அத்தியாயம் - 5
அலமாரிகளுக்கு பின்னே இப்படி ஒரு அறையா? என வியந்தபடி உள்ளே சென்றாள் தான்வி. தூசிபடிந்த டேபிள்களும் ஒரு கணினியும் ஆங்காங்கே ஒட்டடைகளும் நிறைந்து காணப்பட்டது. தனது துப்பட்டாவின் நுனியால் மூக்கை மூடியபடி அறையை ஆராய ஆரம்பித்தாள்.
டேபிள்களுக்கு இடையே பை ஒன்று இருந்தது. சந்தேகத்துடனும் ஆர்வத்துடனும் அதனை திறந்து பார்த்தாள். உள்ளே பாலிதீன் கவர்களுக்குள் மிகவும் பாதுகாப்பாக சில பேப்பர்கள் வைக்கப்பட்டு இருந்தது.
அவற்றில் குறிப்பிட்டுள்ளவை பற்றி அவளுக்கு சரியாக புரியவில்லை. ஒவ்வொரு பக்கங்களாக எடுத்து பார்த்தாள் அப்பொழுது உள்ளிருந்து ஒரு செய்திதாள் துண்டு கீழே விழுந்தது. அதில் ஒரு நபர் இதே நாழிகை குறிஞ்சியில் காட்டு மிருகங்கள் தாக்கி உயிர் இழந்ததாக போடப்பட்டிருந்தது.
அது ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய நாளிதழ். விதார்த் என அதில் எழுதப்பட்டிருந்த பெயர் அவள் முன்பு எங்கோ கேள்விப்பட்டது போல் தோன்றியது.
எங்கோ கேட்கப்பட்ட பெயரா அல்லது பார்க்கப்பட்ட பெயரா? என யோசித்தவள் பல நிமிடப் போராட்டத்திற்கு பிறகு நினைவுக்கு கொண்டு வந்தாள்.
முதல் நாள் இங்கே வந்த போது பூமிகா அவளை தங்க வைத்திருந்த கடிகார கூண்டின் அறையில் சுவரின் ஒருபுறம் விதார்த் என்ற பெயர் எழுதப்பட்டிருந்தது.
பின் அடுத்தடுத்த ஆவணங்களையும் எடுத்து வரிசையாக பார்த்துக் கொண்டே வந்தாள். அதில் ஊர் தலைவரின் புகைப்படமும் ஊரில் உள்ள இன்னும் சிலரின் புகைப்படமும் சேர்ந்தே இருந்தது.
அதில் ஒருவனின் புகைப்படத்தை பார்த்தவள் அதிர்ச்சி அடைந்தாள். அந்த புகைப்படத்தில் இருந்தவன் தினமும் ஏரியில் மீன்பிடிக்க வரும் அதே ஆள் தான்.
ஆரம்பத்தில் அனைத்து ஆவணங்களையும் பார்த்துக் கொண்டிருந்தவள் இவை அனைத்தையும் ஊர் தலைவர் அல்லது தனது கம்பெனியிடமும் கொடுக்கலாம் என முடிவு செய்திருந்தாள்.
ஆனால் தற்போது அப்படி செய்தால் சரிதானா என சந்தேகம் அவள் மனதில் பெறும் சிகரமாக எழுந்தது. அடுத்ததாக கணினியை உயிர்பித்து சோதித்து பார்த்தாள். அதில் அவளது கம்பெனிக்கு மெயில் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது.
இதுவரை அவள் பார்த்துக் கொண்டிருந்த ஆவணங்கள் அனைத்தும் ஃசாப்ட் காப்பியாக அனுப்பப்பட்டிருந்தது. இப்பொழுது அவளுக்கு சந்தேகம் வழுப்பெற்றது.
அனைத்தையும் எடுத்து ஒழுங்குபடுத்தியவள் அந்த அறையை பூட்டி சாவியை இருந்த இடத்திலே வைத்துவிட்டு சுவிட்ச் இருந்த இடம் வேறு யாருடைய கண்ணுக்கும் தெரியாதபடி அட்டைப்பெட்டியை வைத்து மறைத்தாள்.
மறுநாள் கடிகார கூண்டுக்கு சென்று வேறு ஏதேனும் ஆதாரம் கிடைக்கிறதா என பார்க்க வேண்டும் என முடிவு செய்தாள்.
இங்கே வெளியே இருந்த திகழ்முகிலன் ஏரியின் மேற்கு புறம் இருந்த மலையில் ஒரு பகுதியில் தெரியும் வெளிச்சத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
கையில் ஒரு தீ பந்தம் துப்பாக்கி டார்ச்லைட் வாக்கி டாக்கி என அனைத்தையும் எடுத்துக் கொண்டு ஏரியின் மேற்கு புறம் நடப்பதற்கு சில அடிகள் எடுத்து வைத்தான்.
சில அடிகள் சென்ற பின் அவனது கால்கள் நடையின் வேகத்தை குறைத்தது. தயக்கத்துடன் அவனது தலை தான்வி தங்கியிருக்கும் வீட்டின் புறம் திரும்பியது.
தன்னை தானே திட்டிக் கொண்டவன் தரையில் கால்களை உதைத்து சே என வாய்விட்டு கத்தியவன் மீண்டும் குடிலுக்கே வந்துவிட்டான்.
நேற்றைய சம்பவம் தான்வியை எந்த அளவிற்கு பாதித்ததோ அதற்கு சற்றும் குறைவு இல்லாமல் திகழனையும் பாதித்தது.
பெரிய பெரிய மூச்சுகளை இழுத்து விட்டான். மாலை நேரம் தான்வி இவன் புறம் திரும்பியதும் முறைப்பிற்கு பின்னே இருந்த அவளது கோபமும் கண் முன் வந்து தொல்லை செய்தது.
“குட்ட கத்திரிக்காய் என்னையே முறைச்சு பார்க்குற இரு உன்னை கவனிச்சுக்கிறேன்” என புலம்பியவன் உறங்க ஆரம்பித்தான்.
உறக்கத்திற்கு சென்றாலும் அவனது மனமும் உடலும் எச்சரிக்கையுடனே இருந்தது.
மறுநாள் திகழ் கண் விழிக்கும் முன்பே அவனை ஒரு கை தொட்டது.
எச்சரிக்கை உணர்வில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எழுப்பிய நபரை நோக்கி நீட்டினான்.
பூமிகா மிரட்சியுடன் அவனைப் பார்த்துக் கொண்டிருக்க தன் துப்பாக்கியை கீழிறக்கினான்.
“என்ன விஷயம் இந்த நேரத்துல வந்திருக்க?”
“சார் அங்க..” என அவள் ஒருபுறம் கையை காட்டினாள்.
அவள் கை காட்டிய திசையில் நடந்தான் திகழ்முகிலன். அங்கே தினமும் மீன்பிடிக்க வருபவன் இறந்து கிடந்தான்.
அவனது முகத்தில் கழுத்தில் நெஞ்சில் என நக கீறல்கள் இருந்தன.
எதுவும் மிருகம் அடிச்சு இருக்குது போல கீறல்கள் பார்த்தா புலியா தான் இருக்கும் என ஊர்மக்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
“அந்த பொண்ணு ஊர்க்குள்ள வந்ததும் தான் இது எல்லாம் நடக்குது இந்த சில வருஷமா எந்த பிரச்சினையும் இல்லமா இருந்துச்சு இப்போ மறுபடியும் முன்னாடி நடந்தது போல நடக்க ஆரம்பிச்சிருச்சு” என்றனர் வேறு சிலர்.
அனைத்தையும் கவனித்த திகழ் ஊர்மக்களை அப்புறப்படுத்தி லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு தெரியப்படுத்தினான்
அப்பொழுது தான் அங்கே வந்த தான்வி இறந்துகிடந்தவனை பார்த்து அதிர்ந்தாள்.
அவனது உடம்பில் இருந்த நக கீறல்களை கவனித்தவள் தனது மொபைலில் அவனை படம்பிடித்தாள் பின் மீண்டும் தான் தங்கியிருந்த வீட்டை நோக்கி ஓடினாள்.
மறக்காமல் வீட்டின் மெயின் டோரை அடைத்து சாத்தியவள் சீக்ரட் அறைக்கு சென்றாள்.
விதார்த் இறப்பு செய்தி இருந்த செய்திதாளை எடுத்துப் பார்த்தாள். அவனது உடம்பில் எங்கெங்கு நக கீறல்கள் இருந்ததோ அதே இடத்தில் இன்று இறந்து கிடந்தவன் உடலிலும் கீறல்கள் இருந்ததை உறுதிபடுத்தினாள்.
இந்த கிராமத்தில் ஏதோ ஒன்று சரியில்லை என்பதை புரிந்து கொண்டவள் போலிஸிடம் சொல்வதற்கு முன் நடந்த சம்பவங்களை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தாள்.
அன்று பணிக்கு யாரும் வரவில்லை. மிருகம் தாக்கப்பட்டு ஒருவர் ஏரி கரையில் இறந்து கிடப்பதை தெரிந்து கொண்ட பின் யாரும் பணிக்கு வரவில்லை.
தான்வி தனது கம்பெனிக்கு தகவல் தெரிவித்தாள். அவர்கள் இரண்டு நாட்களுக்குள் ஒரு தீர்வு சொல்கிறோம் என்று கூறிவிட்டனர்.
இவள் கிராமத்துபுரம் சென்றாள். அங்கே உள்ள அனைவரும் இவளை பார்த்து தூற்ற ஆரம்பித்தனர். நேரடியாக யாரும் இவளிடம் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளவில்லை
இவள் பூமிகாவின் வீட்டின் புறம் செல்ல அங்கே கூட்டமாக இருந்தது. இறந்து கிடந்தவன் கிராம தலைவரின் உதவியாள் என்பதும் பூமிகா அந்த தலைவரின் மகள் என்பதும் அந்த நொடி அவளுக்கு தெரிய வந்தது.
இப்பொழுது பூமிகாவிடம் உதவி கேட்கலாமா? வேண்டாமா? என்ற சந்தேகமும் சேர்ந்து அவளுள் எழ தலையை பிடித்துக் கொண்டாள்.
அப்பொழுது பூமிகா வீட்டின் பின்புறம் இருந்து யாரே அழைப்பது போல் தெரிந்தது.
ஒரு மறைவில் இருந்து பூமிகா தான் அழைத்துக் கொண்டிருந்தாள். தான்வியின் கண்களை சந்தித்த பூமிகாவின் கண்கள் கடிகார கூண்டு திசைக்கு வரச் சொல்லி ஜாடை காட்டியது.
தான்வி அவ்விடம் சென்று காத்திருக்க சில நிமிடங்கள் கழித்து பூமிகா அவ்விடம் வந்து சேர்ந்தாள்.
“என்னாச்சு அக்கா எதுக்காக வீட்டு வரைக்கும் வந்தீங்க?”
“அது” என அவள் தயங்க “சொல்லுங்க அக்கா” என அவள் மேலே சொல்லுமாறு ஊக்கப்படுத்தினாள்.
“எனக்கு அந்த கடிகார கூண்டு அறையோட சாவி வேணும்” என்றாள்.
“அதோட சாவியா? ஆனால் அக்கா அது அப்பாகிட்ட தான் இருக்கும். நானே அன்னைக்கு நைட் அவரு தூங்குனதுக்கு அப்புறம் தெரியமா எடுத்துட்டு வந்தேன். இப்போ எடுக்குறது ரொம்ப கஷ்டம் அக்கா”
“சரி நீ ராத்திரி எல்லாரும் தூங்குனதுக்கு அப்புறம் எடுத்துட்டு இங்க வா நானும் வரேன்” என்றாள் தான்வி.
“ஆனா அக்கா எதுக்காக அதை கேட்குறீங்க?”
“அது வந்து என்னோட பொருள் ஒன்னு உள்ளே மிஸ் பண்ணிட்டேன் அதான்”
“என்ன பொருள்னு சொல்லுங்க அக்கா நான் எடுத்து வைக்குறேன் நீங்க நாளைக்கு வாங்கிப்பீங்க”
“இல்ல அது கொஞ்சம் முக்கியமானதும் பர்சனலும் கூட அதான்” என தயங்கி தயங்கி கூறினாள் தான்வி.
“சரி அக்கா புரியுது நீங்க நைட் வாங்க நான் உங்களுக்காக எடுத்துட்டு வரேன்” என்றாள் பூமிகா.
இரவுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள் தான்வி. இரவு நேரம் நெருங்கவும் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தவள் திகழ் தன்னுடைய குடிலில் உறங்கி கொண்டிருப்பதை கவனித்தாள்.
‘இவன் கண்ணுல படாம என்ன கூட்டிட்டு போயிடு கடவுளே!’ என வேண்டியவள் ‘இவங்கிட்ட ஏன் உண்மைய சொல்ல கூடாது’ என யோசித்தாள்.
பின் ‘இல்ல இல்ல எதுவும் முழுசா தெரியாம சொல்ல வேண்டாம். இந்த அறை கிறுக்கன் அப்புறம் அதுக்கும் நம்மள தான் திட்டுவான்’ என்றவள் முன்னோக்கி நடந்திட ஆரம்பித்தாள்.
‘பரவா இல்ல தான்வி நீயும் தைரியசாலி ஆகிட்ட தனியா நடந்து போற சூப்பர்’ என தன்னையே உற்சாகப்படுத்திக் கொண்டாள்.
இவள் அங்கே செல்லும் முன் பூமிகா அங்கே அவளுக்காக காத்திருந்தாள்.
“இந்தாங்க அக்கா” என்றவள் சாவியை கொடுக்க வேகமாக திறந்து கொண்டு உள்ளே நடந்தாள் தான்வி.
அவள் பின்னே வந்த பூமிகா விளக்கை உயிர்பித்தாள்.
“பூமிகா நீ வெளிய இரு நான் தேடி எடுத்துட்டு வரேன்”
அவளையே குறுகுறுவென பார்த்த பூமிகா “அக்கா உங்க முகமே சரியில்லை, என்ன விஷயம்னு சொல்லுங்க. நீங்க என்னை நம்பலாம்” என்றாள்.
தனக்குள் ஏதோ யோசித்த தான்வி “ஒன்னும் இல்லை பூமி! சரி நீயும் உள்ள வா” என்றவள் முன்னே சென்றாள்.
அவள் முதல் நாள் இரவு உறங்கிய இடத்திற்கு அருகே இருந்த சுவரை ஆராய்ந்தாள் அங்கே ஒரு இடத்தில் விதார்த் லவ் ஆதிரை என எழுதியிருந்தது.
அந்த எழுத்துக்களின் மீது தன் கரங்களை கொண்டு வருடினாள் தான்வி.
விதார்த் அஞ்சு வருஷம் முன்னாடி இறந்து போனவன் இந்த ஆதிரை யாரு என யோசித்தவள் பூமிகாவின் புறம் திரும்பினாள்.
அவளது கண்கள் கலங்கி கண்ணீரானது கன்னத்தை தாண்டி சென்றிருந்தது.
பூமிகாவை உலுக்கிய தான்வி “என்னாச்சு பூமி?” எனக் கேட்டாள்.
சுவரில் எழுதப்பட்டிருந்த எழுத்துகளின் புறம் கை காட்டியவள் “அண்ணன்” என்றாள்
“என்ன சொல்ற அண்ணனா?”
தலையை மேலும் கீழும் அசைத்தவள் “விதார்த் என் கூடப்பிறந்த அண்ணன்” என்றாள்.
என்ன? விதார்த் ஊர் தலைவரோட மகனா? என தனக்குள் ஆச்சரியம் அடைந்தவள் எதுவும் அறியாதது போல் “உன் அண்ணனுக்கு என்னாச்சு? அவர் இப்போ எங்க இருக்காரு?” எனக் கேட்டாள்.
“புலி அடிச்சிருச்சு அஞ்சு வருஷம் முன்னாடி செத்துட்டான்”
“அப்போ ஆதிரை யாரு?”
“அவங்க” என ஏதோ கூற வந்தவள் வெளியே சத்தம் ஏதோ கேட்கவும் விளக்கை அணைத்துவிட்டு கதவின் அருகே சென்றாள்.
“வெளிய வாங்க” என்ற திகழின் குரலில் பூமிகா தான்வியின் முகத்தை பார்க்க தன்னையே நொந்து கொண்டு முன்னே சென்றாள் தான்வி.
இருவரையும் கனல் விழிகளோடு எரித்துக் கொண்டிருந்தான் திகழ்முகிலன்.
தொடரும்..