அத்தியாயம் 32
நீண்ட நேரமாய் கோவில் பிரகாரத்தில் அமர்ந்திருந்தார் கனகா. எதிர்பார்த்து எதிர்பார்த்து காத்திருந்து எரிச்சல் கூட வந்துவிட்டது அவருக்கு.
"என்னவோ பெரிய இந்த குடும்பம்னு நினைப்பு. வேண்டாம்னு சொன்னா விட வேண்டியது தானே! என் வீட்டு பிரச்சனைக்கே வழி தெரியாம நிக்கேன். இதுங்க வேற!" என புலம்பியபடி தான் காத்துக் கொண்டிருந்தார் கனகா.
இப்பொழுதும் அன்பரசனை நினைக்க கோபம் கோபமாய் வர தான் செய்தது. அதையும் மீறிய ஒரு பயமும் இருக்க, என்ன செய்வதென அத்தனை யோசித்தார் கனகா.
"வாங்க! ரொம்ப நேரமா காத்திருக்கீங்களா?" என கேட்டு கனகா அருகே வந்து அமர்ந்தார் ஐம்பது வயதை நெருங்கிய பெண்மணி ஒருவர்.
கழுத்தில் நான்கா அல்லது ஐந்தா என அந்த பெண்மணி கழுத்தில் கிடைக்கும் தங்கச் சங்கிலிகளை கனகா எண்ண ஆரம்பித்து இருந்தார் அதே நேரம்.
"ஓஹ்! அது கொத்து செயின் மாடலா?" மனதுக்குள் சொல்வதாய் நினைத்து வாய்விட்டே கனகா சொல்லி இருக்க, எதிரில் இருந்த பெண்மணி,
"ஆமா! நல்லாருக்கா? நீங்க சரினு சொல்லுங்க. ரெண்டு நாள்ல இதே மாதிரி ஒரு செயினை கொண்டு வந்து உங்க கழுத்துல போடுறேன்!" ஆன அந்த பெண்மணி சொல்ல, கனகாவின் கண்கள் ஆசையில் பளபளத்தது.
"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்!" என கூறிய கனகா,
"நீங்க உங்க பையன் டாக்டர்னு சொல்லவும் நானும் விசாரிச்சேன். வெளில அப்படி இப்படினு பேசினாலும் சரி சொத்துபத்து மதிப்புனு எல்லாம் இருக்கேன்னு தான் பொண்ணு தர சம்மதிச்சேன். இப்ப என் வீட்டுக்காரர்க்கு வேற என்னை விட அதிகமா உங்க பையனை தெரிஞ்சு வேண்டாம்னு சொல்லிட்டாங்க. என்னை என்ன பண்ண சொல்றிங்க?" என நேராய் பேச்சுக்கு வந்துவிட்டார் கனகா.
"நீங்க என்ன உங்க வீட்டுக்காரர்கிட்ட கேட்டுட்டு வந்தா பையன் போட்டோ ஜாதகம்னு வாங்கிட்டு போனீங்க?" என ஒரே வார்த்தையில் மடக்கிவிட்டார் அந்த டாக்டர் மாப்பிள்ளையின் அன்னை.
"என் பையன் அப்படி தான். கிளினிக் சொந்தமா வச்சிருக்கான். கொஞ்சம் செல்லம் அதிகம். அதான் விருப்பப்பட்டானேனு டாக்டர்க்கு படிக்க வச்சோம் காசு கட்டி. சொந்தமா கிளினிக்கும் வச்சு குடுத்துருக்கோம். பொண்ணை பத்திரமா பார்த்துக்க பங்களா மாதிரி வீடு போக வரனு கார் எல்லாமே இருக்கு. இன்னும் என்ன வேணும் உங்களுக்கு? அடுத்தவன் பேச்சை கேட்டு பொண்ணு வாழ்க்கையை விட்றாதீங்க!" என்றார் நயமாய்.
"நல்லா பேசுவீங்களே! இது மட்டும் போதுமா? பொதுவுல நடந்து போனா நாலு பேர் நல்லவிதமா சொல்ல வேண்டாமா? உங்க பையன் கிளினிக்ல தானே ஒருத்தனுக்கு மாத்திரை மருந்து தப்பா குடுத்து கேஸ் போய்ட்டு இருக்கு? அதையெல்லாம் சொல்ல மாட்டேங்குறீங்க?" என்றார் கனகாவும்.
"அதெல்லாம் பழைய கதை. ஒரு நாள் கூட அவன் லாக்கப்ல இல்ல. எங்க சித்தப்பா அரசியல்வாதி. எஙகளுக்கு எந்த பிரச்சனையும் வராது. உங்க பொண்ணு தான் வேணும்னு அவன் அடமா நிக்குறான். நீங்க தான் ஆரம்பிச்சு வச்சது. இப்ப முடியாதுனு சொன்னா? என் பையன் கேட்டு நாங்க எதுவும் குடுக்காம இருந்ததே இல்ல!" என்ற அந்த பெண்மணி கனகா எதுவோ சொல்ல வரும் நேரம்,
"நீங்க எதுவும் பேச வேண்டாம்" என்று சொல்லி தனது கைப்பையில் இருந்து ஐந்து லட்சம் பணத்தை எடுத்து அவர் கையில் வைக்க, கைகள் நடுங்க,
"என்னங்க இது?" என்று வாயடைத்து தான் போனார் கனகா.
"இது இப்போதைக்கு வச்சுக்கோங்க. கல்யாண செலவெல்லாம் எங்களோடது. போய் பேசி நல்ல முடிவோட வாங்க!" என சொல்லி எழுந்து சொல்ல,
"ஒரு நிமிஷம் நில்லுங்க..." என்ற கனகாவிற்கு பணத்தைப் பார்த்ததும் மீண்டும் மனம் பேயாட்டம் போட்டது.
அன்பரசன் அத்தனை கோபமாய் சொல்லிய விதம் பயத்தை கொஞ்சம் கொடுத்திருக்க, இந்த திருமணம் நடக்காது என அலைபேசியில் அழைத்து அந்த டாக்டர் மாப்பிள்ளை வீட்டில் பேசி இருந்தார் கனகா.
நேரில் வர சொல்லி இப்படி பணத்தையும் கொடுத்து செல்ல, மீண்டும் மனம் கேட்கவில்லை கனகாவிற்கு.
'அவர்கிட்ட சொல்லிடுவோமா?' என அன்பரசனிடம் சொல்லலாமா என கனகா நினைக்கும் போதே,
'அவர்கிட்ட சொன்னா பணத்தை ஏன் வாங்கினனு தான் முதல் கேள்வி வரும். பணத்தோட அருமை எங்க தெரிய போகுது!' என நினைத்துக் கொண்டவர்,
"மயங்கி விழுற மாதிரி நடிச்சு அவளை வர சொல்லி கடைசி ஆசைனு கல்யாணத்தை பண்ணி வச்சுடுவோமா?" என தனக்கு தானே பேசிக் கொண்டவர்,
'அதெல்லாம் நம்ப மாட்டாங்களே!' என தோன்றிய நொடி,
'முதல்ல அனுவை வர வைப்போம். எதுவும் சொல்ல வேண்டாம். கோவிலுக்கு சாமி கும்பிட கூட்டிட்டு வர்ற மாதிரி கூட்டிட்டு வந்து அந்த பையனை வர சொல்லி தாலி கட்டிட சொல்லுவோம்' என நினைத்தவருக்கு இது மட்டும் தான் சரியான யோசனை என தோன்றவும் பணத்தை முந்தானையில் வைத்து மடியோடு கட்டிக் கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டார்.
அடுத்த நாள் காலை எப்பொழுதும் போல எழுந்து கணவனுக்கு சமையலை செய்து முடித்த கனகா அன்பரசன் வேலைக்கு செல்ல காத்திருக்க, அவர் பத்து மணியாகியும் இன்னும் அறையை விட்டு வரவில்லை என்றதும்,
"இன்னைக்கு வேலைக்கு போகலையோ?" என சத்தமாய் கேட்டார்.
நேருக்கு நேர் அன்பரசன் கனகாவிடம் பேசுவதை நிறுத்தி ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது.
இன்று கணவன் கிளம்பவும் அனன்யாவிற்கு அழைத்து பேச கனகா காத்திருக்க, கணவன் கிளம்புவது போல தெரியவில்லையே என தானே கேட்டுவிட்டார் கனகா.
ஆனாலும் அன்பரசன் பதில் சொல்லாமல் இருக்க, அறைக்குள் சென்று பார்க்க, காலை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார் அன்பரசன்.
"என்ன செய்யுது உங்களுக்கு?" என கேட்க,
"ஆபரேஷன் பண்ணின கால் வலிக்குற மாதிரி இருக்கு. இப்ப தான் ரெண்டு வருஷமா வலி இல்லாம இருந்துச்சு. திடிர்னு வலிக்குது" என சொல்லவும் மருந்தை எடுத்து வந்து கனகா தேய்த்து விட,
"என்ன அக்கறை எல்லாம்? தேய்ச்சுக்கோன்னு தான தருவ?" என அன்பரசன் கேட்டார்.
"பேசாம இருங்க நீங்க. வலிக்குதுன்ணு சொல்லுறிங்களேனு பாவம் பார்த்தா..." என்றபடி தேய்க்க,
"ஹாஸ்பிடல் போகணும்" என்றார் அன்பரசன்.
"ஆட்டோக்கு போன் பன்னுதேன்!" என கனகா சொல்ல,
"அதெல்லாம் வேண்டாம். என் வண்டில நானே போய்க்குவேன். இன்னும் அரை மணி நேரம் ஆகும் டாக்டர் வர!" என சொல்லி சாய்ந்து அமர்ந்து கொண்டார் அன்பரசன்.
அடுத்த அரை மணி நேரத்தில் அன்பரசன் கிளம்பவும் மகளுக்கு அழைத்தார் கனகா.
அன்னையின் எண்ணைப் பார்க்கவுமே எடுக்கவா வேண்டாமா என குழம்பி பின் தான் அழைப்பை ஏற்றாள் அனன்யாவும்.
"ஏன் டி! போனா அப்படியே போயிருவியா? பெத்தவங்க இருக்காங்களா இல்லையானு ஒரு போன் உண்டா? உனக்கு உன் சந்தோசம் போதுமென்ன?" என தான் ஆரம்பித்தார் கனகா.
"ம்மா! ஆபீஸ்ல இருக்கேன்!" என பொறுமையை வைத்து அனன்யா சொல்ல,
"தெரியுமே நீ அங்க என்ன வேலை பார்த்து கிழிக்குறன்னு!" என கனகாவும் தேவையில்லாமல் தான் பேசினார்.
"இப்ப என்ன வேணும் உங்களுக்கு? நான் அப்பாகிட்ட பேசிக்குறேன்!" என அனன்யா சொல்லி கோபமாய் வைக்க போக,
"அந்த மனுஷன் உன்னை நினைச்சு கவலைலயே போய் சேர்ந்துருவாரு போல. இப்ப தான் ஆஸ்பத்திரிக்கு தனியா போறாரு. எங்களுக்கு இனி யார் இருக்கா?" என்றெல்லாம் கனகா பேச,
"லூசு மாதிரி உளறாம அப்பாக்கு என்னனு சொல்லுமா"
"ஆபரேஷன் பண்ணுன இடத்துல இத்தனை வருஷத்துக்கு அப்புறம் வலினு நைட்டெல்லாம் தூங்கவே இல்ல. இப்ப தான் டாக்டர பார்த்துட்டு வர்றேன்னு போறாரு. நீ ஒரு நாள் வந்து இருந்து பார்த்துட்டு போனா அவருக்கும் தெம்பா இருக்கும்னு சொல்ல தான் கூப்பிட்டேன். லீவ் இல்ல விடமாட்டாங்கனு சொல்லி வாய் பேசாம கிளம்பி வர வழியை பாரு!" என்று சொல்லி வைத்துவிட்டார் கனகா.
வைத்த பின் தான் மூச்சே வந்தது. எதாவது பேசி அனன்யாவை வர வைத்துவிட வேண்டும் என நினைத்திருக்க, இது ஒரு நல்ல வாய்ப்பு என்று தான் நினைத்தார்.
தந்தைக்கு ஒன்று என்றால் நிச்சயம் வந்துவிடுவாள் என நினைத்து உடனே தன் செயல்திட்டத்தை மனதுக்குள் வகுத்துக் கொண்டார்.
மகள் வந்ததும் மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்து பேசி அவர்களையும் கோவிலுக்கு வர சொல்லி, அனன்யாவிடம் வேறு எதாவது காரணம் சொல்லி பேசி அவளையும் கோவிலுக்கு அழைத்து சென்று திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்பது வரை திட்டம் தயார் செய்து மகள் வருகைக்காக காத்திருந்தார்.
திட்டம் மட்டும் தான் அவருடையது. அதை செயல்படுத்த நினைக்கும் முன் அனைத்தும் தலைகீழாகிவிட, அன்பரசனின் கோபம் மனைவி மீது திரும்பி கை நீட்டவும் வைத்திருந்தது.
கனகா போனை வைத்ததும் அனன்யா அரவிந்த்திற்கு அழைத்து கனகா கூறியதை சொல்ல,
"சரி இரு. அக்காகிட்ட சொல்லுவோம்!" என்று அரவிந்த் திகழ்மதிக்கு அழைத்து சொல்ல,
"மாமா ஹாஸ்பிடல் போயிருக்காங்களா? சரி டா நான் போய் பாக்குறேன்" என்ற திகழ்மதி ஆர்யனுடன் அன்பரசன் வீட்டிற்கு கிளம்பி இருந்தாள்.
அன்பரசன் மருத்துவமனையில் இருந்து வர கனகா காத்திருக்க, அவருக்கு முன் காவல்நிலைய ஜீப் வந்து வீட்டின் முன் நின்றது.
மூன்று ஆண் காவலர்களுடன் ஒரு பெண் காவலரும் என அந்த டாக்டர் மாப்பிள்ளையின் அன்னையுடன் கனகாவின் வீட்டிற்குள் நுழைய, அதிர்ந்து கனகா விழிக்கும் பொழுதே,
"இந்தம்மாகிட்ட தான் போதைப்பொருள்ல வந்த மீதி பணம் இருக்கா?" என அந்த பெண்மணியிடம் பெண் போலீஸ் கேட்க, அவரும் ஆமாம் என தலையாட்ட, கேட்ட செய்தியில் உயிர் நடுங்க நின்றுவிட்டார் கனகா.
"அது மட்டும் தானா இல்ல பொருளும் இருக்கா?" என்ற கேள்வி வேறொரு போலீஸ் கேட்க,
"இல்ல சார் காசு மட்டும் தான்!" என்ற பதிலில்,
"நீயா போய் காசை எடுத்துட்டு வர்றியா இல்ல நாங்க செக் பண்ணவா ம்மா?" என்று ஆண் காவலர் மிரட்டலாய் கேட்க, அன்பரசனும் வந்துவிட்டார் அந்த நேரம்.
"கனகா.." என்றபடி வந்த கணவனைக் கண்டதும் கண்களில் பயத்தோடு "என்னங்க!" என அவரைப் பிடித்துக் கொண்டு கனகா அழ, காவலர் தான் விஷயத்தை விளக்கினார்.
"இவங்ககிட்ட பணம் வாங்கினியா?" என அன்பரசன் முகம் இறுக கேட்க, வெளியே போலீஸ் ஜீப்பைக் கண்ட திகழ்மதியும் ஆர்யனும் காரில் இருந்து இறங்கி ஓடி தான் வந்திருந்தனர் வீட்டிற்குள்.
தொடரும்..