• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிலவு 6

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
512
93
Chennai
அத்தியாயம் 6

"தீபன்! தீபன் கேட்குதா?!" ஜீவிதா அழுகை குரலோடு பேச,

"கேட்குது ஜீவி.. ஏன் அழுற? இப்ப எங்க இருக்க?" என்றான் கண்ணன் தன் விஷயத்தை கூறாமல்.

"தீபன் எப்படி இருக்கீங்க?!" என்றாள் விசும்பலோடே..

"நான் இருக்கேன்.. நீ சொல்லு.. என்ன பண்ற? கிளம்பிட்டியா? எப்ப வர்ற? இப்ப ஏன் அழுற?" என்று கேட்கும் பொழுதே இப்பொழுதே சொல்லி விடலாமா, நேரில் வரட்டுமா என்றெல்லாம் மனம் யோசிக்க, தன் பிரச்சனைகளோடு அவள் அழுகையுமே அவனை தவிக்க வைத்தது.

"அம்மாக்கு உடம்புக்கு முடியல தீபன்.. ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கோம்.. ஹார்ட்ல ப்ரோப்லேம்.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு..!" என்றவள் மீண்டும் அழ,

"மை காட்! இப்ப எப்படி இருக்காங்க? டாக்டர் என்ன சொன்னாங்க?" இந்த நேரத்திலா இதுவும் நிகழ வேண்டும் என்று தான் தோன்றியது கண்ணனுக்கு.

"சர்ஜரி பண்ணலாமா முடியாதானு டிஸ்கஸ் பன்றாங்க.. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல..!"

"அழாத ஜீவி.. நான் வேணா கிளம்பி வரவா?" நொடியும் யோசிக்காமல் கண்ணன் கேட்ட நொடி, அவன் பேசியதை கேட்டபடி அறைக்குள் நுழைந்தாள் லதா.

அவளை பார்த்தாலும் மூளையில் அது பதியாமல் போக, கவனம் எல்லாம் ஜீவிதா பேச்சில் தான் கண்ணனுக்கு.

யூஎஸ்ஸில் இருப்பவளை காண வரவா என்கிறான்.. அது தெரியாதே லதாவிற்கு.. ஆனாலும் ஜீவி என்ற பெயரும் அவன் அழைத்த விதமும் அவன் முகத்தில் தென்பட்ட கவலையும் என லதாவிற்கு எதையோ உணர்த்த, அங்கேயே நின்றுவிட்டாள்.

"நான் பார்த்துட்டு சொல்றேன் தீபன்.. நானே கால் பண்றேன்.. நீங்க கூப்பிட வேண்டாம்..!" என்றவள் வைத்துவிட, என்னவோ தனக்கு மட்டும் பிரச்சனைகள் கூடிக் கொண்டே செல்வதை போல உணர்ந்தவன் தளர்ந்துவிட்டான்.

நிமிர்ந்து பார்த்த போது கையில் அலைபேசியுடன் தன்னையே பார்த்தபடி லதா நிற்பதை கண்டவன்,

"என்ன?" என்று கேட்க, அதில் சுயம் வந்து மொபைலை பார்த்த போது அது கட்டாகி இருந்தது.

"என்ன?" என்றவன் குரல் இப்போது சற்று எரிச்சலாய் வர,

"உங்க அத்தை தான் லைன்ல இருந்தாங்க.. உங்களுக்கு கால் ரீச் ஆகலையாம்.." என்றவள் முடிக்கும் முன் அவன் அழைத்துவிட்டான் விசாலாட்சிக்கு.

கேட்டுவிடலாமா என ஜீவி என்ற பெயரில் இருந்து வெளிவராமல் லதா நிற்க, அவன் கண்டு கொள்ளாமல் விசாலாட்சியிடம் பேச ஆரம்பித்துவிட்டான்.

வெளியில் வந்த போது அத்தனை ரணகளமாய் ஒருவரை ஒருவர் வார்த்தையால் வாரி யசோதாவும் கிருஷ்ணனும் பேச, நீலகண்டன் சிரித்தபடி இருக்க என அங்கே நிலமையே தலைகீழாய் இருந்தது.

இவன் மூலம் வந்த சொந்தங்கள் தன் வீட்டில் மகிழ்ச்சியை கொடுத்துக் கொண்டிருக்க, இவன் கொஞ்சமும் இந்த பக்கம் அசையவில்லை என்பது மனதின் கலக்கத்தை கூட்டிக் கொண்டே சென்றது லதாவிற்கு.

'லவ் பன்றான்னு தெரிஞ்சு தானே கல்யாணம் பண்ணின? இப்ப என்ன இவ்வளவு சிந்தனை உனக்கு?' என மனம் கேட்க,

அத்தைக்காக கல்யாணம் செய்தேன்னு சொன்னவன் காதலை என்னை செய்ய இருக்கிறான் என தெரியாமல் கூடவே திருமணம் செய்தவளையும் என்ன செய்ய இருக்கிறான் என தெரியாமல் மூளை மாற்றி மாற்றி யோசித்தது.

"என்ன க்கா தனியா என்ன பண்ற?" என்று கிருஷ்ணன் கேட்க,

"ஒன்னும் இல்ல டா சும்மா தான்!" என்றாள் தெளிந்து.

"மாமா எதுவும் சொன்னாரா? ஃபேஸ் டல்லா இருக்கு?"

"ம்ம்ஹும்ம்.. அதெல்லாம் இல்ல.. கிருஷ்! மறந்துட்டேன் பாரு.. நேத்து மார்னிங் சாப்பிடும் போது மாமா பேசினதை மனசுல வச்சுக்காத டா.. ஏதோ ஒர்க் பிரஷர் போல!"

"பார்றா! ஹஸ்பண்ட்க்கு சப்போர்ட்டா.. எப்படி க்கா இரண்டு நாள்ல ஓவர் சேஞ்ச் ஆகுறீங்க?" என்று கிண்டல் செய்தான்.

"கிருஷ்!" என்று லதா முறைக்க,

"சரி சரி!" என சிரித்தவன்,

"மாமா அப்பவே பேசினார்.. அவரும் இதையே தான் சொன்னார்.. நான் எதுவும் நினைச்சுக்கல போதுமா?" என்று கூற, சிரித்தவளிடம்,

"ஆனா எதுவானாலும் என்கிட்ட சொல்லிடு க்கா.. உனக்கு நான் இருக்கேன்றதை மட்டும் மறந்துடாத.." என்று கூற, இன்னும் கனிந்து பார்த்தாள் லதா.

அன்று இரவு அனைவரும் சாப்பிட்டு அவரவர் அறைக்கு செல்ல, லதா வரும் பொழுது லேப்டாப்பில் என்னவோ செய்து கொண்டு இருந்தான் கண்ணன்..

"முக்கியமான வேலையா இருக்கீங்களா?" பலமுறை யோசித்தபின் கேட்டுவிடுவது என்ற முடிவிற்கு வந்து வந்ததும் ஆரம்பித்து வைத்தாள்.

"ம்ம்!" என்ற பதில் மட்டும் கண்ணனிடம் இருந்து.

"கொஞ்சம் பேசணும்!"

"என்ன?" என்றவன் அவள்புறம் கண்களை திருப்பவே இல்லை.

"இல்ல.. நீங்க முடிச்சுட்டே வாங்க!" லதா கூற, அதை கவனித்தானா என தெரியாமலே மொபைலை எடுத்து என்னவோ செய்தவன், "அனுப்பிட்டேன் ஜீவி! அம்மாவை பார்த்துக்கோ" என்று குரல் வழி செய்தியும் அனுப்பிவிட்டு லதாவை திரும்பிப் பார்க்க, அவன் வாட்சப் வாய்ஸ் நோட்ஸ் அனுப்புகிறான் என புரிந்தவளுக்கு நினைவு மீண்டுமாய் அந்த ஜீவி என்ற பெயரில் வந்து நின்றது.

"என்னனு சொல்லு!" என்றான் லேப்டாப்பை மூடியபடி.

"அத்தை திரும்ப கால் பண்ணினாங்களா?" அவன் இன்னும் சிந்தித்தபடி நிற்கவும் புருவம் சுருக்கியவன் கேட்க, இல்லை என தலையாட்டினாள்.

"வேற என்ன?" என அவன் கேட்டதே இதற்கு மேல் உன்னிடம் பேச எனக்கு என்ன இருக்கிறது என்பதாய் இருக்க, மனமெங்கும் பாரம் ஏறிய உணர்வு.

தான் என்ன தான் நினைக்கிறோம் என அடுத்த ஆராய்ச்சிக்கு அவள் தாவி இருக்க, பார்த்தவன் எதுவும் கேட்காமல் சென்று படுத்தே விட்டான்.

"உங்ககிட்ட பேசனும் சொன்னேன்.." அவன் எழுந்து சென்றதில் தன்னுணர்வு வந்து கோபமாய் லதா கேட்க,

"நீ முதல்ல நல்லா யோசிச்சு வை.. நீ சொல்ற வரைக்கும் உன்னையே பார்த்துட்டு இருக்க முடியாது!" என்றான் எழாமலே.

"ஜீவி யாரு?" அவன் பேசியதில் மேலும் கோபம் தூண்டப்பட்டவள் சட்டென கேட்டுவிட, அந்த அளவுக்கு அதிர்ச்சி எல்லாம் ஆகாமல் கண்களை திறந்தவன் அவளைப் பார்த்தான்.

'நீ ஏன் கேட்கிறாய்?' என்கின்ற கேள்வியை கூட அவன் விழிவழி படிக்க முடிந்தது லதாவிற்கு. ஆனாலும் அவன் கேட்கட்டும் என அவள் மௌனமாய் நிற்க,

"கண்டிப்பா சொல்லனுமா?" என்றான் எழுந்து அமர்ந்து சில நொடி யோசித்து.

படபடவென அடிக்கும் இதயத்தோடு தலையை மட்டும் ஆட்டியவளுக்கு, "உன் இடத்துல இருக்க வேண்டியவ.." என்றவன் அவள் முகம் பார்த்து திருப்தியாகி படுத்துக் கொள்ள, கல்லாய் மாறி அங்கே உறைந்திருந்தாள்.

தான் ஏன் இவ்வளவு அதிர்ச்சி ஆக வேண்டும் என எவ்வளவு யோசித்தாலும் அவளால் உணர முடியவில்லை.

அறிந்ததே தான் அவன் காதலிப்பதை என்றாலும் இப்பொழுது இவன் கூறியதன் அர்த்தம்?

இவன் என்ன தான் முடிவில் இருக்கிறான்.. தன் வாழ்க்கையை தானே சிக்கலாக்கி கொண்டோமோ என தோன்ற, தாத்தாவின் இடம் அவருக்கு கை சேர்ந்ததில் அப்படி ஒன்றும் தான் தவறு செய்யவில்லை என்றும் தோன்றாமல் இல்லை.

அடுத்து அவள் யோசிக்க எடுத்துக் கொண்ட பத்து நிமிடத்தில் அவன் தூங்கியே விட்டிருக்க, அவன் அலைபேசியின் வெளிச்சம் கண்களுக்கு விழவும் மேஜை மேல் இருந்த அலைபேசியை கால்களை ஊன்றி நின்றபடி எட்டிப் பார்க்க, அக்கௌன்ட் டெபிட்டட் செய்தி.