• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிலவோடு நினை சேர்த்தேன் 9

MK11

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
41
49
18
Tamil nadu
அத்தியாயம் 9

அந்த மாலை நேரத்தில் உடலை ஊடுருவிச் செல்லும் பனியில் கைகளைத் தேய்த்து கண்ணத்தில் வைத்துக் கொண்டு சுற்றிலும் இயற்கையை ரசித்தாள் வெண்மதி.

டீயைக் கொண்டு வந்து ஹரிஷ் அவள் கைகளில் தர, அதை வாங்கிக் கொண்டவள் உள்ளங்கைக்குள் அதை வைத்து குளிரை விரட்ட,

"அவ்வளவு குளிரெல்லாம் இல்லையே!" என்றான் அவளை ரசித்தபடி டீயையும் குடித்துக் கொண்டு.

"ம்ம்!" என்று முறைத்தவள்,

"குளிர் எனக்கு ஒத்துக்காது. ட்ரைனிங் அப்பவே வர மாட்டேன் சொன்னேன். காலேஜ்ல கேட்காம கூட்டிட்டு வந்து கொடுமை செஞ்சாங்க. இப்ப நீ!" என்றாள் அவனிடம்.

திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் ஆகிறது. இருவருமே காவல் துறை மருத்துவ துறை என முக்கிய பொறுப்பில் இருக்க, இருவருக்குமாய் என திருமணமான புதிதில் கிடைத்த அதிக நேரங்கள் அதன்பின் குறைந்து தான் போனது.

அதிலும் சோதனையாய் சில நேரங்களில் ஹரிஷ் இரவு பணிக்கு செல்ல, அத்தனை புலம்புவான் கிளம்புவதற்குள்.

"இப்ப தான் கொஞ்ச நாளா கிட்டக்க வந்துட்டு இருக்கிறா! உனக்கு அது பொறுக்கலையா?" என கடவுளிடமும் புலம்புவான்.

"உன்னையெல்லாம் இன்ஸ்பெக்டர்னு வெளில சொல்ல முடியுமா டா நான்?" என கௌரி கிண்டல் செய்வார்.

ஒரு நாள் மாலை வேலை முடிந்து ஆறு மணிக்கு வீட்டிற்கு அத்தனை உற்சாகமாய் வந்தவன் கைகளில் மல்லிகை பூவை வைத்திருக்க, பார்த்ததும் வாயை மூடிக் கொண்டு சிரிப்பை அடக்கினார் கௌரி.

"என் பொண்டாட்டிக்கு நான் வாங்கி இருக்கேன். எதுக்கு கெக்கபிக்க?" என்று அன்னையிடம் கேட்டவன்,

"பாரு ப்பா உன் பொண்டாட்டி என்னை பார்த்து சிரிக்கிறதை!" என தந்தையிடம் சொல்லிவிட்டு மேலே செல்ல, அவனுக்கு அங்கே அதிர்ச்சி வைத்திருந்தாள் வெண்மதி.

"நைட் ஷிப்ட்! நானே கேட்டு வாங்கி இருக்கேன். போய் உன் வேலையையே கட்டிக்கோ!" என எழுதி மெத்தையில் வைத்தவள் அத்தோடு நில்லாமல் ஆளுயர பொம்மையையும் மெத்தையில் போட்டு வைத்து செல்ல,

"இவளை!" என பல்லைக் கடித்தான் அவன். அதில் அவனை தேடி அவன் இன்மையை உணர்ந்து கோபத்தில் அவள் எடுத்த முடிவு என்பது புரிந்தாலும் இப்படி தவிக்க விடுகிறாளே என்று தான் ஆதங்கமும் வரும்.

"இருபத்தி நான்கு மணி நேர ஹாஸ்பிடல்னு சொல்லும் போதே நான் உஷாரா இருந்திருக்கணும்.. மறுபடி மறுபடி விபூதி அடிக்கிறாளே!" என நொந்து தான் போனான்.

பொறுத்து பொறுத்து பார்த்தவன் அதற்குமேல் முடியாமல் இப்படி தனியே அழைத்து வரவும் ஆறு மாதங்கள் ஆகி இருந்தது.

ஊட்டி என்றதுமே மாட்டவே மாட்டேன் என்று அடம் பண்ணியவளை அதற்குமேல் அடம்பிடித்து அழைத்து இழுத்து தான் வந்திருந்தான்.

முன்பு வரும் பொழுது எந்த இடத்தில் தங்கி இருந்தானோ அங்கேயே அவளோடு சென்று அருகில் அந்த ப்ரீத்தி என்ற பெண் இருந்த அறையையும் காட்ட தவறவில்லை அவன்.

"இதை காட்ட தான் கூட்டிட்டு வந்தியா?" என்று வெண்மதி கிண்டல் செய்ய,

"இதையும் காட்ட தான்!" என்று புருவம் உயர்த்தி அவள் இடையையும் பார்த்து, "பளிச்!" என்று சொல்ல,

"ஷ்ஷ்! ராஸ்கல்!" என சத்தமில்லாமல் சொல்லும் சொல்லில் அத்தனை மென்மை இருந்தது.

"எப்படி தான் எல்லா நேரமும் புடவை கட்டி மனுஷனை காய வைக்குறியோ!" என்ற புலம்பல் அவனுக்கு.

இப்பொழுதும் சிறிது தூரம் நடந்து வந்தவர்கள் குளிருக்கு இதமாய் டீயை குடித்தபடி பேசிக் கொண்டிருக்க, வெண்மதி முகமெல்லாம் புன்னகை.

திருமண வாழ்க்கைக்கு என பெரிதாய் எந்த ஒரு கனவும் வைத்திராதவள் வெண்மதி. தந்தை சொல்பவனை திருமணம் செய்ய என வந்து ஒரு மணி நேரத்தில் மாப்பிள்ளை மாறி இவன் வந்து அமர்ந்த நேரம் திடுக்கிட்டு தான் பார்த்திருந்தாள்.

அந்த நேரத்திற்கும் இப்பொழுதைய நிஜத்திற்கும் இருக்கும் வித்யாசத்தில் தானாய் ஒரு மென்னகை வெண்மதிக்கு.

எவ்வளவு பேசினாலும் அவள் அனுமதி இல்லாமல் அவளை சீண்டியது கூட இல்லை. இன்னும் சொல்ல வேண்டுமானால் அவன் சீண்டல்களை அவளும் விரும்பி ஏற்றிருந்தாள்.

அந்த ஒரு நாளை தவிர்த்து எப்பொழுதும் புன்னகையோடு வலம் வருபவன் எத்தனை கடினமான வழக்கிலும் நிதானம் இல்லாமல் இருந்தது இல்லை.

மத்தபடி பொறுமையாய் உண்மையை உரக்க எடுத்து சொல்லும் சாட்சியை அத்தனை கட்சிதமாய் கொண்டு முடித்து வாகை சூடுவான்.

அந்த ஒரு நாளுமே பூஜாவிற்கு என யோசித்து தன்னிலை மறந்து இருந்த நேரம் அது.

இப்பொழுது அவளுமே சரியாகிக் கொண்டு வர, ஹரிஷ் தன்னியல்புக்கு திரும்ப ஆரம்பித்திருந்தான்.

"கூப்பிட்டுட்டு இருக்கேன். எங்க இருக்கு நினைப்பு!" என்று கைகளை இடித்தபடி அருகில் வந்து அமர்ந்தான் ஹரிஷ்.

"எப்படி இப்படி இருக்க முடியுது உன்னாலன்னு தான் நினைச்சுட்டு இருந்தேன்!" மறைக்காமல் அவள் சொல்ல,

"மாமனை தான் நினைச்சுட்டு இருந்தேன்னு சொல்ற?" என்று கண்ணடித்தவனை முறைத்தவள் எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.

"எப்படி எல்லா விஷயத்தையும் இப்படி கூலா ஹண்ட்ல் பண்ற? வித்யாசமா இருக்கு. அதுவும் போலீஸ். அது தான் இன்னும் ஷாக் எனக்கு!" வெண்மதி நடந்தபடி சொல்ல, அவள் தோள்களில் கையிட்டவன்,

"இது தானா? நான் கூட என்னென்னவோ யோசிச்சு பளிச் பளிச்சுனு நினச்சு....." என்று ஹரிஷ் இழுக்க,

"ச்சோ!" என்று கையை எடுத்தவள், "பப்ளிக்ல என்ன பேச்சு பேசுற. எப்பவும் இதே வேலையா போச்சு உனக்கு!" என்றவள் முறைக்க,

"சரி விடு! உனக்கு எப்பவும் முறைக்க மட்டும் தான் தெரியுது எனக்கு எப்பவும் பளிச் மட்டும் தான் தெரியுது.. என்ன பண்ண கல்யாணம் ஆகி ஆறு மாசம் ஆகியும்..." என்றவன் வாயை முன் சென்றவள் பின் வந்து மூடிவிட்டாள்.

"கல்யாணம் ஆச்சு.. கல்யாணம் ஆகி ரெண்டு மாசம் ஆச்சு..கல்யாணம் ஆகி நாலு மாசம் ஆச்சு.. இப்ப கல்யாணம் ஆகி ஆறு மாசம்... இதே பேச்சு.. ஷப்பா... எப்படி தான் வாய் வலிக்காம பேசிட்டு இருக்கியோனு தான் யோசிச்சுட்டு இருந்தேன்!" என்றாள்.

"இப்படி இருக்குறதால தான் எனக்கு ஆறு மாசமா டிமிக்கி குடுக்குறியே.. நானும் ஸ்ட்ரிக்ட்டா இருந்து எல்லா விஷயத்துலயும் ஸ்ட்ரிக்டா ஃபால்லோ பண்ணி இருந்தா....."

"அடிச்சு துவைச்சு காயப் போட்டிருப்பேன்!"

"அதான் தெரியுமே! மீச பொண்ணு வேற எப்படி இருக்கும்? நாட்டுகொட்டான்.."

"ஆரம்பிச்சுட்டியா! இந்த வாய் தான்.. இது தான் டென்ஷன் எனக்கு. எப்ப என்ன சொல்லுவியோன்னு இருக்கு!"

"ஏன் நிலா! அது உனக்கு டென்ஷனா? ஆனா பார்த்தா அப்படி தெரிலயே!" என்று அவன் சொல்ல, முறைக்கவும் ரசிக்கவுமாய் செய்து அவனை தள்ளிவிட்டு ஓடிவர, இருவருமாய் தங்கி இருக்குமிடம் வந்து சேர்ந்தனர்.

இருள் சூழ ஆரம்பிக்க கதவடைத்து வந்தவன் மொபைலை எடுத்து அன்றைக்கு எடுத்த புகைப்படங்களை எல்லாம் பார்வையிட்டு தன் அன்னைக்கு அனுப்பியவன், அதில் அவனுக்கு பிடித்த ஒரு புகைப்படத்தை மட்டும் வாட்சப் ஸ்டேட்டஸில் நிலாவின் குறியீட்டோடு இதயத்தையும் சேர்த்து வைத்தான்.

ஊஞ்சலில் சில நிமிடங்கள் ஆடியவன் புன்னகையோடு அமர்ந்திருக்க, குறுஞ்செய்தி வந்த ஒலி கேட்டு மொபைலை மீண்டும் எடுத்து பார்த்த போது நிலா தான் அனுப்பி இருந்தது.

கைகள் இரண்டையும் சேர்த்து இதயம் போல இருக்கும் படத்தை ஸ்டேட்டஸ் பார்த்த கையோடு அவனுக்கு அவள் அனுப்பி இருக்க,

"நேர்ல மட்டும் லவ் காதல் பியார்னு பேசறதோ சொல்றதோ இல்ல. மெசேஜ் மட்டும்.. இவளை..." என்றவன் எழுந்து உள்ளே செல்ல, கால்களை ஆட்டியபடி கட்டிலில் அமர்ந்திருந்தாள்.

"இம்சை டி நீ!" என்றவன் மீண்டுமாய் இடித்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்ததோடு,

"உசிலம்பட்டி..." என்று வேறு இழுத்து ராகமாய் கூறி அவள் தோள்களை சுரண்ட, இதழ் திறக்காமல் சிரித்துக் கொண்டிருந்தாள் வெண்மதி.

அவளுக்கு தெரியாதா என்ன அவனின் பாஷையும் அழைப்பும். இத்தனை மாதங்களில் அவனின் குரல் எத்தனை மாயம் செய்கிறது என அறியாதவள் இல்லையே!

'இன்னமும் பச்சப்புள்ளயா இருக்கியே டா!' என்ற வசனம் தான் நினைவுக்கு வந்து சிரிப்பை தந்தது.

அவனுக்கும் சம்மதத்தை எப்படி கேட்பதென தெரியவில்லை. அவளுக்கும் சம்மதத்தை எப்படி சொல்வதென புரியவில்லை இத்தனை நாட்களுமே!

இன்றைய நிலையும் அப்படி தானோ என்று வெண்மதி நினைக்க, அவன் அழைத்து வந்தது அதற்கில்லையே!

தோள்களில் சுரண்டியவன் விரல்கள் முன்னேறி கழுத்துக்கு வர இதழ் வளைத்து சிரித்தவள் சிரித்ததை மறந்து விரிந்த கண்களோடு அசைவற்று அமர்ந்திருந்தாலும் மூச்சுக் காற்றின் வேகம் காட்டிக் கொடுத்து அவனை சுழற்றியது.

இதோ நெற்றியில் அவன் உதடுகள் அச்சாரம் இட விழிகளை மூட கூட இல்லாத உறைந்த நிலை.

"முழிச்சுக்கோ!" என்று காதோரம் சொல்லி கண்களில் முத்தமிட வர, தானாய் விழி மூடி கொடுத்து சம்மதத்தையும் தருவித்திருந்தாள்.கண், காது, கன்னம் என தொடர்ந்தவனிடம் அவள் அடுத்ததாய் எதிர்பார்த்திருந்தாளோ?

"அச்சச்சோ!" என்ற அவனின் சத்தத்தில் அவள் விழி திறக்க,

"நாம இன்னும் டின்னர் சாப்பிடலையே நிலா!" என்றதில் மொத்த மாய உணர்வில் இருந்தும் விடுபட்டவள் கொலைவெறிக்கே சென்றாள்.

அவனை தள்ளியதோடு எழுந்து கொண்டவள் "போடா! போடா!" என்று அவனை திட்ட வார்த்தையை தேடியவள்,

"ஆளைப் பாரு! என்னை சொல்லணும்! அய்யோ அய்யோ!" என தன் தலையில் தட்டிக் கொண்டவள்,

"ம்ம்ஹும்ம்ம் நீ எல்லாம் சரிப்பட்டு வர மாட்ட.. போடாங்..." என்றவள் கோபத்தில் கழுத்தை நெறிப்பது போல வர, அவள் எழும் பொழுதே சிரிப்பை அடக்கி இருந்தவன் வாய்விட்டு சிரித்து கைகளை அவளோடு மாலையாய் கோர்த்து தன்னோடு அணைத்துக் கொண்டு விழுந்தான்.

"அவ்வா! நான் சரிப்பட்டு வர மாட்டேனா? எனக்கு தேவை தான் டி!" என்றவன் நெஞ்சத்தில் குத்தியவளை இன்னமுமாய் இறுக்கியவன் நினைத்து நினைத்து சிரித்தான்.

"பரவால்லையே! உனக்கும் பீலிங்ஸ் எல்லாம் இருக்கே!" என்று காதோடு ரகசியம் பேசியவன் பேச்சில்,

"ராஸ்கல் ராஸ்கல்! விடு டா! ரவுடி! பொறுக்கி!" என எத்தனை முடியுமோ அத்தனை பேச்சுக்கள் அவளிடம் இருந்து வர, கொஞ்சமும் அவன் விலகவோ விலக்கவோ இல்லை தன்னோடு ஒன்றி இருந்தவளை.

"வார்த்தை மட்டும் தான் போடா'னு சொல்லுது. ஆனா பாரு!" என்று அவள் நிலையை சுட்டிக்காட்ட அதற்குமே செல்ல அடிகள் தான் அவளிடம்.

"எவ்வளவு அலைய விட்ட? வேணும்னே சாரீல சுத்தி என்னை சுத்த விட்ட? கொழுப்பு டி. ஆறு மாசமும் கொஞ்சம் கொஞ்சமா மனுஷனை பித்தாக்கிவிட்டுட்டு..." என்றவன் பேச்சுகளோடு விடாமல் காரியத்திலும் காரியமாய் இருக்க, வெண்மதி அவனின் வார்த்தைகளோடு செயலிலுமாய் இணைந்து கொள்ள, அவளோடு கலந்தான் காதலாய்.
 

MK11

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
41
49
18
Tamil nadu
*******************************

"குட் ஈவ்னிங் சார்!" என்று கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்த வெண்மதி சொல்ல, உள்ளே அமர்ந்திருந்த இருவரில் கிருஷ்ணன் மட்டும் புன்னகையோடு தலையசைத்து வரவேற்றான்.

"முடிஞ்சதா?" வெண்மதி கேட்க,

"அல்மோஸ்ட்!" என்றவன் தன் முன் அமர்ந்திருந்தவளைப் பார்க்க, அவளும் தலையசைத்தாள்.

"எனி டவுட் பூஜா?" கிருஷ்ணன் கேட்கவும்,

"நத்திங் டாக்டர். என்னை விட்டா போதும்!" என்றாள் பூஜாவும் சிரித்தபடி.

"வெண்மதி கூட போகலாம் தானே? ஆர் ஆட்டோ சொல்லவா?" கிருஷ்ணன் கிண்டல் செய்ய,

"ஏன்? வெண்மதிக்கு என்ன?" என்று கேட்டவளை வெண்மதியுமே புன்னகையோடு பார்த்தாள்.

"ஆனா கொஞ்சம் கேவலமா தான் இருக்கு என்னை நினச்சா எனக்கே!" என்றும் பூஜா முகம் சுருக்கி என்றாலும் சிரித்தபடி சொல்ல,

"இஸ் இட்? அப்ப நீங்க கம்ப்ளீட்லீ ஆல்ரைட்!" என்றான் கிருஷ்ணன்.

"இப்ப சொல்லுங்க! எங்க போறீங்க? ஹாஸ்டல் ஆர்..?" என்ற கிருஷ்ணன் கேள்விக்கு,

"கௌரிம்மா வீட்டுக்கு!" என்று தெளிவாய் பதில் வந்தது பூஜாவிடம் இருந்து.

எட்டு மாதங்கள் கடந்துவிட்டது பூஜா ஹரிஷ் வீட்டில் இருந்து வெளியேறி. சண்டையிடவோ அழுது கரையவோ இல்லை.

ஹரிஷ் தான் அன்றைய இரவுக்கு பின் இரண்டு நாட்கள் கழித்து பூஜாவிடம் சென்று பேசினான் மருத்துவரைப் பார்க்க கேட்டு.

உடனே சம்மதம் கூறியவள் அவனிடம் பேசாமல் வெண்மதியிடம் கூறினாள் சரி என்று. அவள் சரி என்றதற்கே அனைவரும் மகிழ, அடுத்ததாய் அவளே கூறிவிட்டாள் ஹாஸ்டல் செல்ல இருப்பதாய்.

எவ்வளவோ மறுத்தனர். "சொன்னா கேளு டா!" என்று கௌரி கூற,

"நோ சான்ஸ். முடியவே முடியாது" என்று ஹரிஷ் சொல்ல,

"என்னை கொஞ்ச நாள் தனியா விடுங்களேன். நான் தனியா தான் இருக்கனும். ப்ளீஸ்! என்று கெஞ்சிய பொழுதும் அனைவரும் மறுக்க, வெண்மதி தான் பூஜாவிற்கு ஆதரவாய் பேசினாள் தன் கணவனிடமும் அத்தையிடமும்.

"லூசா டி நீ? இப்பவே இவ்வளவு யோசிக்குறா. தனியா போறேன்னு சொல்றா பாத்துட்டு இருக்கவா?" என்று ஹரிஷ் கோபம் கொள்ள,

"பார்த்துட்டு இருன்னு தான் சொல்றேன். ஏன் தனியா விடணும்? அவளுக்கு தான் தனிமை தேவை. அவளுக்கும் நமக்கும் இல்ல. தூரமா இருந்து கூட வாட்ச் பண்ணலாம். நார்மல் ஆகி வரட்டும்!" என்று வெண்மதி எடுத்து சொல்ல, முதலில் அதில் அவ்வளவு உடன்பாடில்லை ஹரிஷிற்கு.

"அவ உங்களைப் பார்த்து தான் கஷ்டப்படுறா. புரியுதா உங்களுக்கு? ரொம்ப நல்ல பொண்ணு ஹரி! அவளோட குழப்பம் எல்லாம் போகணும்னா அவ வழியில தான் நாம போகணும்" என்று கூறி வெண்மதி தான் பூஜாவின் அத்தனைக்கும் உறுதுணையாக இருந்தது.

வெண்மதி வேலை செய்யும் மருத்துவமனை என்பதால் தினமும் பூஜாவிற்கு கவுன்சிலிங் கொடுத்து முடிக்கும் நேரம் தானும் அங்கே இருப்பாள் வெண்மதி.

ஹரிஷிடம் முதலில் முகம் பார்க்கவே அத்தனை அச்சம் பூஜாவிற்கு. அவன் மருத்துவமனை வருவது தெரிந்தால் இவள் வெளிவருவதே இல்லை. நாள்பட அந்த அச்சம் என்பது நீங்கி ஒருவித சங்கடம் உருவாக துவங்க அந்த மாற்றம் மற்றவர்கள் புரிந்து கொள்ளும் அளவுக்கு இருந்தது.

வெண்மதியிடம் பூஜா தேவைக்கு பேச, வெண்மதி வீட்டில் நடக்கும் அனைத்தையும் பூஜாவிடம் கூறுவாள் அவள் கேட்காமலே!

"கௌரிம்மா வீட்டுக்கா? வெரி குட். ஆனா அங்க ஹரிஷ் இருப்பாரே?" கிருஷ்ணன் கேட்க,

"ஏன் ஹரிஷ்க்கு என்ன? ஹி இஸ் மை பிரண்ட். அவனுக்கு நான் அங்க போனா சந்தோசம் தான். எனக்கு தான் கொஞ்சம் கில்டியா இருக்கு. ஆனா நான் பேஸ் பண்ணிப்பேன். தெரியாம பண்ணின தப்பு தான். ஆனா என்னை யாரும் வெறுக்கல. அது தான் எனக்கு கில்டி. ப்ச்! சரியாகிடும்!" என்றாள் கண் சிமிட்டி!.

"போதுமா வெண்மதி? ஹொவ் இஸ் ஷி?" என கிருஷ்ணன் வெண்மதியிடம் பூஜாவை கேட்க,

"தேங்க் யூ சோ மச் டாக்டர்." என்றவளிடம்,

"உங்க ஊட்டி ட்ரிப் எப்படி போச்சு?" என்று பூஜா அறியாமல் அவளை கவனித்து கிருஷ்ணன் கேட்க, வெண்மதி பதில் கூறியவள்,

"அண்ட் ஹரிஷ் வெளில நிக்கிறாங்க. உங்களைப் பார்க்கணுமாம்!" என்றாள்.

"ஓஹ் யாஹ்! எல்லாருமே மீட் பண்ணலாமே உள்ள வர சொல்லுங்க!" என்று கூறி பூஜா முகம் பார்த்தார் கிருஷ்ணன்.

மருத்துவராய் அவளின் ஒவ்வொரு முக மாறுதல்களும் அவளுக்கான மருத்துவம் என்பது அவரின் எண்ணம்.

சலனமற்ற முகத்தில் சிறு சஞ்சலம் அவனைக் காண போவதில் தெரிய, சிரித்துக் கொண்டவர் ஹரிஷ் வர காத்திருக்க,இதோ காவல் சீருடையில் ஹரிஷ் வந்து சேர்ந்தான்.

"ஹெலோ டாக்டர்!" என்ற பொதுவான பேச்சுகளோடு ஹரிஷ் பேசியபடி இருக்க,

"எவரிதிங் இஸ் ஆல்ரைட்! நீங்களே பேசிப் பாருங்க. கூட்டிட்டு போங்க!" என்று கைக்குலுக்கி பூஜாவிடமும் கூறிக் கொண்டு விடைகொடுத்தார் கிருஷ்ணன்.

"போலாமா பூஜா?" என்றவன் வேறெதுவும் கேட்காமல் இருக்க,

"பசிக்குது!" என்றாள் பாவம் போல பார்த்து பூஜா.

அதில் முதலில் முறைத்தபடி பார்த்த ஹரிஷ் பின் சிரித்துவிட, மூவருமே சிரித்துவிட்டனர்.

இருவருடனும் வெளியில் சென்றவன் பின் வீட்டிற்கு வர வாசலில் வந்து காத்து நின்று வீட்டினுள் மகிழ்ச்சியாய் அழைத்து சென்றார் கௌரி.

அமைதியாய் சில நிமிடங்கள் அனைவரும் ஹாலில் அமர்ந்திருக்க,

"எவ்வளவு லூசுத்தனமா நடந்திருக்கேன்ல. சாரி கேட்கவே கூச்சமா இருக்கு கௌரிம்மா! கூடவே இருந்து... ப்ச்!" என்று பூஜாவே ஆரம்பிக்க,

"இதெல்லாம் லைஃப்ல ஒரு பார்ட்! அதுலேயே தேங்கிட கூடாது. இனி நெகடிவா எதுவும் பேச வேண்டாம். நீ சந்தோசமா இருக்கனும் அது தான் எங்களுக்கு வேணும்" என்ற கௌரி,

"ஹரிஷ் தான் ரொம்ப டல்லாகிட்டான் இவ்வளவு நாளும்!" என்றும் சொல்ல,

"பொய்யி பொய்யி! நம்பாத பூஜா! இந்த மூஞ்சை நல்லா பாரு! டல்லான மாதிரியா இருக்கு?" என்று வெண்மதி வேகமாய் கூற, அவளருகே வந்து தலையில் கொட்டு வைத்தவன்,

"உசிலம்பட்டிஈஈஈ!" என்று முறைத்தவன்,

"முட்டிக்கு முட்டி தட்டணும் டி உன்னை!" என்று லத்தியை பிடித்தபடி பேச, பூஜா சிரித்துக் கொண்டிருந்தாள்.

"பார்த்தியாம்மா! இது கிண்டல் பண்ணி இது சிரிக்குது. நான் யாரு! எங்க எப்படி இருக்க வேண்டியவன்!" என்று அன்னையிடம் ஹரிஷ் புகார் வாசிக்க,

"ஆரம்பிச்சுட்டான்!" என்று கௌரி உள்ளே செல்ல,

"ஆத்தி! இனி கல்யாணம் ஆகி எத்தனை மாசம் ஆச்சுன்னு எண்ணுவானே!" என்று முணுமுணுத்து வெண்மதி மாடிக்கு செல்ல,

"திருந்தவே மாட்டியா டா!" என்று பூஜாவும் அறைக்கு சென்றாள்.

"என்ன ப்பா இப்படி அசிங்கப்படுத்துறாங்க என்னை? ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர்னு ஒரு மட்டு மரியாதை கூட இல்லாம போச்சு இந்த வீட்டுல!" என தந்தை படத்தோடு பேச்சு வளர்த்தான் ஹரிஷ்.

**************************************

பூஜா தன் அறையில் அமர்ந்திருந்தவள் கதவை தட்டும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்க்க, ஹரிஷ் தான் வந்திருந்தான்.

பூஜா புன்னகை கொடுக்க, பதிலுக்கு புன்னகைத்தவன் அவள் அறைக்குள் சென்றான்.

"சொல்லு ஹரி!" என்றவளுக்கு இன்னுமே குற்ற உணர்வு தான்.

'கொஞ்சமும் யோசிக்காமல் என்னவெல்லாம் பேசிவிட்டோம்!' என நினைத்து மறுகாத நேரமே இல்லை.

என்ன செய்தால் இந்த குற்ற உணர்வில் இருந்து விடுபட முடியும் என்றும் தெரியவில்லை.

"சும்மா தான் பூஜா!" என்றவன் எதுவும் பேசாமல் நிற்க,

"உன்கிட்ட நிறைய சாரி கேட்கணும் ஹரி! ஆனா சாரி கேட்டு தூரமா இருக்க பிடிக்கல!" என்றதும் அவன் மென்மையாய் புன்னகைத்துப் பார்க்க,

"நான் உனக்கு நிறைய கடமைப்பட்டிருக்கேன்!" என்றதும்,

"ஹேய்! என்ன நீ என்னென்னவோ சொல்லிட்டு இருக்குற? லூசு!" என்று கண்டித்தவன்,

"இப்பவும் சொல்றேன். உனக்காக நாங்க இருக்கோம். இந்த வீட்டுல நான் எப்படியோ நீயும் அப்படி தான் உனக்கும் எல்லா உரிமையும் இருக்கு. எதுக்கும் யாரும் உனக்கு சொல்லித்தர வேண்டியது இல்ல" என்றான் கண்டிப்பும் தெளிவுமாய்.

"எனக்கு புரியுது. எல்லாம் தெரியுது. ஆனாலும் எனக்கே என்னை நினச்சா..."

"அச்சடா! என்ன பூச்சி நீ? சும்மா தேஞ்ச ரெகார்ட் மாதிரி. அதான் விடுன்றேன்ல?" என்றவன் அங்கிருந்த இருக்கையில் அமர, சிரித்தபடி தலையசைத்தாள் பூஜாவும்.

"அது! இப்படி எப்பவும் சிரிச்சிட்டே இரு. எப்பவுமே உன்னை பார்க்கும் போதெல்லாம் எனக்கு என்னையே பார்த்த மாதிரி தான் இருக்கும். உனக்கு தான் தெரியுமே நான் எவ்ளோ அப்பா பைத்தியம்னு? அப்பா போனதும் தான் அம்மா கூட இவ்ளோ கிளோஸ் ஆனதே! நீ உன் அம்மா பத்தி பேசும் போதெல்லாம் எனக்கு கண்ணீர் வரும்" என்று மென்னகை சிந்தியவன்,

"நான் அப்பாவை தேடின மாதிரி தானே நீயும்னு தோணும்!. அப்ப தான் உனக்கு அவங்க நினைப்பே வர கூடாதுன்னு முடிவு பண்ணினேன். அது வேற ரூட்ல உனக்கு பாயிண்ட் அவுட் ஆகும்னு எனக்கு தோணாம போச்சு!" என்று அவளை பார்த்து சிநேகமாய் புன்னகைக்க, அதே புன்னகையை அவளும் இயல்பாய் கொடுத்திருந்தாள்.

வெளியில் அன்னையின் பேச்சு சத்தமும் கூடவே வெண்மதி அன்னையுடன் பேசும் சத்தமும் கேட்க,

"நிலா வர்ற வரை அந்த இடத்துல நான் யாரையும் வச்சு பார்த்ததே இல்ல. அதை மைண்ட் பண்ணினதும் இல்ல!" என்று அவள் நினைவில் சிரித்தபடி கூறியவன்,

"அவ வந்ததும் என் லைஃப் இன்னும் அழகான மாதிரி இருக்கு. நான் என்ன பேசினாலும் மூக்குக்கு மேல கோவம் வரும் உசிலம்பட்டிக்கு.. அதுவும் அவங்க நைனாவை சொல்லிட்டா போதும்!" என்று சிரித்தவன் முகத்தில் தான் எத்தனை காதல் மின்னல்கள்.

"நீ சும்மாவா பேசுற? வேணும்னே அவங்களை பேசுற. அப்ப கோவம் வரும் தானே? ஆனாலும் கோவம் எல்லாம் உன் மேல மதிக்கு ரெண்டு நிமிஷம் தான்... நீ ரெண்டு நிமிஷம் பேசாம இருந்து பாரேன்! மேடம் அதுக்கும் டென்ஷன் ஆகிடுவாங்க!" என்று கண் சிமிட்டி கூறினாள் பூஜா.

"பூச்சிஈஈ! பரவால்லையே! நிலாவை அவ்வளவு நோட் பண்ணி இருக்கியா?" என்று ஆச்சர்யம் காட்டி ஹரிஷ் கேட்க,

"நீ லேட்டு! நாங்க ஹாஸ்பிடல்லயே பேசி கிளோஸ்டு ஒன் ஆகிட்டோம். ஷீ லவ்ஸ் யூ மோர் தன் யூ! இன்னும் சொல்லனும்னா எனக்கு கிருஷ்ணன் சார் கைடன்ஸ் கூட உன் நிலாவோட பேச்சும் தான் என்னை எனக்கே ரியலைஸ் பண்ண வச்சது. ரொம்ப நல்ல பொண்ணு!" என்றாள் அழகான முறுவலோடு.

"ரெண்டு பொண்ணுங்க சேர்ந்தா போதுமே! அவ உன்னை புகழ்றதும் நீ அவளை புகழ்றதும்.. ஷப்பா! இப்பவும் நான் தான் அவுட்டா?" என்றவனைப் பார்த்து சிரித்தாள் பூஜா.

"ஹ்ம்ம்! அதே தான். எனக்கு மாதிரியே நிச்சயமா உனக்கு பிடிச்ச லைஃப் உனக்காக வரும்.. உனக்கே உனக்கு மட்டும்ன்னு ஒரு உறவு வரும். அப்ப இதெல்லாம் நினச்சா நமக்கே காமெடியா இருக்கும்.. அவ்வ்ளோ தான் லைஃப் பூஜா. எப்பவுமே உன்னோட இடம் என்கிட்ட ஸ்பெஷல் தான். அதை யாரும் எடுத்துக்க முடியாது" என்று அவளருகில் வந்து தலையில் கை வைத்து கூறியவன்,

"ஹப்பியா இரு! ஹ்ம்ம்?" என்று கூறி அறை வாசலை நெருங்க,

"எனக்கும் உன் நிலாவை மாதிரி ஒரு அண்டர்ஸ்டாண்டிங் பார்ட்னர் வேணும். அண்ட் அதையும் நீ தான் கண்டுபிடிச்சு தரணும்!" என்றாள் பூஜா.

திரும்பி அவளைப் பார்த்து தலையசைத்தவன், "ஜமாய்ச்சுடலாம்!" என்று சொல்லி வெளியேறினான்.

நிலவு தொடரும்..
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
பூஜா கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்க சம்மதம் சொல்லிட்டா 😍

பூஜாவும் நல்ல பொண்ணு தான் அதான் தவறை புரிஞ்சிகிட்டா 🤩

ஹரீஷ் ❤️ நிலா சீண்டலும் முறைப்பும் தான் இவங்க அழகான காதல்
 
  • Love
Reactions: MK11

MK11

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
41
49
18
Tamil nadu
பூஜா கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்க சம்மதம் சொல்லிட்டா 😍

பூஜாவும் நல்ல பொண்ணு தான் அதான் தவறை புரிஞ்சிகிட்டா 🤩

ஹரீஷ் ❤️ நிலா சீண்டலும் முறைப்பும் தான் இவங்க அழகான காதல்
❤️🫶🏻🫶🏻