• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிலவு 4

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
512
93
Chennai
அத்தியாயம் 4

"இந்த கண்ணா என்னங்க இப்படி இருக்கான்? கிருஷ்ணா முகமே வாடி போச்சு!" விசாலாட்சி கணவனிடம் கூற,

"விசா! அவன் யாரோ ஒரு பொண்ண விரும்புறான்னு லைட்டா தெரியவுமே ஜோசியரை பார்த்து அது சரி வராதுன்னு தெரிஞ்சு என்ன பண்ணணும்னு யோசிச்சுட்டு இருக்கும் போது, தற்செயலா நமக்கு லதா ஜாதகம் அந்த ஜோசியர் மூலமாவே கிடைச்சுச்சு.."

"இந்த பொருத்தம் எங்கேயும் கிடைக்காதுன்னு அவர் பேச்சை நம்பி கிட்டத்தட்ட வற்புறுத்தி தான் நாம இந்த கல்யாணத்தை நடத்தி இருக்கோம்.." கண்ணபிரான் கூறிக் கொண்டு இருக்க,

"வற்புறுத்தியா? என்னங்க..." என விசாலாட்சி பேசும் முன்,

"நான் முழுசா சொல்லிடுறேன் விசா.. அவங்க தாத்தாக்கு இந்த கல்யாணம் பிடிக்கல தானே? லதாக்கு சங்கீதம் பிடிக்கும் தானே? அதை நம்ம ஸ்டேட்டஸ்க்காக மறுத்தோம் தானே?" என்று கேட்க, பதில் பேச முடியவில்லை விசாலாட்சிக்கு.

"எல்லாத்துக்குமே பதில் என்னவோ ஆமா தான்.. அது நமக்கு சின்ன விஷயமா தெரியலாம்.. ஆனா அவங்களுக்கு அப்படி இருக்காது இல்ல? அந்த கோபம்... கோபம்னு சொல்ல முடியாது கொஞ்சம் அதிகமா வருத்தத்துல இருக்கும் போது கல்யாணத்தையும் நாம பண்ணி வச்சுட்டோம்.."

"இப்ப நம்ம கண்ணா உனக்காக மட்டும் தான் அந்த பொண்ணை கல்யாணம் பண்ணி இருக்கான்.. லதாவும் அவங்க தாத்தாவோட சொத்து அவருக்கு கிடைக்கணும்னு ஒரே காரணத்துக்காக கல்யாணம் பண்ணி இருக்கா.. இப்படி இருக்கவங்ககிட்ட நீ ஒரே நாள்ல என்ன எதிர்பார்க்கிற?" என்று கேட்க,

சின்ன சின்ன விஷயங்களாய் தெரிந்தது எல்லாம் இன்று பூதாகரமாய் தெரிந்தது விசாலாட்சிக்கு.

அதை அவரின் முகமே வெளிப்படுத்த, கணவனாய் அவருக்கு ஆறுதல் கூறினார் கண்ணபிரான்.

"எதுவும் உடனே மாறிடாது விசா! நேரம் எடுக்கும்.. நிச்சயம் அவங்க வாழ்க்கை சந்தோசமா மாறும்.. ஆனா உடனே எதிர்பார்க்காத.. அவங்களுக்கு நல்லது தான் நாம செஞ்சிருக்கோம்.. இனி அவங்க வாழ்க்கை அவங்க கையில.." என்று கூற, தெளிவு கிடைக்கவில்லை மாறாய் குழப்பம் தான் வந்தது விசாலாட்சிக்கு.

"அவங்களை வாட்ச் பண்ணு.. ஆனா எதுவும் கேட்டுக்காத.. அவங்களா தான் புரிஞ்சிக்கணும்.. அவங்க லைஃப் அவங்க தானே வாழனும்!" என்ற கணவனின் வார்த்தை மட்டும் தெளிவாய் புரிய,

"புரியுதுங்க.. அவங்களும் சீக்கிரம் புரிஞ்சிகிட்டு சந்தோசமா இருக்கனும்.. அவ்வளவு தான் எனக்கு" என்றார் கலக்கம் கொண்ட மனதுடன்.

*************

"தாத்தா!" என்று வந்ததும் தன் காலில் விழுந்தவளிடம் கோபத்தை காட்டிட முடியாமல் நீலகண்டன் ஆசீர்வதித்து எழுப்ப, லதாவுடன் கூடவே கண்ணனும் ஆசிர்வாதம் வாங்கி இருந்தான்.

"என் மேல கோபமா தாத்தா?" லதா வருந்தி கேட்க,

"உன் மேல கோபப்பட்டு நான் எங்க டா போக போறேன்.. எல்லாம் வருத்தம் தான்.." என்றவருக்கு கண்ணனையும் அவன் குடும்பத்தையும் வைத்துக் கொண்டு அதற்கு மேல் அதை பேச விருப்பம் இல்லை.

"அண்ணி! உங்க வீடு ரொம்ப அழகா இருக்கு.. பழைய காலத்து வீடுன்னு கேள்விபட்டிருக்கேன்.. இன்னைக்கு தான் நேர்ல பாக்குறேன்!" என ரசித்து கூறினாள் யசோதா.

"மேல போய் பாரு கண்ணு.. உனக்கு இன்னும் பிடிக்கும்.." என்றார் நீலகண்டன்.

"மாமா! நீங்களும் வாங்களேன்.. எனக்கு இப்பவே பாக்கணும்!" என கண்ணபிரானை இழுத்துக் கொண்டு மேலே சென்றாள் யசோதா.

"நான் தான் சொன்னேன் இல்ல க்கா.. தாத்தாவாச்சு உன் மேல கோபத்துல இருக்குறதாவது.." என்று சிரித்த கிருஷ்ணன்,

"ரமா ஆச்சியை வர சொல்லி இருக்கேன்.. அவங்க விருந்துக்கு எல்லாம் செய்வாங்க.. நீ கிட்சேன் பக்கமே போக கூடாது.. சரியா? நான் வெரிஃபிகேஷன் முடிச்சிட்டு வந்துடுறேன்!" என்று கூற,

"பார்த்து போய்ட்டு வா கிருஷ்! ஆல் தி பெஸ்ட்!" என்றாள் லதா புன்னகைத்து.

"சரி க்கா.." என்ற கிருஷ்ணன்,

"வரேன்!" என வெறுமனே மட்டும் அருகில் நின்ற கண்ணனிடம் கூறி சென்றான்.

"நீங்க ஆபிஸ் போகல?" ஹாலில் நின்று பேசிக் கொண்டு இருக்க, கிருஷ்ணன் கண்ணனிடம் கூறிவிட்டு கிளம்பவும் கண்ணனை பார்த்து லதா கேட்டாள்.

"இன்னைக்கு எப்படி ஆபீஸ்க்கு?" நீலகண்டன் கேட்க,

"அவங்க தான் போகணும்னு சொன்னாங்க தாத்தா!" என்றாள் லதா.

"ம்ம்ஹும்.. நாளைக்குமே போக கூடாது.. நாளன்னைக்கு பார்த்துக்கலாம்.." என்றார் நீலகண்டன் எதுவும் தெரியாமலேயே..

"ஒரு எமெர்ஜெண்சி.. இப்ப சால்வ் ஆகிட்டு.. நோ நீட்!" என்றவன் வீட்டை சுற்றிலும் பார்வையை ஓட்ட,

"சரி நீ அவரை ரூம்க்கு கூட்டிட்டு போ.. கொஞ்சம் நேரம் ஆகும் இங்க பழக.. நான் ரமாக்கு போன் பண்றேன்.." என்று சமையல் செய்பவருக்கு அழைத்தபடி நீலகண்டன் நகர,

"வாங்க!" என்றவள் அவன் முகத்தையும் பாராமல் பேகை எடுத்துக் கொண்டு அவள் அறைக்குள் செல்ல, வேறு வழி இன்றி பின்னேயே சென்றான் கண்ணன்.

"இது என்னோட தாத்தா வீடு.. இங்க நீங்க எப்படி வேணா இருங்க.. ஆனா அங்க அந்த வீட்டுல சாப்பிடும் போது பேசுனீங்களே அதே மாதிரி ஒரு வார்த்தை கூட இங்க பேசிடாதீங்க.. தாங்க மாட்டாங்க.. கிருஷ் எவ்வளவு சந்தோசமா இருக்கான் தெரியுமா? எனக்கு கல்யாணம் ஆனதை விட ஒரு நல்ல இடத்துல அக்காவை கல்யாணம் பண்ணி குடுத்த சந்தோஷத்துல இருக்கான்.. அது கெடுக்குற மாதிரி இன்னும் ஒரு தடவை நடந்தா நான் பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன்.."

உள்ளே வந்ததும் அவன் முகத்தைப் பார்த்து எச்சரிக்கும் விதமாய் அத்தனை கடுமையாய் கூறினாள் லதா.

நிஜமாய் அதுவரை கிருஷ்ணன் முன் நடந்த விஷயத்தில் கொஞ்சம் வருத்தத்தில் தான் இருந்தான் கண்ணன்.

லதா சொல்லவும் தான் 'இவள் என்ன எனக்கு தடை சொல்வது?' என தோன்ற,

"நீ சொல்லி நான் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்ல.." என்றான் எங்கோ பார்த்து.

"ஆனா நான் சொல்ற படிக்கு நீங்க வச்சுக்க மாட்டிங்கனு நான் நம்புறேன்.." என்று கூறி வெளியேறிவிட்டாள்.

"ஓஹ் காட்!" என்று தலையை அழுந்த கோதிக் கொண்டவன் கட்டிலில் அமந்துவிட்டான்.

அதிக குழப்பம், மன உளைச்சல், வாழ்க்கை செல்லும் திசை புரியாமல் பிடிக்காமல் ஒரு பயம், இதை எல்லாம் விட நம்பியவளுக்கு துரோகம் செய்ததாய் மனம் தன்னை கேட்கும் கேள்வி என அவனை ஒரு வழி செய்து கொண்டிருந்தது அவனது மனசாட்சி.

யாரிடமும் கூற முடியாமல், எங்கேயும் செல்ல முடியாமல் என எதிலோ மாட்டிக் கொண்ட உணர்வு.. அது கூண்டில் மாட்டிய விலங்காய் வழி அறியாது ஓய்ந்து போன தோற்றம் என வெகுவாய் களைத்து ஓய்ந்து தான் போனான்.

விருந்தை தடபுடலாய் தயார் செய்தார் ரமா. கூடவே அருகில் பேசியப்படி யசோதா இருக்க, ரமா ஆச்சிக்கு துணையாய் இருந்தாள் லதாவும்.

"லதா!" என்ற தாத்தாவின் சத்தத்தில் அவர்களிடம் கூறிக் கொண்டு அவள் வெளியே வர,

"நீ என்ன பண்ற உள்ள? கிருஷ்ணா சொல்லிட்டு தானே போனான்? போய் அவருக்கு எதாவது வேணுமான்னு கேளு!" என்று நீலகண்டன்.

"தாத்தா.. நான் சும்மா தான் அங்க பேசிட்டு இருக்கேன்.. ஆச்சி என்னை வேலையே செய்ய விடல.." என்ற லதா,

"அவங்க தூங்குவாங்க தாத்தா.." என்றாள்.

"மணி ஆச்சு டா.. எழுந்தாச்சா பாரு.. காபி ஏதாவது குடிப்பாரா கேளு.. நீ தானே பார்த்துக்கணும்.. உனக்கு முதல் நாள் அங்க எப்படியோ.. ஆனா அவருக்கு இங்க சங்கடம் தானே?"

"சரி சரி! போறேன்.. முதல்ல உங்களுக்கு என்ன வேணும் கேளுங்க.."

"எனக்கு எதுவும் வேண்டாம்.. கண்ணனோட மாமா வெளில காத்தாட நடக்க போறேன்னு சொல்லறார்.. அதான் தோட்டத்து பக்கமா கூட்டிட்டு போறேன்.. உன்கிட்ட அதை சொல்ல தான் கூப்பிட்டேன்.. நீ பாட்டு அங்க உக்காந்து வீட்டுல இருக்க மனுஷன மறந்துடாத.. பார்த்துக்க.. சாப்பிடுற நேரம் வந்திடுறோம்.." என்று கூறி செல்ல, மெதுவாய் தன் அறை பக்கம் சென்றாள் லதா.

அவள் அந்த அறையை விட்டு வெளியேறியதும் அமர்ந்த இடத்தில் தான் இன்னும் அமர்ந்திருந்தான் கண்ணன்.. மனதிலும் கூட அதே சிந்தனை தான்.

உள்ளே சென்றதும் "எதாவது வேணுமா?" என்று பொதுவாய் அவள் கேட்க, அது அவனின் கவனத்தில் விழவில்லை முதலில்.

"உங்களை தான்!" என அழுத்தி அழைக்க, அவன் கவனம் கலைந்தது.

"ப்ச்! என்ன?" என்றான்.

"எதாவது வேணுமா?" என்றவள்,

"தாத்தா கேட்க சொன்னாங்க!" என்றாள்.

"எல்லாத்தையும் தான் வாங்கிட்டியே! இனி என்ன நான் கேட்க?" என்றவன் பதில் புரியாது அவள் விழிக்க,

"அதான் என் நிம்மதி மொத்ததமும் போச்சே! இனி என்னனு கேட்டேன்" என்றான் அவள் பார்வைக்கு விளக்கமாய்.

அதில் அவள் தான் செய்வதறியாது நின்றுவிட்டாள்.

"ஜீவி ரெண்டு நாள்ல வர்றா! அவளுக்கு நான் என்ன பதில் சொல்ல? என்னை என்ன நினைப்பா? என்னால எப்படி அவளை ஃபேஸ் பண்ண முடியும்?" என அவன் மனதின் ஓட்டத்தை இறுக்கத்தை எல்லாம் கொட்ட, அதிர்ந்துவிட்டாள் லதா.

சுத்தமாய் அந்த நினைவே இல்லை அவளுக்கு.. கணவன் விரும்பும் பெண்.. அவள் வரவை நினைத்து பயந்து என கணவன்.. நினைக்கவே நெஞ்சம் அடைத்தது.

பிடித்தோ பிடிக்காமலோ என்றாலும் திருமணம் என்ற பந்தத்தை ஏற்று கொள்ள அவள் இன்று தான் நினைத்திருக்க, உன்னை யார் நினைக்க கூறியது என பொட்டில் அடித்தார் போல கூறி இருந்தான் கண்ணன்.

"இருக்குற உயிரை மொத்தமா பிடுங்கி எறிஞ்சுட்டு என்ன வேணும்னு கேள்வி வேற!" என்றவனுக்கு அத்தனை கோபம், பயம் , ஆதங்கம் என அனைத்தும் தன் மீதே இருக்க, தனக்குள் புழுங்கிக் கொண்டிருந்தவனை தேடி வந்து வாங்கிக் கொண்டு இருந்தாள்.

"என்னை தனியா இருக்க விடு.. அது போதும்.." என்றும் கூறி தலையில் கை வைத்து அவன் அமர்ந்து விட, எப்படி வெளியே வந்தாள் என அவளே அறியவில்லை.

என்ன செய்துவிட முடியும் தான் என நினைத்தவளுக்கு இன்னும் வலுவாய் இந்த திருமணத்தை நிறுத்தி இருக்க வேண்டுமோ என்றொரு எண்ணம் பிறக்க,

காதல் தான் வேண்டும் என அவன் சென்றுவிட்டாள் என மற்றொரு புறம் மனம் கேள்வி எழுப்ப, எவ்வித எண்ணமும் இன்றி தன் வீட்டில் மகிழ்ச்சியாய் இருந்தவள் மனதை கல் எரிந்து குழப்பி விட்டிருந்தான் குழம்பி இருந்த கண்ணன்.

தானே எவ்வித முடிவுக்கும் செல்லாமல் செல்ல முடியாமல் தான் அவளிடம் அவன் எறிந்து விழுந்தது.. அதை அறிந்தோ அறியாமலோ மனம் நொடியில் ஆயிரம் ஆயிரமாய் யோசிக்க, முடிவில் அவளால் இதிலிருந்து எப்படி வெளிவருவது என்று மட்டும் தெரியவே இல்லை.



 
  • Love
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
119
47
28
Tirupur
அவனோட காதல் உசத்தின்னா அவன் தானே பாடுபட்டு கல்யாணத்தை நிறுத்தி இருக்கனும். அதை விட்டுட்டு பொண்ணு அவ தலைமேல எல்லா பாரத்தையும் எறக்கி வெச்சிட்டு இவன் சும்மா இருந்திட்டான். இப்ப வந்து அவளை குறையா சொல்லிட்டு இருக்கான்.
 
  • Haha
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
512
93
Chennai
அவனோட காதல் உசத்தின்னா அவன் தானே பாடுபட்டு கல்யாணத்தை நிறுத்தி இருக்கனும். அதை விட்டுட்டு பொண்ணு அவ தலைமேல எல்லா பாரத்தையும் எறக்கி வெச்சிட்டு இவன் சும்மா இருந்திட்டான். இப்ப வந்து அவளை குறையா சொல்லிட்டு இருக்கான்.
Stupid boy pa🤣🤣