அத்தியாயம் ..3
"காரியிருளில் கருநாகமாக
தீண்டிச் சென்ற ஊதல்
காற்றில் உந்தன் சுகந்தத்தை
உணர்ந்த மனமோ உணர்ச்சி
குவிலாகிப் போனது அன்பே..!!!
மகிழினி தன் அருகில் இருப்பவனைப் பற்றி எந்தவித அசூயை இல்லாமல் தன் உள்ளத்தின் வெளிப்பாட்டைக் கூறத் தொடங்கினாள்.
அதற்கான காரணத்தைக் கேட்டால் அவளுக்குத் தெரியாது. இத்தனை நாட்களாக மனதிற்குள் அடைத்து வைத்து மூச்சு முட்டிக் கிடந்தவளுக்கு இன்று வடிகாலாக அவன் மாறவும் தன்னகத்தே இருக்கும் சந்தோஷம் வலி வேதனை இறக்கி வைக்கும் சுமை தாங்கியாக மாறிப் போனது தான் விந்தையிலும் விந்தை.
இப்படி எல்லா விசயமும் என்னிடம் பகிரனும் ஏன் தோனுச்சு ?,என்ற கேள்வி வினோதனுக்கு உள்ளே தோன்றினாலும் அதற்கான விடையை அவளே சொல்லி முடிக்கட்டும் என்று நினைத்துக் கொண்டான்.
வினோதகனோ எல்லாருக்கும் வாழ்க்கை தடம் மாற எதாவது ஒரு காரணத்தைக் கூறுவார்கள், அதுப் போல இவளும் அப்படி தான் என்று நினைத்தவன், அவளின் பேச்சைக் கேட்க தொடங்கியவன் அவளுள் இணைந்து அவளின் கடந்த கால வாழ்க்கைகுள் ஒரு பார்வையாளனாக உள் நுழைந்தான்.
மகிழினியோ ''உங்களிடம் என்னவோ எல்லாவற்றையும் சொல்லணும் தோனுகிறது, வேலை இருந்தாலோ போரிங் இருந்தாலோ சொல்லி விடுங்கள்'', என்றவள், அவன் முகத்தைப் பார்க்க,
அவனோ ''அது எல்லாம் ஒன்றுமில்லை, நீ பேசு, எனக்கொன்று அவசரம் எதுவுமில்லை, இன்றைய சூழ்நிலையில் என் தனிமைக்கு உன் கதை தீனிப் போடுகிறது'', .. என்று சிறு சிரிப்புடன் அவன் பேசுவதை ரசித்தவள், அவனின் ஒற்றைப் புருவத்தை உயிர்த்தி என்னவென்று வினாவினான்.
அவளோ இங்குமங்குமாக தலையசைத்தவள்,''என் கதை உங்களுக்கு இனிப்பாகவோ காரமாகவோ இருக்கிறதா'', என்று சிறு முறைப்புடன் கேட்க,
கலகலவென்று சிரித்த வினோதகன், ''நாம் பார்த்து கிட்டதட்ட ஒரு மணி நேரம் கூட ஆகல, ஆனால் அதற்குள் உன் பேச்சு செய்கை என்னை சிரிக்க வைப்பதும், வலிகளை உணர வைக்கவும் செய்கிறது'', என்று சொன்னான் வினோதகன்.
''ம்ம், அப்படி பெரியதாக என் வாழ்வில் நடந்த மாற்றங்களை உங்களிடம் கூற எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை சார், ஏன்? என்றால் நீங்கள் என் கஸ்டமர் இல்லை, அவர்களாக இருந்தால் என்னை துகிலுரிந்து காமம்த்தை தீர்க்கும் கருவியாக பயன்படுத்திச் சென்று விடுவார்கள்
அவர்களுக்கு அவர்களின் உணர்வும் உணர்ச்சிகள் மட்டுமே பெரிதாகத் தெரியும். எங்களிடம் ஆசையை கொட்டிக் கவிழ்க்கும் கழிவறை இருக்கையாகப் பயன்படுத்திச் செல்வது தானே ..
காசு கொடுத்தால் பொது கழிப்பறையை யாரு வேண்டுமானாலும் யூஸ் பண்ணலாம் என்பது சட்டமாக இருக்கையில் என்னைப் போன்ற பெண்களிடம் பணத்தை நீட்டி விட்டு அதை மட்டுமே தேடுவது வாடிக்கை தான்.
அது அவர்களின் தவறு அல்ல, வீட்டில் கிடைக்காதை வெளியே தேடுகிறார்கள். அதில் நியாய தர்மம் பார்க்கக் கூடாது'', என்று சொல்லிக் கண்ணைச் சிமிட்டினாள் மகிழினி.
அவளைப் பார்த்துக் கொண்டு இருந்தவன் அவளின் கண் சிமிட்டலில் திகைத்துத் தன் உணர்வு பிடியிலிருந்து வெளியே வந்தவன், ''ம்ம்'', என்று மட்டுமே சொல்லவும்,
''ஏன் சார் ரொம்ப போர்யடிக்கிறானா, ம்ம் மட்டும் சொல்றீங்க'', என்றவளை உற்று நோக்கிய வினோதகன்,
''உன் பேச்சில் இருக்கும் தெளிவு ஏன் உன் வாழ்க்கையில் இல்லாமல் ஏன் போச்சு'', என்ற கேட்க,
மகிழினியோ, ''சொன்னால் புரியாது பட்டால் தான் புத்தி வரும் எங்க பாட்டி அடிக்கடி சொல்வாங்க. அப்பயெல்லாம் இந்தக் கிழவிக்கு வேறு வேலை இல்லை எப்ப பாரு குறை சொல்லிகிட்டே அலையுதே'', என்று நினைப்பேன்.
''ஆனால் இப்ப அது அனுபவத்தின் பால பாடம் என்று அறியவில்லை சார்'', என்று மகிழினி சொல்ல,
''நான்யென்ன உன் பாஸ்ஸா, என்னிடம் வேலை செய்வது போல சார், சார் கூப்பிடற'', என்றவன் ''சும்மா என் பெயரைச் சொல்லிய கூப்பிடு'', என்று வினோதகன் சொல்லவும்,
அவளோ ''உங்கள் பெயரைச் சொல்ல துட்டுக் கேட்டால் நான் எங்கே போவது, எனக்கு வாங்கித் தான் பழக்கம் கொடுத்து பழக்கமில்லையே, சார்ர்ர்ர்'',.. என்று ராகமிட்டாள் மகிழினி.
அவளின் பேச்சில் சிரித்தவன், ''பெயரைச் சொல்லத் துட்டு கேட்க மாட்டேன், ஆனால் உன் கதையை கேட்கிறேன் என்று என் காதை புண்ணாக்குவதற்கும் அதை ரிப்பேர் பண்ணத் துட்டு கேட்பேன்'', என்று சொல்லிச் சிரித்தான் வினோதகன் .
''ஹாஹாஹா'',.. என்று சிரித்த மகிழினி ''வினோதகன், வித்தியாசமான பெயர் தான், எல்லாரிடமும் வினோதமானவனா, தனித்துவமானவனா இருக்கிறவனா தெரியல'', என்று சொல்லியவளைக் கண்ட வினோதகன்,
''சந்தடி சாக்கில் என்னை வா,போ, அவனே இவனே மாதிரி பேச ஆரம்பிச்சிட்டே'',.. எனறு சிரித்தவன், ''உன்னை பார்த்தலிருந்து ஒருமையில் தானே கூப்பிடுகிறேன், அதனால் எதாவது தவறாக நினைக்கிறாயா'', என்று கேட்டான்.
அவனோடு இணைந்து சிரித்தவள், ''ஒருமையில் பேசவதோ இன்னும் அசிங்கமான வார்த்தைகளை என்னிடம் உபயோகித்த நிறைய பேர்கள் இருக்கிறார்கள். நீங்கள் ஆரம்பத்தில் பார்த்தவுடனே என்னை தவறாக நினைத்து பேசியது சுருக்கென்று மனதில் தைத்தது தான். ஆனால் ஒரு மணி நேரத்தில் அதுவே பழகிருச்சு போல'', என்று சிரித்தவள், ''போக போக அதுவே பழகிடும் சினிமா ஜோக் தான் ஞாபகம் வருகிறது விகன்'', என்று அவன் பெயரைச் சுருக்கமாக அழைத்தாள்.
அவள் அழைப்பில் ஏதோயொன்று மனதிற்குள் தட்டி எழுப்ப, ''ஏய், என் பெயரை இப்படியும் கூப்பிடலாமா, எல்லாரும் மேக்சிமம் வினோத் இல்லை முழு பெயர் சொல்லித் தான் கூப்பிடுவார்கள், நீ தான் வித்தியாசமாக விகன் கூப்பிடுகிறாய்'', என்று சிலாகித்து பேசியவனைக் கண்ட மகிழினி,
இந்த மாதிரி பாராட்டும் ஆச்சிரியமும் கலந்த இயல்பான வாழ்க்கை தனக்கு ஏன் அமையவில்லை என்ற ஏக்கம் மனதிற்குள் சிறுதுளி அனலாகப் பொறி பறந்தது.
சற்று நேரம் இருவரிடம் ஆழ்ந்த மௌனம் ஆட்கொள்ள, அந்தப் பேரமைதியை அனுபவித்தார்கள்.
வினோதகன் தன் முன் நின்று கொண்டு இயல்பாக உரையாடுபவளின் மனம் எவ்வளவு காயப்பட்டு இருந்தாலும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள அவளுக்கு எத்தனை மன உறுதி வேண்டும் என்ற எண்ணம் தோன்றவும்,
''ஆமாம் இன்னும் உன் கதையை எப்ப ஆரம்பிக்கலாம் இருக்க'', என்று கேட்டவனை, திரும்பி முறைத்தாள் மகிழினி.
''ஏன் சார், அவ்வளவு ஆர்வமாக கதை கேட்கிறீங்க, என்னைப் பற்றி எதாவது கதை எழுதி துட்டுப் பார்க்க போறீங்களா'', என்று கேட்டவுடனே வினோதகனுக்குச் சுளீர்ரென்று ஒரு கோபம் வர, அவளைத் தீயாய் முறைத்தான்.
''எனக்கு இது தேவை தான், வேலியில் போன ஓணான் வேட்டியில் விட்ட கதையா இருக்கே, நீயே ஆரம்பிச்சிட்டு இப்ப என்னைக் கேள்வி கேட்கிற'', எனறு சிறு கோபம் கலந்த குரலில் பேசினான் வினோதகன்.
அவனின் திடீர் கோபத்தைப் பார்த்தவளோ, இவனை மாதிரி சட்டென்று கோபம்படும் ஒரு ஜீவன் தன்னை எத்தனை பெரிய சிக்கலிட்டு சென்றதது, என்று நினைத்தவளுக்கு அவனின் கோபத்தைக் கண்டு சிறு நகைப்பு தான் தோன்றியது மகிழினிக்கு.
அவளின் சிரிப்பிலிருக்கும் வலியை உணர்ந்தாலும், என்னமோ அவள் கதையை கேட்டு அவளுக்கு எதாவது நல்லது செய்து விடப் போவது போல இருக்கும் தன்னுடைய தோரணை கண்டு மனமோ சிறு வெட்கம் கொண்டாலும், அதை வெளியிடாமல் முகத்தை உர்யென்று வைத்துக் கொண்டு பார்வையை எங்கோ வெறித்துக் கொண்டு நின்றான் விகன்.
அவனின் இயல்பு மறந்து தன்னுடன் அளாவிய அவன் பேச்சு இப்படி மௌனமாகப் போனதைக் கண்டவள், சார், சும்மா கிண்டலுக்குச் சொன்னது தான் இதுக்கெல்லாம் கோபம் வரலாமா, என்றவள்,
''உங்கள் அழகென்ன அறிவென்ன, மனமென்ன, குணமென்ன,
கோபம் வரலாமா,
இரு கண்ணிருக்க,
பெண்ணிருக்க, கொஞ்ச வரலாமோ..
என்று சிறு பிசிறு தட்டாமல் ஸ்வரம் குறையாமல் அவள் பாடியக் குரலில் மெய் மறந்து அவளை நோக்கினான் வினோதகன்.
அவளுடைய முகத்தை விட பேச்சும், இப்ப பாடிய பாடலில் அப்பழுக்கற்ற மனதின் குரலில் உருகியவனோ சற்று தன் சீற்றத்தைக் குறைத்தவன், மென்மையாக அவளைப் பார்க்க,
என்ன சார், அப்படி பார்க்கீறிங்க, என்னடா இவள் பாட்டுக்கு, ராத்திரியில் நித்திரை கொண்டு இருக்கும் ஜீவன்கள் எல்லாம் தலைதெறிக்க ஓடி வரும் பயமா என்று சிறு சிரிப்புடன் கேட்டாள் மகிழினி.
ம்ஹூம், இந்த இரவில் இயற்கையின் தாக்குதலாக மெல்லிய சிறு காற்று மூங்கில் துளைகளில் ராகமிட்டு கீதமிசைப்பதை நான் மட்டுமே ரசிக்கிறேன், உன் குரல் வளம் என்னை பெரிய சுழலுக்குள் முழ்கி முச்சுயடைக்க வைக்கது தெரியுமா?.. ஆனால் ஒரு ஆச்சிரியம்…பாட்டிக் காலத்துப் பழைய பாடலை சட்டென்று பாடடுகிற..அது தான்''…என்று பேசினான் வினோதகன்.
அவனின் பேச்சில் வியந்தவள், என்ன சாரே பேச்சில் செந்தமிழ் துள்ளி விளையாடுது.. ம்ம்.. இருக்கட்டும் இருக்கட்டும் என்றவள், எங்க வூட்டுப் பாட்டி இப்படி பழைய பாட்டா பாடிக் கொல்லும் அது உடைய கட்டைக் குரலில், அதைக் கேட்டுக் கேட்டு கிண்டல் பண்ணினாலும் அந்தப் பாட்டு எல்லாம் மனதில் பதிந்து விட்டது,'' என்று சொல்லி நகைத்தாள் மகிழினி.
அவளின் மதிமுகத்தைப் பார்த்தவன் இரவின் இசையாக அவளின் சிரிப்பொலியில் மயிலிறகாக மனத்தை வருடிச் சென்றது வினோதகனுக்கு.
அழகு ஆபத்தானது தான், ஆனால் அதோட குரலின் இனிமையும் பேச்சும் திறமையும் இருந்தால் அது பேராப்பத்தானோ…
தொடரும்