அத்தியாயம் - 9
ஆதிரை திகழ்முகிலனின் அக்கா. இன்ஜீனியரிங் முடித்துவிட்டு வேலைக்காக மதுரையைவிட்டு சென்னைக்கு வந்துவிட்டாள்.
தம்பியான திகழ் காலேஜ் படித்துக் கொண்டிருந்தான். சென்னையில் பணியாற்றிக் கொண்டிருந்த சமையம் ஒருநாள் வீட்டிற்கு அழைத்திருந்தாள்.
அழைப்பை ஏற்ற தந்தையிடம் “அப்பா எனக்கு புரோமோசன் கிடைச்சுருக்குபா” என்றாள்.
வீட்டில் இருந்த அனைவருக்கும் மிகுந்த சந்தோஷம். அவள் மகிழ்ச்சியாக வீடியோ காலில் கொண்டிருந்தாள். இதை தவிர சிறந்த வாய்ப்பு அமையாது என்பதை புரிந்து அவளது வீட்டாட்கள் “அம்மாடி அப்படியே உன் கல்யாபேசிக் ணம் பத்தியும் யோசிமா” என்றனர்
“இப்போ தான் புரோமோசன் கிடைச்சுருக்கு அதுக்குள்ள கல்யாணம் டாப்பிக்கா அப்பா பிளீஸ் கொஞ்ச நாள் என்னை ஃபிரியா விடுங்களேன்”
“சரிமா சரிமா உனக்கு விருப்பம் இல்லாததையா நான் செய்ய போறேன் உன் இஷ்டம்” என்றவர் எழுந்து சென்றுவிட்டார்
“அப்பா எங்க போறீங்க?” என திரையில் இருந்து கேட்டவளுக்கு அவர் பதில் அளிக்கவே இல்லை. அவரது செயலில் முகம் வாடிபோன ஆதிரையை தேற்றினான் தம்பி திகழ்முகிலன்.
எப்பொழுதும் போல் அவளை வம்பிழுத்து அழுகவைத்து சிரிக்க வைத்து சகஜமாக்கினான். வீடியோ காலை துண்டித்ததும் “அக்காவ ஏன்பா கஷ்டப்படுத்துறீங்க” எனக் கேட்டு தந்தையிடம் சண்டை பிடித்தான் திகழ்.
இப்படியே நாட்கள் நகர நாழிகை குறிஞ்சிக்கு செல்ல வேண்டும் என்ற தகவல் அவளிடம் வந்தது. அதற்கான ஆயத்தங்களை செய்துவிட்டு கிளம்பினாள். பழனிக்கு செல்ல வேண்டும் பின் அங்கிருந்து நாழிகை குறிஞ்சிக்கு பஸ் உண்டு. பழனியில் இருந்து தன்னை ஒரு புகைப்படம் எடுத்து தம்பிக்கு அனுப்பி வைத்தான்.
உடனே அவனிடம் இருந்து அழைப்பு வந்துவிட்டது. “அக்கா உன் பின்னாடி இருக்குல அந்த கடைக்கிட்டையே இரு நானும் அப்பாவும் இப்போ வந்துடுவோம்” என்றவன் இவள் பதில் பேசும் முன் அழைப்பை துண்டித்துக் கொண்டான்.
தந்தையும் தமையனும் பழனிக்கு மதுரையில் இருந்து பாதை யாத்திரை வந்துள்ளனர். இவ்விஷயம் அவளுக்கு முன்பே தெரியும். மலைக்கு செல்லும் போது வழியனுப்பி வைப்பதற்கு கூட செல்ல முடியாமல் போனதில் மிகுந்த வருத்தம் இருந்தது. இப்பொழுது இங்கே அவர்களை சந்திக்க போவதில் அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சி.
சிறிது நேரத்தில் அவள் நின்றிருந்த இடத்திற்கு வந்துவிட்டனர். தந்தையை கண்டதும் ஓடிச் சென்று அணைத்துக் கொண்டாள். முறைத்துப் பார்த்த திகழனையும் அணைத்துக் கொண்டவள் “தரிசனம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சதா அப்பா” எனக் கேட்டாள்.
“ம் நல்லபடியா முடிஞ்சதுமா” என்றார்.
“அக்கா வா நாம மூனு பேரும் சேர்ந்து செல்ஃபி எடுத்துப்போம் வீட்டுக்கு போய் அம்மாகிட்டையும் அந்த குட்டிபிசாசுகிட்டையும் காட்டி வெறுப்பேத்துவேன்” எனறவாறு தன் கைபேசியில் புகைப்படத்தை கிளிக் செய்தான்.
அது தான் அவன் தன் அக்காவை கடைசியாக பார்ப்பது எனத் தெரியாது. இருவரும் ஆதிரையை அவள் செல்ல வேண்டிய பேருந்தில் ஏற்றிவிட்டனர்.
பேருந்து புறப்பட போகும் தருணம் “டேய் முகில் நான் போற இடம் ரிசர்வ் ஃபாரஸ்ட் ஏரியாக்கு ரொம்ப பக்கம்டா” என்று கூறினாள்.
கண்கள் மின்ன அக்காவை பார்த்தவன் “அக்கா எவ்வளவு போட்டாேஸ் உன்னால எடுக்க முடியுமோ அவ்வளவும் எடுத்து எனக்கு அனுப்பு” என்றான்
“முடியாது போடா” என ஆதிரை திகழை வம்பிழுக்க “சரிதான் போ இன்னும் கொஞ்ச வருஷத்துல நான் ஆபிசர் ஆகிருவேன் அப்போ நான் எல்லாத்தையும் லைவ்வா பார்ப்பேன் இல்லப்பா” என தந்தையை துணைக்கு அழைத்தான்.
அவரும் புன்னகையுடன் தலை அசைத்துவிட்டு “ஆதிரைமா கவனமா இருக்கனும் காட்டுவிலங்குகள் அதிகமா நடமாடக் கூடிய இடம் தனியா எங்கையும் போக கூடாது அறிமுகம் இல்லாத ஆட்கள் கூட அதிக பழக்கம் வைக்க கூடாது சொன்னது புரிஞ்சதா” என்றார்.
“சரிபா நான் பார்த்துக்கிறேன்” என்றவள் இருவருக்கும் கை அசைக்க பேருந்து அவர்களை கடந்து சென்றது.
தம்பியிடம் போட்டோ எடுத்து அனுப்ப மாட்டேன் என்று கூறியிருந்தாலும் முடிந்தவரை தன்னால் இயன்ற அளவிற்கு புகைப்படங்களை எடுத்து அனுப்ப முடிவு செய்தாள். அதன்படி தான் அவள் அந்த ராட்சத அணிலை துரத்திக் கொண்டு மேற்கு மலை புறம் சென்றது.
அதன்பிறகு வந்த நாட்களில் அவளுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் வீட்டாருக்கு அழைத்து பேசினாள்.
விதார்த் பூமிகா மகேந்திரன் அனைவரின் புகைப்படங்களை அனுப்பி தனக்குகிடைத்த புது பிரண்ட்ஸ் என்று கூறினாள்.
எந்த ஒரு இடத்திலும் விதார்த்திற்கும் தனக்கும் இடையே உள்ள காதலை பற்றி கூறிடவில்லை. நாட்கள் மெல்ல கடக்க ஒருநாள் செய்திதாளில் விதார்த் இறப்பு செய்தியை படித்துவிட்டு சகோதரிக்கு பாேன் செய்தான்.
அழைப்பை ஏற்றது மகேந்திரன். ஆதிரை வேலை விஷயமாக பிசியாக இருக்கிறாள் என்று கூறி சமாளித்தார். சகோதரி நலனை பற்றி கேட்டறிந்தவன் அழைப்பை துண்டித்துக் கொண்டான். அடுத்து அவன் செய்த அழைப்பு எதற்கும் பதில் அளிக்காதவள் மெசேஜ் மட்டும் அனுப்பி இருந்தாள். அதன்பிறகு இவனும் அவளை தொந்தரவு செய்யவில்லை.
இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பு வீட்டிற்கு அழைத்து வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தாள். மிகவும் சோர்ந்து எடை குறைந்து கைபேசியில் தெரிந்த சகோதரியை சந்தேகத்துடன் பார்த்தான் திகழ்.
வீட்டாருக்கும் சந்தேகம் எழுந்து கேள்வி கேட்க வேலை பழு அதிகமானதால் சரியான தூக்கமும் உறக்கமும் இல்லை என்று கூறி சமாளித்தாள்.
திடீரென இரண்டு நாட்கள் கழித்து ஆதிரை பணி செய்யும் அலுவலகத்தில் இருந்து அவர்களை பழனி மருத்துவமனைக்கு வரச் சொல்லி செய்தி வந்தது.
பயந்தபடி குடும்பம் மொத்தமும் அங்கே செல்ல ஆதிரையின் இறப்பு செய்தி தான் அவர்களை வரவேற்றது.
ஆதிரையின் உடல் மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சிராஜ் கல்லூரி படித்துக் கொண்டிருந்தான் அவனும் விடுமுறை வாங்கி கொண்டு மதுரைக்கு வந்துவிட்டான்.
அனைவரும் ஆதிரையின் மரணத்தில் இருந்த மீண்டு வர மிகவும் பாடுபட்டனர். ஆண்டுகள் கடந்தது. திகழ்முகிலனை ரேஞ்சர் ஆகுவதற்கு வீட்டினர் அனைவரும் மறுப்பு தெரிவித்தனர். காட்டுபகுதிக்கு அனுப்பி மகனையையும் இழக்க தன்னால் இயலாது என அவனது தாய் கதறி அழுதாள்.
பெரும்பாடுபட்டு அனைவரையும் சம்மதிக்க வைத்தான் திகழ்முகிலன். போஸ்டிங் பழனி ரிசர்வ் ஃபாரஸ்ட் என்பது தெரிந்ததும் மீண்டும் வீட்டில் பிரச்சனை ஆரம்பித்தது.
அப்பொழுது தான் சிராஜை மதுரைக்கு வரவழைத்தான் திகழ்முகிலன். சிராஜூம் தந்தையை கையோடு அழைத்து செல்ல முடிவெடுத்து சரி என்றான்.
அந்த பயணத்தின் போது தான் சிராஜூம் தான்வியும் சந்திக்க நேர்ந்தது. சென்னையிலிருந்து அவனுடன் இணைந்து கொண்ட திகழ் அவன் வீட்டில் எப்படி பேசி சம்மதிக்க வைக்க வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்தான். அதன்படி அவன் நடக்க வீட்டாட்களும் ஒப்புக் கொண்டனர்.
ஆதிரை நாழிகை குறிஞ்சி வந்த நாட்களில் இருந்து நிறைய புகைப்படங்கள் எடுத்து இவனுக்கு அனுப்பினாள். அதில் கடிகார கூண்டும் அவள் தங்கியிருந்த மரவீடும் மட்டுமே அதிகம் இடம் பெற்றிருந்தது.
அக்கா புலி அடித்து இறந்துவிட்டதாக முதலில் நம்பி இருந்தவன் நாழிகை குறிஞ்சி வந்த பின் சந்தேகமாக மாறிப்போனது. கிராம மக்களின் நடவடிக்கையும் ஊர் தலைவரான மணிவண்ணனின் பார்வையும் அவனுக்கு தவறாக தோன்றியது.
விளைவாக அவனை சந்தித்து முதல் நாளே லஞ்சம் கொடுத்து விளைக்கு வாங்க முயன்றனர். ஆனால் அவர்கள் செய்யும் சட்ட விரோத செயலைப் பற்றி இவனிடம் எதுவும் கூறிடவில்லை.
ஆனாலும் சந்தேகம் வலுப்பெற ஏரியின் மேற்கு புறம் தெரியும் இரவு நேர வெளிச்சம் அதனை ஊர்ஜிதப்படுத்தியது. அதனை அறிந்து கொள்ள முதல்முறை அவன் முயன்ற பொழுது தான்வியிடம் ஒருவன் தவறாக நடந்து கொண்டது.
தன் அக்கா தங்கியிருந்த வீட்டில் இப்படி ஒரு காரியம் நடக்கவும் கோபம் பெருக்கெடுத்தது. தான்வியை போல தன் அக்காவும் இதுபோல் பிரச்சனையை சந்தித்து இருப்பாளோ பெண்கள் யாருக்கும் பாதுகாப்பு என்பது கிடையாதா என்ற கோபம் எழுந்தது. அந்த கோபமே அவனை துப்பாக்கியால் சுட செய்தது.
பின்னான நாட்களில் அங்கேயே குடில் அமைத்து தங்கிவிட்டான் தான்விக்கு துணையாகவும் இருக்கும் ஏரியின் மேற்கு கரையை கண்காணிக்க நல்ல வாய்ப்பாகவும் இருக்கும் என்பது அவனது எண்ணமாக இருந்தது.
யாருக்கும் தெரியாமல் அடிக்கொரு முறை மேற்கு மலை பகுதிக்கு சென்று ஆதாரங்களை திரட்ட ஆரம்பித்தான். ஆனால் எந்த ஒரு வழுவான ஆதாரமும் கிடைக்காததால் சோர்ந்து போனான்.
திகழ்முகிலன் இதனை பற்றி ஊர்தலைவரிடம் வந்து எதுவும் பேசாமல் இருப்பதால் தங்களது விஷயத்தில் மூக்கை நுழைக்கமாட்டாள் என்ற தைரியத்தில் அமைதியாக தங்களது தினசரி சுரங்க பணியை தொடர்ந்தனர்.
மிகவும் மெத்தனமாக இருந்தார் மணிவண்ணன். தன்னை மீறி மற்றவர்களால் என்ன செய்திட இயலும் என்ற எண்ணம்.
மரவீட்டிற்கான உரிமையாளர் யார் என்பது பற்றியும் விசாரித்தான். இதுவரை யாரோ மூன்றாவது நபருக்கு சொந்தமானது என்று எண்ணிக் கொண்டிருந்தான். ஆனால் ஆதிரை பணிபுரிந்த கம்பெனியின் எம்.டி யே இந்த வீடுகளை சொந்தமாக வாங்கிவிட்டார் என்றும் மூடநம்பிக்கையில் அதிக நம்பிக்கை கொண்ட மணிவண்ணன் ஏதோ ஜோசியர் இந்த வாங்கினால் ஆபத்து என்று கூறியதால் விட்டுவைத்துள்ளார் என்றும் தெரிந்து கொண்டான்.
மேலும் அதனை நன்றாக அலசி ஆராய்ந்த பொழுது தான் அந்த ஜோசியர் ஆதிரை எம்.டியின் ஆள் என்பது தெரிய வந்துள்ளது. தனது இன்வஸ்டிக்கேட் நண்பர்கள் சிலர் மூலம் இதனை தெரிந்து கொண்டான்.
ஆனால் இத்தனையும் எதற்காக செய்தான் என்பது தான் இன்றளவும் அவனுக்கு புரியவில்லை
மறுநாள் காலை தான்விக்கு அவளது கம்பெனியில் இருந்து அழைப்பு வந்தது. அவளது எம்.டி தான் அழைத்திருந்தார்.
அழைப்பை ஏற்பதற்கே தயங்கினாள் தான்வி. ஒரு சாதரண கிராமத்தில் இருக்கும் மரவீட்டிற்கான சீரமைப்பு பணியானது அவளது கம்பெனியை பொருத்தவரை சின்ன புராஜெக்ட் அப்படி இருக்க ஆரம்பத்தில் இருந்து எம்டி எதற்காக நேரடியாக இதில் சம்மந்தப்படுகிறார் என்பது தற்பொழுது தான் அவளுக்கு புரிந்தது.
இரண்டு அழைப்புகள் தவறிய பின் மூன்றாவது அழைப்பை ஏற்றாள் தான்வி
“என்னாச்சு தான்வி ஒரு போன் எடுக்க இவ்வளவு நேரமா உங்களுக்கு?”
“சாரி சார் ரெஸ்ட் ரூம்ல இருந்தேன்”
“ஓகே வேலைக்கு ஆட்கள் ஏற்பாடு பண்ணிட்டேன் எல்லாரும் வடமாநில வேலையாட்கள் உங்களுக்கு மொழி பிரச்சனையா இருக்காதுனு நம்புறேன். ஆல்ரெடி நீங்க நார்த் சைட் தான வொர்க் பண்ணிங்க”
“எஸ் சார் நோ பிராப்ளம்” என்றவளுக்கு இரவு முழுதும் யோசித்த வினாவிற்கு விடையாக சிராஜ் கண் முன் தோன்றி மறைந்தான்.
“சார் ஆட்கள் எல்லாம் எப்போ வருவாங்க”
“ஒரு ஒன் ஆர் டூ டேஸ்ல வந்துடுவாங்க டூ வெல் ஓகே”
“சுயர் சார்”
அவர் அழைப்பை துண்டித்ததும் இவள் வேகமாக சிராஜ் எண்ணிற்கு அழைப்புவிடுத்தாள். அவளுக்கு அவனிடம் உதவி கேட்கவும் தயக்கமாக தான் இருந்தது. முதலில் அவள் முன்பு வேலை செய்த கம்பெனியில் இருப்பவரிடம் தான் உதவி கேட்க நினைத்தாள். ஆனால் அப்படி செய்தால் விசயம் நிச்சயம் மகேஷ்க்கு தெரியவரும். அவன் மீண்டும் தன் வாழ்விற்குள் வருவதை அவள் விரும்பவில்லை.
அழைப்பை ஏற்றதும் இவள் அவனது நலனை பற்றி முதலில் விசாரித்தான். பிறகு தயக்கமாக அவனது தோழனை பற்றி விசாரிக்க ஆரம்பித்தாள்.
துரதிஷ்டவசமாக அவனது பெயரை இவள் மறந்துவிட்டாள். மேலோட்டமாக இவள் விசஷயத்தை கூறினாள். அவள் சொல்வது எதுவும் சிராஜிற்கு புரியவில்லை. அவன் புரிந்து கொண்டதெல்லாம் ஒரு நம்பிக்கையான ஆளின் உதவி என்பது மட்டுமே.
அவள் பேசி முடித்ததும் அழைப்பை துண்டித்தவன் திகழ்முகிலனின் எண்ணை அவளுக்கு அனுப்பி வைத்தான்.
இவளும் அந்த எண்ணுக்கு அழைப்பைவிடுத்து பதிலுக்காக காத்திருந்தாள்.
தொடரும்