• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிலாவே வா...!-எஸ்.ஜோவிதா-அத்தியாயம் 35

S.JO

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
80
79
18
Paris
அத்தியாயம் 35

''ஹலோ...'' என்றாள் கோதை.

''அ..அத்தை நா..நான் அக்ஷய் பேசுறேன்.'' என்றான் உலர்ந்து போன தொண்டையை ஈரமாக்கி. அவனது பெயரைக்கேட்டதுமே கோதை முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. படக்கென்று ஃபோனை வைத்தாள்.

''ஹலோ..ஹலோ...'' கத்தினான்.

''மெதுவாப்பா..! வயித்துல போட்ட தையல் இன்னும் ஆறலை! கத்தாதே! என்னாச்சு..?'' கீர்த்தி கவலையுடன் கேட்டான்.

''லைன் கட்டாயிடுத்து..'' இவன் சொல்ல ",

அதே நேரம் இந்தியாவில்
''என்ன கோதை யாரு ஃபோனில்...?'' ராமநாதன் பத்திரிகையை விரித்தவாறு கேட்டார்

''வேற யாரு..உங்க உத்தம மாப்பிளை பேசுறாராம்...'' அவள் சொல்ல ராமநாதன் துள்ளியபடி எழுந்தார்.

''யாரு அந்த ராஸ்கலா? ஏன் வைச்சே? என்கிட்டே தந்திருக்க வேணாம்? கிழிச்சிருப்பேன்...'' ராமநாதன் பத்திரிகையை எறிந்துவிட்டு கோபமாகப் புலிபோல அங்கும் இங்கும் நடைபோட்டார்.

''இதபாருங்க...அவன்கிட்டே நமக்கு என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு? நல்லவன் மாதிரி நம்ப வைச்சு நம்ம பொண்ணை கொடுமைப்படுத்தியவன்..நிலா இங்குதான் இருக்குறாள்னு சொல்லி வைச்சிடாதீங்க..! அவன் என்ன சொல்லவர்றான்னு கேளுங்க..! அப்புறமா அதுக்கு தகுந்தபடி பேசுங்க..'' கோதை சொல்ல ராமநாதன் சிந்தித்தவராக,

''ம்..பார்க்கலாம்...'' எனப் பல்லை கடித்தார். மறுபடியும் ஃபோன் ஒலித்தது.

''ஹலோ யாரு பேசுறது?'' ராமநாதன் பொறுமையை இழுத்துப் பிடித்தபடி கேட்டார்.

''மா...மா.....நா...நாந்தான் அக்ஷய் பேசுறேன்..எப்படி இருக்கீங்க?'' என்றது மறுமுனை. ராமநாதன் ரிசீவர் வாயைப் பொத்தியபடி மனைவியிடம் திரும்பினார்.

''என்னை சுகம் கேட்குறான்டி...என்ன கொழுப்புன்னு பாரு.'' என்றவர் மைக்கைப் போட்டார்.

''ம்..நான் நல்லா இருக்கேன்..'' குரலில் எந்த உணர்ச்சியையும் பிரதிபலிக்காமல் பதில் சொன்னார்.

''சாரி..மாமா...இவ்ளோ மாசமா உங்களுக்கு ஃபோன் பண்ணாததுக்கு.'' அக்ஷய் தன் உடல் வேதனையை மறைத்தபடி கூறினான். ராமநாதனோ கோபமாக ஃபோனை வெறிக்க,

''எனக்கு ஒரு சின்ன ஆக்சிடெண்ட் ஆயிடுத்து. அதான்..ஹாஸ்பிட்டல் வீடு என அலைஞ்சுட்டேன்...'' அவன் சொல்ல கேட்டுக்கொண்டிருந்த கோதை பொறுக்க முடியாமல்,

''கடன்காரா...! நிஜமாகவே உனக்கு அதுதான் நடக்கப்போகுது..'' என முணு முணுத்தாள் கோதை.

''நிலாவை கூப்பிடுங்க!'' என்றார் ராமநாதன், இதுக்கு என்ன பதில் சொல்கிறான்னு பார்க்கலாம் என மனைவியை பார்த்தவாறே.

அக்ஷய் திடுக்கிட்டு கீர்த்தியை பார்த்தான். அவனும் மைக்கில் அவரது குரலை கேட்டவன், யோசனையாக முதல்லே சமாளி என்றான் சைகையில். அக்ஷய் வியர்த்த முகத்தோடு,

''அ..அவ..எனக்கு மருந்து வாங்க ஃபார்மசிக்கு போயிருக்கா.'' என்றான்.

கோதை கைநெட்டி முரித்து சபித்தாள்.

''சரி வந்ததும் பேசச்சொல்லுங்க. நான் வைச்சுடுறேன்.'' என்றவாறு படக்கென்று வைத்தார்.

''பார்த்தியாடி..அவன் யோக்கியதையை? நம்மளை எந்தளவுக்கு முட்டாளாக்கிகிட்டு இருந்திருக்கான் என்று..! நிலா மருந்து வாங்க போயிட்டாளாம்...எந்த வெள்ளைக்காரியை வைச்சுக்கிட்டு இருக்கானோ? பாவி...எனக்கு வந்த கோபத்துக்கு நாக்கை புடுங்குற மாதிரி நாலு கேள்வி கேட்டு இருப்பேன்..இவன்கிட்டே என்ன பேச்சு? இவன் அப்பன்கிட்டே பேசிக்கிறேன்..உன் புள்ளையோட யோக்கியத்தை... மறைச்சு கட்டி வைச்சு ஏமாத்திட்டியேடா பாவின்னு அவன் முகத்தில துப்பனும்..'' கர்ஜித்தார்.

''இவ்வளவு காலமும் தொடர்பு இல்லாம இருந்திட்டு இப்போ தீடிரென்று ஆக்சிடெண்ட் என்று கதைவிடுறான்...ஆண்டவனுக்கே பொறுக்காது! நம்ம பெண்ணை கட்டிக்கடான்னு நானா கெஞ்சினேன்? தேடிவந்து பாழாக்கிட்டானே! படுபாவி..! விடமாட்டேன் சும்மாவிடமாட்டேன்..நம்ம வக்கீலை பார்க்கணும்..'' கோபமாகக் கூறினார்.

''நல்லவேளை நிலா இங்கே இல்லை! பக்கத்து மாமி குழந்தைங்களை பார்க்க வந்திருக்காங்க. அவங்க கூட அறையில பேசிகிட்டிருக்கா...'' என கோதை பெருமூச்சு விட,

''ஆமா அவளுக்கு இவன் ஃபோன் செய்த விஷயம் தெரியக்கூடாது...உடைஞ்சு போயிடுவா... இருக்கட்டும் இந்த பேர் சூட்டும் விழா முடியட்டும். லண்டனுக்கு அவன் அப்பனோடு போய் அவனை ஒருவழி பண்ணிட்டுத்தான் மறுவேலை...'' என வெளியே கிளம்பினார்.

''எங்கேங்க?'' என கேள்வியுடன் கோதை பார்க்க,

''ம்..முதல்லே வக்கீலை பார்த்து இங்கு ஒருவழிபண்ணிட்டு வர்றேன்.'' என கோபமாகப் போனார்.

லண்டன்.
''டேய் கண்டிப்பா நிலா இந்தியாதான் போயிருக்கா...ஆனா அவ பெத்தவங்க வீட்டுக்கு போகலை...அப்போ வேறு எங்கோ இருக்கா...ஒரு வேளை அவ வேலை செய்த ஆசிரமத்துக்கு போயிருக்காளோ.'' கீர்த்தி சந்தேகமாகக் கேட்டான்.

''யாருக்குத்தெரியும்? பேசாமல் நான் எல்லாத்தையும் மாமாகிட்டே சொல்லிடப்போறேன்.. இனியும் எனக்கு தெம்பும் இல்லை, மனமும் இல்லை. நீங்களே தேடி கண்டுபிடிச்சுக்கோங்க, எனக்கு விடுதலை மட்டும் வாங்கித்தாங்கன்னு சொல்லிடப்போறேன்.'' என்றான் அக்ஷய் மனப்பாரத்துடன்.

''..........''

''நீ நெட்மூலம் இன்னிக்கு டிக்கெட் புக் பண்ணு..இப்பவே போய் சொல்லனும் போல இருக்கு. இனியும் தாமதித்தால் என் நெஞ்சு வெடிச்சிடும்.''

''சரிடா..உன்னோட ரிப்போர்ட்ஸ் எல்லாத்தையும் எடுத்துக்கோ...செக்கிங்குக்கு உதவும்.'' அக்கறையுடன் கீர்த்தி சொல்ல,

''ம்...'' என்றவாறு டிரஸ் எடுத்து சூட்கேசில் அடைந்தான்.

''டேய்..இன்னிக்குன்னா ரொம்பா விலையா இருக்குடா..''

''பராவாயில்லைடா புக்கிங் செய்து..பிரிண்ட் அவுட் எடுத்துக்கோ..'' என அக்ஷய் கூற, அதன்படியே செய்தான் கீர்த்தி.

லண்டன் விமான நிலையம்.

''குட் லக்..போனதும் பிரச்சனை சுமூகமானதும் ஃபோன் பண்ணாமட்டும் போதும்..! மறுபடியும் நீ இங்கு வந்து பழையபடி நம்ம கம்பெனியை நிமிர்த்தணும்..இந்த ஆண்டு விருதும் நமக்குத்தான் கிடைக்க செய்யணும்..'' கீர்த்தி கூட நடந்தபடியே சொல்லிக் கொண்டு வந்தான்.

''கண்டிப்பா..! இனி என் வாழ்க்கையில வேறு எதுக்கும் இடம் இல்லை.. தனிக்கட்டையாகவே இருந்துடுறேன்..ஏதாவது ஒரு குழந்தையை தத்தெடுத்து அதுக்காக வாழப்போறேன்...வாழும் காலத்தை எந்தவகையிலாவது உபயோகமாக்கி கொள்ளணும்...எனக்கும் ஒரு பிடிப்பு வேணும்டா...நம்ம கம்பெனி, நான், நான் வளர்க்க போகும் குழந்தை, வீடு, நீ..இது தான் என் லைஃப்..வர்றேன்..'' என விமானம் ஏறினான் அக்ஷய்.
(Coming)