• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
876
அத்தியாயம் – 16


மனம் திக் திக்கென துடிக்க, கண்களில் பயம் நிறைந்திருக்க , கை விரல்கள் சில்லிட அதை இறுக்க மூடி கொண்டு , நடுங்கி கொண்டிருந்த தன் உடலை காலின் பெருவிரலால் தரையில் அழுத்தி தன்னை நிலைபடுத்த முயற்சி செய்தபடி அவள் நின்றிருக்க

முதலில் அவளது பேச்சில் அதிர்ந்து பின் சிறித்து கொண்டே “என்ன பசங்க ஏதாவது சொன்னாங்களா ......இதெல்லாம் பெருசா எடுத்துக்காத ......போ போய் வேற வேலை இருந்தா பாரு” என சாதரணமாக சொல்லிவிட்டு திரும்பி நடந்தான்....


அவளோ “ இது யாரும் ஏதும் சொல்லி தரலை ... நான் தான் சொல்றேன்.....நான் சொல்றது எங்க சாமி மேல சத்தியம்........எனக்கு உங்களை பிடிச்சிருக்கு.....நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க விரும்பறேன்” என அவளின் உறுதி அந்த குரலில் தெரிந்தது.


ஏதோ விளையாட்டிற்கு சொல்கிறாள் என நினைத்து அவன் செல்ல அவளோ வேகமாக தனது காதலின் ஆழத்தை அழுத்தத்துடன் சொல்லவும் திடுக்கிட்டு நின்றவன் அவள் பக்கம் திரும்பி “ஏய் நீ என்ன பேசறோம்னு தெரிஞ்சுதான் பேசறியா” என குரலை சற்று உயர்த்தியவன் பின்னர் சுற்றிலும் பார்த்து யாருமில்ல என்று தெரிந்த பின்னர் மெதுவாக அவள் அருகில் வந்து “என்ன உளறிட்டு இருக்க ..........இங்கபாரு மலர் நீ சின்ன பொண்ணு இப்படி எல்லாம் பேசகூடாது...... யாரோ உன்ன வச்சு விளயாட்டு பண்றாங்க ....நீ முதல்ல படிச்சு முடி...அப்புறம் கல்யாணத்தை பத்தி யோசிக்கலாம்...என்ன புரிஞ்சுதா” என பொறுமையாக சொன்னான்.

அந்த கனிவு அவளுக்கு உத்வேகத்தை கொடுக்க நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தவள் கண்ணில் ஒரு இறைஞ்சலோடு “என்னை நம்புங்க...நான் உண்மைய தான் சொல்றேன் ........உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.....நீங்க தான் என் புருஷன்னு நான் முடிவு பண்ணிட்டேன்......நீங்க ஒத்துக்குங்க...என்னை கல்யாணம் பண்ணிக்குங்க” என சிறுபிள்ளைதனமாக அவள் சொல்லவும்

அதுவரை பொறுமையாக பேசிகொண்டிருந்தவன் நீங்க தான் என் புருஷன்னு நான் முடிவு பண்ணிட்டேன் என்ற வார்த்தையில் அவனது கோபம் எல்லை மீறி போக “ஏய்ய்ய்யய்யி!!!! என ஒற்றை விரலை அவள் முன் நீட்டி “ யாருக்கு யாருன்னு யார் முடிவு பண்றது...நானும் சின்ன பொண்ணுதான்னு பொறுமையா பேசினா நீ என்ன ரொம்ப பேசற.....இங்க பாரு இந்த வேலை எல்லாம் இங்க வேண்டாம்.....எனக்கு உங்கிட்ட அந்த மாதிரி எண்ணம் துளி கூட இல்லை......பெரியவங்களே பார்த்து உன்னை கல்யாணம் பண்ண சொன்னாலும் நான் பண்ண மாட்டேன்......இவ முடிவு பண்ணா உடனே நாங்க ஒத்துக்கணும்....இந்த வயசில என்ன திமிரு பாரு “ என கொதித்து எழவும்

அவளோ பதறி “ஐயோ சத்தியமா நான் அந்த எண்ணத்தில சொல்லலை...... நான் உங்களை மனசார விரும்பறேன்.,....உங்களோடதான் வாழ ஆசைபடறேன் ....... என் மனசு முழுக்க நீங்கதான் இருக்கீங்க......உங்களை தவிர பேச்சுக்கு கூட என்னால வேற யாரையும் நினைச்சு பார்க்க முடியலை...அதை தான் சொல்ல வந்தேன்” என அவசர அவசரமாக தான் சொல்ல வந்ததை அவனுக்கு புரிய வைக்க அவள் முயற்சி செய்ய


அவனோ அதை கண்டு கொள்ளாமல் “இதெல்லாம் என் தப்பு தான்.....உங்க கிட்ட பேசணும்னு நீ சொன்னதும் உன் பின்னாடியே வந்தேன் பாரு என்னை சொல்லணும்......கத்தரிக்கா சைஸ்ல இருந்துகிட்டு என்ன பேச்சு பேசற நீ... அப்பாவி மாதிரி முகத்தை வச்சுகிட்டு இந்த வேலை எல்லாம் பண்றியா நீ.......இதெல்லாம் உங்க வீட்டுக்கு தெரியுமா?......இரு உங்க அப்பாகிட்ட சொல்லி வைக்கிறேன்...என்ன பொண்ணு நீ ...இந்த தைரியம் எனக்கு வராதுபா” என கேலியான ஒரு பார்வை பார்த்தபடி சொன்னான்.

அவளோ அந்த கேலி பேச்சை கண்டுகொள்ளாமல் தன்னை அவனுக்கு புரியவைக்கும் அவசரத்தில் “இங்க பாருங்க இப்போ நான் என்ன தவறான காரியம் செஞ்சேன்... நீங்க இப்படி எல்லாம் பேசறீங்க....உங்களை பிடிச்சிருக்கு.....உங்களை கல்யாணம் செஞ்சுக்க ஆசைபட்றேனு .. ....... என் மனசில இருக்கிறத சொன்னேன் அது தப்பா” என வேகமாக கேட்டவள் பின்னர் குரலை தாழ்த்தி “தயவு செய்து என் நிலைமையை புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க......நானும் இப்போ இந்த மாதிரி இடத்தில் உங்ககிட்ட இதை பத்தி பேசுவேன் நினைக்கவே இல்லை... ஆனா சூழ்நிலை என்னை பேச வச்சிடுச்சு... என்ன புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க ........எங்க அப்பா எனக்கு வேற மாப்பிள்ளை என சொல்லும்போதே குரல் தழு தழுக்க ......எனக்கு எனக்கு....” என அவள் அடுத்த வார்த்தை பேச முடியாமல் அழுகையும் கேவலும் தடுத்தது.

மாதேஷோ அதுவரை அவளுடன் சரிக்கு சரியாக மல்லு கட்டு கொண்டிருந்தவன் அவளது கண்களில் கண்ணீரை பார்த்ததும் ஒரு குற்ற உணர்ச்சி வர “ஏய் ஏய் இப்போ எதுக்கு அழுகிர நீ......இங்க பாரு...இது கல்யாண வீடு......யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க ...முதல்ல அழுகைய நிறுத்து” என அதட்டவும்

உடனே கண்களை வேகமாக துடைத்தபடி அவனை நிமிர்ந்து அவன் முகத்தை பார்க்க அந்த பார்வையின் வீச்சு தாங்காமல் சற்று தடுமாறியவன் உடனே “இங்க பாரு மலர் இந்த மாதிரி எல்லாம் பேசகூடாது.....இதெல்லாம் வீட்ல பெரியவங்க பார்த்துக்குவாங்க.......என்கிட்டே பேசின மாதிரி வேற யார்கிட்டயும் பேசிடாத...... இந்த பேச்சை இதோட விட்ரு...... அப்புறம் எனக்கு உன் மேல அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்லை...... நான் நிறையா படிச்சு பெரிய வேலைக்கு போகணும்.....அதற்கு பின்புதான் இதை பத்தி எல்லாம் யோசிக்கணும் .....அப்புறம் அப்புறம் என இழுத்தவன் நான் சத்தியமா இந்த ஊரு பொண்ண கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்” அந்த அந்த வார்த்தையில் அழுத்தம் கொடுத்து சொல்லிவிட்டு திரும்பி பார்க்காமல் நடந்தான் .

அவன் சென்று வெகுநேரம் அங்கே அழுது கொண்டு நின்று இருந்தாள் மலர். அந்த பதினெட்டு வயது பெண்ணிற்கு அதற்கு மேல் இந்த சூழ்நிலையில் என்ன பண்ணுவது என்று புரியவில்லை. அவள் நினைத்தும் பார்க்காத விஷியங்கள் இப்போது நடந்து கொண்டிருந்தது. தீபா சொன்ன பிறகுதான் முதலில் மாதேஷிடம் தன் மனதை சொல்லவிட வேண்டும் என்று முடிவு எடுத்து அவனை தேடி வந்தாள். மாதேஷ் உடனே ஒத்து கொள்வான் என அவள் நினைக்கவில்லை. ஆனால் தான் சொல்வதை ஒரு பொருட்டாக கூட அவன் மதிக்காமல் போனது அவளுக்கு வலியை கொடுத்தது.



“ஐயோ இப்போதா அந்த சின்னம்மா இங்க வரணும்....எங்கப்பா ஏன் இப்படி பண்றார்....... .....இந்த மாதேஷும் வேற என்னை புரிஞ்சுக்காம பேசிட்டு போறான்......பெரிய இவனாட்ட இந்த ஊர் பொண்ணு வேண்டாம்னு சொல்றான் என்றவள் சட்டென ஐயோ அப்போ வேற ஏதாவது” என நினைக்கும்போதே அவள் இதய துடிப்பு ஒருமுறை நின்று துடிக்க ...”ச்சே ச்சே அப்படி எல்லாம் இருக்காது...... அவன் சும்மா சொல்லி இருப்பான்” என தனக்கு தானே சமாதனம் சொல்லிகொண்டவள் .... அடுத்து நான் என்ன பண்றது” என யோசித்த படியே அருகில் இருக்கும் சுவற்றில் சாய்ந்தவள் மாதேஷின் பேச்சு அவள் மனதிற்குள் ரீங்காரம் விட


“கடவுளே என் மனது அவனுக்கு புரியவில்லையா..... இல்லை நான் அவன் புரிந்து கொள்ளும் அளவிற்கு சரியாக சொல்லவில்லையா” என போட்டு குழப்பி கொண்டிருந்தாள். காதல் என்பது பூ பூக்கும் நேரத்தை போன்றது. அது எப்போது எப்படி என்பது யாருக்கும் தெரியாது. தான் நட்டு வைத்த செடி உடனே பூக்க வேண்டும் என்றால் அது எப்படி சாத்தியம்...... கட்டாயத்தின் பேரில் பாசம் வரும் ஆனால் நேசம் வருமா? அதற்கு காலத்தின் உதவியும், காதலின் உறுதியும் அவசியம் தேவை.... அதை உணரும் பக்குவம் அவளுக்கு வரவில்லை.......அதை ஒத்து கொள்ளும் மனநிலையிலும் அவள் இல்லை.இதற்கு முடிவு தான் என்ன ???????. 1


அந்த நேரத்தில் அந்த வழியாக சென்ற இரண்டு பேர் “இனி அடுத்தது நம்ம தர்மலிங்கம் வீட்டு கல்யாண சாப்பாடுதான்” என சொல்லி கொண்டு செல்லவும் மலரின் இதயமே வெடித்து விடும் போல் இருந்தது. அவர்கள் பாஸ்கரை மனதில் வைத்து சொல்ல இவள் தன்னைத்தான் சொல்கிறார்கள் என நினைத்து கொண்டாள்.

உடனே “என்னது முடிவு பண்ணிட்டங்களாஆஆஆஆஅ” என வேகமாக எழுந்தவள் “இது நடக்க கூடாது.... இப்போ என்ன பண்றது இதை நிறுத்தியே ஆகணும்” என புலம்பியபடி பைத்தியம் போல் அவள் பேசி கொண்டே மண்டபத்திற்குள் செல்ல எதிரில் வந்த தீபா “ஹே மலர் எங்கடி போன ...உங்க அப்பா அம்மா உன்னை தேடிகிட்டு இருந்தாங்க...சீக்கிரம் போ ..ஏதோ முக்கியமான விஷயம் உன்கிட்ட பேசணுமாம் ” என அவள் தன் பங்கிற்கு ஒரு வெடியை கொளுத்தி போட மலரின் முகத்தில் பேரதிர்ச்சி அப்படியே தெரிந்தது.

பதட்டத்துடன் “என்ன சொல்ற தீபா ...என்னடி பேசணும்னு சொன்னாங்க ...நான் போகமாட்டேன்” என மிரண்டு இரண்டு அடி பின்னால் நகர்ந்தாள் மலர்..

தீபாவோ அவளை ஒரு மாதிரி மேலும் கீழும் பார்க்க பார்க்க

உடனே மலர் “இல்லை அது வந்து இப்போ என அவள் சமாளிக்கும் முன் தீபாவை யாரோ அழைக்க அவள் சென்றுவிட்டாள்.

“இது என்ன புது பிரச்சனை......இப்போ எதுக்கு என்னை கூப்பிட்றாங்க ...ஒருவேளை என் சம்மதத்தை கேட்பாங்களா....அப்படி கேட்டா எனக்கு சம்மதம் இல்லைய்னு சொல்லிடலாமா” என தனக்குள்ளே கேட்டுகொண்டவள் “ஏன்னு கேட்டா என்ன சொல்றது... மாதேஷ் வேற இப்படி சொல்றான்.....அதும் அப்பா முகத்தை பார்த்ததுக்கு அப்புறம் அவரை மீறி நான் பேச முடியுமா” ......இது நடக்குமா?” என தனுக்குள்லே வார்த்தை தர்க்கம் நடத்திக்கொண்டு அவள் நின்றிருக்க

அப்போது அங்கு வந்த குணவதி “ஏண்டி அங்க எல்லாம் உன்னை தேடறோம்... நீ இங்க என்னை பண்ற.....சீக்கிரம் வா...ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” என மகளை இழுத்து சென்றார்.

மலரோ சிறு நடுக்கத்துடன் அவர் கைகளை தடுத்தபடி “அம்மா அதுக்கு முன்னாடி நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்”.....என மெதுவாக அவள் சொல்லவும்

அவரோ அவள் முகத்தை பார்க்காமலே “அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம் ...நீ முதல்ல வா” என அடக்கி இழுத்து சென்றனர்..

அறைக்குள் சென்றதும் அவளது குடும்பத்தினர் அனைவரும் அங்கு நிறைந்து இருக்க அதை பார்த்ததுமே மலருக்கு நாடி துடிப்பு எகிறியது.. ஏதோ விபரீதமா நடக்க போகுது என அவள் உள்மனதிற்கு தோன்ற கண்களில் பீதியுடன் தந்தையை பார்த்தாள்.

அவரோ அவளை பார்த்து சிரித்தபடி “ மலரு கண்ணு உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும் ...அதான் வர சொன்னேன்” என சொல்லவும்

மனசு படபடவென அடிக்க “என்ன...என்னப்பா கேட்கணும்” என அவள் வெளிவராத குரலில் திக்கி திணறி கேட்டாள்.

“எதுக்கும்மா பயப்படற....வேற ஒண்ணுமில்லை ...உன் கல்யாணம் விஷியமா” என அவர் சொல்லி முடிக்கும் முன்

அவளோ உடனே வேகமாக “அப்பா என்னை மன்னிச்சுடுங்க.......என்னால நீங்க சொல்ற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்க முடியாது...... என்னை தப்பா நினைகாதீங்க ....நான் மோகன் மாமா தம்பி மாதேஷ் விரும்பறேன். அவரைத்தான் கல்யாணம் செஞ்சுக்குவேன்....... அவரை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு...அவரை தவிர வேற யாரையும் என்னால நினைச்சு கூட பார்க்க முடியாது.....” என கண்களை மூடிக்கொண்டு கடகடவென சொல்லி முடித்தாள்.

தன் மனதில் உள்ளதை இறக்கி வைத்த நிம்மதியில் பிடித்து வைத்திருந்த மூச்சை சில நொடிகளுக்கு பின் விட்டவள் பின்னர் மெதுவாக கண்களை திறக்க எதிரில் இருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியுடன் அவளையே பார்த்து கொண்டிருந்தனர்.

ஒரு பதட்டத்தில் மனதில் இருப்பதை சபையில் சொல்லிவிட்டாள். இப்போது அனைவரின் பார்வையும் தன் மேல் இருப்பதை பார்த்தவள் பயத்தில் அழுகை வர வேகமாக தந்தையின் அருகில் சென்றவள் “அப்பா என்னை மன்னிச்சுடுங்க.... நான் தப்பு பண்ணிட்டேன்......அப்பா ...அப்பா...எனக்கு அவரை ரொம்ப பிடிச்சு இருக்குபா ....என்னை புரிஞ்சுகுங்கபா....எனக்கு அவர் வேணும்ப்பா “ என அவர் மடியில் தலையை கவிழ்த்து அவள் அழுகவும் முதலில் சுதாரித்து பாஸ்கர் தான்.

அழுதவளை தூக்கி நிறுத்தியவன் அடுத்த நொடி கன்னத்தில் இரண்டு அரை கொடுத்தான். அதுவரை அடித்திடாத தர்மலிங்கமும் குணவதியும் பதறி போய் “ஐயோ...” என எழுந்தாலும் பாஸ்கரை தடுக்கவில்லை.

“உன்னை சின்ன பொண்ணுன்னு நினைச்சிட்டு இருந்தா நீ இவ்ளோ பெரிய காரியம் பண்ணிருக்கோ ...உனக்கு யாரு இந்த தைரியத்தை கொடுத்தது.....நாங்க எல்லாம் உன் மேல எவ்ளோ நம்பிக்கை வைச்சிருந்தோம் . அதும் இப்போ கூட பெரியம்மாவும், அம்மாவும் உன்னோட கல்யாண பேச்சை எடுக்கும்போது பெரியப்பா என் பொண்ணு சின்ன குழந்தைங்க......அவளுக்கு ஒரு விவரமும் தெரியாது.... இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்னு சொல்லிட்டு இருந்தார். ஆனா நீ எங்க முகத்தில இப்படி கரிய பூசிட்டியே ... ச்சே உன்கிட்ட இதை நாங்க எதிர்பார்க்கலை...... என்றபடி கோபத்துடன் அவளை பிடித்திருந்த கையை உதறிவிட்டு அவன் முகத்தை திருப்பி கொண்டு செல்ல மலரோ திக் பிரமை பிடித்தவள் போல் நின்று இருந்தாள்.

“அண்ணன் என்ன சொல்றான்.....அப்போ அப்பா இந்தசம்பந்தம் வேண்டாம்னு தான் சொல்லிட்டு இருந்தாரா... நான் தான் அவசர பட்டு உளறிட்டனா” என நினைத்தபடி பெற்றோர்களை நிமிர்ந்து பார்க்க அவர்களோ அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உறைந்து போய் நின்று இருந்தனர்..

உண்மையில் நடந்தது இதுதான். சின்னம்மா சொன்ன சம்பந்தம் குணவதிக்கு பிடித்து போக கணவரிடம் சொன்னார். ஆனால் தர்மலிங்கமோ அவள் குழந்தை இப்போது இதை பற்றி பேசவேண்டாம் என சொல்லவும் குணவதிக்கு தனக்கு ஆதரவாக பாஸ்கரின் அன்னை, தந்தையை அழைத்து அவர்களின் கருத்தை கேட்க அவர்களும் “இது நல்ல சம்பந்தம்.இப்போது பேச்சுவார்த்தையோடு இருக்கட்டும்.. படிப்பு முடிந்ததும் திருமணம் வைத்து கொள்ளலாம்” என கூறினார். ஆனால் பாஸ்கரும் தர்மலிங்கமும் திருமண பேச்சே வேண்டாம் என்று உறுதியாக சொன்னார்கள்.சின்னமாவும் “நீங்க எதற்கும் உங்க பெண்ணிடம் கேளுங்கள்” என சொல்ல “நான் சொல்வதை தான் அவளும் சொல்லுவாள்” என நம்பிக்கையுடன் சொன்னார் தர்மலிங்கம். 2

ஆனால் குணவதிக்கு இந்த சம்பந்தத்தை விட மனசில்லை. அதனால் அவர் கொஞ்சம் பிடிவாதம் பிடிக்க சரி மலரிடமே கேட்டு விடுவோம் என முடிவு செய்து “அவள் வேண்டாம் என்று சொன்னாள் அதற்கு மேல யாரும் பேசக்கூடாது” என்றார் தர்மலிங்கம்.

அதற்காக தான் மலரை அவர் அழைத்தார். ஆனால் மலர் இருந்த குழப்பமான மனநிலையில் எதை பற்றியும் யோசிக்காமல் இந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தந்தையின் பேச்சை முழுவது கேட்காமல் தன் மனதில் இருப்பதை உளறிவிட எல்லாம் தலைகீழாக மாறி இப்போது அந்த இடமே பெரும் புயல் அடித்து ஓய்ந்தது போல் காட்சியளித்தது..

தான் அவசரபட்டு உளறியதை நினைத்து அவள் மனதிற்குள் வருந்தி கொண்டிருக்க அதற்குள் பெண் அறைக்குள் வந்த யாரோ ஒருவர் இதை கேட்க அதற்கு பின்பு சொல்லவா வேண்டும்....மெதுமெதுவாக எல்லார் காதிலும் அந்த செய்தி விழ கடைசியில் மாதேஷின் தந்தையிடம் ஒரூவர் “என்னப்பா சாமிநாதா உன் கடைசி பையனும் நம்ம தர்மலிங்கம் பொண்ணும் காதலிகிறாங்களாம். அடுத்த கல்யாணம் அவங்களது தானா..... ஒரே குடுமபத்தில இரண்டு சம்பந்தமா ...ஆனா இது நம்ம ஊர்ல இல்லாத வழக்கம் ஆச்சே.....அது எப்படி ஒத்து வரும்? எதா இருந்தாலும் ஊருக்கு கட்டுப்பட்டுதான் நடக்கணும்”.... என ஏதோ எல்லாம் முடிந்தது போல அவரின் மேல் குற்றம் சுமத்த இதுவரை அதை பற்றி ஏதும் தெரியாத சாமிநாதன் புரியாமல் முழிக்க அந்த புயல் இப்போது மாதேஷ் குடும்பத்தையும் தாக்கியது.

மதியம் விருந்துக்கு காத்திருந்தவர்களுக்கு மாதேஷ் மலரின் செய்தி செவிக்கு உணவாக அமைய அதை முடிந்த அளவு மென்னு துப்பி கொண்டிருந்தனர். சாமிநாதன் மகனை அழைத்து விசாரிக்கவும் அவனுக்கும் இது அதிர்ச்சியாக இருக்க சின்ன பொண்ணுன்னு நினச்சு பொறுமையா இவகிட்ட அவ்ளோ தூரம் சொல்லியும் இப்படி பண்ணிட்டாளே என்ற ஆத்திரத்தில் “எனக்கு இதை பற்றி ஏதும் தெரியாது.. நான் அந்த பொண்ணை விரும்பவும் இல்லை... அது தான் உளறிட்டு இருக்கு....எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை ” என உறுதியாக சொல்லிவிட்டான்.
.

அறைக்குள் சாமிநாதன் குடும்பத்தை பார்த்ததும் மேலும் அதிர்ந்த தர்மலிங்கம் எதுவும் பேசாமல் அவர்கள் முன் அமைதியாக தலை குனிய, பெரியமனிதரும் அனுபவஸ்தருமான மாதேஷின் தந்தை அவரின் நிலையை புரிந்து கொண்டு அமைதியாக நிற்க அதற்குள் பாஸ்கரின் அம்மா “அவ சின்ன பொண்ணு என்ன பேசறதுன்னு தெரியாம பேசிட்டா......நீங்க மனசில வச்சுகாதீங்க.....தயவு செய்து இதை பெருசு பண்ணாதீங்க” என கெஞ்சி கேட்கவும்

கற்பகமோ “இங்க பாருங்க இதனால எங்களுக்கு ஏதும் பாதிப்பு இல்லை...ஆனா அந்த பொண்ணு வாழ்க்கையை நினைச்சு பாருங்க.....இங்க இருக்கிறவங்க எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சு...இனி எல்லாரும் எப்படி பேசுவாங்கன்னு உங்களுக்கே தெரியும்.....பொம்பள பிள்ளையை கொஞ்சம் கண்டிச்சு வைங்க” என சுருக்கென சொல்லவும்

மலர் குடும்பத்தினர் பதில் சொல்ல முடியாமல் அமைதியாக இருக்க .மலரோ பெரும் குரலெடுத்து அழ ஆரம்பித்து விட்டாள்.

உடனே மாதேஷின் தந்தை “எங்க பையன் பக்கம் விசாரிச்சிட்டோம்...அவனுக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லையாம்.இனி நீங்க என்ன பண்ணணுமோ அது உங்க முடிவு” என சொல்லிவிட்டு தனது குடும்பத்தாரை அழைத்து கொண்டு வெளியே சென்றுவிட்டார்..மலரும் வேகமாக மண்டபத்தில் இருந்து கிளம்பி வீட்டிற்கு வந்து விட்டாள். ஆனால் அதற்கு பின்பு உறவினர்களின் பேச்சுகள், மீனாவின் பெற்றோர்களின் பேச்சுகள் என அவை எல்லாம் நினைக்கும்போதே அவளுக்கு நெஞ்சு வெடித்திடும் போல் இருந்தது.

அவனை அடைவதற்காக தானும் தன் குடும்பத்தாரும் பட்ட அவமானங்கள் அந்த கண்ணீரின் வழியாக கரைந்து கொண்டிருக்க “இவனுக்காக எத்தனை பேரிடம் நான் அவப்பெயர் வாங்கி இருக்கேன். இவன் மேல் அளவில்லாமல் அன்பு வச்சது அவளவ்வு பெரிய தப்பா” என தனக்குள்ளே கேட்டுகொண்டவள் மீண்டும் தேம்பி தேம்பி அழுதபடியே உறங்கி போனாள்.

வேலை முடித்து வீட்டிற்கு வந்த மாதேஷ் காலிங் பெல் அடிக்கவும் கதவு திறக்கவில்லை. அப்போது அங்கு வந்த அண்ணாச்சி “ தம்பி நானும் மதியத்தில இருந்து காலிங்பெல் அடிச்சு பார்த்திட்டேன். கதவை திறக்கல” என்றார்.

“ஏன் என்னாச்சு அவளோட செருப்பு இங்கதான் இருக்கு..... ...அவ வீட்ல தான் இருக்கா என்றவன் அப்போ அவள் மாடல் எக்ஸாம் எழுத போகலியா” என திருப்பி கேட்கவும்

“இல்லை தம்பி நான் நேரமே வந்திட்டேன்...ஆனா பாப்பா வரலை” என்றவர் “எதுக்கும் நீங்க போன் பண்ணி பாருங்க என சொல்லவும் அவன் அலைபேசியில் அழைக்க ரிங் போய் முடிந்து எந்த பதிலும் இல்லை.

மீண்டும் இரண்டு முறை கதவை தட்டியவன் பின்னர் தன்னிடம் இருக்கும் சாவி எடுத்து கதவை திறந்தான். அந்த கதவு ஆட்டோமாட்டிக் லாக். அதனால் உள்ளே பூட்டி இருந்தாலும் சாவி போட்டு திறந்து கொள்ளலாம். அப்படி கதவை திறந்தவன் வீட்டிற்குள் இருட்டாக இருக்க அவனுக்கோ திக் என்று இருந்தது.

“வீட்டுக்குள்ள லைட் கூட போடலை...பரிட்சைக்கும் போகலை.... என்ன பண்றா இவ” என்றபடி வேகமாக எல்லா ரூமுக்கும் சென்று லைட் போட்டவன் அவர்களது அறைக்குள் சென்று லைட் போட அங்கு கட்டிலின் ஓரத்தில் கண்களில் கண்ணீர் தாரையோடு அந்த புடவையை நெஞ்சோடு அணைத்தபடி சுருண்டு படுத்திருந்தாள் அவனின் மனைவி.
 
Top