செங்கதிரோனின் தூய காலை ஒளியில் சிந்த தன் கண்களை சுருக்கி எழ முற்பட்டான் அகஸ்டின்.. இரவில் ஆதவன் கொடுத்த மாத்திரையின் வீரியம் இன்னும் அவனின் உடலில் இருந்தது.. ஆனால் எழ வேண்டுமே.. அவனவளையும் பிள்ளைகளையும் காண வேண்டுமே என்ற எண்ணம் வலுப்பெற தன் உடல் அசதியை மீறி எழுந்தான் அகஸ்டின்.
வேகவேகமாக கிளம்பியவனை அங்கிருந்த யாரும் ஒரு வாய் சாப்பிட்டு போ என்று கூறவில்லை.. எப்பொழுதும் போல் அதை தட்டி கழித்தவன் தன் காரை எடுத்துக் கொண்டு வேகமாய் ஆதவனின் வீட்டிற்கு சென்றான்.
அங்கே அப்பொழுது தான் எழுந்த ஆதவன் தன் மனைவியிடம் நேற்று நடந்ததை கூறினான்.. இரவு அவன் வருவதற்குள்ளாக அவள் உறங்கி விட்டாள்.
எல்லாவற்றையும் கூறியவன், "ரூபி இந்த அகஸ்டின் நம்மகிட்ட எதையோ மறைக்கிறான் டி.. அகல்யாவை இவனுக்கு முன்னமே தெரிந்திருக்க.. ஏன் நேத்து பசங்க அங்கே போனதுல இருந்து இவன் தான் அதிகமா துடிச்சான்.. இதுல எதுவோ இல்லை.. இப்போ வேனா நீங்க பாரு தூக்கம் சரியா தெளியாமலே அந்த நாய் இங்கே வந்து நிக்கும்.. சரி நீ போய் சீக்கிரம் அதுக்கும் சேர்த்து சமையல் பண்ணு.. அந்த வீட்ல அவ சாப்பிடலனா யாரு கேட்க போறா.. நான் போய் குட்டியை பாத்துட்டு கிளம்பி வர்றேன்.." என்று அவன் அறைக்குள் செல்லவும் இங்கே காலிங் பெல் அடிக்கவும் சரியாக இருந்தது.
இந்த நேரத்தில் யார் அது என்ற யோசனையில் வந்து கதவை திறந்தவள் நிச்சயமாக அகஸ்டினை அங்கே எதிர்பார்க்கவில்லை என்பதை அவளின் ஆச்சர்ய முகமே சொன்னது.
தன் கணவன் சொன்ன போது கூட இந்த காலையிலா அவர் வரப்போகிறார் என்ற எண்ணத்தில் இருந்தவளை உன் எண்ணமே தவறு என்னும் வகையில் அவன் முன்னே வந்து நின்றால் அவளுக்கு தான் சிரிப்பு வந்தது.
அவனை பார்த்ததும் தன்னவனின் அறிவை கண்டு வியந்தவள் வாய் விட்டு சிரித்து விட்டாள்.
எப்பொழுதும் தான் வீட்டிற்கு வந்தாள் தன்னை புன்னகையுடன் வரவேற்கும் தங்கையானவள் இன்று தன்னை ஏதோ அதிசய பிறவியை போல் பார்ப்பதை நினைத்து தன்னைத் தானே மீண்டும் ஒரு முறை நன்றாக பார்த்துக் கொண்டான்.
எல்லாமே சரியாகத் தானே இருக்கிறோம் என்று எண்ணியவனுக்கு தன் நண்பன் ஏதோ சொல்லி வைத்துள்ளான் என்பது புரிய தன்னை கண்டு சிரிக்கும் தன் தங்கையை முறைத்தான் பொய்யாய்.
" என்ன மா உன் புருஷன் நான் இப்போ வந்து நிப்பேன்னு சொன்னானா.. அது தான் இந்த சிரிப்போ.." என்றான் சுற்றிலும் தன் பார்வையை வீசியபடி.
" அட ஆமாண்ணா எப்படி இவ்வளவு கரெக்டா சொல்றீங்க.. நான் கிறுக்கி உங்க ரெண்டு பேரையும் தெரிஞ்சே இந்த கேள்விய கேட்குறேன் பாருங்க.. உள்ளே வாங்கன்னா அவரு மேலே ரெடியாயிட்டு இருக்காரு அண்ணா.. நான் போய் சமைக்குறேன்.. ரெண்டு பேரும் சாப்பிட்டு போவீங்க.." என்றபடி சமையலறைக்கு செல்ல முயன்றவளை,
"ரூபி நீ கிளம்பு வெளியே சாப்பிட்டுக்கலாம்.. போய் பசங்களையும் அகல்யாவையும் பாத்துட்டு நாங்க ஆபிஸ் போறோம்.. நீங்க ஈவ்னிங் வருவீங்க.." என அவர்களுக்கும் சேர்த்து அவனே முடிவெடுத்தான்.
அவனை வித்தியாசமாய் பார்த்தவள் சரி என்று மேலே தங்களின் அறைக்கு செல்லப் போனாள் அகஸ்டினை பற்றி வியந்தபடி.
இந்த அகஸ்டின் அவளுக்கு புதிது.. எதற்கும் யாரைப் பற்றியும் எதை பற்றியும் சிறிதும் கவலை கொள்ளாதவன் இன்று யாரோ பெற்ற பெண்ணின் பிள்ளைகளுக்காகவும் அவளுக்காகவும் இதோ இப்படி காத்திருக்கும் அகஸ்டின் கணவன் மனைவி இருவருக்குமே வித்தியாசமாய் தெரிந்தான்.
தங்களின் அறைக்கு வந்தவளை குளித்து முடித்து கண்ணாடி முன்னே நின்று தன் தலையை ஜெல் கொண்டு அடக்கியபடி மனைவியை பார்த்து, "என்ன உன்னையும் கிளம்ப சொன்னான.." என்று கேட்டான் ஆதவன்.
அவன் கேட்டதும் அவனை பார்த்து கையெடுத்து கும்பிட்ட படி,
"அய்யா ராசா போதும் உங்களோட ஒத்துமை.. என்னை பைத்தியாமக்காமா போய் உங்க பொண்ணை கிளப்புங்க.." என்றபடி அவனை பார்த்து சொல்லியவள், "இதுங்க ரெண்டும் ஆம்பளை பொம்பளையா பிறக்க வேண்டியது.. இப்படி பிறந்து என் உயிரை வாங்குதுங்க.." என்று முனுகிய படி குளியலைறைக்குள் சென்றாள்.
அவள் முனுகியது நன்றாகவே கேட்டது ஆதவனுக்கு.. இது எப்போதும் தன் மனைவியின் பொருமல் தான் என்றாலும் ஏனோ இன்று அது தவறானதாக தோன்றியது.. தன் நண்பனை தான் இன்னும் நன்றாக புரிந்து கொள்ளவில்லையோ என்ற எண்ணம் தான் தோன்றியது.
அறியா பருவத்திலிருந்தே இருவரும் உற்ற நண்பர்கள்.. என்னையறியாமல் அவனுக்கும் அவனறியாமல் எனக்கும் இதுவரை எந்த விதமான ஒளிவு மறைவும் இல்லை என்று தான் இதுவரை இவன் நம்பி கொண்டிருந்தான்.
ஆனால் இன்று தன்னையறியாமல் தன் நண்பன் மனதில் ஒரு பெண் இருக்கிறாள்.. இதை என்னவென்று சொல்வது.. நான் அவனை புரிந்து கொள்ளவில்லையா என்ன.
அவனுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்தேனே தவிர அவனுக்கும் மனது என்று ஒன்று உள்ளது என்பதை அறியாது போனேனா.. அவன் மனதில் ஒரு பெண் உள்ளாள் என்பதை அறியாது போனேனா.. என்றவனின எண்ணம் எங்கெங்கோ பறக்க அதற்கு தடைவிதித்தாற் போல், "அப்பா.." என்று அழகிய குரலுடன் அங்கே வந்தாள் ஆத்ரா.
அவளை பார்த்தவன் தன் மனதினை மகளின் புறம் திசை திருப்பி,
"அடடே வாங்க தங்கம் என்ன அதுக்குள்ள என் ஆரா குட்டி கிளம்பிட்டாங்க.. உங்களை யாருடா தங்கம் கிளப்புனது.. அம்மாவே உன்னை கிளப்பிட்டாளா தங்கம்.." என்றான் மகளை கொஞ்சியபடி.
"நோ அப்பா மாமா கிளப்புச்சு பாப்பாவ.." என்றாள் கிள்ளையாய்.
" ஓஓ உன் மாமா வேலையா.. சரி வாங்க மம்மி கிளம்பிட்டு வரட்டும்.. நாம மாமாகிட்ட போலாம்.." என்று மகளை தூக்கியபடி கீழே வந்தான்.
அங்கே அகஸ்டின் ஏதோ சிந்தனையில் ஷோபாவில் அமர்ந்திருந்தான்.
"அடேய் நல்லவனே என்னடா காலையிலே இங்கே விஜயம்.. ஏன் மச்சான் உனக்கு எதுவும் இல்லைல.." என்றான் கிண்டலாய்.
" எருமை எருமை என் பாடு உனக்கு கிண்டலா இருக்கா.. கொன்னுடுவேன் உன்னை.. சரி சாப்பிட வா.. சாப்பிடலாம்.." என்று அவனை சாப்பிட அழைத்தான்.
" எங்க என் பொண்டாட்டியை தான் சமைக்க வேணாம்னு சொல்லிட்டு இப்போ எங்க போய் பிச்சை எடுக்கறது நாயே.." என்றான் கடுப்பாய்.
"அடேய் மச்சான் அதல்லாம் எங்கேயும் பிச்சை எடுக்க போக வேணாம்.. நான் சமைச்சிட்டேன் வா சாப்பிடலாம்.." என்று குழந்தையை தூக்கியபடி டைனிங் டேபிள் சென்றான்.
தன் நண்பனை பின் தொடர்ந்தவன் அங்கே ஹாட் பாக்ஸில் இருந்த தோசையையும் தேங்காய் சட்னியுடன் இரு தட்டில் வைத்தவன் ஆராவை தன் அருகில் அமர்த்தி தோசையை சட்னியுடன் தேய்த்து அவளுக்கு ஊட்டி விட்டு தானும் உண்டான்.
ஆதவனும் அவனை பார்த்துக் கொண்டே சாப்பிட்டான்.. தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் தன் நண்பனின் மனம் அறியாதவனா அவன்.
அவனை நிமிர்ந்து பார்த்து, "எருமை என் மூஞ்சியிலா தோசை இருக்கு.. தட்டை பார்த்து சாப்பிடு பக்கி.." என்று முறைத்தான்.
"மச்சான் நான் உன்னை சரியா புரிஞ்சிக்கலையா டா.." என்றான் வெறுமையான குரலில்.
அவனின் குரலில் இருந்த வெறுமை அகஸ்டினை பாதித்தது.
இதுவரை தாய் தந்தை இல்லாமல் கூட இருந்ததுண்டு.. ஆனால் இன்று தன் நண்பனின் வெறுமையான குரலில் இருந்த கவலை அகஸ்டினுக்கு வலித்தது.
மச்சான் என்ன டா இது.. இதோ பாரு நடந்த எதுக்கும் யாரும் காரணம் இல்லை.. அவங்கவங்களோட விதி அது.. அவ்வளவு தான்.. நான் அகல்யாவை மீட் பண்ணி மிஸ் பண்ணது என்னோட விதி.. தட்ஸ் இட்.. இனாப் இப்படி நினைக்கிறதை முதல்ல நிறுத்து.. காலமும் நேரமும் தான் எதை நம்ம கையில் சேர்க்கும்கிறது.. ஏன் அவளோட இன்றைய நிலை மாற நாமா ஒரு உந்துதலா கூட இருக்கலாம்.. ஓகே வா..
கண்டதை நினைச்சி மீசை குழப்பிக்காத டா மச்சான்.." என்றான் ஆறுதலாய்.
தன் நண்பனின் ஆறுதலாய் சற்று தெளிந்த ஆதவன் சற்று நிம்மதியாய் சாப்பிட்டான்.
அதற்குள்ளாக கிளம்பி வந்த ரூபினியும் அவர்களுடன் உணவருந்த அமர்ந்தாள் தன் தமையனை முறைத்தபடி.
சாரி என்று முனுமுனுத்தான்.
அதை காதில் வாங்காதவள் சாப்பிட அமர்ந்து விட்டாள்.
அந்த அண்ணன் தங்கை சண்டையை கண்டும் காணாமலும் இருந்து விட்டான் ஆதவன்.
இவர்களின் நடுவே சென்று விட்டு யார் மூக்குடபட்டு வருவார்கள் என்ற எண்ணம் தான் காரணம்.
சற்று நேரத்திற்கெல்வாம் நால்வரும் கிளம்பினர் அகல்யாவின் வீட்டை நோக்கி.
நால்வரும் வந்து இறங்கவும் அங்கே அகல்யாவின் சத்தம் தான் கேட்டது.
" நவி குட்டி என்னடா ஆச்சி.. கொஞ்சமா சாப்பிடு தங்கம்.. அப்போ தான் மாத்திரை போட முடியும்.. அப்போ தான் காய்ச்சல் விடும் தங்கம்.." என்றாள் கொஞ்சியபடி.
"அம்மா கசக்குது எனக்கு வேணாம்... ப்ளீஸ் மா.." என்றான் அவனும் கண்கள் சொருக.
ஆம் நேற்று இரவு வந்ததிலிருந்து காய்ச்சல் நவிஷ்க்கு.. அதிர்ச்சியினால் வந்தது.. தன் தாயை இனி பார்க்க முடியாமல் போய் விடுமோ என்ற பயத்தில் வந்த காய்ச்சல்.
"சரி இப்போ என்ன பண்ணா நீ சாப்பிட்டு மாத்திரை போடுவ.. பாரு உன்னால நானும் அண்ணாவும் சாப்பிடவே இல்லை.." என்ற வார்த்தையில்
" சரிம்மா சாப்பிடறேன்.. ஆனா எனக்கு உன் பாட்டு வேணும்.. பாடுவியா மா.." என்றான் கெஞ்சலாய்.
" ஓஓ இவ்வளவு தானா.. ஓகே அம்மா பாடுறேன். . இப்போ ரெண்டு பேரும் சாப்பிடனும்.. ஓகே வா.." என்றாள் புன்னகையுடன்.
இருவரும், "டபுள் ஓகே மா.." என்றனர் கோரசாக.
அவர்களை பார்த்து புன்னகைத்த படி பாட ஆரம்பித்தாள்.
ஆராரோ பாட வந்தேனே
ஆவாரம் பூவின் செந்தேனே
தன்மானம் போனால் மண் மீது சாயும்
பொன்மானின் ஜாதி எந்நாளும் நீயும்
தென்னாட்டின் மன்னன் தானே நான்
தாலாட்டும் கண்ணன் தானே
ஆராரோ பாட வந்தேனே
ஆவாரம் பூவின் செந்தேனே
முந்நூறு நாள் சுமந்து
மூச்சடக்கி ஈன்றெடுத்து
கண்ணாக நான் வளர்த்த தங்க மகனே
முன்னேறும் பாதையிலே
முள்ளை வைக்கும் பூமியிலே
அஞ்சாமல் போர் நடத்து சிங்க மகனே
மானம் உயிரினும் மேலாக
வாழும் தமிழ் மகன் நீயாக
தென்னாடும் போற்ற
உன்னை எந்நாடும் வாழ்த்த
கண்ணா என் சந்தோஷம் உன்னாலேதான்
ஆராரோ பாட வந்தேனே
ஆவாரம் பூவின் செந்தேனே
பொல்லாத செயலைக் கண்டு
பொறுத்தது போதும் என்று
பொங்கி எழும் வேளை உண்டு வா வா மகனே
நல்லோர்க்கு சோதனையும்
நாளுமொரு வேதனையும்
சொல்லாமல் வருவதுண்டு விதிதான் மகனே
நாளை எதிர்வரும் காலங்கள்
யாவும் வசந்தத்தின் கோலங்கள்
அஞ்சாமல் மோது பழி உண்டாகும் போது
கண்ணா என் சந்தோஷம் உன்னாலேதான்
ஆராரோ பாட வந்தேனே
ஆவாரம் பூவின் செந்தேனே
தன்மானம் போனால் மண் மீது சாயும்
பொன்மானின் ஜாதி எந்நாளும் நீயும்
தென்னாட்டின் மன்னன் தானே நான்
தாலாட்டும் கண்ணன் தானே
ஆராரோ பாட வந்தேனே
ஆவாரம் பூவின் செந்தேனே
அவள் பாடி முடிக்கவும் கைதட்டும் ஓசை கேட்டு யாரென பார்க்கவும் இவர்களின் நால்வரையும் அவள் எதிர்பார்க்கவில்லை.
நிழலை வருடும் நிஜம் தொடரும்..
அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு லைக் கமெண்ட் பண்ண பட்டூஸ்க்கு நன்றி