அத்தியாயம் 8
இரவு பதினோரு மணிக்கு விசிலடித்தபடி ஹரிஷ் காரை இயக்க, வெளியில் வேடிக்கைப் பார்த்தபடி புன்னகையுடன் அமர்ந்திருந்தாள் வெண்மதி.
காலையில் இருந்த மனநிலைக்கு அப்படியே எதிராய் அத்தனை புத்துணர்வாய் இருந்தது அந்த மாலை நேரம்.
"எல்லாமே சூப்பர்! நான் ரொம்ப ஹாப்பியா பீல் பண்ணினேன். அதனாலயோ என்னவோ ஒரு பிரெஷ் மைண்ட்செட்! இன்னைக்கு நாள் இவ்வளவு அழகா இருக்கும்னு மார்னிங் நான் நினைக்கவே இல்லை!" ஹரிஷ் சொல்ல,
"ம்ம் நானும் தான். உங்க பிரண்ட்ஸ் தான் அராஜகம் பண்ணிட்டாங்க!" என்றாள் வெண்மதியும் சிரித்தபடி.
"பின்ன! என் பிரண்ட்ஸ்ல!" பெருமையாய் அவன் சொல்ல,
"அதே தான்! உங்க பிரண்ட்ஸ்கிட்ட வேற என்ன எக்ஸ்பெக்ட் பண்ண முடியும்? எல்லாருக்குமே வாலு மட்டும் தான் இல்லை" என்று கிண்டலாய் சொல்ல,
"இதெல்லாம் கம்மி! ஆபீஸர்ஸ் இருக்காங்களேனு அடக்கி வாசிக்க சொன்னேன். அலப்பறை பண்ணினா விடிய விடிய ஹோட்டலை விட்டு வெளில வந்திருக்க முடியாது!" என்றான் ஹரிஷும்.
"இதுல மீசைய பார்த்து ஒவ்வொருத்தணும் தனியா விசாரிக்குறான் யாரு டா இந்த ஜிம் பாடி பெரியவருன்னு!" என்று ஹரிஷ் சிரிக்க,
"வந்துட்டியா? எங்க போனாலும் என் அப்பாவை பேசலைனா உனக்கு பொழுது போகாதா?" என்றவள் திரும்பி தன் அன்னை தந்தை வருவதையும் ஊர்ஜிதப்படுத்திக் கொண்டாள்.
ஹரிஷ் தன் துறை சார்ந்த நண்பர்கள், தெரிந்தவர்கள், மேலதிகாரிகளோடு தன் நெருங்கிய நண்பர்களுக்கும் அழைப்பு வைத்திருக்க, இன்றைய விழா திருமண வரவேற்பு போலவே அத்தனை அழகாய் நடந்து முடிந்திருந்தது.
ஒவ்வொரு நண்பனின் திருமணத்திலும் ஹரிஷ் அவன் நண்பர்களுடன் சேர்ந்து எத்தனை அரட்டைகள் செய்தானோ அத்தனையும் இன்று அவனுக்கே நடக்க, ஹரிஷ் அதனை இலகுவாய் ஏற்றுக் கொண்டு வெண்மதியையும் அவனோடு இணைத்துக் கொண்டு என நேரம் நொடியாய் கரைந்தது.
இன்று காலை தான் ஹரிஷ் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர் குரு நாராயணனும் மேகலாவும்.
எப்பொழுதும் போல மாமனாரும் மருமகனும் இடக்காய் பேசிக் கொள்ள, அதை பெரிதாய் எடுத்துக் கொள்ள தான் யாரும் இல்லை.
"என் அப்பான்னா நீ எப்பவும் ரொம்ப தான் பண்ற! அதுக்கு இருக்கு ஒரு நாள்!" என்றபடி வெண்மதியுமே கடந்து விடுவாள்.
"உன் அப்பா என்ன அப்பாடக்கரா?" என அதற்கும் பேசி தான் வைப்பான் கணவன் ஆனவன்.
காலையில நடந்த அந்த அசம்பாவிதம் பெரியவர்களுக்கு வருத்தத்தை கொடுத்திருக்க, குரு நாராயணனும் மேகலாவும் கலங்கி இருந்தவர்களுக்கு விழா நடைபெறும் இடம் வந்ததில் இருந்து இனிதாய் நடந்து முடியும் வரை அத்தனை மகிழ்ச்சி.
அதே மகிழ்வோடு தான் இப்பொழுது விழா முடிந்து ஹரிஷ் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கின்றனர் கு நாராயணன் தன் மனைவியுடனும் ஹரிஷ் தன் நிலவுடனும்.
"ஒரு பெர்ஃபெக்ட் ரிசெப்ஷன் பீல்! மேரேஜ் தான் டக்குனு எதிர்பார்க்காத நேரத்துல முடிஞ்சது. பட் அதுவுமே உன்னை பார்த்த அப்புறம் பெருசா வருத்தப்படுற மாதிரியெல்லாம் பீல் ஆகல" என்று சொல்லவும் முறைத்தவள் முகத்திலும் வெட்கம் மறைத்த புன்னகை பார்வையே!
"நிஜமா தான். உன்னை பார்த்ததும் கொஞ்சம் ஜெர்க் ஆகிட்டேன். அதுவும் அப்பப்ப இப்பவரை அங்கங்க தெரியுற....." என்றவன் பேச்சும் சொல்ல வந்த பாஷையும், அதில் இருந்த விஷமமும் என புரிந்து கொண்டவள்,
"அச்சோ! பேசாத பேசாத பேசாத!" என கண்களோடு காதையும் கைகளால் மூடிக் கொள்ள,
"அந்த பளிச் என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்றது நீ மறுக்கவே முடியாத உண்மை!" என்று அவள் காதுக்கு வெகு அருகில் வந்து குரல் தாழ்த்தி கூறினாலும் மறைத்திருந்த கைகளுக்கு இடையிலும் நகர்ந்து வார்த்தைகள் செவிலோடு இதயத்தையும் அடைந்திருந்தது.
"யூ.... உன்னை என்ன பண்றது?" என்றவள் ஜன்னலை திறந்து மொத்தமாய் அந்த பக்கம் திரும்பிக் கொண்டவள், அவன்புறம் திரும்பவே இல்லை.
"நல்லா திரும்பிக்கோ! எத்தனை நாள்னு பாக்கலாம்!" என்று சவாலாய் கூறியவன் மனம் கனிந்திருந்தது மனைவியை எண்ணி.
வீட்டின் அருகே வரும் வரை இதமாய் இருந்த மனம் மீண்டும் ஒரு கணத்தை தானாய் எடுத்துக் கொண்டது.
கார் சத்தம் கேட்கவும் கௌரி வெளியே வர, வெண்மதி இறங்கி அவர் அருகில் வந்தாள்.
"நில்லு மதி! அவனும் வரட்டும்!" என்ற கௌரி இருவருக்கும் ஆரத்தி சுற்றிவிட்டே உள்ளே அழைத்தார்.
"இப்ப எப்படி இருக்காங்க அத்தை?" என வெண்மதி கேட்க,
தலையசைத்தவர் "ஹால்ல தான் இருந்தா மதி. கார் சவுண்ட் கேட்கவும் ரூம்க்கு போய்ட்டா!" என்றார்.
"ஃபன்க்ஷன் எப்படி போச்சு ம்மா? எல்லாரும் வந்தங்களா?" கௌரி கேட்க,
"ரொம்ப நல்லா போச்சு. நீங்களும் வந்திருக்கலாம்னு தான் கஷ்டமா இருந்துச்சு!" என்று சொல்லிக் கொண்டே உள்ளே செல்ல, வெண்மதி பெற்றோரும் உள்ளே வந்தனர்.
"விழா நல்லபடியா முடிஞ்சதா அண்ணி?" என மேகலாவிடமும் கௌரி கேட்டு காபியை கொடுக்க,
"ரொம்ப நல்லா இருந்தது கௌரி. நாங்க எதிர்பார்க்கவே இல்லை. நீ வரலைனு தான் மதி சொல்லிட்டே இருந்தா!" என்றார் மேகலாவும்.
"இந்த நிலமைல பூஜாவை தனியா விட்டுட்டு எப்படி வர்றது அண்ணி. அதான் இன்னும் நிறைய விஷேஷம் வருமே! அப்ப பார்த்துக்கலாம்!" என்று கூறவும் வெண்மதி ஹரிஷைப் பார்க்க, அவன் வேறொரு சிந்தனையில் இருந்தான்.
"தூங்க போகலாம்ல மதிம்மா! நாங்க காலையில எழுந்ததும் கிளம்பிருவோம். இப்போவே நேரம் போய்ட்டு!" என்ற மேகலா மணியைப் பார்க்க, பண்ணிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது நேரம்.
"அண்ணனை அந்த ரூம்க்கு கூட்டிட்டு போங்க அண்ணி!" என்ற கௌரி,
"நீங்களும் போய் தூங்குங்க மதி. நான் பூஜா ரூம்ல இருக்கேன். எதுவும் வேணும்னா கூப்பிடுங்க!" என்று சொல்ல அப்பொழுதும் தந்தையின் படத்தை பார்த்தபடி சிந்தனையிலேயே இருந்தான் ஹரிஷ்.
"ஹரி!" என அருகே வந்து அன்னை அழைக்க,
"சொல்லு ம்மா!"
"என்ன டா! எதுவும் இல்ல. பார்த்துக்கலாம். போய் தூங்கு!" என்று கூறிய கௌரிக்குமே கவலை தான் பூஜாவை நினைத்து.
"ம்ம் நான் பூஜாவை பார்க்கணும்!" என்ற ஹரிஷ், எழுந்து அவளறைக்கு செல்ல, வெண்மதியும் கௌரியும் உடன் சென்றனர்.
அடுத்த ஒரு மணி நேரம் நடந்ததெல்லாம் கனவா எனும் அளவில் தான் இருந்தது அந்த வீட்டில் இருந்தவர்களுக்கு.
*********************************************
அந்த இரவில் எதுவும் பேசாமல் அறைக்கு வந்ததும் குளித்து உடை மாற்றி வந்து அமர்ந்தவனைப் பார்க்க வெண்மதிக்கே என்னவோ போல ஆனது.
"ஏதாச்சும் வேணுமா?" என்று அவனருகில் வந்தவளும் இரவு உடைக்கு மாறி இருந்தாள்.
"பூஜா ஏன் இப்படி பண்ணினா? என்னால நம்பவும் நினைக்கவுமே முடியல. இந்த ஒரு வருஷத்துல இப்படி எல்லாம் பிகேவ் பண்ணினதே இல்ல. அதிகமா பேசுவா சண்டை போடுவா. அம்மாக்காக என்னோட போட்டி கூட போடுவா.. இப்ப என்ன தான் ஆச்சு அவளுக்கு? இதுக்கு நான் தான் காரணமா என்ன?" என்று அத்தனை தீவிரமாய் கேட்டான் ஹரிஷ்.
அதி தீவிர சிந்தனையோடு தன்னால் தானோ என வருந்தி பாவமாய் கேட்டவனை நொடி நேரம் கூட அப்படி காண முடியவில்லை வெண்மதிக்கு.
"நீ என்ன பண்ணின? உனக்கு தோணாத ஒண்ணு பூஜாக்கு தோணி இருக்கு. இதுக்கு யாரையும் குற்றம் சொல்ல முடியாது!" என அவனருகில் அமர்ந்தவள் தோள்களில் சாய்ந்து கொண்டான் ஹரிஷ்.
காலையில் வெண்மதியின் அன்னை தந்தை வந்திறங்கி இருக்க, அவர்களுக்கு உணவை தயாரித்துக் கொண்டு இருந்தார் கௌரி.
வெண்மதியும் அவருக்கு உதவிக் கொண்டு இருக்க, ஹரிஷ் தன் அறையில் அலைபேசியில் பேசிக் கொண்டு இருந்தான்.
முந்தைய நாளே நாளை மாலை நடைபெற இருக்கும் ஹரிஷ் வெண்மதியின் விழாவிற்கு தான் வர போவதில்லை என பூஜா சொல்லிவிட அவளை யாரும் வற்புறுத்தவும் இல்லை.
ஹரிஷ் கூட முதல் நாளே உன் விருப்பம் என்று கூறிவிட்டான்.
ஆனால் அத்தனை ஆதங்கம் பூஜாவின் மனதினுள். தன்னை அவர்கள் குடும்பத்தில் ஒருத்தியாய் நினைக்கவில்லை. நினைத்திருந்தால் நீ வந்து தான் ஆக வேண்டும் என ஒருவராவது கூறி இருப்பார்களே என்று.
முதல் நாள் தன் மாமனார் வருவாரா என்று கேட்ட ஹரிஷ் தன்னை வா என்று கூட கூறவில்லையே என்று அத்தனையையும் தனக்குள் மட்டுமாய் வைத்துக் கொண்டிருந்தாள்.
இத்தனைக்கும் நீ இந்த வீட்டு பொண்ணு என்று ஹரிஷ் கூறியது எல்லாம் அவள் காதில் பதிந்ததாகவே தெரியவில்லை.
நேற்று வந்த வெண்மதிக்கும் அவள் குடும்பத்திற்கும் மட்டுமே இத்தனை மரியாதை என்ற எண்ணத்தோடு தான் அன்று வெண்மதியிடம் பேசியதை பற்றி எல்லாம் கவலையே இல்லாமல் ஹரிஷுடன் போகவும் வரவுமாய் இருக்கும் வெண்மதி மேலும் அத்தனை கோபமும் பொறாமையும்.
கொஞ்சமும் அதை அவள் ஹரிஷிடம் கூறி இருப்பாளா என்ற சிந்தனை எல்லாம் இல்லை.
மொத்தத்தில் இந்த வீட்டில் தான் இரண்டாம்பட்சம் ஆகி போனோமே என்ற எண்ணமே அவளை அவளாய் இருக்க விடாமல் செய்தது.
ஹரிஷ் என்றால் அத்தனை பிடிக்கும்.அன்னை தந்தைக்கு பின் என்னை அத்தனை பராமரித்துப் பார்த்துக் கொள்ள யாராலும் முடியாது என்பதை போல அல்லவா அவன் என்னைப் பார்த்துக் கொண்டான் என்ற எண்ணம்.
ஹரிஷ் சிறு வயதில் தந்தையை இழந்த போது தான் நின்ற நிலையில் அவன் இன்னொரு பெண்ணை காண பிடிக்காமல் அவளுக்காக அவன் செய்த ஒவ்வொன்றும் அவள் மனநிலையை மாற்றவும், அவள் பெற்றோர் நினைப்பில் இருந்து மீளவும் என அவன் எடுத்த முயற்சி.
தான் அதில் வென்று விட்டதாய் அவன் நினைத்திருக்க, இப்படி தன்னை அவள் அன்னை தந்தை இடத்தில் வைத்து காண நினைப்பாள் என நினைக்கவே இல்லை.
"ஆஆ அம்மா!" என்ற அலறலில் தான் கௌரியும் வெண்மதியும் திரும்பிப் பார்க்க, காலில் வெந்நீரை கொட்டியிருந்தாள் பூஜா.
கொதிக்க கொதிக்க அடுப்பில் இருந்த நீர் எப்படி கீழே விழுந்தது என்று கூட யாருக்கும் நினைக்க நேரமில்லாமல் அவளை கவனிக்க, வெண்மதி தன் அறையில் இருந்து முதலுதவிப் பெட்டியை எடுத்து வர மேலே வந்தவள் ஹரிஷிடம் விஷயத்தை கூற, அவனுமே வேகமாய் இறங்கி வந்தான்.
முட்டிக்கு கீழே மொத்தமாய் கொதித்த நீர் விழுந்திருக்க, உடனே கன்றி சிவந்து உப்பிக் கொண்டு வந்தது.
எரிச்சல் அதிகமாக பூஜாவின் அழுகையும் கூட அதிகமானது.
"எப்படி ஆச்சு? கால்ல படுற அளவுக்கா வெந்நீரை வைப்பிங்க. என்னம்மா?" என்று ஹரிஷ் கடிய,
"அய்யோ அடுப்புல கொதிச்சுட்டு இருந்த தண்ணி தான் டா கால்ல கொட்டி இருக்கு. எப்படின்னு தெரில. எப்படி வெந்து போச்சு" என்றவருக்கு கண்ணீரே வந்துவிட்டது அந்த காயம் பார்த்து.
"ஒண்ணுமில்ல ஒண்ணுமில்ல!" என்று சொல்லி சொல்லியே மருந்தினை எடுத்து பூசினாள் வெண்மதி.
"ரூமுக்கு கூட்டிட்டு போ மதி. உள்ள போய் வேற இடத்துல காயமிருக்கா பாரு!" என்று மேகலா சொல்ல, சமையலறையில் இருந்து கௌரி கைத்தாங்கலாய் அழைத்து வர, வலியில் கண்ணீர் வடிந்தது பூஜாவிற்கு.
வலி தெரியாமல் இருக்க ஊசியையும் செலுத்த வேண்டிய நிலை. அவ்வளவு அழுகை பூஜாவிடம். ஊசி வைத்ததும் அவள் உறக்கத்திற்கு செல்ல,
"நல்ல நாள் அதுவுமா இப்படி நடக்கணுமா? என்னவோ போ!" என்றார் குரு நாராயணன்.
"நல்லவேளைக்கு மேல விழாம கால்ல விழுந்திருக்குன்னு நினைச்சிக்கணும்" என்றார் மேகலா.
"ஃபன்க்ஷன் வேணா இன்னொரு நாள் வச்சுக்கலாமா ம்மா?" ஹரிஷ் கேட்க,
"அதெல்லாம் வேண்டாம் ஹரி! நீங்க எல்லாரும் போய்ட்டு வாங்க. நான் இங்க இருக்கேன்!" என்றார் கௌரி.
இப்பொழுது வேண்டுமா என்று வெண்மதியும் அம்மா இல்லாமல் செல்லவா என்று ஹரிஷ்ஷும் கேட்டும் இந்த விழா நடந்தே ஆக வேண்டும் என்றதும் கௌரி தான்.
அவ்வபோது விழித்துப் பார்ப்பதும் மாத்திரையின் உபயத்தில் உறங்கவுமாய் இருந்தாள் பூஜா.
அறைக்கு வந்ததுமே வெண்மதி கணவனிடம் கூறிவிட்டாள்.
"என்ன டி சொல்ற?" என்றவன் அதிர,
"நிஜமா தானா சுடுதண்ணி கொட்டறதுக்கு வாய்ப்பில்ல ஹரி. அங்க நானும் அத்தையும் தான் இருந்தோம். பூஜா வந்ததையே நாங்க பார்க்கல. அவ்வளவு சைலண்டா எரியுற அடுப்பு பக்கத்துல வந்து நிக்கணும்னு அவசியம் இல்ல ஹரி." என்றாள் வெண்மதி.
"அத்தை பயந்துட கூடாதுன்னு தான் சொல்லல" என்றும் சொல்ல,
"ப்ச்!" என்றவன் தலைகோதி அமர்ந்துவிட்டான்.
"சரியோ தப்போ! எனக்கு மறைக்க தோணல அதான் உன்கிட்ட சொல்லிட்டேன். பூஜா வேணும்னு பண்ணினதா நான் சொல்லல. ஆனா அவ்வளவு சைலண்டா வந்து ஏன் அடுப்புகிட்ட போகணும்? எனக்கு புரியல ஹரி!" என்றாள் மீண்டுமாய்.
கௌரியிடம் சொல்லவும் தயங்கி சொல்லாமல் விட, மாலை வேறு வழியும் இல்லாமல் கௌரியை பூஜாவுடன் விட்டு அனைவரும் கிளம்பி இருந்தனர்.
அங்கே சென்றபின் மற்றவர்களோடு நேரம் சென்றதில் நிஜமாய் காலையில் நடந்த கலவரம் எல்லாம் மறக்கும் அளவுக்கு அத்தனை இதமாய் நடந்து முடிந்திருந்தது விழா.
வீட்டிற்கு வந்ததுமே அங்கிருந்த சூழ்நிலைக்கு மனமும் வந்துவிட மீண்டும் ஒரு இலகுவற்ற நிலை அனைவருக்கும்.
இதில் கௌரி தனக்கு தோன்றியதை யாரிடமும் பகிர்ந்திருக்கவில்லை. ஆம்! வெண்மதிக்கு தோன்றிய அதே சந்தேகம் தான்.