அத்தியாயம் 10
"அட என்னம்மா நீங்க? கொஞ்சம் வேகமா தான் நடங்களேன். அங்க பாருங்க என் பொண்டாட்டி தங்கப்புள்ளைய!!" தங்களுக்கு பத்துப்படிகள் மேலே நின்றவளை காட்டி கூறினான் ஹரிஷ்.
மூச்சிரைக்க நடந்து கொண்டிருந்த கௌரி நின்றவர் ஏதோ சொல்ல வருவது புரிந்து அவரை பார்த்து ஹரிஷும் நிற்க,
"இப்படிலாம் கொடுமைப்படுத்துவன்னு தெரிஞ்சிருந்தா நானும் உங்கப்பாவோடவே போய் சேர்ந்திருப்பேன் டா. உன் பொண்டாட்டிக்கு கவெர்மென்ட் வேலை கிடைச்சா நீ படியேறி வர்றதா வேண்டிக்க வேண்டியது தான? நான் என்ன டா பாவம் பண்ணினேன்!" பேச முடியாமல் மூச்சை இழுத்து விட்டு இழுத்து விட்டு கூறினார் கௌரி.
"அப்படிலாம் சொல்லப்படாது! நம்ம நிலா ம்மா. உன் மருமக. நீ இல்லைனா இப்படி ஒரு பத்திரமாத்து தங்க....." என்று சொல்ல வந்தவனை கைநீட்டி தடுத்தவர்,
"நான் நாலு நாள் ஆனாலும் தனியா மெதுவா மேல ஏறிக்குறேன். தயவு செஞ்சு கிளம்பு. கடுப்புல தள்ளிவிட்ற போறேன்!" என்றவர் அப்போது தான் நினைவு வந்தவராய் பக்கத்தில் வந்து கொண்டிருந்த பூஜாவை தேடினார்.
"இங்க பார்த்தியா! அப்பாவையும் கூட்டிட்டு தான் வந்திருக்கேன்!" என்று தந்தையின் புகைப்படத்தை அன்னையிடம் காட்டியவன் பூஜாவை நோக்கி நகர,
"போனவரையும் சேர்த்து கொடுமைப்படுத்துறானே!" என முறைத்தபடி வெண்மதி இருக்குமிடம் நோக்கி நடக்க ஆரம்பித்தார் கால்களை பிடித்தபடி.
இவர்களுக்கும் இருபது படிகளுக்கு கீழே அமரவே செய்துவிட்டாள் அவள்.
ஹரிஷ் வெண்மதி திருமணம் முடிந்து இரண்டாவது திருமண நாள் இன்று. சென்ற வாரம் தான் வெண்மதிக்கு அரசு மருத்துவராய் தேர்வான செய்தி வந்திருக்க, அன்றே வேண்டுதல் வைத்து மொத்த குடும்பத்தையும் பழனிக்கு அழைத்து வந்துவிட்டான் ஹரிஷ்.
மொத்த குடும்பமா என்று சந்தேகம் வந்திருக்குமே? ஆம் மொத்த குடும்பமும் தான். இதோ அவர்களையும் பார்க்கலாம்.
"பூச்சிஈ! கால்வாசி படி கூட ஏறவே இல்ல? இங்க என்ன பண்ற?" என்று கேட்க, ஒற்றைக் கையில் தண்ணீர் பாட்டிலும் மற்றொரு கையில் மோர் குவளையும் என அமர்ந்திருந்தவள் முகத்தில் கொலைவெறி.
அனைத்தையும் இவர்களுக்கு மேலே நின்று பார்த்துக் கொண்டிருந்த வெண்மதி கணவனை நினைத்து தலையில் அடித்துக் கொண்டாள்.
"என்ன பாஸ் இங்கேயே உட்கார்ந்துட்டிங்க? இன்னும் கொஞ்சம் தான்!" ஹரிஷ் சொல்ல,
"இன்னும் கொஞ்சமா?" என்று மேலே பார்த்த சத்யன் அப்படியே திரும்பி ஹரிஷைப் பார்க்க,
"கொஞ்சம்னா... கொஞ்சம் கொஞ்சமா கொஞ்சம்." என்று திருதிருத்த ஹரிஷ்,
"உக்கிரத்துல இருக்குறாளோ?" என்று சத்யனிடம் கேட்க,
"மாட்டினா தொங்க விட்ருவா. எஸ்கேப் ஆகிடுங்க!" என்று கூறக் கேட்டவன்,
"சரி சரி மசமசனு நிக்காம ஏறுங்க. கந்தனுக்கு அரோகரா!" என்றபடி வந்தவழி முன்னே சென்றான்.
"என்ன டி இது? கூப்பிட்டுவச்சு வச்சு செய்யுறிங்க?" என்று சத்யன் பூஜாவிடம் கேட்க,
"என்கிட்ட கேட்டா? நான் தான் சொன்னேனே! அவன் கிட்னிய எடுக்க தான் வா வானு கூப்பிடுறான் வராதனு சொன்னேனே! கேட்டிங்களா?" என்ற பூஜா,
"உனக்கு தான் பாசமே இல்ல! நண்பன்டா! தோஸ்துடா! னு வசனம் பேசினீங்க இல்ல? அனுபவிங்க!" என்றாள்.
"பாசமா கூப்பிட்டாரேனு நினச்சேன்! மனுஷன் இப்படி இருப்பார்னு நினைக்கலையே!" என்றான் சத்யன் அழாத குறையாய்.
சத்யன் பூஜா திருமணம் இன்னும் ஒரு மாதத்தில் நடக்க இருக்கிறது. பூஜாவிற்கு என ஹரிஷ் முதல்முதலில் பார்த்து அன்று விழாவில் அறிமுகப்படுத்த நினைத்தது இந்த சத்யனை தான். அவனும் காவல்துறையில் தான் இருக்கிறான்.
"நல்லவேளை பூஜா! அம்மா அப்பாவையும் கூட்டிட்டு வாங்கனு சொன்னார் ஹரிஷ். நான் தான் உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணலாமேனு தனியா வந்தேன். எங்கம்மால்லாம் வந்திருந்தா நினச்சு பாரு! அவங்களையும் நடக்க விட்ருப்பார் இல்ல?" என்றவன்,
"ஸ்டேஷன்ல ஆபீஸ்ல எல்லாம் இவரைப் பார்த்து நான் வேற மாதிரி நினச்சேன்" என்று சத்யன் புலம்ப,
"புலம்பாம வாங்க. மதிக்காக தான் இவனை சும்மா விடுறேன்!" என்று சத்யன் கைகளைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள் பூஜா.
"என்ன நிலா நின்னுட்ட? மேல போய்ட்டு இருக்கலாம்ல? அம்மா எங்க?" என்று கேட்டு மனைவி அருகே ஹரிஷ் வர,
"வரவர உங்க அழிச்சாட்டியம் தாங்க முடியல. வீட்ல வச்சு நாம நடந்து போகலாம் அவங்க ரோப்கார் ட்ரெயின் இப்படி எதுலயாவது மேல வரட்டும்னு தான சொன்னிங்க? அப்புறம் ஏன் இப்படி?" என்று கணவனை வெண்மதி கேட்க,
"அப்படி தான் நானும் நினச்சேன். இங்க வந்து பார்த்ததும் தான் இவ்ளோ படியானு ஷாக். அப்புறம் ஏன் நாம மட்டும்? அதான் குடும்பமா வாங்க கொண்டாட்டமா போவோம்னு கோர்த்து விட்டுட்டேன். எப்படி?" என்றவன்,
"ஆமா மீச எங்க?" என்று கேட்க,
"அப்பாக்கும் நடக்கவே முடியல. மனுஷன் உங்க பேச்சுக்கு பயந்தே முன்னாடி அம்மா கூட வேகவேகமா போய்ட்டார்!" என்று சொல்ல, அப்படி ஒரு சிரிப்பு ஹரிஷிடம்.
"சிரிக்காதிங்க! எல்லாரையும் என்ன பாடு படுத்துறீங்க?" என்று சொல்ல,
"இதெல்லாம் ஒரு ஜாலி உசிலம்பட்டி! இப்ப நடக்கலைனா எப்ப? மீச வேற இந்த கோவிலுக்கு வந்ததே இல்லையாம். இனி மறக்குமா?" என்று கேட்க,
"உங்ககிட்ட பேசறதே வேஸ்ட்!" என்றவளை தோளோடு அணைத்துக் கொண்டவன்,
"அப்படியே பேசிட்டே போலாம் வா வா!" என்று சொல்லி அழைக்க,
"திருத்தவே முடியாது!" என்ற நினைப்போடு நடக்க ஆரம்பித்தாள்.
அனைவரும் மேலே வந்து சேர்ந்து குடும்பமாய் சாமி தரிசனம் செய்து வெளிய வந்து ஒரிடத்தினில் அமர, பஞ்சாமிர்தம் வாங்கி வந்து அனைவருக்குமாய் கையில் வைத்தான் ஹரிஷ்.
"அல்வா குடுக்குற மாதிரியே இருக்கு!" வெண்மதி அவன் காதில் சொல்லி சிரிக்க,
"மீசை என்னை முறைக்கும் போதே தெரியல? அவரு மைண்ட்வாய்ஸும் இதே தான் போல!" என்று அவனுமே மனைவியிடம் ரகசியம் பேசினான்.
குரு நாராயணன் மட்டும் எங்கோ தனியே சென்று வந்தவர்,
"இந்தாம்மா!" தன் மகளிடம் அனைவருக்குமான மேலிருந்து கீழே செல்லும் ரயில் டிக்கெட்டை கொடுக்க,
"உஷார் பார்ட்டி தான் போ!" என்று அதற்கும் கிண்டல் பேசினான் ஹரிஷ்.
நிஜத்திற்கும் பயத்தில் தான் அவரே தேடி சென்று வாங்கி வந்தது.
"நடக்குற வயசா எனக்கு! மாப்பிள்ளையா போய்ட்டாரேனு பாக்குறேன்!" என மேகலாவிடம் வரும் போதே பொரிந்து தள்ளியிருந்தார்.
"நல்ல வேலை பண்ணின ண்ணே! இல்லைனா திரும்ப இவ்வளவு இறங்கும் முன்ன என்னை எல்லாருமா சேர்ந்து தூக்கிட்டு தான் போக வேண்டியதா போயிருக்கும்" என்று அண்ணனிடம் கௌரி சொல்ல,
"விடு ம்மா! அதான் ஏறியாச்சே!" என்றவருக்கும் திரும்பி நடக்க முடியும் என்றெல்லாம் நினைக்கவே வராது.
குரு நாராயணன் தானே தங்கையிடம் சிறிது சிறிதாய் பேச ஆரம்பித்திருக்க, ஹரிஷ் வெண்மதி இருவரும் அதைப் பார்த்து சிரித்துக் கொண்டனர்.
"ஆமா! உங்களுக்கே நாலு மாசம் தான் ஆச்சு திருச்சி டிரான்ஸ்பேர் ஆகி! இவ்வளவு நாளும் சிஸ்டர் கூட இருந்தாங்க. இப்ப சிஸ்டர்க்கு போஸ்டிங் சென்னைல! எப்படி?" சத்யன் ஹரிஷிடம் கேட்க,
"கொஞ்ச நாள் தனியா காயட்டும் அப்ப தான் அடங்கி இருப்பான். என்ன ஒரு சேட்டை! டிரான்ஸ்பேர் கிடைச்ச அடுத்த நாளே மதியையும் கிட்டத்தட்ட இழுத்து தான் கூட்டிட்டு போனான். பாவம் அவ! வீடு பார்த்து கொஞ்சம் செட் பண்ணி வச்சுட்டு கூட்டிட்டு போடான்னு சொன்னா அவ்ளோ பேச்சு. இவளும் அவன் பேச்சுக்கு மயங்கி போயாச்சு" என்று முறைப்புடன் கௌரி கூற,
"நல்ல அம்மா ம்மா நீ!" என முறைத்தவன்,
"அந்த கவலை எல்லாம் உங்களுக்கு வேணாம்! நான் தான் அவளுக்கு வேலைக்கு ஆர்டர் வந்த அடுத்த நாளே சென்னைக்கு டிரான்ஸ்பேர் கேட்டு மெயில் போட்டு நம்ம கமிஷனருக்கு நைட்டு அப்பப்ப ஒரு மணிக்கெல்லாம் கால் பண்ணி பேசிட்டு இருக்கேனே!" என்றவன் பேச்சில் வெண்மதி உட்பட அனைவரும் அதிர,
"இன்னும் பத்து நாள் தான் டைம் அதுக்குள்ள சென்னைல போஸ்டிங் கிடைக்காம இருக்கட்டும் நடுராத்திரி கமிஷனர் வீட்டுக்கே போய் நான் பேசுற பேச்சுல அவரே அடுத்த நாள் சென்னைக்கு மாத்தி விட்ருவார்!" என்றான்.
"எப்படி ஹரி இப்படிலாம்? நீயெல்லாம் வேற லெவல் மேன்" என்ற பூஜா,
"சார்! கத்துக்கோங்க நீங்க!" என்றாள் சத்யனிடம்.
"இதுக்கெல்லாம் கமிஷனரையும் போட்டு ஏன்டா சாவடிக்கிற?" என்று நொந்தார் கௌரி.
"வேணும்னா எத்தனை மணியானாலும் என்னை காண்டக்ட் பண்ணுனு அவர் தான் ம்மா சொன்னார்!" என பச்சைபிள்ளையாய் ஹரிஷ் சொல்ல,
"அடேய் அவர் வேலை விஷயமா கால் பண்ண சொல்லி இருப்பார்! ஏன் டா!" என்று கௌரி சொல்ல,
"ஆனா சொன்னார்ல?" என எதற்கும் அசையவில்லை அவன்.
"பூஜா! நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி அவர் போன்ல இருந்து என் நம்பரை டெலீட் பண்ணிடு டி!" என்றான் சத்யன் ரகசியமாய்.
மாலை வரை இருந்தவர்கள் தங்களுக்கு தேவையானவை என கடைகளில் உலாவிவிட்டு இரவு அங்கிருந்து கிளம்பி இருந்தனர்.
"நல்லாருக்கு இல்ல கோவில்? அடுத்த மாசமும் வரலாமா?" என்ற ஹரிஷ்,
"எனக்கு ஒர்க் இருந்தா உங்களுக்கெல்லாம் நானே கார் அர்ரேஞ்ச் பண்ணி வைக்கிறேன்!" என்றும் சொல்ல,
"எப்படி நேக்கா கழண்டுக்குறார் பாரேன்!. எப்படிடா இவரெல்லாம் ஈஸியா அக்யூஸ்ட்கிட்ட இருந்து வாக்குமூலம் வாங்கிருராருன்னு நினச்சேன்!" என்ற சத்யன்,
"எங்க கூப்பிட்டாலும் உஷாரா இருக்கனும் டி நாம!" என்று சொல்லி முடிக்கும் முன்,
"வேண்டாம் வேண்டாம்! அடுத்த வருஷம் இனி இங்க வரலாம். அடுத்த மாசம் திருப்பதி போலாம்!" என்றான் சிந்தித்து ஹரிஷ்.
"அம்மாடி! இனி நீங்க குடும்பமா எங்க வேணாலும் போய்ட்டு வாங்க. நானும் மேகலாவும் மாசம் மாசம் நீங்க நல்லபடியா போய்ட்டு வரணும்னு நம்ம அழகர் சாமிகிட்டயும் மீனாட்சி ஆத்தாகிட்டயும் போய் பூஜை பண்ணிடுதோம்!" என்று படுத்தேவிட்டார் குரு நாராயணன்.
"ஆமா டா! நீயும் உன் பொண்டாட்டியும்னு குடும்பமா போய்ட்டு வாங்க. நான் தனியா போய்க்கிறேன். வேணும்னா இந்த பூஜாவையும்..." என்று கௌரி சொல்ல வர,
"கௌரிம்மா!" என்று அழைத்த பூஜா,
"ம்ம்ஹ்ம்ம்!" என்று தலையாட்ட,
"அத்தை! நான் பாவம்!" என்றான் சத்யனுமே!
அதில் வெண்மதி சிரித்துவிட, "சாமி விஷயத்துல என்ன கிண்டல் வேண்டி இருக்கு உங்களுக்கு? ராஸ்கல்ஸ்!" என்றான் ஹரிஷ்.
"ஒவ்வொரு சாமியையும் ஒவ்வொரு வருஷமும் நடந்து போய் பார்த்தா தான் அவங்க பார்வை நம்ம பக்கமா விழும்!" ஹரிஷ் சொல்ல,
"அடுத்த வருஷம் நடந்து போக நாம இருக்கணுமே டா! இங்க பாரு! இங்க இருக்குற அம்புட்டு பேரும் சுகர் பேசண்டு! உன் பொண்டாட்டி புண்ணியத்தில ஓடிட்டு இருக்கு. நீ வந்து கும்மியடிக்காத. எங்களுக்கு எப்படி கும்பிடணுமோ அப்படி கும்பிட்டுக்குறோம்!" என்றார் கௌரி.
**************************************
பழனி சென்று வந்த கையோடு பூஜாவின் திருமண வேலைகளையும் ஆரம்பித்துவிட்டான் ஹரிஷ்.
பூஜாவின் உறவினர்களுக்கு அவளே சத்யனுடன் சென்று பத்திரிக்கை வைத்து வர,
"மாப்பிள்ளை பார்த்ததை கூட எங்ககிட்ட சொல்லலையே டி?" என்று அங்கலாய்த்த உறவுகளிடம்,
"நீங்க உங்க பொண்ணு பையன் கல்யாணத்துக்கெல்லாம் எனக்கு கால் பண்ணி தானே சொன்னிங்க? நானு அப்படி இருக்க கூடாதேனு தான் இன்விடேஷனோட நேர்ல வந்தேன்!" என்று சொல்லிக்காட்டி விட்டு தான் வந்தாள்.
இடையே வெண்மதியும் அரசு வேலையில் சேர்ந்திருக்க, ஒரு மாத காலம் கழித்து தான் ஹரிஷின் வேலை மாற்றம் தயாராகி இருந்தது. வாரத்திற்கு இரு முறை என மனைவியை பார்க்க சென்னை வரும் பொழுதெல்லாம் நேரம், காலம், வகைதொகை என எதுவுமில்லாமல் கொஞ்சமும் கெஞ்சவும் இல்லாமல் கமிஷனரிடம் போய் நின்றே காரியத்தை சாதித்து இருந்தான்.
"ஹரிஷ்! நீ ஒரு இன்ஸ்பெக்டர்! பட் யூ பிகேவ் லைக் அ சைல்ட்!" என அத்தனை கோபமாய் கமிஷனர் சொல்லியும்,
"நாட்டு மக்களோட வீட்டு மக்களும் முக்கியமில்லையா சார்?" என்று கேட்பவனை அவரும் என்ன தான் செய்வார்.
'என்னவோ பண்ணு!' அல்லது 'போய் தொலை!' என்பதை போல அவன் கேட்டதை செய்தும் கொடுத்தார் அவன் இத்துறைக்கு எத்தனை முக்கியம் என உணர்ந்து.
"போன ஆறே மாசத்துல ஒரு டிரான்ஸ்பேர்! ஏன் டா எல்லாரும் என்ன நினைப்பாங்கன்றதுகாகவாச்சும் ஒரு ரெண்டு மூணு மாசம் திருச்சில இருந்திருக்கலாம்ல?" என்று கௌரி கேட்க,
"அப்பா தான் ம்மா கனவுல வந்து சொன்னாரு! நான் தனியா இருந்தா நிலா சரியா தூங்குறதே இல்லையாம். நான் தனியா இருக்குறது அவருக்கும் பிடிக்கலையாம்!" என்று பயபாவ முகத்தோடு ஹரிஷ் கூற,
"என்னென்ன கதை சொல்றான் பாருங்க!" என கிண்டல் பேசினாள் பூஜா.
பூஜா திருமணத்தில் மண்டபம், கேட்டரிங், பூ, மாலை, வாழை தோரணம், ரிசெப்ஷன் வேலை என ஒவ்வொன்ரையும் உடனிருந்து கவனித்து தன் கவனத்தில் நடக்கும்படி அத்தனை கொண்டாட்டமாய் ஒரு திருமணம் பூஜாவிற்கு நடந்தேற, கௌரிக்கு மகனை நினைத்து அத்தனை பெருமை.
கௌரி தோள்களை கட்டிக் கொண்டு அப்படி ஒரு அழுகை பூஜா புகுந்த வீடு கிளம்புகையில்.
"பூச்சி! கார் எடுத்தா அரை மணி நேரத்துல வர போறோம்" என்ற ஹரிஷ் சொல்லி முடிக்கும் முன்,
"அப்ப பைக் எடுத்தா?" என்று வெண்மதி கேட்க,
"அவன் கூட சேராத சேராதனு சொன்னேனே கேட்டியா?" என கௌரி தலையில் அடித்துக் கொள்ள, பூஜா அப்பொழுது தான் புன்னகைத்தாள்.
"தேங்க்ஸ் ஃபார் எவரிதிங் டா!" என ஹரிஷோடு வெண்மதியின் கைகளையும் பற்றிக் கொண்டாள் பூஜா.
"ஹாப்பியா இருக்கனும் ம்ம்ம்?" என்று தோள்தட்டி புன்னகையோடு அனுப்பிவைத்தான் ஹரிஷ்.
பூஜா திருமணத்தின் பின் ஆறு மாதங்கள் கழித்து மீண்டுமாய் வெண்மதியோடு ஊட்டி பயணம்.
இம்முறை அன்னையையும் அழைத்து வர எவ்வளவோ கூப்பிட்டும் மறுத்துவிட்டார் கௌரி.
"எங்க போனாலும் நீ நடக்க தான் விடுவ. ஆளை விடு!" என்றுவிட்டார்.
"வேற எங்கேயாவது கூட்டிட்டு போகலாம்ல? இப்பவும் ஊட்டி தானா?" என்று வெண்மதி ஊட்டி மலையில் மேலிருந்து கீழே இறங்கியபடி சலித்து கேட்க,
"எனக்கு ஊட்டி தான் பிடிச்சிருக்கு பியுட்டி!" என்றான்.
"ஏனாம்?"
"நீ முதல்முதல்ல என்னை இங்க தான பார்த்த?"
"இதெல்லாம் ஓவர்! அப்ப உன்னை என்ன சொன்னேன் நியாபகம் இருக்குல்ல?" என்று சிரிப்பை அடக்கி அவள் கேட்க,
"சோ வாட் கேர்ள்? ஆனா நியாபகம் இருக்கு தான? நான் தான் மிஸ் பண்ணிட்டேன்! ஆனா அப்ப செம்ம காண்டு! அந்த பொண்ணு பாய்சன் குடிச்சுட்டுன்னு சொல்றேன். ப்ரோசீஜர்னு சொல்ற! மண்டைல ரெண்டு தட்டு தட்டணும்னு தோணிச்சு!" என்று நெற்றி முட்டி சொல்ல,
"இன்ஸ்பெக்டர் சார்! அந்த ப்ரோசீஜர நான் சொல்லலைனா நான் இங்க சர்வீஸ் பண்ணவே லாயக்கு இல்லைனு கழுத்தை பிடிச்சு வெளில தள்ளி இருப்பாங்க. உங்க போலீஸ் ரூல்ஸ் தான அது?" என்றாள் அவனுக்கு கொட்டு வைத்து.
"அதெல்லாம் யார் வச்சதோ! ப்ச்! சரி அந்த டாபிக் விடு! இன்னொரு முக்கியமான ரீசன் இருக்கு. என்னனு கேளு உசிலம்பட்டி!"
"ம்ம்ஹும்ம் வேண்டாம்! நீயா ஆஜர் ஆகுறன்னா அது எப்படி இருக்கும்னு எனக்கு தெரியும்!" என்றவளை இழுத்து கைகளுக்குள் கொண்டு வந்தான்.
"ப்ச்! பப்ளிக் பிளேஸ்!" என்று வெண்மதி தள்ளிவிட,
"சாரீ பிங்க் கலர்!" என்றவன் வாயை பொத்திவிட்டாள்.
"ஏதாச்சும் சொன்ன! ராஸ்கல் கொன்னுடுவேன்!" என்றவள் கையை எடுக்க,
"பளிச்!" என்று சிரித்தவன்,
"ரசிக்குறதை சொல்ல கூட உரிமை இல்லயா டி?" என்று கேட்க,
"ச்சோ! வாயை மூடுங்க! ஏற்கனவே குளிர் தாங்கல! குளிருக்கு எடுத்து வச்சிருந்த எல்லாம் பேக்ல அப்படியே சென்னைல இருக்கு. எப்படி தான் மிஸ் பண்ணினேனோ!" என்றாள்.
"நீ எங்க மிஸ் பண்ணின? அதெல்லாம் பத்திரமா கார்ல கொண்டு வந்து வச்சுட்டியே?" என்று ஹரிஷ் சொல்ல,
"என்ன?" என்றாள் புரியாமல்.
"ஆமா பளிச்! நீ தான் கார்ல கொண்டு வந்து வச்ச! அப்புறம் நீ முன்னாடி போன கேப்ல நான் பின்னாடி இருந்த பேக் எடுத்து வீட்டுல வச்சுட்டேன்!"
"உன்னை..." என்றவள் அடிக்க வர, அரவணைப்பாய் பிடித்துக் கொண்டவன்,
"கொஞ்ச நேரம் வாயை மூடு! என்னை பேச விடு டி! மூச்சு வாங்க பேசி பளிச் பளிச்னு காட்டி... என்னை டிஸ்ட்ராக்ட் பண்றதே உன் வேலையா போச்சு!"
"நான் பேசறேன்? அதுவும் உன்னை பேச விடாம?" என்றவள் முறைக்க,
"ஷப்பா! கல்யாணத்தன்னைக்கு முறைக்க ஆரம்பிச்சவ! மூணு வருஷம் முடிய போகுது.. இவளுக்கு கிளாஸ் எடுத்தே எனக்கு வயசாகிடும் போலயே!" என புலம்பியவன்,
"குளிருக்கு என்னலாம் வேணுமோ அதெல்லாம் நீ பக்கவா கொண்டு வரவா இவ்வளவு தூரம் உன்னை கூட்டிட்டு வந்தேன்! உனக்கு குளிர் பிடிக்காது. சோ ஈவ்னிங் அப்புறம் காட்டேஜ் விட்டு வெளில வர மாட்ட. சோ என்னாகும்? அப்ப உன் குளிரை நான் விரட்டணுமா இல்லையா? அதுக்காக தான்" என்றவன்,
"ஊட்டி எனக்கு பிடிச்ச பிளேசா மாறினாதே அதனால தான் பளிச்! உசிலம்பட்டிக்கு ஒவ்வொண்ணுக்கும் விளக்கம் குடுத்து ஒன்னொன்னா வாங்குறதுக்குள்ள!" என்றவன் பேசியே தங்கிஇருக்குமிடம் அழைத்து வந்திருந்தான்.
"இன்னொன்னு கூட சொல்லணும் நிலா!" என்று கூறியபடி கதவை சாற்றி வர,
"போதும் டா எப்பா! ரொம்ப பேசிட்ட. எனக்கு தான் மூச்சு வாங்குது!"
"கேளு டின்னா!" என்றவன் அணைத்தபடி வந்து கட்டிலில் விழுந்தான்.
"ஷ்ஷ்! சைலன்ட்!" என்ற வெண்மதி அவனை அணைத்துக் கொள்ள,
"ஒண்ணு சொல்லணுமே!" என்றான் புன்னகையுடன்.
"மூச்!" என்றவள்,
"எவ்ளோ பேசுற! ஆனாலும் பிடிக்குது. என்னை என்னவோ பண்ணிட்ட! மூணு வருஷம் ஓடிடுச்சு. ஆனா எப்படி நீ அப்படியே இருக்க என்கிட்ட?" என்று கேட்க, முகம் பார்க்கும் மட்டும் அவளிடம் இருந்து பிரிந்து,
"இதென்ன டி கேள்வி லூசு?" என்றான் நெற்றியில் முட்டி.
"ஆனா தோணுதே! பேசாம ஒண்ணு பண்ணலாம். குட்டியா ஒரு பையன் உன்னை மாதிரி. ம்ம? நான் செக் பண்ணனும் அப்பறமும் நீ இப்படியே என்கிட்ட இருப்பியான்னு"
"குட் ஐடியா உசிலம்பட்டி! உருப்படியா ஒண்ணு சொல்லி இருக்க. ஆனா ஏன் என்னை மாதிரி மட்டும்? இந்த வருஷம் என்னை மாதிரி ஓகே! நெக்ஸ்ட் உன்னை மாதிரி ஒரு க்யூட் குட்டி உசிலம்பட்டி ஒண்ணு! அப்புறம் இதே கேள்வியை கேளு! எப்படி?"
"கேடி கேடி! நீயெல்லாம்!" என்றவளை இன்னும் இறுக்கமாய் அவன் அணைத்துக் கொள்ள,
"ஒரு டைம் மட்டும் மதினு கூப்பிடேன்! சும்மா நீ கூப்பிட்டா எப்படி இருக்கும்னு பாக்கலாம்!" என்றாள் தெரிந்து கொள்ள வேண்டி.
"ப்ச்! அதுக்கு தெலுங்குல போதும்னு அர்த்தமாம். நான் எப்படி டி உன்னை போய் போதும்னு சொல்லுவேன்?" என்று ஹரிஷ் சொல்ல,
"ஹேய்! அது தெலுங்கு இல்ல ம...."
"ரொம்ப முக்கியம்!" என்றவன் பாஷையில் சத்தமிட்டு சிரித்தவளை ரசித்து சேர்ந்தான் ஹரிஷ்.
********** சுபம் ************