அத்தியாயம் - 4
கதவு தட்டப்படும் சத்தத்தில் தான்விக்கு பயம் நெஞ்சை கவ்வியது. மெல்ல முன்னோக்கி நகர்ந்து “யாரு?” என கேட்டாள்.
பதில் ஏதும் வராததால் படபடக்கும் நெஞ்சை கட்டுப்படுத்தி கொண்டு கதவை திறந்தாள். வெளியே ஒருத்தன் நின்று இருந்தான் அவன் இன்று பணிக்கு வந்த நபர்களில் ஒருவன் ஆவான்.அவனை தான்விக்கு நன்றாக அடையாளம் தெரிந்திருந்தது.
“என்ன அண்ணா இந்த நேரத்தில் வந்து இருக்கீங்க?”
அவன் பதில் ஏதும் அளிக்காமல் விகாரமாக சிரித்தான் பின்பு தான்வியை வீட்டின் உள்ளே தள்ளி கதவை தாழிட முயன்றான் தான்வி அவனைத் தடுத்திட முயன்றாள்.
ஆனால் அவனின் வலிமையான விசையை தான்வியால் கட்டுப்படுத்த முடியவில்லை. தாழிடுவதை விட்டுவிட்டு அவளை வீட்டின் உள்ளிருந்த இருக்கையில் தள்ளி தவறான நடந்து கொள்ள ஆரம்பித்தான்.
அப்பொழுது திடீரென ஒரு கரம் தான்வியின் மேலே இருந்தவனை பிடித்து கீழே தள்ளியது.
கைகளில் துப்பாக்கியோடு நின்றிருந்த திகல் முகிலன் கீழே விழுந்து கிடந்த அவனைப் பார்த்து குறி வைத்தான் பயத்தில் நடுங்கிப்போனவன் அவனிடம் கெஞ்ச ஆரம்பித்தான் ஆனால் திகழ்முகிலன் அவனை கண்டு கொண்டதாக இல்லை சரியாக அவனது தொடைக்கு சற்று கீழ் இறக்கி முட்டிக்கு மேல் சுட்டு விட்டான் வழியில் அலறி துடித்தான் அவன்.
கீழே விழுந்து கிடந்தவனை முறைத்து பார்த்தபடி “கணேஷ் அண்ணா” என்று கத்தினான் நடந்தவற்றை வாசலில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவனுக்கு கீழ் வேலை செய்யும் அதிகாரி ஒருவர் வேகமாக அவன் முன்பு வந்து நின்றார்
அதிர்ச்சியிலிருந்த தான்வி அப்பொழுது தான் வாசலில் வந்து நின்றிருந்த மற்றொரு அதிகாரியை பார்த்தாள் திகில் முகிலனை பயத்துடன் திரும்பி பார்க்க அவனும் தன் முன் நின்றிருந்த கணேஷ் என்பவரிடம் “அண்ணா இவனை சீக்கிரம் டிஸ்போஸ் பண்ணுங்க காட்டுல ராத்திரி நேரத்துல சந்தேகத்துக்கிடமா சுத்திகிட்டு இருந்தான் என்ன ஏதுனு விசாரிச்ச போது தப்பிச்சு போக டிரை பண்ணியதால சுட்டதா சேர்த்து கேஸ் பைல் பண்ணிடுங்க” என்றான்
“சார்..” என கணேஷ் இழுக்க “சொன்னத செய்ங்க சார்” என்றான் திகழ். அவன் கண்களில் தெரிந்த ரௌத்திரம் அடங்கவே இல்லை முழுதாக ஒரு நிமிடத்திற்கு பிறகு பெருமூச்சு எடுத்து தன்னை நிதானப்படுத்தியவன் தான்வியின் புறம் திரும்பினான்
தான்வி அவனை மிரண்டு பார்க்க “உங்க கூட தங்கறதுக்கு வேற யாரும் வரலையா? தனியா தான் இங்க தங்கி இருக்கீங்களா?” என்று கேட்டான் அவள் தலையை மட்டும் மேலும் கீழும் ஆட்ட “வாயை திறந்து பதில் சொல்லுங்க” என்றான் திகழ்
“ஆமா சார் நான் மட்டும்தான் தங்கி இருக்கேன்”
“காட்டுக்குள்ள ஏரிக்கரை ஓரமா இந்த ராத்திரி நேரத்துல தனியா தங்குற அளவுக்கு துணிச்சல் இருந்த உங்களுக்கு தன்னை ஒருத்தன் பாலீயல் ரீதியா துன்புறுத்த வரும்போது தடுத்து நிறுத்துவதற்கு துணிச்சல் வரலையா? எதாவது ஒரு பொருளை எடுத்து தாக்க வேண்டியது தான?”
“அது..” என அவள் வார்த்தைகள் தந்தி அடிக்க திகழ் பார்த்த பார்வையில் அதுவும் பாதியில் நின்று போனது அடுத்த சில நிமிடங்களுக்கு இருவரும் அமைதியை கடைபிடித்தனர்
சற்று நேரத்தில் கணேசும் உடன் இரண்டு அதிகாரிகள் அவ்விடத்தில் வந்து சேர்ந்தனர்.
தான்வியின் புறம் திரும்பிய திகழ் “சரி கதவை உள்பக்கமா நல்லா லாக் பண்ணிக்கோங்க யாரு கதவை தட்டுனாலும் திறக்க வேண்டாம்” என்றவன் வெளியே செல்ல முனைந்தான்.
அவர்கள் நால்வரும் கிளம்பும் போதும் தெளிவில்லாமல் இருந்தாள் தான்வி. கணேஷ் என்பவர் தான்வியை பார்த்துவிட்டு திகழிடம் கண் சைகை காட்ட அவளை திரும்பி பார்த்தான்.
பின் என்ன நினைத்தானோ “நீங்க போங்க நான் அந்த பொண்ணுக்கு துணையாக இருக்கேன். விடிஞ்சதும் வரேன்” என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தான்
நால்வரில் இருந்த மற்ற இரண்டு அதிகாரிகள் தங்களுக்குள் முணுமுணுத்தபடி சென்றனர் செல்லும் பொழுது தான்வியையும் திகழையும் மாறி மாறி பார்க்க தவறவில்லை.
“இதோ பாருங்க நீங்க தனியா வந்து இங்க வேலை செய்றதெல்லாம் சரி. காட்டுக்குள்ளே இருக்கிறதுனு இவ்வளவு ரிஸ்க் எடுத்து இருக்கீங்க பாராட்டுக்குரியது தான். ஆதே சமையம் அலார்ட்டாவும் இருக்கனும் எல்லா நேரமும் நம்மளை காப்பாத்துறதுக்கும் பாதுகாக்குறதுக்கும் ஒருத்தர் வருவாங்கன்னு எதிர்பார்க்காதீங்க உங்களுக்கு நீங்க தான் பாதுகாப்பும் உதவியும் அதை நினைவுல வச்சுக்கோங்க. அதுக்கப்புறமா இங்க இருக்க வேலையை நீங்க கண்டின்யூ பண்ணுங்க புரிஞ்சதுங்களா?” என நீண்ட பெரும் அறிவுரையை வழங்கிவிட்டு கேள்வியும் கேட்டான்
தலையை ஆட்டியவளின் கண்களில் இருந்து இரண்டு சொட்டு கண்ணீர் கன்னத்தில் இறங்கியது.
“முதலில் அழுகிறது நிறுத்துங்க எரிச்சலா வருது இப்ப என்ன நடந்துச்சுன்னு அழுகுறீங்க அப்படியே ஏதாவது நடந்திருந்தாலும் இதுல உங்க தப்பு எதுவும் இருக்கா?”
அவளது தலை தானாக இடம்வலமாக அசைந்தது.
“அப்புறம் என்ன? போய் தூங்குங்க” என்றவன் ஒரு ஓரமாக சென்று படுத்துக் கொண்டான்.
தான்வி தண்ணீரை எடுத்து பருகியவள் அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள்.
இங்கே வெளியே படுத்திருந்த திகழோ சில மணிநேரங்களுக்கு முன்னே நடந்ததை பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.
அவன் தனக்கென கொடுக்கப்பட்டிருந்த அறையில் படுத்திருக்க கதவு காற்றில் ஆடி ஓசை எழுப்பிக் கொண்டிருப்பதை கவனித்தான்.
எழுந்து சென்று அதனை அடைக்க முற்படும் பொழுது ஏரியின் மேற்கு புறம் இருந்த மலையின் ஒரு பகுதியில் வெளிச்சம் தெரிந்தது.
அறையை விட்டு வெளியே வந்தவன் அங்கிருந்த கணேஷிடம் “அண்ணா இங்க மலையில மலைவாழ் மக்கள் யாரும் இருக்காங்களா?” எனக் கேட்டான்.
“இல்லை சார் அப்படி யாரும் இங்க இல்ல”
“அப்புறம் அந்த வெளிச்சம் எப்படி வந்தது ஒரு வேளை அந்த ஏரிக்கு பக்கத்துல யாரும் நெருப்பு மூட்டுறாங்களா அதனால என் கண்ணுக்கு மலையில வெளிச்சம் இருக்குற மாதிரி தெரியுதோ ஆனாலும் சந்தேகமா இருக்கே” என யோசித்தவன் “அண்ணா ஏரி வரைக்கு ரோந்து போயிட்டு வரலாம் வாங்க” என்றான்.
“சார் இந்த நேரம் அங்க போகணுமா கடைசியா அங்க நடந்த ஒரு கேஸ்?”
“அதனால என்ன? வாங்க போகலாம்” என கூறியவன் கையில் ஒரு தீபந்தமும் டார்ச் லைட்டையும் எடுத்துக் கொண்டு முன்னே சென்றான். கணேஷ் தன்னையே நொந்தபடி அவன் பின்னே சென்றார்.
ஏரியின் அருகே வரும் பொழுது தான்வியின் அலறல் சத்தம் கேட்க வேகமாக சத்தம் வந்த மரவீட்டின் அருகே ஓடிச்சென்றனர்.
அங்கே அவளது நிலையை பார்த்த இருவருக்கும் நெஞ்சம் பதறியது. திகழ்முகிலனுக்கு ஆத்திரமும் சேர்ந்து தோன்ற படபடவென அடுத்தடுத்த நிகழ்வுகளை நடத்தி முடித்துவிட்டான்.
“அந்த வெளிச்சம் இங்க இருந்தும் வரல மலைக்கு மேல இருந்து தான் வருது ஆனா அங்க எப்படி சாத்தியம்?” என யோசித்தவன் மெல்ல கண் அயர்ந்தான்.
தான்வி இரவு முழுவதும் உறக்கம் வராமல் விழித்திருந்தாள். இரண்டு நாட்களும் சரியான தூக்கம் இல்லாத காரணத்தாலும் அதிகப்படியான அழுகையினாலும் அவளது கண்கள் தீப்பிழம்பென சிவந்து போயிருந்தது.
சூரிய வெளிச்சம் அறைக்குள் பிரவேசிக்கவும் மெல்ல கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள்.
அங்கே திகழ் இல்லை எங்கே சென்றான் என தேடி வெளியே வந்தவள் மீண்டும் ஒரு முறை இயற்கையின் அழகில் மூழ்கிபோனாள்.
அப்பொழுது “மேடம்” என்றபடி பின்னே வந்து கொண்டிருந்தான் திகழ்.
“நான் கிளம்புறேன் உங்களை பார்த்துக்கோங்க அப்புறம் நேத்து நடந்ததை யாருக்கிட்டையும் ஷேர் பண்ணிக்க வேண்டாம்”
ம் சரி என்றவள் வீட்டின் உள்ளே செல்ல ஒரு அடி எடுத்து வைத்தாள்.
“ஒரு நிமிஷம்” என்றவன் “இந்த மாதிரி வீட்டுக்குள்ள விலங்குகள் தாக்குதல் பாதுகாப்புக்காக சீக்ரட் ரூம்ஸ் இருக்க வாய்ப்பு இருக்கு எதுக்கும் செக் பண்ணிக்கோங்க” என்றான்
“சரிங்க ரொம்ப தேங்க்ஸ்”
திகழ்முகிலன் விடைபெற்று சென்றுவிட தான்வியின் அன்றைய நாள் முந்தைய நாள் போலவே பயணிக்க தொடங்கியது.
தனது வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தவள் மதிய உணவு இடைவேளையின் போது ஏதேனும் சீக்ரெட் அறை இருக்கிறதா என தனக்கு கொடுக்கப்பட்ட புளூ பிரிண்ட்டில் சோதித்து பார்த்தாள். ஆனால் அப்படி எந்த ஒரு அறையும் இல்லை.
“வாய்ப்பு இருக்குன்னு மட்டும் தான் சொன்னாரு கண்டிப்பா இருக்கும்னு சொல்லவே இல்லையே” என தனக்குள் கூறியவள் அடுத்த வேலையை பார்த்திட ஆரம்பித்தாள்.
அப்பொழுது அங்கே திகழ்முகிலன் வந்தான். தான்வி அவளை பார்த்து லேசாக புன்னகைக்க பதில் புன்னகை செய்யாமல் திரும்பிவிட்டான்.
ஒருவேளை என்னை கவனிக்கலையோ என வாய்விட்டே புலம்பியவள் அவனை பார்வையால் பின் தொடர்ந்து கொண்டே இருந்தாள்.
மீண்டும் ஒருமுறை அவன் கண்ணோடு கண் சந்திக்கும் வாய்ப்பு அமைய இதழ் விரித்து நன்றாக சிரித்தவள் இந்த முறை “ஹாய்” என கை அசைத்தாள்.
அவ்வளவு தான் தாடை இறுக வேகநடையோடு அவள் அருகே வந்தான்.
அவன் நடந்து வந்த தோரணை அவளுள் ஏதோ செய்தது.
“என்னடா இவன் அடிக்க வருவது போல வரான் ஐயையோ பக்கத்துல வந்துட்டானே!” என எண்ணிக் கொண்டிருக்க உஷ்ண பெருமூச்சைவிட்டபடி தான்வியின் முன் நின்றான்.
“இதோ பாருங்க நேத்து ஆபத்தில் இருந்தீங்க காப்பாத்துனேன் அவ்வளவு தான் முடிஞ்சது. அதுக்கு அப்புறமும் பார்க்குற இடமெல்லாம் பல்லை காட்டுனீங்க மரியாதையா இருக்காது சொல்லிட்டேன்” என்று சொன்னவன் திரும்பியும் பாராமல் சென்றுவிட்டான். தான்விக்கு முகம் கறுத்து விட்டது.
“பெரிய மன்மதன்னு நினைப்பு திமிரு பிடிச்சவன். ஏதோ உதவி பண்ணியவன் ஆச்சேனு சிரிச்சா ரொம்ப தான் சீன் போடுறான்” என அவனை திட்டிய தான்வி மறந்தும் அவன் சென்ற திசைபக்கம் திரும்பவே இல்லை.
நேற்று மீன்பிடிக்க வந்தவன் இன்றும் வந்தான். தூண்டிலை போட்டபடி தான்வி இருக்கும் திசையை பார்த்துக் கொண்டிருந்தான்.
பின் எப்பொழுதும் போல் எந்த மீனும் பிடிக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டான்.
திகழ்முகிலன் தான்வி தங்கியிருக்கும் வீட்டிற்கு எதிரே ஒரு டெண்ட் ஒன்றை அமைத்திருந்தான்.
தன் வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு அவன் அங்கே வரும்பொழுது வேலை செய்பவர்கள் சென்றுவிட பூமிகா தான்வியுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
எதேச்சையாக டெண்ட் இருந்த இடத்தின் பக்கம் திரும்பிய பூமிகா திகழை அவ்விடத்தில் கண்டு வியந்தாள்.
“அக்கா அவரும் இங்க தான் தங்கியிருக்காரா?”
“ஆமா பூமி மதியம் டெண்ட் ரெடி பண்ணிட்டு இருக்கிறவங்க கிட்ட கேட்டேன் அப்படி தான் சொன்னாங்க”
ஓ… என்றவள் “அக்கா நான் வேணா இன்னைக்கு உங்களோட தங்கிக்கவா” என கண்கள் பளபளக்க கேட்டாள்.
“இல்லை பூமி வேண்டாம் நீ உன் வீட்டுக்கே போ” என நேற்று நடந்ததை மனதில் வைத்துக் கொண்டு சொன்னாள்.
“இல்ல அக்கா அது” என அவள் திகழை பார்த்தபடி கூற அதனை கவனித்த தான்வி “பூமி!” என அழுத்தமாக அழைத்தாள்.
“கிளம்பு இப்பவே”
சரி என்றவள் இரண்டு மனதாக அங்கிருந்து சென்றாள்.
திகழை முறைத்தபடி உள்ளே சென்றவள் இரவு உணவை முடித்துவிட்டு அறைக்கு சென்றாள்.
மரப்பலகையில் கால் இடறி கீழே விழுந்தாள். விரல் நுனியில் அடிபட்டுவிட கைகளால் அதனை அழுந்த பற்றியபடி நிமிர்ந்தவள் பலகையின் அடியே ஏதோ ஸ்விட்ச் போன்று இருக்கவும் சந்தேகத்துடன் அதனை அழுத்தினாள்.
மரப்பலகை விலகி ஒரு மூடி போன்ற அமைப்பு தென்பட்டது. அதனை திறந்து பார்க்க ஒரு சாவி இருந்தது.
“என்ன சாவி இது?” என்றபடி அதனை கையில் எடுத்தாள். எடுத்த அடுத்த நொடி அங்கிருந்த அலமாரிகள் நகர்ந்து மற்றொரு அறை திறந்தது.
அந்த அறையில் அவளுக்காக ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
தொடரும்..