• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிஜம் -68 (1)

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
264
230
43
Salem
கண்கள் இரண்டும் சிவந்திருக்க சுவற்றை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் அகல்யா.. அவளருகில் பிள்ளைகள் இருவரும் ஆளுக்கொரு புறம் அமர்ந்திருக்க அதற்கடுத்து ரூபினியும் காயத்திரியும் அமர்ந்திருந்தனர்.. ஆதவனுன் ராபர்டும் பெண்ணவளுக்கு என்ன ஆறுதல் சொல்ல முடியும் என்ற எண்ணத்தில் பார்த்திருந்தனர்.. அவர்களுக்கும் இது அதிர்ச்சி தானே.. யாரிடம் சென்று சொல்வது.. அவர்களும் வலியை அனுபவிக்கிறார்கள் தானே.. ஆனால் அவளோ வாய்விட்டு கதறி அழுதாலும் அடுத்ததை சமாளிக்கலாம் என்றாளோ அவள் வாய்விட்டு கதறாமல் பிடித்து வைத்த பிள்ளையாராய் அமர்ந்திருந்தது அனைவருக்கும் பயத்தை தானே கொடுத்தது.

யாரும் எதிர்பாராத சம்பவம்.. நடந்த நொடியிலிருந்து இப்போது வரை உயிர் உடலில் இல்லை.. இது தான் நேரமா இல்லை விதியின் சதியா என்ன சொல்வது என்று புரியவில்லை.. ஆனால் யாரும் எதிர்பாராத நிகழ்வை விதி அரங்கேற்றியிருக்கிறது.

அறையின் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தனர் ஆண்கள்.. அந்த நேரத்திற்கே தனசேகரனும் ராஜாவும் வந்திருந்தனர்.

ராஜா ஒரு மருத்துவர் என்பதால் உள்ளே மருத்துவர் குழுவுடன் அவரும் உடனிருந்தார்.. தங்கள் பெண்ணின் வாழ்க்கை இப்படியா மீண்டும் ஆக வேண்டும் என மனம் கலங்கி போயிருந்தனர்.. இந்த குறிபிட்ட காலத்திலே அகஸ்டினும் அவர்களுடன் ஒன்றாகினான்.

அவளருகே வந்த ஆதவன், "அகிம்மா.." என்று அவளை அழைத்தான்.

தன் பேரை சொல்லி அழைத்தவனை வெற்று பார்வை பார்த்தவள் மீண்டும் பழைய படி சுவற்று பக்கம் தன் பார்வையை திருப்பி கொண்டாள்.

கிட்ட திட்ட அவன் உள்ளே சென்று பத்து மணி நேரம் முடிந்திருந்தது.. அவனின் அறைக்குள் போன மருத்தவர் குழு இன்னும் முழுதாய் யாரிடமும் எந்த தகவலும் கூறவில்லை.. விடிந்து இன்னமும் கண் விழிக்காதவனை கண்டு மனம் வலித்தது பெண்ணவளுக்கு.

அங்கே வந்து அமர்ந்தவள் தான்.. இன்னும் அந்த இடத்தை விட்டு அசையவில்லை என்பதை விட மனம் மரத்து போய் அமர்ந்திருந்தாள் பாவை.

இரவு தன்னவன் வெகு நேரம் ஆகியும் வராமல் போனாதால் மனம் குழம்பியவள் ஆதவனுக்கு அழைத்து விட்டாள்.. அப்பொழுது தான் அவனுக்கே தெரிந்தது இன்னும் ஆதவன் வீடு போய் சேரவில்லை என்று .. மீட்டிங் அப்பொழுதே முடிந்திருக்குமே என்ற எண்ணத்தில் அகஸ்டினுக்கு கால் செய்தான்.. ஆனால் அவனுக்கு கால் சுத்தமாய் போகவில்லை.. மனம் ஏதோ உந்தி தள்ள அந்த ராத்திரி நேரத்தில் தன் மாமனாரை அழைத்துக் கொண்டு அகஸ்டினை தேடி சென்றான்.

இருவரும் வெகுநேரமாக தேடியும் அவனை கண்டு பிடிக்க முடியவில்லை.. அலுவலகத்தின் பக்கத்தில் சென்று பார்த்தவர்களுக்கு தூரத்தில் ஏதோ வாகனம் கவிழ்ந்து கிடப்பதை கண்டவர்கள் மனம் படபடக்க அங்கே சென்றனர்.

அங்கே அகஸ்டின் இருந்த நிலையை கண்டவர்களுக்கு அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை.. அருகில் சென்று அவனின் நாசியில் விரல் வைத்து பார்த்தார் ராபர்ட்.. இன்னும் உயிர் இருந்தது.. உடனே த மருமகனிடம் திரும்பியவர்,

"மாப்பிள்ளை வாங்க சீக்கிரம் பிடிங்க உயிர் இருக்கு ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிடலாம்.." என்று அவசரபடுத்தினார்.

தன் நண்பனை அந்த நிலையில் காண முடியாதவன் உயிரை கையில் பிடித்து அகஸ்டினை தன் தோளில் சுமந்து வண்டியில் கிடத்தினான்.. அடுத்த நொடி அந்த இடி மழையிலும் ஆதவனின் வண்டி பறந்தது அவர்களின் மருத்துவமனையை நோக்கி.

கண்கள் இரண்டும் கண்ணீரை பொழிய அகஸ்டினை திரும்பி திரும்பி பார்த்தபடி வண்டியை செலுத்தினான் ஆதவன்.

தன் மருமகனை கண்ட ராப்ர்ட்டுக்கு அவனின் மனநிலை புரிந்தது.. இத்தனை நாள் பழக்கத்தில் தன்னாலே இதை தாங்க முடியவில்லையே.. சிறு வயதில் இருந்து ஒன்றாய் இருந்த தன் மருமகனின் நிலை புரிந்தது.. அவனின் தோளில் கை வைத்து அழுத்தியவர், "சரியாயிடும் பா.." என்றான ஆறுதலாய்.


அகஸ்டினை விநாயகத்திடம் ஒப்படைத்தவன் கிளம்பி சென்று அகல்யாவையும் பிள்ளைகளையும் அழைத்து வந்தான்.. அகஸ்டினை விநாயகத்திடம் சேர்க்கும் போதே நிறைய ரத்தம் வெளியேறி இருந்தது.. காப்பாற்றுவது மிகவும் கடினம் தான் என்று கூறினார் விநாயகம்.

அதை கேட்ட நொடியிலிருந்து அகல்யா அழவில்லை.. கண்களில் துளியும் கண்ணீர் வரவில்லை.. பார்வை சுவற்றையே வெறித்திருந்தது.. யாரலும் அவள் நிலையை காண முடியவில்லை மனம் வலிக்க நின்றனர்.

இதோ சூரியன் உதித்து கொழுந்து விட்டு எரிந்தான்.. இன்னமும் உள்ளே இருப்பவன் கண் திறக்கவில்லை.. எல்லோரும் மன பாரத்துடன் நின்றிருந்தனர்.

சற்று நேரத்தில் விநாயகமும் ஜேன்ஸிம் வந்தனர்.. அவர்களை கொண்ட ஆதவன் அவர்ளருகில் சென்றான் வேகமாய்.

" டாக்டர்.." என்றான் இருவரின் முகத்தை பார்த்தபடி.

அப்பொழுதும் அகல்யா எழவில்லை.. அவர்களருகில் செல்லவில்லை.. ஆனால் தன் செவிகளை கூர்மையாக்கினாள்.

" சார் அவருக்கு உடனே ஹார்ட் பிளான் சர்ஜரி பண்ணனும் சார்.. அப்போ தான் அவரை எங்களால காப்பாத்த முடியும்.. அதுவும் எங்களால டுவென்டி பர்சன்டேஜ் தான் சொல்ல முடியும்.. பட் இப்பவே அவருக்கு ஹார்ட் கிடைக்கிறதுல தான் சார் சிக்கலே.. ஒன்னு செயற்கை கிடைக்கனும் இல்லை இயற்கை ஹார்ட் கிடைக்கனும்.. ஆனா இது ரெண்டுக்குமே வாய்ப்பு ரொம்ப குறைவு சார்.." என்றார் தயங்கியபடி.

அதை கேட்ட ஆதவனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.. ஏன் யாருக்குமே புரியவில்லை.. எல்லோரும் குழம்பி கொண்டிருக்கும் சமயம் அகல்யா அந்த இடத்திலிருந்து எழுந்தவள், "அண்ணா நான் கோயிலுக்கு போறேன்.. யாரும் என்னோட வர வேணாம்.. அவரு கண் விழிச்சி கேட்டா மட்டும் பக்கத்துல இருக்கற துர்க்கை கோயிலுக்கு வாங்க.. அண்ணி பிள்ளைகளை பாத்துக்கோங்க.." என்றவள் மேலும் யாரிடமும் பேசாமல் விறுவிறுவென சென்று விட்டாள்.

அவளின் பின்னே செல்லவிருந்த ரூபினியை தடுத்து விட்டான்.. மற்றவர்களும் உள்ளிருப்போனை நினைத்து மருகினர்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் ஆதவனின் அருகே வந்த விநாயகம் அகஸ்டினுக்கு இதயம் கிடைத்து விட்டதாகவும் உடனே ஆப்ரேஷன் செய்ய போவதாகவும் தெரிவித்தவர் வேகமாய் அகஸ்டினை ஆப்ரேஷன் தியேட்டருக்கு மாற்றினார்கள்.

எல்லோருக்கும் மகிழ்ச்சியும் சந்தோஷமும்.. உடனே இதை அகல்யாவிடம் கூற வேண்டும் என்ற ரூபினியை ஆப்ரேஷன் முடிந்த பின் அழைத்துக் கொள்ளலாம் என்று விட்டான்.

கிட்டதட்ட நான்கு ஐந்து மணி நேர போராடடத்திற்கு பிறகு அகஸ்டினின் ஆப்ரேஷனை வெற்றிகரமாய் முடித்துவிட்டு வந்தனர் விநாயகம் ஜேன்ஸ் குழுவினர்.

ஆதவன் ஒரு வித எதிர்பார்ப்புடன் அவரை பார்த்தான்.. அவனை பார்த்த விநாயகத்தின் முகத்தில் புன்னகையுடன் அவனின் தோளை அழுத்தினார்.

" ஆதவன் சார் சார் ஐ காப்பாத்திட்டோம்.. ஆனா.." என்றவரை முடிக்க முடியாமல் தடுமாறி நின்றார் விநாயகம்.

" ஆனா என்னாச்சி விநாயகம்.. அது தான் ஆதவனுக்கு ஒன்னும் ஆகலையே.. அப்புறம் என்ன.. ஒரு நிமிஷம் இருங்க.." என்றவன் சந்தோஷமாய் தன்னவளிடம் திரும்பி,

"ஹனி போய் அகல்யாவை கூட்டிட்டு வா.. கோவில்ல இருப்பா.. அவளுக்கு தான் இதை முதல்ல சொல்லனும்.. போ சீக்கிரம் போயிட்டு வா.." என்று அவளை துரத்த அதற்குள்ளாக விநாயகம்,

"அவங்க வரமாட்டாங்க சார்..இனி எப்பவும் அவங்க வரமாட்டாங்க.." என்றவரின் குரலில் வலி இருந்தது.

அவரை ஒரு மாதிரி பார்த்த ஆதவன், "புரியலை விநாயகம் வரமாட்டாங்கன்னா.. நீங்க என்ன சொல்ல வர்றீங்க.." என அவரிடம் கேட்டாலும் அவனின் உள்ளுணர்வு எதையோ கூறியது.

" சார் ஐ ஆம் சாரி சார் நான் உங்ககிட்ட மறைச்சிட்டேன் சார்.. அது வந்து அகஸ்டின் சாருக்கு ஆப்ரேஷன் பண்ணி வேற ஹார்ட் பொருத்தனமே அது யாரோடதுன்னா.." என்றவர் முடிக்க முடியாமல் வேர்வை முகத்தில் பூக்க பதட்டத்துடன் நின்றிருந்தார்.

" யாரோட ஹார்ட் அது.." என்றான் விழிகளை உயர்த்தியவாறு.

அவனின் மனம் அதீதமாய் பதட்டமடைந்தது.. அவனுக்கு மட்டுமல்ல அங்கே இருந்த அனைவருக்குமே அப்படி தான் இருந்தது.


ஒரு முடிவுடன் நிமிர்ந்த விநாயகம், "சார் அது அகல்யா மேடத்தோட ஹார்ட் தான் சார்.. அவங்க தூக்க மாத்திரை போட்டு சூசைட் பண்ணிட்டாங்க சார்.. எங்ககிட்ட கடைசி நிமிஷத்துல சார் சொன்னாங்க.. நான் எவ்வளவோ வேணாம்னு சொல்லியும் அவங்க கேட்கலை சார்.. நான் என்னோட இத்தனை வருஷ கேரியர்ல இது மாதிரி ஒரு பெண்ணை பார்த்ததில்லை சார்.. அவங்க கடைசியா என்கிட்ட கேட்டது இது தான் சார்.. என் புருஷனை காப்பாத்தி என் பசங்ககிட்ட ஒப்படைக்க வேணும் டாக்டர்.. என்க்கு வேற வழி தெரியலை சார்.." என்றார் கண்ணீருடன்.

அங்கிருந்த அனைவருக்கு அது அதிர்ச்சியை தான் கொடுத்தது.. ஏன் அங்கிருந்த எல்லோருக்கும் அவள் மேல் கோபம் கூட உண்டானது.. ஆனால் அதை காட்டுவதற்கு கூட அவளின் உயிர் இல்லையே. . உயிரற்ற உடலை அவர்களின் முன்னே அல்லவா காட்டினார்கள்.

எல்லோரும் அவளின் நினைவில் அழுது கொண்டிருக்க மற்றவர்களுக்கு அகஸ்டினிடம் எப்படி இந்த விடயத்தை சொல்வது என்ற தயக்கம் போட்டி போட்டது.. அதை விட அவனால் இதை தாங்க முடியுமா.. அங்கிருந்த எல்லோருக்கும் தெரியும் அவன் அகல்யாவின் மேல் வைத்த அதீதமான நேசம்.

விட்டுப் போனவளை நினைத்து அழுவதா..? இல்லை உயிருடன் மீண்டு வந்தானே அவனுக்காக அழுவதா..? யாருக்கும் எதுவும் புரியவில்லை.. ஆனால் அவர்களின் கண்களில் கண்ணீர் கடலாய் பொங்கியது.

ஆதவனுக்கு எப்படி தன் நண்பனை சமாளித்து பிள்ளைகளை சமாளிப்பது என அடுத்தடுத்த கேள்வியில் தன் தங்கைக்காக அவனால் அழ கூட முடியவில்லை.. தன் இமை மீறி வழிந்த கண்ணீரை தன் கைகளால் துடைத்தவன் விநாயகத்திடம் திரும்பி,


"அகஸ்டின் எப்போ கண் விழிப்பான் விநாயகம்.." என்றான் வெறுமையான பார்வையில்.

" இன்னும் ஒன் அவர்ல கண் விழச்சிருவார் சார்.. பிளட் அதிகம் லாஸ் ஆனாதால கொஞ்சம் மயக்கமா தான் இருப்பாறு.. அதனால இப்போ அவருகிட்ட எந்த அதிர்ச்சியான தகவலையும் தர வேணாம் சார்.." என்றார் தயக்கமாய்.

அதை கண்டு விரக்தியாக சிரித்தவன், "அவன்கிட்ட எதுவும் மறைக்க முடியாது விநாயகம்.. அவனா தோண்டி துருவறதுக்குள்ள நாம அவன்கிட்ட சொல்லிடனும்.. அப்படி அவனா கண்டுபிடிச்சா அது இன்னும் பேராபத்து விநாயகம்.. நான் சொல்லிக்கிறேன்.. ஆனா ஒரு வார்த்தை முன்னாடியே நீங்க சொல்லிருக்கலாமே.." என்றான் மனதை வதைத்த கேள்வியில்.

விநாயகமோ தயங்கியபடி அவளின் போனை எடுத்து அவனிடம் நீட்டியபடி, "சார் ரொம்ப ஸ்டெரியின் பண்ணா இதுல இருக்கற ஆடியோவை காட்ட சொன்னாங்க சார்.. உங்க எல்லார்கிட்டேயும் சாரி சொல்ல சொன்னாங்க சார்.. அதுல ரெண்டாவதா இருக்கற வீடியோ உங்களை கேட்க சொன்னாங்க சார்.." என்றபடி இன்னொரு கடிதத்தை எடுத்து கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றார்.

அவருக்கும் வலித்தது.. ஆனால் யாரிடம் எதை சொல்லி ஆறுதல் படுத்துவது என்று தெரியாமல் அங்கிருந்து சென்று விட்டார் அவர்.. பின்னே அவருக்கு மிகவும் படித்தமான தம்பதிகளின் முதல் பட்டியலில் இருப்பவர்களே இவர்கள் தானே.

இருவருக்கும் ஒருவரின் மேல் எத்தனை காதலை வைத்துள்ளனர்.. அவரின் கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்தது.. ஆனால் யாரிடமும் சென்று ஆறுதல் தேட முடியவில்லை.. அவரின் மருத்துவ வாழ்வில் அவரை கலங்கடித்த கதை இவர்களுடைய தான்.

அதே நேரம் இங்கே அகல்யா தங்களுக்கு என கொடுக்கப்பட்டிருந்த அந்த ஆடியோவை ஆன் செய்தான் ஆதவன்.. அதில் அகல்யாவின் குரல் ஒலித்தது.



நிழலை வருடும் நிஜம் தொடரும்..🌹


அடுத்த பாகம் சீக்கிரம் வரும் பட்டூஸ்.. போன பதிவுக்கு லைக் கமெண்ட் பண்ண பட்டூஸ்க்கு நன்றி.


சாரி பா.. நானும் இதிலேயே இறுதி அத்தியாயம் 1 முடிச்சிடலாம்னு பார்த்தேன்.. ஆனா முடிக்க முடியலை பா.. யாரும் கோபிச்சிக்காதீங்க பட்டூஸ்.. இறுதி அத்தியாயம் 1 இன்னும் இருக்கு முடியலை பா.. வெயிட் பட்டூஸ்.