான் பார்க்க நினைத்தால் தொல்லையே
வயதில் வளர்ந்த குழந்தையே வம்பு கூடாது
சிரித்து மயக்கும் உன்னையே நம்பக் கூடாது
மேலாடைப் பார்த்துதான் நீ சிரித்தால் ஆகுமா
மேனியே கூசுதே ஆசை வேர் விடுதே

ஆரிராராரோ பாட்டுப் பாட நானும் தாயில்லை
உன் பேர் சொல்லி வாழ்த்து கூற நீயும் சேயில்லை
இது போல உறவுமில்லை இனி என்றும் பிரிவதில்லை
இது போல உறவுமில்லை இனி என்றும் பிரிவதில்லை
ஆரிராராரோ பாட்டுப் பாட நானும் தாயில்லை
உன் பேர் சொல்லி வாழ்த்து கூற நீயும் சேயில்லை


தோளிலே நாளெல்லாம்
சாய்ந்து இருந்தால் போதுமே
வாழ்விலே ஆனந்தம் மேலும் நிறைந்தே கூடுமே
இதயம் எழுதும் இனிமையே... ம்... இன்பம் வேறேது
கனவில் வளர்ந்த கவிதையே... ம்ம்... என்றும் மாறாது
நீ என்றும் தேனென்றும் வேதங்கள் ஏதம்மா
நினைத்ததும் இனித்திடும் காதல் பூமழையே

ஆரிராராரோ பாட்டுப் பாட நானும் தாயில்லை
உன் பேர் சொல்லி வாழ்த்து கூற நீயும் சேயில்லை

இது போல உறவுமில்லை இனி என்றும் பிரிவதில்லை
இது போல உறவுமில்லை இனி என்றும் பிரிவதில்லை

ஆரிராராரோ பாட்டுப் பாட நானும் தாயில்லை
உன் பேர் சொல்லி வாழ்த்து கூற நீயும் சேயில்லை

ம் ம்ம்... ம் ம்ம்... ம்ம்ம்ம்....
ம்ம்... ம் ம்ம்... ம் ம்ம்... ம்ம்ம்ம்...


அவளின் மடியில் பாடல் கேட்டபடியே அப்படியே உறங்கி விட்டான் ஆதவன்.. தன்னவனின் நிம்மதியான தூக்கத்தில் அவளும் அதே ஊஞ்சலில் சாய்ந்தபடி தூங்கி விட்டாள் பெண்ணவள்.




நிழலை வருடும் நிஜம் தொடரும்..🌹


அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு கமெண்ட் லைக் பண்ண பட்டூஸ்க்கு நன்றி
 

Kalaivani shankar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 1, 2024
17
12
3
Karur
அக்ஸ்டீனையும் ஆதவனையும் பார்க்கும் போது பாரமா இருக்கு. ரெண்டு பேரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தானே சொந்தங்கள் கைவிடப்பட்டவர்கள்
 
  • Like
Reactions: ரமா

Joss uby

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
455
156
43
Dindugal
  • Like
Reactions: ரமா

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
92
106
33
Salem
அகஸ்டீனுக்கும் சீக்கிரம் ஒரு நல்ல லைஃப் அமையனும்.
Thank you sis
அக்ஸ்டீனையும் ஆதவனையும் பார்க்கும் போது பாரமா இருக்கு. ரெண்டு பேரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தானே சொந்தங்கள் கைவிடப்பட்டவர்கள்
Thank you sis
 

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
92
106
33
Salem

ஆராரோ பாட்டு பாட, என்ணோட ஃபேவரைட் சாங்க்.
ரொம்ப ஹேப்பி இந்த எபி படிச்சு
Thank you sis
inimelaavathu aadhavanoda life nallaarukkattum..
Roopi manasai allittaa
Thanks
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
66
37
18
Tirupur
அகஸ்டினுக்கும் அவன் நெனச்ச மாதிரியே ஜோடி சீக்கிரம் வரணும் ❤️