• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
875
அத்தியாயம் -15

முகமெல்லாம் பயத்தில் வெளிறி இருக்க, ஆசை ஆசையாய் செய்திருந்த அலங்காரம் எல்லாம் கலைந்திருக்க , பலகடைகள் ஏறி இறங்கி வாங்கிய புடவை கசங்கி கிடக்க அழுகையும் தேம்பலுமாய் தனது படுக்கையில் கிடந்தாள் மலர்.


இப்படி நடக்கும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. ஐந்து மணிநேரத்திற்குள் அவள் வாழக்கையில் என்னன்மோ நடந்துவிட்டது. நடந்ததை நினைத்து ஒரு பக்கம் வேதனை இருந்தாலும் அதன் மறுபக்கம் அவளுக்கு சற்று நிம்மதியாகவும் இருந்தது.


ஆனால் அவளது பெற்றோர்கள் முகம் நினைவில் வர அவளது அழுகை மேலும் அதிகமானது. சில மணிநேரங்கள் கண்ணீரால் தனது உணர்வுகள் கரைத்தவள் பின்னர் மெதுவாக எழுந்து அமர்ந்தாள். அவளது படுக்கைக்கு எதிரில் முகம் பார்க்கும் கண்ணாடி இருக்க அதில் தெரிந்த அவளது கோலத்தை பார்த்து மனம் வலித்தது.


பலநாட்களாக கண்களில் காதலை தேக்கி , மனதில் ஏக்கத்துடன் இது நடக்குமா என்று அவள் மனதை அரித்து கொண்டிருந்த ஒரு நிகழ்வு இன்று அவளே சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் நடந்து முடிந்துவிட்டது. ஆம் வெகுநாட்களாக அவள் மறைத்து வைத்திருந்த பூனைக்குட்டி இன்று வெளியில் வந்துவிட்டது. ஆனால் அது வந்த விதம் தான் அவளால் இப்போதும் ஜீரணிக்க முடியவில்லை.


“நானா அப்படி செய்தேன்......எந்த நம்பிக்கையில் அந்த காரியத்தை செய்தேன்.....என்னை பற்றி என்ன நினைத்து இருப்பார்கள்.....ஐயோ அவன் ..கடவுளே அவன் என்னை பற்றி என்ன நினைத்திருப்பான்” என மனதில் எண்ணங்கள் ஓட தலையில் கைவைத்து படி அமர்ந்தாள் மலர்.


அதிகாலை நேரம் அந்த மண்டபத்தில் அனைவரும் சந்தோஷமும் உற்சாகமுமாக மோகன் மீனாட்சி திருமணத்தில் அமர்ந்திருந்தனர். தங்களது ஆசைகள் நிறைவேறும் அந்த தருணத்தை மணமக்கள் அனுபவித்து கொண்டிருக்க அதற்கு சமமான அளவு மகிழ்ச்சியில் மலரும் இருந்தாள்.



எப்போதும் இருப்பதை விட அன்று அலங்காரத்தில் மலர் மிளிர்ந்தாள். பார்த்து பார்த்து செய்த அலங்காரம் அல்லவோ அது..... . மணமக்களின் அருகில் கேலியும் கிண்டலுமாக இவர்கள் நின்று இருக்க மாதேஷும் அவனது நண்பர்களும் மோகன் அருகில் நின்று இருந்தனர்.

அப்போது “டேய் மச்சான் என்னடா நீயும் அந்த பொண்ணும் ஒரே கலர்ல ட்ரெஸ் போட்டிருக்கீங்க” என கேட்க


உடனே அருகில் இருந்தவன் “டேய் அது பொண்ணோட தங்கச்சி ......இவன் மாப்பிள்ளையோட தம்பி அப்போ போடவேண்டியது தான...என்னடா மாதேஷ் ...நான் சொல்றது சரிதான ” என மாதேஷை அவர்கள் வம்பிற்கு இழுக்க அருகில் நின்று கொண்டிருந்த தீப மலரின் காதிலும் அந்த பேச்சுகள் விழுந்தன.


அதற்குள் மாதேஷ் “டேய் சும்மா இருங்கடா....அது சின்ன பொண்ணு....இப்படி எல்லாம் பேசாதீங்க” என அவர்களை அடக்கினான்.

அப்போது தான் அருகில் நின்று இருந்த மலரை பார்த்த தீபா இருவரின் உடை நிறமும் ஒன்றாக இருக்க அவளை பார்த்து அவள் முறைக்க மலரோ முகத்தில் அசடு வழிந்தபடி “அது வந்து வந்து” என தடுமாற

பற்களை நரநரவென கடித்தபடி “அமுக்குணி மாதிரி இருந்துக்கிட்டு என்ன வேலை பண்ணிருக்க நீ.......இதெல்லாம் சரியில்லை” என அவளை எச்சரித்தாள்.

மலரோ அப்போது இருந்த உற்சாக மனநிலையில் அவள் சொன்னதை சிறிதும் கண்டு கொள்ளவில்லை. ஏனெனில் மாதேஷயும் தன்னையும் இணைத்து அவனது நண்பர்கள் பேசியதை கேட்டதில் இருந்து அவள் சந்தோஷத்தின் உச்சாணியில் இருந்தாள். அதனால் தீபா கேட்டதும் “இதுலென்ன தப்பு இருக்கு......இரண்டு பேருக்கும் ஒரே கலர் பிடிச்சிருக்கு...அதனால் போட்ருக்கோம்” என கூட அவனையும் சேர்த்து பேச வாயடைத்து நின்றாள் தீபா.


திருமணம் முடிந்து பந்தி பரிமாறும் நேரத்தில், வேண்டுமென்றே மாதேஷுடன் பாத்திரத்தை தூக்கிகொண்டு அவள் அங்கும் இங்கும் நடக்க, மாதேஷும் அவளிடம் சில வேலைகளை சொல்லிகொண்டிருந்தான். பின்னர் அனைவரும் சாப்பிட்டு முடித்து மலரின் தோழிகள் ,மாதேஷின் நண்பரகள் என இளவட்டங்கள் அனைத்தும் கடைசியாக சாப்பிட அமர, அப்போது மாதேஷின் அருகில் தேடி பிடித்து அமர்ந்தாள் மலர். அவள் வயிறு நிரம்பியதோ இல்லையோ அவளது மனம் முழுவதும் அவனே நிறைந்து இருந்தான்.


காலை விருந்து முடிந்து அனைவரும் சென்றுவிட முக்கியமான உறவினர்கள் மட்டுமே மதிய விருந்திற்கு இருந்தனர்.சில நேரங்களில் விதியின் விளையாட்டு எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரும். மலருக்கும் அப்படிதான் வந்தது.



திருமண கோலத்தில் மணமக்களை மனம் நிறைய வாழ்த்திவிட்டு காலை விருந்தை வயிறார உண்டு அடுத்ததாக அரட்டை கச்சேரிக்கு தயாரகி கொண்டிருந்தனர் உறவினர்கள். இது போன்ற நிகழ்ச்சிகளில் தான் சொந்த பந்தங்கள் உறவினர்கள் என அனைவரும் ஒன்று கூடி தங்கள் நினைவுகளை அசைபோடும் நேரம். இங்கு மண்டபத்திலும் அதுதான் நடந்து கொண்டிருந்தது.

மணமக்கள் கோவிலுக்கு சென்று இருக்க மண்டபத்தில் அனைவரும் தங்களது சொந்த பந்தங்களிடம் நண்பர்களிடம் என அமர்ந்து பேசிகொண்டிருந்தனர். 1

“உங்களை எல்லாம் பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு..... நம்ம ராசாத்தி பொண்ணு கல்யாணத்துக்கு வந்திட்டு போனது...அப்புறம் இப்பதான் வரேன்......அப்புறம் உன் மதினி, ஓரகத்தி எல்லாம் நல்ல இருக்காங்களா?” என குணவதியிடம் விசாரித்து கொண்டிருந்தார் ஒரு பெரியம்மா.

“எல்லாரும் நல்லா இருக்காங்க சின்னம்மா...நீங்கதான் சென்னைக்கு போய்ட்டு இந்த பக்கம் வரவே இல்லை.....அங்க அண்ணா, அண்ணி, ஈஸ்வர் எல்லாரும் நல்லா இருக்கங்களா” என அவர்களை நலம் விசாரித்தார் குணவதி.

அவரோ “எங்கடி வயசான காலத்தில அடிக்கடி வந்துபோக முடிய மாட்டேங்குது.....ஆமா உன்னோட பொண்ணு எப்படி இருக்கா ...பெரியவளா வளர்ந்திருப்பாளே” என கேட்டு கொண்டிருக்கும்போதே

“அம்மாஆஆஆஆஆ இந்த பாஸ்கர் என்னை அடிக்க வரான்மா” என கத்தியபடி அவள் ஓடிவர “ஏய் மறுபடியும் பேர் சொல்லி கூப்பிடறா பாரு ...அண்ணான்னு சொல்லு” என பின்னாடியே அவளை துரத்தி கொண்டு வந்தான் அவள் அண்ணன்.

“இதோ அவங்களே வந்திட்டாங்க” என தன்னை நோக்கி வந்த மகளை காட்டியவர் அவள் அருகில் வந்தவுடன் அவர்களிடம் “ இவங்க நமக்கு தூரத்து சொந்தம்....உனக்கு சின்ன அம்மாச்சி ஆகுது” என உறவுமுறையை சொல்லி இருவருக்கும் ஆறிமுக படுத்தியவர் “இரண்டு பேரும் வந்த இடத்தில கொஞ்சம் நேரம் சண்டை போட்டுக்காம இருக்க மாட்டீங்களா...நீங்க என்ன சின்ன குழந்தையா “ என கடிந்து கொள்ளவும்

“பெரியம்மா நான் ஒன்னும் செய்யலை..... இவளுக்கு தான் வாய் ரொம்ப அதிகமாகிடுச்சு.....மரியாதை இல்லாம என் ப்ரிண்ட்ஸ் முன்னாடி என்னை பேர் சொல்லி கூப்பிடறா...அப்புறம் அடுத்தது என ஆரம்பித்தவன் அது வேண்டாம் நீங்க முதல்ல இதுக்கு அவளை திட்டுங்க” என அவன் முதல் குற்றபத்திரிக்கை வாசித்தான்.

“ஏண்டி நீ சும்மாவே இருக்க மாட்டியா.....அவனைவிட ஏழு வயசு சின்னவ நீ...அவனை பேரு சொல்லி கூப்பிடலாமா.....உனக்கு அறிவிருக்கா” என குணவதி மகளை திட்டவும்

“சின்ன பொண்ணுக்கா அவ....பாவம் அவளுக்கு என்ன தெரியும்....இவன் ஏதாவது சொல்லி இருப்பான்...அதான் அவ அப்படி சொல்லிருப்பா” என பாஸ்கரின் தாய் மலருக்கு சார்பாக பேச

“சரியா சொன்னீங்க சித்தி ...அவன் தான் என்னை அடிக்க வந்தான்....நான் ஏதும் பண்ணலை ” என அப்பாவியாக முகத்தை வைத்தபடி தனக்கு சார்பாக பேசும் சித்தியிடம் தஞ்சம் அடைந்தாள்,.

“அச்சோ அம்மா இவளை பத்தி உங்களுக்கு தெரியாதா...இவ என்ன சொன்னா தெரியுமா? அடுத்த கல்யாணம் எனக்குதானா...... இங்கே ஏதாவது பொண்ணு இருந்தா பார்த்து கரெக்ட் பண்ணிக்கோடா....உன்னை எல்லாம் கார் வண்டி வச்சு பொண்ணு பார்க்க எல்லாம் நாங்க கூட்டிட்டு போய் செலவு பண்ண முடியாது .. அப்புறம் உன் முகத்தை பார்த்து பொண்ணு பயந்து அதுக்கு ஏதாவது ஆகிட்டா அப்புறம் சாட்சிக்கு நாங்க வந்து நிக்கணும்..............இந்த கும்பல்ல நீயே பார்த்துக்கோ.....எது நடந்தாலும் பொது இடமா போய்டும்...எங்களுக்கும் பிரச்சனை இல்லைன்னு சொல்றா...அத கேட்டு என் ப்ரிண்ட்ஸ் எல்லாம் சிரிக்கிறாங்க” என அவன் புலம்பவும்

அதை கேட்டதும் அவர்களுக்கு சிரிப்பு வர “என்னம்மா நீங்களும் சிரிக்கிறீங்க...இவளை கண்டிச்சு வைங்க “ என அவர்களின் சிரிப்பை பார்த்து அவன் மேலும் கடுப்பானவன் தான் தாயிடம் சீறிக்கொண்டு நின்றான்.
உடனே அவர் “ அவ சின்ன பொண்ணுடா ...ஏதோ தெரியாம பேசி இருப்பா...போடா போய் வேலையா பாரு “ என சமாதனம் சொல்ல

உடனே அந்த சின்னம்மா “அது உண்மைதான தம்பி......நீயும் படிச்சு முடிச்சு சொந்தமா தொழில் பார்க்கிறதா உங்க பெரியம்மா சொன்னா....அப்புறம் கல்யாணம் தான” என்றார்.

அதற்குள் குணவதி நாங்களும் “அத தான் சொல்லிக்கிட்டு இருக்கோம் சின்னம்மா ...ஆனா இவன் ஒத்துக்க மாட்டேன்கிறான் .....மலருக்கு கல்யாணம் பண்ணிட்டு தான் அவன் பண்ணிக்குவனாம்” என்றார்.

“இது எப்போ இருந்து...” என அதிர்ச்சியில் வாய் பிளந்த மலர் “என்னங்கடா நடக்குது......எனக்கு இத பத்தி ஒண்ணும் தெரியாதே...டேய் பாசக்கார அண்ணா உனக்கு ஏன் இந்த கொலவெறி” என கோபத்தோடு அவன் மீது பாய

உடனே குணவதி “மலரு மறுபடியும் மரியாதை இல்லாம பேசாத”... என அவளை அதட்டவும்

“அம்மா நீங்க இவன் சொல்றதை எல்லாம் கேட்காதீங்க.....நான் இவன் கல்யாணத்தில ஒட்டியாணம் காசுமாலை கேட்டு இருந்தேன்......இந்த கஞ்சூஸ் நான் கல்யாணம் பண்ணிட்டு போய்ட்டா அதெல்லாம் செய்ய வேண்டியதில்லைன்னு தப்பிக்க பார்க்கிறான்......நீங்க நம்பாதீங்க”..... . என சிறுபிள்ளைபோல அவன் மீது குற்றம் சொல்லவும்

பாஸ்கரோ சிரித்தபடி “என் குட்டி தங்கையே கண்டிப்பா உனக்கு ஒட்டியாணம் செஞ்சு தரேன் ...ஆனா உன்னோட இடுப்பைவிட உன்னோட உயரத்துக்கு செஞ்சா எனக்கு செலவு மிச்சம்...நீ என்ன சொல்ற” என கிண்டலாக கேட்கவும்

“அடேயஈஈ....” என அவள் துரத்த பாஸ்கர் அங்கிருந்த அனைவரும் சிரிக்க . அதற்குள் குணவதியை யாரோ அழைக்கவும் அவர் எழுந்து சென்றார்.

இங்கு நண்பரகள் உறவினர்களுடன் சேர்ந்து மலர் பேசிகொண்டிருக்க அங்கு வந்த மீனாவின் அம்மா அவளிடம் “குணவதி எங்கே?” என கேட்டார்.

“அம்மா அங்க தான் பேசிட்டு இருந்தாங்க சித்தி “ என்றால் அவள்.

“அம்மாகிட்ட பொண்ணு மாப்பிள்ளை வர போறாங்க...ஆரத்தி கரைச்சு வைக்க சொல்லு மலரு “ என அவர் சொல்லிவிட்டு செல்ல இரு தோழிகளும் குணவதியை தேடி சென்றனர்.

எல்லாபக்கமும் தேடிவிட்டு மணப்பெண் அறையை நோக்கி சென்றனர். அங்கு குணவதியின் குரல் கேட்க “இங்க என்ன பண்றாங்க” என்றபடி கதவை திறக்கவும் அப்போது “இல்ல சின்னம்மா மலரு இப்பதான் காலேஜ் சேர்ந்திருக்கா ..படிப்ப முடிக்கட்டும்...அவ இதுக்கு ஒத்துக்க மாட்டா “ என சொல்லிகொண்டிருந்தார்.

“நம்ம பேரு அடிபடுது” என அவள் யோசித்து கொண்டு இருக்கும்போதே உள்ளே இருந்து “இங்க பாரு குணவதி நானும் இப்போ அவசரபடலை....நீ சரின்னு மட்டும் சொல்லு...மத்தத மெதுவா பேசி முடிக்கலாம்” என்றார் அவர்.

அதற்குள் தீபா “என்னடி உள்ள போகாம அப்படியே நின்னுகிட்டு இருக்க” என கேட்கவும்

“பேசாத...கொஞ்சம் பொறு” என சைகையில் காட்டியவள் மீண்டும் உள்ளே நடக்கும் பேச்சுகளை கவனிக்க ஆரம்பித்தாள்.


“நம்ம மூர்த்திக்கு ஒரே பையன்.....எஞ்சினியர் படிப்பை முடிச்சு துபாயில வேலையில இருக்கான்.....இன்னும் இரண்டு வருஷத்தில் இங்க நம்ம ஊர்ல வந்து பிசினெஸ் செய்யபோறான்.......மூர்த்தியும் அவன் சம்சாரமும் வாத்தியாரா இருந்து ரிட்டையர் ஆனாதல பென்சன் வந்துகிட்டு இருக்கு....எந்த பிக்கள் பிடுங்கலும் இல்லை” என்றவர்


“இங்க பாரு குணவதி நானும் இப்பவே கல்யாணம்னு சொல்லலை.....நீயோ ஒத்தபொண்ண வச்சிருக்க....நாளைக்கு நங்கை கொளுந்தினு நிறைய பேர் இருக்கிற இடத்தில வாக்கப்பட்டு போய் ஏதாவது பிரச்சனைன்னு கண்ணை கசக்கிட்டு வந்து நின்னா நல்லவா இருக்கும்..... இவன் ஒரே பையன் ..எல்லாமே அவனுக்குத்தான் நல்லா யோசி” என்றார் அவர்.

முதலில் வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்த குணவதி இதை எல்லாம் கேட்ட பிறகு சற்று மனசு மாற “நீங்க சொல்றத வச்சு பார்க்கும்போது நல்லா தான் இருக்கு.,......பாஸ்கருக்கும் வயசாகிட்டு போகுது...இவளுக்கு முடிச்சதும் அவனுக்கு செய்யணும் ....ஆனா இவங்க அப்பா என்ன சொல்லுவாருன்னு தெரியலையே...அவளும் இப்பதான் காலேஜ் சேர்ந்திருக்கா...எப்படி படிப்ப நிறுத்தறது” என குழப்பமாக சொல்ல


“இங்க பாரு குணவதி...... இப்போ உறுதி வார்த்தை பேசிக்கலாம்....இரண்டு வருஷம் கழிச்சு கல்யாணத்தை வச்சுக்கலாம்.....மாப்பிள்ளை பையனும் துபாயில இருந்து வந்திடுவான்.....பொண்ணும் படிப்பை முடிச்சிடுவா......நான் என்ன சொன்னாலும் அவங்க கேட்பாங்க ....வேறா யாரா இருந்தாலும் நான் இந்த அளவுக்கு வற்புறுத்தமாட்டேன்......உன்னை பத்தி எனக்கு நல்லா தெரியும்.....நீயும் உன் புருஷனும் அதிர்ந்து கூட பேச மாட்டேங்க.......அதே மாதிரி மூர்த்தி குடும்பத்தையும் நல்லா தெரியும்.... அவங்களுக்கு ஏகப்பட்ட இடத்தில இருந்து பொண்ணு வந்திருக்கு...ஆனா அவங்க காசு பணம் முக்கியம் இல்லை......நல்ல குடும்பமா இருந்தா போதும் அப்படின்னு கேட்கிறாங்க....உன் பொண்ண பார்த்ததும் எனக்கு அவங்க நியாபகம் தான் வந்திச்சு ...அதான் கேட்கிறேன்” என்றார். 2

இதை கேட்டதும் குணவதியின் முகத்தில் குழப்பம் மறைந்து ஒரு தெளிவு வர மனதின் வெளிபாடு முகத்தில் சந்தோஷத்தை கொண்டுவர “சரிங்க சின்னம்மா...நான் இவங்க அப்பாகிட்ட பேசறேன்” என்றார்.

இங்கோ கதவின் அருகில் நின்று இருந்தவளின் இதய துடிப்பு தாறுமாறாக போய்கொண்டிருந்தது. அவர்களது ஒவ்வொரு வார்த்தையும் அவளது தலையில் இடியாக விழ கதவின் அருகில் மரத்தொடு மரமாக வேரோடி நின்றிருந்தாள் அவள். தீபாவும் இதை கேட்டு கொண்டுதான் இருந்தாள்.

அதற்கு மேல நிற்க முடியாமல் மலர் தடுமாற “ஹே பார்த்துடி” என தீபா பிடிக்கவும்

அதற்குள் சத்தம் கேட்டு திரும்பி பார்த்த குணவதி அப்போதிருந்த மனநிலையில் மகளின் முகத்தை கவனிக்காமல் “என்ன மலர் வேணும்” என கேட்க


அவளோ அதிர்ச்சியில் அப்படியே சிலையாக நிற்க அதற்குள் தீபா “உங்களை ஆரத்தி கரைச்சு எடுத்திட்டு வர சொன்னாங்க” என்றவள் மலரை இழுத்துக்கொண்டு தனியாக வந்தாள்.

அவளை ஒரு நாற்காலியில் அமரவைத்தவள் “ஹே மலர் இங்க பாரு ..இங்க பாருடி ஹே இப்போ என்ன நடந்திடுச்சுனு நீ இப்படி பேய் அறஞ்ச மாதிரி இருக்க ..... ....சரி சரி இப்போ என்ன கல்யாணம் உறுதியா பண்ணிடாங்க ...சும்மா பேசிட்டு தான இருந்தாங்க ...அதுக்கு ஏன் நீ இவ்ளோ ஷாக் ஆகிற...... ஒரு பொண்ணுன்னு இருந்தா நாளு பேர் கேட்கத்தான் செய்வாங்க ...இதுக்கு எல்லாம் கவலை படலமா ...என்ன மலர் நீ” என தோழியை சமாதனம் செய்தாள் தீபா.

அவள் அப்படி சொன்னதும் அதுவரை இருந்த முகத்தில் இருந்த கலக்கம் மறைந்து நிமிர்ந்து அவளை பார்த்தவள் “அப்படியா சொல்ற” என கண்களில் ஒரு எதிர்பார்ப்போடு அவள் கேட்கவும்

“ஆமாம் மலர்...இதெல்லாம் சகஜம் தான்...அந்த அம்மா சொன்னா உடனே நடந்திடுமா ...இது என்ன காய்கறி வியாபாரமா...விட்டு தள்ளுடி ” என அவள் சொல்ல

குணவதி பேச்சில் பயந்திருந்தவள் பின்னர் தீபாவின் பேச்சில் சற்று தெளிவாகி சும்மா பேச்சு வார்த்தை தான என்ற எண்ணத்தோடு மனதை தேற்றி கொண்டாள் மலர்.

அதற்குள் மாதேஷ், பாஸ்கர் நண்பர்கள் எல்லாரும் வர அவர்களை பார்த்ததும் முகம் சற்று தெளிந்தது. பின்னர் மீண்டும் நண்பர்கள் கச்சேரி களைகட்டி கொண்டிருக்க அங்கு வந்த குணவதி பாஸ்கரிடம் “உங்க பெரியப்பா எங்கே?” என கேட்டார்.

அவனோ “சமையல் அறையில் இருக்கிறார்” என்றவன் “எதற்கு பெரியம்மா” என கேட்கவும்

“அவர்கிட்ட சின்னம்மா ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னாங்க.....நீ அவரை போய் சின்னமாவை பார்க்க சொல்லு...நான் ஆரத்தி வேலையை முடிச்சிட்டு வரேன்” என சொல்லிவிட்டு செல்ல இங்கு மலரின் உடல் சிலிர்த்து போனது..

மீண்டும் மனதின் ஒட்டம் வேகமெடுக்க “சின்னம்மாவ அப்பா எதுக்கு போய் பார்கிறார்...அப்போ கல்யாண விஷயத்தை அப்பாகிட்ட பேசுவாங்களா...அப்பா என்ன சொல்லுவார்” என அதுவரை மறந்திருந்த பயம் மீண்டும் குடியேற அதற்கு மேல அங்கு இருக்க முடியாமல் அந்த கூட்டத்தில் இருந்து எழுந்து வெளியே வந்தாள் .


நெஞ்சம் படபடவென அடிக்க உடல் சற்று நடுக்கம் எடுக்க மனதில் எழும் கேள்விகளில் தலை வெடித்துவிடும் அளவிற்கு குழம்பி தனியாக சென்று அமர்ந்தாள்.

“கடவுளே இப்போ என்ன பண்றது...அப்பா என்ன சொல்லுவாருன்னு தெரியலையே .....இல்லை இல்லை அப்பா இதுக்கு ஒத்துக்க மாட்டார்............ஒருவேளை அந்த சின்னம்மா அம்மாகிட்ட பேசி மனச மாத்தின மாதிரி அப்பா மனச மாத்திட்டா என்ன பண்றது .... ஐயோ அப்படி எல்லாம் நடக்காது ....என்னை கேட்காம அப்பா முடிவு செய்யமாட்டார்.....என தனக்குள்ளே அவள் கேள்விகேட்டு பதில் சொல்லிகொண்டிருக்க அப்போது மலரு எங்க அப்பாவ பார்த்தியா” என்றபடி அங்கு வந்தான் பாஸ்கர்.

அவளை பார்த்ததும் புருவத்தை சுருக்கி “ஏன் மலரு ...முகமெல்லாம் இப்படி வாடிபோய் கிடக்கு....என்னாச்சு...இப்போ எதுக்கு நீ தனியா வந்து உட்கார்ந்திருக்க...உன்கூட சுத்திகிட்டு இருந்த தீபா எங்க” என சந்தேகமாக கேட்கவும்


“இல்லைணா சும்மாதான் வந்து உட்கார்ந்தேன் ..நான் நல்லாத்தான் இருக்கேன் என்றவள் இப்போ எதுக்கு சித்தப்பாவ தேடற” என கேட்டாள்.


“தெரியலை மலரு ...பெரியப்பாதான் உங்க அப்பாவ கூட்டிகிட்டு சின்னம்மா கிட்ட வா...ஒரு முக்கியமான விஷியம் பேசணும்னு சொன்னார் ...அதான் அப்பாவ தேடிட்டு இருக்கேன்” என்றான் அவன்.


ஏற்கனவே புலம்பி கொண்டிருந்தவள் இதை கேட்டது அவளது இதயம் துடிப்பதை சில வினாடிகள் நிறுத்த உலகமே தலைகீழாக சுற்றுவது போல இருந்தது. “எல்லாரும் கூடி பேசறாங்க ...கடவுளே என்ன நடக்க போகுதோ” என நினைக்க நினைக்க அவளுக்கு முகமெல்லாம் வேர்த்து கொட்டியது.

அந்த நேரத்தில் அங்கு வந்த மாதேஷ் “பாஸ்கர் உங்களை உங்க அப்பா கூப்பிட்டார் போங்க “ என சொல்லிவிட்டு செல்ல நான் அவரை தேடிட்டு வந்தேன்...அவர் என்னை தேடிட்டு இருக்காறா” என்றபடி மலரிடம் திரும்பியவன் “நான் தீபாவை வரசொல்றேன்....நீ பேசிட்டு இரு ...இப்படி தனியா இருக்காத “ என பொறுப்பான அண்ணன் தங்கையிடம் சொல்லிவிட்டே சென்றான்.


ஏற்கனவே குழம்பிகொண்டிருந்த மலர் இதை எல்லாம் கேட்டதும் அவளுக்கு பைத்தியம் பிடிப்பது போல ஆகிவிட்டது. காலையில் இருந்த அந்த உற்சாக மனநிலை மாறி பயமும் அதிர்ச்சியும் அவள் முகத்தில் நிறைந்திருந்தது.


“ஏண்டி இப்போ எதுக்கு நீ தனியா தனியா வந்து உட்கார்ந்துகிற...அங்க உன் பாசமலர் அண்ணன் என்னை திட்றான்” என சலித்தபடி மலரிடம் வந்தவள் அவள் முகத்தை பார்த்ததும் “ஏய் மலர் என்னாச்சு...ஏன் முகமெல்லாம் இப்படி வேர்த்திருக்கு என்னடி ஆச்சு” என பதறி அவள் அருகில் அமர்ந்தாள்.


அவளை பார்த்ததும் பதட்டத்துடன் “எனக்கு பயமா இருக்கு தீபா...நீதான சொன்ன.....உங்க அம்மாகிட்ட தான் பேசி இருக்காங்க......உங்க அப்பா ஒத்துக்க மாட்டார்னு ...ஆனா இப்போ நடக்கிறது எல்லாம் பார்த்தா எனக்கு பயமா இருக்கு.....அப்பா சித்தப்பா அண்ணா எல்லாரும் சின்னம்மாகிட்ட பேச போயிருக்காங்க” என அவள் நடுக்கத்துடன் கூறவும்


தீபாவுமே அதிர்ச்சியுடன் அவளை பார்த்தவள் “என்னடி சொல்ற.....ஓ அப்போ இன்னைக்கே உன் கல்யாணத்தை பேசி முடிச்சுடுவாங்களா” என அவள் சொல்லி முடிக்கும் முன் அவள் வாயை வேகமாக பொத்தியவள்
“அப்படி எல்லாம் சொல்லாத தீபா .....எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என சொல்லும்போதே அவள் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது. 3

தீபாவோ “இதுக்கு ஏண்டி அழுகிற நீ......இப்போ பேசி முடிச்சாலும் கல்யாணம் பண்றது இன்னும் இரண்டு வருஷம் ஆகும்தான ......அப்புறம் எதுக்கு பயப்படற.....எப்படியும் படிப்பு முடிச்சதும் கல்யணம் பண்ண போறாங்க.....இப்போ உறுதி வார்த்தை தான பேச போறாங்க” என அவள் சாதாரணமாக சொல்ல


மலரோ “ஐயோ புரியாம பேசாத தீபா.....எனக்கு கல்யாணமே வேண்டாம்.....கடவுளே நான் எப்படி சொல்வேன்” என அவள் அழுதுகொண்டே அரற்றவும்


அவளை சில நொடிகள் உற்று பார்த்த தீபா “நீ மாதேஷ் லவ் பண்றதான மலர். அதான இப்போ பயப்படற” என அழுத்தமாக கேட்டாள்.


அதுவரை புலம்பி கொண்டிருந்தவள் அவள் இப்படி கேட்டதும் புலம்பலை நிறுத்திவிட்டு சிறு அதிர்வுடன் அவள் முகத்தை பார்த்தாள். ஆனால் பதில் சொல்லவில்லை.
 

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
875
தீபாவோ “எனக்கு எல்லாம் தெரியும். நான் உங்கிட்ட ஆரம்பித்தில் இருந்து சொல்லிட்டு இருக்கேன்...இது வேண்டாம்..வேண்டாம்னு ....ஆனா நீ மனசில ஆசையை வளர்த்துகிட்ட...இப்போ அழுது புலம்பி என்ன பண்றது..... சரி சரி எதா இருந்தாலும் வீட்ல போய் பேசிக்கலாம்....அங்க பாரு அங்க இருக்கிறவங்க எல்லாம் உன்னையே பார்த்துகிட்டு இருக்காங்க... கண்ணை துடைச்சுட்டு சிரிச்ச மாதிரி இரு” என அவள் அதட்டவும் .


அதற்கு பின்பே அவளுக்கு தான் இருக்கும் இடத்தின் சூழ்நிலை புரிய கண்ணை துடைத்துக்கொண்டு அமர்ந்தவள் “இப்போ என்ன பண்றது தீபா......எங்க அப்பா இந்த கல்யாணத்திற்கு ஒத்துக்க மாட்டருன்னு நீதான சொன்ன...இப்போ எல்லாரும் கூடி சேர்ந்து பேசிட்டு இருக்காங்க ..எனக்கு பயமா இருக்கு” என்றாள் மலர்.


தீபாவோ அதை கண்டுகொள்ளாமல் “ஆமா நீ மாதேஷை விரும்பறது முதல்ல அவனுக்கு தெரியுமா ? “என கேட்கவும்


மலரோ பேந்த பேந்த முழித்தவள் “தெரியாது” என தலையை மட்டும் அசைத்தாள்.

“ஏண்டி உன்னை பந்திக்கே வேண்டாம்னு சொல்றாங்களாம் ,,,நீ இலை ஓட்டைனு புலம்பிட்டு இருக்க” என கிண்டலாக சொல்லவும்


மலரோ என்ன சொல்கிறாள் என புரியாமல் பார்க்க


“ம்ம்ம் இப்போ முழி......முதல்ல உன்னை மாதேஷ் விரும்பறனான்னு பாரு...அப்புறம் உங்க அப்பா பேசறத பத்தி யோசிப்போம்” என நக்கலாக சொன்னாள் .


வெடுக்கென நிமிர்ந்து அவளை பார்த்து முறைத்தாள் மலர்.


“இப்போ எதுக்கு இந்த லுக்கு.......அடியே மாதேஷோட பெரிய அக்கா பொண்ணுக்கும் உன்னோட வயசுதான்......சொந்தம் விட்டு போகக்கூடாதுன்னு ஏதாவது” என இழுத்தபடி அடுத்த இடியை அசாதாரணமாக அவள் தலையில் இறக்கினாள் தீபா..... அவள் சொல்லி முடிக்கும் முன் வேகமாக நாற்காலியில் இருந்து எழுந்தவள் “என்னடி சொல்ற” என அதிர்ச்சியுடன் அவளை பார்க்க


“இல்லடி அன்னைக்கு மாதேஷ் அம்மா எங்க அம்மாகிட்ட சொல்லிட்டு இருந்தாங்க...அதான் சொல்றேன்......ஒருவேளை மாதேஷ்கு இதில விருப்பம் இருந்தால்” என அவள் பேசிமுடிக்கும் முன் அவளை தள்ளி விட்டபடி அனல் பார்வை ஒன்றை வீசிவிட்டு விடுவிடுவென நடந்தாள் மலர் .

ஏகப்பட்ட குழப்பத்தில் அவளின் கால்கள் நேராக மணபெண்ணின் அறைநோக்கி செல்ல அங்கு அவளது பெற்றோர்கள் பேசிகொண்டிருந்தன்ர்.
“எதுக்கும் நீ உன் பொண்ணை ஒரு வார்த்தை கேட்டு சொல் தர்மலிங்கம்” என மலரின் தந்தையிடம் சின்னம்மா சொல்ல


“அதெல்லாம் தேவையில்லை..... நான் என்ன சொல்றத தான் என் பொண்ணும் சொல்லுவா ......நீங்க மத்த ஏற்பாடுகளை செய்யுங்க” என அவர் சொல்லவும்


அங்கு இருந்த குணவதி மற்றும் அவளது சித்தப்பா, சித்தி,பாஸ்கர் என அனைவரும் அதே சொல்ல “அப்போ இதில மாற்றம் இல்லையல” என மீண்டும் அவர் கேட்கவும் மலரின் தந்தை “எங்களுக்கு எப்பவும் வாக்கு சுத்தம்” என அழுத்தமாக கூறினார்.

கேட்டு கொண்டிருந்த மலருக்கோ பூமி பிளந்து நாம் உள்ளே சென்றுவிட மாட்டோமா என்ற இருந்தது. இது போன்ற ஒரு சிக்கல் வரும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. மாதேஷின் நினைவுகளை மனம் முழுவதும் வைத்துகொண்டு மற்றொருவடன் தன்னை இணைத்து பேசுவதை கூட அவள் விரும்பவில்லை. மலர்விழி என்றால் மாதேஷ்வரன் என்று மட்டுமே இருக்க வேண்டும்......வேறுபெயர் பேச்சளவுக்கு கூட தன்னுடன் சேரகூடாது என நினைத்தாள் மலர். அவளுக்கு என்ன செய்வது ...எப்படி இதை தடுப்பது என்றே புரியவில்லை.

உள்ளே சென்று அப்பாவிடம் கல்யாணம் வேண்டாம் என்று சொல்லலாம் என்றால் அவர் காரணம் கேட்பார். அவள் என்ன சொல்வாள். நான் மாதேஷை விரும்புகிறேன் என்றா சொல்வாள். அவளே மனதிற்குள் பூட்டி வைத்திருந்த காதலை இப்போது தீபாவிடம் மட்டுமே ஒப்புகொண்டால். அதுவும் அவளாக சொன்னதற்கு அவள் மறுப்பு சொல்லவில்லை. இப்படி இருக்க தந்தையிடம் சென்று அவள் எப்படி கூறுவாள். ஆனால் இதை தடுக்க வேண்டும். எப்படி என்ன செய்யலாம் என அவள் சிந்தனை காட்டாறு போல கண்டபடி ஓட அந்த நேரத்தில் பேசி முடித்துவிட்டு வெளியே வந்த பாஸ்கர் அவளை பார்த்து லேசாக சிரித்தபடி “மாட்ன நீ” என சொல்லிவிட்டு செல்ல மலரின் ஐம்புலன்களும் ஆட்டம் கண்டது.

அந்த நேரத்தில் மாதேஷின் அக்கா பெண் உன் வயது தான் என்ற தீபாவின் பேச்சும் அவள் நினைவிற்கு வர அவள் உடல் நடுக்கம் எடுத்தது.

சுவற்றின் ஓரமாக சாய்ந்து “ ஐயோ நான் இப்போ என்ன செய்வேன்” என மனதிற்குள் அரற்றியபடி சில நிமிடங்கள் அப்படியே நிற்க பின்னர் ஒரு முடிவுடன் மாதேஷை தேடி சென்றாள்.

உறவினர்கள் அந்த அறையில் குழுமி இருக்க மலரின் பெற்றோர் தலை குனிந்திருக்க ,பாஸ்கரோ கோபத்தில் கொதித்து கொண்டிருக்க, மாதேஷோ தன் வேலை முடிந்தது என்றபடி அமைதியாய் நின்றிருக்க, ,கற்பகமோ வாயில் ஏதோ முணுமுணுத்தபடி நிற்க இவை அனைத்திற்கும் காரனகர்த்தாவன மலர் அந்த அறையின் ஒரு மூலையில் தீபாவின் தோளில் சாய்ந்து அழுது கொண்டிருந்தாள்.
 
Top