• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிலவோடு தென்றலும்! 37

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
889
649
93
Chennai
அத்தியாயம் 37

மேள சத்தங்கள் மண்டபம் முழுதும் எதிரொலிக்க, அனன்யாவை தனது திருமதியாக்கி மாங்கல்யத்தை அணிவித்து இருந்தான் அரவிந்த்.

"வாழ்த்துக்கள் டா அர்வி!" என ஆர்யன் முதல் வாழ்த்தினை தெரிவிக்க, அடுத்த மொத்தமாய் சூழ்ந்து வாழ்த்துக்களை தெளித்து நிற்க,

"பெரியவங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கோங்க!" என்ற குரல் கேட்கவும் எழுந்து கொண்டான் அரவிந்த் அனன்யாவோடு.

"த்தான்! ம்ம்ஹும்ம் நோ!" அனன்யா சொல்ல,

"ஷ்ஷ்! அடி வாங்குவ அனு!" என்ற அரவிந்த் மேடையில் நின்றிருந்த அன்பரசன் கனகா இருவரின் காலிலுமாய் அனன்யாவை இழுத்துக் கொண்டு தான் விழுந்தான்.

"அப்பாகிட்ட மட்டும் வாங்கினா போதும் !" என்று தான் சில நிமிடங்களுக்கு முன் இருந்து சொல்லிக் கொண்டே இருந்தாள் அனன்யா.

"என்ன இருந்தாலும் நான் அக்கா, மகி எல்லாம் இவ்வளவு தூரம் வர அத்தையும் முக்கிய காரணம் தான் அனு!" என சொல்லி அவள் மறுப்பை எல்லாம் கேட்காமல் ஆசிர்வாதத்திற்கு விழுந்திருக்க,

"நல்லா இருங்க டா!" என சொல்லி அன்பரசன் வாழ்த்துக்களை தூவி நின்றார். கனகா வெறுமெனே நிற்க, அனன்யா அப்பொழுதும் பல்லைக் கடிக்க தான் செய்தாள்.

"திகழ் அண்ணி! இங்க வாங்க!" என அழைத்து அனன்யா அரவிந்த்தோடு சேர்ந்து, திகழ்மதி ஆர்யன் கால்களில் விழுந்து எழுந்தவள், அன்னையைப் பார்க்க, முணுமுணுவென்று அவர் என்னவோ தனக்கு தானே பேசிக் கொள்வது தெரிந்தது.

"நீ ஏன் டி இப்படி பண்ற? கண்டுக்காம விடு. நோட் பண்ணி நோட் பண்ணி டென்ஷன் எடுத்துக்குற. உன்னால நானும்!" என அரவிந்த் கவனித்துவிட்டவன் சொல்ல, அங்கே அக்ஷயாவும் தன் தந்தை தாய் கால்களில் விழுந்து எழுந்து அனைவரையும் சிரிக்கவும் ரசிக்கவும் வைத்திருந்தாள் அதே நேரம்.

"ம்ம்ஹும்! இனி நோட் பண்ணல. அவ்வளவு ஒர்த் இல்லைனு நல்லா புரிஞ்சிகிட்டேன். சிலரெல்லாம் பட்டாலும் திருந்தமாட்டாங்க இல்ல. அந்த ரகம் தான் கனகா. இனி அனு சைலன்ட் மோட் தான்!" என அரவிந்த்திடம் கூறினாள் அனன்யா.

"நிஜமாவா?" என அவளுக்கு மட்டும் கேட்கும் அரவிந்த்தின் வேறு மாதிரியான குரலில்,

"அய்யோ த்தான்! நான் அம்மாகிட்ட மட்டும்னு சொன்னேன்." என்றாள் வேகவேகமாய்.

"அவ்வளவு தானா?" என்றவன் பேச்சில் "மூச்!" என்றவள் அங்கிருந்த அடுத்தடுத்த சாம்பிராதாயங்களில் விரும்பி கலந்து இணைந்து கொள்ள, ஒரு மணியானது மண்டபத்தில் இருந்து கிளம்பவே!.

"அர்வி! பொண்ணு வீட்டுக்கு நாலு மணிக்கு மேல தான் போணுமாம்!" என ஆர்யன் சொல்ல,

"அக்கா சொன்னாங்க மாமா! புது வீட்டுக்கே போய்டலாம்னும் அக்கா தான் சொன்னாங்க. சின்ன சின்ன ஒர்க் தானே பெண்டிங்" என்றான் அரவிந்த்.

"ஏன் டி இப்படி பண்ற? நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வா. அங்க வேலை தான் முடியட்டுமே!" என்றார் ஆர்யனின் அன்னை திகழ்மதியிடம்.

"வரலாம் தான் த்தை. இது அர்விக்கான மரியாதை. இன்னைக்கு ஒரு நாள் அங்க இருக்கட்டும். நாளையில இருந்து வேலை மொத்தமா முடியுற வரைக்கும் நம்ம வீட்டுக்கு வந்திடுவான் அனுவோட!" என்றாள் திகழ்மதியும்.

அதுதான் சரி என்றும் பட்டது ஆர்யனுக்குமே.

"விடுங்க ம்மா! இன்னைக்கு அவன் பார்த்துப்பான். வந்தவங்க மோஸ்ட்லி சித்தப்பா வீட்டுல தங்கிப்பாங்க. பத்தலைனா நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போய்டலாம்" என்றும் ஆர்யன் சொல்லி தான் அரவிந்த்தின் வீட்டிற்கு புதுமண தம்பதியர் வந்து சேர்ந்தனர்.

கிட்டத்தட்ட முடிந்த நிலையில் தான் வீடு தயாராய் இருந்தது. சிறுசிறு வேலைகள் தான் என்ற நிலை.

கனகாவும் அன்பரசனோடு உள்ளே சென்று சுற்றி சுற்றிப் பார்க்க தான் செய்தார்.

"பிடிச்சிருக்கா அனு?" என அரவிந்த் கேட்க,

"ரொம்ப த்தான். ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு!" என்றவளுக்கு தங்களின் வீடு!" என்பதில் அத்தனை சந்தோஷமும் கூட.

உறவுகள் அனைவரையும் அழைத்து தான் வந்திருந்தனர் வீட்டினைப் பார்க்க என.

"அனு! இப்ப சிம்பிளா ஃபர்ஸ்ட் நீ பாலை காய்ச்சுடு. இன்னைக்கு இங்க தானே ஸ்டே பண்றீங்க அதனால. கிராகப்ரவேசம் பிரப்பரா வேலை முடிஞ்சதும் வச்சுக்கலாம்!" என திகழ்மதி அனைத்தையும் அனன்யாவை செய்ய சொல்ல, அன்பரசன் அனைத்தையும் கவனித்து தான் நின்றார்.

மீண்டும் மாலை பெண் வீட்டிற்கு அனைவருமாய் வருகை தர,

கனகா எந்த வேலையும் செய்யவில்லை. செய்ய விடவும் இல்லை அன்பர்சன். அனைவரும் வரும் முன்பே காபியை தயாராய் வைத்திருக்க சொல்லி இருந்தார் வேலைக்கு இருந்தவர்களிடம்.

இரவு உணவும் கூட அங்கே ஓரமாய் தயாராகிக் கொண்டிருந்தது உறவினர்களுக்கு என்று.

'இவர் என்னை ஒதுக்கி வைக்கிறாரா இல்லை நிஜமாகவே மகளுக்கு என்று சிறப்பாய் செய்ய இத்தனை ஏற்பாடா?' என குழம்பி தான் போனார் கனகா.

எப்பொழுதும் மகிழினி தான் ஹிட்லர் என்று சொல்லி கனகாவை கண்டு கொள்ளாமல் வேண்டுமென்றே அவரை புறக்கணிப்பது.

இன்று கிட்டத்தட்ட அனைவருமே அப்படி தான் இருந்தனர். அதற்காக ஒதுக்கி எல்லாம் வைக்கவில்லை. பேச்சுக்களை குறைத்திருந்தனர். அதற்கே தனித்துவிடப்பட்ட நிலைக்கு சென்றிருந்தார் கனகா.

யாரையும் குற்றம் சொல்லவும் முடியாதே. தான் செய்துவைத்த வேலையும் அப்படி இருக்க, தன் வீட்டிலேயே தன்னை தவிர அனைவரும் அதுவும் தான் வெறுக்கும் அனைவரும் ஒன்றாய் சேர்ந்து சிரித்து பேசி மகிழ்ந்திருந்து என இருக்க, உள்ளுக்குள் என்னவோ செய்தது கனகாவை.

"அனு! நாங்க இப்படி இருக்கோம்னா வேற வழி இல்லை. இப்படி இருந்தா தான் சரினு ஆகிடும். ஆனா நீ அப்படி இல்லை. உங்க அம்மா அவங்க. அதனால கிளம்பும் போது வர்றேன்னு சொல்லிட்டு ஆசிர்வாதம் வாங்கிட்டு தான் வரணும். சரியா?" என திகழ்மதி எடுத்து சொல்ல,

"ஹிட்லர் அத்தை மூஞ்சே சரி இல்லை. ஏன் க்கா அனுவை போக சொல்றிங்க அவங்ககிட்ட?" என மகிழினி கேட்டதற்கும்,

"மகி! பெரியவங்களை அப்படி பேசாத. சின்ன பொண்ணா நீ?" என திகழ்மதி அதட்ட,

"நீங்க எல்லாம் இவ்வளவு நல்லவங்களா இருக்க வேண்டாம் அண்ணி!" என்றாள் அனன்யாவும்.

"அதானே!" என அன்பரசன் கேட்கவும் தான் அவர் வந்ததையும் கவனித்தாள் திகழ்மதி.

"மாமா! சும்மா தான் பேசிட்டு இருந்தோம்!" என திகழ்மதி சொல்ல,

"சும்மா பேசினா கூட நல்லது நினச்சு பேசுறியே திகழ்! உன் மனசு யாருக்கு வரும்!" என்று சொல்லி அவர்கள் விருப்பதில் விட்டு நகர்ந்தார்.

ஏழு மணியானது மீண்டும் அரவிந்த் அனன்யாவுடன் கிழம்புவதற்கு.

சொந்தங்கள் எல்லாம் அனன்யா வீட்டில் தங்கிக் கொள்ள,

"நான் வேணா பாதி பேரை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் சித்தப்பா!" என ஆர்யன் கேட்டும்,

"இங்க தான் இடம் இருக்கே! நிறைய பேர் தங்க போறதும் இல்ல. நான் பார்த்துக்குறேன்!" என்றுவிட்டார் அன்பரசன்.

அக்ஷயா அனன்யா கைகளில் தூங்கி இருக்க, திகழ்மதி அவளை தன்னிடம் வாங்கிக் கொண்டாள்.

"நீங்க மகி எல்லாரும் அங்க வாங்களேன். இன்னைக்கு ஒரு நாள் எல்லாரும் ஒண்ணா இருக்கலாம் இல்ல?" என அனன்யா கேட்கவும் மகிழினி திகழ்மதி இருவரும் சிரித்தனர்.

"அதான் இனி எப்பவும் ஒண்ணா இருக்க போறோமே அனு? நீங்க போய்ட்டு வாங்க. காலையில நாங்க வர்றோம்!" என்றாள் திகழ்மதி.

அன்பரசன் கனகா என இருவரிடமும் சொல்லிள் கொண்டு அரவிந்த்துடன் அனன்யா கிளம்ப, மகிழினி வசந்த் இவர்களை புது வீட்டில் கொண்டு சேர்த்து விட்டு திகழ்மதி வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

"என்ன த்தான் இவ்ளோ அமைதியா இருக்கு வீடு?" இருவர் மட்டும் இருக்கும் அதுவும் புது வீட்டில் இருந்த அந்த அமைதி அனன்யாவிற்கு பேரமைதியாய் தெரிந்தது.

"இவ்ளோ நேரமும் ஆளா இருந்தாங்க. இப்ப யாரும் இல்லைனதும் உனக்கு அப்படி தெரியுது!" என்றான் அரவிந்த் கொண்டு வந்த பேகை உள்ளே தங்கள் அறைக்கு எடுத்து சென்றபடி.

"வீடு ரொம்ப அழகா வந்திருக்கு த்தான்!" என மீண்டுமாய் அவன் வெளிவரும் போது அனன்யா சொல்ல,

"அதான் அப்பவே சொல்லிட்டியே அனுமா! போய் ஃப்ரஷ் ஆகிக்கோ!" என்றான்.

"ஹ்ம்!" என்றவள் சுற்றிலும் பார்த்தபடி தங்கள் அறைக்கு செல்ல, அந்த புது கட்டில் மெத்தையை தவிர அங்கே எதுவும் இல்லை.

பார்க்கவும் மனம் பலமாய் துடிக்க துவங்க, பாத்ரூமில் நுழைந்து கொண்டவளுக்கு இந்த நிமிடங்கள் அத்தனைக்கு மூச்சை இழுத்து வைத்தது.

சாதாரணமாய் பேசி வைக்க நினைத்தாலும் அப்படி சாதாரணமாய் அவனிடம் இருக்கவே முடியவில்லை அனன்யாவிற்கு.

அதுவும் இவர்களுக்கு கிடைத்திருக்கும் இந்த தனிமை. தலையை உலுக்கிக் கொண்டு முகத்தில் நீரை அடித்துக் கொண்டாள்.

"ஏன் அத்தான் கூட இந்த மாதிரி நைட் நேரம் இருந்ததே இல்லையா?" என நினைத்தாலும் அந்த நேரங்களும் இதுவும் ஒன்றா என அவளுக்கே தெரியுமே!

வெகு சில நேரங்களில் மட்டுமே அவளை நெருங்கி நின்று அவளை உணர்ந்து தன் உணர்வுகளை அவன் கட்டுக்குள் வைத்து கண்ணங்களை கிள்ளி என அரவிந்த் சில நேரங்களில் தடுமாறும் கணங்கள் எல்லாம் அணிவகுத்து நின்றது அனன்யா முன்பு.

வெளியே வரும் நேரம் அரவிந்த் அங்கே இல்லை. வெளியில் இருப்பானோ என செல்ல நினைக்கும் முன்,

"இங்க இருக்கேன் அனு!" என்றான் பால்கனியில் நின்று. மிக மெதுவாய் அந்த கதவருகே செல்ல, வா என்ற அரவிந்த் தலையசைப்பில் அவன் அருகே சென்று நின்றாள்.

அத்தனை மௌனமாய் வெளியில் வேடிக்கை பார்த்து நின்றவன் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு தன் தோள்கள் உரச அவளையும் நிற்க வைத்தான்.

"த்தான்?" என கேள்வியாய் அவள் பார்க்க,

"ஒரு ஃபைவ் மினிட்ஸ் டா!" என்றவனிடம் அனன்யாவின் கைகள் இருக்க, பார்வை தூரமாய் இருட்டை வெறித்திருந்தது.

"இங்க வருவோம்னு காலைல கூட நான் நினைக்கல அனு. ஆனா இங்க தான் வரணும்னு ஒரு எண்ணம் இருந்துச்சு. ஆர்யா மாமா வீட்டுக்கு தான் போகணும் இல்லைனா மாமா எதாவது நினைச்சுப்பாங்களேனு நினைச்சேன். ஆனா அக்கா புரிஞ்சிகிட்டாங்க!" என்றான் அரவிந்த்.

"ஹ்ம்!"

"எல்லாமே ஒரே நேரத்துல எனக்கு கிடைச்சா மாதிரி இருக்கு. ஒரு மாதிரி உள்ள அழுத்துது!" என அரவிந்த் சொல்லவும்,

"என்னாச்சு த்தான்?" என்றாள் அவனை நிமிர்ந்து பார்த்து.

"ஹ்ம்! ரொம்ப சந்தோஷமா இருக்கு அனு. எனக்குன்னு ஒரு வீடு. என்னோட மனைவி. நாம ஒரு பேமிலி இல்ல? இனி இது நம்ம வீடு. நாம வாழ இந்த வீடு!" என்றவன் வீட்டைப் பார்த்து திரும்பிக் கொண்டான்.

"நேத்து வரை இப்படி எதுவும் தோணல. ஒரே நாள்ல எல்லாம் கிடைச்சா மாதிரி.. பெரிய பொறுப்பு கைக்கு வந்தா மாதிரி இருக்கு!" என்றவன்,

"ப்ச்! வா!" என அவளை உள்ளே அழைத்து வந்தான்.

"அனு!" என உள்ளே வந்ததும் அவளை அணைத்துக் கொண்டவன் செயலில் அனன்யாவும் அவனை தாங்கிக் கொண்டாள்.

"ரொம்ப ஹாப்பியா இருக்கேன் அனுமா. வேறென்ன சொல்லனு தெரியல" என்று சொல்ல,

"த்தான்! அழறிங்களா?" என்றாள் அவனில் இருந்து பிரிந்து அவன் முகம் பார்த்து.

"ம்ம்ஹும்ம்!" என்றவன் குரல் கரகரப்பும் என கண்களும் கலங்கி நின்றது.

"ச்சோ நான் பார்த்துட்டேன். அர்வி த்தான் அழுறாங்க!" என அனன்யா கிண்டல் செய்ய,

"ஓய்!" என அவள் தலையில் கொட்டு வைத்தவன்,

"சாரீ மாத்திக்கல நீ?" என்றான் அவளோடு அமர்ந்து.

"ம்ம்ஹும்!" என்றவள் குனிந்து கொள்ள,

"ஏன் அனு?" என இன்னும் அவன் சீண்டலாய் கேட்க,

"த்தான்!" என்றவள் குரல் உள்ளே சென்றது அவன் பார்வை புரிந்ததில்.

"மாத்திக்கோ அனு!" என அவன் விடவே இல்லை.

"த்தான்! மாத்திக்க கூடாதுன்னு சொல்லி தான் அனுப்பிச்சாங்க!" என்றவள் தானே அவன் நெஞ்சத்தில் வெட்கத்தில் சாய்ந்திருக்க, புரிந்தவனும் குறும்பு புன்னகை கொண்டு அவளை அணைத்திருந்தான்.

நெஞ்சம் முட்டி நின்ற சந்தோஷத்தோடு தங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தனர்.

தீரா தாகங்களில் திளைத்து அரவிந்த்தின் கை சேர்ந்த அனன்யாவினை தன் உயிருக்குள் எடுத்துக் கொண்டான் அரவிந்த்.

எபிலாக் on the way😍😍😍