• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நேசத் தூறல்கள் 14

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
683
512
93
Chennai
அத்தியாயம் 14

நான்கு மாதம் முடிந்து பலநாள் ஆன போதும் அனைவரும் சொல்லியும் ஹேமா ஊர் பக்கம் வரவில்லை.

ஏன்! ரேகா ஒருமுறை சிவா முன்பே ஹேமாவை நினைத்து கவலையில் புலம்ப, மனம் கேளாமல் அவனே அழைத்தான். ஆனால் அவள் எடுக்கவில்லை. இது முன்பு அவன் ஆடிய கண்ணாமூச்சி ஆட்டம். என்ன அவளால் மொபைலை அணைத்து வைக்க முடியவில்லை.

ஏன் இவ்வளவு கோபம்? ஏன் இவ்வளவு பிடிவாதம்? என்றெல்லாம் மற்றவர்களை போல சிவாவும் முதலில் நினைத்தவன், அதன்பின் அவள் காதலின் காரணத்தை உணர்ந்தான் தான்.

ஆனால் இப்போது தான் அவள் காதல் அவனுக்கு புரிகிறதா என்ன? இல்லையே! அவள் விளையாட்டாய் இருந்தாலும் அவள் காதலில் உறுதியாய் இருந்தது அவனுக்கும் தெரியும் தானே!

பிளாக்மேன் என்ற அழைப்பிற்கு அவன் ஏங்கி தவிக்க, அவள் சொன்னது அவன் கண்முன் வந்து போனது. 'எனக்காக ஒருநாளாவது உன்ன தவிக்க விடல.. நான் ஹேமா இல்ல பிளாக்கி'.

அதற்குமேல் யோசிக்க முடியாமல் அவன் தலையை உலுக்க, தலைவலி தானாய் தலையை பிடித்துக் கொண்டது.

அங்கே ஹேமாவோ புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள்.

'உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா டி? பிளாக்கிய பத்தி தான் உனக்கு தெரியுமே? சரியான லூசு! எப்ப தான் அது மனசுல இருக்குறத உன்கிட்ட சொல்லி இருக்கு? இப்ப எதுக்கு நீ பிளாக்மேன் கூட சண்டை போட்டு ஊருக்கு போகாம இருக்க? அட்லீஸ்ட் போன் பண்ணும் போதாவது எடுத்துருக்கலாம். கொஞ்சம் சீன் போட்டு, எப்படியும் ரெண்டாவது கூப்பிடும் அப்ப அட்டென்ட் பண்ணலாம்னு நினச்சா.. ஹ்ம்ம் நமக்கு தான் பல்பு' தனக்கு தானே அவள் புலம்ப, அவள் கோபம் எல்லாம் சென்னை வந்த இரண்டு நாளிலேயே பறந்து போயிருந்தது.

இருந்தாலும் கொஞ்சம் பயம் காட்டி வைத்தால் தான் தன் வீட்டிலும் சிவாவை சம்மதிக்க வைக்க முடியும் என நினைத்து ட்ரைனிங் முடிந்த பின் தான் செல்ல வேண்டும் என முடிவுக்கு வந்திருந்தாள்.

செவ்வனே ஊரை சுற்றி பார்க்கும் கார்த்திக்கை அனைவரும் 'இவன் என்ன டிசைனோ?' என நினைத்திருக்க, ஹேமாவிற்கு மட்டுமே கார்த்திக்கின் உண்மை குணம் தெரியும். எப்படி என்று தானே கேள்வி?

ஆம்! அன்று சிவா வீட்டில் இருந்து ஹேமாவும் கார்த்திக்கும் கிளம்பிய பின், பாதி வழியிலேயே வண்டியை நிறுத்தினான் கார்த்திக்.

கேள்வியாய் அவனை ஹேமா பார்க்க, "சோ! சிவாவும் நீயும் விரும்புறீங்க?"

சாதாரணமாய் கார்த்திக் கேட்க, கொஞ்சம் அசந்து தான் போனாள் ஹேமா. ஆனால் அவள் உடனே காட்டிக் கொள்ளவில்லை.

"இல்ல, நான் தான் அந்த வீணா போனவன விரும்புறேன்" கடுப்புடன் அவள் சொல்ல, சிரித்தான் கார்த்திக்.

"உனக்கு எப்படி தெரியும்?" முதலில் அவனை திருடன் என்று அழைத்தது போலவே இப்போதும் ஒருமையில் அவள் அழைக்க, அவள் சுபாவமே இதுதான் என்பதை தெரிந்து கொண்டான்.

"என்னை கல்யாணம் பண்ண போறதா சொல்லவும் நானும் சந்தோசப்பட்டேன் தான்! ஆனால் அடுத்த நிமிஷம் தனியா என்னை அனுப்புன! அப்புறம் வந்து பார்த்தா வாசல்ல நிக்குற! உங்களுக்குள்ள எதோ ஊடல்னு புரிஞ்சிது" என்று சொல்ல,

"பரவால்ல! உன்ன மாக்கான்னு நினச்சேன். கொஞ்சம் அறிவு இருக்கு" ஹேமா சொல்ல, "ஏய்.." என ஒற்றை விரலை நீட்டி எச்சரித்தாலும், அவன் முகத்திலும் சிரிப்பே!

"சாரி பா! அந்த லூச வெறுப்பேத்த உன்னை யூஸ் பண்ணிட்டேன்" நிஜ வருத்தத்துடனே அவள் சொல்ல,

"எனக்கும் கொஞ்சம் பீலிங்கா தான் இருக்கு. பட் நான் காதலுக்கு வில்லன்லாம் இல்லம்மா. படத்துல வர்ற மாதிரியான அமெரிக்க மாப்பிள்ளைனு நினைச்சுக்க வேண்டியது தான். அதுல தான் மணமேடைல உக்கார வச்சு ஹீரோ கூட ஹீரோயின சேர்த்து வைப்பாங்க. நல்லவேளை நீ முன்னாடியே சொல்லிட்ட!"

"தேங்க்ஸ் கார்த்திக் நீயாவது என்னை புரிஞ்சிக்கிட்டயே!" என சோர்வாக அவள் கண்களை மூட,

"ஹப்பா! இப்ப தான் இந்தியால எனக்கு ஒரு நல்ல பிரண்ட் கிடைச்சுருக்காங்க" என்றதும் அவளும் கண்களை திறந்து அவனை பார்த்து சிரித்தாள்.

அன்று நட்பான பின் தான் வீட்டில் வந்து அவளுக்கு பரிந்து பேசி அவள் சென்னை செல்ல உதவி செய்தான்.

சிவாவை பார்க்க அடம் பிடித்த மனதை இறுக்கி, நான்கு மாதம் முடிந்தும் செல்லாமல் இருக்க, அவள் பிடிவாதம் தெரிந்து அர்ஜுன் சுஜியுடன் இரண்டு நாள் விடுமுறை எடுத்து கிளம்ப, நானும் வருகிறேன் என முன்வந்து நின்றான் கார்த்திக்.

'இவன் அடங்கவே மாட்டானா?' என்ற ரேஞ்சில் அர்ஜுன் அவனை பார்த்தாலும் கொஞ்சமும் சளைக்காமல் சென்னையை சுற்ற கிளம்பி விட்டான் கார்த்திக்.

அன்று ரேகாவிடம் ஹேமாவின் போன் நம்பர் வாங்கிய கார்த்திக் மொபைலிலும் அவளுடன் அடிக்கடி பேசுவான். இன்னும் சொல்லவேண்டுமானால் கார்த்திக் மூலம்தான் ஹேமா சிவா பற்றியும் அவனின் நடவடிக்கைகளையும் கவனித்துக் கொண்டு இருந்தாள்.

கார்த்திக் பற்றி இன்னும் தெரியாமல் அர்ஜுன் சுஜி தான் ஹேமா அவனை பார்த்தால் கோபப்படுவாள் என நினைத்திருக்க, மூவரையும் பார்த்த ஹேமா, "ஹாய் அண்ணா, ஹாய் அண்ணி! வா கார்த்திக்" என வரவேற்க சப்பென்று ஆனது.

"ஹேமா ஏன் இப்படி பண்ற? நீ பண்றது ரொம்ப தப்பு. இப்ப ஏன் எல்லாரையும் அவாய்ட் பண்ணிட்டு இருக்க?" அர்ஜுன் தங்கையின் போக்கு பிடிக்காமல் கேட்க,

"அண்ணா! ஏன் வந்ததும் டென்ஷன் ஆகுற? ரிலாக்ஸ்! நான் அவாய்ட் பண்ணலாம் இல்ல. ட்ரைனிங் முடிஞ்சதும் வரலாம்னு இருந்தேன்"

"எல்லாத்துக்கும் ரெடிமேடா ஒரு பதிலை வச்சிரு. அங்க சிவா மாமா உன்னால கில்ட்டியா பீல் பண்ணிட்டு சோகமா இருக்காரு" ஒரு கோபத்தில் புளோவாக பேசிய அர்ஜுன், பேசியபின் தான் கார்த்திக் நினைப்பு வர அதிர்ந்து நின்றபோது,

"ஹேய்! ரொம்ப ஷாக் ஆகாத. கார்த்திக் நம்ம பய தான். அவனுக்கும் எல்லாம் தெரியும்" ஹேமா சொல்ல, சிரிப்புடன் நின்ற கார்த்திக்கை பார்த்து

"இது எப்பத்துல இருந்து?" என நினைத்து கொண்டனர் அர்ஜுன் சுஜி.

"அப்ப இதுனால தான் அர்ஜுன் என்கிட்ட சகஜமா பேசல! சரியா?" கார்த்திக் கேட்க,

"சாரி கார்த்திக்! ஹேமா அவ முடிவுல தெளிவா இருக்கும் போது உங்கள அம்மா இந்தியா வர வச்சாங்க. அதான் ஒரு சின்ன கன்ஃபியூஷன்" அர்ஜுன் எடுத்து சொல்லவும்,

"ஐ அண்டர்ஸ்டாண்ட் அர்ஜுன். தட்ஸ் நாட் அ ப்ரோப்" என்றுவிட, அந்த நாள் இலகுவாகவே சென்றது.

சுஜி சென்னைக்கு புதிது என்பதால் அர்ஜுன் அவளை சில இடங்களுக்கு அழைத்து சென்று காண்பித்தான்.

மாலை நேரம் அர்ஜுன் சுஜியுடன் கார்த்திக் ஹேமாவும் பீச் செல்ல, அங்கே தான் ஹேமாவிடம் அர்ஜுன் கேட்டான்.

"சோ நெக்ஸ்ட் நீ என்ன தான் பண்ணலாம்னு இருக்க?".

"இதென்ன கேள்வி? அதான் வந்து பாத்துட்டீங்க இல்ல? நல்லா தானே இருக்கேன். அம்மாகிட்ட போய் சொல்லு ட்ரைனிங் முடிச்சிட்டு வர்றேன்னு"

"ஹ்ம்ம் அது ஓகே தான். சிவா மாமாகிட்ட என்ன சொல்லணும்?"

"லூசாண்ணா நீ? அவன் என்ன நான் எப்ப வருவேன்.. எப்ப என்னை கல்யாணம் பண்ணிக்கலாம்னா இருக்கான்? கடுப்ப கிளப்பாத!. நான் வந்த அப்புறமா அவனை கவனிச்சுக்குறேன்" என்றுவிட, அதற்கு மேல் அவளிடம் எதுவும் கேட்கவில்லை.

அடுத்த நாள் மாலை நால்வரும் கிளம்பிவிட, ஹேமா அவள் வேலைகளை தொடர்ந்தாள்.

சிவாவை பார்க்க சுஜி வந்த போதும் ஹேமாவை பற்றி கேட்க சிவா தயங்க, சுஜி அவன் கேட்காமல் சொல்வதாய் இல்லை.

சுஜி கிளம்பும் நேரம் வேறு வழி இல்லாமல் அவனே கேட்டான்.

"சுஜி ஹேமா ஏன் ஊருக்கு வர்ல?"

கேட்டவனை கண் சுருக்கி பார்த்த சுஜி "உனக்கு ஏன்ண்ணா இவ்வளவு பிடிவாதம்? ஹேமாவையே மிஞ்சிட்ட! உனக்கு பிடிக்கும்னா பிடிச்சுருக்குனு சொல்லிடுணா. பிரான்கா சொல்றேன் ஹேமாவை விட நல்ல சாய்ஸ் உனக்கு இல்ல. அவ அங்க நல்லா தான் இருக்கா" என்றுவிட,

'உனக்கு தான் புரியவில்லை! எனக்கு ஹேமா நல்ல சாய்ஸ் தான் ஆனால் ஹேமாவிற்கு நான்??' என தனக்குள் நினைத்து கொண்டான்.

அதோ இதோ என்று ஆறு மாதம் முடியும் நேரமும் வந்தது. யார் உறவிலும் எந்த முன்னேற்றமும் இல்லை.

ஹேமா சிவாவின் நினைவோடே பயிற்சியை நல்லபடியாய் முடித்துவிட, சிவாவோ தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருந்தவன் மொத்தமாய் மாறி சோகமே உருவாய் தன் அன்றாட வேலையை தொடர்ந்து கொண்டிருந்தான்.

ஹேமா தான் தானாய் இருந்ததன் காரணம் தன்மேல் இருந்த நம்பிக்கை என்றே கூறலாம். வீட்டிற்கு சென்றதும் வீட்டில் பேசி எப்படியும் ஒத்துகொள்ள வைக்க முடியும் என்று நம்பினாள். அவளை பொறுத்தவரை அவள் வாழ்வில் சிவா இன்றி யாரும் இல்லை.

சிவா தெளிவாக இல்லை தான். ஹேமா மனதோடு என்றோ கலந்து விட்டான் தான். ஆனால் மனம் உணர்ந்த ஒன்றை என்றுமே அவன் வெளியில் சொல்லவோ, காட்டிக் கொள்ளவோ தயாராய் இல்லை. வலிக்கும் என்று தெரிந்தே இந்த முடிவை எடுத்தவன் அவளுக்கும் வலிக்கும் என்பதை மறந்தானா அல்லது மாறிவிடுவாள் என்று நினைத்தானா??

கார்த்திக் ஹேமாவை தொடர்பு கொள்ள, சிவா நினைவில் இருந்தவள் வெகு நேரத்தின் பின்பே அதை எடுத்தாள்.

"சொல்லு கார்த்திக்"

"ஹேமா எப்படி வர்ற? நான் பிக்கப் பண்ண வர்றேன்"

"நான் இன்னும் கிளம்பல கார்த்திக். நைட் தான் கிளம்புறேன்"

"ஓஹ்! அப்ப லேட்டாய்டும் இல்ல. சரி எப்ப கிளம்புற சொல்லு. நான் டைம் கால்குலேட் பண்ணி நீ வர்ற நேரம் வந்துடுறேன்"

"நான் என்ன குழந்தையா கார்த்திக்? கார் அனுப்பி விட்டால் வந்துட போறேன்"

"இல்ல ஹேமா எனக்கும் போரா இருக்கு. சாப்பிடறதும் தூங்குறதுமா தானே இருக்கேன். சோ சொல்லு" என்றுவிட,

"அப்ப நீ US போறதா இல்ல? இப்படி டிரைவர் வேலை தான் பார்க்க போற?" விளையாட்டாயும் நிஜமாயும் அவள் கேட்க,

"போகாம என்ன? போய் குப்பை கொட்டி தானே ஆகணும்? இன்னும் ஒரு ஒரு மாசத்துல கிளம்பிடுவேன். அதுவரையுமே ஜாலியா இருக்க வேண்டியது தான்"

"ம்ம் என்ஜோய் பண்ற மகனே! சரி நான் ஒரு 3 மணிக்கு வந்துடுவேன். ஓகே!"

"ஹேய் என்ன சொல்ற நீ? அப்ப மிட் நைட்ல வருவியா? அதுவும் தனியா? நோ நோ! நீ மார்னிங் கிளம்பு போதும்" உரிமையாய் அவன் கோபம் கொள்ள சிரித்துக் கொண்டாள்.

"எனக்கும் தனியா ட்ராவல் பண்ண போரா இருக்கு கார்த்திக். அதான் யோசிக்குறேன்"

"அப்ப முன்னாடியே சொல்லியிருந்தா நான் வந்திருப்பேன்ல. சரி ஓகே. பட் நோ நைட் ட்ராவல்.நீ மார்னிங் கிளம்பு"

"அப்படிங்கிறியா? அப்ப என் பிரண்ட்டோட ரிலேட்டிவ் கார்ல வர்ராங்க. அவங்களோட வரலாம். சரி ஓகே இதான் பைனல். தெரிஞ்சவங்க தான். சோ நோ ப்ரோப்லேம். இயர்லி மார்னிங் கிளம்புறதா சொன்னாங்க. சோ மார்னிங் ஒரு 10 மணிக்கு அங்க ரீச் ஆயிடுவேன். இப்ப ஓகே வா?"

"ஹ்ம்ம் தட்ஸ் குட்! நான் பிக்கப் பண்ணிக்குறேன். டேக் கேர். ஹாப்பி ஜர்னி!"

"ஓகே கார்த்திக் பை"

சொன்னது போலவே அதிகாலை 3 மணியளவில் அவள் இரு பெரியவர்களுடன் காரில் கிளம்பினர். தூங்குவதற்கு ஏற்ற நேரமாய் அமைய மூவருக்கும் தூங்கியபடியே தான் பயணம் தொடர்ந்தது.

கார் 10 மணி அளவில் திருச்சியை அடைந்து பைபாசை கடந்து வர, இன்னும் ஒருமணி நேரத்தில் அவர்கள் வீட்டிற்கு சென்றுவிடலாம் தான் ஆனால் பெரியவர்கள் பசிக்கு டீ குடிக்கவென காரை நிறுத்தியிருக்க, கார் உள்ளேயே இருந்தாள் ஹேமா.

பராக்கு பார்த்துக் கொண்டு அவள் இருக்க, தூரத்தில் ஒரு அன்னை கையில் இருந்த குழந்தை கையில் இருக்கும் பிஸ்கட்டை இவள் பக்கம் பார்த்து நீட்ட, இவளும் உள்ளிருந்தே பிடுங்குவது போல சைகை செய்தாள்.

விளையாடிவிட்டு கிளம்பும் நேரம் அந்த குழந்தை டாட்டா காட்ட, இவளும் கையாட்டி முடிக்கும் நேரம் ரோட்டிற்கு எதிர்புறம் யாருடனோ பேசிக் கொண்டிருந்த சிவா கண்ணில்பட்டான்.

சிவாவை பார்த்த அடுத்த நொடி அனைத்தும் மறந்து போக, அவ்வளவு உற்சாகம் அவளிடம். காரில் இருந்து இறங்கியவள் இடம் மறந்து அவனிடம் ஓட, சாலையை கடக்கும் நேரம் வலதுபுறம் வந்த லாரியை கவனிக்காத அவளுக்கு தண்டனையாய் நிகழ்ந்தது அந்த சம்பவம்.

நேசம் தொடரும்.