அத்தியாயம்-1
காலை கதிரவன் தன் சிறகினை விரித்து மெல்ல எழுந்து கொண்டிருக்க வரவேற்கும் விதமாக வானம்பாடிகள் சந்தோஷ கூக்குரலிட்டு விண்ணில் பறக்க தொடங்க மண்ணில் உள்ள மலர்களோ தான் காத்திருக்கும் செய்தியை இளம் காற்றில் தூதாக அனுப்ப அதற்கு மேலும் மெருகூட்டுவது போல் “பூவருகோனும் புரந்தரனும் பொற்பமையின்” என்ற திருவாசக பாடல் பவதாரிணியின் இனிமையான குரலில் ஒலித்துகொண்டிருக்க இந்த சுகந்தமான சூழ்நிலையில் அங்கு மலையடிவாரத்தில் இருந்த அந்த திருமண மண்டபம் திருவிழா கோலத்தில் நிறைந்திருந்தது.
“இன்னும் என்ன பண்றேள் ..நாழியாகிண்டே இருக்கு...சீக்கிரம் பொண்ணு மாப்பிளையும் அழைச்சிட்டு வாங்கோ.......நம்ம அங்க போறதுக்குள்ள மூகூர்த்த நேரமே வந்திடும்” என்ற ஐயர் சத்தம் போட்டு கொண்டிருந்தார்.
“இதோ எல்லாரும் கிளம்பிட்டோம்........இன்னும் மாப்பிள்ளை வீட்டு ஆளுங்க வரலை ...அதுக்குதான் காத்துகிட்டு இருக்கோம்...வந்த உடனே கிளம்பிடலாம்...கொஞ்சம் பொறுங்க சாமி “ என அங்கிருந்த ஒருவர் தாமதத்திற்கான காரணத்தை சொன்னார்.
“என்ன ஆச்சிரியமா இருக்கு...எப்பவும் கல்யாண பொண்ணுதான் கிளம்பறதுக்கு லேட் பண்ணுவா......இங்க எல்லாம் தலைகீழால இருக்கு” என அவர் வியப்புடன் கேட்கவும்
“ம்க்கும் இதுக்கே ஐயர் இந்த ரியாக்சன் கொடுக்கிறாரே.......இன்னும் உன் கல்யாண கதையை கேட்டாருன்னா வச்சுக்கோ மயக்கம் போட்டே விழுந்திடுவாருபோல” என மணபெண்ணின் காதை கடித்தாள் அவளது உறவினரும் தோழியுமான தீபா.
அவளோ பதட்டத்துடன் “என்ன தீபா நீ.... நானே அவரு வருவாரா வரமாட்டாரான்னு பதட்டத்தில இருக்கேன்....நீ இந்த நேரத்தில காமெடி பண்ணிட்டு இருக்க” என எரிச்சலுடன் சொல்ல
“ஏண்டி இது என்ன உனக்கு புதுசா...ஐந்து வருஷமா இப்டிதான இருக்க.......எல்லாத்துக்கும் துணிஞ்சுதான இங்க வந்து நிக்கிற .....ஆனாலும் உனக்கு ரொம்ப தைரியம்டி...அமுக்குனி மாதிரி இருந்துகிட்டு நினைச்சத சாதிச்சுட்டியே” என அவளை புகழ்வது போல் அவளின் நிலையை கேலியாக சொன்னாள் தீபா.
ஆனால் அதை எல்லாம் உணரும் நிலையில் அவள் இல்லை. கண்களோ மண்டபத்தின் வாசலை விட்டு அசையாமல் இருக்க மனமோ “சீக்கிரம் வந்திடு ...சீக்கிரம் வந்திடு...... இன்னும் என்னை காக்க வைக்காத” என மானசீகமாக அவனிடம் பேசிகொண்டிருந்தது.
“ஏம்பா தர்மலிங்கம் இன்னுமா உன் மாப்பிள்ளை கிளம்பி வர்றாரு..... மலையில கும்பல் சேர்ந்திடும்பா...அப்புறம் நமக்கு இடம் கிடைக்காது......பாதி சொந்தகாரங்க முன்னாடி போய்ட்டாங்க.......சீக்கிரம் எல்லாரயும் வர சொல்லுங்கப்பா ” என ஒரு பெரியவர் சத்தம் போடவும்
அவரோ வேகமாக தன் மனைவியிடம் வந்தவர் சற்று பதட்டத்துடன் “ “என்ன குணவதி மாப்பிள்ளை வீட்டுகாரங்க இன்னும் என்ன பண்றாங்க ...அங்க எல்லாரும் என்னை சத்தம் போடறாங்க...கொஞ்சம் சம்பந்திகிட்ட கேட்டு சொல்லு” என்றார்.
குணவதியோ “நானும் சொல்லிட்டேங்க...இதோ கிளம்பிட்டோம்னு...வந்துகிட்டே இருக்கோம்னு ஒரு மணிநேரமா இந்த ஒரு பதிலதான் சொல்றாங்க என்றவர் தன் கணவரின் முகத்தில் தெரிந்த கவலை அவரை பயமுறுத்த “நீங்க எதுக்கும் கவலை படாதீங்க......... டாக்டர் நீங்க பதட்டபடகூடாதுன்னு சொல்லிருக்கார்....அவங்க வந்திடுவாங்க.....மண்டபம் வரைக்கும் வந்தாச்சு.....எல்லாம் நல்லபடியாதான் நடக்கும்...நீங்க மத்த வேலைய பாருங்க “ என அவரை சமாதானபடுத்தினார்..
“இல்லை பார்வதி இந்த கல்யாணம் முடியற வரைக்கும் இந்த படபடப்பு குறையாது. என் பொண்ணோட கல்யாணத்தை எப்படி எல்லாம் செய்யணும்னு நினைச்சு இருந்தேன்.....ஆனா இவ இப்படி” என சொல்லிவிட்டு அவர் நீண்ட பெருமூச்சை இழுத்து விட
“இப்போ எதுக்கு அதெல்லாம் பேசிட்டு இருக்கீங்க.....நம்ம பொண்ணு சந்தோசம் தான் நமக்கு முக்கியம்.....பழசை எல்லாம் பேசாம முன்னாடி போய் நின்னு பொண்ணுக்கு அப்பாவா எல்லாரயும் கவனிங்க” என மனைவிக்கு உரிய மிடுக்கோடு சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தவர் நேராக மண்டபத்தின் வாயிலில் இருக்கும் பிள்ளையார் கோவிலிற்கு சென்றார்.
கைகூப்பி கண்ணை மூடி நின்றவர் “பிள்ளையாரப்பா இதுவரைக்கும் நடந்தது ஏதும் சரியில்லைனாலும் இனி நடக்க போறது எல்லாம் நல்லபடியா நடக்கணும்பா.......எங்க பொண்ணோ நாங்களோ மனசறிஞ்சு எந்த தப்பும் பண்ணலை.அவ இப்போ எடுத்திருக்க முடிவு தணல் மேல் நடக்கிறது தான் தெரியும்.எங்களுக்கும் வேற வழி இல்லை......இனியும் எங்க குடும்பத்துக்கு சோதனை வேண்டாம்.....கொஞ்சம் கருணை வைப்பா” என மனமுருக வேண்டிகொண்டிருந்தார்.
அப்போது “ மாப்பிள்ளை வீட்டுகாரங்க வந்தாச்சு” என்ற குரல் கேட்கவும் மணபெண்ணின் அறையில் அலைபாய்ந்து கொண்டிருந்த விழிகள் சிலையான நிற்க,படபடத்த மனம் பனித்துளி போல் குளிர தாய் பசுவை தேடிய கன்றினை போல் கண்கள் அவனை தேட, உள்ளம் அலைபாய வாசலை நோக்கியவள் அங்கு பட்டுவேஷ்டி சட்டையில் மாப்பிள்ளை கோலத்தில் காரில் இருந்து அவன் இறங்கவும் அந்த நொடி அவள் பிறப்பின் பயனை அடைந்தது போல் உணர்ந்தாள்.
அவனை கண்டதும் மனதில் உற்சாகம் பொங்க அவை முகத்தில் எதிரொலிக்க ஆறடி உயரத்தில் அகன்ற தோள்களும், விரைப்பான உடல் தோற்றமும், சாந்தமான முகமும் அவளுக்கு பிடித்த அவள் மனதை கொள்ளைகொண்ட புன்னைகையுடன் அவன் நிற்க மன்னவனின் தோற்றத்தில் தன்னை மறந்து நின்றாள் அந்த மனையாள்.
“என்னடி அதிசயம் இது ...........இவன் இவ்ளோ அழகா இருக்கான்..... ........இத்தன நாள் எங்க கூடத்தான் இருக்கான்......இப்போ எனக்கே புதுசா தெரியறான்..........ஆனாலும் நீ கொடுத்து வச்சவடி......உனக்கு எங்கையோ மச்சம் இருக்கு” என நக்கலும் ஆற்றாமையும் கலந்த குரலில் தீபா சொல்ல அதை கேட்ட அவள் முகமோ வெட்கத்தில் சிவந்து போனது.
அனைவரும் குழுமி இருக்கும் இடத்திற்கு வந்தவன் “ எல்லாரும் வாங்க என வரவேற்றவன் மன்னிக்கணும் ...வர வழில கொஞ்சம் ட்ராபிக் ...அதான் லேட்டாகிடுச்சு என்றவன் .......ரொம்ப நேரமா காத்திருக்கீங்களா மாமா” என திரும்பி தனது மாமனாரிடம் கேட்டான்.
“அவரோ அப்படி எல்லாம் இல்லை மாப்பிள்ளை.....கொஞ்சம் முன்னாடிதான் நாங்களும் வந்தோம்” என சமாளிக்க
அப்போது அருகில் இருந்தவர் “பரவயில்லையே மரியாதை தெரிஞ்ச பையனா இருக்கார்......நீ எதுக்கும் பயப்படவேண்டாம் தர்மலிங்கம்...தங்கமான பையன் தான் ” என சொல்லவும் அவரின் முகத்தில் அப்போதுதான் சற்று தெளிவு வந்தது.
அப்போது “அர்ச்சனைக்கு பொண்ணு மாப்பிள்ளை பெயரை சொல்லுங்கோ எழுதிக்கிறேன் என ஐயர் கேட்கவும் மாப்பிள்ளை பேரு மாதேஷ்வரன் பொண்ணு பேரு மலர்விழி” என குணவதி சொல்ல
“பேஷ் பேஷ் பேர் பொருத்தம் அருமையா இருக்கே.......இரண்டு பேரும் அமோகமா வாழ்வாங்க” என அவர் சொல்ல மலர்விழியின் கண்கள் பெருமிதத்துடன் தன்னவனை நோக்க அவனோ அதை கண்டுகொள்ளாமல் அருகில் இருக்கும் தன் தோழனிடம் பேசிக்கொண்டு இருந்தான். அவன் மட்டுமில்லை அங்கு இருப்பவர்களும் அதை லட்சியம் செய்யாமல் இருக்க மலர்விழியின் மனம் மட்டும் இன்பத்தில் நிறைந்திருந்தது.
“சரி சரி.....சீக்கிரம் எல்லாரும் வாங்க என்றபடி ஐயர் முன்னே செல்ல அனைவரும் அவர் பின்னே சென்றனர்.பாதிவிடிந்தும் விடியாத காரிருளில் அந்த திருச்செங்கோடு அர்த்தநாரிஸ்வரர் மலைமுன் அனைவரும் நிற்க மாதேஷ்வரனோ நிமிர்ந்து அந்த மலையை பார்த்தவன் ஏற்கனவே செந்நிறம் தோற்றம் கொண்ட அந்த மலை கதிரவனின் ஒளிபட்டு மேலும் ஜொலிக்க கண்களை மூடி அவனது இஷ்ட தெய்வமான அர்த்தநாரீஸ்வரறை நினைத்து மனதிற்குள் அவரது நாமத்தை ஜெபித்தவன் ஆதியும் நீயே அந்தமும் நீயே ....உன் பாதம் சரணடைந்தேன்.....தென்னாடு உடைய சிவனே போற்றி என்றவாறு தனது முதல் அடியை மலையின் முதல் படியில் வைக்க அவனை அறியாமல் அவனது உடல் ஒருமுறை சிலிர்த்து நின்றது.
அப்போது அங்கு ஒருவர் “ஏம்பா சாமிநாதா இந்த காலத்து பசங்க எல்லாம் ஹோட்டல், மண்டபம்னு ஆடம்பரமா திருமணம் பண்றாங்க ....ஆனா உன் பையன் இந்த கோவில்லதான் கல்யாணம் வைக்கணும்னு சொன்னானு சொல்றிங்க...ஆச்சரியமா இருக்கே” என கேட்கவும்
அவரோ “நம்ம எத்தன நாடு கடல் தாண்டி போனாலும் நம்ம வேர் சொந்த மண்ணுலதான இருக்கு ....,,,அதுவுமில்லாம என் மகன் மாதேஷ்க்கு கடவுள் பக்தி அதிகம்...சின்ன வயசில இருந்தே அவன் எந்த ஒரு காரியம் செய்தாலும் இங்க வந்து சாமி கும்பிட்டு போய்தான் ஆரம்பிப்பான். இது எல்லாம் அவனோட விருப்பம் தான் என என்றார்.அப்போது “ம்க்கும் ஆனா கல்யாணம் மட்டும் அவன் விரும்பினது இல்லையே” என அவரின் அருகில் நடந்து வந்து கொண்டிருந்த அவரது மனைவி கற்பகம் முனுமுனுத்தார்.
அவரோ “அடியே எல்லாரும் சேர்ந்து இருக்க நேரத்துல இப்போ எதுக்கு இத பேசற......வாயை மூடிகிட்டு பேசாம வா” என குனிந்து அடிகுரலில் ஒரு அதட்டல் போட அதற்கு பின்பு அந்த இடம் அமைதியானது.
படியில் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அவன் சிவ நாமத்தை உச்சரிக்க அவன் பின்னால் அவனது பாதத்தை பின்பற்றி வந்து கொண்டிருந்த மலர்விழியோ அவன் பெயரை மட்டுமே உச்சரித்துக்கொண்டு வந்தாள்.
“எப்படியோ குணவதி உன் பொண்ணு நினைச்சத சாதிச்சுட்டா.....நாங்க இந்த கல்யாணம் நடக்கும்னு நினைச்சு கூட பார்க்கலை.....கல்லையும் கரைய வச்சுட்டா......நம்ம சொந்தத்திலே இவ தைரியம் யாருக்கும் இல்லை” என அவருடன் நடந்துகொண்டிருக்கும் ஒரு பெண்மணி அங்கலாய்க்க
அப்போது பின்னால் இருந்து “ம்ம்ம்ம் என்ன பண்றது என் தம்பி இளகின மனச சில பேர் தனக்கு சாதகமா பயன்படுத்திகிட்டாங்க..... அவனும் அது தெரியாம அவங்க வலையில விழுந்திட்டான்......ம்ம்ம் இல்லையனா என் தம்பி அழகுக்கும் படிப்புக்கும் நல்ல வசதியான இடத்தில அழகான பொண்ணா பார்த்து முடிச்சிருப்போம். எங்க கெட்ட நேரம் இந்த மாதிரி கும்பளுகுள்ள மாட்டிக்க வேண்டியதா போச்சு” என மாதேஷின் சகோதிரி உமா இடித்து பேச குணவதியோ எதுவும் பேசாமல் அமைதியாக வந்தார். எப்படி பேசுவார்......அவர் எதிர்த்து பேசுவது போலவா அவரது மகள் காரியம் செய்து வைத்து இருக்கிறாள். இந்த திருமணம் நடந்தால் போதும் ...அதற்காக எந்த அவமானனத்தை வேண்டுமானாலும் தாங்கி கொள்ளலாம் என்று தானே குணவதியும் தர்மலிங்கமும் முடிவெடுத்து இந்த திருமணத்தை நடத்துகின்றனர்.
மலையின் உச்சியை அடைந்தவர்கள் அங்கு வெளிப்ரகாரத்தில் இருக்கும் கடவுளை வணங்கிவிட்டு திருமணம் நடக்கும் இடத்திற்கு வந்தனர்.
அதுவரை தன் அருகில் இருப்பவர்கள் யார் என்பதை கூட உணராமல் கண்களை மூடி கடவுளின் நாமத்தை மட்டுமே உச்சரித்து கொண்டிருந்த மாதேஷை பார்த்த அவன் நண்பன் சுந்தர் “டேய் மச்சான் இது எல்லாம் கொஞ்சம் ஓவர்டா......எல்லா இடத்திலும் பொண்ணு தலை குனிஞ்சு நிக்கும்...மாப்பிள்ளை பொண்ணேயே பார்த்திட்டு இருப்பான்......ஆனா இங்க நீ கண்ணை மூடி சாமியே சரணம்னு சொல்லிகிட்டு இருக்க...அந்த பொண்ணு என்னடானா உன்னையே பார்த்திட்டு இருக்கு......என்னடா நடக்குது இங்க” என நடப்பதை பார்த்து கடுப்பாகி கேட்டான்.அவனுக்கும் ஓரளவு விபரம் தெரியும் என்றாலும் திருமணம் வரை வந்த பின்பும் மாதேஷ் அப்படி இருப்பது அவனுக்கு பிடிக்கவில்லை..
கண்களை திறந்தவன் முகத்தை சுளித்தபடி “இப்ப என்னடா வேணும் உனக்கு” என எரிச்சலுடன் கேட்டான்.
“ம்ம்ம்ம் எனக்கு எதும் வேண்டாம்......உன்னை கட்டிக்க போற பொண்ணுகுதான் ஏதோ வேணுமாம்.....அடிவாரத்துல இருந்து உன்னை மட்டுமே பார்த்திட்டு வருது...... ஆனா நீ என்னமோ சன்யாசம் வாங்க போகிறவனாட்ட சாமி சரணம் சொல்லிட்டு வர என்றவன் திரும்பி அம்மா மலர்விழி இந்த பையன் இப்பதான் கண்ணை திறந்திருக்கான்.....மறுபடியும் சாமியே சரணம்னு சொல்லி கண்ணை மூடறதுகு முன்னாடி நீ ஏதாவது சொல்லனும்னு நினைச்சா சொல்லிடு ...பார்த்துடா தாலிய கட்டும்போதாவது கண்ணை திறந்து கட்டு.......கண்ணை மூடிகிட்டே ஐயர் கழுத்துல கட்டி அவர் பொளப்புல மண்ணை அல்லை போற்றாத” என கடுப்பில் சத்தமாக அவன் சொல்லவும் அருகில் இருந்த அனைவரும் சிரித்து விட்டனர்.
பல வருடங்களாக மனதில் நினைத்த கனவு இப்போது நிஜமாக மாறிகொண்டிருக்க அந்த ஒவ்வொரு ஷனத்தையும் அவள் உணர்ந்து அனுபவித்து கொண்டிருக்க அந்த நேரத்தில் சுந்தர் பேச்சு அவளை நிகழ்வுக்கு கொண்டுவந்தது.
“என்னண்ணா...என்ன சொன்னீங்க” என அவள் தடுமாற
“அப்போ நீயும் இந்த உலகத்துல இல்லயா...ஏம்மா உனக்காக நான் இவன்கிட்ட உசிரை கொடுத்து பேசிட்டு இருக்கேன்....நீ என்னடானா கனவுல மிதந்துகிட்டு இருக்க...நல்லா ஜோடி சேர்ந்தீங்க போங்க என்றவன் மாதேஷிடம் திரும்பி மச்சான் உனக்கு ஏத்த பொண்ணுடா....உனக்கு மாப்பிள்ளை துணையா வந்தேன் பாரு...என்னை சொல்லணும்” என புலம்ப
அப்போதுதான் தன் அருகில் மெரூன் வண்ண பட்டு புடைவயில் அழகாக அலங்கரித்து கொண்டு அம்சமாக அவள் நிற்பதை பார்த்தவன் அவளது மாநிறத்திற்கு அந்த புடவை சரியாக பொருந்தி இருந்தது. ஏற்கனவே மெல்லிய உடல்வாகு கொண்டவள் இந்த ஆடை ஆபரணங்களால் சற்று பூசினார் போல் தெரிய நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்தவன் அவனது கண்களில் அவளது வெண்ணிறக்கல் மூக்குத்தி பளிச்சிட சட்டென்று அவன் முகத்தில் ஒரு சந்தோஷ மின்னல் தோன்றி மறைந்தது. அவளது விழிகளை கண்டவனால் அதற்கு மேல் அவனது கண்களை வேறுபக்கம் திருப்ப முடியவில்லை. அந்த மருண்ட பார்வையும் அதில் அவன் மீது கொண்ட நேசம் பொங்கி வழிய அதை உணர்ந்தவனின் மனம் சிலிர்ப்புற அவளை பார்த்து லேசாக புன்னகைக்க அதை பார்த்தும் அவள் முகம் நாணத்தில் சிவந்தது.
“ஒன்னு கண்ணை மூடிகிட்டே இருக்க...இல்லை கண்ணை திறந்தா பொண்ண மட்டும்தான் பார்க்கிற...... அங்க ஐயர் அரைமணி நேரமா கூவிக்கிட்டு இருக்கார்......கொஞ்சம் இங்கும் கவனி மச்சான்.....கடைசியா என்னை டேக் டைவர்ஷன் மாதிறி இங்க அங்கணு கைகாட்ட வைச்சுடிங்களேடா” என சுந்தர் அருகில் வந்து குரல் கொடுக்கவும்.... தன் உலகிற்கு திரும்பிய மாதேஷ் “ஹிஹிஹிஹி சாரி மச்சான்...அது வந்து ..வந்து என வழிய .
“ஹப்பா இந்த திருமணம் உறுதி செஞ்ச நாள்ல இருந்து இன்னைக்குதாண்டா நீ இந்த மாதிரி அசடு வழியறத நான் பார்க்கிறேன்......இப்பதாண்டா உனக்கு கல்யாண களையே வருது......ஐயரே இவன் மனசு மாறதுகுள்ள சீக்கிரம் தாலி எடுத்து கொடுங்க...அப்புறம் மறுபடியும் தென்னாடு உடையே சிவனே போற்றினு ஆரம்பிச்சா நிறுத்தமாட்டான்” என சொல்லவும்
அதுவரை அங்கிருந்த இறுக்கமான நிலை மாறி கேலி கிண்டல் என சலசலக்க அனைவரின் சந்தோஷமான மனநிலையில் உமையவளை தன் இடபாகத்தில் கொண்டு சக்தி இல்லையே சிவனில்லை.....தன்னுள் பாதி தன் மனையாள் என்பதை உலகிற்கு உணர்த்திய பெருமை பெற்ற அந்த சிவஸ்தலத்தில்உற்றார் உறவினர் முன்னிலையில் அனைவரின் ஆசீர்வாதத்துடன் மலர்விழியின் கழுத்தின் மாங்கல்யத்தை பூட்டி தன்னுள் பாதியாக ஏற்றுகொண்டான் மாதேஷ்வரன் .
தாலி கட்டி முடிந்ததும் மணமக்கள் அக்னியை வளம் வர இருவரின் கைகளையும் இணைக்க தன்னவளின் கைகளை மெல்ல பற்றியவன் அதில் இருக்கும் நடுக்கம் அவளது மனதின் நிலையை உணர்த்த சற்று நிதானித்தவன் அடிகண்ணில் அவளை பார்க்க அந்த பார்வை “இதன் முகவுரை நீதான்......முடிவுரையும் நீதான் என்னால் ஏதும் செய்ய இயலாது என மனதிற்குள் சொல்லி கொண்டவன் மூன்று முறை அக்னியை வளம் வந்தனர். பின்னர் இருவரும் கணவன் மனைவியாக மீண்டும் கடவுளின் சன்னதிக்குள் சென்று கண்களை மூடி அவள் நிற்க “ஏண்டி பயமா இருக்கா” என அவள் காதில் ஒலித்த அந்த குரல் அவளை பழைய நினைவிற்கு அழைத்து சென்றது.