அத்தியாயம் -2
“டேய் முத்து உள்ள துவரை , உளுந்து, கடல பருப்பு எல்லாம் இருப்பு எவ்ளோ இருக்குனு பார்த்துக்கோ..... அப்படியே மணச்சநல்லூர் பொன்னி எத்தன மூட்டை இருக்குனு கணக்கு எடுத்துக்கோ.... அப்புறம் டேய் தம்பி புதன் சந்தையில இருந்து வாங்கிட்டு வந்த செலவு சாமானம் எல்லாம் இருக்கா இல்ல தீர்ந்திடுச்சான்னு பாரு...... வாடிக்கைக்காரங்க வந்து கேட்கும்போது எப்பவும் இல்லைன்னு சொல்லகூடாதுடா......நாளை மறுநாள் தான் சரக்கு ஆர்டர் போடணும் எப்படியும் அது வரதுக்கு ஒரு வாரம் ஆகும்.....அதான் கேட்கிறேன்..நல்லா பார்த்து சொல்லு “ என தனது மளிகைகடையின் வியாபாரத்தை முடித்துவிட்டு கடை பூட்ட வேண்டிய இரவு நேரத்தில் இறுதியாக சரக்குகளை கணக்கு பார்த்து கொண்டிருந்த தர்மலிங்கம் அவரது உதவியாளன் முத்துவிடம் விசாரித்து கொண்டிருந்தார்.
“அய்யா துவரையும் மொச்சையும் குறைவா தான் இருக்குதுங்க.....செலவு சாமானம் எல்லாம் மாசத்துக்கு இருக்குது ...அதுக்குள்ள நம்ம ஊரு திருவிழா வந்திடும்...அப்போ புதுசா வாங்கிடலாம்.....அப்புறம் அந்த பொம்மை படம் போட்ட ரொட்டி இனி வாங்க வேண்டாம்....மண்ணு மாதிரி இருக்குன்னு பசங்க யாரும் வாங்க மாட்டேங்கிறங்க” என அவன் விபரம் சொன்னான்.
“அப்படியா சரிடா ...வாடிக்கைக்காரங்க கேட்கிற பொருளை வாங்கிடலாம்” என சொல்லிக்கொண்டு இருக்கும்போதே
“அப்பா நேரமாச்சு சீக்கிரம் வீட்டுக்கு வாங்க” என கொஞ்சும் மழலை குரலோடு ஆறுவயது அழகிய தேவதை அவர் வீட்டின் குட்டி இளவரசி அங்கு வந்து நின்றாள்.
“தன் மகளை பார்த்ததும் இதோ அப்பா கிளம்பிட்டேன்டா செல்லம் நீ இந்த நேரத்துல எதுக்கு வந்த.......இன்னும் தூங்கலையா.....எட்டு மணிக்கு எல்லாம் படுக்கனும்னு அம்மா சொல்லலையா” என வினா எழுப்பியவாறே தனது செல்ல மகளை தூக்கி உச்சி முகர்ந்தார் பாசமான தந்தை.
“ம்ம்ம் வந்து ...வந்து” என மகள் இழுக்க
உடனே தர்மலிங்கம் திரும்பி முத்துவிடம் “நான் கல்லாவை பூட்டிட்டேன்...நீ சூடம் காட்டிட்டு கடையை பூட்டிட்டு சாவிய கொண்டுவந்து வீட்டுல கொடுத்திட்டு கிளம்பு” என சொல்லிவிட்டு மகளிடம் திரும்பியவர் நீ இன்னைக்கு என்ன குறும்பு பண்ணுன” என சிரித்துகொண்டே கேட்டார்.
“நான் ஒன்னும் பண்ணலைப்பா” என கண்களை விரித்து உதட்டை குறுக்கி அவள் சொல்லவும் மகளின் அந்த லயத்தில் தன்னை மறந்து ரசித்த பெற்ற மனம் பின்னர் “அப்படியா இல்லையே ஏதாவது நடந்திருந்தா தான நீ அப்பாவை தேடி வருவ அதான் கேட்டேன்” என பிள்ளையின் கள்ளத்தனம் அறிந்து தந்தை கேட்கவும்
பின்னர் மெதுவாக “அம்மா என்னை திட்டிட்டா ” என லேசான தேம்பலுடன் புகார் கடிதம் கொடுத்தாள் மகள்.
“என்னது உங்க அம்மாவா” என்றவர் அவளுக்கு எத்தன முறை சொன்னாலும் புத்தி வராது...சின்ன குழந்தையை திட்டாதேனு நானும் பல தடவை சொல்லிட்டேன்...எங்க கேட்கிறா” என சற்று கோபமாக சொல்லவும்
உடனே ம்ம்ம் ஆமா என்பது போல் தலையை மேலும் கீழும் ஆட்டியவாறு குஷியுடன் அவர் தோளில் ஏறி ஒய்யாரமாக சவாரி செய்து கொண்டு வந்தாள் அந்த குட்டி இளவரசி.
வீட்டிற்கும் கடைக்கும் சிறிது நேர நடைபயணம் என்பதால் மகளுடன் வீட்டின் அருகில் அவர் வரவும் “ஏய் மலரூஊஊஊஊஉ ...மலரூஊஊஉ” என்றபடி குணவதி வெளியே வரவும் சரியாக இருந்தது.
தர்மலிங்கத்தின் மனைவி தான் குணவதி.. அவர்களின் ஒரே புதல்வி தான் குட்டி இளவரசி மலர்விழி என்கின்ற மலர் . இவர்கள் திருசெங்கோட்டிற்கு அருகே குமாரபாளையத்திற்கு சற்று மேற்கே உள்ள சிறிய ஊரில் மளிகை கடை வைத்து இருகின்றனர்.அந்த ஊரில் இது கொஞ்சம் பிரபலமான கடை. அங்கு அனைத்து பொருட்களும் கிடைக்கும். அண்ணன் தம்பி இருவரும் இணைந்து கூட்டு குடும்பமாக வாழ்கின்றனர். இவரின் சகோதரருக்கு ஒரு ஆண் குழந்தை. இவர்களுக்கோ திருமணமாகி பதினைந்து வருடங்களுக்கு பிறகு பிறந்த பெண் இந்த மலர்விழி என்பதால் செல்லம் அதிகம். மேலும் அவரது சகோதரர்க்கும் ஒரே பையன் மட்டும் என்பதால் அந்த வம்சத்தின் முதல் பெண் என்பதாலும் மலர்விழியை எல்லாருக்கும் பிடிக்கும். அவளும் அதற்கு ஏற்றார் போல அதிக ஆர்பாட்டம் இல்லாமல் அமைதியாகவும், இனிமையான பேச்சும் வீட்டிற்குள்ளே அம்மாவின் சேலை தலைப்பை பிடித்து கொண்டு சுற்றும் சுட்டி பிள்ளையாக இருந்தாள்.
தந்தையின் தோளில் சொகுசாக சாய்ந்திருந்த மகளை கண்டதும் “ஏண்டி சொல்லாம எங்கடி போன...நான் எல்லா பக்கமும் உன்னை காணாம்னு தேடிட்டு இருக்கேன்” என குணவதி மகளை கடிந்து கொள்ள
“குழந்தை எங்க போறான்னு கூட தெரியாம நீ வீட்ல அப்படி என்ன பண்ணிட்டு இருந்த” என தர்மலிங்கம் மனைவியை திருப்பி கேட்டார்.
அதற்குள் வெளியே வந்த அவரது சகோதரர் “அண்ணா உள்ள வாங்க ..என்னது இது வெளியே நின்னு பேசிகிட்டு” என சொல்லவும் .
“இல்ல தம்பி... ...மணி இப்போ என்னனு பாரு....சின்ன பொண்ணு நடந்து கடைக்கு வந்திட்டா.... அவ வந்தது கூட தெரியாம இவ இங்க தேடிட்டு இருக்கா..காலம் கெட்டு கிடைக்குதுல “ என மனைவிக்கு பொறுப்பில்லை என்ற ரீதியில் அவர் திட்டவும்
“இவ்ளோ நேரம் இங்க தான் பாஸ்கர்கூட விளையாடிகிட்டு இருந்தாங்க மாமா”....என தம்பி மனைவி சமாதனம் சொன்னார்.
அதற்குள் குணவதி அவரை முறைத்த படி உள்ளே செல்ல தர்மலிங்கமும் பேசாமல் அமைதியாக மகளுடன் உள்ளே வந்தார்.
மகளை இறக்கிவிட்டவர் “நீ சாப்பிட்டியா மலரு ” என கேட்க
மகளோ தன் தாயின் முகத்தை திரும்பி பார்த்தாள்.
உடனே குணவதி “என்னை ஏண்டி பார்க்கிற....சொல்லு உங்க அப்பாகிட்ட என வேகமாக சொன்னவர் அதை சொன்னதுகுதான் இப்போ உங்க மகா சீராட்டுக்கு உங்களை தேடி வந்திருக்கா” என்றார். 1
“ஏன் தங்கம் ....உனக்கு சாப்பாடு வேண்டாமா...அப்புறம் எப்படி நீ பெரிய பொண்ணாகறது...டாக்டராகி எல்லாருக்கும் ஊசி போடறது....நல்லா சாப்பிட்டாதானே நல்லா படிக்க முடியும்” என அவர் மெல்ல மகளுக்கு அறிவுரை சொல்ல
“இல்லப்பா எனக்கு இட்லி வேணாம்” என முகத்தை சுருக்கி வெறுப்புடன் சொன்னாள் அவரின் சீமந்த புத்திரி.
“சரி வேற என்ன வேணும்...அம்மா கிட்ட கேட்க வேண்டியது தான “ என அவர் மீண்டும் கேட்க
உடனே குணவதி இடையில் புகுந்து “இங்க பாருங்க நீங்க கொடுக்கிற செல்லத்துல தான் இவ இப்படி கெட்டு போறா.....ஒரு நாளைக்கு மூணு வேளையும் தோசை வேணும்னு கேட்டா எங்க போறது.....இன்னைக்கு காலையிலும் தோசை, மதியமும் தோசை, இப்பவும் இட்லி வேண்டாம் தோசை வேணும்னு ஒரே அழுகை......அதுக்கு நான் திட்னதுகுதான் உங்களை தேடி வந்திட்டா” என நடந்தவைகளை அவர் அடுக்கவும் .
“சரி குணவதி பிள்ளைக்கு என்ன பிடிக்குதோ அதை செஞ்சு கொடுக்க வேண்டியது தான.....இல்லைனா கொஞ்சம் பொறுமையா எடுத்து சொன்னா புரிஞ்சுக்குவா...சின்ன பொண்ணுதான அதுக்கு என்ன தெரியும்......அதை போய் திட்டிகிட்டு இருக்க என்றவர் முதல்ல அவ கேட்ட தோசையை எடுத்திட்டு வா” என மனைவியை அனுப்பிவிட்டு மகளிடம் திரும்பியவர் “மலரு செல்லம் நீ அப்பா சொன்னா கேட்ப தானே” என ஆரம்பிக்கவும்
அவளோ மேலும் கீழும் தலை ஆட்ட
“அப்போ நீ இனி மதியம் பருப்பு காய்கறியோட சாப்பாடு சாப்பிடனும் சரியா...அப்பத்தான் டாக்டர் ஆக முடியும் என அவளுக்கு சமமாக இரங்கி பேச அவளும் சரிப்பா இனி நான் சாப்பிட்றேன்” என சொல்லவும் அங்கு வந்த குணவதியோ “இதை தானடி இவ்ளோ நேரம் நான் சொன்னேன்.....இப்போ உங்க அப்பா சொல்லும்போது தான் உறைக்குது உனக்கு” என கன்னத்தில் ஒரு இடி இடித்தபடி சொல்லிவிட்டு சென்றார்.
மலரோ “இங்க பாருங்கப்பா இந்த அம்மாவ” என செல்ல சிணுங்குளுடன் அப்பாவின் மடியை சரணடைந்தாள்.
மறுநாள் காலை கடைக்கு கிளம்பி கொண்டிருந்தார் தர்மலிங்கம். அப்போது “அய்யா சாமிநாதன் சார் வீட்டுல ஏதோ விசேஷமா .....கொஞ்சம் சாமான் அனுப்பி விட சொன்னாங்க ..லிஸ்ட் கொடுத்து இருக்காங்க நீங்க வரீங்களா” என முத்து கேட்கவும்
“இதோ வந்திட்டேண்டா” என்றபடி வெளியே வந்தவர் “குணவதி சாப்பாடு கடைக்கு அனுப்பிடு” என சொல்லிவிட்டு “என்னடா விசேஷம் ...நேத்துகூட அந்த அம்மா கடைக்கு வந்திருந்தாங்க ஒன்னும் சொல்லலையே” என பேசிகொண்டே அவனுடன் நடந்தார்.
இங்கு மலர்வீட்டில் “ குணவதி...... குணவதி என்று” அழைத்தபடி படி ஒரு பெண் உள்ளே வர
“வாங்க கற்பகமக்கா” என்றபடி அங்கு வந்த குணவதி “உட்காருங்க என்றவர் இருங்க குடிக்க தண்ணி எடுத்திட்டு வரேன்” என தண்ணி கொண்டு வந்து கொடுத்து விருந்தோம்பலை முடித்தவர்..... பின்னர் “இரண்டு தெரு தான் தள்ளி இருக்கீங்க...ஆனா உங்களை பார்க்கவே முடியறது இல்லை....பசங்க எல்லாம் நல்லா இருக்காங்களா...சின்னவன் இப்போ என்ன படிக்கிறான்” என விசாரிக்க
“எல்லாம் நல்லா இருக்காங்க குணவதி. எனக்கு இப்போ பேச நேரமில்லை.என்னோட இரண்டாவது பொண்ணை பார்க்க மாப்பிள்ளை வீட்டுகாரங்க வராங்க........ நேத்து நைட் தான் வரேன்னு சொன்னாங்க.....அதுனால யாருக்கும் சொல்ல முடியலை..... உமாவும் பள்ளிகோடத்துல டூர் போறாங்கனு போய்ட்டா........ ........மூத்தவளும் வெளியூர்ல இருக்கிறதால வர முடியல ...... பசங்கதான் இருக்காங்க....... பக்கத்தில எல்லாம் வேலைக்கு போய்ட்டாங்க..........பொண்ணுபிள்ளைக்கு கூட துணைக்கு ஒரு ஆள் வேணும் அதான்” என சொல்லி நிறுத்தவும்
“அச்சோ அக்கா இப்பதான் என் சின்ன ஓரகத்தி அவங்க அம்மா வீட்டுக்கு போனா ...நான் வெளியில எங்கும் வரது இல்லை...... உங்களுக்கு தெரியும்தான என்றவர் வேணா மலர் ஸ்கூல் போகாம வீட்ல தான் இருக்கா....அவளை கூட்டிட்டு போறீங்களா” என்றார்.
அவரும் “அப்படியா சரி குணவதி ...அவளை அனுப்பிவிடு......சின்ன குழந்தைங்க இருக்கிறது நல்லது தானே” என்றார். உடனே அவரும் அவளுக்கு அழகான பட்டுப்பாவாடை சட்டை போட்டு அலங்கரித்து அவருடன் அனுப்பி வைத்தார்.
“டேய் அண்ணா அது என்னோட சட்டை அதை தொடாத” என கத்தியபடி ஒருவன் ஓட
“போடா குண்டா...எப்போ பார்த்தாலும் உனக்கு தான் அம்மா புது சட்டை எடுத்து தருது ...இன்னைக்கு நான் தான் புது சட்டை போடுவேன்” என்றபடி மற்றொருவன் முன்னே ஓட
வேகமாக ஓடி வந்தவன் சட்டேன்று மோதி நின்றான். ..நிமிர்ந்து பார்த்தவன் “என்னம்மா எங்க போயிட்டு வரீங்க” என கேட்டுகொண்டே அருகில் அவர் கையை பிடித்துகொண்டு மருங்க மருங்க விழித்தபடி நின்று இருந்த மலர்விழியை அடிகண்ணால் நோட்டம் விட .
அதற்குள் “ என்னடா பண்றீங்க இரண்டு பேரும் ......ஏன்டா மாதேஸ் உங்கிட்ட எத்தனைமுறை சொல்லிருக்கேன்...இப்படி கண்ணைமூடிக்கிட்டு வேகமா ஓடிவராதேன்னு .....அடிகிடி பட்டிருந்த என்ன ஆகிறது .....உன்னை பள்ளிகோடத்துக்கு லீவு போட சொன்னது தப்பா போச்சு” என திட்டிகொண்டே எதிரில் அவனை துரத்திக்கொண்டு வந்த தனது இரண்டாவது மகனை பார்த்தவர் “ஏன்டா மோகன் அவன் தான் சின்ன பையன்...நீயாவது விட்டு கொடுத்து போகக்கூடாதா......இப்ப்டிதான் சத்தம் போட்டு அடிச்சுக்குவிங்க்ளா?” என அவனையும் சேர்த்து அதட்டவும் .
“இல்லம்மா நான் இவன்தான்” என மோகன் தமையன் மேல் குற்றம் சுமத்தினான்.
அதற்குள் அவரை யாரோ அழைக்கவும் உடனே “மாதேஷ் இந்தா மலரை கூட்டிட்டு போய் அக்கா அறையில விட்டுடு என அவளை அவன் பிடியில் ஒப்படைத்து விட்டு நீ என்கூட வா மோகன் ” என அவனை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார். 2
மாதேஷ் மலரை மேலும் கீழும் பார்த்தவன் “உன் பேரு மலரா” என தோரணையாக கேட்க
அவளோ ம்ம்ம் என்பது போல் தலையை ஆட்ட
“எத்தனாம்ப்பு படிக்கிற” என மீண்டும் கேட்க
மலர்விழியோ பதில் சொல்லாமல் அவன் முகத்தை பார்த்து கொண்டிருக்க
“ஓ உனக்கு வாய் பேச வராதா” என அவன் வருத்தமான குரலில் கேட்கவும்
“ என் பேரு மலர்விழி ...ஒண்ணாம்பு படிகிறேன்ண்ணா” என அவள் மெதுவாக சொன்னாள்.
“ஓ உனக்கு பேச வருமா...அப்புறம் ஏன் பேசாம இருந்த என்றவன் ..... என்னை பார்த்தா பயமா இருக்கா” என கண்களை விரித்து குரலை கட்டையாக்கி கடினமான குரலில் கேட்கவும்
பயந்து நடுங்கிய மலர் அழும் நிலைக்கு போய்விட சட்டென பழைய நிலைக்கு வந்தவன் “சரி சரி வா போலாம்” என ஒன்றும் நடக்காதது போல அவள் கைகளை பிடிக்கவும்
மலரோ பயந்து பின் வாங்க
“வான்னு சொல்றேன்ல” என ஒரு அதட்டல் போட்டபடி அவள் கைகளை பிடித்து வீட்டிற்குள் அழைத்து சென்றான்.
இன்னாருக்கு இன்னார் என்று எழுதி வைத்தான் தேவன் அன்று என்ற வார்த்தை மலர்விழியின் வாழ்க்கையில் பலித்து விட அவள் பிற்காலத்தில் வாழபோகும் வீட்டிற்கு அவள் நாயகனே கைபிடித்து முதலில் அழைத்து சென்ற நினைவுகள் அவள் நெஞ்சில் நிழலாட
அப்போது “என்னடி ரொம்ப நேரமா சாமிகிட்ட வேண்டிகிட்டு இருக்க....இங்க எல்லாம் வேண்டி எந்த பிரயோஜனமும் இல்லை...உனக்கு அருள் கொடுக்கும் தெய்வம் அங்க பாரு இரண்டு சன்னதி சுத்திட்டு மூணாவது சன்னதிக்கு போய்ட்டார்...உன்னோட வேண்டுதல அங்க சொல்லு” என தீபா அவள் காதை கடித்தாள்.
சட்டென தன் நினைவுகளில் இருந்து மீண்ட மலர்விழி வேகமாக திரும்பி பார்க்க மாதேஸ் இரண்டு சன்னதிகளை தாண்டி தனியாக சென்று கொண்டிர்ந்ததை பார்த்தவள் அவனை நோக்கி விரைவாக நடந்தாள். அவன் அருகே சென்றவள் “என்னங்க நீங்க பாட்டுக்கு சொல்லாம விட்டுட்டு வந்திட்டிங்க” என மெதுவாக கேட்கவும்
அவனோ நின்று அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தான்.
அந்த பார்வையின் அர்த்தம் அவளுக்கு புரிய “இல்லைங்க நீங்க வந்து வந்து” என வார்த்தைகள் தந்தி அடிக்க
அதற்குள் “என்ன மாப்பிள்ளை சாமி எல்லாம் கும்பிட்டு முடிச்சாச்சா....அடிவாரத்துக்கு போலாங்களா” என ஒருவர் கேட்கவும்
“ம்ம்ம் போலாம் பெரியப்பா என்றவன் அருகில் இருப்பவளை லட்சியம் பண்ணாமல் அவர் பின்னால் வேகமாக செல்ல மலர்விழியோ அவன் பின்னே ஓடிவந்தாள்.. உறவினர்கள் எல்லாம் சந்தோஷமாக பேசிக்கொண்டு கீழே இறங்க பேசவேண்டிய மணமக்களோ மனதில் பல்வேறு எண்ணங்களுடன் அமைதியாக வந்து கொண்டு இருந்தனர்.
“ஏம்பா கண்ணாலம் முடிச்ஞ்சு பொண்ணு மாப்பிள்ளையும் முதல்ல எங்க அனுப்பறது” என ஒரு பெரியவர் கேட்டுகொண்டே நடக்க
“ஆமா இங்க என்ன பஸ் மாத்தி போகிற மாதிரியா பொண்ணு எடுத்து இருக்கோம்...பக்கத்து தெருவிலதான அவங்க வீடு...எங்க இருந்தா என்ன...எல்லாமே ஒண்ணுதான்” என சலித்தவாறு மாதேஸின் தாயார் கூறவும்
மற்றவர்கள் என்ன பேசுவது என தெரியாமல் முழிக்க அதற்குள் “பெரியவங்க பார்த்து என்ன சொல்றீங்கிளோ அப்படியே செஞ்சிடலாம் “ என மலர்விழியின் சித்தப்பா இடையில் புகுந்து அந்த சூழ்நிலையை சமாளித்தார்.
ஒருபுறம் தங்கள் குடுமபத்தையே இடித்து பேசும் கணவர் வீட்டார்,...மறுபக்கம் தன் மகள் தன் பேச்சை கேட்கவில்லையே என்ற ஆதங்கத்தை மறைத்து திருமணத்தை நடத்தினாலும் வாடிய முகம் அவர்களின் மன நிலையை காட்ட......., யாருக்காக இவ்வளவு கஷ்டபட்டாளோ,யாரை தன் உயிராக நினைக்கிறாளோ அவனின் மனதில் தன் நிலை என்ன என்பது புரியாமல் மனம் அலைபாய இத்தனை குழப்பத்திற்கும் நடுவே அவன் கட்டிய தாலி நெஞ்சில் படும்போது எல்லாம் ஒரு இன்ப சாரல் வந்து செல்வதை அவளால் உணர முடிந்தது. இதற்காக தானே இத்தனை வருட கால போராட்டம்,எத்தனை கண்ணீர், எவ்ளோ வேதனை அனைத்தையும் தாண்டி அவள் நினைத்ததை அடைந்துவிட்டாள்.அதை நினைக்கும்போதே அவள் முகத்தில் ஒரு பெருமிதம் வந்து சென்றது.
பின்னர் மலை இறங்கியது திருமண விருந்து முடிந்து சொந்தங்கள் கிளம்ப மணமக்கள் முதலில் மணமகன் வீட்டிற்கு சென்றனர்.
வீட்டிற்கு முன் வண்டி நிற்க முதலில் இறங்கிய மாதேஸ் தன் மனைவியை விட்டுவிட்டு உள்ளே செல்லவும் அப்போது “இருப்பா என்ன அவசரம்...முதல்ல உன் பொண்டாட்டி கூட போய் நில்லு ஆரத்தி எடுத்து தான் உள்ள வரணும்” என ஒருவர் அவனை இழுத்து சென்று மீண்டும் மலர்விழியுடன் நிற்க வைத்தார்.
“இரண்டு பேரும் சேந்து நில்லுங்க” என ஆரத்தி தட்டு வைத்திருப்பவர் ஒரு அதட்டல் போட மாதேஸ் மனைவியுடன் நெருங்கி நிற்க ஆரத்தி சுத்தி முடிந்ததும் அருகில் இருந்த கற்பகம் மகனிடம் “அவளை அக்கா அறைக்கு கூட்டிட்டு போ மாதேஸ்” என சொல்லவும் சட்டேன இருவரும் திரும்பி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ள அந்த நொடி மாதேஸின் இதழில் புன்னகை தோன்ற அதை பார்த்தும் மலர்விழிக்கு அவன் அந்த நினைவுகளை மறக்காமல் இருக்கிறான் என எண்ணும்போதே அந்த சந்தோஷத்தில் அவள் முகம் நிலவு போல் ஜொலித்தது.
திருமணம் எனபது இரு மனங்கள் ஒன்றிணைந்து வாழ்வது.....தன் மனதை அவனிடம் இழந்தவள் ஒருமனதாக முடிவு எடுத்து இத் திருமணத்தை நடத்திவிட்டாள். இது சந்தோஷமா இல்லை சதிராட்டமா என தெரியாத திரிசங்கு நிலைதான் என்றாலும் அதை ஏற்றுகொண்டவனோ போற்றி காக்க மறுக்க இழப்பின் வலி இவளுக்கு சுகமாக இருக்க அவனுக்கோ அது பாரத்தின் சுமையாக தெரிந்தது. புரியாத இந்த சூழ்நிலையில் இருவரும் இல்வாழ்வில் இணைய இந்த நிலை இவர்களை எங்கு கொண்டு போய் நிறுத்தும்.விடை தெரியாத பல முடிச்சுகள் அந்த மூன்று முடிச்சில் நிறைந்திருகிறது..