• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிஜம் - 45

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
197
216
43
Salem
ஆலய மணியின் ஓசை கேட்க தன் நினைவு பெற்றவள் அப்பொழுது தான் எழுந்தாள்.. எப்படி ஆதவன் வீட்டிலிருந்து வந்தாள் என்று இன்னமும் தெரியவில்லை.. அகஸ்டினை பற்றி அவன் கூறியவை அனைத்தும் வலிகள் மட்டுமே நிறைந்த ஒருவனின் வாழ்க்கையில் எதிர்பார்ப்பு என்ன என்பதை புரிய வைத்தது.

அவர் என்னை முன்னையே விரும்புறாரா.. ஆனா இப்போ தானே அவரை முதல் முறையா பாக்குறேன்.. இதுக்கு முன்னே நானும் இங்கே வந்ததில்லையே.. இத்தனையும் தூக்கிட்டு எப்படி இருக்காரு.. அதுவும் அதே வீட்ல.. கடவுளே அவரோட வாழ்க்கையை கேட்டதுக்கு அப்புறம் ஏன் என் மனசு இப்படி தடுமாறுது.. ஒருவேளை இது கருணையே இருக்குமோ.. கண்டிப்பாக அது தான்.. அவன் அனுபவித்த வலிகள் பெண்ணவளுக்கு கருணையை தானே தர வேண்டும்.

ஆனால் ஏன் நானே அந்த வலியை அனுபவித்ததை போல் உணர்கிறேன்.. கருணை என்றாள் பாவம் மட்டும் தானே பட வேண்டும்.. ஏன் அவன் வலிக்கு நிகரான வலியை அனுபவிக்க வேண்டும்.. இறைவா எனக்கு ஒன்னுமே புரியலை.. என் மனசுல அவரை பத்தின கேட்டதும் நான் ஏன் இப்படி துடிக்கிறேன் என்க்கு எதுவும் புரியலையே.. எனக்கு இதோட பதிலை நான் எப்படி தெரிஞ்சிக்கிறது கடவுளே..' என்று மனதோரம் கடவுளை தொழுதவள் பிள்ளைகள் நினைவு வரவும் எழுந்து வீட்டிற்கு சென்றாள்.

வீட்டிற்கு சென்றவள் வீடு இருந்த கோலத்தை பார்த்து கோபம் கொண்டாள்.

" நவி ஆது.. என்னடா பண்ணி வச்சிருக்கீங்க.." என்று கத்தினாள்.

ஏன் வீடே தலைகீழாய் இருந்தது.. வீடு பூராவும் பேப்பர் ஆங்காங்கே இறைந்து கிடக்க இவளோ தன் பிள்ளைகளை திட்டியபடி கத்த ஆரம்பித்தாள்.

" டேய் இப்போ வர போறீங்களா இல்லையா.. உதை வாங்க போறீங்க.." என்று கத்தும் மூவரும் வரிசையாய் வந்து நின்றனர்.

நால்வரோடு ஐவரானோம் என்பதை போல் இருவரது மூவரானோம் என்பது மாறி மூவரும் கைகட்டியபடி வந்து நின்றனர்.. பிள்ளைகளுக்காக அவனும் கைகட்டியபடி வந்து நின்றதும் தான் உணர்ந்தாள் இதில் அவனும் கூட்டு களவானி என்று.

மூவரையும் சேர்த்தே முறைத்தவள், "என்னது இது.. ஏற்கனவே ரெண்டு பேரோட தொல்லை தாங்காது.. இப்போ இன்னொன்னு வேற.. உங்களை போய் எல்லாம் சுத்தம் செய்ங்க.. ம்ம் போங்க.. உங்களுக்கு இப்போ காபி கட்.. ஒழுங்க சுத்தம் பண்ணிட்டு வந்தா தான் சாப்பாடு.." என்று மூவரையும் சேர்த்து முறைத்தவள் உள்ளே சென்று விட்டாள்.

தன் அறைக்கு சென்றவள் அதற்கு மேல் அடக்க முடியாமல் வாய் விட்டு சிரித்து விட்டாள்.. முன்பே இப்படி அடம் செய்து விட்டு தன்னிடம் கைகட்டியபடி நிற்கும் மகன்களை கண்டாள் அள்ளி அணைத்து கொஞ்ச தோன்றும்..
ஆனால் இப்பொழுது அவர்களோடு சேர்ந்து இவனும் நின்றதில் பெண்ணவளுக்கு சிரிப்பு தான் வந்தது.

எத்தனை பெரிய கம்பீரமானவன்.. அவனின் நடையே ஏதோ ராஜாவை போல் தோன்றும்.. ஆனால் இன்று தன் பிள்ளைகளுக்காகவும் தனக்காகவும் அவன் நின்றிருந்த கோலம் ஏனோ பெண்ணவளுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.

எத்தனை இறுக்கமான உதடுகள்.. ஆனால் இன்று சிறுபிள்ளைகளுக்கு சரிசமமாய் நின்ற வீதம் ஏனோ சொல்லெனா வலியை தந்தது.

இரவு சமையலை முடித்தவள் மூவரையும் சாப்பிட அழைக்க வந்தாள்.. பிள்ளைகள் இருவரும் பள்ளி பாடம் படிக்க ஆடவனோ தன் லேப்டாப்பில் வேலையை செய்து கொண்டிருந்தான் என்றாலும் இடையில் சிறியவன் கேட்கும் சந்தேகத்திற்கும் தீர்வு சொன்னான்.

மூவரையும் வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.. அப்பொழுது தான் அவளின் புத்தியால் ஒரு விஷயம் உரைத்தது.. அகஸ்டின் வேலை செய்யும் போதும் சரி பிள்ளைகள் எழுதும் போதும் சரி மூவரிடையே ஒரு ஒற்றுமை இருந்தது.

ஆம் மூவரிடம் எழுதும் போது தன் இடது கைகளை நெற்றியை கீறி கொண்டே எழுதினர்.. இது தான் இயல்பாக நடப்பது என்றால் சிறியவன் கை வைத்து எழுதும் முறையும் அகஸ்டின் கை வைத்து வேலை செய்யும் முறையும் ஒன்றை போல் இருந்தது.. இது எப்படி சாத்தியம் என்று யோசித்தவளை மேலும் யோசிக்க விடாமல், "அம்மா பசிக்குது.." என்று சிறியவனின் குரலில் தன் நினைவு பெற்றவள்,

"சமைச்சிட்டேன் நவீ.. மூனு பேரும் சாப்பிட வாங்க.." என்றபடி சமையலறைக்கு சென்றாள்.

பிள்ளைகள் இருவரும் சாப்பிட அமர அகஸ்டின் வராது போகவும் அவனை எப்படி அழைப்பது என்ற யோசனையில் நவீஷ், "அப்பா சாப்பிட வாங்க.." என்றான் சத்தமாய்.

தான் மனதில் நினைத்தை தன் மகன் செயல்படுத்தியது கண்டு சிரிப்புடன் அவனை பார்த்தாள்.

"நீங்க சாப்பிடுங்க தங்கம்.. அப்பாவுக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. முடிச்சிட்டு வர்றேன்.." என்று உள்ளிருந்த படியே அவனும் குரல் கொடுத்தான்.

சரி என்று பிள்ளைகளுக்கு பரிமாற போனாள்.. ஆனால் அவர்கள்,

"அம்மா இருங்க அப்பா வரட்டும்.." என்று விட்டு அமர்ந்தனர்.

அவர்கள் சொல்லவும் அவளும் சரி என்று அமர்ந்து விட்டாள்.

அரைமணி நேரம் கழித்து வந்தவன் மூவரும் சாப்பிடாமல் டேபிளில் அமர்ந்து இருந்ததை பார்த்து விட்டு,

"ஹேய் நீங்க இன்னும் சாப்பிடலையா.." என்றபடி வந்தமர்ந்தான்.

அவளோ அவனை முறைத்தபடி மூவருக்கும் பரிமாறினாள்.

அவனோ அதை கண்டு ஆதர்ஷிடம் குணிந்து, "ஆது கண்ணா நான் இப்போ என்ன கேக்குறேன்னு அம்மா இப்படி பாக்குறா.." என்றான் எச்சிலை விழுங்கிய படி.

நீங்க ஏன் சாப்பிட இவ்ளோ லேட் ஆஆ வந்தீங்க.. நான் பசி தாங்க மாட்டேன்..
ஆனா இப்போ உங்களுக்காக காத்திருந்தேன் இல்லை அந்த கடுப்பு.. நீங்களே சமாளிச்சிக்கோங்க.." என்றபடி அவன் சாப்பாட்டில் கவனமானான்.

அடேய் என்ற ரீதியில் மகனை பார்த்தவன் கெஞ்சலான பார்வையுடன் தன்னவளை பார்த்தான்.

அவளோ அதை கவனத்தில் கொள்ளாது தன் வேலை பரிமாறுவது மட்டுமே என்ற ரீதியில் இருந்தாள்.

தனக்கு இரு புறமும் அமர்ந்த மகன்களை பார்த்தவன், 'அடேய் யாராவது அவளை சமாதானம் செய்ங்கடா..' என்ற ரீதியில் இருவரையும் பார்த்து வைத்தான்.

ஆனால் அவர்கள் இருவரும் அவனை கண்டு கொள்ளாமல் உணவில் கவனத்தை வைத்தனர்.

அவனின் தட்டில் உணவை அப்படியே இருப்பதை பார்த்து பெண்ணவள் கேள்வியுடன் அவன் முகத்தை பார்த்தாள்.. அவன் விழிகளில் சாரி டி கெஞ்சல் இருந்தது.. அதை பார்த்தவள் சாப்பிடும் படி தலையசைத்தாள்.

மகிழ்வுடன் தன் தட்டில் வைத்த சப்பாத்தியினை சாப்பிட ஆரம்பிக்கும் பொழுது சிறியவன் ஆ வென்று தன் வாயை திறந்தான்.

அதை பார்த்து சிரித்தவன் தன் கையில் இருந்த உணவினை ஊட்டினான்.

அடுத்ததாக ஆதர்ஷிம் ஆவென்றான்.. இருவருக்கும் சிரித்தபடி ஊட்டியவன் தானும் சேர்ந்து உண்டான்.

ஏனோ அதை கண்ட பெண்ணவளுக்கு தானும் அவன் கைகளால் உண்ணும் ஆசை வந்ததை தடுக்க முடியவில்லை.

ஆனால் அதை வாய் திறந்து சொல்லிவிட்டாள் அவள் அகல்யா இல்லையே.

மூவரும் சாப்பிட்டு முடித்ததும் அவளும் அமர்ந்து சாப்பிடும் போது அவள் வாய் அருகே ஒர் வலிய கரம் உணவுடன் நீண்டது.

யார் என்று தான் பெண்ணவளுக்கு தெரியுமே.. தலை நிமிர்ந்து பார்த்தாள். அவளவன் உணவுடன் அவளருகே நின்றான்.

அதை கண்டதும் கண்களில் கண்ணீர் கரை கட்டியது.. அதை தன் மற்றொரு கரம் கொண்டு துடைத்தவன், "உனக்கும் முன்னவே ஊட்டியிருப்பேன்.. ஆனா பசங்க சாப்பிட்டதுல உன்னை விட்டுட்டேன் அகி மா.." என்றான் மென்மையாய்.

அவள் எதுவும் சொல்லாமல் அவனையே பார்த்தவள், "என்னை எப்படி உங்களுக்கு தெரியும்.." என்றாள் கேள்வியாய்.

" உன்னை எப்படி தெரியும்னா நம்ம ஸ்கூல்ல.." என்று சொல்ல வந்தவனை முழுதாய் சொல்ல விடாமல்,

"பொய் சொல்ல வேணாம்.. எனக்கு உண்மை தான் வேணும்.." என்றாள் கட்டளையாய்.

" நீ என் உயிர் டி.. எனக்கு உன்னை உன் கல்யாணத்துக்கு முன்னவே தெரியும்.. ஆனா தயவு செஞ்சு எப்படி தெரியும்னு மட்டும் கேட்காத.. நான் இன்னும் நடமாடிட்டு இருக்க முக்கிய காரணம் நீ மட்டும் தான்.. ஆனா எப்போ எப்படின்னு இப்போ சொல்லிக் கூடிய நிலையில நான் இல்லை.. அதுக்கான நேரம் வரும் அப்போ சொல்றேன்.. ரொம்ப போட்டு குழப்பிக்காத.. எல்லாம் தெரியும் ஒரு நாள்.. அது வெகு தூரத்துல இல்லை.. இப்போ சாப்பிடு மா.." என்றான் இதமாய்.

ஏனோ ஆடவனின் குரல் மயிலிறகாய் மனம் வருடி போனது..

அவன் கொடுத்ததை எதுவும் பேசாமல் வாங்கி கொண்டாள்.. முழுதாய் அவளுக்கு ஊட்டி விட்டு தான் அவளை விட்டான்.

இத்தனை வருடங்களாய் அவள் வயிறு நிறையவோ மனம் நிறையவெ உண்டதில்லை.. இதோ இந்த நாள் அவளின் வயிறும் மனமும் நிறைந்து தான் போனது.

பௌர்னமி ஒளியில் நிலவை பார்த்தபடி அமர்ந்திருந்தாள் பாவை.. ஆதவன் சொன்ன விஷயம் அகஸ்டின் சொன்ன காதல் என அனைத்தும் அவளின் முன்னே நின்றது.

எதுவும் தோன்றவில்லை.. ஏனோ இப்பொழுது அவனை விளக்கி வைக்கவும் தோனவில்லை.. மனதின் நிலையை என்னவென்று விவரிப்பது.

அவளின் அருகே யாரோ அமரும் அரவம் கேட்டும் பெண்ணவள் திரும்பவில்லை.

இங்கே அகல்யா வந்து சென்றதில் இருந்து மனதில் ஏதேதோ யோசித்த ஆதவனுக்கு அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் சோபாவில் தலையில் கைவைத்து அமர்ந்திருந்தான்.

குழந்தையை தூங்க வைத்து விட்டு வந்த ரூபினி அவனின் தோளில் கை வைத்து அழுத்தினாள்.

அவன் கண்கள் கலங்கியிருந்தது.. அதை கண்டு பதறியவள், "அத்தான் என்ன இது.. எதுக்காக இப்போ அழறீங்க.. எல்லாம் சரி ஆகும் அத்தான்.." என்றாள் ஆறுதலாய்.

ஹனி அகல்யா புரிஞ்சிப்பாளா அவனை.. அவகிட்ட அவனை பத்தி தான் முழுசா சொல்லலையே மா.. அது தெரிஞ்சா என்ன சொல்லுவா.. ஏன் இவனுக்கே இன்னும் தெரியாதே.. நான் தப்பு பண்ணிட்டேனா டி.. என் நண்பனுக்காக அநியாயமா ஒரு பெண்ணோட வாழ்க்கையே பாழாக்குறேனா.. மனசு கண்டதையும் குழம்பி தவிக்குது டி.. அவனோட கண்கள்ல பார்க்கனுமே அதுல அத்தனை காதல் டி.. அந்த பொண்ணை உயிரா நேசிக்கிறான் ஹனி.. ஆனா என்கிட்டேயும் எதுவோ மறைக்குறான்.. அது தான் என்னன்னு எனக்கும் புரியலை.." என்றான் யோசனையாய்.

"அத்தான் ரொம்ப யோசிக்காதீங்க.. இங்கே நடக்குற எதுக்கும் நீங்க காரணமில்லை.. விதிப்படி தான் இங்கே நடக்குது.. அண்ணாவோட வாழ்க்கையில அகல்யா வரனும்.. அதே போல அகல்யாவுக்கு பாதுகாப்பா அண்ணன் வரணும்னு இருக்கு.. வேற எதையும் நினைச்சி குழப்பிக்காதீங்க.. சரியா.. வாங்க வந்து சாப்பிடும் தூங்குங்க.. தூங்குனா கொஞ்சம் தெளிவு கிடைக்கும் அத்தான்.." என்று அவனை அழைத்து போய் சாப்பிட வைத்துவிட்டு அவனை தூங்க வைத்தாள்.

மனைவி சில நேரங்களில் தாயாகவும் இருப்பாள்.. பல நேரங்களில் தரமாகவும் இருப்பாள்.. ஆனால் அவளுள் இருக்கும் தாய்மையை உணர நிறைய ஆடவர்களுக்கு தான் தெரியவில்லை.. அப்படி புரியாத சந்தர்ப்பங்களில் கணவன் மனைவி இடையே விரிசல் ஏற்பட்டு அந்த உறவை முடித்து வைக்கிறது.



நிழலை வருடும் நிஜம் தொடரும்..🌹



அடுத்து பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு லைக் கமெண்ட் பண்ண பட்டுஸ்க்கு நன்றி