பள்ளி முடிந்ததும் தன் வண்டியை எடுத்துக் கொண்டு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு கேட்டின் வெளியே வந்த அகல்யாவுக்கு மற்றொரு அதிர்ச்சியாய் அங்கே கருணாகரன் நின்றிருந்தான்.
அவனைப் பார்த்ததும் அவளின் உடல் நடுங்க ஆரம்பித்தது.. அவனின் கொடுங்கோலை நேரில் கண்டவளுக்கு உடல் நடுக்கம் வராமல் இருந்தால் தான் அதிசயம்.
அவனை கண்டவளின் கண்களில் கண்ட அந்த மிரட்சியை கண்டு கொடுங்கோலனின் கண்களில் அளவற்ற சந்தோஷம் வந்தது.
அவள் தன்னிடமிருந்து தப்பித்து வந்த இத்தனை வருடம் ஆகியும் அவளின் உடல் பயத்தில் நடுங்குவது கண்டு அவனுக்கு வெற்றி பெற்றதாக நினைத்தான்.
ஒரு பெண்ணின் பலவீனத்தை பயன்படுத்தி அவளை நடுங்க செய்யும் ஆண்மகன் கோழை என்பதை அறியாமல் போனான்.. ஆனால் அவளாலேயே அவன் அழிவு உண்டு என்பது அவன் அறியாததே.
தன் வண்டியை நிறுத்தி விட்டு உடல் நடுங்கியபடி இறங்கி நின்றாள்.. அவளின் பின்னே அவளின் மகன்களும் யாரென்று தெரியாமல் நின்றனர்.
பள்ளி முடிந்து அனைவரும் ஓரளவு போய்விட்டனர்.. அங்கே இருந்த ஒரு சிலரும் அவளின் நடவடிக்கையை கவனிக்கவில்லை.
அவளருகே வந்தவன் அவளை பார்த்த பார்வையில் நிச்சயம் தவறாய்த்தான் இருந்தது.
அவளை உச்சி முதல் உள்ளங்கால் வரை பார்க்க அதில் உடல் கூசியவள் வெறுப்புடன் கீழே குணிந்து கொண்டாள்.
அவளின் அருகே வந்தவன் அவள் காதுகளில் குணிந்து, "ம்ம் முன்னை விட இப்போ ரொம்பவே அழகா தான் இருக்க.. யாருக்காகடி இந்த அழகு கூடிட்டு போகுது.. ஒரு விதவை நீ.. ஆனா அந்த நெனப்பு கொஞ்சமும் இல்லாம இப்படி புது துணி உடுத்திட்டு சீவி சிங்காரிச்சு யாருக்கு காத்திருக்க.. ஒரு வேளை இங்கே வந்து எவனையும் புடிச்சிட்டியா.. எவனோ உனக்கு ஒருத்தன் ஆதரவு கொடுக்கறானாமே.. எத்தனை ராத்திரி அவனோட இருந்த.. அதையே தான் நானும் கேட்குறேன்.. எவ்வளவு பணம் வேணுமோ சொல்லு நானும் தர்றேன்.. தெனம் ராத்திரி மட்டும் வா வச்சிக்குறேன் உன்னை.." என்று அதற்கு மேல் அவள் காதுகளில் பேசியது எல்லாம் வரம்பு மீறிய வார்த்தை.
அவள் காதுகளில் ஒலித்த அந்த நாராசமான வார்த்தையை கேட்டு அவளுக்கு அவளை மீறிய கண்ணீர் வந்தது.
அருகில் இருந்த அவளின் மகன்களுக்கும் புரியவில்லை.. ஆனால் தாயின் நடுங்கிய தோற்றம் அவர்களுக்கு ஏதோ விபரீதம் என்று மட்டும் உணர்ந்தனர்.
மேலும் அவளின் காதுகளில் என்ன கூறியிருப்பானோ என்னவோ குணிந்திருந்தவள் முகம் சிவக்க நிமிர்ந்தவள் எதையும் பார்க்காமல் அவனின் கண்ணத்தில் தன் கைகளை இறக்கினாள்.
அடி வாங்கியவன் அவளை கொன்று போடும் அளவுக்கு முறைத்தான்.. ஆனால் அடுத்த நொடி அவளை கண்ணத்தில் அறைந்திருந்தான் அரக்கன்.
ஆடவனின் பலத்திற்கு முன்னால் பெண்ணவளின் மென்மை தாங்கிய உடல் அந்த அடியை தாங்க முடியாமல் கண்கள் சொருக கீழே விழுந்தாள்.. அவள் கீழே விழவும் பிள்ளைகள் இருவரும் அவளருகில் வந்து தட்டி எழுப்ப முயன்றனர்.. நவீஷ் கருணாகரனை தன் பிஞ்சு கையால் அடித்துக் கொண்டிருந்தான்.. அவனின் அடி அரக்கனுக்கு ஒத்தடம் கொடுப்பது போல் இருந்தது போல் சுலபமாக அவனின் கையை பிடித்து பிஞ்சென்றும் பார்க்காமல் அவனை கீழே தள்ளினான்.
அவன் கீழே விழவும் பெரியவனும் அவனை அடிக்க முயன்றான்.. ஆனால் அவனையும் தூசி தட்டுவது போல் தள்ளிவிட்டான்..
அவள் கீழே கிடக்க அவளை வஞ்ச கொண்டு பார்த்தவன் அவளிடம் குணிந்து,
"என்னையே அடிச்சிட்டியாடி.. பாக்குறேன் டி உன்னை யாரு என்கிட்ட இருந்து காப்பாத்த போறான்னு.." என்றவன் மீண்டும் அவளின் தலை முடியை பிடித்து அடித்தவன் அவள் மயங்கி கீழே விழுகவும் அவன் ஆட்களிடம் கண்ணை காட்டவும் தாயின் கண்ணத்தை தட்டி எழுப்ப முயன்ற இரு பிள்ளைகளையும் தூக்கி வண்டியில் கிடத்தினர்.
அவளை பார்த்தவன், "என் மேல கை வைக்குற அளவுக்கு வந்துட்ட இல்லை.. உன் பிள்ளைகளை என்கிட்ட இருந்து எப்படி காப்பாத்துறன்னு பாக்குறேன் டி.. அவனுங்கள தேடி வருவே இல்லை.. அன்னைக்கு உன்னை நரக வேதனையை அனுபவிக்க வைப்பேன் டி.. என் மேல கை வச்சதுக்கு ஒவ்வொரு நாளும் உனக்கு நரகத்தை காட்டுவேன் டி.." என்று மயக்கத்தில் இருந்தவளிடம் உருமிவிட்டு சென்று விட்டான்.
மயக்கத்தில் இருந்தாலும் அவனின் ஒவ்வொரு சொல்லும் பெண்ணவளின் மனதை தாக்க, "ஆண்டவா என் பிள்ளைகளை காப்பாத்தி கொடுப்பா இந்த அரக்கன் கிட்டேர்ந்து..' என்று கடவுளிடம் மன்றாடியவள் முழுதாய் மயங்கி போனாள்.
அதே நேரம் கதவை சாத்தவென வந்த வாட்ச்மேன் இவள் கீழே விழுந்து கிடப்பதை பார்த்து விட்டு வேகமாய் ஓடி வந்தவர் இவளை பார்த்து பதறி விட்டு வேகமாய் போய் அகஸ்டினுக்கு கால் செய்தார்.
அதே நேரம் ஏதோ பிஸ்னஸ் மீட்டிங்கில் இருந்தவன் மொபைலை சைலண்டில் போட்டு வைத்திருந்தான்.. அகஸ்டின் எடுக்காமல் போகவும் உடனே ஆதவனுக்கு அழைத்து விட்டார்.
அப்பொழுது தான் கன்ஸ்ட்ரக்ஷன் சைட் பார்த்து விட்டு வந்தவனின் மொபைல் அடிக்கவும் யாரென பார்க்க அது பள்ளியின் வாட்ச்மேன் நெம்பர் என தெரிந்ததும் உடனே அட்டெண்ட் செய்தான்.
அவன் அட்டெண்ட் செய்த அடுத்த நொடி அவர் கூறிய விடயத்தில் பதட்டத்துடன் வண்டியை பள்ளியின் பக்கம் திருப்பியவன் உடனே அகஸ்டினுக்கு கால் செய்தான்.
மீட்டிங்கை முடித்து விட்டு தன் அறைக்கு வந்தவன் மொபைலை எடுக்கவும் ஆதவனிடமிருந்து கால் வரவும் சரியாக இருந்தது.
அட்டெண்ட் செய்து காதில் வைத்தவனுக்கு அதிர்ச்சியில் எழுந்து நின்று விட்டான்.
உடனே வருவதாக சொல்லி கால் கட் பண்ணியவன் வேகவேகமாய் பதட்டத்துடன் வெளியேறினான்.
அவன் எப்பொழுதும் அப்படித்தான் என்பதால் அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
அவனின் சிந்தனை எங்கெங்கோ சென்றது..
பள்ளிக்கு மின்னல் வேகத்தில் ஆதவனுக்கு முன்னே வந்திருந்தான் அகஸ்டின்.
அலுவலகமும் பள்ளியும் பக்கம் என்பதால் அகஸ்டின் முன்னே வந்துவிட்டான்.. ஆதவன் சைட் பார்க்க போன இடம் தூரம் என்பதால் முன்பே அகஸ்டினிடம் கூறிவிட்டான்.. அவன் வந்து அவளை தூக்குவதற்கும் அங்கே ஆதவன் வருவதற்கும் சரியாக இருந்தது.
"அகஸ் என்னடா ஆச்சி.. ஏன்டா இப்படி இருக்கா.. குடு நான் தூக்கிக்குறேன்.." என்று அவளை வாங்க முற்பட,
"ஆதவ் நான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன்.. நீ இங்கே என்ன நடந்துச்சின்னு முதல்ல பாரு.. பசங்களை வேற காணோம்.." என்றவனின் குரலில் இருந்த அழுத்தம் புயலுக்கு முன்னே வரும் அமைதியாய் இருந்தது.
அவனை அவளுடன் அனுப்பி விட்டு இவன் வாட்ச்மேனிடம் விசாரித்தான் என்ன நடந்தது என்று..
அவருக்கும் சரியாக தெரியவில்லை யாரோ ஒரு ஆள் வந்து அவளிடம் பேசியது மட்டும் தெரியும் என்று கூறியவருக்கு அவர்கள் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை.
தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு அகல்யா நார்மல் ஆக இருந்ததால் அதற்கு மேல் அவரும் அவர்களை கவனிக்கவில்லை.. உள்ளே வேலை என்று போய் விட்டார் என்று கூறினார்.
அவர் கூறியதில் எதுவும் தெரியாது போனாலும் முன்னாடி கேட்டில் இருக்கும் கேமிராவை செக் செய்தால் தெரியும் என்று உணர்ந்தவன் உடனே ஆதவனிடம் இத்தகவலை கூறினான்.
அவனை மருத்துவமனைக்கு உடனே வருமாறு கூறியவன் ரூபினியை அழைக்குமாறு கூறிவிட்டு வைத்தான்.. போனை வைத்தவன் கண்கள் இரண்டும் சினத்தில் சிவந்நிருந்தது.
அவன் முன்பே அந்த கேமிராவை பார்த்து விட்டான்.. அதில் தெளிவாக தெரிந்திருந்தது வந்தவன் அகல்யாவிற்கு தெரிந்தவன் என்று.. ஆனாலும் அவன் அவளிடம் என்ன பேசினான் என்பது தெரியவில்லை என்றாலும் அவன் ஏதோ கூறியிருக்க அதற்கு அகல்யா அடித்தது முதல் கொண்டு அவன் அகல்யாவை துன்புறுத்தி பிள்ளைகளை இழுத்து சென்றது வரை அதில் பதிவாகியிருந்தது.. அதுமட்டும் இல்லாமல் ஒரு அனாதையாய் அகல்யா மயக்கத்தின் பிடியில் இருந்தது வரை அங்கே பதிவாகியிருந்தது.
அதைக் கண்டவன் விழிகள் இரண்டும் ரத்தமென சிவந்திருந்தது..
சற்று நேரத்தில் எல்லாம் ரூபினியுடன் ஆதவன் பதட்டத்துடன் வந்து சேர்ந்திருந்தான்.
அகஸ்டின் அங்கே இறக்கத்துடன் அமர்ந்திருக்க இருவரும் வேகமாய் வந்து அவனிடம்,
"மச்சான் என்னடா ஆச்சி.. எப்படி டா இருக்கா.. பசங்க எங்கடா போனாங்க.." என்ற ஆதவனின் எந்த ஒரு கேள்விகளுக்கும் பதில் சொல்லாமல் அமைதியாய் அமர்ந்திருந்தான் அகஸ்டின்.
அவனின் இறுக்கம் இருவருக்கும் எதையோ உணர்த்தியது.
சிறிது நேரம் இருவரும் அமைதியாய் அமர்ந்தனர்.. ஆனால் சில நொடிகளில் ரூபினி எழுந்து அகஸ்டின் அருகில் வந்து அமர்ந்தாள்.. அவள் அவன் தோளில் கை வைத்தது தான் தாமதம் அவளின் தோளில் சாய்ந்து விட்டான்.
அவள் மெதுவாய் அவனிடம், "அண்ணா ஒன்னுமில்லை எல்லாம் சரியாகிடும் அண்ணா.." என்றாள் ஆறுதலாய்.
ஆனால் எதுவும் பேசாமல் இருந்தவன் சற்று நேரத்தில், "சரி ஆகனும் மா.. இல்லை சரி ஆக்கிடுவேன்.. அதுக்கு இவள் வாயை திறந்து உண்மையை சொல்ல வேண்டும்.." என்றான் கட்டளையான குரலில்.
இருவருக்கும் எதுவோ விளங்கியும் விளங்காமலும் இருந்தனர்.. கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் அர்த்தமாய் பார்த்துக் கொண்டனர்.
இங்கே கருணாகரன் பிள்ளைகளை கடத்தி வந்தது துவாரகனின் காதிற்கு சென்றது.. அவனுக்கு அவன் தங்கையின் நினைவு வந்தது.
ஏன் பிள்ளைகளை மட்டும் அழைத்து வந்துள்ளான் என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் அவன் அழைத்து வரவில்லை.. கடத்தி வந்துள்ளான் என்பதை அவன் அறியவில்லை.
உடனே தன் தங்கைக்கு தான் அழைப்பு விடுத்தான்.. ஆனால் அவளின் எண் அனைத்து வைத்திருப்பதாக தகவல் வரவும் இவனுக்கு ஏனோ மனம் நிலை கொள்ளாமல் தவித்தது.
உடனே அகல்யாவை காண வேண்டும் என்ற எண்ணம் வலுத்தோங்க அடுத்த நொடியே கிளம்பி விட்டான் துவாரகன்.
ஆனால் அவனின் தங்கையோ நினைவு இல்லாமல் மருத்துவமனையில் இருக்கிறாள்.
அவள் வேலை செய்யும் பள்ளியில் வந்து விசாரித்தவனுக்கு அவள் மருத்துவமனையில் அனுமதித்த தகவல் கிடைக்கவும் மருத்துவமனையை நோக்கி ஓடினான் உயிர் துடிக்க.
அகல்யாவை தேடி யார் வந்தாலும் மருத்துமனை தகவலை சொல்ல வேண்டாம் என்று வாட்ச்மேனிடம் சொன்ன அகஸ்டின் துவாரகன் வரவை அறிந்து அவள் இருக்கும் இடத்தை கூறுமாறு சொன்னான்.
மருத்துவமனை வந்தவனுக்கு மற்றொரு அதிர்ச்சியாய் அங்கே சிலையாய் சுவற்றை வெறித்தபடி அகல்யா அமர்ந்திருந்தது அவனுக்கு மேலும் வலியை கொடுத்தது.
அவளை கண்டவன், "அய்யோ அம்மு ஏன்டா இப்படி இருக்கு.. என்னடா அப்படி பாவம் செஞ்ச இப்படி தண்டனை அனுபவிச்சுட்டு இருக்க.. இன்னும் உன் தண்டனை காலம் முடியவில்லையா.. அய்யோ கடவுளே இந்த பிள்ளை மேல உனக்கு இரக்கமே இல்லையா.. இப்படி சோதிக்குற.. இன்னும் இவ உயிரோட இருக்கறது தான் மிச்சமா.." என்று கத்தி கதறினான்.
அப்படி கதறியவன் முன்னே அகஸ்டினும் ஆதவனும் வந்து நின்றனர்.. அடுத்த நொடி அகல்யாவின் வாழ்க்கையை கேட்டவர்களுக்கு கண்ணீர் தான் வழிந்தோடியது.
அவளை பற்றி இருக்கும் தெரியாது.. ஆனால் தெரிந்து கொண்ட உண்மை அகஸ்டினின் உள்ளத்தை கூர் வாள் கொண்டு தைத்தது.
நிழலை வருடும் நிஜம் தொடரும்..
அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு கமெண்ட் லைக் பண்ண பட்டூஸ்க்கு நன்றி..