• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
862
அத்தியாயம் -18

மலர் நிமிர்ந்து அவன் முகம் பார்க்கவும்

மாதேஷோ குற்ற உணர்ச்சியில் தலை குனிந்து நின்றான்.

பின்னர் மலர் “வாங்க கோபி அண்ணா சாப்பிடலாம்” என சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.


.

மாதேஷ் சாப்பிடும்போதே அது கடையில் இருந்து வாங்கியது இல்லை என்பதை தெரிந்து கொண்டான். அப்படி என்றால் “யார் செய்திருப்பார்? , மலர் செய்தாளா” இல்லையே அவளுக்கு அந்த வாடையே பிடிக்காதே...பின்னர் எப்படி?” என போட்டு குழப்பி கொண்டிருந்தான். அவளிடம் கேட்க அவன் முயற்சி செய்ய அவளோ பிடிகொடுக்காமல் அங்கும் இங்கும் ஓடிகொண்டிருந்தாள்.

அந்த நேரத்தில் மலரின் அலைபேசி ஒலிக்க வேகமாக அதை எடுக்க அறைக்குள் வந்தவளை இழுத்துக்கொண்டு குளியல் அறைக்குள் நுழைந்து கதவை தாளிட்டான் மாதேஷ்.

“அச்சோ என்ன பண்றீங்க நீங்க” என அவள் பதற

“ஏய் கத்தாதடி” என அதட்டியவரு அவள் வாயை மூடியவன் “நானும் உங்கிட்ட பேசலாம்னு நினச்சா நீ ரொம்ப தான் பிகு பண்ணிட்டு போற” என்றான்.

அந்த சிறிய அறையில் அவளை சுவற்றோடு சாய்த்து நிறுத்தி அவள் இடையில் கைபோட்டு நகரவிடாமல் அவன் நின்று இருந்தான்.

அவளோ அதற்கு பதில் சொல்லாமல் திமிறியபடி “விடுங்க நான் போகணும்....அத்தை கூப்பிடுவாங்க” என சொல்லவும்

“அதெல்லாம் கூப்பிடமாட்டங்க...... இப்போ நான் சொல்றத கொஞ்சம் கேளு” என அவன் அதட்டவும்

அவளோ அதை கண்டுகொள்ளாமல் “எனக்கு வேலை இருக்கு விடுங்க” என திரும்பவும் அதையே சொல்லி கொண்டிருந்தாள்.

உடனே “சாரி மலரு.....என்னை மன்னிச்சிடு......ஆபிஸ்ல ஆடிட்டிங் ...அதான் என்னால போன் கூட பண்ணி சொல்ல முடியலை............என் மேல உனக்கு கோபம் தான...எனக்கு தெரியும்......எல்லா அதிகாரிகளும் இருக்கும் போது நான் எப்படி வெளியே வரமுடியும் சொல்லு ” என அவனின் நிலையை விளக்கினான்.

அதுவரை அவன் முகத்தை பார்க்காமல் பேசி கொண்டிருந்தவள் நிமிர்ந்து அவன் முகத்தை பார்க்க அந்த பார்வையின் வீச்சு அவன் மனதை சுட “அப்படி எல்லாம் பார்க்காத...நான் உண்மையதான் சொல்றேன்...என்னை நம்புடி.....நான் தான உன்கிட்ட கடையில வாங்கி தரேன்னு சொன்னேன்...அப்படி இருக்கும்போது அதை செய்யாம இருப்பானா .....இக்கட்டான சூழ்நிலை......என்னால ஆபிஸ விட்டு வெளிய வர முடியல...அதாண்டி புரிஞ்சுக்கோ மலரு” என தான் செய்த காரியத்தின் வீரியம் புரிந்து அவன் இரங்கி பேசவும்

மலருக்கே அது புதிதாக இருந்தது.இவனுக்கு இப்படி எல்லாம் பேச தெரியுமா என மனதில் நினைத்தவள் உடனே “பரவயில்லை விடுங்க...அதான் இப்ப எந்த பிரச்சனையும் இல்லையே”... என சாதாரணமாக சொன்னவள் “ கதவை திறங்க......யாராவது வந்திட போறாங்க” என்றாள்.

“போலாம் இரு மலர் என்றவன் எப்படி சமாளிச்ச......உனக்கு தான் அசைவம் செய்ய தெரியாதே...அப்போ யார் சமைச்சது “ என அவன் மண்டையை குழப்பிகொண்டிருந்த கேள்வியே கேட்க

“ஏன் நான் தான் சமைச்சேன்” என்றவள் பெருமையாக சொன்னவள் பிறகு “நானும் பதினொரு மணிவரைக்கும் காத்திருந்தேன்...உங்ககிட்ட இருந்து போனும் வரலை.....சாப்பாடும் வரலை. உங்க போனுக்கு ட்ரை பண்ணா அது சுவிட்ச் ஆப்னு வந்திச்சு. எனக்கு மனசுக்குள்ள பயம் வந்திடுச்சு...உங்களுக்கு வேற என்னை பிடிக்காது. அதனால..........” என சொல்லி நிறுத்திவிட்டு அவன் முகம் பார்க்க

“மலரூஊஊஊஊஉ” என அவன் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிய

உடனே “இல்லைங்க அது வந்து” என அவள் தடுமாறவும்

“ நீ என்னை புரிஞ்சுகிட்டது அவ்ளோதானா” என அவன் கேட்ட தோனியே அவள் சொன்ன வார்த்தை அவனை எந்த அளவு காயபடுத்தி இருக்கிறது என்பது அவளுக்கு புரிய பதில் சொல்ல முடியாமல் பாவமாய் அவன் முகத்தை பார்த்தபடி நின்று இருந்தாள்.

அவனோ கண்களை மூடியபடி அப்படியே நின்று இருக்க

பின்னர் அவளே “ இங்க பாருங்க அதான் நான் சமாளிச்சிட்டேன் தான....நம்ம அண்ணாச்சி என்னை காலேஜ் கூட்டிட்டு போக வந்தாரு.....அவர்கிட்ட விஷயத்தை சொன்னேன்...உடனே அவருதான் தம்பி ஏதாவது முக்கியமான வேலையில இருக்கும்......அவர ஏன் சிரமபடுத்தனும்............நாம் வீட்டம்மா நல்ல சமைப்பாங்க ... நான் மட்டன் சிக்கன் எடுத்து வந்து கொடுக்கிறேன்...நீங்களே சமைச்சிடுங்க அப்டின்னு சொன்னாரு...... அப்புறம் அந்த அம்மாவும் நானும் சேர்ந்து தான் சமைச்சோம்...பக்கதுவீட்ல இருந்து வந்து உதவி பண்ணாங்க...ஆளுக்கு ஒரு வேலையா செஞ்சிட்டோம்”......என அந்த கதையை அவள் சொல்லி முடித்தாள்.

அவள் சொல்ல சொல்ல அவன் ஆச்சிரியத்துடன் கேட்டு கொண்டிருந்தவன் “உனக்கு அந்த வாடையே பிடிக்காதே...எப்படி நீ கூட சேர்ந்து சமைச்ச “ என அவன் வியப்பு மாறாமல் கேட்க


அவளோ நிமிர்ந்து அவன் கண்களோடு தன் விழிகளை கலக்க விட்டவள் பின்னர் “இது நானா விரும்பி அமைச்சுகிட்ட வாழ்க்கை......நீங்க எனக்காக எத்தனையோ விஷியங்களை விட்டு கொடுத்திருக்கீங்க .....மறுபடியும் என்னால உங்களுக்கு எந்த ஒரு ஏமாற்றமும், கஷ்டமும் வந்திடக்கூடாது....நான் அதில உறுதியா இருக்கேங்க......அதற்காக என்ன வேணாலும் செய்வேன்”...... என அழுத்தமாக சொல்லவும்

அவளது உறுதியில் பேச்சற்று நின்றவன் அவளையே இமைக்காமல் பார்த்தவன் ..... இடையை பற்றி கொண்டிருந்த கைகள் அவளை முன்னோக்கி இழுக்க, மற்றொரு கை அவள் தோல்களை வளைத்து தன் நெஞ்சோடு சேர்த்து இறுக்க அணைத்தான். அந்த பிடியே அவனது மனதின் நிலையை சொல்ல அந்த வலியும் அவளுக்கு சுகமாகவே இருந்தது.

வார்த்தைகள் சொல்லாததை அவனது அணைப்பு சொல்ல அவளுக்கும் அது புரிந்தது. மேலும் அவன் நெஞ்சில் அவள் தஞ்சமாக அந்த நேரத்தில் கற்பகத்தின் குரல் ஒலிக்கவும் வேகமாக அவனிடம் இருந்து விடுபட்டவள் “ஐயோ அத்தோ கூப்பிடறாங்க” என்றபடி கதவை திறந்து கொண்டு வெளியே ஓடினாள்.


மலர் வேகமாக ஓடிவிட மாதேஷிற்கோ அந்த உணர்வில் இருந்து வர சில நிமிடகள் பிடித்தது. எல்லையில்லா நிம்மதியில் ஒரு நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டான் அவன். பின்னே இருக்காதா வீட்டிற்கு வரும் வரை மாதேஷின் வாய் மட்டுமே பேசி கொண்டு இருந்ததே தவிர மனமெல்லாம் வீட்டின் நினைவிலே இருந்தது. மலரின் குணத்தை அவன் ஒரளவு அறிவான்...அதனாலே அவனுக்கு பயமாக இருந்தது.. அவன் குடும்பத்தாரை பற்றியும் அவனுக்கு தெரியும்.....அதான் எதா இருந்தாலும் நேரிடியாக பேசிக்கொள்ளலாம் என நினைத்து அவர்களிடம் அலைபேசியில் கூட பேசாமல் வீட்டிற்க்கே வந்தான். 1

ஆனால் இங்கு வந்து பார்த்தால் அவன் சற்றும் எதிர்பார்க்காத ஏன் நினைத்தும் பார்க்காத காரியங்களை அவன் மனைவி செய்திருக்க அதை ஜீரணிக்கவே அவனுக்கு சில மணி நேரங்கள் ஆகின. மலரின் சமயோஜித புத்தியை நினைத்து அவனுக்கு பெருமையாக இருந்தது. “சில நேரம் இந்த குள்ள கத்திரிக்கா இப்படி ஏதாவது செஞ்சு நம்மள வாய் அடைக்க வச்சிட்ரா” என சொல்லிகொண்டவன் மனம் முழுவதும் சந்தோஷத்தில் நிறைந்து இருந்தது.

மறுநாள் உறவினர்கள் அனைவரும் கிளம்ப அன்று அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லி இருந்தான் மாதேஷ். கற்பகம் எப்போதும் போல மலரால்தான் மாதேஷ் ஊருக்கு சரியாக வருவதில்லை என குற்றசாட்டும் பின்னர் “செலவு சிக்கனமாக செய்.....ம்ம்ம்ம் எல்லாருக்கும் மருமக படிச்சு வேலைக்கு போய் சம்பாரிச்சு போடுவா.... ஆனா இந்த வீட்லதான் நாங்க செலவு பண்ணி மருமகளைப் படிக்க வைக்கவேண்டியதா இருக்கு...என்ன பண்றது எம் மவன்கொடுத்து வச்சது அவ்ளோதான்” என வார்த்தையாலே அவளை சாடியவர் அப்புறம் “ என் பையன் ருசிச்சு சாப்பிட்றவன் ...அவனுக்கு நல்லா சமைச்சு போடு” என அறிவுரை பேர்ல தன் மனதின் ஆதங்கத்தையும் கொட்டிவிட்டு கிளம்பினார். மலரோ எதுவும் பேசாமல் தலை குனிந்தபடி நின்றிருந்தாள்.

ஒருவழியாக உறவினர்களை அனுப்பிவிட்டு வீட்டிற்கு வந்தவன் மனைவியை தேட அவளோ வாயில் இருந்து எச்சில் நீர் வடிவது கூட தெரியாமல் தன்னை மறந்து உறங்கி கொண்டிருந்தாள்.

மூன்று நாட்களாக ஓய்வு இல்லாத வேளையில் களைத்து , சோர்ந்து முகம் வாடி கிடக்க, தலையணை கூட வைக்காமல் அவள் படுத்திருந்த கோலத்தை பார்த்ததும் அவள் கணவனுக்கு மனம் பொறுக்காமல் அவள் அருகில் அமர்ந்து அவளை எடுத்து தன் மடியில் கிடத்தினான்.

அவள் முகத்தையே சிறிது நேரம் பார்த்து கொண்டிருந்தவன் மெல்ல அவள் தலையை உயர்த்தி தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்து கொண்டான்.அவளது மூச்சு காற்று அவன் மார்பில் பட அதில் நிறைந்திருந்த அவளது காதல் அவன் இதயத்தை துழைத்து செல்ல ஒருநொடி அவனது உடல் சிலிர்த்து அடங்கியது.

இன்று அவன் கைகளுக்குள் முல்லை கொடியாய் துவண்டு கிடப்பவளா அன்று தன் குடும்பத்தார் முன்னிலையில் அவ்வளவுஉறுதியாக நின்றாள். இப்பவும் அதை நினைத்து வியந்து போவான் மாதேஷ்.

மீனாவின் திருமணத்தில் நடந்த பிரச்சனைக்கு பிறகு மலரின் தந்தையிடம் மாதேஷ் “உங்கள் மகள் மேல எனக்கு எந்த விருப்பமும் இல்லை” என வெளிபடையாக சொல்லிவிட அதை நினைத்தே அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது..அதற்குப்பின் உறவினர்கள் எல்லாரும் மலரை குற்றம் சொல்ல அவளிடம் அழுகையை தவிர வேற எந்த பதிலும் இல்லை. ஆனால் மாதேஷுடன் தான் தன் திருமணம் என்பதில் அவள் சிறிதும் மாறவில்லை.

மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த தந்தையிடம் குற்ற உணர்ச்சியில் “என்னாலதான உங்களுக்கு இப்படி ஆகிடுச்சு...என்னை மன்னிச்சுடுங்கப்பா” என அவள் கதறி அழுதாள் மலர்..

தர்மலிங்கமோ மகளை தன் அருகில் அழைத்து அவள் தலையை மெல்ல வருடியபடி “ இங்க பாருடா தங்கம் உன்மேல அப்பாவுக்கு எந்த கோபமும் இல்லை. எனக்கும் வயசாகிடுச்சு இல்லையா அதான் உடம்பு சரியில்லாம் போய்டுச்சு......நீ கண்டத நினைச்சு குழப்பிக்காத” என ஆறுதல் சொல்லவும்


இவளுக்கோ கஷ்டத்திலும் தன்னை குற்றம் சொல்லாத தந்தையின் பேச்சு அவளின் இயலாமையை மேலும் அதிகபடுத்த “இல்லப்பா நான் தான் தப்பு செஞ்சிட்டேன்....... என்னால தான உங்களுக்கு இவ்ளோ அவமானம்” என கதறி அழுதாள்.


உடனே அவர் “அப்படி எல்லாம் இல்லைடா ...உன் சந்தோசம் தான் எங்க சந்தோஷமும்......உன்னோட விருப்பதில எனக்கு எந்த வருத்தமுமில்லை...ஆனா.......” என இழுத்தவர் “அந்த பையனே விருப்பம் இல்லைன்னு சொல்லும்போது நான் என்ன பண்ணமுடியும் மலரு” என்றார்.

அவளோ “அது எனக்கும் புரியுதுபா.....ஆனா என்ன மனசு அவரை தவற வேற யாரையும் ஏத்துக்க மாட்டேங்குது....எனக்கு அவரை பிடிச்சிருக்குப்பா ....என்னை புரிஞ்சுக்குங்கபா” என கெஞ்சவும்

“ஏண்டி கூறுகெட்டவளே அந்த பையன்தான் முடியாதுன்னு முகத்தில அடிச்சமாதிரி வந்து சொல்லிட்டு போறான்.....நீ என்னடானா அவன்தான் வேணும்னு நிக்கிற...உனக்கு புத்திகித்தி ஏதாவது பிசங்கிடுச்சா .... உங்க அப்பாவ இந்த நிலையில பார்த்ததுக்கு அப்புறமும் உன் மனசு மாறலை.....ஒரே பொண்ணுன்னு ஓவரா செல்லாம் கொடுத்தாருல்ல....அவருக்கு இதும் வேணும் இன்னும் வேனும்......இதுக்கா தவமா தவமிருந்து உன்னை பெத்தேன்......என் வம்சம் வளரணும்னு உன்னை பெத்தா நீ எங்க வம்சத்தையே அழிச்சிடுவ போல இருக்கு”என குணவதி கோபத்தில் கண்டபடி பேச

“ஐயோ அம்மா.....அப்படி எல்லாம் இல்லம்மா” என மலர் பதறவும்

அதற்குள் தர்மலிங்கம் ,”ஏய் குணவதி என்ன பேச்சு பேசற நீ...........பெத்த பொண்ணுகிட்ட இப்படியா பேசுவா” .....என அவரை அடக்கினார்.

“அம்மாவை திட்டாதீங்கப்பா ...அவங்க சொன்னதில என்ன தப்பு இருக்கு....எல்லாம் என்னாலதான” என அவள் சொல்லவும்

“உன்மேல எந்த தப்பும் இல்லமா...உன் ஆசையை எங்களால நிறைவேத்தி கொடுக்க முடியலைனுதான் எனக்கு வருத்தமா இருக்கு.........நான் மட்டும் செய்யற காரியமா இருந்தா என் உசிர கொடுத்துகூட செஞ்சிடுவேன்...ஆனா இது அப்படி இல்லையேமா” என அவர் ஆற்றாமையுடன் புலம்பவும்


“அப்படி எல்லாம் சொல்லாதீங்க அப்பா” என அவள் சொல்லி கொண்டு இருக்கும்போதே பாஸ்கரும் அங்கு வந்தான். அவர்கள் பேசியதை கேட்டவன் “பெரியப்பா சொல்றது சரிதான மலரு..... மாதேஷ் விருப்பம் இல்லன்னு சொல்லும்போது நாங்க என்ன பண்ண முடியும்.....நீயே யோசிச்சு பாரு”.......என்றான்.

அவளோ பாஸ்கரிடம் திரும்பி “ஆனா எனக்கு அவரை பிடிச்சு இருக்குண்ணா” என அந்த முடிவில் அவள் உறுதியாக இருந்தாள். 2

பாஸ்கரோ “எங்களுக்கும் மாதேஷா பிடிச்சு தான் இருக்கு மலர். ஆனா ஒரு கைல ஓசை வராது. சரி இப்போதைக்கு நீ காலேஜ் படிப்பை முடி அப்புறம் பேசிக்கலாம்” என அந்த பேச்சிற்கு அதோடு முற்று புள்ளி வைத்தான் அவன்.


காலத்திற்கு எதையும் மாற்ற கூடிய சக்தி உண்டு. இதுவும் கடந்து போகும் என்ற வாசகத்தில் பாஸ்கருக்கு நம்பிக்கை அதிகம். அதனால் நாட்கள் செல்ல செல்ல மலரின் மனம் பக்குவம் அடையும் என்ற நம்பிக்கையில் அவன் சொன்னான். ஆனால் மலரின் மனதில் நங்கூரம் போல் மாதேஷ் பதிந்திருப்பதை பாவம் அவன் அறிந்திருக்கவில்லை.

அதற்கு பின் எப்போதும் போல் மலர் கல்லூரிக்கு சென்று வர ஆரம்பித்தாள்.

அதுவரை தீபாவிடம் மாதேஷை பற்றி மறைமுகமாக விசாரித்து கொண்டிருந்தவள் இப்போது நேரிடையாகவே அவனை பற்றி பேச ஆரம்பித்தாள். முதலில் தீபாவிற்கு கோபம் வந்தாலும் இவள் சொல்லி கேட்கபோவதில்லை என் தெரிந்துகொண்டவள் அதற்கு பின் அவளும் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

தீபாவின் உதவியுடன் இரண்டு முறை மாதேஷை நேரிடியாக சந்தித்து பேசினாள் மலர். அப்போது எல்லாம் மாதேஷ் “நீ சின்ன பொண்ணு...இதெல்லாம் தப்பு......முதல்ல நல்லா படிச்சு வேலைக்கு போ....அப்புறம் இதை பத்தி யோசிக்கலாம் என அறிவுரை சொல்வான்... அவளோ ம்ம்ம் என தலையை ஆட்டியபடி கேட்டுவிட்டு கடைசியில் கிளம்பும்போது ஆனால் “உங்களை எனக்கு பிடிச்சிருக்கு” என்ற வார்த்தையை சொல்லிவிட்டுதான் செல்வாள். மாதேஷோ “இவள் திருந்தவே மாட்டாளா ...இவ்ளோ நேரம் பொறுமையா எடுத்து சொல்றேன் எல்லாம் கேட்டுட்டு இப்படி சொல்லிட்டு போறாளே “என அவன் தான் புலம்பி கொண்டு இருப்பான்..

அவளது கல்லூரி படிப்பு முடிய மீண்டும் இந்த பிரச்னை தலை தூக்கியது. குணவதி அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார். அன்றுமுதல் அவர்கள் வீட்டில் எப்போதும் சண்டையும் சச்சரவும் தான். மலரும் தன் முடிவில் இருந்து உறுதியாக இருக்க மாதேஷும் அவனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை..இடையில் பெற்றோர்கள் தான் மாட்டி கொண்டு முழித்தனர். இந்த முறை மலர் மாதேஷை சந்திக்கும் போது தனது முடிவை அவனிடம் ஆணித்தரமாக சொல்லிவிட்டு வந்துவிட்டாள்.அதுவரை இதை சாதாரணமாக நினைதுகொண்டிருந்தவன் அப்போதுதான் நிலமையின் விபரீதம் அவனுக்கு புரிந்தது.

அதற்குள் பாஸ்கருக்கு திருமணம் செய்ய தர்மலிங்கம் விரும்பினார்.. தீபாவின் ஜாதகம் அவனுக்கு ஒத்து வந்ததால் ஒரே ஊர் என்பதாலும் பெரியவர்கள் பேசி முடிக்க பாஸ்கர் முதலில் மறுத்தான். மலர் திருமணம் முடியட்டும் என சொல்ல ஆனால் தீபாவின் பெற்றோர் தங்கள் மகளுக்கு உடனே திருமணம் முடிக்க வேண்டும் என வற்புறுத்த மேலும் மலரும் அழுது புரண்டு அவனை சம்மதிக்க வைத்தாள். வேறவழி இல்லாமல் அவர்கள் திருமணமும் இனிதாக நடந்து முடிந்தது..

அந்த திருமணத்திலும் மாதேஷ் மலரின் கதை உறவினர்கள் மத்தியில் பேசப்பட ஆனால் மலரோ அதற்கும் அசரவில்லை.தனது நிலையில் தெளிவாக இருந்தாள். அவளது அந்த உறுதி எதற்கும் அசராத மாதேஷின் மனதையும் சற்று அசைத்து பார்த்தது.


இன்று குழந்தைபோல தன் அணைப்பில் இருக்கும் இவளிடமா அந்த உறுதி இருந்தது என நினைத்து பார்க்கும்போதே தன் மனைவியை பற்றிய ஒரு பெருமிதம் மனதிற்குள் பொங்கியது. அந்த ஆசையில் அவள் நெற்றியில் தனது அச்சாரத்தை பதித்தவன் மெல்ல மெல்ல அவள் கண் ,காது மூக்கு என படிப்படியாக கீழே இதழ்களுக்கு வரவும் அவள் அசதியில் முனகவும் சரியாக இருந்தது.

“அம்மா வலிகுதுமா” என அவள் கை கால்கள் முறுக்கியபடி அசைந்தவள் அவன் கைகளில் இருந்து உருண்டு படுக்கையில் விழுந்தாள்.

“அச்சோ ரொம்ப வலிக்குதா” என கேட்டபடி வேகமாக எழுந்து அவளது கால்களை பிடித்துவிட்டான். அது சுகமாக இருக்க அவளது முனகல் குறைந்து உறங்க ஆரம்பித்தாள். அன்று வெகுநேரம் அவளுக்கு கைகால்கள் பிடித்துவிட்டபடி இருந்தான் மாதேஷ்.

மறுநாள் காலை அலாரம் சத்தம் கேட்டு கண்விழித்தவல் வேகமாக எழ முயல ஆனால் மாதேஷின் அணைப்பில் இருந்து அவளால் வெளிவர முடியவில்லை.,ஒரு நிமிடம் இது கனவா நினைவா என தன்னை தானே கில்லி பார்த்து கொண்டவள் சுள்ளென வலிக்க “அப்போ இது நிஜம் தான்” என வாய் விட்டு சொல்லவும்

“ம்ம்ம் அதான் தெரியுதுல்ல பேசாம தூங்கு “ என்ற குரல் மாதேஷிடம் இருந்து வந்தது.வேகமாக நிமிர்ந்து அவன் முகத்தை பார்க்க அவன் உறங்கி கொண்டிருந்தான்.

அவளுக்கே குழப்பமாக இருக்க அதற்குள் அவளது மனசாட்சி “ஏன் மலர் இரண்டு நாட்களுக்கு முன் அவனிடம் வாங்கிய திட்டு பத்தலையா...இன்னும் வேணுமா” என கேட்கவும் “என்னது மறுபடியுமாஆஆ “ என அலறியபடி அடித்துபிடித்து எழுந்து வெளியே வந்தாள்.


அன்று விடுமறை என்பதால் மெதுவாக எழுந்த மாதேஷ் மனைவியை தேடி சமையல் அறைக்கு வந்தான்.

“மலர் எனக்கு கொஞ்சம் காபி வேணும் ” என கேட்டுகொண்டே அவள் தோள்மேல் கையை போட்டான். இரவு நடந்தது அவளுக்கு எதுவும் தெரியாததால்

திடுக்கிட்டு திரும்பியவள் தனது கணவனை மேலும் கீழுமாக பார்க்க

அவனோ இதழில் கேலி புன்னகையுடன் தனது புருவத்தை உயர்த்தி என்ன என்பது போல கேட்கவும் அவளுக்கு மயக்கம் வருவது போல இருந்தது.

தடுமாறி தன்னை சரி செய்து கொண்டவள் அவனையே பார்த்துகொண்டிருக்க “ஏய் என் முகத்தையே ஏன் பார்க்கிற...அங்க காபி தூள் போடு” என்றவன் பின்னர் அவளுடன் சேர்ந்து அவனும் காபி போட்டான். 3

“ஹே இந்தா காபி” என ஒரு கப்பை அவள் முன் நீட்ட அப்போதுதான் சுய நினைவிற்கு வந்தவள் “என்னங்க நல்லத்தான இருக்கீங்க” என கேட்டாள். அவளுக்கு வேறு எப்படி கேட்பது என்பதும் புரியவில்லை.

“ஏன் நான் நல்லாத்தான் இருக்கேன்...வா டிவி பார்த்துகிட்டே பேசலாம்” என்றவன் சோபாவில் அவளை தன் அருகில் அமர்த்திகொண்டான். அவன் சாதாரணமாக அமர்ந்தபடி டிவி பார்க்க மலருக்கோ கொஞ்சம் பதட்டமாகவே இருந்தது.

“ஏங்க சாரிங்க.....கொஞ்சம் அசதியில தூங்கிட்டேன்.....அதான் நைட் உங்களுக்கு சாப்பாடு போட முடியலை....நீங்க சாப்டிங்களா ...என் மேல கோபமா ” என கேட்கவும்

அவனோ “ஹே இதுக்கு எதுக்கு சாரி...நான்தான் உங்கிட்ட சாரி கேட்கணும்.....உனக்கு எந்த விதத்திலும் என்னால உதவி பண்ண முடியலை” என்றான்.

அவன் அப்படி சொன்னதும் ஹப்பா நல்ல மூட்ல தான் இருக்கான் என மனதில் நினைத்தவள் பின்னர் “அதனால என்னங்க பரவாயில்லை.....ஆனா என்ன சமையல் தான் கொஞ்சம் சொதப்பிடுச்சு .....அத்தை ஏதாவது சொன்னாங்களா “ என பயத்துடன் கேட்டாள்.

“ம்ம் சொன்னாங்க சொன்னாங்க என்றவன் “இங்க பாரு மாதேஷ் உன் பொண்டாட்டி இந்த அளவுக்கு பொறுப்பனவளா இருப்பான்னு நினைக்கவே இல்லை. அத்தனை பேருக்கும் முகம் சுளிக்காம சமைச்சு போட்டதும் அதே நேரத்தில் வீட்டை சுத்தமா வச்சிருந்ததும் பார்க்கும்போது எனக்கு சந்தோஷமா இருக்கு.....நான் கூட பயந்துகிட்டு இருந்தேன்......ஆனா நம்ம வீட்டுக்கு ஏத்த மருமகதான்.... எனக்கு இப்போ மனசு நிறைவா இருக்குனு சொன்னாங்க” என அவரை போலவே சொல்லி காட்டினான்.


“என்ன சொல்றிங்க நிஜமாவா “என அதிர்ச்சி மேல் அதிர்ச்சியில் அவள் திக்குமுக்காட

“உண்மையை தான் சொல்றேன் சந்தேகமா இருந்தா நீயே எங்க அம்மாகிட்ட கேட்டுக்கோ” என்றான் அவன் .


அவளோ “என்னால நம்பவே முடியலை......உங்க அம்மா ,,,உங்க அம்மா இத சொன்னாங்களா” .,,,என திரும்ப திரும்ப கேட்டாள் அவள்.


“ஆமாம் எங்க அம்மா தான் சொன்னாங்க ....உனக்கு தெரியுமா ? உன்னை முதல்ல வேண்டாம்னு சொன்ன எங்க அம்மா கோவில்ல உன்னை பார்த்ததுக்கு அப்புறம் வீட்டுக்கு வந்ததும் டேய் அந்த பொண்ணுதான் உன்னை இந்த அளவுக்கு விரும்புது.......பாவம்டா அது.......நீயும் தான் சரின்னு சொல்லேண்டா......இந்த இரண்டு வருஷத்தில நாங்க சொல்ற பொண்ணும் நீ கட்டிக்க மாட்டேன்கிற ......இந்த பொண்ணும் உன்மேல உசிரே வச்சிற்கு....ரொம்ப பிகு பண்ணாத ...பேசாம இந்த பொண்ணையே நாங்க பேசி முடிக்கட்டுமா...யோசிச்சு பதில் சொல்லுனு சொன்னாங்க” என அவன் சொல்லி முடிக்கவும் மலரோ பேச்சற்று அமர்ந்திருந்தாள்.

அன்று அந்த கோவிலில் நடந்த நிகழ்வு இன்று நினைத்தாலும் மலருக்கு குளிர் காய்ச்சல் வந்துவிடும். இன்றும் கற்பகத்தை பார்த்து மலர் மிரண்டு போவது அப்போது அவர் பேசிய பேச்சுகள் தான்......ஆம்திருமணத்திற்கு முன் ஒருமுறை மாதேஷ் பிறந்த நாள் அன்று குடும்பத்துடன் கோவிலுக்கு வந்திருந்தான். ஐயரிடம் அர்ச்சனை தட்டை கொடுத்து அவனின் பெயர் நட்சத்திரம் எல்லாம் சொன்னார் கற்பகம்.


அப்போது வேகமாக ஒரு பெண் வந்து ஐயரிடம் அர்ச்சனை தட்டை கொடுத்து “சாமி நேரமாச்சு கொஞ்சம் எனக்கு முன்னாடி அர்ச்சனையை முடிச்சிடுங்க...மற்றவங்களுக்கு அப்புறம் பண்ணிக்குங்க” என்றவள் பெயர் நட்சத்திரத்தை சொன்னதும் அங்கு இருந்தவர்கள் அனைவரும் திகைத்து போயினர்.

ஆம் மலர்தான் மாதேஷின் பெயர் சொல்லி அர்ச்சனை தட்டை நீட்டி அதுவும் தனக்கு முதலில் அர்ச்சனை பண்ண சொல்லி கேட்க கற்பகமோ கொதித்து எழுந்துவிட்டார். மாதேஷ் குடும்பம் தான் அங்கு நிற்கிறது என்பது அவளுக்கு தெரியாது. அவள் வந்த அவசரத்தில் ஐயரிடம் பேசிவிட்டு கண்களை மூடி சாமி கும்பிட்டு கொண்டிருந்தாள்.

அர்ச்சனை முடிந்து வெளிவந்ததும் கற்பகம் அவளை நிற்க வைத்து கேட்ட கேள்விகளில் கூனி குறுகி போனாள் மலர். ஆனாலும் பிறந்த நாள் அன்று மாதேஷை கோவிலில் பார்த்தது அவள் மனதிற்கு ஒரு புறம் சந்தோஷத்தை அளித்தது. வீட்டிற்கு சென்றவள் ஒருவாரம் காய்ச்சலில் படுத்துவிட்டாள்.


ஆனால் அதே கற்பகம் தனக்கு சப்போர்ட் பண்ணி பேசினாரா ...அதுவும் தன்னை கண்டபடி திட்டிய அன்றே பேசினாரா என நினைத்து பார்க்கும்போது அவரின் மேல் ஒரு மரியாதையை அவள் மனதில் எழுந்தது.



அதற்கு பின்னர் வந்த நாட்கள் இருவருக்கும் இடையே சந்தோஷமாக சென்றது.

அதே நேரத்தில் சின்ன சின்ன சீண்டல்கள் ,சண்டை ,சமாதானம் என போய்கொண்டு இருந்தன. அதைவிட மலருக்கு படிப்பில் இருந்து விடுதலை கிடைத்தது. அதாவது மாதேஷ் அரசு தேர்வுக்கு தன்னை தயார் படுத்தி கொண்டு இருந்ததால் மலரின் படிப்பில் அவனால் கவனம் செலுத்த முடியவில்லை. அவனும் கொஞ்சம் ப்ரீயாக விட்டு விட்டான்.

மாதேஷின் மாற்றம் மலருக்கு உற்சாகத்தை கொடுக்க அவளுக்குள் ஒளிந்திருந்த குறும்புத்தனங்கள் மெல்ல மெல்ல வெளி வர தொடங்கியது.



மேலும் கல்லூரியில் தோழிகளின் நட்பும் அவளுக்கு மேலும் உற்சாகத்தை கொடுக்க சந்தோஷத்தின் உச்ச நிலையில் இருந்தால் மலர். சில நேரங்களில் அவர்களுடன் சேர்ந்து வெளியே செல்வதும் பின்னர் மாதேஷிடம் வந்து திட்டு வாங்குவதும் அவளுக்கு பழக்கமாகி விட்டது.




நாட்கள் இப்படி செல்ல ஒரு நாள் அவளை அருகில் உள்ள கோவிலுக்கு அழைத்து சென்றான் மாதேஷ். சேலம் வந்த பிறகு இப்போது தான் முதன் முறையாக அவனுடன் வெளியில் செல்கிறாள் மலர். கடவுள் தரிசனம் முடித்துவிட்டு வெளியில் வந்தவர்கள் அங்கு ஓரு இசைகச்சேரி நடக்க அதை கேட்டுவிட்டு செல்லலாம் என்றான் மாதேஷ்.



மலரும் சரி என்று சொல்ல அங்கு சென்று அமர்ந்தனர். மாதஷோ இசையில் மூழ்கி இருக்க மலரோ அவரின் அலங்காரத்தை ரசித்து கொண்டிருந்தாள். சிறிது நேரத்திற்கு பிறகு அவளால் அங்கு உட்கார முடியவில்லை.நெளிய ஆரம்பித்துவிட்டாள்.

“ஏங்க வீட்டுக்கு போகலாம்.....மாவு ஆட்டனும்” என சொல்லவும் மனமில்லாமல் எழுந்து வந்தவன் வரும் வழி எல்லாம் அந்த பாடகியை பற்றி புகழ்ந்து பேசிகொண்டே .வந்தான். நடக்க போகும் விபரீதம் தெரியாமல் மலரும் அவனுக்கு ஒத்து ஊதி கொண்டு வந்தாள்
 
Top