• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நீயின்றி என்னாவேன் ஆருயிரே 16

Aashmi S

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
156
100
43
Kanyakumari
ஆதி அவர்கள் அனைவரையும் அழைத்து சென்ற இடம் அவனுடைய தோட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய வீட்டிற்கு அங்கு அவன் ரித்விகாவின் அத்தை மகன் அவனுடைய தம்பி மற்றும் இந்துவின் அப்பாவை அடைத்து வைத்திருந்தான். அவர்களைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அவர்களுடன் ஆதி மற்றும் அஜயின் பள்ளி நண்பனான முகிலன் தற்போது காவல் அதிகாரியாக பணி புரிபவன் உடன் இருந்தான்.


ஆதி முதலில் முகிலனை அனைவருக்கும் அறிமுகப்படுத்தினான் "இவன் என்னோட ஸ்கூல் பிரண்ட் பெயர் முகிலன் ஐபிஎஸ் ஆபீஸரா பண்ணிக்கிட்டு இருக்கான்" என்று கூறினான். ஆதி கூறியதைக் கேட்ட ராகவன் மற்றும் ஆனந்த் முகிலனை பார்த்து சினேகமாக புன்னகைத்தனர். ஆனால் அஜய் மட்டும் முறுக்கி கொண்டு இருந்தான்.


அதைப் பார்த்து புன்னகைத்த முகிலன் அஜயின் முதுகில் ஒன்று வைத்து விட்டு "சாரி மச்சி என்னால உன்கிட்ட சொல்ல முடியல உன்கிட்ட சொல்லக் கூடாதுன்னு ஆதி சொல்லிட்டான். அதனால தான் சொல்லல அதுக்காக ரொம்ப முறுக்கிக்கிட்டு நிக்காத ஏற்கனவே உன்னோட மூஞ்சி பார்க்க சகிக்காது. இதுல நீ இப்படி இருந்தா உன்னை பார்க்கிற ஒன்னு ரெண்டு பொண்ணு கூட பார்க்காது" என்று சிரிக்காமல் கூறினான்.


அதில் இன்னும் கடுப்பான அஜய் "போதும்டா என்ன அசிங்க படுத்தியது வாங்க போய் மற்ற வேலைகளை பார்ப்போம்" என்று கூறினான்.


ஆதி முதலில் இந்துவின் தந்தையை பார்த்து "உங்களை எதற்காக இங்கே கூட்டிக் கொண்டு வந்திருக்கிறோம் என்று உங்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை இருந்தாலும் கூறுகிறேன். இதற்குமேல் உங்கள் மகளால் ஏதேனும் பிரச்சனைகள் வந்தால் அதனுடைய பின் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும்" என்று எச்சரித்தான்.


இந்துவின் தந்தை ஏற்கனவே தன்னை கடத்தி வந்ததில் ஆதியை குறைவாக மதிப்பிட்டு விட்டோம் என்று புரிந்து கொண்டவர். அவனுடன் ஒரு போலீஸ் அதிகாரி மட்டுமல்லாமல் நண்பர்களும் துணை இருப்பதால் கொஞ்சம் அமைதியாகத்தான் அனைத்தையும் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார். அதனால் ஆதியிடம் "நான் பார்த்துக்கொள்கிறேன் அவளால் இனி உங்களுக்கு பிரச்சனை இருக்காது ஆகையால் தயவுசெய்து என்னை விட்டுவிடு" என்று கூறினார்.


முகிலன் "நீங்க சொல்றதுக்காக நம்பி விடுவதற்கு நாங்கள் ஒன்றும் முட்டாள் இல்லை உங்களை இங்கிருந்து செல்ல அனுமதி அளித்தாலும் உங்களை கண்காணிக்க ஆள்கள் உங்களை சுற்றி எப்போதும் இருப்பார்கள். அதனால் எது செய்வதாக இருந்தாலும் கொஞ்சம் நிதானமாக யோசித்து செய்யுங்கள். இதற்குமேல் இந்த பிரச்சனையில் நீங்கள் மாட்டினால் அதன் பிறகு உங்கள் உயிருக்கு உத்தரவாதமில்லை" என்று தன் போலீஸ் அழுத்தத்தில் கூறினான்.


அதைக்கேட்ட இந்துவின் தந்தை உள்ளுக்குள் கருவி கொண்டாலும் வெளியே அமைதியாக "கண்டிப்பாக எங்களால் பிரச்சனை வராது" என்று கூறினார்.


ஆதி "நீங்கள் சொன்னவுடன் விடுவதற்கு நாங்கள் ஒன்றும் ஞானிகள் அல்ல அதனால் இன்னும் இரண்டு நாட்கள் இங்கேயே இருந்து விட்டு அதன் பிறகு நீங்கள் செல்லலாம்" என்று கூறியவன் மற்ற இருவரையும் பார்த்தான்.


ரித்விகாவின் அத்தை மகன்களான சதீஷ் மற்றும் கதிர் இருவரையும் பார்த்த ஆதி கதிரின் அருகில் சென்று அவன் கணத்திலேயே ஒன்று வைத்தான். அதன் பிறகு "ஏண்டா நாயே உனக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாதா இனி நீ என்னைக்குமே இந்த வீட்டை விட்டு வெளியே போக முடியாது வெளியில் இருந்தால் தானே உன்னுடைய மூளை தேவை இல்லாததை யோசித்து என் குடும்பத்திற்கு எதிராக ஏதாவது செய்ய நினைக்கும். இதற்குமேல் என்னுடைய மனைவியை ஏதாவது செய்யத் துணிந்தால் அன்றே உனக்கு கடைசி நாளாக இருக்கும்" என்று இன்னும் நான்கு அடிகள் கொடுத்தான்.


இதனால் ஆத்திரமடைந்த கதிர் "ஏண்டா நீ சொன்ன உடனே நான் கேட்டுட்டு அமைதியா போய்விட வேண்டும். அதுதானே எப்படி அழகா இருக்குற மாமன் பொண்ணையும் நீ கல்யாணம் பண்ணிக்குவியாம் அதுமட்டுமில்லாம மொத்த சொத்தையும் அவளோட புருஷன் பேருக்கு எழுதி வைப்பார்களாம். அப்ப நாங்க என்ன தெருவுல போறாங்களா எங்கிருந்தாலும் வாழ்க வாழ்த்தி விட்டு சந்தோஷமா போய்விட வேண்டுமோ" என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூறினான்.


அவன் கூறியதை கேட்டு ராகவன் ஆனந்த் மற்றும் அஜய் மிகவும் கோபம் அடைந்தனர். ஆனால் கதிர் தம்பி சதீஷ் அதிர்ச்சி அடைந்தான். ஏனென்றால் சதீஷ் மோசமானவன் கிடையாது அவன் தன்னுடைய அண்ணனின் காதலுக்கு உதவி செய்வதாக நினைத்து இவ்வளவும் செய்தான். ஆனால் தன்னுடைய அண்ணனின் பேச்சைக் கேட்டவன் தான் தவறு செய்துவிட்டதை எண்ணி குற்ற உணர்ச்சியில் தலை கவிழ்ந்தான்.


சதீஷின் குற்ற உணர்ச்சியை உணர்ந்த ஆதி அவனருகில் சென்று "நான் முதலிலேயே உன்னிடம் கூறினேன். உன்னுடைய அண்ணனை பற்றி ஆனால் உன்னுடைய பாசத்தால் நீ அதை நம்ப மறுத்தாய். இப்போது உன் அண்ணனுடைய உண்மையான சுயரூபத்தை பார்த்து விட்டாய் இனிமேல் என்ன செய்யப் போகிறாய்" என்று கேட்டான்.


ஆதி கூறியதைக் கேட்ட சதீஷ் தன் கைகளை குவித்து தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள் இதற்கு மேல் என்னால் உங்கள் யாருக்கும் எந்தவித தொந்தரவும் கிடையாது என்று கண்களில் கண்ணீருடன் மன்னிப்பு வேண்டினான்.


அவனது கண்ணீரை பார்த்த ராகவன் ஆதியை பார்த்து "ஆதி சதீஷ் பேசாமல் நம்முடனே இருக்கட்டும் ஏனென்றால் அவருடைய நல்ல பண்புகளை இவர்கள் மோசமாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது" என்று கூறினான். அவன் கூறியதை முகிலும் ஆமோதித்தான்.


ஆதி சதீஷை பார்த்து "இனி நீ எங்க கூடவே வந்துரு உனக்கு படிக்கிறதுக்கு தேவையான எல்லாத்தையும் நாங்களே பார்த்து செய்கிறோம். என்ன உன்னோட அண்ணனா நினச்சுக்கோ எதைப் பத்தியும் கவலைப் படாதே அதே மாதிரி நீ தெரியாமல் செஞ்ச தப்பு என்னனு உனக்கு புரிஞ்சி இருக்கும்னு நினைக்கிறேன். சோ அத நெனச்சு வருத்தப்படாதே உன்னோட நல்ல மனசை யாருக்காகவும் மாற்றிக் கொள்ளாதே ஆனா கொஞ்சம் யோசிச்சு முடிவெடு" என்று கூறினான்.


சதீஷ் மனதில் 'இவ்வளவு நல்லவர்களுக்கு நாம் எவ்வளவு பெரிய பிரச்சனை செய்துள்ளோம் இனிமேல் இவர்களுக்கு துணையாக இருக்க வேண்டும்' என்று எண்ணிக் கொண்டு அமைதியாக தலையசைத்தான்.


இதை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த கதிர் கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தான். ஆனால் அவனை யாரும் மதிக்காமல் மற்ற இருவரையும் முகிலன் பொறுப்பில் அங்கேயே விட்டுவிட்டு சதீஷ் மட்டும் அழைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்.


வரும் வழியில் ஆனந்த் சதீஷை பார்த்து "உனக்கு உன்னோட வயசுல ஒரு பிரண்டு இருக்கான் நீ அவன்கிட்ட என்ன வேணும்னாலும் ஷேர் பண்ணலாம் ஆனா என்ன அது கொஞ்சம் அறுந்த வால் இல்லாத குரங்கு சோ கொஞ்சம் ஜாக்கிரதையாக இரு" என்று லக்ஷ்மணனை பற்றி பெருமையாக கூறிக் கொண்டிருந்தான்.


அவர்கள் அனைவரும் சதீஷ் இடம் நார்மலாக பேசினாலும் அவனால் அவ்வளவு சீக்கிரம் அவன் செய்ததை மன்னிக்க முடியவில்லை அதனால் அமைதியாகவே தலையசைத்து கேட்டுக் கொண்டு இருந்தான்.


இவர்கள் அனைவரும் வீடு வந்து சேர்ந்த நேரம் லட்சுமணன் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு ஹாலில் அமர்ந்து இருந்தான். அதை பார்த்தவர்கள் இன்று என்ன பிரச்சனை என்ற ரீதியில் அவன் அருகில் வந்தனர்.


இவர்கள் அனைவரையும் பார்த்தவன் வேகமாக இவர்கள் அருகில் வந்து "தயவுசெஞ்சு என்னை எல்லாரும் காப்பாத்து என்னோட பேபி இன்னைக்கு ஒரு விபரீத முடிவு எடுத்து இருக்கா ப்ளீஸ் எல்லாரும் என்னை காப்பாத்து" என்று கூறினான்.


ராகவன் "அப்படி என்ன அந்த குட்டிச்சாத்தான் முடிவெடுத்து இருக்கு நீ பயந்து சாகிற அளவுக்கு" என்று கேட்டான்.


இவர்களின் பேச்சில் இடைபுகுந்து அஜய் "மச்சி வீட்டிலிருந்து போன் வந்துகிட்டே இருக்கு அதனால நான் கிளம்புறேன் நாளைக்கு பாக்கலாம்" என்று அவசர அவசரமாக வெளியேறினான்.


லக்ஷ்மணனின் புலம்பலை கேட்ட ஆதி "அப்படி என்ன தாண்டா என்னோட பொண்டாட்டி பண்ண போறா நீயும் பயந்து சாகிற அங்க ஒருத்தன் ஓடியே போயிட்டான்" என்று கேட்டான்.


அப்போது சரியாக கிச்சனிலிருந்து சாப்பாட்டு பாத்திரத்தோடு வெளியே வந்த ரித்விகா அனைவரையும் பார்த்து "வாங்க வாங்க உங்க எல்லாருக்காகவும் தான் நான் ரொம்ப நேரமாக காத்துக் கொண்டிருக்கிறேன் நான் இன்னைக்கி முதல் முதலாக ஆசையாக சமைத்து இருக்கிறேன் அதனால் அனைவரும் வந்து சாப்பிட்டுவிட்டு எப்படி இருக்கிறது என்று கூறவேண்டும்" என்று கூறினாள்.


அவள் கூறியதை கேட்டவுடன் தான் எதற்காக லக்ஷ்மணன் இப்படி புலம்பினான் என்று அனைவருக்கும் புரிந்தது. ஆனால் ஒன்றும் செய்ய இயலாமல் அமைதியாக சாப்பிட அமர்ந்தனர். அப்போதுதான் சதீஷை பார்த்த லட்சுமணன் "வா வந்த முதல் நாளே உன்னை வீட்டை விட்டு அனுப்ப என்னுடைய பேபி சமைக்க ஆரம்பிச்சுட்டா இன்றிலிருந்து நீயும் இந்த கொடுமைக்கு எல்லாம் பழகி தான் ஆகணும்" என்று அவனையும் அழைத்துச் சென்றான்.


சதீஷ் லக்ஷ்மணனின் இந்த துடுக்குத்தனமான பேச்சு இல் ஈர்க்கப்பட்டு அவனுடன் நல்ல தோழமை உணர்வு வர எதுவும் பேசாமல் சென்றான். ரித்விகா அன்னம் பாட்டி உதவியுடன் சமைத்தால் அனைத்தும் சாப்பிடும் படியாக இருந்தது. அனைவரும் சாப்பிட்டுவிட்டு அவளை மனதார பாராட்டினார்கள்.


அதற்கு அவள் "என்னை மட்டும் பாராட்ட வேண்டாம் நான் இதுல ஏதோ கொஞ்சம் தான் செய்தேன் மற்றதை செய்தது சரண்யா அண்ணியும் அன்னம் பாட்டியும் தான்" என்று கூறினாள்.


இதைக்கேட்ட லட்சுமணன்" அதுதானே பார்த்தேன் எங்கே பேபிக்கு சமைக்க வந்துவிட்டதோ என்று ஒரு நிமிடம் மகிழ்ச்சி அடைந்து விட்டேன். உனக்காவது இந்த ஜென்மத்தில் சமைக்க வருவதாவது உன்னை கட்டிய பாவத்திற்கு என்னுடைய அண்ணன் தான் சமையல் கற்றுக் கொள்ள வேண்டும்" என்று நாடக பாணியில் கூறினான்.


அதைக்கேட்டு கடுப்பான ரித்விகா "ரொம்ப சந்தோஷ பட்டுகாதே நீயும் அந்த கொடுமையை அனுபவித்து தான் ஆகவேண்டும்" என்று கூறிவிட்டு அவளும் சாப்பிட்டு கிளம்பிவிட்டாள்.


சதீஷ் மனதில் "தன்னை யாரென்று கேள்வி கேட்காமல் தன்னுடன் சகஜமாக இருக்கும் அனைவரையும் பார்த்து இவர்களுக்கா நாம் தீங்கு செய்ய நினைத்தோம்" என்று வருந்தினான்.


தூங்குவதற்கு ரெடியான ரித்விகாவை பார்த்தா ஆதி "ரித்து இந்த வாரம் சண்டே உன் அண்ணா ஆனந்துக்கு பொண்ணு பார்க்க போக வேண்டும். அவனுடைய வீட்டில் அனைவரும் பார்த்து விட்டார்கள். நாமும் ஒரு தடவை சென்று பார்த்து வந்தால் அவர்களுக்கு நிம்மதியாக இருக்கும் அதனால் ஞாயிற்றுக்கிழமை அங்கே செல்ல வேண்டும்" என்று கூறினான்.


அதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்த ரித்விகா "சூப்பர் அப்ப சீக்கிரம் நம்ம வீட்ல ரெண்டு கல்யாணம் நடக்க போகுதுன்னு சொல்லு ஜாலி கண்டிப்பா சண்டே போயிட்டு வந்துடலாம்" என்று துள்ளிக் குதித்துக் கொண்டே தன் நண்பர்களிடம் இந்த செய்தியை கூற விரைந்து சென்றாள்.


லக்ஷ்மணனை பார்த்த ராகவன் சதீஷ் பற்றிய அனைத்து விவரங்களையும் கூறிவிட்டு "நீதான் இனிமே அவனுக்கு நல்ல பிரண்டா இருக்க வேண்டும் அவனுடைய குற்ற உணர்ச்சியை அவனிடமிருந்து போக்கிவிடு உன்னுடனே தங்க வைத்துக் கொள்" என்று கூறினான்.


லட்சுமணன் "அட நீ வேற இனி என்னோட ஃப்ரெண்ட் கூட்டத்தில இவனும் ஒருத்தன் அதனால நீ யாரும் கவலை படாதே நாங்கள் சிறப்பாக கவனித்துக் கொள்கிறோம்" என்று கூறினான்.


ஆதி "உங்க கூட்டத்தோட வாலு தனத்துக்கு இவன் செட்டாக மாட்டான் அதனால கொஞ்சம் பத்திரமா பாத்துக்கோ உன்னோட வேலை எல்லாம் இவன்கிட்ட காட்டி பயமுறுத்தி விடாதே" என்று கூறினான்.


லட்சுமணன் ஏதோ பேச வாய் திறந்த நேரம் மகிழ்ச்சியாக வந்த ரித்விகா சதீஷ் மற்றும் லக்ஷ்மணன் இடையில் அமர்ந்து தன்னுடைய அலைபேசியில் அனைவருக்கும் சதீஷை காண்பித்து "இவன்தான் நம்மளோட புது பிரிண்ட் பெயர் சதீஷ் மத்த எல்லாத்தையும் நீங்க உங்க ஆதி அண்ணா கிட்டயே கேட்டுக்கோங்க இப்ப எல்லாரும் வெல்கம் சொல்லுங்க" என்று சொன்னாள்.


அவள் சொல்லி முடித்தவுடன் மொத்தமாக வெல்கம் என்ற சத்தம் அந்த தொலைபேசியில் எதிரொலித்தது அதைக்கேட்டு ஒரு நிமிடம் அதிர்ந்த சதீஷ் பின்பு மகிழ்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தான். விட்டாள் இன்றோடு அவனை ஒரு வழி செய்து விடுவார்கள் என்பதை அறிந்த ஆதி ரித்விகா கையிலிருந்த போனை பிடுங்கி அனைவரையும் பார்த்து டைம் ஆச்சு போய் தூங்கு என்று காலை கட் செய்தான்.


பின்பு அங்கிருந்த அனைவரையும் பார்த்து வாங்க கிளம்பலாம் அவங்கவங்க அவங்க ரூம்ல போய் தூங்கு டைமாச்சு நாளைக்கு வேலை இருக்கு உங்களுக்கும் காலேஜ் போகனும் இல்ல என்று கூறியவன் சரண்யாவை பார்த்து "நாளைக்கு உனக்கு காலேஜ் ஸ்டார்ட் ஆகுது ஞாபகம் இருக்கா இவங்க கூட நீயும் அரட்டை அடிச்சிட்டு இருக்க போ போய் தூங்கு" என்று அனைவரையும் உறங்க அனுப்பி வைத்தான்.


லக்ஷ்மணன் அறைக்கு சென்ற சதீஷ் அவனிடம் தன் இரு கைகளையும் கூப்பி "தயவு செஞ்சு என்ன மன்னிச்சிடு என்னால தானே இவ்வளவு பிரச்சனையும்" என்று கூறி மன்னிப்பு வேண்டினான். அவனது கையை பற்றி இழக்கிய லட்சுமணன் "நீ எதுக்காகவும் குற்ற உணர்ச்சியுடன் இருக்காத உனக்கு புதுசா நிறைய உறவுகள் கிடைத்திருக்கிறது அதனுடன் மகிழ்ச்சியாக இரு. எங்க கூட சந்தோசமா இரு இப்போ எதை பற்றியும் யோசிக்காமல் நிம்மதியாக தூங்கு நானும் என் ஆளு கூட கனவுல டூயட் பாட போறேன்" என்று கூறி அவனையும் தூங்கச் சொல்லிவிட்டு தானும் தூங்கிவிட்டான்.


சதீஷும் தன்னை ஒருநிலைப்படுத்தி கொண்டு உறங்க ஆரம்பித்தான். மறுநாள் காலை யாருக்கும் காத்திராமல் விடிந்தது. காலை உணவு முடிந்தவுடன் கல்லூரிக்கு கிளம்பிய லக்ஷ்மணனை பார்த்த ஆதி "லட்சுமணா நீ உன்னோட பேபியை தினமும் கல்லூரிக்கு அழைத்துச் சென்று வா. வேறு யாராவது உங்கள் கல்லூரிக்கு வந்தால் நாங்கள் தான் மண்டையை பிடித்துக் கொள்ள வேண்டியதாக உள்ளது. அதனால் தினமும் இருவரும் ஒன்றாக சென்று விரைவாக வீடு வந்து விடுங்கள் அதில் ஏதாவது தில்லுமுல்லு பண்ணினால் இருவரையும் வேறு வேறு கல்லூரியில் சேர்த்து விடுவேன்" என்று கூறினான்.


அவன் கூறியதைக் கேட்ட இருவரும் நல்ல பிள்ளை போல் தலையை ஆட்டிக் கொண்டு கிளம்பி சென்றனர். அவர்கள் சென்றதை பார்த்த ராகவன் "இதுங்க திருந்துங்க அப்படின்னு நீ நினைக்கிறாயா அதெல்லாம் நடக்குறதுக்கு வாய்ப்பு சுத்தமா கிடையாது. நீ சொன்னதுக்கு வேணும்னா ஒரு வாரம் ஒழுங்கா வருங்க அதுக்குப்பிறகு அதோட வேலைய ஆரம்பிச்சுடும்" என்று ஆதி இடம் கூறினான்.


அதே மாதிரி சதீஷ் மற்றும் சரண்யாவை பார்த்த ஆதி "நீங்க இருவரும் ஒரே காலேஜில்தான் படிக்கப் போகிறீர்கள் அதனால் நீங்களும் ஒன்றாக சென்று வாருங்கள்" என்று கூறியவன். சதீஷ் இடம் மட்டும் தனியாக சரண்யாவை உன் அக்கா ஸ்தானத்தில் வைத்து பார்க்கிறாய் என்பது எங்களுக்கு தெரியும் அவளுடைய பாதுகாப்பையும் நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று கூறினான்.


அவன் கூறியதை கேட்ட இருவரும் சரி என்று தலையசைத்தனர். அப்போது ராகவன் "இன்று ஒரு நாள் மட்டும் நான் உங்கள் இருவருடன் வருகிறேன் ஏனென்றால் இன்று சதீசை கல்லூரியில் சேர்க்க வேண்டும்" என்று கூறி அவர்களுடன் கிளம்பி சென்றான்.


ஆதி மற்றும் ஆனந்த் தங்களுடைய வேலைகளைப் பார்க்க கிளம்பினார். இங்கே கல்லூரிக்கு வந்த லட்சுமணன் மற்றும் ரித்விகா முன் வந்து நின்றாள் ஊர்மிளா. அவளைப் பார்த்த இருவரும் ஒன்றும் புரியாமல் முழித்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தனர்.

சதீஷ் மற்றும் சரண்யாவை அழைத்து சென்ற லட்சுமணன் அங்கே முதலில் சரண்யாவை அவளுடைய வகுப்பில் விட்டுவிட்டு சதீஷை அழைத்துக்கொண்டு பிரின்சிபால் ரூம் சென்றான். அப்போது சதீஷ் ராகவனைப் பார்த்து "மாமா என்னோட சர்டிபிகேட் எதுவுமே இங்கு இல்லையே அப்புறம் எப்படி நான் இங்கே மூன்றாம் வருடம் சேரமுடியும்" என்று கேட்டான்.


ராகவன் "உன்னோட சர்டிபிகேட் எல்லாத்தையும் நேத்தே ஆதி வாங்கிட்டு வந்துட்டான். அதனால எந்த பிரச்சினையும் இல்லை ஆனா கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோ. எப்பவுமே நாம நினைக்கிற மாதிரி நல்லதே நடக்கும்னு சொல்ல முடியாது நம்மளை எதுவும் செய்ய முடியல நா நம்மளோட வீட்டு பொண்ணுங்கள தான்அவனுங்க டார்கெட் பண்ணுவானுங்க அதனால உன்னை நம்பி தான் சரண்யாவை விட்டுட்டு போறேன் அதனால கொஞ்சம் பார்த்துக்கோ" என்று கூறினான்.


சதீஷ் "கண்டிப்பா நீங்க என் மேல வச்ச நம்பிக்கையை காப்பாத்துவேன் என்னோட அக்காவா நான் பத்திரமா பார்த்து வீட்டுக்கு கூட்டிட்டு வரேன்" என்று நம்பிக்கை அளித்தான்.


அதன்பிறகு ராகவனும் தன்னுடைய வேலையை பார்க்க கிளம்பி சென்று விட்டான்.
 
  • Like
Reactions: Maheswari