அத்தியாயம் 30
"என் வீட்டுக்குள்ள நீங்க என்னைக்கு வந்திங்களோ அன்னைக்கே என்னோட நிம்மதி போச்சு. இப்ப மானம் மரியாதையும் போகுது!" கனகா சொல்ல, ஆர்யன் கைகளை கெட்டியாய் பிடித்துக் கொண்டாள் திகழ்மதி.
கனகா இப்படி பேசவில்லை என்றால் தான் ஆச்சர்யம். பிடிக்கவில்லை என ஒதுக்கி வைத்தே பழகியவரை இன்று ஒட்டி வர சொன்னால் அவரால் முடியுமா என்ன!
"மாமா பாவம் டா அர்வி! ஏன் டா இப்படி?" என கண்ணீரோடு திகழ்மதி கேட்க, அதை காண இயலாதவனாய்,
"மாமா!" என அன்பரசன் கால்களில் விழுந்துவிட்டான் அரவிந்த்.
"டேய்! அரவிந்தா! என்ன டா இதெல்லாம்?" என அன்பரசன் அவனை எழுப்ப, ஆர்யன் தனியே சிரித்துக் கொண்டான் அரவிந்த் செயலில்.
"அக்காக்கு எதுவுமே தெரியாது த்தை! அவங்களை எதுவும் சொல்லிடாதீங்க!" என கனகாவிடமும் அரவிந்த் சொல்ல,
"அப்போ எல்லாம் உன் சதி தானா?" என்றார் கனகா.
"உன் பொண்ணு தெளிவா சொல்லிட்டு தானே போனா? இவனை நீ வேணும்னு இப்ப பேசிட்டு இருக்க!" அன்பர்சன் சொல்ல,
"அனு சொன்னது உண்மை தான் மாமா! ஆனா!" என்றவன் கொஞ்சம் தயங்கினாலும் உண்மையை மறைக்க விரும்பவில்லை.
ஆரம்பத்தில் இருந்து முழுதாய் கூறிவிட்டான். இதற்கு மேலும் அவளை மட்டுமே வீட்டினர் பழி சொல்லவோ இல்லை தான் ஒதுங்கி நிற்கவோ கூடாதே என.
"நான் சொல்லல? இவன் தான். இவனால தான் இப்ப அனு பண்றது எல்லாமே! ஒதுங்கிப் போனவளை இவன் தான் தேடி போயிருக்கான்!" என அதற்குமே கனகா பேச,
"இல்ல த்தை! கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க. அனுவும் சரி நானும் சரி. வேணும்னு எதுவும் பண்ணல. உங்களுக்காக உங்க எல்லாருக்காகவும் தான் அனு வேண்டாம்னு அன்னைக்கு விலகி போனேன். ஆனா அனுவை விரும்புறேன்னு எனக்கே புரிஞ்ச அப்புறம் அப்படி ஒதுங்கி போக முடியல!" என நிறுத்தியவன்,
"ஆனா அனு அவ முடிவுல எப்பவும் மாறல த்தை! நீங்க உங்க பொண்ணுக்கு எப்படிப்பட்ட வரன் எல்லாம் பாக்குறீங்கனு எனக்கும் தெரியும். ஆனா அது எப்படி எவ்வளவு பெரிய இடமா இருந்தாலும், நானே எனக்கு அனு வேண்டாம்னு சொன்னாலும் அவ நீங்க பாக்குற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்க மாட்டா!" என்றான் அரவிந்த் அத்தனை உறுதியாய்.
"நானும் அந்த வார்த்தையை சொல்லிட மாட்டேன்" என சொல்லிவிட்டு அரவிந்த் அன்பரசனைப் பார்க்க, அவரும் அரவிந்த் பேச்சை தான் கேட்டு நின்றிருந்தார்.
"யாரையும் காயப்படுத்த நினைக்கல நாங்க. நீங்க ஒவ்வொருத்தரும் எனக்கும் அனுக்கும் முக்கியம். குடும்பத்தை விட்டு நாங்க தனியா முடிவெடுக்குற நிலைக்கு என்னைக்கும் வர மாட்டோம்!" என சொல்ல, இதே வார்த்தையை அன்று அன்பரசனும் கூறிய நியாபகம் கனகாவிற்கு.
"நீ பேசு திகழ்!" ஆர்யன் மனைவியிடம் சொல்ல,
"ம்ம்ஹும்! என்னால முடியாதுங்க. அர்வி எனக்கு முக்கியம் தான். ஆனா மாமாவும் அவ்வளவு முக்கியம். அரவிந்த் தெளிவா தான் இருக்கான். அவனுக்கு அனு வேணும். இந்த குடும்பமும் வேணும். அவன் சரியா தானே பேசுறான். அவனே பேசட்டும்!" என்றுவிட்டாள் திகழ்மதி.
"ஆனா அவனுக்கு இப்ப ஹெல்ப் வேணும் திகழ்!" என்ற ஆர்யன்,
"நான் சொல்றேன்னு எதுவும் நினைச்சுக்காதீங்க சித்தி!" என்ற ஆர்யன்,
"அரவிந்த் இப்ப தனி மனுஷன். அவனுக்கான கடமைகளை முடிச்சுட்டு எனக்கு உங்க பொண்ணை தாங்கனு கெஞ்சி தான் உங்க முன்ன வந்து நிக்குறான். நீங்க சொன்ன மாதிரி மானம் மரியாதையை வாங்குற பையன் அவன் இல்ல. அப்படி இருந்தா அனு சென்னைல அவன் பக்கத்துல இருந்தும் இப்படி உங்ககிட்ட வந்து கெஞ்சி நிக்கணும்னு அவசியம் இல்லையே!" என்ற ஆர்யன்,
"இப்ப இருக்குற பசங்க எல்லாம் செம்ம ஸ்பீட்! பொண்ணை கூட்டிட்டு போய் தாலி கட்டி வாழ ஆரம்பிச்சுட்டு வீட்டுக்கு தெரியாம மெயிண்டைன் பன்றானுங்க. அர்வி பொறுப்பான பையன். அவனுக்கு பொண்ணு குடுக்க தயங்குற ஒரே ஆள் நீங்களா தான் இருக்கும்!" என சொல்ல,
"அக்கா தங்கச்சிங்களுக்கு நல்லபடியா கல்யாணம் பண்ணி வச்சுட்டா போதுமா? இவனை நம்பி வர்ற பொண்ணுக்குன்ணு என்ன வச்சிருக்கான்?" கனகா கேட்க,
"நிஜமாவே அது தான் உன் பிரச்சனையா கனகா?" என்றார் அன்பரசன் முறைத்து.
"ஆமா அதுவும் ஒரு பிரச்சனை தான். என்ன வேலையில இருந்தாலும் எவ்வளவு பொறுப்பானவனா இருந்தாலும் ஒண்ணுமில்லாதவன் தானே?" கனகா இது தான் சாக்கென்று பிடித்துக் கொள்ள,
"அப்படி ஒரு முடிவுக்கு நீங்களா வர கூடாதுத்தை. அவன் வேலைக்கு போக ஆரம்பிச்சு அஞ்சு வருஷம் ஆக போகுது. அவனோட சம்பளப் பணம் மொத்தமும் இப்ப வரை என் அக்கௌன்ட்ல தான் இருக்கு. அப்படியெல்லாம் அவன் ஒண்ணுமில்லாதவன் இல்ல. எங்களுக்கு செஞ்சது போகவே அக்கௌன்ட்ல மட்டும் அம்பது லட்சம் குறைஞ்சது இருக்கு. இவங்க சொன்னாங்களேனு தான் மகிக்கு என் வீட்டுல வச்சு எல்லாம் செஞ்சோம்" திகழ்மதி தம்பியை குறைவாய் சொல்லியதில் பேசிவிட,
"கல்யாணத்துக்கு சம்மதம் மட்டும் சொல்லுங்க சித்தி. மூனே மாசத்துல உங்க பொண்ணுக்கு பிடிச்ச மாதிரியான வீடு அரவிந்த்தால கட்டிட முடியும். அதுக்கப்புறம் கூட கல்யாணத்தை வச்சுப்போம்!" என்றான் ஆர்யனும்.
"இவளுக்கு எல்லாம் இவ்வளவு விளக்கம் கொடுக்கணுமா நீங்க? இவ பார்த்த மாப்பிள்ளை லட்சணம் எனக்கு தெரியாதா? டாக்டர் மாப்பிள்ளைனு சொன்னாளே! பணத்தை வச்சு சீட்டு வாங்கி டாக்டர் செர்ட்டிஃபிக்கெட்டும் வாங்கி ஃபோர்ஜரி பண்ணினவன். தலைமறைவா இருக்கான். கல்யாணமானா தம்பிச்சிடலாம்னு அந்த ஃபிராடு பயலுக்கு யாரோ சொல்லிருக்கானுங்க. எண்ணி ஒரு மாசத்துல அவன் போலீஸ்ல மாட்டுவான். அவனுக்கு அனுவை குடுக்க தான் உன் அத்தை சுத்திகிட்டு வர்றா!" என்றார் அன்பரசன்.
இவருக்கு எப்படி தெரியும் என்பதை போல அதிர்ந்து பார்த்தார் கனகா.
எப்படியும் சம்பாதிக்கட்டும். அவ்வளவு வசதி படைத்தவன். எளிதில் போலீசால் அவனை கைது செய்ய முடியாது. மகளும் வளமான வாழ்வு வாழ்வாள் என்பது தான் கனகாவின் எண்ணம்.
"இவனுக்கு எப்படி தெரியும்னு தானே பாக்குற? என்ன புத்தி டி உன் புத்தி? எப்படி வேணா சம்பாதிக்கலாம். அவன் எப்படிப்பட்டவன்னு எல்லாம் கவலை இல்லை இல்ல? நானும் சும்மா பார்த்துட்டே இருப்பேன்னு நினைச்சுட்ட இல்ல?" என அன்பரசன் விடாமல் கேட்க,
"ஏன் த்தை! அவனை நம்ப முடிஞ்ச அளவுக்கு என் தம்பியை உங்களால நம்ப முடியலையா?" என்றாள் திகழ்மதியும்.
"அரவிந்தா! அவ என்ன சொல்றது? நான் சொல்றேன். உங்க கல்யாணம் கண்டிப்பா நடக்கும். சீக்கரமே நாள் பார்த்துடுவோம்" அன்பரசன் சொல்ல, திகழ்மதி அரவிந்த் பார்வை கனகாவிடம் சென்றது.
"நான் சம்மதம் சொன்னதும் அப்படியே போய்டுவாங்கனு நினச்ச இல்ல? நீ என்ன சொல்லுவனு தான் பாக்குறாங்க. அன்னைக்கே சொன்னது தான் கனகா. உன் பொண்ணு உன்னைவிட வீம்புக்காரி. கல்யாணமே பண்ணாம இருந்துக்குவா இல்லையா பூமிக்கு பாரமில்லாம போய்டுவா. உன் நினைப்புக்கு மட்டும் சம்மதமே சொல்ல மாட்டா!" என்ற அன்பரசன்,
"திகழ்! மகிக்கு மாதிரியே அனு கல்யாணத்தையும் நீங்க தான் முன்ன நின்னு நடத்தணும். மாப்பிள்ளை வீடா மட்டும் இல்லாம பொண்ணு வீடாவும் தான்!" என அன்பரசன் சொல்ல,
"நீங்க சொல்லனுமா சித்தப்பா? அதெல்லாம் நாங்க பாத்துக்குறோம்!" என்றான் ஆர்யன்.
திகழ்மதி அரவிந்த்திற்கு இதை எப்படி எடுத்துக் கொள்ள என தெரியவில்லை. ஆனாலும் தொடர்ந்து கனகாவை ஒரே நாளில் மனம் மாற்றிட முடியாதே என அமைதியாய் இருக்க,
"இப்ப தான் மகி கல்யாணம் முடிஞ்சிருக்கு. அதனால மூணு மாசம் போகட்டும். அடுத்து பேசிக்குவோம். இதுக்கு மேல இவ என்ன பண்ணினாலும் அது முடியுறது அனுவோட உயிர் சம்மந்தப்பட்டதுனு அவளுக்கு புரியனும். அன்னைக்கே அனு தெளிவா சொல்லிட்டு தான் போனா. உன் வீண் கோபம் ரெண்டு பேரோட வாழ்க்கையை கெடுக்குதுன்னா அதை நான் பார்த்துட்டு இருக்க முடியாதே கனகா!" என்ற அன்பரசன்,
"அனு அவ விருப்பத்தை மட்டும் சொன்னதால தான் நான் அமைதியா இருந்தேன். அப்பவும் இப்பவும் எனக்கு அரவிந்த் மேல வருத்தம் இல்ல. என் பொண்ணு தப்பான வழில போகல. இப்ப அரவிந்த் பேசினதுல அவன் அனுவை எவ்வளவு புரிஞ்சி வச்சிருக்கான்னு புரிஞ்சிக்க முடியுது. வேற என்ன வேணும்?" என்றார் புன்னகைத்து.
"மாமா!" என திகழ்மதி அவர் தோள் சாய, அரவிந்த் மனமும் கொஞ்சம் நிதானமடைந்து இருந்தது.
"அனு!" என சொல்லிக் கொண்டவன்,
"சாரி மாமா!" என அன்பரசன் அருகே மீண்டும் செல்ல,
"அதெல்லாம் வேண்டாம் டா. அனுவை பார்த்துக்கோ போதும்!" என்றார்.
"க்கா!" என திகழ்மதியை அழைக்க,
"பேசாத அர்வி! என்கிட்டயே மறைச்சுட்ட இல்ல?" என அவள் கோபம் கொள்ள, இதையெல்லாம் பார்க்க முடியாதவராய் உள்ளே விறுவிறுவென சென்றுவிட்டார் கனகா.
"இருங்க டா சாப்பிட்டு போகலாம்!" என அன்பரசன் சொல்ல,
"இல்ல மாமா. அத்தை சரியாகட்டும். அப்புறமா வர்றோம்!" என சொல்லிக் கொண்டு அரவிந்த்தையும் அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டனர் ஆர்யன் திகழ்மதி.
"க்கா உங்ககிட்ட சொல்ல கூடாதுன்னு எல்லாம் நினைக்கல க்கா!" என வழியிலேயே அரவிந்த் கெஞ்ச,
"நீ தானே டா இத்தனை வருஷமும் என்னை சொல்ல விடாம கண்ட்ரோல் பண்ணி வச்சிருந்த? இப்ப இப்படி சொல்ற?" என்றான் ஆர்யன் சிரித்தபடி.
"சும்மா இருங்க மாமா! க்கா பேசு க்கா!" என மீண்டும் அவன் கேட்க,
"போடா! நான் எதிர்பார்க்கவே இல்லை தெரியுமா? ரொம்ப பயந்துட்டேன். இப்பவும் அத்தை என்ன நினைக்குறாங்கனு தெரியல. மாமா பேசினது சந்தோஷம் தான் ஆனா இதனால அத்தைக்கும் மாமாக்கும் சண்டை வரும் தானே?" என்றாள் திகழ்மதி கவலையாய்.
"சரி தான். எனக்குமே அத்தை அனுக்கு மாப்பிள்ளை தேடினது எல்லாம் தப்பா தெரியல. ஆனா பார்த்த இல்ல அத்தை என்ன மாதிரி மாப்பிள்ளையை அனுக்கு பார்த்து வச்சதா மாமா சொன்னாங்கன்னு! அத்தைக்கு யாருக்கு வேணா அனுவை தூக்கி குடுக்கலாம். ஆனா எனக்கு தர கூடாது!" என சொல்ல,
"பார்றா! மாப்பிள்ளைக்கு கோவத்தை. அதான் படார்னு உன் மாமா கால்ல விழுந்து அவரை கவுத்துட்டியே!" என ஆர்யன் கிண்டல் செய்ய,
"வேற என்ன பண்ணி சமாளிக்க? எல்லாரையும் சமாளிக்கணுமே! மாமா என்னை தப்பா நினைச்சுட்டானு ஒரு பயம். அதான்" என அரவிந்த் சொல்ல,
"என்னவோ அர்வி! எல்லாம் சரியா நடக்கனும். உனக்கு சொல்ல வேண்டியது இல்லை. ஆனாலும் சொல்றேன். அனு பத்திரம்!" என சொல்ல, அரவிந்த் புன்னகையை கொடுத்தான் சகோதரிக்கு.
தொடரும்..