• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிலவு : 10

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
583
372
63
Tamil Nadu, India
இதய வானில் உதய நிலவே!

நிலவு 10

"ஐ லவ் யூ வர்ஷ்!" என்று சத்தமாகக் கூறியவாறு அவனைத் தாவியணைத்து கண்களை இறுக மூடிக் கொண்டு அவன் ஸ்பரிசத்தில் சிலிர்த்துப் போனவள் விழி திறந்ததும் அதிர்ந்து நின்றாள்.

அவள் முன் வர்ஷனும் இல்லை. அவள் இருந்தது பூங்காவிலும் இல்லை. மாறாக அவளது வீட்டில் கட்டில் மேல் கிடந்தாள். ஆம்! அது அதியின் கனவு.

கண்ணை கசக்கிக் கொண்டு தான் அணைத்ததைப் பார்க்க பஞ்சுத் தலையணை அவளைப் பார்த்து எள்ளி நகையாடியது.

"ச்சே! கனவா" என தலையில் தட்டிக் கொண்டவளின் புத்தியில் பளீரென மின்னல் வெட்டியது போல் தோன்றியது அவனிடம் காதலை கூறியது!

அவளால் அதைச் சாதாரணமாக ஒதுக்கிவிட முடியவில்லை. வழக்கமாக அவளது கனவில் வருவது எல்லாமே அவள் ஆழ் மனதில் உள்ள விடயங்களே! அப்படி என்றால் தனது ஆழ்மனத்தில் உதய வர்ஷன் இருக்கின்றான்.

மனதின் அடியாழம் வரை அவனை நினைக்க வைத்த உணர்வுக்கு இன்று பதில் தெரிந்தது. "காதல்" மூன்றெழுத்துக்களில் முழு உலகையுமே, ஒட்டுமொத்த உணர்வுகளையுமே, அனைத்து அணுக்களையுமே ஆட்டிப் படைக்கும் மாய உணர்வு.

"நான் உதய்யை லவ் பண்றேனா? அவன் மேல நான் வச்சது அன்பு இல்லை காதலா? காட்! அவன் என் மேல கொண்ட காதல் எனக்கும் அவன் மேல வந்திருக்கா?" கேள்விகளை அடுக்கடுக்காக கேட்டாலும் அத்தனைக்கும் இதயம் சொன்ன பதில் ஆம்.

அதியாவுக்கு உதய் மீது காதல்! உணரப்படாத காதல் உணரப்பட்டது. இனம் புரியாத இணைப்புக்கு பெயர் கிடைத்தது என்ன தான் ஏற்க மறுத்தாலும் இதுவே உண்மை.

இன்னொருவர் கூறினால் 'அப்படியொன்றும் இல்லை. நீ சொல்றது பொய்' என மறுத்த விடலாம். ஆனால் அவளே உளப்பூர்வமாக, உணர்வுரீதியாக அறிந்து விட்டாள். இனி எது சொல்லியும் தப்பிக்க முடியாது.

அவன் மேல் கொண்ட காதலால் இதயம் துடியாய்த் துடித்தது. இருந்தாலும் ஷாலுவை இழந்து விடுவோமோ என்ற அச்சம் அவளது காதலைத் திரை கொண்டு மறைத்தது. என்றுமே உதய் ஷாலுவை தன்னை விட்டும் பிரிக்க மாட்டான். அவனுக்குத் தான் ஷாலினி மீது அத்துனைப் பாசம். ஆனால் அவன் மீது காதல் கொண்டு தன்னால் கவனிக்கப்படாது போனால் அவள் பாதிக்கப்படுவாளோ என்ற கேள்வி பூதாகரமாகத் தோன்றி வருத்தியது.

தினமும் அவனது நினைவு மனதில் தோன்றி வருத்தியது. அவனைக் காண நாடி நரம்பெல்லாம் துடித்தன. இருந்தும் அடக்கிக் கொண்டாள் அதிய நிலா.

இப்படி நான்கு மாதங்கள் ஓடியே போயின. அவன் மீதுள்ள காதலை மறக்கவும் முடியாமல் அவனைப் பார்க்க வேண்டுமென்ற நினைப்பைத் தவிர்க்கவும் முடியாமல் தன்னைத் தானே வருத்திக் கொண்டாள் காரிகை.

~ப்ளேஷ் பேக் ஓவர்~

கடந்த கால நினைவுகளில் மூழ்கியிருந்த அதி சிந்தனை கலைந்து உறங்கிக் கொண்டிருக்கும் ஷாலுவைப் பார்த்தாள். உதய் கொடுத்த பொம்மையை இறுக அணைத்து தூங்கிக் கொண்டிருந்தாள் அவள்.

அவளது தலையை வருடியவளுக்கு இன்று வர்ஷனின் நினைவு அதிகமாக வருவது புரிந்தது.

"உதய்! நீ இப்போ எங்கிருக்க டா? உன்னைக் கண்டு நாலு மாசமாச்சு. எங்கே எப்படி இருப்பன்னு கூட தெரியாதவளா இருக்கிறேன். என்னன்னே தெரியல டா. இப்போலாம் உன்னைப் பார்க்க மனசு ரொம்ப துடிக்குது. பழையபடி என் கிட்ட வருவாயா?

நீ என்னைக் கண்டு கண்ணுல மின்னலோட வரணும். இதயானு காதல் பொங்க கூப்பிடனும். எனக்காக கவிதை சொல்லணும். உன்னை என் கண்ணால பார்க்கனும். வருவியா டா?" என்று ஏக்கமாகக் கேட்டவள் கண்களில் கண்ணீர் துளித்தது.

அன்று ஆபிஸ் முடிந்து வரும் போது பிரகாஷ்சை சந்தித்தவளோ அவனிடம் உதய் பற்றி கூறியதோடு அவனது நிலமைக்காக வருத்தம் தெரிவித்தாள்.
அவளை சமாதானப்படுத்திய பிரகாஷ் பேச ஆரம்பித்தான்.

"நீ இப்படி நினைக்கிறது தப்பு அம்மு. உதய் உனக்கு கிடைச்சா சின்ன சின்ன சந்தோஷங்கள் கூட உன்னைத் தேடி வரும். அப்படி இருக்கும் போது உன் ஒட்டுமொத்த சந்தோஷமா, உலகமா இருக்கிற ஷாலுவை தொலைக்க விடுவானா? அன்னைக்கு மன கஷ்டத்துல உன் கவனம் சிதறி ஆக்சிடென்ட் ஆகப் போற அளவுக்கு ஆயிடுச்சு. அதுக்கு நீ என்ன விதத்திலும் பொறுப்பில்ல. நீ எப்போவுமே ஷாலுவுக்கு நல்லதை மட்டும் தான் செய்வ அம்மு. அவளை கவனிக்காம விட்டுட்டோமேனு கில்டியா ஃபீல் பண்ணாத" தனது அம்முவின் தலையை வருடினான் பாசமாக.

அவனது அன்பில் உருகியவளுக்கு அவன் சொல்வதில் இருந்த நியாயம் புரிந்தது.

"அது மட்டும் இல்லடா! ஷாலுவுக்கு எதுவும் ஆகாம காப்பாற்றினது யாரு? உதய் தானே? தனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை ஷாலு பாப்பாவுக்கு எதுவும் ஆகக்கூடாது என்று நினைச்சிருக்கான். அதான் அவன் உயிரை துச்சமா நினைச்சு அத்தனை வாகனங்களுக்கும் நடுவுல புகுந்து அவளை காப்பாற்றினான். உதை உன்னையும் ஷாலுவையும் கண்ணுக்குள்ள வெச்சு பார்த்துப்பான். அவனுடைய பிரண்டா எனக்கு இந்த விஷயத்தில் உன் தலையில அடிச்சு ப்ராமிஸ் பண்ணி சொல்ல முடியும்" திடமாக மொழிந்தான் பிரகாஷ்.

அவன் பேச்சில் அவளது மனதில் ஒரு வித தெளிவு பிறந்தது. "எனக்கு புரிஞ்சுது பிரகாஷ். நான் இத்தனை நாளா முட்டாள்தனமா யோசிச்சு இருக்கேன்" என வருத்தமாகக் கூறினாள் அதியா.

"என்ட் இங்கே பார் அம்மு! இப்போ நான் சொன்னது உனக்கு புரிஞ்சிருக்குனு தெரியுது. இருந்தாலும் நீ எப்போவும் நீயா யோசிக்க பழகு. அன்னைக்கு கல்பனாவும் மல்லிகா ஆன்ட்டியும் சொன்னதை அப்படியே கேட்டுத்தான் உதய்யை ஹர்ட் பண்ணினே. அவங்க சொன்னதுல 'ஷாலுவை எப்போவும் கவனமா பார்த்துக்கணும், அவளை சந்தோஷமா வச்சுக்கணும்' அப்படின்னு உனக்கு தேவையான விஷயங்களை மட்டும் எடுத்துட்டு மத்ததையெல்லாம் மறந்துரு. யாராவது நமக்கு ஏதாச்சும் சொன்னா அதை அப்படியே கேட்டு முட்டாள் தனமாக பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டி செயல்படுத்தக் கூடாது. நமக்குன்னு ஒரு சொந்த மூளை இருக்குல்ல. அது கொஞ்சம் யூஸ் பண்ணி யோசிச்சு செய்யணும் ஓகேவா?" எனக் கூறி விடை பெற்றான் பிரகாஷ்.

அவன் கூறியதை இப்பொழுது நினைத்தவளுக்கு தான் கொஞ்சம் கூட யோசித்துப் பார்க்காமல் உதய் மனதைக் காயப்படுத்தியது எத்தனை தவறு என்பது புரிந்தது. 'என்னை அனாதையா உணர வச்ச முதல் ஆள் நீங்கதான்' என்று வலியுடன் அவன் கூறிய வார்த்தைகள் சாட்டையால் அடிப்பது போல் இருந்தது.

"சாரி உதய்! சாரி சாரி. என்னை மன்னிச்சிரு டா. நான் யூஸ் பண்ணுன வார்த்தைகளை நினைக்கும் போது எனக்கே வலிக்குதே. உனக்கு எப்படி வலிச்சிருக்கும்?" தீயில் விழுந்து கதறித் துடித்தது அவளது காதல் கொண்ட இதயம்.

அவனைக் காண வேண்டும். தான் கொடுத்த காயங்களை அன்பெனும் மருந்தால் ஆற்ற வேண்டும். அவனை மடி சாய்க்கும் தாயாக வேண்டும். குறும்புகளில் உள்ளம் மகிழ்ந்தாலும் பொய்யாக கண்டிக்கும் தந்தையாக வேண்டும்.

பாசம் காட்ட சகோதரியாக வேண்டும். சண்டை பிடிக்க சகோதரனாக வேண்டும். அன்பினைத் தேடும் குழந்தையாக வேண்டும். புரிந்துணர்வுடன் தோள் கொடுக்கும் தோழியாக வேண்டும். மொத்தத்தில் அவனுக்கு தானே யாதுமாகிப் போக வேண்டுமென துடித்தாள் அதிய நிலா.

அவன் தங்கியிருக்கும் இடம் சென்று விசாரிக்க, அவன் வெளியூர் சென்றிருப்பதாக கூறினர். அழைக்க அவனது மொபைல் நம்பர் கூட இருக்கவில்லை. அவன் பணிபுரிந்த வைத்தியசாலைக்கு சென்று கேட்க அவனது தொலைபேசி எண்ணை மாற்றி இருப்பதால் தெரியவில்லை என்றனர்.

எங்கே இருக்கின்றான்? எப்படி இருக்கின்றான்? மீண்டும் இங்கு வருவானா? தன்னைத் தேடுவானா? தெரியாமல் வாடினாள் மலர்க் கொடியாள்.

கனத்துப் போன மனதுடன் வீடு வந்தவள் அன்று அவன் பரிசளித்த பெண்டா பொம்மையை எடுத்தாள்.

"எனக்கு நீ வேணும் வர்ஷு. உன்னை நான் காதலிக்கிறேன். அன்னிக்கு நீ சொன்ன ஸ்பார்க் எனக்கு உன் மேல வந்திருக்கு. என்கிட்ட வந்துரு டா" அதனை இறுக்கி நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள் காரிகை.

அவன் தந்த பொக்கேவில் இருந்த டேக்'ஸை எடுத்து சுவரில் அழகாக ஒட்டி வைத்தாள். அந்தக் கவிதைகளைப் பார்த்து ரசித்தாள். "என் பாசமெனும் ஒளி வெள்ளத்தில் உன்னை ஒளிர வைத்திடத் துடிக்கிறேன். ஏற்பாயோ உதய சூரியனே?" என்று அவனுக்காக கவி பாடினாள்.

இப்படி இரண்டு நாட்கள் கடந்தன. அவனது குரல் கேட்க ஏங்கினாள். அவன் வந்து விடமாட்டானா? முன்பு போல் அன்பைப் பொழிய மாட்டானா? என்று உள்ளம் உருகினாள் மெழுகாக.

ஷாலுவுக்கு ஸ்கர்ட் போட்டு அழகு பார்க்க எண்ணிய அதி அவளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க எண்ணி அவளைச் சுமதியின் வீட்டுக்கு அனுப்பி விட்டு ஷாப்பிங் மால் சென்றாள். அதில் இன்று சிறுவர்களுக்கான புதிய விளையாட்டுக்கள் அடங்கிய அரங்கொன்று திறக்கப்படுவதாக இருக்க கூட்டம் பெருகி இருந்தது.

மிகவும் பிரபலமான ஒரு சினிமா டைரக்டர் அதைத் திறந்து வைப்பதாக இருந்தது. உள்ளே நுழைந்த அதியைக் கண்டு ரிசெப்ஷனில் இருந்த பெண் அவளருகில் வந்து "மேடம்" என அழைத்தாள்.

"சொல்லுங்க..." என்று அவளைப் பார்த்தாள் நம் நாயகி.

"ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா? ப்ளீஸ் அர்ஜென்ட்" என்று கேட்க, "என்ன ஹெல்ப்?" என்று புரியாமல் பார்த்தாள்.

"நம்ம கிட்ஸ் ஷாப்பிங் மால் ஸ்போர்ட்ஸ் சேக்ஷன் இன்னிக்கு ஓபன் பண்ணுறதுக்கு டைரக்டர் சிவனாத் வராரு. அதுக்காக நிறைய கிட்ஸ் கேம்ஸ் டான்ஸ் எல்லாம் அரேஞ்ச் பண்ணி இருக்கோம். பெண்டாவோட கப்பல் டான்ஸ் இருக்கு. ஒரு ஆண் பெண்டா இன்னொரு கேர்ள் பெண்டா இருக்கு.

இதுல கேர்ள் பெண்டாவா நடிக்க இருந்த ரீமாவுக்கு திடீர்னு சுகமில்லாம போச்சு. நாம இன்னும் வேற அர்ரேன்ஜ்மன்ட்ஸ் பண்ணனும்குறதால அதுக்கு பதிலா எங்களாலயும் நடிக்க முடியல. அவ சைஸ்கு டிரஸ் இருக்கிறதால வேற யாருமே எங்களுக்கு செட்டாகல. உங்க ஹைட் அதுக்கு கரெக்டா இருக்கு. ப்ளீஸ் உங்களுக்கு பிராப்ளம் இல்லனா அந்த கேரக்டரா நடிக்க முடியுமா?" என கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள்.

பெண்டா என்ற ஒற்றை வார்த்தை அவளை சம்மதிக்க வைக்க "ஓகே" என்று தலையசைத்தாள்.

"அதுல ஒரு சப்ஜெக்ட் இருக்கு. என்னனா ரெண்டு பெண்டாஸ் முதல்ல யாருன்னு தெரியாம டான்ஸ் ஆடணும். அப்புறம் அந்த முகமூடிய கழற்றி முகத்தை பார்த்துக்கிட்டதும் செம ஷாக். ஏன்னா அவங்க ஏற்கனவே தெரிஞ்சவங்க. அப்புறம் கேர்ள் பெண்டா போய் அடுத்தது கையைப் பிடித்து உணர்ச்சிவசப்படனும். அப்படித்தான் நடிக்கணும்" என்று சொல்லி அந்த உடையைக் கொடுத்து விட்டுச் சென்றாள் அப்பெண்.

அதி அந்த உடையை அணிந்து கொள்ள ஷோ ஆரம்பமானது. பெண்டா டான்ஸ் என்று அழைக்க அதி ஆடியாடி மேடை ஏறியதும் மறுபக்கத்தில் ஒரு ஆண் பெண்டா ஆட்டத்தோடு வந்தது. இரண்டும் நடனம் ஆடிய படி மோதிக் கொள்ள அதி முகமூடியைக் கழற்றினாள்.

அடுத்த நொடி அந்த ஆடவனும் முகமூடியை அகற்ற அவனது முகத்தைக் கண்டு இன்பமாய் அதிர்ந்தாள் மாது.

அந்தப் பெண் நடிக்க சொன்னது போன்று உண்மையாக அதிர்வு தோன்ற "உ.. உதய்" என அவள் அதிர அதே அதிர்வுடன் அவளைப் பார்த்தான் உதய வர்ஷன்.

அதி ரிசெப்ஷனிஸ்ட் கூறியதை மறந்து ஓடிச் சென்று அவனை அணைத்துக் கொள்ள அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது. அவனும் அவள் தலையை வருடி விட, பின் இருவரும் கைகோர்த்து நடமாடி முடிக்க கைத்தட்டல்கள் அவ்விடத்தை நிறைத்தன.

"ப்பாஹ்! நிஜமா செம எக்ஸ்பிரஷன்ங்க. கையைப் பிடித்து இருந்தால் கூட நல்லா இருந்திருக்காது. ஹக் பண்ணி அப்பப்பா ஒரு நிமிஷம் எங்க மனச டச் பண்ணிட்டீங்க. தாங்க் யூ" என அந்தப் பெண் புகழ்ந்து விட்டு செல்ல, ஷாலுவிற்கு உடை வாங்கி அதி தன்னவனைத் தேடினாள்.

"வர்ஷு! வர்ஷு" என்று விழிகளை அங்குமிங்கும் சுற்றிச் சுழல விட்டாள். சுற்றம் மறந்து திரிந்தவள் யார் மேலோ மோத பளிச்சென்ற மின்னலுடன் நிமிர்ந்தாள்.

அவளது கணக்கு தப்பாதது போன்று அவளவனே நின்று இருந்தான். அவளிடம் "பார்த்து மெதுவா போங்க" என்று கூறியவன் முகத்தில் பளிச்சென்ற புன்னகை.

அவனது சிரிப்பில் இமை சிமிட்டவும் மறந்து போனவளைக் கடந்து சென்றான் உதய்.

அவன் செல்வதை உணர்ந்து "உதய்! எங்கே போற? நான் உன்னைத் தேடி வருவேன்னு சொன்னல்ல. அது மாதிரி உன்னைத் தேடி வந்துட்டேன். உன் கூட நிறைய பேசணும்" என்று எதிர்பார்ப்பு மின்ன சொன்னாள் அதிய நிலா.

"பேசனுமா? சரி பேசுங்க" கைகளை மார்புக்குக் குறுக்காக கட்டியவாறு அவளை ஏறிட்டான் உதய்.

இப்பொழுதும் 'பேசுங்க' என்று மரியாதைப் பன்மையில் அழைத்தான். ஆனால் முன்பிருந்த உரிமை உணர்வு இல்லாதது போல் தோன்ற அவனையே பார்த்தாள்.

அவள் முன் சொடக்கிட்டு "ஏதோ பேசணும்னு சொன்னீங்க. சொல்லுறதைக் கொஞ்சம் சீக்கிரமா சொல்லுங்க. எனக்கு இம்போர்டன்ட் ஒர்க் இருக்கு" கையைத் திருப்பி வாட்சைப் பார்த்துக் கொண்டு சொன்னான் அவன்.

"என்ன டா ஒரு மாதிரி பேசுற? உனக்கு என் மேல இருந்த கோபம் போகவில்லை என்று புரியுது. நான் பண்ணது மன்னிக்க முடியாத தப்புத் தான் உதய். இருந்தாலும் அதை சரி செய்ய எனக்கு வாய்ப்பு கொடு. கொட்டுன வார்த்தைகளை திருப்பி வாங்க முடியாது. தந்த வலியை இல்லாமல் செய்ய முடியாது. ஆனா நீ எதிர்பார்த்த பாசத்தை முழு மனசோடு தந்து என் தப்பை சரி செய்ய ட்ரை பண்ணுறேன்" கெஞ்சுதலுடன் மொழிந்தாள் மங்கை.

"முடிந்து போன கதைகளை எதுக்கு திரும்ப பேசுறீங்க? லீவ் இட்! நான் போகலாமா" என அனுமதி கேட்டவனின் ஒட்டுதலின்மை இவளுக்குப் புதிது!

அவன் குரலில் முன்பிருந்த கலகலப்பு சற்றுமில்லை. முகத்திலும் குறும்பும் பிரகாசமும் இல்லை. வேறு ஒரு உதய்யைப் பார்ப்பது போலிருந்தது.

"என்னை மறந்துட்டியா உதய்?" அவன் தன்னை மறந்து விட்டானோ எனக் கேட்டும் போதே மனம் வலித்தது.

"மறக்கக்கூடிய ஆளா நீங்க? உங்களை என் வாழ்க்கையில மறக்க முடியாது. இந்த உதய் மனசுல நுழைந்து அவனைக் காதலில் வி ழவைத்த முதல் பொண்ணு நீங்க தான் அதியநிலா" அவளது பெயரை அழுத்தமாக உச்சரித்தான் வேங்கை.

"அப்போ.. எதுக்கு தெரியாத மாதிரி, வேற யார் கூடவோ பேசற மாதிரி பேசுற? வழக்கம் போல பேசு"

"வழக்கம் போல பேச நமக்குள்ள இருந்த பழக்கம் அறுந்து போச்சு. அதனால அப்படி பேச இனி எப்போவும் முடியாது. எனிவே எங்க கிட்ஸ் கமிட்டி நடாத்தின ஷோ'ல நடிச்சு தக்க தருணத்தில் பெரிய ஹெல்ப் பண்ணி இருக்கீங்க. தேங்க்யூ சோ மச் அதியா" புன்முறுவல் கோட்டினான் காளை.

அவன் வேறு யாரோ போல் நன்றி கூறியது பிடிக்கவில்லை என்றாலும் "வெல்கம்" என்று கூறியவளைப் பார்த்து,

"ஓகே! நான் போயிட்டு வரேன். பை" என கையசைத்து விட்டுச் சென்றான் உதயா! அவனது முதுகை வெறித்துப் பார்த்திருந்தாள் அதியா....!!

நிலவு தோன்றும்....!!🌛

✒️ ஷம்லா பஸ்லி🤍
 
  • Like
Reactions: Durka Janani