• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிஜம் - 61

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
264
230
43
Salem
அகஸ்டின் ஜெர்மன் சென்று ஒரு வாரம் ஆகிவிட்டது.. போகும் போது அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பியதுடன் சரி.. அதன் பின்பு அவன் எவ்வழியிலும் அவளுடன் பேசவில்லை.. அவன் அருகாமை இல்லாமலும் அவன் குரல் கேட்காமலும் பெண்ணவளின் உள்ளும் தவித்து துடித்தது.

பிள்ளைகளும் அவனை பார்க்காமல் தவித்தனர்.. அவர்களை சமாதானம் செய்தவளுக்கு தன்னை சமாதானம் செய்வது தான் மிகப் பெரும் பாடாய் போனது.

இரவில் அவன் அணைப்பு இல்லாமல் தூங்க முடியவில்லை.. காலையில் அவன் சீண்டல் இல்லாமல் சமைக்க முடியவில்லை.. அவளை கெஞ்சி கொஞ்சி சாப்பிட வைக்க அவன் இல்லை.. அவன் இல்லாத ஒவ்வொரு நாளும் நரகமாய் தெரிந்தது.

வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டங்களை சந்தித்தவள் தான்.. ஆனால் என்று அவன் அவள் வாழ்வில் வந்தானோ அன்றே அவளின் அத்தனை துன்பத்திற்கும் விடிவு கிடைத்ததாய் இருந்தது.

அத்தனை பாசமாய் நேசமாய் தன் குடும்பமென கண்டவனை இன்று பார்த்தே ஒரு வாரம் ஆகிவிட்டது.

நெஞ்சமெல்லாம் ரணமாய் வலித்தது.. அவளுக்குள்ளே சுய பச்சாதாபம் தோன்றியது.

கண்வன் மனைவியாய் உடலில் கலந்து பதினான்கு ஆண்டுகள் வாழ்ந்து அவனிடம் வராத தவிப்பு வெறும் திருமண பந்தத்தில் இணைந்த இந்த ஆறுமாதத்தில் வந்ததை நினைத்து நொந்து போனாள்.

இதற்கு இவனுடன் உடலாய் உயிராய் கலந்து வாழவில்லை.. ஆனால் மனதால் இணைந்த தாம்பத்யம்.. ஒருடல் ஈருயிராய் கலக்கவில்லை .. ஆனால் அப்படி வாழ்ந்திருந்தாலும் கூட இந்தளவுக்கு தன்னை பாதித்திருப்பானா என்று யோசித்தாள் பெண்ணவள்.

அவனின் அபரிதமான அன்பு நேசம் அக்கறை அரவணைப்பு எங்கு தேடினாலும் கிடைக்காத பொக்கீஷம் அல்லவா..? அதை தானே ஒவ்வொரு பெண்ணும் தேடுவது.

அதற்காக எந்த உணர்வும் இல்லாத மரக்கட்டை இல்லையே... அவனின் தீண்டல் உடலுக்குள் ஆயிரம் மாற்றங்களை அல்லவா கொண்டு வரும்.. அவனின் சீண்டலில் பெண்ணவள் உயிர் உருக அல்லவா நிற்பாள்.

அந்த தீண்டலும் சீண்டலும் இல்லாமல் வஞ்சியவளை வதைப்பது தான் கொடுமை ஆனது.

அன்றும் பிள்ளைகளை சமாதானம் செய்து பள்ளிக்கு அனுப்பி வைத்தவள் தன்னவனுக்கு மீண்டும் கால் செய்தாள்.. ஆனால் அவளவன் சுத்தமாக அடித்து முடியும் வரை எடுக்கவில்லையே.

மன பாரத்துடன் அலைபேசியை கீழே வைத்தவளுக்கு தன்னவனின் நினைவுகள் அழையா விருந்தாளியாய் வந்து ஒட்டிக் கொண்டது.

இதே போல் தான் அவர்கள் திருமணம் ஆன பின்பு பிஸ்னஸ் மீட்டிங் என்று டெல்லி சென்றவனுக்கு வேலை நெருக்கடியில் தன்னவளுக்கு பேச முடியவில்லை.

நான்கு நாட்கள் கழித்து வந்தவன் தன்னவளை ஏதோ பார்த்து பல கால ஆனது போல் நெருங்க அணைத்து விட்டான்.

அவளை அணைத்து பிடித்து படியே, "ஐ லவ் யூ கண்ணம்மா.. " என்று ஆயிரம் முறையாவது கூறியிருப்பான்.

அவளுக்கும் அவன் பேசவில்லையே என்ற வருத்தம் தவிர்த்து வேறு எதுவும் தோன்றவில்லை.. ஆனால் அன்று அவனின் நிலை கண்ட பின்பு அவனை எப்பொழுதும் தவிக்க விடமாட்டாள் பெண்ணவள்.

இரவும் பிள்ளைகளை தூங்க வைத்து விட்டு தன்னவள் மடியில் படுத்துக் கொண்டு அவளின் தலை கோதலில் சுகமாய் படுத்திருந்தவன்,

"ஏன் கண்ணம்மா இந்த நாளு நாள் பேச முடியாத போனதுக்கே என் உயிர் என்கிட்ட இல்லை டி.. அது எப்படி டி மாசா கணக்கா பேசாம இருக்கரவங்க இருக்காங்க.. அய்யோ சாமி போதும் இந்த ஒரு வாரம் நான் பட்ட அவஸ்தை.." என்று சிலுப்ப அதை கண்ட பெண் தான் சிரித்து விட்டாள்.

அவள் சிரித்ததை பார்த்தவன், "எதுக்குடி இப்போ சிரிக்குற.. என் நிலமை உனக்கு சிரிப்பா இருக்கா.." என்றான் செல்லக் கோபமாய்.

அய்யோ அப்படி இல்லை மாமூ.. இத்தனை நாளா நீங்க எப்படி இருந்துருப்பீங்கன்னு நினைச்சேன் சிரிப்பு வந்துருச்சி.. நான் என்ன இப்போ ஒரு வருஷமா என்னை தெரியுமா உங்களுக்கு.. அதுவும் நாம இப்படி இருக்கறது இந்த ஆறு மாசமா தான்.. ஆனா அதுக்கு உங்களால முடியலை.. ஆனா இத்தனை வருஷமா என் நினைவோட மட்டும் எப்படி இருந்தீங்கன்னு யோசிச்சேன் மாமூ.." என்றாள் ஏக்கமாய்.

" அனாதையா இருந்தேன் டி.. உன்னோட நினைவு மட்டும் தான் என்னை உயிர்மூச்சா இருந்துச்சி.. ஆனா இனி எப்பவும் உன்னை என் ஆயுளுக்கு பிரிய கூடாது கண்ணம்மா.." என்றான் ஆத்மார்த்தமாய்.

அதை நினைத்தவளுக்கு இன்று கண்ணீர் மழை பொழிந்தது.

" ஏன் மாமூ என்னை ஆயுளுக்கும் பிரிய மாட்டேன்னு சொன்னீங்களே.. ஆனா இன்னைக்கு நான் அனாதையா இருக்கேன் மாமூ.. உங்களை நினைச்சி தவிச்சி துடிக்கிறேன் .. ஒரு தடவை பேச மாட்டீங்களா.. ஒரு தடவை உங்க வாயால கண்ணம்மான்னு ஒரு வார்த்தை சொல்ல மாட்டீங்களான்னு தவிக்குறேன் மாமூ.." என்றாள் அவனின் புகைப்படத்தை பார்த்து.

ஒரு முடிவுடன் எழுந்தவள் ஆதவனை காண அலுவலகம் செல்ல முடிவெடுத்தாள்.

ஏன் இத்தனை நாளாக ஆதவனும் கூட அங்கே அதிகம் வரவில்லை.. ஏனோ அவன் வந்த இரண்டு மூன்று முறையும் அவள் கண்களை பார்த்து பேசுவதை முற்றிலும் தவிர்த்தான்.. அதன் காரணம் பெண்ணவள் அறிய வேண்டும்.

பிள்ளைகளும் பள்ளி சென்ற நிலையில் அகஸ்டினின் அலுவலகத்திற்கு கிளம்பினாள்.

இதற்கு முன்பும் இரண்டு மூன்று முறை அவனுடன் சென்றிருக்கிறாள்.. தன்னவனை நினைத்து கர்வபட்ட நொடிகள் அவை.

ராயல் இன்டஸ்டிரிஸ் பெயர் பலகை தாங்கிய பலகையை அண்ணாந்து பார்த்தவள் அதன் உள்ளே நுழைந்தாள்.

அவளை கண்ட ரிஷப்னிஸ்ட், "குட்மார்னிங் மேம்.." என்றாள் பதிவிசாய்.

அந்த மரியாதை அகஸ்டினால் வந்தது.. அவளை அங்கே அழைத்து வந்து அறிமுகப்படுத்தும் போதே தன் மனைவி என்றும் அவனுக்கு கிடைக்க கூடிய அத்தனை மரியாதை அவளுக்கும் கொடுக்க வேண்டும் என்று கேட்டான்.. அது தான் அவளை பார்த்த நொடி கண்டு கொண்டாள் கம்பெனியின் முதலாளி என்று.

அவள் வணக்கத்தை தலையசைத்து ஏற்றுக் கொண்டவள், "ஆதவன் அண்ணா இருக்காங்களா.." என்றாள் வேதனையாய்.

"எஸ் மேம் சார் ரவுண்ட்ஸ் போயிருக்காங்க மேம்.. இப்போ வந்துடுவாங்க.. நீங்க ரூமுக்கு போங்க மேம்.. வந்துடுவாங்க.." என்று அனுப்பி வைத்தாள்.

தலையசைத்து நகர்ந்தவள் அலுவலக அறைக்குள் நுழைந்தாள்.

அங்கே நுழைந்தவளுக்கு அதிர்ச்சியாய் அங்கே அவளவன் அமர்ந்திருதான்.. அவனைக் கண்டவளுக்கு கண்கள் இரண்டும் கரித்துக் கொண்டு வர அழுகையின் குலுங்கியவள் கண்ணை துடைத்துக் கொண்டு பார்க்கும் சமயம் அங்கே யாருமில்லை.. அதுவே தன் கனவென உணர்ந்தவளுக்கு கண்கள் நிற்காமல் மேலும் கண்ணீரை பொழிந்தது.. அவன் எப்பொழுதும் அமர்ந்திருந்த சேரின் அருகே சென்றவள் அதில் அமர்ந்து தலையை டேபிளில் சாய்த்து கொண்டு, "மாமூமூ..." என்று கதறி விட்டாள்.

"எங்கே மாமூ போனிங்க.. என் மேல என்ன கோபம்.. என் கூட சண்டை கூட போட்டிருக்கலாமே.. ஆனா இப்படி என்னையும் என் பசங்களையும் அனாதையா ஆக்கிட்டு எங்கே மாமூ போனிங்க.. என்னால இந்த வலியை தாங்க முடியலை மாமூ.. என்கிட்ட வந்துடுங்க மாமூ.. நீங்க என்ன சொன்னாலும் செய்யறேன்..


என்னையும் பசங்களையும் ஒரு நிமிஷம் நினைச்சி பாத்தீங்களா.. நீங்க இல்லாம எனக்கு பைத்தியம் பிடிக்குது மாமூ.. ப்ளீஸ் வந்துடுங்க மாமூ.. என்கிட்ட வந்துடுங்க மாமூ.. நீங்க இல்லைன்னா என் உயிர் கூட எனக்கு சொந்தமில்லையே மாமூ.. இப்படி பாதில விட்டுட்டு போகத்தான் என் வாழ்க்கைக்குள்ள வந்தீங்களா.. வேணாம் மாமூ என்னால இந்த வலியை தாங்க முடியலை மாமூ.." தன் மனதில் உள்ள வலிகள் அத்தனையும் வார்த்தைகளால் கொட்டித் தீர்த்தாள்.

அதே நேரம் கதவு திறந்து யாரோ வரும் அரவம் கேட்டும் தலைநிமிரவில்லை பெண்ணவள்.

அவளின் தலையை பரிவாய் வருடியது இரு கரங்கள்... அந்த கரத்தை பிடித்துக் கொண்டவள்,

"எங்க அண்ணா அவரு.. அவரை பார்த்து ஒரு வாரம் ஆச்சி அண்ணா.. என்னால முடியலை அண்ணா.. எனக்கு என்ன தண்டனை வேணாலும் குடுக்க சொல்லுங்க.. நான் எதையும் தாங்கிக்குறேன்.. ஆனா அவரோட இந்த பாராமுகத்தையும் பிரிவையும் தாங்கிக்க கூடிய சக்தி நிச்சயம் எனக்கு இல்லை அண்ணா.. எனக்கு இப்பவே கொஞ்சம் கொஞ்சமா என் உயிர் போற மாறி இருக்கு அண்ணா..

நான் என்ன தப்பு அண்ணா செஞ்சேன்.. எதுக்காக அண்ணா எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்திருக்காரு.. சொல்லுங்க அண்ணா ஏன் எங்களை இப்படி தவிக்க வைக்குறாரு..

என்னால பசங்களை சமாதானம் செய்ய முடியலை அண்ணா.. ரெண்டு பேரும் அவரை தேடி தவிச்சி போறது பாக்கும் போது என் உசுரே என்கிட்ட இல்லைணா.. எனக்காக இல்லைன்னாலும் ஒரே தடவை பசங்களை மட்டுமாவது வந்து பாக்க சொல்லுங்க அண்ணா.. ப்ளீஸ் அவருகிட்ட இதை மடி பிச்சையா கேட்குறேன் அண்ணா.." என்று கதறி கொண்டிருந்தவள் ஒரு கட்டத்தில் அப்படியே மயங்கி விழுந்தாள்.

அவளை அந்த நிலையில் பார்க்க முடியாமல் தான் ஆதவன் வீட்டிற்கு செல்வதில்லை.. அதுமட்டுமில்லாமல் அவளின் பார்வை கேட்கும் கேள்விகளுக்கு அவனால் பதில் கூற இயலவில்லை.. ஏன் அவனுக்கே இன்னும் எதுவும் முழுமையாய் தெரியவில்லை.. இதோ தன் முன்னே மயங்கி கிடந்தவளை அங்கிருந்த சோபாவில் கிடத்தி டாக்டருக்கு கால் செய்தவனுக்கு உள்ளுக்குள்ளே பதட்டம் இருந்தாலும் வெளியே காட்ட முடியவில்லை.. எங்கே தன் பதட்டத்தை கண்டாள் தங்கையும் பயந்து விடுவாளோ என்ற எண்ணத்தில் பயத்தை உள்ளுக்குள் புதைத்து கொண்ட மனம் கலங்கி போய் அம்ர்திருந்தான் ஆதவன்.


சற்று நேரத்தில் மருத்துவருடன் ரூபினியும் வந்தாள் பதட்டமாய்.

"அத்தான் என்னாச்சு..ஏன் இப்படி மயங்கி கிடக்குறா.." என்றாள் பதட்டமாய்.

அவளை ஆறுதலுக்காக கட்டியணைத்தவன், "ஹனி தப்பு பன்னிட்டனேன்னு தோனுது டி.. அவனை பத்தி தெரிஞ்சும் இந்த அப்பாவி பொண்ணோட கெடுத்துட்டேன் டி.. அவ கேட்ட எந்த கேள்விக்கும் என்கிட்ட பதில் இல்லை டி.. ஆனா நெருப்புல நிக்குற மாறி நிக்கிறேன் டி.." என்றான் அழுகையாய்.

"அதெல்லாம் ஒன்னுமில்லை அத்தான் எல்லாம் சரியாகும்.." என்று அவனுக்கு ஆறுதலித்தாள்.

அதற்குள்ளாக அகல்யாவை செக் செய்த மருத்துவர் ஆதவன் அருகில் வந்து,

"பீபி ரொம்ப ஏறியிருக்கு சார்.. சரியா சாப்பிடலை தூங்கலை.. மனசு ரொம்ப அழுத்தமா வச்சிருக்காங்க.. அது தான் சார்.. அதுமட்டுமில்லாம எதையோ நினைச்சி புலம்புறாங்க.. அதை சரி பண்ணா போதும்.. கொஞ்சம் பாத்துக்கோங்க சார்.. அகஸ்டின் சார்கிட்டேயும் கொஞ்சம் பாத்துக்க சொல்லுங்க.." என்றவர் கிளம்பி சென்றிட இங்கே ஆதவனோ அகல்யாவின் அருகில் சென்று அவளின் முகத்தை கவனித்தான்.. அவளின் வாய் எதையோ முனுமுனுத்தது.. என்னவென்று புரியாமல் காதை அவளின் உதட்டுக்கு அருகே சென்றவனின் காதுகளில் "மாமூ.." என்ற வார்த்தை தான்.

அவளின் நிலை ஆதவனையும் ரூபினியையும் கலங்க வைத்தது.

இதை இன்னும் இரு விழிகள் பார்த்து கலங்கி தவித்து துடித்து போனதை தான் யாரும் கவனிக்கவில்லை.



காதல் என்ற வழி(லி)யை
உணர்ந்தேன் உன் ஒற்றைப்
பார்வையில்...
கண்ணீரில் தத்தளித்த பேதையவளை
களவாடி வலி கொடுக்கும்
உன் மாயமதை நான் அறிவேனோ
என்னவனே..




நிழலை வருடும் நிஜம் தொடரும்..🌹


அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்..
போன பதிவுக்கு கமெண்ட் லைக் பண்ண பட்டூஸ்க்கு நன்றி.


ஹாய் செல்லம்ஸ் எனக்கு நல்லா தெரியும்.. என் மேல கோபமா இருப்பீங்கன்னு... என்னடா இந்த அகல்யாவுக்கு கஷ்டத்தைப் குடுத்துட்டு இருக்காளேன்னு.. ஆனா என்ன பன்றது பட்டூஸ்..

கதையோட போக்கு இப்படித் தான்.. வலிகளை மட்டுமே வாழ்க்கையாய் கொண்ட பெண்ணின் வாழ்க்கை. நிறைய பேருக்கு நிச்சயம் கஷ்டமாத்தான் இருக்கும்.. ஆனா கதையோட முடிவுல நிச்சயம் என்னை நல்லா திட்டுவீங்கன்னு இப்பவே தெரியுது.. ஆனா அதுக்காக கதையோட முடிவை மாத்த விருப்பமில்லை பா.. இன்னும் 4 , 5 பாகத்தோட கதை முடிஞ்சிடும் பா..