• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிழலின் யாத்திரை ...4

சசிகலா எத்திராஜ்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
20
4
3
Karur
அத்தியாயம் .. 4



''இரவு காடுகளில்

கருந்சாந்து பொட்டுயிட்டு

மென் காற்றிலாட

நெற்நாற்றுகளின் சலசலப்பை

உன் சேலை உரசுகையில் கண்ட

உள்ளமதில் பூவிதழ்களில்

தேனிருஞ்சும் கருவண்டாக

ஆனேனடி கண்ணம்மா…'',


அவள் சிரித்தபடி செவியோரம் விழந்த மயிர்க்கற்றைகளை தன் நீண்ட பிஞ்சு விரல் கொண்டு ஒதுக்கியவள், வினோதகனின் கோபம் தணிந்துத் தன்னை அவனின் விழிகளாலே மெச்சிக் கொள்ளும் பார்வையைக் கண்டாள்.


''என்ன சாரே, என்னை நோக்கிய பார்வை மாற்றம் வேறாகத் தெரிகிறது .. நீங்கள் பெரிதாக நினைக்குமளவுக்கு ஒர்த் இல்லாத பீஸ் சாரே'', என்று கேலிச் சிரிப்புடன் சொல்லியவள், ''எல்லாரும் சொல்வதைப் போல இந்த மாதிரி ஆவதற்கு காதல், கத்திரிக்காய் இல்லை சாரே.. என்னை ஏமாற்றி என்னைக் கொண்டுப் போய் விற்பனை செய்து விட்டுப் போக நான் என்ன ஒண்ணும் தெரியாத முட்டாள் பெண்ணா.. இல்லை சாரே.. அப்படி எதுவும் இல்லை


ஏதோ ஒரு வித்தியாசமாக எண்ணம் என்னுள் எழும்பியது ஒரு காரணமாக இருக்கலாமோ.. ஒரு கதை சொல்வார்கள், அந்தக் காலத்திலே.. எதன் கையில் என் கோலம் மாறியது ...அதுப் போல தான் என் வாழ்வு திசை மாறியது. என் அழகின் மேலே நான் கொண்ட மோகம், மற்றவர்களை வீழ்த்திக் கொத்தும் அழகான நஞ்சுயுள்ள சர்ப்பமாக என்னை மாற்றியது …


ஆதாமின் விலா எலும்பை எடுத்து இன்னொரு உயிரை படைத்த காலமோ என்னவோ… என்னிடமிருந்த என் காதலை உருவி என் அழிவிற்கு நானே விதை தூவி அது இன்று து‌ஷ்ட மரமாக வளர்ந்து நிற்கிறது ...


அதற்கான ஆயுளைப் படைத்து விட்டு பின்பு நான் சாகாமல் இருக்க தான் என் தசையைத் தின்று செரிக்கும்படி சிங்கார வனத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நிகழ்வுகள் நிறைய சாரே.. இரவு தாரகையின் அழகில் மயங்கி வீழ்ந்து ஆழிக் காற்றில் சுழற்றி அடிக்கப்பட்டு இப்ப எங்கயோ நாற்றமடைந்த சாக்கடையில் கிடக்கும் பன்றிக் கூட்டத்தில் நானுருத்தியாக வலம் வருகிறேன்.


நான் என் தசையை விற்று இந்தச் சேலையோ நகைக்கோ அலங்காரமாக பவனி வரவோ இல்லை சாரே .. பருவத்தில் கழுதை கூட அழகாகத் தெரியுமாமே.. அதுப் போல என் அழகின் மேல் நான் கொண்ட மோகம் மற்றவர்களுக்கு கள்ளுண்ட போதையை ஏற்றி தினமும் கல்யாணம் ஆனப் பெண்ணாக மாறி புதுசு புதுசா மாப்பிள்ளைகளோடு முதல் இரவாக நினைத்து தினமும் வலம் வந்துக் கொண்டு இருக்கிறேன்..'',என்று தன்னை மறந்தவளாகப் பேசிக் கொண்டிருக்கும் மகிழினியைப் பார்த்த வினோதகனுக்கு ஆச்சரியம் உண்டாயிற்று.


தன்னைப் பற்றிய சுயசரிதையை இப்படி வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டும் அவளின் தன்மையைக் கண்டு வியந்தான். இப்படியும் தோனுமா என்ற வினா உள்ளத்தில் எழுந்தாலும் இடையில் அவளின் பேச்சைத் தடுக்க முயலவில்லை அவன்.


அவளின் பேச்சில் இருக்கும் அறிவு செயலில் இல்லாமல் அவளை ஏன் இந்தளவுக்கு கீழ் இறக்கியது என அறிந்துக் கொள்ள பேராவல் கொண்டவன், தொடர்ந்து பேசட்டும் என்று மௌனமாக அவளைப் பார்த்தான்.


ஆனாலும் அவளின் பேச்சாலே அவள் முகத்தில் தோன்றும் பாவனைகளில் நடிப்பு தன்மை சிறுதும் இல்லாமல் கலப்பிடமில்லாத தேனின் சுவையில் தித்திக்கத் தான் செய்யதது வினோதகனுக்கு.


எங்கோ வெறித்தபடி பேசிய மகிழினி தன் பக்கத்தில் நின்றவனின் சிலைப் போல அசையாமல் நிற்கும் தோற்றத்தைக் கண்டவள் உளிக் கொண்டு செதுக்கிய கம்பீரமான உருவத்தில் ஒரு நொடி உள்ளம் தடுமாறினாள்.


அவனுடன் வனாந்திரத்திலும் தனித்து நின்றாலும் மாமிசத்தை உண்ணும் உண்ணியாக அவன் விழிகளில் எந்தவித அசுயையான கொத்தும் கழுகுப் பார்வை இல்லை.


சக தோழனாக, உற்ற உறவாக ஏதோ பல கால பழகியவனாக அவனுடன் உரையாடுவது தன்னுள் ஒளிந்து கொண்டிருந்த கசடுகளை இறக்கி வைக்கும் சுமை தாங்கியாக அவனை நினைத்து மனப் பாரங்களை பகிர்ந்துக் கொண்டாள் மகிழினி.


மனதினுள் எப்போதும் இருக்கும் வெற்றிடம் இப்போது இல்லாமல் இருப்பதுக் கண்டு அவளுக்கும் வியப்பு தான். ஆனால் அது எல்லாம் கானல் நீர் தானே ..


நெடுந்தொலைவில் தெரியும் கானல் நீராக சில மணித்துளிகளில் இருவரும் பிரிந்து தனித்தனியே பயணிக்கும் தனியாள் தானே என்று நினைத்துக் கொண்டவள் தனக்குள் எழும்பும் பெருமூச்சை வெளியேற்றி சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.



இருவரும் தன்னுடைய எண்ணங்களோடு ஒன்றி போக, அவ்விடத்தில் காற்றின் ரீங்காரத்தில் மூங்கில் துளைகளில் நுழைந்து இசை பாட, அந்த நாதத்தில் சிறு ஜீவன்களின் ஓடும் ஒலியில் விழந்து கிடக்கும் சருகுகளின் சத்த மட்டுமே கேட்டது.


அவனும் அவளுடைய பேச்சில் முழ்கியவன் தன்னை மறந்து நிலா ஒளியில் பிரகாசிக்கும் அவளின் புற அழகைப் பார்த்தான்.


மலர்ந்த மல்லிகை பூவை போல மலர்ந்து நறுமணம் வீசிய அவளின் அழகிய வதனம் வெண்ணொளியில் பட்டொளி வீச, புலர்ந்த அதிகாலை நேரத்து கருநீலம் போல கருங் கூந்தலோ மயில் தோகையாக இடை நீண்டு தொங்க, எலுமிச்சை வண்ண நிறமழகு பார்ப்பவர்களை பார்த்த வினாடியே சுருட்டி சுருக்குப் பையில் போட்டுக் கொள்வதைப் போல, (இந்தக் காலத்தில் சுருக்கப் பைக்குப் பதிலாக கேன் பேக்குள் வைத்துக் கொள்வது) அவளின் அழகு யாரையும் சிந்தை மறந்து பித்தம் கொள்ள வைக்கும் பேரழகு ராட்சஸி தான்.. பெயர்கேற்ற அழகிய மலர் பல கைகள் மாறி இன்று தெரியாத ஒருவனிடம் தன் கதையை கூறிக் கொண்டிருக்கிறது.


அவளின் அழகு அவளை மட்டுமே அழித்தா இல்லை அவள் குடும்பத்தைச் சிதைத்தா என்று அவள் தான் சொல்ல வேண்டும். 'ம் இன்னும் எனனென்ன பூதம் அவள் வாயிலிருந்து வருகிறதோ தெரியவில்லை .. ',என்று தன் போக்கில் சிந்தித்துக் கொண்டிருந்தான் வினோதகன்.


அவளோ அவனின் சிந்தனையை தடுப்பதுப் போல, "சார், சாரே", என்று பல முறை கூவ, அவளின் குரலில் திடுக்கிட்டு, "என்ன மகிழினி", என்று சிறு பதட்டம் அவன் குரலில் இருந்தா என்று தெரியவில்லை. ஆனால் அந்தக் குரலில் அவளின் மனமோ சிலிர்த்தது.


ஆனாலும் அவனின் பதறியக் குரலில் "ஒன்றுமில்லை சாரே ஏதோ கனவுலகில் சரசமாட போய் விட்டீர்கள் போல", என்று சொல்லிச் சிரித்தாள் மகிழினி.


"ஹாஹாஹா.. கனவுலகமா,உன் கூடப் பேசிக் கொண்டு இருப்பதைக் கனவு போல தான் இருக்கிறது.


காரில் போகிறவனை நிற்பாட்டி ஒரு அழகிய ராட்சஸியாக அவனுடன் வண்டியில் ஏறிக் கொண்டு அவன் வாங்கி வைச்ச சாப்பாட்டை பங்கு வாங்கிக் கொண்டு இப்ப உன் கதை சொல்கிறேனு ஏதோ ஏதோ சொல்லிக்கிட்டு இருக்க, அதையும் நான் கேட்டுகிட்டு இருக்கேன், இது என்ன நிஜமா இல்லை கனவா ஒரு டவுட் வந்திருச்சுல",..என்று சிறு சிரிப்புடன் கலாய்த்தான் வினோதகன்.


அதைக் கேட்டு அவனை முறைத்த மகிழினி ''இதுக்குத் தான் நல்லதுக்கே காலம் இல்லை சொல்வாங்க,அப்படி இருக்கு நீங்கள் பேசுவது, ஏதோ காரில உட்கார சீட்டை கொடுத்தது என்னமோ சிம்மாசனமே கொடுத்ததை மாதிரி பீலா உடூரீங்க, இத்துண்டு ஒரு பரோட்டாவும் ஒரு இட்லி கொடுத்துப் பேசறீங்க '', ,என்று தன் இடுப்பில் கை வைத்தப்படி அவனை நோக்கித் திரும்பி நின்றாள்.


அவளின் தோரனையில் இவள் மட்டும் சரியாக இருக்கும் பெண்ணாக இருந்தால் ஒரு வீட்டுக்கு மகாராணியாகப் போய்ருப்பாள் என்று எண்ணியவன், அதைச் சொல்லாமல் வேறு பேசினான், ''என்னது, சிம்மாசனமா இங்கே இந்த ராஜாவிற்கே சிம்மாசனம் இல்லாமல் ஊர் ஊராக வண்டி ஓட்டிக் கொண்டு அலைகிறேன், இதில அதிலும் பங்குத் தரணுமாக்கும்'', என்று கிண்டலுடன் பேச, அவனின் பேச்சில் கலகலவென்று சிரிக்கத் தொடங்கினாள் மகிழினி.


நடுநிசியில் இருவரும் உரையாடுவது கண்டு மேகத்திற்குள் மறைந்த வெண்ணிலா அவளின் சிரிப்பில் சிறிது எட்டிப் பார்க்கத் தொடங்கியது.


அவனோ அவளின் சிரிப்பில் இழையோடிய சிறிய சோகத்தின் நிழல் படிந்திருப்பதைக் கண்டு அவளின் வாழ்வு போல அதுவும் இருட்டில் மறைந்திருக்கும் ரகசியம் தான் என்னவாக இருக்கும்.. என்று யோசனையோட அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் வினோதகன்.


தொடரும்...
20221015_180243.jpg