அகல்யாவிற்கு திருமணம் முடிந்து மூன்று மாதம் முடிந்திருந்தது.. ஆனால் அவளுக்கோ மூன்று யுகம் கடந்ததை போல் உணர்ந்தாள்.. இந்த மூன்று மாதத்தில் அவளின் வாழ்வே தலைகீழாய் மாறிப் போனது.
தினேஷ் அவளிடம் மனம் விட்டு பேசவில்லை.. ஆனால் உடல் தேவையை தீர்க்க அவனுக்கு அவள் வேண்டும்.
அவன் தேவை உடல் மட்டும் தான்.. பணம் கொடுத்து போனாலும் நினைத்த நேரம் அனுபவிக்க முடியாமல் தடுமாறியவனுக்கு மனைவி என்ற பெயரில் வீட்டிலே இருந்தது அவனுக்கு பெரும் சந்தோஷம் தான்.. முக்கியமாய் பணம் விரயம் இல்லை..
அதிகாலை நான்கு மணிக்கு எழுந்தால் வீட்டில் அத்தனை வேலையும் அவள் தான் செய்ய வேண்டும்.. பவளமோ தான் குடிக்கும் காபி டம்ளரை கூட கழுவி வைக்க மாட்டாள்.. அவளின் மாமனாருக்கு நாக்குக்கு ருசியாய் நன்றாய் சமைத்து போட வேண்டும்.
ஏன் இப்பொழுது எல்லாம் அவளின் மிகப்பெரிய சந்தோஷமான அந்த கடவுளை கூட வணங்க நேரம் இல்லை.. ஆனால் கிடைக்கும் நேரத்தில் கையெடுத்து விடுவாள்.
இதோ இந்த காலை வேலையில் கணவனுக்கு காபி கலந்து கொண்டிருந்தவளின் பின்னே இரு கைகள் அவளின் பின்பக்கத்தை உரசியது.
திடுக்கென்று பார்த்தவளின் பின்னே அவளின் கணவன் தான் நின்றிருந்தான்.
வடநாட்டு பக்கம் சரக்கு லாரியை எடுத்து போனவன் பத்து நாட்கள் கழித்து இப்பொழுது தான் வந்தான்.
மாதத்தில் ஆறு நாள் ஏழு நாள் வீட்டிற்கு வந்துவிடுவான்.. அந்த ஒரு வாரமும் பெண்ணவளுக்கு வலி தான் கூடுமே தவிர பாசமாய் ஒன்றும் பேசமாட்டான்.
ஏன் இதுவரை அவளருகில் அமர்ந்து அவளின் ஆசை கனவுகளை கூட தெரிந்து வைத்துக் கொள்ளவில்லை.. இரவில் அவளுடன் கூடுவதை தவிர அவனுக்கு அவளை பற்றி வேறு எதுவும் தெரியாது.
ஆனால் வண்டிக்கு போகும் சமயங்களில் எல்லாம் அங்கே பணம் கொடுத்து தன் இச்சையை தீர்த்துக் கொள்பவன் இவளிடம் வந்து,
"எத்தனை பொண்ணுங்க கிட்ட போனாலும் உன் அளவுக்கு யாரும் சுகத்தை கொடுத்துட முடியாதுடி.. ஆனாலும் நேத்து ஒருத்தியோட இருந்தேன் இல்லை.. சப்பா அவ என்ன ஸ்டரெக்சர் தெரியுமா டி.." என்று அவளின் காதுகள் கூசும் அளவுக்கு பேசுபவன் அவளின் மனநிலையை கவனிக்காமல் ஆண்டு அனுபவிப்பான்.
அதே கேட்பவளுக்கு தன்னை அவன் வேசியுடன் ஒப்பிட்டு பேசுவது அருவருப்பை தரும்.
கட்டிய மனைவியை பணத்திற்கு விலை போகும் விலைமாதுவுடன் ஒப்பிட்டு பேசும் கணவன்.. ஆனால் இது எதுவும் அவன் வீட்டிற்கு தெரியாமல் நல்ல பிள்ளை போல் இருந்து கொள்வான்.
அவனை ஏதோ உத்தமன் என்பது போல் வீட்டிலுள்ளவர்கள் அவனை தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்.
இதோ இப்பொழுதும் வந்ததும் அவள் அவனுக்கு தேவை.. இவளுக்கோ இன்னும் வீட்டில் உள்ளவர்களுக்கு காபி என்று எதுவும் கொடுக்கவில்லை.. இதை கணவனிடம் சொல்லவும் முடியாது.. எங்கே அதை சொன்னால் தன்னால் வீட்டில் சண்டை வருமோ என்று பயம்.. அதற்கு பயந்தே வீட்டில் அவள் எதுவும் சொல்வதில்லை.
அவளின் கணவனின் தம்பி திருமணத்தில் அவனை பார்த்து தான்.. அதன் பின்பு எங்கேயோ வெளியூரில் வேலையில் இருக்கிறான்.. அவன் வரமாட்டான் பெற்றவர்கள் சென்று பார்த்து வருவார்கள்.
உடல் நடுக்கத்துடன் நின்றிருந்தவளை பின்னிருந்து அணைத்தவனின் கரங்கள் எல்லை மீறியதை தடுக்க முடியாமல் பெண்ணவள் கண்ணீருடன் நின்றாள்.
"வா ரூமுக்கு போலாம்.." என்று பொம்மையாய் நின்றிருந்தவளை இழுத்து சென்றான்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் வந்தவள் வாடி வதங்கிய கொடியாய் வந்தாள்.
உடல் வலியுடன் சேர்ந்து போய் இருந்தவளின் முன்னே அவளின் மாமியார் வந்து நின்றாள்,
"ஏய் அகல்யா எவ்வளவு நேரம் ஆகுது.. இன்னமும் காபி கூட கொண்டு வராத அப்படி என்னடி வேலை.." என்று கத்தியபடி வந்தாள்.
அவளின் குரலில் நனவுக்கு வந்தவள் தன் வலியை விடுத்து வேகமாய் காபியை போட்டு அவளுக்கு கொடுத்து விட்டு அடுத்த வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.
அடுப்படி வேலையை முடித்து விட்டு கணவனுக்காக சாப்பிடாமல் காத்திருந்தாள்.. அவன் இங்கே இருக்கும் நாளில் எல்லாம் அவன் சாப்பிட்ட பின்பு தான் இவள் சாப்பிட வேண்டும்.. இது பவளத்தின் உத்தரவு.
பதினோரு மணிக்கு அவளின் கணவன் எழுந்து வந்தான்.. அவன் குளித்து விட்டு வரவும் அவனுக்கு பரிமாறினாள்.. அவன் சாப்பிட்டு எழுந்து அவனின் நண்பர்களை காண சென்றான்.. அதன் பிறகு தான் இவள் உணவருந்தியது.
காலை உணவு பதினோரு மணி என்றானது.
நாட்கள் ஓடியது தெரியாமல் வருடம் கடந்து விட்டது அகல்யா திருமணம் முடிந்து.. இதுவரை எத்தனையோ விடயங்களை கடந்து வந்தவளால் மலடி என்ற சொல்லை கடந்து வர முடியவில்லை.
கிராமத்தில் பொதுவாக திருமணம் முடிந்து ஒரு வருடத்தில் பிள்ளை செல்வம் கிட்டி விட வேண்டும்.. இல்லையேல் இது எல்லாவற்றிற்கும் அந்த பெண் தான் தலைகுனிந்து நிற்க வேண்டும்.. ஆனால் அந்த ஆணை இந்த சமூகம் எதுவும் சொல்லாது.
ஏன் பவளமே அவளை மல்டி என்று எத்தனையோ இடங்களில் அவமானபடுத்தினாள்.
பிறந்த வீட்டிற்கு அதிகம் செல்லவும் முடியாது.. அவர்களும் இங்கே வந்தால் மரியாதை இருக்காது.. அதனால் அவர்களையும் இங்கே வர விடமாட்டாள்.
அத்தனை வலிகளையும் தனக்குள்ளே அடக்கி கொள்வாள்.. ஏன் வாய்விட்டு அழவும் மாட்டாள்.
கண்ணீர் நம்மை பலவீனப்படுத்தும் என்று எதிலோ படித்த நினைவு அதனால் வீணாக கண்ணீரை சிந்த மாட்டாள்.
மனநிலை சரியில்லாமல் தவிக்க கோவிலுக்கு சென்றாள் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்ற நினைத்தவள் தன் மாமியாரிடம் கெஞ்சி பெருமாள் கோவிலுக்கு சென்றாள்.
கோவிலுக்கு சென்று அந்த பெருமாளை வணங்கியவள் கோவில் தூணில் சாய்ந்து அமர்ந்தாள்.
அப்பொழுது அங்கே ஒரு ஐந்து வயது மழலை நாட்டிய டிரசில் அழகாய் அபிநயம் பிடித்து ஆடிக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு முன்னே அவளின் குடும்பம் அமர்ந்து ரசித்து கொண்டிருந்தது.. ததக்கா பிதக்கா என தன் சின்னஞ்சிறு விரல்களை அபிநயம் பிடித்து ஆடும் அழகே கண்ணை கவர்ந்தது.
ஒரு இடத்தில் காலை தூக்கி ஆடும் போது அச்சிறு மழலை கீழே விழுந்து விட்டாள்.. ஐந்து வயது மழலை கீழே விழுந்தால் அழத்தானே செய்யும்.. ஏனோ அச்சிறு பெண் அழுதது பெண்ணவளுக்கு வலியை கொடுத்தது.
உடனே பதட்டம் தாளாமல் எழுந்து குட்டியின் அருகே ஓடுவதற்குள் அவளின் தாயும் ஓடி வந்து அவளை அள்ளிக் கொண்டார்.
அவளின் கண்ணீரை துடைத்துக் விட்டு அவளை சமாதானம் செய்தாள்.. குட்டியோ அழுகையை நிறுத்தாமல்,
"மம்மி பாப்பா தான்ஸ்.." என்றாள் கொஞ்சும் மொழியில்.
அவளால் டான்ஸை முடிக்க முடியவில்லையாம்.. அந்த வருத்தம் கீழே விழுந்த வலி என நிறுத்தாமல் அழுது கொண்டே இருந்தாள்.
அவளை சமாதானம் செய்ய முடியாமல் அவள் தாய் முழிக்க மீண்டும் அங்கே பாட்டு சத்தமும் கொலுசு சத்தமும் கேட்டது.
தாயும் மகளும் யாரென்று பார்க்க அங்கே அகல்யா புடவையை தூக்கி சொருகியபடி தன் கைகளை அபிநயம் பிடித்து ஒலித்த பாடலுக்கு ஏற்றார் போல் ஆடிக் கொண்டிருந்தாள்.
நின்னயே ரதி என்று நினைகிறேனடி கண்ணம்மா!
தன்னையே சகி என்று சரணம் எய்தினேன் !… கண்ணம்மா!….(நின்னையே!)
பொன்னயே நிகர்த்த மேனி, நின்னையே நிகர்த்த சாயல்!..
பின்னையே,, நித்ய கன்னியே! கண்ணம்மா!….. (நின்னையே!)
மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீச நீ!
கண் பாராயோ! வந்து சேராயோ!… கண்ணம்மா! …… (நின்னையே!)
யாவுமே சுகமினிகோர் ஈசனாம் எனக்கும் தோற்றம்!
மேவுமே!, இங்கு யாவுமே கண்ணம்மா….. (நின்னையே!)
என்று பாரதியாரின் வரிகளுக்கு ஏற்ப தன் அங்கசைவுகளையும் இமை அசைவுகளையும் நெகிழ்த்தி ஆடினாள் பெண் பாவை.
அதை பார்த்த அந்த சிறுமொட்டும் தன் வலியை மறந்து அழுகையை மறந்து கைத்தட்டி சிரித்தது.
ஏன் அங்கிருந்த எல்லோருக்கும் அவளுக்கும் இப்படி ஒரு திறமையா என வியந்து போயினர்.. பவளத்தின் மருமகளுக்கா இந்த திறமை என பார்ப்பவர் வியந்து போயினர்.
இதை சிலர் பொறாமையால் பவளத்தின் காதுகளுக்கும் போக அன்று வீட்டில் பெரிய போர்களமே நடந்தது.. அன்று முதல் இன்று வரை பெண்ணவள் காலில் அணியும் கொலுசும் கூட சத்தம் இல்லாமல் அணிந்தாள்.
இப்படி அவளின் வாழ்வை ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு ஏற்பவாறு மாற்றி அவளுக்கென ஒரு வாழ்வு இல்லாமலே போனது.
இப்படி அவளின் துரதிர்ஷ்டத்திலும் அவளுக்கு மகிழ்ச்சியை கொடுக்க வந்தவன் தான் ஆதர்ஷ்.
திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் கழித்து கருவறையில் உயிர் பெற்றான்.
எத்தனை கஷ்டங்கள் வந்த போதும் அவளின் வயிற்றில் அசைந்தாடும் அவளின் குழந்தைக்காக அவள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருந்தாள்.. யார் எதை கூறினாலும் அதை சிரித்தபடி கடந்து போக பழகி கொண்டாள்.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அவள் வயிற்றில் வளர்ந்தவனுக்கு ஒன்பதாம் மாதம் அவளின் பிறந்து வீடு வளைகாப்பு செய்து அழைத்துக் கொண்டனர்.
குழந்தைபேரு அவளின் தாய் வீடு தான் பார்க்க வேண்டும் என பவளம் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஒரு மழை நாள் இரவில் அவளின் மூத்த புதல்வன் இப்பூமியில் காலடி எடுத்து வைத்தான்.
தன் மகன் அவனை தூக்கி தழுவும் போது இதுவரை அடையாத ஆனந்தத்தை அடைந்தாள்.. ஆனால் அடுத்த மூன்றாவது மாதம் பவளம் அவளையும் பிள்ளையையும் அழைத்து வந்துவிட்டாள்.
அடுத்த நாளிலிருந்து மீண்டும் பழைய வாழ்வு தான்.. ஆனால் அந்த கவலையிலும் அவளை சிரிக்க வைக்கும் ஆயுதம் அவளின் மகன் தான்.
அதுவும் பால் கொடுக்கும் நேரமும் இரவு படுக்கும் நேரமும் தான் அவள் மகனுடன் கழிக்க முடியும்.. மீதி நேரத்தில் அவன் அழுதாலும் தூக்கி கொஞ்சவோ சமாதானம் செய்யவோ முடியாது.
அப்படி தூக்கிவிட்டாள் என்றாள் அடுத்த நொடி, "கைக்குழந்தை கையிலேயே வச்சிருந்தா கை சுகம் கண்டு போயிடும்.. கீழே போட்டுட்டு போய் வேலையை பாரு.. ஊரு உலகத்துல இல்லாத பிள்ளையை பெத்துட்ட மாறி கொஞ்சற.. போ போய் வேலையை பாத்துட்டு அப்புறம் ராவுக்கு கொஞ்சு.." என்று அதட்டி அனுப்பிவிடுவாள் மனசாட்சி இல்லாமல்.
அழும் பிள்ளையை அவளும் தூக்கி சமாதானம் செய்ய மாட்டாள்.. அது தொண்டை வறண்டு போகும் அளவுக்கு கத்தி அதையடைந்து விடுவான்.. அதைக் கண்ட பெற்றவுடன் உள்ளம் துடிக்கும்.. கண்களில் கண்ணீர் வழிய அழும் பிள்ளையை பார்த்துக் கொண்டே வேலை செய்வாள் அகல்யா..
இதில் இரவில் கணவன் தொல்லை வேறு.. அவனை அவளருகில் நெருங்க விட்டு.. அதன் விளைவு கைக்குழந்தை என்றும் பாராமல் அவளை தொந்தரவு செய்ய ஆரம்பித்தான்.. கோபத்தில் அவள் ஏதாவது கூறிவிட்டாள் அவள் கண்ணத்தில் அடித்து விட்டு,
"என்னடி என்னையே எதிர்த்து பேசுறீயா.. கொன்னுடுவேன் படுக்க சொன்ன படுக்கனும் டி.. விரிக்க சொன்னா விரிக்கனும்.. என்னை எதிர்த்து பேசுற வேலை வச்சிக்கிட்ட குழி தோண்டி புதைச்சிடுவேன்.. நீ எனக்கு வேசி தான் அதை முதல்ல நினைவுல வச்சிக்கோ.." என்று அவளை காயப்படுத்தி விட்டு அவளுடன் கூடுவான்.
எத்தனை கீழாக தன்னை நினைக்கிறான்.. அவன் குழந்தையை சுமந்த பிறகும் அவனுக்கு தன் மீதும் குழந்தை மீதும் பாசம் இல்லையா என்ன..
ஆதர்ஷ் பிறந்த இன்று நான்கு மாதத்தில் அவன் குழந்தையிடம் கொஞ்சினது கிடையாது.. அதை நினைத்து உள்ளம் வெதும்பி போனாள் பெண்ணவள்.
ஆதர்ஷ் பிறந்த ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் கருவுற்றாள் அகல்யா.. அங்கே தான் அவளின் வாழ்வில் விதி தன் கோர தாண்டவத்தை நிகழ்த்தியிருந்தது.
நிழலை வருடும் நிஜம் தொடரும்..
அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு கமெண்ட் லைக் பண்ண பட்டூஸ்க்கு நன்றி.