• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிஜம் - 25

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
197
216
43
Salem
அகஸ்டின் கண்ட எல்லோரும் பயந்து நின்றனர்.. அவனின் கோபம் இங்கே அனைவரும் அறிந்த ஒன்று.. அதை அறிந்ததால் அனைவரும் பயத்துடன் நின்றிருந்தனர்.

கம்பீர நடையுடன் வந்தவன், "இங்கே என்ன சத்தம்.. இது என்ன ஹாஸ்பிடலா இல்லை உங்க வீடா.. யாரு நீங்க இங்கே எதுக்கு வந்து சத்தம் போட்டுட்டு இருக்கீங்க.. வயசானவங்க தானே அடுத்தவங்களுக்கு தொந்தரவு தரக்கூடாதுன்னு நினைக்காம எதுக்கு இப்போ கடத்திட்டு இருக்கீங்க.." என்றான் கோபமாய்.

அவன் வார்த்தைகளில் இருந்த அழுத்தமும் கோபமும் வயதானவரை பயம் கொள்ள வைத்தது.

" அது அது வந்து தம்..பி.." என்றவரின் வார்த்தை தடுமாறியது.

அதை காதில் வாங்காதவன், "இங்கே பாருங்க உங்க குடும்ப பிரச்சனை எதுவும் இங்கே நடக்க கூடாது.. வெளியே போங்க.. எதுவா இருந்தாலும் அவங்க வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் பேசிக்குங்க.. இப்போ போறீங்களா.." என்று வாசலை நோக்கி கைகாட்டினான்.

அவன் சொல்லுக்கு பதில் பேச முடியாமல் அகல்யாவை முறைத்தபடி அங்கிருந்து வெளியேறினார் அந்த வயதானவள்.

அவர் சென்றதும் வேடிக்கை பார்த்த மற்றவர்களை ஒரு பார்வை பார்த்தான்.. அடுத்த நொடி அந்த இடத்தில் யாரும் இல்லை.. எல்லோரும் அவரவர் வேலையை மட்டும் பார்த்திருந்தனர்.

இது தான் அகஸடினின் வெற்றிக்கு காரணமாகியிருந்தது.. அதிகம் கத்தமாட்டான்.. சத்தம் போட மாட்டான்.. ஆனால் அவனின் ஒற்றைப் பார்வைக்கு அத்தனை பவர் இருந்தது.


அவர்கள் போனதும் அழுது கொண்டிருந்த அகல்யாவின் பக்கம் வந்தவன் அதே இடத்தில் நின்றிருந்த ஆதவனை பார்த்தவன் கண்ணசைவில் வெளியே சென்றான்.

தலை குனிந்தபடி அழுது கொண்டிருந்த அகல்யா இதை கவனிக்கவில்லை.. ஆதவன் சென்றதும் அவளருகே சென்றவன்,

" அவங்க யாரு.." என்றான் அழுத்தமாக.. அந்த வார்த்தையில் இருந்த அழுத்தமும் உறுதியும் கண்டிப்பாக நீ பதில் கூற வேண்டும் என்று இருந்தது.. இது தான் அகல்யாவிடம் அவன் பேசிய முதல் வார்த்தை..

அவன் வார்த்தையில் இருந்த கட்டளையில், "அவங்க என் மாமியார்.." என்றாள் அழுதபடி.

" யாரு என்ன சொன்னாலும் இப்படி அழுதா எல்லாம் சரியாகிடுமா.. பெண்களோட கண்ணீர் விலைமதிக்க முடியாதது.. அதை வீணான காரணங்களுக்காக சிந்தாதீங்க.. இப்போ உங்க பையனோட உடல்நிலை தேரனும்.. அதை முதல்ல பாருங்க.. அவன் எழுந்துட்டான்.. போய் பாருங்க.." என்று அவளிடம் சொல்லவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

அவன் கூறியதை கேட்ட அகல்யா என்னவோ நார்மலாக எடுத்துக் கொண்டு தன் மகனை பார்க்க சென்றாள்.. ஆனால் அங்கே தூரத்தில் இருந்து கேட்ட ஆதவனின் கண்கள் தான் நடந்ததை நம்ப முடியாமல் திகைத்து நின்றான்.

அகஸ்டின் ஒரு பெண்ணிற்கு ஆறுதல் வார்த்தை சொன்னானா.. இதை நம்ப முடியாமல் தான் அவனின் விழிகள் விரிந்து நின்றன.

அவனுக்கு இது சாதாரன ஒரு விஷயம் இல்லை.. பெண்ணென்றால் தள்ளி வைத்து பார்க்கும் ஒருவன் இன்று ஒரு பெண்ணிடம் ஆறுதல் சொல்லி சென்றான் என்றாள் அவனை தெரிந்தவர்கள் கண்டிப்பாக சிரிப்பார்கள்.

அதை எண்ணியவன் ஒரு பெருமூச்சுடன் அங்கிருந்து அகன்றான்.

இங்கே நவிஷ் இருக்கும் அறைக்குள் வந்த அகல்யாவுக்கு மனதில் வலி தோன்றியது.. ஓடி ஆடி திரிந்த

பையன் இன்று படுக்கையில்.. இன்னும் சரியாக நினைவு வரவில்லை.. அப்பப்போ முழிக்கிறான் பார்க்கிறான் மீண்டும் கண் மூடிக் கொள்கிறான்.

அதே நேரம் அகஸ்டின் கூறி சென்ற வார்த்தைகள் மனதில் தோன்றியது.. அவர் சொல்வது போல் இன்னும் எத்தனை நாளுக்கு இப்படி அவர்களுக்கு பயந்து வாழ்வது.. ஆனாலும் அவர்கள் மனிதர்கள் இல்லையே..

தன் எண்ணத்தில் இருந்தவளுக்கு நவிஷின் குரல் நடப்பை கொண்டு வந்தது.

அவனின் அம்மா என்ற அழைப்பு அவளுக்கு பரவசத்தை ஏற்படுத்தியது.

கிட்டதிட்ட பனிரெண்டு மணி நேரம் அவனின் அழைப்பு இல்லாமல் பெண்ணவளுக்கு தான் இருப்புக் கொள்ளவில்லை.

அப்பொழுது தான் கண் விழித்திருந்தான் நவிஷ்.. அவனருகே சென்றவள், "நவி கண்ணா.. இந்த அம்மாவை பயமுறுத்திட்டியே பா.." என்று அவனை அணைத்துக் கொண்டாள்.

அவனும் அம்மாவின் ஸ்பரிசத்தில் கொஞ்சம் பயம் தெளிந்தான்.

"அம்மா வலிக்குது மா.." என்றான் தலையில் கை வைத்து.

"ஒன்னுமில்லை கண்ணா.. சீக்கிரம் காயம் சரி ஆகிடும் பா.." என்று மெதுவாய் அவனின் தலையை வருடி முத்தமிட்டாள்.

"அம்மா அண்ணா எங்கே.." கண்களை நாலாபுறமும் சுழற்றியபடி தன் தமையனை தேடினான்.

அண்ணா பக்கத்து அறையில தூங்கறான் தங்கம்.. இப்போ வந்துடுவான்.. என் சின்ன தங்கத்துக்கு என்ன வேணும் சொல்லு.. அம்மா பால் வாங்கிட்டு வரவா கண்ணா.." தன் மகனிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

"எதை எங்கே போய் வாங்க போறிங்க அகல்யா.." என்றபடி தன் மகளை அழைத்துக் கொண்டு கையில் ஒரு சாப்பாட்டு கூடையுடன் வந்தாள் ரூபினி.


" இல்லைங்க அண்ணி குட்டி எழுந்துட்டான்.. அது தான் அவனுக்கு குடிக்க எதாவது வாங்கலாமான்னு கேட்டேன் அண்ணி.." என்றாள் புன்னகை முகமாய்.


" அது எப்படி நான் இருக்கும் போது நீங்க போய் கடையில வாங்க போவீங்க.." என்று எகிறினாள்.

" இல்லை அண்ணி உங்களுக்கு தொந்தரவு தர வேணாம்னு தான்.." என்றபடி முழுதாய் முடிக்காமல் இழுத்தாள்.

" நான் தொந்தரவுன்னு சொல்லலையே.." என்றாள் தன் புருவத்தை உயர்த்தியபடி.

"அய்யோ அண்ணி நீங்க சொல்லலை தான்.. ஆனா இப்போ தான் பேசுன உங்ககிட்ட என்னோட சுமையை எறக்கி வைக்க முடியாது அண்ணி.." என்றாள் சற்று முன் நடந்த நிகழ்வை மனதில் வைத்து.

இவளும் தன்னை தவறாக நினைத்தாள் என்ன செய்வது.. தன்னால் இவர்கள் குடும்பத்தில் குழப்பம் ஏற்படக் கூடாது என்ற எண்ணத்தில் தான் சொன்னாள்.

ஆனால் ரூபினியோ, "குழந்தையை போய் யாராவது சுமையா நினைப்பாங்களா அகல்யா.. இது என்ன பேச்சு.." என்று அதட்டினாள்.

"அய்யோ இல்லைங்க அண்ணி நான் அப்படி சொல்லலை.. இங்கே என்ன நடந்துச்சின்னு உங்களுக்கு தெரியாது.. அது.." என்று அவள் முடிப்பதற்குள்ளாகவே,

"எனக்கு தெரியும அகல்யா.. உங்க அண்ணா சொல்லிட்டாரு.. அவரு தான் குழந்தைக்கு எல்லாம் எடுத்துட்டு வர சொன்னாரு.." என்றாள் புன்னகை முகமாக.

"அண்ணி அப்போ நீங்க என்னை நம்புறீங்களா.." என்றாள் ஏக்கமாய்.

அவளின் ஏக்கம் ரூபினிக்குள் எதுவோ உடைந்து போனது.

பார்த்து முழுதாய் ஒரு நாள் கூட முடியவில்லை.. நன்றாக பேசியது சொல்லப் போனாள் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் தான்.. ஆனால் அதிலே இவளின் உள்ளத்தை புரிந்து கொண்டேன்.. ஆனால இவளின் சொந்தம் இவளை அசிங்கப்படுத்துகிறது அதுவும் எப்படி ஒரு பெண்ணின் நடத்தையை வைத்து.

பெண்ணுக்கு இங்கே பெண் தான் எதிரியாகி உள்ளாள்.. என்னவென்று சொல்வது.. காலையில் நடந்த அனைத்தையும் அவளவன் அவளிடம் ஒன்று விடாமல் கூறினான்.

அதன் விளைவு தான் சீக்கிரமாகவே வந்துவிட்டாள் பெண்ணவள்.

அகல்யாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்தவள் சிறிது நேரத்தில்,

"ம்ம் அகல்யா இது யாருன்னு சொல்லுங்க பார்ப்போம்.." என்றாள் ஆராவை காட்டி.

அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்த அந்த சிறுமலரை ஏனோ பார்த்ததும் பிடித்து போனது அகல்யாவுக்கு.

" அண்ணி இது உங்க பொண்ணா.." என்று அவளிடம் கூறியவள் சிறுமலரை பார்த்து சிரித்தபடி,

"ஹாய் ஏஞ்சல் வாங்க வாங்க.." என்று இரு கை நீட்டி அழைத்தாள்.

ஆராவிற்கு அகல்யாவின் முகத்தை பார்த்ததும் சிரித்தபடி தன் தாயை பார்த்தாள்.

ரூபினி அவளை பார்த்து தலையசைக்கவும் ஓடி சென்று அகல்யாவின் கரங்களுக்குள் தன்னை புகுத்தி கொண்டாள்.

ஆராவை இறுக்கி அணைத்தவளுக்கு கண்களில் கண்ணீர் சுரந்தது.

அதை பார்த்த ரூபினி சிரித்தபடி,

"ம்ம் போதும் போதும் அத்தையும் மருமகளும் கொஞ்சினது.. அங்கே பாருங்க குட்டி யாருடா இதுன்னு முழிக்கிறதை.." என்று நவிஷ் அருகில் சென்றவள்,

"ஹாய் குட்டி இப்போ வலி பரவாயில்லையா குட்டி.." என்றாள் அன்போடு.

அவனோ யார் என்று புரியாமல் என்ன பதில் சொல்வது என்ற எண்ணத்தில் தன் தாயை பார்த்தான்.

அவளோ புன்னகைத்தபடி, "நவி கண்ணா இவங்க நம்ம ஆதவன் சார் இருக்காங்க இல்லை அவங்க ஓய்ப் பா.." என்றாள் சிரித்தபடி.

அதை கேட்ட ரூபினி, "சத்தியமா சொல்றேன் அகல்யா நீங்க இனிமே என்னை அறிமுகப்படுத்த வேணாம்.. நானே அறிமுகம் ஆயிக்கிறேன்.." என்று சொல்லவிட்டு


"ஹாய் நவி குட்டி நான் உங்களோட புது அத்தை.. அப்புறம் உங்க மாமா இன்னும் கொஞ்ச நேரத்துல வருவாங்க.. சரி வாங்க நாம பிரஷ் ஆயிட்டு பால் குடிக்கலாமா.." என்ற படி அவனுக்கு தண்ணீர் வைத்து முகத்தை துடைத்து அவனுக்கு பாலை புகட்டினாள்.

அவள் இதை செய்ய அவன் புன்னகை செய்த படி, "தேங்க்ஸ் அத்தை.." என்றான் இயல்பாய்.

அதை கேட்டவளுக்கு சிரிப்பு வர அவனின் தலையை காயத்தில் படாதவாறு கலைத்து விட்டு அகல்யாவிடம் திரும்பினாள்.

அகல்யாவோ, "அண்ணி பாப்பா பேரு என்ன.." என்றாள் சிரித்தபடி.


ஆத்ரா என்று சொல்லியபடி உள்ளே வந்தான் ஆதவன்.. அவனுடனே அகஸ்டினும் வந்தான்.

உள்ளே வந்த ஆதவன் சிரித்தபடி, "என்னம்மா உன் மருமக பேரு பிடிச்சிருக்கா.." என்றான் ஆராவை வாங்கியபடி.

" ம்ம் ரொம்ப நல்லாருக்கு அண்ணா.. ஆத்ரா னா நட்சத்திரம் போன்றவள் இல்லைங்க அண்ணா.." என்றாள் சந்தோஷமாய்.

" யாரு அண்ணா இந்த பேரு செலக்ட் பண்ணது.." என்றாள் மேலும்.

"இதோ இவரு தான் மா செலக்ட் பண்ணாரு.." என்றபடி தன் பக்கத்தில் இருந்த அகஸ்டினை காமித்தான்.

ஆனால் அகஸ்டினின் பார்வையோ கட்டிலில் படுத்திருந்த நவிஷின் மேல் இருந்தது.

அதை கவனித்த ஆதவன் அவனின் கைகளை பிடித்து நடப்பிற்கு கொண்டு வந்தான்.

மாமா என்ற குரலுடன் ஆரா அவனிடம் தாவி கொண்டாள்.

அவளை கையில் வாங்கியவன் அவளை தூக்கி கொண்டு நவிஷின் அருகில் சென்றான்.

அவனை பார்த்து, "இப்போ எப்படி பா இருக்கு.. இன்னும் வலி இருக்கா.." என்றான் மென்மையான குரலில்.

அவனின் மென்மை பொதுவாக எல்லோரிடமும் வெளிப்படாது.. ஆராவிற்கு அடுத்ததாக அவன் காட்டிய மென்மை நவிஷிடம் தான்.

அந்த குட்டியும் அகஸ்டினின் கண்களில் எதைக் கண்டதோ, "இல்லை வலிக்கலை.." என்றான் மெனுபுன்னகை சிந்திய படி.


அதே நேரத்தில் அங்கே ஆதர்ஷிம் எழுந்து வந்தான்.

வந்தவன் அங்கே நிறைய பேர் இருப்பதை பார்த்து முழித்தான்.. அவனுக்கு அகஸ்டினையும் ஆதவனையும் நன்கு தெரியும்.. தான் படிக்கும் பள்ளியின் நிர்வாகிகள் என்று.. ஆனால் புதிதாய் தன் தாயின் வயதில் இருக்கும் ஒரு பெண்ணும் ஒரு குட்டி குழந்தையும் புதிது.

இங்கே பாளையூர் கிராமத்தில் கருணாகரனின் இல்லத்தில் நின்றிருந்தாள் அகல்யாவின் மாமியார் பவளம்.


"அய்யா நீங்க என்ன பண்ணுவீங்களோ தெரியாது.. அந்த சிறுக்கிய இங்கே சீக்கிரம் கொண்டு வரனும்.. என் பேரப்பசங்களை பாக்க விடமாட்றா.. ஆனா அவ திரும்பவும் இங்க வந்து எனக்கும் என்ற குடும்பத்துக்கும் வேலை செய்யனும்.. என்ற பையன்.போயிட்டா இவ ஆட்டத்துக்கு அளவே இல்லாம போச்சி.. பொசங்கெட்ட சிறுக்கி.." என்று அகல்யாவை வறுத்தெடுத்தவள் அவளை எமனின் கைக்கு தாரை வார்த்துவிட்டாள்.




நிழலை வருடும் நிஜம் தொடரும்..🌹


அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு கமெண்ட் லைக் பண்ண பட்டூஸ்க்கு நன்றி
 

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
255
144
43
Theni
மாமியாருக்கெல்லாம் என்ன கொம்பு முளைக்குமோ
 

Vimala

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 10, 2023
104
44
28
Trichy
ஐ திங்க் இவன் எதையோ மறைக்கிறான்