நிலவு _ 12
காலம் அதன் போக்கில் ஓடி இரண்டு மாதங்களைப் புசித்திருந்தது. இந்த இரண்டு மாதத்தில் முதலில் நிறைய தடுமாறிய நிலா பின் இனியனை அந்த அண்ணாவைக் கத்தரித்து சார் என்றோ இனியன் சார் என்றோ தேவைக்கேற்றாற் போல அழைக்கப் பழகி இருந்தாள்.அது இனியனின் நெஞ்சில் பால் வார்த்தது. அத்தோடு இன்னுமொரு முக்கிய விடயமாக சேரன் வாரா வாரம் ஒவ்வொரு ஞாயிறும் பெங்களூர் பயணமானான்.அவனுக்கு தூர இருந்தாவது தங்கையைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்ததோ இல்லையோ வந்தனாவை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.
அவள் மூலம் நிலா குறித்த தகவல்களை அறிந்து கொண்டான்.ஏற்கனவே இனியன் மூலம் அறிபவையாக இருந்தாலும் வந்தனா சொல்வதையும் ஏதோ புதிதாக அறியும் ஆர்வத்துடன் கேட்டான்.அது தங்கை மீதுள்ள பாசத்தினாலா?? இல்லை வந்தனாவின் பேச்சைக் கேட்கும் ஆர்வத்தினாலா என்று அவனுக்கே தெரியவில்லை!!!!!!! அவர்கள் இருவருக்குள்ளும் ஓர் நல்ல நட்பு உருவாகியிருந்தது.அந்த வாராந்திர சந்திப்புக்களை இருவருமே ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர்.
இப்படி ஒவ்வொருவரின் மனதில் ஒவ்வொரு மாற்றத்தை விதைத்தபடி காலம் விரைய.............
அன்று ஸ்கூல் முடிந்ததும் வாசலில் இனியன் காத்திருப்பதை அறிந்து வந்தனாவிடம் விடைபெற்று வேகமாக விரைந்து நடந்தாள் நிலா.
இது அவ்வப்போது நடப்பது தான்.சில சமயங்களில் இனியனுக்கு அந்தப்பக்கம் ஏதாவது வேலை இருந்தால் கம்பெனி செல்லும் போது அவன் அப்படியே ஸ்கூல்க்கு வந்து இவளையும் அழைத்துக்கொண்டு போவான்.
எப்படியோ அவள் போக்குவரத்திற்கு அவன் கம்பெனி தான் ஏற்பாடு செய்யப் போகிறது.ஆட்டோவில் சென்றால் அதற்கான பணத்தை கம்பனியே கொடுக்கும்.இனியன் காரில் செல்வதும் அது போல் கம்பெனியைச் சார்ந்ததென்றே நிலா நினைத்தாள்.
ஆனால் அவளுடன் நெருங்கி பழக அது இனியன் செய்யும் தந்திரம் என்றோ அவன் இப்படி அவளுக்கு அதிகப்படி முக்கியத்துவம் கொடுப்பது தான் அவனின் அலுவலகத்தில் அவளுக்கு தனி மரியாதையைப் பெற்றுத்தருகிறது என்றோ அதன் காரணமாக அவனையும் அவளையும் தொடர்பு படுத்தி அலுவலகத்தில் கிசுகிசு பரவுகிறது என்பதையோ நிலா அறிந்தாளில்லை.
அன்றும் அப்படி அவனின் வரவை சாதரணமான ஒன்றாக எடுத்து அவள் ஸ்கூல் வாசலை நெருங்கும் போதுதான் அவள் காதில் அந்த பேச்சு விழுந்தது.
என்ன சார் நீங்கள் ஏதோ ஆண்களின் நிழல்பட்டாலே பாவம் என்று எண்ணுபவர்கள் போல ஆண்களைக் கண்டாலே விலகிப் போவீர்கள் இப்போது என்னடாவென்றால் அந்த கார்க்காரனுடன் உல்லாசமாக ஊர் சுற்றுகிறீர்களே!!!!!!!
அட போப்பா நீ வேற !!!!! நம்மளப் போல மாச சம்பளக்காரனோட நிழல் பட்டால் தான்பா பாவம் பழி எல்லாம். அங்கே அப்படியா?? கார் பணம் எல்லாம் இருக்கே!!!!!!! அவனோட நிழல் என்ன நிஜமே மேலே பட்டால் கூட தப்பில்லப்பா.வாரத்தில இரண்டு நாள் தவறாம காரோட வந்துடுறானே!!!!!!
ஹ்ம்ம்..உங்க அழகு அப்படி!!!!!!!!!!!!
நிலாவிற்கு சுரீர் என்றது.கசையடி வாங்கியது போல் ஒரு உணர்வு!!!!!!!!
அந்த இரு ஆசிரியர்களும் பேசியது தன்னைக் குறித்து தான் என்று சேராவிற்கு புரிந்தது.எதனால் அந்த வன்மம் என்றும் புரிந்தது.அவள் இங்கு சேர்ந்த புதிதில் உதவி செய்கிறோம் பேர்வழி என்று இரண்டு பேருமே அவளிடம் சற்று வழிய முற்பட்டனர்.
அப்போது தான் பட்ட காயம் மனதில் பச்சை ரணமாக இருக்க ஆண்கள் மேலான வெறுப்பில் எரிந்துகொண்டிருந்தவளுக்கு அவர்களின் செயல் மேலும் கடுப்பேற்ற சூடாக நறுக்கென்று ஏதோ பேசிவிட்டாள்.அதன் பின் அவர்கள் அவள் புறம் கூட திரும்புவதில்லை.ஆனால் அந்த வன்மம் மனதில் இருந்திருக்கும் போலும்.சந்தர்ப்பம் கிடைத்ததும் காட்டி விட்டனர்.
அவர்கள் பேசியது அவளுக்கு அவர்கள் மீது கோபத்தை ஏற்படுத்தவில்லை. மாறாக அவர்கள் இப்படி பேசும் அளவிற்கு இடம் கொடுத்து விட்டேனே என்று தன் மீதே ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
அவளின் பிழை தான்.மற்ற ஆண்களிடம் நடந்து கொண்டதைப் போலவே இனியனிடமும் நடந்துகொண்டிருக்க வேண்டும்.தெரிந்தவன் என்று முகத்திலடித்தாற்போன்று அவளால் அவனிடம் பேச முடியவில்லை.அங்கு தான் அவள் சறுக்கினாள்.முதல் தடவை அவனை சந்தித்த போதே விலக்கி நிறுத்தியிருக்க வேண்டும். அதைவிட்டு அவனுடன் இயல்பாக பேசி போதாத குறைக்கு அவனின் கம்பெனியிலேயே வேலைக்கும் போய்!!!!!!! ஹ்ம்ம் எல்லாம் அவளின் முட்டாள் தனம் தான்.
ஆனால் ஏனோ அவளுக்கு மற்ற ஆண்களிடம் தோன்றும் எரிச்சலும் வெறுப்புணர்வும் இவனிடம் எழவில்லையே!!!!!!! அது ஏன்?? ஒரு வேளை இவன் அவளின் பட்டாம்பூச்சிப் பருவத்தில் அவள் மகிழ்ச்சியை மட்டுமே அறிந்திருந்த தருணத்தில் அவளுக்கு அறிமுகம் ஆனதினாலா?? ஹ்ம்ம் அப்படித்தான் இருக்கும்.அத்தோடு அவனின் கண்ணியமும் கூட காரணமாய் இருக்கலாம்.
அப்போதும் சரி இப்போதும் சரி கண்களை விட்டு வேறு எங்கும் நகராத அவனின் நேர் கொண்ட பார்வையும் இதமான கேலி கலந்த இயல்பான பேச்சும் அருகில் நெருங்க வாய்ப்பிருந்தும் எப்போதும் பெண்களை விட்டு அரையடி விலகியே நிற்கும் அவனின் கண்ணியமாயும் இருக்கலாம்.அவனின் அலுவலகத்தில் அவனுக்கு இல்லாத வாய்ப்பா?? எத்தனை முறை அவளுக்கருகில் குனிந்து நின்று கணினியில் அவள் வேலையை தெளிவு படுத்த வேண்டிய சூழ்நிலை வந்திருக்கிறது.அப்போதெல்லாம் ஆண்கள் மேல் இயல்பாகவே ஓர்வித எச்சரிக்கை உணர்வு கொண்ட அவள் மனம் அதைக் கவனித்திருக்கிறதே!!!!!! அவன் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் விலகி நின்று தானே அவளுக்கு விளக்கமளிப்பான்.அப்படியான அவனின் கண்ணியம் தான் இவ்வளவிற்குப் பிறகும் அவன் ஓர் ஆண்மகன் என்பதையும் மீறி அவளை இத்தனை இயல்பாக அவனுடன் பழக வைத்திருக்கிறது போலும்.
ஹ்ம்ம் எது எப்படியோ இன்று அவனிடம் தெளிவாக பேசிவிட வேண்டும்.இனி இப்படி காரில் அழைத்துப் போக வர வேண்டாம் என்று.அத்துடன் இந்த ப்ராஜெக்ட் வொர்க் முடிந்ததும் அவனிடம் இருந்து மொத்தமாக விலகியும் விட வேண்டும். இனியும் இது போன்ற பேச்சுக்களுக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது.
ஹாய் நிலா!!!! என்ன ரொம்ப சோர்வா தெரியுற?? ஸ்கூல்ல வொர்க் ஜாஸ்தியா??
ம்ம்ம்..என்றபடி அவன் திறந்துவிட்ட கதவின் வழியே காரில் ஏறி அமர்ந்தாள் நிலா. இவன் காரில் ஏறுவது இது தான் கடைசி முறை.ச்சே பாவிகள் எப்படி எல்லாம் பேசிவிட்டார்கள்.அவன் காரில் ஏறாமல் இப்போதே மறுத்துவிடலாம் தான்.ஆனால் அவன் காரணம் கேட்பான் திடீரென்று என்ன என்று.அதற்கு ஸ்கூல் வாசலிலேயே நின்று அவளால் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது.அதற்கான தெம்பும் அவளிடம் இல்லை.அத்தோடு இது குறித்து இன்றே இனியனிடம் தெளிவாக பேசிவிட வேண்டும்.
காரைக் கிளப்பியவன் அவளின் முக மாற்றத்தைக் கவனித்து விட்டு ரொம்ப களைப்பா இருக்கா நிலா??? வழியில் ஹோட்டலில் ஏதாவது சாப்பிட்டுவிட்டு செல்லலாமா??
இல்ல....... இல்ல.. வேணாம்.
ஹே ரிலாக்ஸ்!!!!! வேணாம்னா வேணாம்.அதுக்கு எதுக்கு இவ்ளோ பதட்டம்.
ப்ச்..உங்களுக்கு புரியாது!
என்ன புரியாது??
ஹ்ம்ம்..இனிமேல் இப்படி என்னை pickup பண்ண ஸ்கூல்க்கு வராதீங்க.நானே வந்துடுறேன்.
இனியனின் புருவத்தில் சுழிப்பு வந்தது.
ஏன்???
அது சரி இல்ல.
அது தான் ஏன் நிலா??
ப்ச்..நான் ஒன்னும் சின்னக்குழந்தை இல்ல.எனக்கு வரவழி தெரியும்.நீங்கள் ஒண்ணும் சிரமப்படத் தேவையில்ல.
இதில என்ன நிலா சிரமம்.நீ என் நண்பனின் தங்கை!! எங்க ஊருக்கு வந்திருக்க!!!!!! என் கம்பெனில வொர்க் பண்ற. உனக்கு முடிஞ்சளவு ஹெல்ப் பண்ணுறேன்..அதில என்ன இருக்கு??
லுக் சார் நான் உங்கள் நண்பனுக்கு தான் தங்கை உங்களுக்கு இல்லை!!!!! அதனால்.....
வாட்????? கம் அகைன்!!!!!
எ..என்ன??? அவன் எதற்கு இத்தனை உணர்சிவசப்படுகிறான் என புரியாமல் திகைத்தாள் நிலா.
இப்போ என்னவோ சொன்னியே அதை மறுபடியும் சொல்லு??
எதை??
அதான் ஏதோ தங்கை அப்படின்னு?
ஹ்ம்ம்..நான் உங்கள் பிரண்ட்க்கு தான் தங்கை உங்களுக்கு இல்லை என்று சொன்னேன்!! அவன் கேட்கும் காரணம் அறியாமல் அதையே மீண்டும் அழுத்தி சொன்னவள் தொடர்ந்து அதனால் என் மீது அக்கறை எடுத்து இப்படி பார்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் எதுவும் உங்களுக்கு இல்லை.அதோடு
இங்கே எனக்கென்று ஓர் அடையாளம் இருக்கிறது. நீங்கள் இப்படி காரில் வந்து அழைத்து செல்வது ஸ்கூலில் என்னோட இமேஜ் ஐ பாதிக்கிறது.தப்பான பேச்சுக்களும் எழுகிறது.எனக்கு அது பிடிக்கல இனியன் சார்.என் மனசில கள்ளம் இல்லைத்தான்.ஆனால் அதற்காக மேலும் இப்படியான பேச்சுக்களுக்கு இடம் கொடுக்கிற மாதிரி நடந்துக்க கூடாதுன்னு நினைக்கிறேன்.இதுவரைக்கும் என்னைப் பார்த்து யாரும் தப்பா ஒரு வார்த்தை சொன்னதில்ல.ஆனா இன்னைக்கு ...............ப்ச் புரிஞ்சுக்கோங்க !!!!
ஆமாம் பெரிய அடையாளம்.சிடுமூஞ்சி சேரா என்கிற அடையாளம்.அது மாறுவதில் விருப்பம் வேறு இல்லையாம்!! மனதினுள்ளே முணுமுணுத்தவன் அதன் பின் அந்த பயணம் முடியும் வரையிலும் கூட எதுவுமே பேசவில்லை.அவனுடைய அலுவலக வளாகத்தில் காரை நிறுத்தியவன்.இறங்கி செல்ல முயன்றவளை நிலா என்று அழைத்தான்.
அவள் நின்று திரும்பி நோக்கவும் அழுத்தமான குரலில் எனக்கு நீ சொன்னது நன்றாக புரிந்தது.நீ எனக்கு தங்கை இல்லை என்பது என்று சற்று நிறுத்தியவன் பின் நிதானமான குரலில் அது உனக்கும் புரிந்திருப்பதில் மகிழ்ச்சி என்று முடித்தான்.
புரியாமல் அவனை ஏறிட்ட நிலாவிற்கு அவன் சொன்னது நிஜமாகவே புரியவில்லை.அவளுக்கு புரிந்ததினால் தானே கூறுகிறாள். ஏன் இவன் இப்படிக் கூற வேண்டும்.வழக்கம் போல ஏதாவது கேலிப்பேச்சா?? ஆனால் இதில் என்ன கேலி? எதுவும் புரியாமல் ஹ்ம்ம் ..என்ற சிறு தலையசைப்புடன் விலகி நடந்தாள் நிலா.
அன்று வேலை முடித்து நிலா கிளம்பும் போது அவளிடம் வந்த வசந்த் ஹாய் சிஸ்டர் ரொம்ப நன்றி என்றான் தொடர்பற்று.இவள் புரியாமல் பார்க்கவும் இன்றைக்கு டின்னெர் ஸ்டார் ஹோட்டலில் ஏற்பாடு செய்ததற்கு என்றான்.தலையும் புரியாமல் வாலும் புரியாமல் இவன் என்ன லூசா என்று நிலா அவனை ஐயத்துடன் நோக்கும் போதே அங்கே விரைந்து வந்த இனியன் டேய் ரம்பம் அறுத்தது போதும் கிளம்பு என்றவன் நிலாவிடம் திரும்பி இவன் இப்படித்தான் நிலா சும்மா ஏதாச்சும் உளறுவான் நீ கிளம்பு.என்றவன் தோழனின் முதுகைப்பற்றி தள்ளியபடியே அழைத்துச் சென்றான்.
அவர்கள் இருவரையும் மறுபடியும் ஓர் புரியாத பார்வை பார்த்தவள் உதட்டைச் சுழித்தபடியே கிளம்பினாள்.
அடுத்து வந்த ஞாயிறன்று மதியம் வரை வேலை செய்த அலுப்புடன் நிலா வீட்டுக்கு செல்ல கிளம்பவும் இனியனிடம் இருந்து அவளுக்கு அழைப்பு வந்தது.
ஏதாவது முக்கியமான விடயமா சார்??
ம்ம் ரொம்ப முக்கியமான விடயம்.
என்ன சார் ???
ஷ்ஷ் ..இப்போது இனியன் மட்டும் போதும்.ஆனால் அது தான் உன் வாயில் வர மாட்டேன் என்கிறதே. ஹ்ம்ம்..... என்ன செய்வது என் பெயர் அவ்வளவு மோசமாக இருக்கிறது போல!!
ச்சே ..அப்படி எல்லாம் ஒன்றுமில்லை.திடீரென்று பெயரை மட்டும் சொல்லிக் கூப்பிட ஒரு மாதிரி இருக்கிறது.அவ்வளவு தான்.
ஹ்ம்ம்..இந்த இனியன் சார் பழகின மாதிரி இனியனும் ஒரு நாள் பழகும் என்று நம்புவோம்.நம்பிக்கை தானே எல்லாம்!!! என்று அவன் சிறு கேலிக்குரலில் கூறவும் அந்த பேச்சை தொடர மனமற்று
என்ன விடயம் என்று கூறினால் நான் சீக்கிரம் கிளம்புவேன் சார்..என்றாள்.
அவளை ஒரு கணம் கூர்ந்து பார்த்தவன்.அது குறித்து மேலே எதுவும் பேசாமல் ஹ்ம்..கிளம்பலாம் நிலா.ஆனால் அதற்கு முன் அந்த முக்கிய விடயம்.நீ எப்போது எங்கள் வீட்டிற்கு வருகிறாய் என்பது தான். அம்மா என்னைப் போட்டு துளைத்தெடுக்கிறார்கள்.நீ மட்டும் அவர்கள் வீட்டில் சென்று மூக்குப் பிடிக்க சாப்பிட்டாயே நம் ஊருக்கு வந்திருக்கும் அந்த பெண்ணை இங்கே அழைத்து ஒரு வாய் சாப்பாடு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் கூட உனக்கு இல்லையே!!! பாவம் விடுதியில் தங்கி இருக்கும் பெண் வேறு..அப்படி இப்படி என்று.
நானும் இந்த இரண்டு மாதங்களாய் உன்னிடம் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறேன்.நீ தான் வருவதாய் இல்லை.
அது..அது.....நேரம் கிடைப்பதில்லை.அதோடு வந்தனாவை விட்டுவிட்டு நான் மட்டும் உங்கள் வீட்டுக்கு வருவதென்பது சரி வராது. என்ன காரணம் சொல்வதென்று தெரியாமல் வாயில் வருவதை உளறினாள்.எப்படியும் அங்கு சென்றால் சேரன் குறித்த விசாரிப்புகள் வரும்.இப்போது தான் அனைத்தையும் மறந்து சற்று இயல்புக்கு வரும் மனதை மீண்டும் ஏன் தேவையில்லாத நினைவுகளைத் தட்டி எழுப்பி ரணமாக்குவது.அத்தோடு ...........
எங்கள் வீட்டைப் பற்றி நீ என்ன எண்ணிக்கொண்டிருக்கிறாய் நிலா?? அதிகப்படியாக ஒரு விருந்தாளி வருவதால் உணவுப் பற்றாக்குறை வந்துவிடும் நிலையில் இருக்கிறோம் என்றா? என்றான் கோபத்துடன்.
பின் தொடர்ந்து ரைட் உனக்கு இது தான் பிரச்சினை என்றால் உன் தோழியின் தொலைபேசி இலக்கம் கொடு நானே அவங்களையும் இன்வைட் செய்கிறேன்.என்றவன் விடாப்பிடியாக சொன்னதை செய்துவிட்டே ஓய்ந்தான்.
அன்று மாலையில் தோழிகள் இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசிய போது வந்தனா கேட்டாள்
என்ன சேரா உன் பாஸ் என்னையும் நெக்ஸ்ட் சண்டே லஞ்ச்க்கு இன்வைட் பண்ணியிருக்கிறார்.என்ன செய்வது???
வேறு வழியில்லை வந்தனா.போய்த்தான் ஆகணும்.ரொம்ப நாளா அவங்க அம்மா என்னை அழைச்சுட்டு வரச் சொல்றாங்கன்னு கூப்பிட்டுட்டே இருந்தார். நான் ஏதோ ஒரு காரணம் சொல்லி மறுத்துட்டிருந்தேன்.இனியும் மறுக்க முடியாது வந்தனா.பெரியவங்க அழைக்கும் போது இதற்கு மேலும் மறுப்பது மரியாதையும் இல்ல.
ஹ்ம்ம் என்ற வந்தனாவின் விழிகள் சேராவை சிறு யோசனையுடன் வட்டமிட்டது.ஆண்கள் என்றாலே அக்கினியாய் , சுழல் காற்றாய் இருப்பவள் இந்த இனியனிடம் மட்டும் எப்படி இவ்வளவு இயல்பாக பழகுகிறாள். தன்னுடைய இந்த முரண்பாட்டை இவள் முதலில் உணர்கிறாளா?? ம்ஹும் அவளின் நடவடிக்கையைப் பார்த்தால் அவள் அதை உணர்ந்தாற் போலவே இல்லையே!!
வந்தனாவிற்கு சேராவின் நிலை அவள் கூறாமலே ஓரளவு புரிந்து தான் இருந்தது.சேராவின் ஆண்கள் மீதான வெறுப்புக்கு நிச்சயம் அவள் அண்ணன் தான் ஏதோ ஒரு விதத்தில் காரணம்.அவனின் செயல் தான் சேராவின் மனதில் காயத்தை ஏற்படுத்தி ஆண்கள் மீதான வெறுப்பை உண்டாக்கி இருக்கிறது என்று புரிந்தது.
அதற்கு சான்று அந்த புகைப்படத்தில் இருவரும் நின்ற மகிழ்ச்சிக் கோலமும் இன்று அண்ணனைக் கண்டு இவள் முகம் திருப்பிச் செல்வதும் அவன் தங்கைக்கு பிடித்த ஸ்வீட்ஸ் வகைகளைக் கூட வந்தனாவிடம் கொடுத்து அவள் வாங்கியதாய்க் கூறி அவளையே கொடுக்கச் சொல்வதும். தங்கையையே மறைந்திருந்து பார்ப்பதும் அதோடு சேரா கூறிய உன்னைப் போன்ற ஒரு புனிதமான பெண்ணால் நினைத்துப் பார்க்க கூட தகுதியற்றவன் என் அண்ணன் என்ற சொல்லும்.இது போதுமே அவளின் பிரச்சினையைத் தெளிவாக்க.வந்தனாவின் மனம் தோழிக்காக வருத்தப்பட்டது.
இப்படி ஒருத்தன் தவறு செய்துவிட்டான் என்பதற்காக சேரா ஒட்டுமொத்த ஆண்களையுமே வெறுப்பது எவ் விதத்தில் நியாயம்.அப்படி ஆண்கள் ஒட்டு மொத்தப் பேரையுமே ஒதுக்கி விட்டு வாழ அவள் என்ன ஆண்களே அற்ற உலகிலா வாழ்கிறாள்.இப்போது சரி ஆனால் இன்னும் எதிர்காலம் நீண்டு உள்ளதே!! அதை அவளால் தனியே எதிர்கொள்ள முடியுமா??? ஆனால் இதையெல்லாம் சேராவிடம் யார் சொல்வது??
இப்படி வந்தனா தோழிக்காக வருந்தும் போது தான் ஆண்கள் என்றாலே எட்டிக்காயாக நினைக்கும் தீயாக எரிக்கும் சேரா அவளின் அண்ணனின் நண்பன் என்று அறிமுகமான இனியனிடம் மட்டும் அவளின் இயல்பை மீறி ஓரளவு சாதாரணமாக பழகுவதைக் கண்டாள். அந்த இனியன் சேராவைப் பார்க்கும் பார்வையில் அக்கறையும் பரிவும் தெரிவதைக் கவனித்தாள்.அவனால் சேரா வாழ்க்கையில் ஓர் மாற்றம் வருமா?? என்று அவள் காத்திருந்தாள்.மெல்ல மெல்ல மாற்றமும் வருகிறது.இதோ இன்று சேரா அவனின் வீட்டுக்கு செல்ல ஒப்புக்கொண்டதே ஒரு மாற்றம் தானே!!!
ஆனால் ஒன்று மட்டும் அவளுக்கு புரியவே இல்லை.இந்த இனியன் சேராவிடம் எடுத்துகொள்ளும் அக்கறைக்கு வெறும் நண்பனின் தங்கை என்ற எண்ணம் மட்டும் தான் காரணமா?? அல்லது அதையும் தாண்டி ஏதேனும் உள்ளதா?? ஹ்ம்ம் அப்படி இருந்தால் நன்றாக இருக்கும் பார்ப்போம்.
தோழியின் மீது உண்மை அன்பு கொண்ட உள்ளம் அவளின் வாழ்வில் வசந்தம் வர வேண்டும் என்று கடவுளைப் பிரார்த்தித்தது.