• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிழலின் யாத்திரை ..5

சசிகலா எத்திராஜ்

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
9
அத்தியாயம்..5


''நீ நினைக்கும் ஒவ்வொரு

மணித்துளியிலும் உன் முன்

தாயை தேடி ஓடி வரும்

கன்றுக் குட்டியாக உன்னிடம்

ஓடி வருவது எந்தன் காதலடி பெண்ணே…'',



வினோதகன் பற்றிய எந்த விபரமும் அறியாமல் தன்னைப் பற்றிய சிந்தனைகளோடு அவனுடன் கதைத்துக் கொண்டிருந்தவள், தன் வாழ்க்கை திசை மாறிய திசையை பற்றி எதுவும் சொல்லாமல் மறைமுகமாகப் பேசிக் கொண்டிருந்தாள் மகிழினி.


அவளின் பேச்சில் கிண்டலும் கேலி நகையோட இருப்பதைக் கண்டவனோ, தன் பாணியில் அவனை ஓட்ட ஆரம்பித்தான்.


''யாரோ இங்கே தன் வாழ்க்கை வரலாறு சொல்கிறேன் என்று வேறு ஏதோ பேசிக் கிட்டு இருக்காங்களே, அவங்களை நீ பார்த்தீயா மகிழினி'',..என்று நக்கலுடன் வினா எழுப்பினான் வினோதகன்.


'''சாரே உங்களுக்கு ரொம்பத் தான் லொள்ளு, என் கதை வரலாற்றில் பொறிக்கப் பட வேண்டிய அச்சுக் கோப்பையா என்ன?.., ஆனாலும் அந்தக் காலத்தில் வம்சவளியாக தாசிக் குலத்திலே பிறந்தவர்கள் முதலில் கடவுளுக்குத் தான் நேர்ந்து விடுவார்கள் சொல்வார்கள், காலம் மாற மாற ராஜாக்களின் அந்தப்புரத்து அழகியாக வலம் தொடங்கினர், அப்பறம், பணம் இருக்கிறவன் ,இல்லாதவன் பல பேருக்குக் கைமாறி போகிற தொழிலாக மாறிருச்சு தெரியுமா..


அதைவிடக் காதல் என்ற பெயரில் கொண்டு விற்பவர்களும் உண்டு, வீட்டில் கட்டியவன் சரியில்லை என்றால் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்காகப் பெண்கள் சிலர் தங்கள் வாழ்க்கையை பணயம் வைக்கிறார்கள், கடத்திக் கொண்டு விற்பவர்களும் உண்டு, கொழுப்பெடுத்து போகும் பெண்களும் உண்டு,


சிலர் என்னைப் போல அகங்காரம், பிடிவாதம், மோகம், அப்படி என்ன தான் இதில் இருக்கிறது என்று தன் மேலே உள்ள அதீத நம்பிக்கையில் போய் குழியில் விழுபவர்களில் நானும் ஒருத்தி'', என்று சிறு பெருமூச்சுடன் சொல்லிக் கொண்டிருந்தாள்.


அவளின் பேச்சில் இருக்கும் மென்மை குணம் மறந்து ராட்சதக் குரலாக மாறியது,


''நீங்கள் நினைப்பதுப் போல இல்லை, நானே தேடிப் போய் இந்தப் புதைக்குழியில் விழுந்த கேஸ் தான் இந்த மகிழினி'', என்று தன்னையே வெறுத்த குரலில் அவள் சொல்லவும், அவனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.


''எனது'', என்று அதிர்ந்தக் குரலில் கேட்டவனைப் பார்த்தவள் தன்னுடைய கர்வச் சிரிப்புடன் அவனை நோக்கினாள்,


'''ஆமாம் சார், இந்த அழகில் இருக்கும் கர்வம், ஆணவம்,திமிர் எல்லாம் என்னை எங்கே கொண்டு நிறுத்தி இருக்கிறது தெரியுமா'', என்றவள் ''இதிலிருந்து நான் மீண்டாலும், மீண்டும் இழுத்துக் கொள்ளும் பாதாளம் சாரே இந்தத் தொழில்.


சர்வ சாதாரணமாக இதைக் கையாண்டுப் போய்விடலாம் என்று யாரும் நினைத்திட முடியாத ஆழிச் சுழல், சுழன்று கடைசிவரை இந்தப் பயணம் எங்கே கொண்டு போய் நிறுத்தும் தெரியுமா?


எந்தச் சதையை விரும்பி வந்தார்களோ எந்தச் சதையில் மோகம் கொண்டு போனேனோ, அது மக்கி அழுகி நோய் பிடியில் வீழ்ந்து கேட்பாரின்றி மரணிக்கும், ஏதோ என்னைத் தெரிந்த ஒன்று இரண்டு பெயர் எனக்கு கடைசி நிமிடங்களில் உதவுலாம், அதுவும் உதவி செய்து தான் ஆக வேண்டும் என்ற கட்டாயமில்லை, என்று தன்னையே வெறுத்தக் குரலில் பேசுதைக் கண்டவன் மறு வார்த்தை இன்றி மௌனமாக அவளின் உணர்வுகளை சரியாக தன்னால் புரிந்துக் கொள்ள முடியுமா என்ற தயக்கத்துடனே கேட்டுக் கொண்டிருந்தான் வினோதகன்.


அவள் பேசுவது எல்லாம் அனுபவமாக இருந்தாலும் தீ என்றால் சுட்டுவிடும் என்பதை அறிந்தும் விட்டல் பூச்சியாக தீயைச் சுற்றியே பறந்து கருகி இருப்பதைக் கண்டு அவளின் மீது சிறு அனல் துளி உருவாகியது அவன் மனதில்.


அவனின் சிந்தனையோ இவள் இவ்வளவு அழகாவும் இருக்க வேண்டாம், இப்படி சகதியில் விழவும் வேண்டாம் என்று எண்ணம் மனதில் ஊடுருவிச் செல்ல கருமை நிறைந்த இரவு நேரமாக இருந்தாலும் காரின் விளக்கொளி ஒளிர்ந்தாலும் பால் நிலாவின் பட்டொளியில் அங்கே சிறிது தூரம் அவளை விட்டு விலகி நடக்க முயன்றான் வினோதகன்.


அதைக் கண்ட மகிழினி அவனின் சினமும், தன்னை விட்டு அகன்ற சென்ற வேகத்தைக் கண்டவள், சிறு சிரிப்புடன் அவன் பின்னால் தானும் நடை பயின்றாள்.


அதைப் பார்த்தவனோ, திரும்பி அவளை முறைக்க, ''என்ன சாரே தனியாக விட்டுட்டு நீங்கள் போறீங்க, ஒரு வயசுப் பிள்ளையை தனியாக விட்டுப் போனால் அந்தப் பாவம் சும்மா விடாது சாரே உங்களை'', என்று அவனைக் கலாய்த்தப்படி அவனருகில் செல்ல,


அவனோ சற்று அமைதியாகப் ''போய் காரின் அருகில் நில், இல்லை காரினுள்ளே உட்காரு, எனக்கு சிறிது தனிமை வேண்டியதாக இருக்கிறது, நீ சொன்ன விஷயங்களை மனதில் ஜீரணிக்க முடியாமல் தொண்டை குழியில் முள்ளாய் குத்துகிறது, பிளீஸ் போ'', என்று அவனின் கரகரத்தக் குரலைக் கண்டவளுக்குத் தன் கதை தொடக்கத்திலே அவனைக் காயப்படுத்தி விட்டதைக் கண்டு மனம் நொறுங்கிப் போனாள்,


தன் தலையை குனிந்துக் கொண்டே , ''சரி சாரே, நான் கார் கிட்டே போகிறேன், நீங்கள் ரொம்பத் தூரம் போகாதீர்கள், இரவு நேர ஜந்துகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்'', என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று வேகமாகக் காரின் அருகே சென்றாள்.


அவள் செல்லும்போது அவளின் பின்பக்கம் கருநாகம் போல நீண்டு வளர்ந்த சாட்டை முடி சாட்டிலின் துணியின் மென்மையை கொண்டிருக்க அவளின் நேரத்திற்கு இடையில் நடனமாடுவதைக் கண்டு மனம் சிறிது சலனப்பட்டாலும் பாம்பு என்று தெரிந்தும் அவளுக்குப் பாலை வார்த்தப் பலரில் எத்தனை வன்மம் இருக்க வேண்டும் என்று நினைத்தவன் சட்டென்று திரும்பி சிறிது தூரம் விறுவிறுப்பாக நடந்தான் வினோதகன்.


அவனின் வேகத்தை விட அவனின் இதயத் துடிப்பு அதீத வேகமாகத் துடித்தது அவளின் நடத்தையை சர்வ சாதாரணமாகச் சொல்வதைக் கண்டு காண்டனான். அதனால் அவள் மீது கோபக்கனல் வீசவும் பேச்சில் வார்த்தைகளைக் கொட்டி விடுவோம் என்று எண்ணியே தான் தனியாக நடந்தான்.


வீசும் ஊழிக் காற்றில் உடம்பு குளிர்ந்தாலும் மனமோ அனல் கலனாகக் கொதித்துக் கிடந்தது வினோதனுக்கு.


இவள் உலக அழகியாகவே இருக்கட்டும், அதற்காகத் தவறானப் பாதையை எப்படி தேர்ந்தெடுக்கலாம், தெரிந்தும் அவள் அதைச் செய்வதைப் பகிரங்கமாகத் தன்னிடம் பகிர்ந்துக் கொள்வதைக் கண்டவன், ஆரம்பத்திலே இப்படி இருக்கும்போது முழு கதையைக் கேட்டால் அவளைக் கொன்று விடுவோமா என்ற அச்சம் மனதிற்குள் பேயாட்டம் ஆடியது வினோதகனுக்கு.


அவள் யார்? ஏன் அவள் மீது இவ்வளவு கோபம் வருகிறது? அவளின் வாழ்க்கை நிகழ்வுகளை கூறத் தொடங்கும் முன்னே சிறிது சொல்லிய போதே மனம் திக் திக்கென்று மத்தளம் தட்டியது போல ஆனது ஏன்?.. வினோதகனுக்கு.


அவளின் அழகும் பேச்சும் அவளை எங்கே கொண்டுப் போய் நிறுத்திருக்கிறதுக் கண்டு மனம் வெம்பியவன், அவளின் திமிரும் அகம்பாவமே காரணம் என்ற எண்ணம் உள்ளத்தில் அலை மோத கதைத் தொடங்கும் போதே முச்சு முட்டுதடா சாமி தனக்குள்ளே உரையாடிக் கொண்டு நடந்தான்.



காரின் அருகிலே நின்றிருந்தவளோ அவனின் சினத்தைக் கண்டு, மனம் இந்த மாதிரி உரிமையாகக் கோபப்படும் அன்பும் அக்கறையும் எத்தனை காலங்கள் முன்னே தொலைத்து விட்டே தன்னுடைய ஆணவத்திற்கு பெரிய அடியை கொடுத்த பல நிகழ்வுகள் அவளுள் எழும்பியது.


இப்படி தானே தன்னைச் சுற்றி ஒவ்வொருவரும் எவ்வளவு அக்கறையுடனும் உரிமையுடனும் தன்னைக் கொண்டாடித் தீர்த்தனர். ஆனால் அத்தனையும் சீர்யலைத்து விட்டு இப்படி இருப்பதால் நான் என்ன சுகத்தைக் கண்டு விட்டேன், எதுவுமில்லை, இந்த மாய உலகிற்குள் நுழைந்துவிட்டால் மீண்டும் வெளியேற எல்லா வழியும் பூட்டிக் கொண்ட இருட்டறையிலே வாழ்க்கை முடிந்து விடும்.


கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் பண்ணுவது போல தான் இவ்வாழ்க்கை என்று தன்னையே நொந்தபடி நின்றுக் கொண்டிருந்தவள் தூரத்தில் அவன் எங்கோ வெறித்தபடி நிற்பதைக் கண்டு அவனின் சிறிது நேர தோழமையிலே தன் மனம் அவனை நோக்கி முயல் குட்டியாகத் துள்ளிக் குதித்து ஓடுவதைக் கண்டு திகைத்தும் போனாள் மகிழினி.


தூரத்தில் நின்றிருந்தவனோ பாதையறியாத இருளை வெறித்து நோக்கிக் கொண்டு நின்றான். அவன் மனதிற்குள் அப்படி என்ன தான் ஓடுகிறது என்பதை அவனாலே கணிக்க முடியவில்லை. யாரோ ஒருவள், பயணத்தில் சிறிது நேர உடன் வரப் போகிறாள், ஆனாலும் அவளுடன் பேசுவது தனக்குள் இத்தனை உணர்வுகளின் குவியல்களைத் தோற்றுவிக்கும் அவளைப் பற்றிய நினைவு எங்கே கொண்டு நிறுத்தும் என்பதை இனி நடக்கும் காலம் சொல்லுமா?.. இல்லை வேகமாக ஓடும் நட்சத்திரம் சட்டென்று கண்ணை விட்டு மறைவதைப் போல மறைந்து விடுமா? ... என்று எண்ணியவன் திரும்பித் தன் காரின் அருகில் நிற்பவளை உற்று நோக்கினான்.


தன் கரங்களைக் கட்டிக் கொண்டு தான் வரும் பாதையை பரிதவிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் அவளின் முகத்தில் என்ன தான் இருக்கிறது? ... பால் வடியும் மழலை முகத்தில் எதுவுமறியாத முகபாவனை கண்டவனுக்கு, அவள் நடத்தையிலிருக்கும் தவறுகள் அவள் உள்ளத்தில் தேங்கி நிற்கும் கசடுகள் எல்லாம் பொய்யாக மாறி விடாதா? என்று எண்ணினான் வினோதகன்.


ஆனால் வாழ்வில் என்றுமே சேராத இரயில் தண்டவாளம் போல என்றுமே தன் வாழ்க்கை பயணத்தில் அவள் வரப் போவதில்லை, இதோ போகிற வழியில் விட்டுட்டு போகப் போகிறோம், அதன்பின் அவள் யாரோ, தான் யாரோ, என்று சிறு பெருமூச்சுடன் அவளைப் பார்த்தப்படி திரும்பிக் காரை நோக்கி நடந்தான் வினோதகன்.

தொடரும்...
20221015_180243.jpg
 
Top