• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிலவு 22

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
789
597
93
Chennai
அத்தியாயம் 22

"போலாமா?" அசையாமல் பார்த்து நின்றவளிடம் கண்ணன் கேட்க, தலையசைத்தாள் லதா.

"நீ கால் பண்ணும் போது நான் கவனிக்கல. நீ தான்னு கெஸ் பண்ணி வர்றதுக்கு கொஞ்சம் லேட் பண்ணிட்டேன் ஓகே!" என்று அவன் விளக்கம் கொடுத்தான்.

"என்ன டா நடக்குது இங்க? எங்க கூப்பிடுற எங்க லதாவை? அதெல்லாம் அவ ஒன்னும் வர மாட்டா. நீ கிளம்பு!" வேண்டுமென்றே நீலகண்டன் கூற,

"தாத்தா!" என்று சிணுங்கினாள் லதா.

"நான் சொன்னா இப்படி தான் சிரிச்சுட்டு நின்னுட்டு இருப்பான். நீயே சொல்லும்மா அப்ப தான் கிளம்புவான்!" என இன்னுமே அவர் பேச,

"ஓஹ்! அப்படியா? பாக்கலாமா?" என்றவன்,

"எங்க? லதா! என்னை பார்த்து சொல்லு பார்ப்போம்!" என்று அவனும் விளையாட்டில் சேர்ந்து கொள்ள,

"போங்க நீங்க! என்னை கிண்டல் பண்றீங்க ரெண்டு பேரும்!" என்றவள் கோபம் போல கட்டிலில் சென்று அமர்ந்து கொண்டாள்.

"இப்படி கவுத்துட்டியே லதாம்மா! நான் தான் அவுட்டா? அப்ப முடிவு பண்ணிட்ட கிளம்பனும்னு?" என்று சிரித்த நீலகண்டன்,

"இங்கேயே இருங்க ரெண்டு பேரும். இதோ வர்றேன்!" என்று சென்றார்.

அவர் சென்றதும் லதா முறைக்க, "சும்மா!" என்று கண் சிமிட்டியவன் அவள் அருகில் வந்து அமர்ந்தான்.

"ரெண்டு நாள் ஆச்சா நான் வேணுமா வேண்டாமான்ணு முடிவு பண்ண உனக்கு?" என்று அவள் தலையில் கொட்டுவது போல செல்ல,

"நீங்க மட்டும்? வா வானு சொல்லிட்டு கிளம்பிட்டிங்க." என்றாள் சலுகையான குரலில்.

"தேங்க் யூ லதா! இட் மீன் அ லாட்!" என்று புன்னகைத்தவன் இப்பொழுது தான் நிம்மதியாய் உணர்ந்தான்.

நீலகண்டன் ரமாவை அழைத்து வந்திருந்தார் இருவருக்கும் திருஷ்டி எடுக்க வேண்டும் என்று.

ரமா வந்து இருவருக்கும் மகிழ்ச்சியோடு அதை செய்து முடிக்க, இருவரும் நீலகண்டன் காலில் விழுந்து எழுந்தனர்.

"இப்ப கிளம்பு டா.. மகராசியா போய்ட்டு வா!" என்றார் மனமார்ந்து.

"கிருஷ்ணன்..." என்று லதா சொல்லவுமே,

"அவனுக்கு நான் போன் பண்ணி சொல்லிடுறேன். ஏற்கனவே வர முடியலைன்னு அவ்வளவு வருத்தப்பட்டான். இதை சொன்னா அவனும் நிம்மதியா வேலையை பார்ப்பான்!" என்றவர்,

"கண்ணா! எப்பவும் இதே மாதிரி இருக்கனும் நீங்க!" என்றவர் மனம் நிறைந்து இருந்தது கண்ணன் லதாவின் கைகளை பற்றியபடி காலில் விழுந்து எழுந்து நின்ற கோலம்.

"செல்லும் வழியில் அமைதியாய் அமர்ந்திருந்த லதாவை திரும்பி திரும்பிப் பார்த்து வந்தான் கண்ணன்.

"என்ன பாக்குறீங்க?" ஒரு கட்டத்தின் மேல் முடியாமல் அவள் கேட்டுவிட,

"சும்மா தான். இப்ப தான் சில விஷயங்கள் நோட் பண்றேன்!" என்றதும் விழி விரித்தவள் அவன்புறம் திரும்ப, அதற்கும் ஒரு கண் சிமிட்டல் அவனிடம்.

"ரொம்பத்தான்!" லதா சொல்ல,

"இவ்வளவு நாளும் தெரியலையானு தானே கேட்க போற?" என்று அவனே கேட்க, பதில் கூறவில்லை அவள்.

"நிஜம் தானே! கேட்க வந்ததை ஸ்டாப் பண்ணாத! கண்ணை மூடிட்டு இருந்திருக்கேன். இப்ப தானே திறந்து விட்ருக்க!"

"நான் எதுவுமே கேட்கல. போதும். இனி வேண்டாம்!" என்றாள் உடனே.

"அப்ப புதுசா ஸ்டார்ட் பண்ணலாம்ன்றியா?"

"எது?"

"அதான் மா நம்ம லைஃப்! நீ என்ன நினச்ச?"

"அதிகமா பேசுறீங்க. இப்ப அராஜகமா பேசுறீங்க. பேசாதத்துக்கும் சேர்த்து!" என்றாள் முறைப்பாய்.

"நான் எப்பவுமே இப்படி தான். நடுவுல கொஞ்ச நாள் பேய் புடிச்சு போச்சு. அதான் ஓட்டி விட்டல்ல?"

"ப்ச்! என்ன நீங்க? என்ன பேசினாலும் அங்கேயே வந்து நிக்கிறீங்க?"

"வேற என்ன பண்ண? என்ன பேசினாலும் எனக்கு ஒன்னு மட்டும் மறக்க முடியல" என்றதும் அவள் நிஜமாய் முறைக்க,

"ப்ச்! உன்னை டார்ச்சர் பண்ணேன்ல? அதை சொல்ல வந்தேன். போகுது பாரு நினைப்பு!" என்றான் அவள் எண்ணம் புரிந்து.

"நீங்க பேசுறதே புரியல. நானே வீட்டுல இருக்கவங்களை எப்படி ஃபேஸ் பண்றதுன்ணு டென்சனா இருக்கேன். நீங்க வேற!" என்றவள் நிஜமாய் அவர்களிடம் ஒரு வார்த்தை வருகிறேன் என்று கூட கூறாமல் வருவதில் கொஞ்சம் பதட்டமானாள்.

"நானும் எதுவும் சொல்லல. நிஜமா அவங்க சர்ப்ரைஸ் ஆகுறாங்களா இல்லையானு பாரு!" என்று சொல்லி தான் அழைத்து வந்தான் கண்ணன்.

நினைத்தது போலவே கொண்டாடிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும் விசாலாட்சியை.

காரில் அமர்ந்தபடியே கண்ணன் இறங்க இருந்தவள் கைகளைப் பற்ற, கேள்வியாய் திரும்பிப் பார்த்தவளை கண்களால் அமர சொல்லிவிட்டு விசாலாட்சிக்கு மொபைலில் அழைக்க,

"சொல்லு டா. எப்ப வீட்டுலேர்ந்து கிளம்பின? மாமாகிட்ட கூட சொல்லலயாம். எங்க இருக்க? ஆபீஸ் இல்லையே? இதென்ன பழக்கம்? இதுக்கு தான் சொல்றது பக்கத்துல ஒரு பொண்ணு வேணும்னு. எப்ப வீட்டுல இருக்குற எப்ப வெளில போறனு எதாவது தெரியுதா?"

அத்தை புத்தி சொல்லும் நேரத்தை நினைத்து கண்ணன் சிரிக்க, ஸ்பீக்கர் மூலம் கேட்டுக் கொண்டிருந்த லதாவும் மெலிதாய் சிரித்தாள்.

"வந்துட்டேன் அத்தை. கொஞ்சம் வெளில வாங்களேன்!" என்று கூறவும்,

"ஏன் டா? என்னாச்சு?" என்றபடி வந்தவர் பார்க்க, காரில் இருந்து இறங்கிய கண்ணனைப் பார்த்து,

"என்ன கண்ணா? எதுவும் எடுத்துட்டு வரணுமா?" என்றார். சாதாரணமாய் இப்படி காரில் இருந்து கொண்டு அழைக்க மாட்டான். எதாவது மறந்து வைத்து சென்றிருப்பானோ என்ற அளவில் மட்டும் தான் அவர் எண்ணம் இருந்தது.

காரில் இருந்து இறங்கியவன் அடுத்த பக்கம் நடந்து வந்து கதவை திறக்கவும் லதா வெளிவந்து அவன் அருகில் நிற்க, தன் அத்தையை பார்த்து புன்னகைத்து நின்றான் கண்ணன்.

நிஜமாய் நம்ப முடியாமல் அப்படியே நின்றுவிட்டார் விசாலாட்சி. சுத்தமாய் எதிர்பார்க்கவில்லையே!

இரண்டு நாட்கள் முன் என்ன பேசினானோ அவளிடம் அதையும் கூறி இருக்கவில்லை கண்ணன். அவளும் வருவதாய் தெரியவில்லை என புலம்பி இருந்தவருக்கு இப்படி சொல்லாமல் கொள்ளாமல் அழைத்து வந்து வாசலில் சர்வசாதாரணமாய் நின்றவனைப் பார்த்து அதிர்ச்சியிலும் சந்தோசத்திலும் பேச்சே வரவில்லை.

"சாரி சித்தி!" மெல்லிய குரலில் லதா கேட்க,

"அத்தை!" என கண்ணனும் உரக்க அழைக்க, தெளிந்தவர்,

"கண்ணா... லதா... என்ன டா நீங்க?" என்றவருக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.

"என்னங்க... என்னங்க..." என்று வீட்டினுள் குரல் கொடுக்க,

"இருங்க அத்தை நான் கால் பண்றேன்!" என கண்ணன் மொபைலை எடுக்கவுமே வெளியே வந்துவிட்டார் கண்ணபிரான்.

"ஹேய் கண்ணா! என்ன டா இது காலையிலே இவ்வளவு பெரிய சர்ப்ரைஸ்?" என்று கூற,

"உள்ள கூப்பிடுங்க!" என்று விசாலாட்சி சொல்ல,

"போய் ஆரத்தி எடுத்துட்டு வா விசா!" என்றதும் தன் தலையிலேயே தட்டிக் கொண்ட விசாலாட்சி,

"யசோ! யசோ!" என்று அழைத்தபடி வீட்டினுள் கிட்டத்தட்ட ஓடினார்.

"விசா பார்த்து..." என்று சிரித்தபடி கூறிய கண்ணபிரான்,

"கண்ணா!" என்று அவனிடம் திரும்பியவர் அணைத்துக் கொண்டார்.

"அண்ணி!" என்று ஆரத்தி தட்டோடு முகம் நிறைந்த புன்னகையோடு ஓடி வந்த யசோதா இருவருக்குமாய் ஆரத்தி சுற்றி வரவேற்க கண்ணன் லதாவின் கைகளை இறுகப் பற்றியபடி இருவருமாய் உள்ளே வந்தனர்.

"லதா ம்மா! இந்த நாளுக்காக தான் காத்துட்டு இருந்தோம். ஆனா இவ்வளவு சீக்கிரம் நடக்கும்னு நினைக்கல டா. ரொம்ப சந்தோசம்" விசாலாட்சி சொல்ல,

"இது சீக்கிரமா?" என்று முறைத்த கண்ணனை கிண்டலாய் சிரித்து லதா பார்க்க,

"அடடே! நீ சொல்லலாம் டா. நியாமானவன் தான்!" என்று முறைத்தார் அத்தை.

"இரு இப்பவே தீஷாகிட்ட சொல்லனும். அவ வேற அப்பப்ப புலம்பிட்டு இருந்தா!"

"இல்ல விசா! நீ புலம்பி இருப்ப. அவ பதிலுக்கு புலம்பி இருப்பா!" என்று சிரித்தார் கண்ணபிரான்.

அந்த வீட்டின் மகிழ்ச்சியே அப்போது தான் திரும்ப வந்ததைப் போல மொத்த உறவுகளுமே சேர்ந்திருக்க, தீஷா வீடியோ அழைப்பில் வந்தாள்.

அனைவரிடமும் பேசிவிட்டு கண்ணன் கைகளுக்கு மொபைல் வர, "முகத்துல வெளிச்சம் டன் கணக்கா இருக்கே! இப்படியே இருங்க!" என்று சொல்லி சிரிக்க,

"சீக்கிரமே அங்க வருவோம் தீஷா!" என்ற கண்ணன் சொல்லில்,

"மறுபடியுமா?" என்று ஒட்டு மொத்த குரலில் ஒன்றாய் ஒரே நேரத்தில் தீஷா முதற்கொண்டு கேட்க, அனைவரையும் முறைத்தவன் பின் சிரித்துவிட்டான்.

"நான் சொன்னது ஹனிமூணுக்கு நான் என் வைஃப் கூட!" என்று முறைப்போடு சொல்ல, மீண்டுமாய் வீட்டினில் ஒரு சிரிப்பு சத்தம்.

அனைவரும் பேசியபடி இருக்க, யசோதா தனியே கழண்டு கொண்டவள் துள்ளலுடன் தன் அறைக்கு வந்து வேகமாய் அலைபேசியை எடுத்து கிருஷ்ணன் எண்ணிற்கு அழைப்பு விடுத்து இந்த நற்செய்தியை சொல்ல காத்திருக்க,

"சொல்லு யசோ! அக்கா வந்தாச்சா? வீட்டுல எல்லாரும் ஹாப்பியா?" என்றவன் பேச்சில் புஸ்ஸென்று ஆனது யசோதாவிற்கு.

"ஹெலோ யசோ?" என்றான் அவள் அமைதியில்.

"இப்ப ஹாப்பியா யசோ? நானும் ஹாப்பி! இப்ப தான் எனக்கு ரிலாக்ஸா மூச்சு விடவே முடியுது. அண்ட் அப்படியே உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் யசோ!" என்றவன் அவளிடம் பதில் இல்லை என்றதும்,

"ஹெலோ! யசோ கேட்குதா? உன்கிட்ட ஒரு முக்கியமா விஷயம் சொல்லனும்!" என மீண்டும் அழுத்தமாய் கூற, அதை கேட்கும் நிலையில் அப்பொழுது இல்லை அவள்.

"என்ன சொல்லணும்? எப்பவும் இப்படி தான் நீங்க. நான் மட்டும் என்ன நடந்தாலும் கால் பண்றேன்ல? ஆனா நீங்க எதுவும் சொல்ல மாட்டிங்க இல்ல? உங்களுக்கு நான்னா அவ்வளவு ஈசியா போச்சு. அன்னைக்கும் இப்படி தான் சொன்னிங்க. இப்பவும் எல்லாம் தெரிஞ்சும் என்கிட்ட நீங்க...." என்றவள் பேச முடியாமல் கண்ணீர் வந்துவிட,

அவள் பேச பேச அவள் முகத்தை கண்களில் கொண்டு வந்து அவன் ரசனையாய் நினைத்தபடி புன்னகையுடன் அமர்ந்திருக்க, சட்டென அவள் அழுகை புரியவும்,"ஹேய் யசோ யசோ!" என்று அழைத்தான் உடனே!

"பேசாதீங்க! என்னை பார்த்தா எப்படி தெரியுது உங்களுக்கு? இது மட்டும் இல்ல. எல்லா விஷயத்திலயும் என்னை நல்லா தெரியும் உங்களுக்கு. ஆனா எதுவும் சொல்ல மாட்டிங்க. நானா தான் சொல்லணும் உங்களுக்கு. ஏன்? அவ்வளவு ஈகோ. எனக்கு நீங்களா கூப்பிட்டு பேசிடவே கூடாதுன்ணு முடிவோட இருக்கீங்க இல்ல. அப்படியே இருங்க."

"யாசோ ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளு யசோ!"

"ஒன்னும் வேண்டாம். நானே கால் பண்ணி நானே தெரிஞ்சிக்கனும். நான் ஒருத்தி! என் நினைப்பை சொல்லணும். ம்ம்ஹும்.. இனி நான் உங்களுக்கு கூப்பிட மாட்டேன். கூப்பிடவே மாட்டேன்" என்றவள்,

"யசோ ஒரு நிமிஷம்! யசோ யசோ!" என கிருஷ்ணன் அத்தனை கத்தியும் போனை வைத்துவிட்டாள்.

தொடரும் நிலா..