• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நேசம் - 9

Gowri Yathavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
26
36
13
Srilanka
நேசம் - 9
MEME-20240624-111949.jpg





அன்று கடையில் ஒரே கூட்டம். எப்போதும் கவுன்ட்டரில் நிற்பது கென்றி தான். அன்று ஏதோ ஓர் அலுவலாக வெளியே சென்று வந்தவன், வாசலில் வரும் போதே கடையின் இரைச்சல் தாங்காது,

"குமார்... கெல் ஏ லு பிரோப்பிலம். ஏ பொக்குவா ஏ சே சீ பிறியோ? (என்ன அங்க சத்தம்? என்ன பிரச்சினை குமார்?" என்றான்.

{எனக்குப் பிரஞ்சு தெரியாது. பிழை இருந்தால் மன்னிக்கவும். இனி பிரஞ்சில் கதைப்பதைத் தமிழில் தருகிறேன். ஆனால் அவன் பிரஞ்சில் தான் கதைப்பான்.}

அவன் கேட்டதும் குரல் வந்த திசை திரும்பியது கடையில் நின்ற கூட்டத்தின் பார்வை.

"வாங்கோ கென்றி... இந்தப் பாெடியன் இருக்கிறான் தானே." என்று கவுண்டர் முன் நின்ற கறுவலைக் காட்டிய அந்தக் குமார் என்று அழைக்கப்படுபவன், அவனும் இலங்கைத் தமிழ் தான். அவன் கடையில் தான் பல ஆண்டுகளாக வேலை செய்கிறான்.

"இவன் பிஸ்கி போத்தல் ஒண்டை எடுத்து உடைச்சிட்டான் கென்றி. உடைச்ச பொருளுக்குக் காசு தா எண்டு கேட்டா, தர ஏலாதாம். அடம் பிடிக்கிறான்." என்றான் பிரஞ்சில்.

அவனை ஏற இறங்கப் பார்த்த கென்றி.

"சரி விடு போகட்டும். வேற ஏதாவது எடுத்திருந்தா, அதுக்கு மட்டும் காச வாங்கிட்டு விடு!" என்றவன் அவனுடன் வந்த மற்றையவர்களை நோட்டமிடத் திரும்பும்போது தான் அவளைக் கண்டான். அவனையே சுவாரசியமாகப் பார்த்துக் கொண்டிருந்தவள், அவனது பார்வை தன்னை நோக்கித் திரும்பியதும், அவசரமாகப் பார்வையைத் திருப்பிக் கொண்டவளைக் காண்கையில் சிரிப்பு தான் வந்தது.

உதட்டில் உதிர்த்த புன்னகையினை வலுக்கட்டாயமாகப் பற்களோடு அழுத்தி மறைத்துக் கொண்டு, அவளை நோக்கி ஓர் அடியினை எடுத்து வைக்கவில்லை.

"நோ கென்றி... என்னால இவனைக் கவனிக்க ஏலாது. இவன் என்னோட வந்த வருகைக்கு அப்பவே துரத்தி அடிச்சிருப்பன். மற்ற சனத்தைக் கவனத்தில வைச்சுத்தான் அமைதியா இருந்துட்டன். நீங்களே இவனைக் கவனிச்சு அனுப்புங்க." என்றவன் பார்வையோ கறுவலை வெட்டினால் என்ன என்று இருந்தது. அவன் மட்டும் என்ன சும்மாவா? அந்த ஊரின் தாதா அவன். கூட்டம் நின்றதனால் அவன் தலை தப்பித்தது. இல்லையென்றால், இவனே விட்டிருந்தாலும், கூட வந்திருந்த கருங்குரங்குகள் அவன் ரத்தத்தை உறிஞ்சி இருப்பார்கள். [அடோய் உங்கட சண்டைய அவன் பாப்பானா, மனசில படிஞ்சவளோட கதைப்பானா? ஏனடா இப்பிடி செய்யிறீங்கள்? ஒரு பிள்ளையில ஆசைப்பட்டது பிழையாடா?]

கையில் தந்த பொருளைக் கீழே விழுத்தி உடைத்தது போன்ற உணர்வு அவனுக்கு. அவளையே பார்த்தவாறு கவுன்ட்டர் சென்றவன், அவன் எடுத்து வந்த கூடையில் இருந்த பொருள்களை எடுத்துப் பையில் போட்டு விட்டு அதற்கான காசினையும் வாங்கிக் கொண்டு,

"இனி இந்தக் கடைக்கு வராதங்கோ" என்றான் கொஞ்சம் இறுக்கமான குரலில். பின்னே தன் தொழிலாளியையே பயப்பட வைக்கும் ஒரு வாடிக்கையாளர் அவனுக்குத் தேவையில்லை. பொருட்களை வாங்கிக் காெண்ட காட்டெருமை,

"ஆ பி தா..." என்று குமாரை முறைத்தவாறு வெளியேறினான். அவன் வெளியேறும் வரை பொறுமை காத்த கென்றி.

"ஏன் குமார்? உனக்குத் தெரியாதா பொருள் கடைய விட்டு வெளியால போனாப்பிறகு தான் அந்தப் பொருளுக்கு முழுப்பொறுப்பும் அவயளோடது எண்டு. கடைக்குள்ள என்ன நடந்தாலும் எதுவும் கேக்கேலாது. அதோட சனம் நிக்கிற நேரம் இப்பிடி சத்தம் போட்டா, சனம் குழம்பிடாதா? நாளைக்குக் கடைக்கு வர யோசிப்பினம். கொஞ்சம் பாத்து நடக்கோணும்." என்றான்.

"ஐயோ கென்றி… அது தவறதுலா விழுந்து உடைஞ்சிருந்தா ஓகே. அவங்கள் ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு போத்தில எடுத்து வாள் சண்டை போட்டு விளையாடுறாங்கள். கேட்டா உன்ர வேலைய பார் எண்டாங்கள். அதான் கோபம் வந்திட்டு." என்றான் தன் விளக்கமாக.

"ஓ... சரி விடு! இனி வரமாட்டாங்கள். ஆனா சனத்துக்கு நடுவில கதைக்கேக்க கொஞ்சம் பாத்து கதை." சிறு எச்சரிப்போடு பிரச்சினையை முடித்தவனது செயல் அங்கு நின்றவர்களை உண்மையில் கவர்ந்து தான் போனது.

உண்மை தான் சற்று முன்னர் நடந்த சண்டையில் அத்தனை தீவிரம். வந்தவர்கள் குறிப்பிட்ட ஒரு கும்பலைச் சேர்ந்தவர்கள். பிரான்சில் அவர்கள் பெயரைக் கேட்டால் யாருக்குமே நடுங்கத் தான் செய்யும். அவர்களைக் கூட நாசுக்காக அனுப்பியதும் இல்லாமல், இனி இங்கு வராதே என்ற அவனது தைரியம் யாருக்கும் வராது.

இவர்களது சண்டையில் தன் காதல் கிளி பறந்திருக்குமே, அவசரமாக அவள் நின்ற இடத்தை ஆராய்ந்தான். அவள் அங்கு இல்லை. சற்று தொலைவே இருந்த ஃபான்சி பொருட்கள் வைத்திருந்த பகுதிக்குள் நுழைந்தவள் விழிகள் என்னமோ அவனிடம் தான் இருந்தது.

அந்தப் பார்வை, அவனுள் ஔிந்திருந்த வண்ணத்துப்பூச்சிகளைப் பறக்கவிட, கண்ணாலேயே அம்பு விட்டுக் கொண்டிருந்த இருவரது யுத்தத்தையும் கலைக்க நினைத்தான் ஒருவன்.

"மூசூ மிஸ்சூ..." குரல் கேட்டுச் சட்டெனத் திரும்பியவன் முன் குவிந்திருந்த பொருட்களைப் பார்த்ததும் புஸ் என்று ஆகியது.

இதுக்கு பில் போட்டு முடிக்கிறதுக்குள்ள, மயில் பறந்திடுமே!

"மூசூ..." என்றவாறு அதற்கான பில்லினை மனமே இல்லாது போட்டவன், காசினை வாங்க நிமிர்ந்தபோது தான், அவன் பின்னே நின்ற அவளைக் கண்டான்.

தூரத்தே நின்ற சிட்டு இப்போது அருகில் எனும்போது, சற்று பதட்டமாகத் தான் இருந்தது.

"மூசூ மெதம்." என்றவன் வணக்கத்திற்குப் பதில் வணக்கம் வைத்தவளையே பார்த்தவாறு பொருட்களின் விலையினைப் போட்டவன்,

"நீங்கள் வடிவா இருக்கிறீங்கள்" என்றான் கொஞ்சமும் வெட்கமே இல்லாது. இங்கெல்லாம் ஒருவரைப் பிடித்து விட்டால் நாட்கணக்கில் பின்னால் திரிந்து தான் காதலிக்க வேண்டும் என்றில்லை. முதல் பார்வையிலேயே எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது. உனக்கு என்னைப் பிடித்தால் சொல், சேர்ந்து வாழலாம். இவ்வளவு தான். மறுத்தால் இலகுவாகக் கடந்து போய் விடுவார்கள். ஆசிட் முட்டைக்கோ, தற்கொலைக்கோ என்றும் இடமில்லை.

தமிழ்ப் பெண்ணாயிற்றே. என்ன தான் அங்கேயே பிறந்து வளர்ந்திருந்தாலும், அவர்களது நாட்டின் பண்பாடு மாறிவிடுமா என்ன? வெட்கத்தில் தலை குனிந்தவள்,

"மெர்சி" என்றாள்.

"உன்னை நான் எப்பிடி கூப்பிடுறது.?" என்றான் அடுத்த கேள்வியாய்.

"யாஷ்வி என்ர பெயர். அப்பிடியே கூப்பிடலாம்"

"யாஷ்வி" ஒரு முறை உதட்டில் ஓதிப் பார்த்தவன்,


"வடிவான பெயர்." என்றான்.

அதற்கும் வெட்கம் கொண்டு புன்னகைத்தவள், பொருட்களுக்கான பில்லை வாங்குகையில் கூடவே இன்னம் ஒரு காகிதம் வர, அதை ஆராய்ந்தாள்.

அதில் யாருடையதோ கையடக்க தொலைப்பேசி இலக்கம் இருக்க,

"இது யார் நம்பர்." என்றாள்.

"என்ர பெயர் கென்றி. இது கென்றி நம்பர். உங்களுக்கு விருப்பம் இருந்தா, இந்த நம்பருக்கு எடும்." என்றான்.

சிரித்த பாட்டில் அந்த இடம் விட்டுச் சென்றவளையே பார்த்திருந்தவன், அவள் கண்ணிலிருந்து மறைந்ததும் தன் வேலையினை ஆரம்பித்தவன் செல்போனில் புதிதாய் ஓர் அழைப்பு.

வேலையினை பார்த்தவாறே காதில் போனை வைத்ததும் இனிமையாய் அவன் பெயரை உச்சரித்தது அந்தக் குரல். எதிர் பார்க்கவில்லை அவன்.

"யாஷ்வி...?" சந்தேகமாய் கேட்க.

"ஓம்… நான் தான்." என்றதும் தான் பூமிக்கும் வானத்திற்கும் அவன் மனம் குதித்தது.

"குமார்..." அவசரமாய் அழைத்துக் கவுன்ட்டரை பார்க்குமாறு கூறி விட்டு வெளியே ஓடினான் கென்றி.

அதுவரை காருக்குள் இருந்தவாறு அவன் கடையையே பார்த்துக் கதைத்தவள், அவன் கடையினை விட்டு வெளியே வருவதைக் கண்டதும், காரிலிருந்து இறங்கினாள்.

அவளருகே சென்றவன்,

"அப்போ உனக்கு ஓகேவா? என்னை உனக்குப் புடிச்சிருக்கு தானே!" என்றான் சந்தோஷ மிகுதியில்.

உண்மை தான். அவனுக்கு அவள்மீது காதலோ இல்லை என்றால், அவள் இனத்தின் மீது காதலோ தெரியாது. தமிழ்ப் பெண் ஓம் என்றதும் அவ்வளவு சந்தோஷம்.

"எனக்குச் சம்மதம். ஆனா இப்ப வீட்டில எதுவும் சொல்ல ஏலாது. நான் கொஞ்சம் படிக்கோணும்." என்றாள்.

"எந்த அவசரமும் இல்லை. நீர் படிச்சு முடிச்சதும் கல்யாணம் செய்வோம்." காதல் சொன்ன அன்றே கல்யாணப் பேச்சில் வந்து நின்றது அவர்கள் உறவும்.

"ம்ம்... என்று தலையாட்டியவளைப் பார்க்கையில் இப்படியே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் போல் தான் தோன்றியது. இந்த வெட்கம்... இது ஏன் தம் இனப்பெண்களிடம் இல்லை? இப்படி இவர்களும் இருந்தால் எப்படி இருக்கும்?" ஆசை தான் ஆனால் பேச்சில் கூட அவர்களால் அதை உணர முடியாதே!

"அப்ப நான் வாரன்." என்றாள்.

"ம்ம்..." அவளை ரசிப்பதை நிறுத்தவில்லை அவன். அவன் ரசனை அவளை இன்னும் சிவக்கச் செய்தது. சங்கடமாகத் தலையினைக் கவிழ்ந்தவள்,

"இனி இப்பிடி பாக்காதைங்கோ எனக்கு ஒரு மாதிரி கிடக்கு" என்றவள் பேச்சைக் கேட்டதும் பக்கென்று சிரித்தவன்,

"ம்ம்... இனி இப்பிடி பாக்கேல. இனி பாக்கேக்க சன் கிளாஸ் போட்டுக் கொண்டு பாக்குறன்." என்றவன் அதே புன்னகை மாறாது.

"சும்மா போங்கோ. நான் போறன்" என்ற கொஞ்சல் குரலில் கூறியவாறு காரில் ஏறிக் காெண்டவள்,

"இரவுக்குக் கோல் எடுக்கிறன்." என்று ஓடி மறைந்தாள். அன்றைய நாள் அவன் வாழ்வில் பதுக்கி வைக்க வேண்டிய நாள் பட்டியலில் சேர்ந்தது. உல்லாச விசில் அடிப்புடன் அவன் உள்ளே வரவும் கூட்டமும் ஓய்ந்திருந்தது.

"என்ன கென்றி... கடலை வறுத்து முடிஞ்சுது போல..." கேட்டவனது நக்கல் கேள்வியில் இம்முறை வெட்கப்படுவது கென்றி முறையானது.

"பரவாயில்லையே... பிரஞ்சுகாரனுக்கும் வெட்கம் என்டா என்ன எண்டு தெரியுது. என்ன வந்தவள் சொல்லித் தந்திட்டாளோ?" என்றான்.

"சும்மா இரு குமார்." என அவன் மண்டையைச் சொறிய.

"தமிழ் பாெம்பிள தான் வேணும் எண்டு ஒரு வழியா புடிச்சிட்ட போல. எப்பவில இருந்து இந்தப் பழக்கம்." என்றான் அறிந்து கொள்ளும் ஆவலில்.

"பழக்கம் எண்டா இப்பத்தான். ஆனா இதுக்கு முதல் ஒருக்கா பாத்திருக்கிறன்."

"அட பாவி... ஒருக்கா பாத்த உடனம் கவுந்திட்டியா? ஆனா இது ஓவர் ஸ்பீடு." என்றான் கேலியாய்.

"காணும். என்னை வாருறத விட்டுவிட்டு அங்க நிறையச் சாமான் அடுக்காம இருக்கு அதைப் போய் அடுக்கு" என்றான் எங்கே இன்னமும் எதிரில் நின்றால் தன்னை கிண்டல் செய்து கொண்டே இருப்பான் என்று.


"ம்ம் நடத்து நடத்து... எல்லாம் நல்லா நடந்தா சரி தான்." என்றுவிட்டு குமாரும் வேலையினைப் பார்க்கச் சென்றான்.
 

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
253
155
43
Theni
கண்டதும் காதலா.?
ஆனா இது காதல் வகையறா இல்லையே
இவனுக்கு தமிழ் பொண்ணு வேனும், அதுக்காக தான் லவ் பன்றதா நினைக்கிறானோ.?
 

Kalaivani shankar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 1, 2024
34
11
8
Karur
எனக்கு என்னமோ இந்த லவ் புட்டுக்கும்னு தான் தோனுது
 

Vimala

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 10, 2023
102
45
28
Trichy
ஆஹான். இவனுக்கு தமிழ் பொண்ணுங்கன்னா ரொம்ப பிடிக்குமோ..
ஹாஹா தமிழ் பொண்ணுங்கதான் கழ்ட்டி விட்டுட்டு போகும். சோ கண்டிப்பா இந்த லவ் கண்டம் ஆகிடும்.
 

Pavithra Shanmugam

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 1, 2024
30
14
8
Erode
ஏன் இந்த லவ் சக்சஸ் ஆகாதுன்னு எல்லாரும் சொல்றாங்க. என்னவா இருக்கும்?
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
118
52
28
Tirupur
காதல்ல விழுந்துட்டானே! 🤩
வெட்கப்படும் ஆண்கள் அழகு! 😍
 

Mayuri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 2, 2024
36
11
8
Bangalore
தமிழ் கலாச்சாரத்தின் மேல், தமிழ்ப்பெண்களின் மேல் கொண்ட மரியாதையை காதல்ன்னு நெனச்சிட்டானோ?