அகல்யா தன் தமையனிடம் திரும்பி, "அண்ணா நவியை பாத்துட்டு நீங்க கிளம்புங்க.. நான் பாத்துக்குறேன்.. நீங்க போகலைன்னா அண்ணிக்கு இன்னும் உங்க மேல கோபப்படுவாங்க.. ப்ளீஸ் அண்ணா எனக்காக.. நீங்க சந்தோஷமா இனுக்கனும்னு தான் உங்களை எல்லாம் விட்டு இவ்வளவு தூரம் பிரிஞ்சி வந்தேன்.. என்னோட நிம்மதிக்காக நீங்க போய் தான் அண்ணா ஆகனும்.." என்று தன் தமையனிடம் கறாராய் சொல்லிவிட்டாள்.
தன் தங்கை சொல் மாறாத அண்ணனாய் , "சரிம்மா நான் போறேன்.. சின்னவரை பாத்துட்டு போறேன் மா.. ப்ளீஸ்.." தன் மருமகனை காண தன் தங்கையிடம் கெஞ்சினான்.
அவர்களின் பாசப் போராட்டத்தை பார்த்த ஆதவனுக்கும் தன்னிடமுள்ள இது போல் அவள் உரிமையாய் இருக்கலாமே என்ற எண்ணம் தான் தோன்றியது.
ஆனால் இந்த உரிமையுணர்வு தான் ஒருவனை கோபத்தில் ஆழ்த்தியது என்பதை யாரும் உணரவில்லை அங்கே..
தன் தங்கையிடம் பேசி விட்டு நிமிர்ந்த அந்த ஆடவன் ஆதவன் அருகே வந்து, "ஹலோ சார் நான் துவாரகன்.. ரொம்ப நன்றி சார்.. என் மருமகனை காப்பாத்தினதுக்கு.. காப்பாத்த வேண்டிய நாங்க எல்லாம் தூரமா இருக்கோம்.. ஆனா எந்த சம்பந்தமும் இல்லாம நீங்க தான் இன்னைக்கு என் தங்கச்சிக்கு பக்க பலமா இருக்கீங்க.. ரொம்ப நன்றி சார்.." என்றான் துவாரகன்.
அதை புன்னகையுடன் ஏற்றுக் கொண்ட ஆதவன், "ப்ரோ போதும் அவங்க எனக்கும் தங்கச்சி தான்.. கவலைப்படாதீங்க இனிமே நாங்க பாத்துக்குறோம்.. நீங்க கவலைப்படாத உங்க குடும்பத்தை பாருங்க ப்ரோ.. " என்று விட்டு அகல்யாவிடம் திரும்பி,
"நீ போய் குட்டிய பாரும்மா.. நான் இந்த டீயை அகஸ்டின் கிட்ட குடுத்துட்டு வந்துர்றேன்.." அவர்களை நவிஷை பார்க்க அனுப்பிவிட்டு இவன் அகஸ்டினின் அறைக்கு சென்றான்.
ஏனோ மனதோரம் மகிழ்ச்சியாய் சென்றவனுக்கு அங்கே மற்றொரு அதிர்ச்சியாய் அகஸ்டினின் நிலை அவனுக்கு கண்ணீரை வரவழைத்தது.
ஆம் அங்கே சுவாசிக்கவும் இயலாமல் தன் இதயத்தில் கையை வைத்து அவனே அழுத்திக் கொண்டிருந்தான் அகஸ்டின்.
அதைக் கண்ட ஆதவன், "மச்சான்.." என்ற அலறலுடன் அவனருகில் சென்று தாறுமாறாய் படுத்திருந்தவனை தூக்கி கட்டிலில் நேராய் படுக்க வைத்தவன் அங்கிருந்த லேண்ட் லைன் காலில் டாக்டரை அழைத்து விட்டு அவனருகில் அமர்ந்து விட்டான்.
அகஸ்டினை அந்த நிலையில் பார்த்தவனின் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது.. இன்னும் எத்தனை நாளுக்கு இந்த வலியை தாங்குவான்.. கடவுளே உனக்கு இரக்கமே இல்லையா.. அகஸ்டினுக்காக ஆதவனின் மனம் துடித்தது.
அதே நேரம் அவனின் அலைபேசி ஒலிக்க அதை எடுத்தவன், "ஹனி.." என்றான் அழுகுரலில்.
தன்னவனின் குரலில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்தவள் பதட்டத்துடன், "என்னாச்சுங்க.. ஏன் இப்படி பேசுறீங்க.." என்றாள் கலவரத்துடன்.
தன்னவளின் கேள்விக்கு, "ஹனி அகஸ்டினுக்கு..."என்று அவன் முடிப்பதற்குள்ளாகவே அவளும் பரபரப்புடன்,
"அண்ணாக்கு என்னாச்சுங்க.." என்றவளின் குரலில் வேதனை இருந்தது.
"திரும்பவும் பழையபடி இருக்கான் டி.
எனக்கு பயமா இருக்கு ஹனி.. கொஞ்சம் சீக்கிரம் வாடி என்னால அவன் இருக்கற நிலையை பாக்க முடியலை டி.." என்றவனின் குரலில் நிச்சயம் சற்று முன் இருந்த கலகலப்பு இல்லை என்பதை உணர்ந்தவள் உடனே போனை அணைத்து விட்டு கிளம்பிவிட்டாள்.
அவளிடம் பேசி விட்டு போனை வைத்த அடுத்த நொடி அங்கே மருத்துவர் பதட்டத்துடன் வந்தார்.
" ஆதவன் சார் என்னாச்சி.. கொஞ்ச நேரத்துக்கு முந்தி நல்லா தான் இருந்தாரு.." என்ற படபடப்பு இருந்தது.
" தெரியலை விநாயகம் எனக்கு பயமா இருக்கு கொஞ்சம் சீக்கரம் பாருங்க.." வலிகள் மட்டுமே நிறைந்த இந்த வாழ்வை ஏன் இறைவா இவனுக்கு கொடுத்தாய் என்ற இறைவனின் மேல் கோபம் எழுந்தது.
இருவரும் ஈட்டுக்கு ஈடாய் வலிகளை அனுபவித்தவர்கள் தான்.. ஆனால் ஏனோ அகஸ்டினுக்கு அந்த வலிகள் மட்டும் தான் நிரந்தரம் போல்.
அவனை பார்த்த மருத்துவர், "சார் நீங்க கொஞ்சம் வெளியே இருங்க.." என்று அவனை வெளியே அனுப்பினார்.
அகஸ்டினின் அந்த அறை அந்த மருத்துவமனையின் ஐந்தாம் தளத்தில் இருந்தது.. அகல்யா இருந்த தளம் மூன்றாம் தளம்.. அதனால் இந்த நிகழ்வு எதுவும் அவளுக்கு சென்று சேரவில்லை.
அகஸ்டினின் அறைக்கு வெளியே சுவற்றை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தான் ஆதவன்.
அந்த அறைக்குள்ளே அவனுக்குத் தேவையான அத்தனை நவீன சிகிச்சை உபகரணங்களும் இருந்தன.
சிறிது நேரத்தில் ஆதவனின் தோளில் மென்கரம் விழவும் யாரென்று பார்க்காமலே அவனுக்கு தெரிந்தது அவனவள் தான்.
அவளின் இடுப்பை இறுகக் கட்டிக் கொண்டான்.. அவனின் உடல் நடுங்கியதை அவளால் உணர முடிந்தது.
அவனின் தலையை வருடியவளின் கைகளும் நடுங்கி தான் இருந்தன.
எத்தனை முறை பார்த்திருந்தாலும் நடக்கும் ஒவ்வொரு முறையும் அவன் மீண்டு வந்து பேசுவதற்குள்ளாக இவர்களின் உயிர் போய் தான் வந்து கொண்டிருந்தது.
அவனுக்கு ஆறுதல் கூற முடியாமல் அமைதியாய் அவனின் தலையை வருடிய படி மட்டும் நின்றிருந்தாள் பெண்ணவள்.
அவனிடம் எதுவும் கேட்கவில்லை.. சொல்லும் நிலையிலும் அவன் இல்லை.
இவர்களின் இந்த நிலை எவ்வளவு நேரமோ மீண்டும் அறையின் கதவை திறக்கும் சத்தம் கேட்டு வேகமாக எழுந்தான்.
அவனின் கண்களில் இருந்த தேடலை எதை கண்டாரோ, "சார் நல்லாருக்காங்க சார்.. இப்போ நார்மல் ஆயிடுச்சி.. ஆனா இப்போ எப்படி திடிர்னு இது மாதிரி ஆனுச்சு.. நான் முன்னவே கேட்கணும்னு நினைச்சேன்.. அந்த பையன் உங்களுக்கு தெரிஞ்சவங்களா.. இல்லை சாரோட பேமிலியா ஆதவன்.." என்றார் சந்தேகமாய்.
" இல்லையே என்ன ஆச்சி விநாயகம்.." என்றான் எதையோ யோசித்தபடி.
அந்த பையனை சார் தூக்கிட்டு வரும் போது ரொம்பவே டென்சனா இருந்தாரு.. சார் இவ்ளோ டென்சன் ஆகி நான் பார்த்தே இல்லை.. ஆனா இன்னைக்கு கண்டிப்பா சொல்றேன் அவரு ரொம்பவே நெர்வசா இருந்தாரு..
அந்த மன அழுத்தம் ஏற்கனவே இருந்த வலியை இன்னும் அதிகம் ஆயிடுச்சி.. நானும் சொல்றேன் ஆனா சார் திரும்ப ஆப்ரேஷன் பண்ண ஒத்துக்க மாட்டேங்குறாரு.. இங்கே வேணாலும் பாரின் கூட போலாம் சார்.. பட் எவ்வளவு சீக்கிரம் அது நடக்கனுமோ அவ்வளவு நல்லது அவரு உயிரோட நடமாட..
இனி நீங்க தான் சார் பேசனும்.. ப்ளீஸ் சார் அவரை நம்பி என்னைப் போல நிறைய பேரு இருக்காங்க.. இந்த ஹாஸ்பிடலுக்கு நான் டீன் தான்.. ஆனா இது அவரு உருவாக்கின ஹாஸ்பிடல்.. எத்தனையோ தொழிலாளிங்க இவரை நம்பி இருக்காங்க சார் ப்ளீஸ் பேசுங்க.." அகஸ்டின் மேல் அக்கறையுள்ள ஒரு உண்மையான மனிதரின் பாசம்.
அதை கேட்ட ஆதவன், "ம்ம் நான் பேசுறேன் விநாயகம்.. இப்போ அவன் எப்படி இருக்கான்.. பாக்கலாமா.." என்றான் ஆதவன்.
"கொஞ்ச நேரத்துல கண் விழிச்சிருவாரு.. போய் பாருங்க சார்.." என்று அவர் கிளம்பிவிட்டார்.
அவர் கிளம்பியதும் எதையோ யோசித்திருந்த ஆதவனின் தோளில் கை வைத்த அவன் மனைவி, "அத்தான் அவரு என்ன சொல்லிட்டு போறாரு.. அண்ணா நம்மகிட்ட எதாவது மறைக்கிறாறா அத்தான்.." என்றாள் யோசனையாக.
" தெரியலை டி.. எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு.. வா முதல்ல இவனை பாக்கலாம்.." என்று தன்னவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.
அங்கே தன்னை சுற்றிலும் மருத்துவ உபகரணங்களுடன் தன்னை மறந்து மருந்தின் வீரியத்தில் உறங்கி கொண்டிருந்தான் அகஸ்டின்.
அவனருகில் சொன்ன இருவரின் மனநிலையும் வெவ்வேறு யோசனையில் இருந்தது.
ஆதவனோ அகஸ்டினை பார்த்துக் கொண்டே, 'மச்சான் உனக்கும் அகல்யாவுக்கும் என்ன டா சம்பந்தம்.. ஏன்டா அவளுக்கு ஒன்னுனா இப்படி பதறுன.. இது மத்தவங்களுக்கு பதறுன அளவுல ஒரு பெர்சென்ட் கூட இல்லையே.. என்கிட்ட எதையோ மறைக்கிற அகஸ்.. ஆனா கண்டிப்பா நான் கண்டுபிடிப்பேன்..
நீ அவங்களை பாத்ததிலிருந்து நீ நீயா இல்லை டா.. எத்தனையோ பொண்ணுங்க உன் வாழ்க்கையில வந்தும் நீ யாரையும் ஏறெடுத்து பாக்கல.. ஆனா இன்னைக்கு கல்யாணம் ஆகி ரெண்டு பசங்களோட இருக்க அகல்யா மேல உனக்கு எண்ணமா..? எனக்கு நல்லா தெரியும் டா அந்த பொண்ணை நிச்சயம் நீ தப்பான கண்ணோட்டதில பாக்கல.. ஆனா அதையும் தாண்டி உன் பார்வை எதையோ சொல்லுது..
ஏன் இன்னைக்கு அந்த பொண்ணோட அண்ணன் அவன் கட்டி பிடிச்சதுக்கு உன்னோட பார்வையில இருந்த பொறாமையை நான் பார்த்தேன் டா.. எல்லாமே ஒரே மர்மமா இருக்கு டா.. கூடிய சீக்கிரம் இதுக்கு எல்லாம் ஒரு முடிவு பன்றேன் டா..' என்று மனதிற்குள் சூளுரைத்துக் கொண்டான்.
அவனின் தூக்கத்தை கலைக்காதவாறு இருவரும் வெளியே வந்தனர்.
வெளியே வந்த ரூபினி , "அத்தான் அந்த பையனையும் பாத்துட்டு வந்துடலாம்.." என்றாள் அழுத்தமாய்.
அந்த அழுத்தம் சொன்னது இப்பொழுது அகல்யாவையும் அந்த பையனையும் பார்க்க வேண்டும் என்று.
தாதியை அழைத்தவன் அகஸ்டினை பார்த்து கொள்ள சொல்லிவிட்டு இருவரும் அகல்யா இருக்கும் தளத்திற்கு வந்தனர்.
அங்கே அகல்யா மட்டும் தன் பெரிய பையனுடன் அமர்ந்திருந்தாள்.
தன்னருகில் ஏதோ நிழலாடவும் நிமிர்ந்து பார்த்தாள் அகல்யா.
அங்கே ஆதவனும் ஒரு பெண்ணும் நின்றிருந்ததை பார்த்தவள் வேகமாய் எழுந்தாள்.
அவள் வேகமாய் எழுவதை பார்த்த ரூபினி, "அய்யோ ஏன் இப்படி வேகமா எழறீங்க.. மெதுவாக எழுங்க.. நான் ரூபினி இவரோட ஒய்ப்.." என்றாள் அழகாய் சிரித்து.
அதை கண்டவள் சிரிப்புடன் தன் இரு கைகளையும் உயர்த்தி , "வணக்கம் மேடம்.." என்றாள் புன்னகையுடன்.
அவ்வளவு நேரம் அழுது சிவந்திருந்த அந்த முகம் புன்னகையில் அழகாய் தெரிந்தாள்.
அந்த புன்னகையில் தன் மனம் குளிர்ந்தவள், "யுவர் ஸ்மைல் கார்ஜியஸ் அகல்யா.. அப்புறம் இந்த மேடம்லாம் வேணாம்.. கால் மீ ரூபினி.. உங்க பையனா பாவம் ஏன் இங்கே தூங்குறான்.. வெயிட் பண்ணுங்க.." என்று அந்த பக்கம் போன ஒரு வார்டு பாயை அழைத்தவள் உள்ளே இருக்கும் படுக்கையில் படுக்க வைக்குமாறு கூறினாள்.
அவளின் சொல்லுக்கேற்ப அவனும் ஆதர்ஷ் தூக்கி பக்கத்து ரூமில் படுக்க வைத்தான்.
ஒரு பெண்ணுக்கு தான் இன்னொரு பெண்ணின் வலி புரியும் போல என்பதை அங்கே நிறைவேற்றிக் கொண்டிருந்தாள் ரூபினி.
நிழலை வருடும் நிஜம் தொடரும்..
அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு லைக் கமெண்ட் பண்ணுங்க பட்டுஸ்க்கு நன்றி