• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிழலின் யாத்திரை ..6

சசிகலா எத்திராஜ்

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
9
அத்தியாயம்.. 6



"தவத்தில் கிடைக்கும்

பெரும் வரம் நீயென்பேன்..

தேடலில் தொலைவது

அன்பில்லை, தேடலில்

உன்னுள் தொலைந்துப்

போவதே பேரன்பு தெரியுமா..!!!


வாகனத்தில் அருகில் நின்று கொண்டிருந்த மகிழினி நோக்கி வந்தான் வினோதகன்.


தன்னை நோக்கி வருபவனை வைத்தக் கண்ணைச் சிமிட்டாமல் பார்த்தவள், எங்கே கண்ணைச் சிமிட்டினால் காணாமல் போய் விடுவானோ என்ற எண்ணம் அலை மோதியது மகிழினியின் மனதில்.


அவள் அருகில் வந்த வினோதகன், இறுகிய முகத்தோடு'' போகலாமா'', என்ற ஒற்றை சொல்லை உதிர்த்து விட்டு காரின் டிரைவர் சீட்டில் ஏறி அமர்ந்தான்.


அவனின் இறுகிய கருத்த முகத்தில் எதையும் அறிய முடியாமல் தானும் காரில் ஏறி உள்ளே அமர்ந்தாள்.


காரை ஸ்டார்ட் பண்ணியவன், மிதமான வேகத்தில் காரின் சன்னலை திறந்துவிட்டு மெல்லிய காற்றில் தலைகேசம் கலைய, சுவாசிக்கும் மூச்சில் சிறு நறுமணம் கலந்த இரவின் மலரின் சுகந்தத்தை உணர்ந்தபடி வண்டியை ஓட்டினான் வினோதகன்.


இருவருக்குள் ஏதோ ஒன்று இயல்பாகப் பேச தடை விதித்ததுப் போல அமைதியாக பயணம் செல்ல, அவளுக்கோ பேச்சு இல்லாமல் மௌனமாக இருக்க முடியாமல் தன்னுடன் அவன் முகம் கொடுத்துப் பேச வேண்டும் என்று மனம் ஏக்கம் கொள்ளவும் திரும்பித் திரும்பி அவனைப் பார்க்க,


அவனோ அவளின் ஒவ்வொரு அசைவையும் கண்டும் காணாமல் இருந்தான்.


பேசிச் சென்ற சில வார்த்தைகளில் ஓராயிரம் கனவுகள் மனதில் பொங்கிப் பெருக, இந்நொடி பேசாமல் கொல்லும் உந்தன் மௌனம் என்னைக் கொன்றுத் தீர்க்குதே என்று தன் மனம் அலறும் சத்தத்ததை அவன் உணர்வானா என்று அறியாமல் அவனிடம் எப்படி மீண்டும் பேச்சைத் தொடங்குவது என்று யோசனையோடு அமர்ந்திருந்தாள் மகிழினி.


அவன் தன்னை கவனித்தும் கண்டு காணாமல் இருப்பதைக் கண்டு, பொறுக்க முடியாமல் ''என்ன சாரே, நான் சொன்னதும் எதும் உங்களை ஹர்ட் பண்ணிருந்தால் மன்னிச்சு சார், ஆனால் இப்படி பேசாமல் வராதீங்க, என்றவள், சரி நான் பேசுவது தான் உங்களைப் பாதிக்கது, அதனாலே என் கதை வேண்டாம், ஆனால் உங்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது, அதனால் நீங்கள் யார்?.. என்ன பண்ணறீங்க? .. என்று சொல்லுங்கள் என்று மகிழினி கேட்க,


அவனோ திரும்பி அவளை ஓரக் கண்ணால் பார்த்தவன்,'' என் கதை உனக்கு எதுக்கு, போகிற வழியில் இறக்கி விட்டுச் செல்பவனின் கதையை கேட்டு என்ன செய்ய போற'', என்று கடுப்படிக்க,


அவளின் முகம் சுருங்கிப் போனது,


அதைக் கண்டவன் ''ச்சே'' சலித்தப்படி, மீண்டும் காரை ஓரமாக ஒருயிடத்தில் நிறுத்திவிட்டு அவளைப் பார்த்துத் திரும்பி அமர்ந்தான் வினோதகன்.


''இங்கே பாரு, சும்மா எதாவது நை நை வந்தால் அவ்வளவு தான்'', என்று மிரட்டும் தோனியில் பேசவதைக் கண்டவள்,



சட்டென்று ஒரு கண்ணைச் சிமிட்டி, ''நை நை பேசாமல் நெய், நெய் கூவி விற்கட்டுமா சார், அப்படியே ஒரு தனி வருமானம் வருமில்லே'', என்று சொல்லிச் சிரிக்க,


அவனோ முறைக்க முயன்று, முடியாமல் சிரிப்பை தன் மீசைக்குள் ஒளித்து வைத்தவன் உதடுகளின் ஓரத்தில் சுருங்கி விரிந்த புன்னகையை அடக்கி இறுக்கிக் கொள்ள அதைக் கண்ட மகிழினி,


''சரி சரி, விடுங்க சார், விதி வலியது, இந்த மாதிரி நடுராத்திரியில் ஒரு மோகினியின் மொக்கையை எல்லாம் கேட்கணும் உங்கள் தலைவிதியை யாரால் மாற்ற முடியும்'', என்று சொல்லியவளைப் பார்த்துத் தன் கரங்களை உயர்த்தியவன், ''உன்..ன்..ன்..ன் என்ன செய்தால் தகும்'', என்று சொல்லி ''ஹாஹா'', என்று பற்கள் தெரிய சிரித்தான் வினோதகன்.


''ஒண்ணும் செய்ய வேண்டாம் சாரே, கோபம் கொள்ளாமல் உங்கள் வாழ்க்கை வரலாறை கூறுவீங்களாம், நானும் அதைக் கேட்டபடி கொஞ்சம் உறக்கம் கொள்வேனா'' ,என்று கேலியோட சொல்ல,


அதைக் கேட்டு கடுப்பானவன்,'' என் கதை உனக்குத் தாலாட்டு பாடலா'', என்று சொல்லி, ''சொல்ல மாட்டேன் போ'', என்று சிறு பிள்ளை போல முகம் சுணுங்கியவனக் கண்டவளோ,


''ஹாஹா விடுங்க விடுங்க சார்'', என்றவளை ஒரு மாதிரி பார்த்தவன் சட்டென்று, ''விடாமல் உன்னைப் பிடித்தா வைச்சுருக்கேன்'', என்று கேட்டு விட்டான் வினோதகன் .


அவனின் கேள்வியில் திகைத்தவள், எதுவும் பேசாமல் அமைதியாக மாறி தலை குனிந்தவளைப் பார்த்து ஒரு பெரு மூச்சுடன் திரும்பி ரோட்டை வெறித்துப் பார்த்தபடி தன் கதையைக் கூறத் தொடங்கினான் வினோதகன்.


''மகாலட்சுமி பேப்ரீக்ஸ், மகாலட்சுமி ரியல் எஸ்டேட், மகாலட்சுமி டெக்ஸ், மகாலட்சுமி ஸ்டோர் ரூம், இந்தப் பெயர் உள்ள பெரிய பெரிய, மால் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ், டெக்ஸ்டைல்ஸ், துணிகடை தெரியுமா உனக்கு'', என்று, கேட்டவன், அவளின் பதிலை எதிர்ப்பார்க்காமல் அந்த ''மகாலட்சுமி தான் எங்க அம்மா'', என்று அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லாத ஒட்டாத குரலின் தன்மையுடன் சொன்னான் வினோதகன்.


அதைக் கேட்டு அதிர்ந்தவள், அவனின் வாழ்வின் உயரத்தில் பேச்சிழந்து திகைத்துத் திணறிப் படியே அவனைக் காண,


திரும்பி அவளை நோக்கியவனோ, ''என்ன யார் தெரியலேயா'',,என்று மீண்டும் கேட்டான்.


''இல்லை சார், தெரியும் சாரே'', மாறி மாறி பேச்சு தந்தியடிக்க, அதைக் கண்டவன்,


அவளின் திகைத்த முகமும் திணறும் குரலைக் கண்டு, ''ஹேய் ரீலாக்ஸ், எதுக்கு இந்தப் பதட்டம், அது எல்லாம் பரம்பரை பரம்பரையாகச் சேர்த்து வைத்தச் சொத்துக்கு ஒரே வாரிசு, மிஸஸ் மகாலட்சுமி மகாலிங்கம் அவர்கள் உடையது தான்.


சொத்தை மட்டுமல்ல, கூடவே அந்தஸ்து கௌரவம், மரியாதை, தான் என்கிற அகங்காரமும் ஆணவமும் வறட்டுப் பிடிவாதமும் பிடித்துக் கொண்டு கொக்குக்கு ஒன்றே மதி என்பதைப் போல தான் செய்வதுத் தான் சரி என்கிற கேரக்டர் தான் எங்க அம்மா மகாலட்சுமி.


பெயருகேற்ப சாட்சாத் கடவுள் மகாலட்சுமி மாதிரி தான் இவர்களும் , பணத்தால் கொழித்து கோல்டன் ஸ்பூன் சொல்வார்களே, அதுப்போல தங்க தட்டில் சாப்பிட்டு வளர்ந்தவர் தான். அதனால என்னவோ மனிதனை மதிக்கத் தெரியலே போல.... வெற்று காகிதத்திற்கு கொடுக்கும் மரியாதையை உயிர் உணர்வும் உடைய மனுஷனுக்கு தரமாட்டார்கள்.


தான் வளர்க்கும் நாய்க்குக் கூட உயர்தரமானதாக இருக்க வேண்டும் என்று வெளிநாட்டிலிருந்து வரவழைத்து அதற்குத் தனியாக ஒரு அறை, ஏசி அதற்குத் தனியாக சமையலுக்கு ஆளும், அதைக் கவனித்துக் கொள்ள குளிக்க வைக்கனு ஒரு ஆளும் தினமும் வந்துச் செக்கப் பண்ண வரும் டாக்டரும் அவ்வளவு அலப்பறையாக இருக்கும். காலையில் ஒரு முறை, ரீவினிங் ஒரு முறை அதைப் பார்த்து ஒரு ஹாய் சொல்ல தன் அறைக்கு அழைத்து வரச் சொல்ல, அதுவும் நன்றிக்காக ஒரு காலை உயர்த்திக் காட்டும். ஆனால் விலை பேசி வாங்கிய நாயைக் கூடத் தொட மாட்டார்கள், தொட்டால் எதாவது வந்து விடுமா, ஹைஜனிக்கா இருக்கணும் என்று கிளாஸ் எடுப்பார்கள்.


நாய்க்கே இந்த நிலமை என்றால் பெற்ற மகனுக்கு என்னன்ன செய்வார்கள்'', என்று மனம் வெதும்பிய குரலில் உணர்ச்சிகளற்று சொன்னான் வினோதகன்.


''ஆனால் பணம் கொடுத்து எல்லாம் வாங்கி முடியலாம் என்கிற எண்ணம் அதிகம், ஆனால் விலை பேச முடியாத அன்பை வாங்க முடியுமா என்று இன்று வரை அவர்களுக்குச் சொல்ல யாருமில்லை. அப்படியே சொல்ல யாருக்கும் தைரியமுமில்லை, அவர் கட்டிய புருசனுக்கும் அந்த அதிகாரமில்லை, பெற்ற மகனுக்கும் இல்லை'', என்று சொல்லியவனை பரிதாபமாகப் பார்த்தாள் மகிழினி.


அவளின் பார்வை மாற்றத்தைக் கண்ட வினோதகன், ''இப்படி பரிதாபமாகப் பார்க்காதே'', என்று சுள்ளென்று சொல்லியவன், ''ஒரு இல்லாத வீட்டில் கூட தான் பெற்ற மகனை தூக்கிக் கொஞ்சி கூட விளையாடி தன் கரங்களால் சோற்றை ஊட்டி தன் மார்ப்பில் படுக்க வைத்துத் தூங்க வைப்பார்கள் அம்மா.


ஆனால் நானோ பிறந்தவுடனே தனியாகப் படுக்க வைத்து என்னைக் கவனித்துக் கொள்ள நாலு ஆளை வைத்துவர்கள் தான் தி கிரேட் மகாலட்சுமி'', என்று சொல்லியவனை ஆதூரமாகப் பார்த்தவள், அவனின் கரத்தைத் தயங்கித் தயங்கிப் பிடித்து அழுத்தினாள்.


முதல் முறையாக அவனைப் பிடித்தது அவனுள் எதோ மாற்றத்தை உண்டாக்க, '' இது மாதிரி என்னைத் இயல்பாக யாரும் தொட்டுப் பேச மாட்டார்கள் தெரியுமா, சிறு வயதில் கூட, ஏன் அருகிலே வர மாட்டார்கள், யாரும் கூடவும் விளையாட முடியாது, ஏன் என்னைக் கவனிக்கும் கவர்ன்ஸ் கூட என்னைத் தொட்டோ தூக்கியோ வைத்திருக்கக் கூடாது. ஒரு வயது வரை தான் சாப்பாடை அவர்கள் ஊட்டி விடுவார்கள், அதுவும் ஸ்பூனால் மட்டுமே, அதன்பின் எனக்கு விவரம் தெரிந்து ஒரு வாய் சாப்பாடு யாரும் ஊட்டியதாக ஞாபகமில்லை.


அதன்பின் தினம் ஒரு கிளாஸ் மாதிரி தனியாகச் சாப்பிடவும் டேபிள் மேனர்ஸ் கற்றுக் கொள்ளணும் மற்றவர்கள் முன்னிலையில் எப்படி நடந்துக் கொள்ளணும் என்பது மட்டுமே அதிகாரமாகச் சொல்லிச் செல்வார்கள், மிஸஸ் மகாலட்சுமி மகாலிங்கம்.


ஏன்? எங்க அப்பா கூட ஒரு நாள் தூக்கிக் கொஞ்சியது இல்லை, அவர்கள் அப்படியே அம்மாவின் முகத்தைப் படித்து அதன்படி பணம் என்னும் பிஸ்கட் போடும் அம்மாவின் பின்னால் நாயைப் போல நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அவரின் பின்னாலே சுற்றுவே அவரின் காலம் செல்லும்.


ஏனென்றால் அவர் பிறந்தலிருந்து அவ்வளவு பணத்தைக் கண்ணால் கண்டவர் இல்லை, ஆனால் அம்மாவோ பணத்தில் மெத்தையாகப் படுத்தவர், ஜாடிக்கேற்ற மூடியைப் போல இருவருமே,


ஆனால் எப்படி என் அம்மா எங்க அப்பாவைத் தேர்ந்தெடுத்தார்கள் என்ற டவுட் எனக்கு இருந்துக் கொண்டே இருந்தது. அதற்கான விடை இப்போது தான் கிடைத்தது ,அதனால்தான் எல்லாம் வெறுத்துப் போய் காரை எடுத்துக் கொண்டு வீதி வீதியாக, ஊர் ஊராகச் சுற்றிக்கிட்டு இருக்கேன்'', என்று வெதும்பிய குரலில் பேசினான் வினோதகன்.


அவனின் உள்ளத்தின் வலியை வார்த்தையாலே உணர்ந்தவளோ ஆறுதலாகத் தேறுதலான மொழியை எதைக் கூறுவது என்று அறியாமல் கையைத் தட்டித் தடவிக் கொடுத்தாள் மகிழினி.


அவளின் தொடுகை அவனின் வலிக்கு மருந்தாக இருந்தா என்று அவனால் உணர முடியவில்லை, ஆனால் அவன் மனத்திற்குள் ஏதோ ஒன்றை தட்டிச் சென்றதை அவனால் உணர முடிந்தது .


எத்தனையோ வலிகள் ஏக்கங்கள் சோகங்களை உள்ளடக்கிய ஒருவனைக் கண்ட மகிழினிக்கு மிதமிஞ்சிய பணம் எவ்வளவு இருந்தாலும் மனதிற்கு மயிலிறகு வருடலோ இதமான பிரியமான தொடுகையோ, பிஞ்சில் அம்மாவின் அரவணைப்போ,அப்பாவின் அன்பான கண்டுப்போ எதுவுமில்லாமல் அனாதையாக வாழ்வது கொடுமையான ஒன்று தான் என்று தோன்றியது அவளுக்கு.


ஆனால் தன்னை நினைத்து வெறுத்துப் போனாள், எல்லாம் அதீதமாகக் கிடைத்தும் அதை வைத்து வாழத் தெரியாமல் தொலைத்துவிட்டு இப்பத் தொலைத்ததைத் தேடிக் கொண்டிருக்கும் தன் மூடத்தனத்தை எண்ணி வெட்கிப் போனாள் மகிழினி.

தொடரும்
20221015_180243.jpg
 
Top