• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பகுதி 1

Tharsan Thanu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
72
46
18
SRILANKA
இராவணனே என் இராமனாய்.............

பகுதி _ 1

அந்த புழுதி படந்த கிராமத்துச் சாலையில் ஒரு கார் மிகுந்த வேகத்துடன் விரைந்து கொண்டிருந்தது.அந்த காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்தவன் அசுர வேகத்தில் காரை ஓட்டிக்கொண்டிருக்க அருகில் அமர்ந்திருந்த அவன் நண்பன் பின் இருக்கையை கவலையுடன் ஒருமுறை திரும்பி பார்த்துவிட்டு மீண்டும் நண்பனின் புறம் திரும்பினான்.

டேய் .... தனா பின்னால.... அவங்க விழுந்துடப் போறாங்கடா..இதற்கு மேலும் யாரும் நம்மைத் தொடர்ந்து வர முடியாது. அதனால கொஞ்சம் மெதுவா போடா..

இல்லை முகில்...இன்னும் ஒரு சின்ன வேலை இருக்கு.அதை முடிக்கும் வரை எதையும் உறுதியா சொல்ல முடியாது. அவ அப்பன பத்தி உனக்கு தெரியாதுடா.இந் நேரம் அவனுக்கு நியூஸ் போயிருக்கும்.கிளம்பி வந்துட்டே இருப்பான்.அவன் வாரதுக்குள்ள நான் முடிக்க வேண்டிய வேலையை முடிச்சிடணும்.

டேய் தனா என்ன இது வயசில பெரியவங்கள கொஞ்சமும் மரியாதை இல்லாம அவன் இவன்னு பேசிட்டு....என்று அதட்டினான் முகிலன்.

ஹா...என்னடா நான் ஏதோ அந்தாள புதுசா மரியாதை இல்லாம பேசுற மாதிரி சொல்ற..அலட்சியமாக புருவம் உயர்த்தி நக்கலாக கேட்டான் தனஞ்செயன்.



தனா என்ன இருந்தாலும் அவர் ...என்று இழுத்த முகிலனின் சுருதி குறைந்திருந்தது.
முகில் போதும்......தனஞ்சயனின் கோபம் அவனின் பாதம் அக்சிலேட்டரில் பதிந்த விதத்தில் தெரிய முகிலன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் வாயை இறுக மூடிக்கொண்டான்.

கார் ஊருக்குள்ளே நுழையும் முன்பு ஊர் எல்லையில் நின்ற பரந்து விரிந்த ஓர் ஆலமரத்தின் கீழ் வண்டியை நிறுத்திய தனஞ்சயன் ஓர் ஆழ்ந்த மூச்சை எடுத்துவிட்டு காரின் பின் இருக்கையைத் திரும்பி பார்த்தான்.

கழுத்து ஒரு பக்கம் சரிந்திருக்க நலுங்கிய ஆடையுடன் கோணல்மாணலாய் சிறுபிள்ளை வரைந்த சித்திரமாய்ப் படுத்திருந்தாள் ஒரு இளம்பெண். ஒரு கணம் இமைக்காமல் அவள் முகத்தை வெறித்தான் தனஞ்சயன். அவன் விழிகளில் சிறு இளக்கம் வந்து போனது. காரணமின்றி உன்னை தண்டிக்கப்போகிறேன்.

ஆனால்.......... எல்லாம் இது எல்லாத்துக்கும் காரணம் உன் தந்தை தர்மராஜ் தான். ஹ்ம்ம்...இதற்கு பிறகு அவன் தன் மூஞ்சியை எங்கே கொண்டு போய் வைத்துக்கொள்கிறான் என்று நானும் பார்க்கிறேன்.அதுவரை சற்று இளகி இருந்த தனஞ்சயனின் முகம் மீண்டும் இறுக அவன் விழிகளில் ஓர் விபரீத ஒளி மின்னி மறைந்தது.

டேய் முகில் போடா போய் ஒரு சோடா வாங்கிட்டு வா. இவளை எழுப்பணும்.சரியான நோஞ்சான் போல.ஒரு தடவை ஸ்ப்ரே பண்ணின மயக்கமருந்துக்கே இவ்ளோ நேரம் மயங்கி போய் கிடக்கிறா..என்று நண்பனை விரட்டினான்.

முகிலன் காரை விட்டிறங்கி சற்று தொலைவில் இருந்த கடை நோக்கி நடக்க தன்பக்க கதவை திறந்து கொண்டிறங்கிய தனஞ்சயன் கண்களில் ஒரு வீம்புடனும் உதடுகளில் ஓர் அலட்சியப் புன்னகையுமாக காரின் பின்பக்க கதவைத் திறந்து உள்ளே ஏறினான்.அதாவது அந்த பெண் சுபா..சுபாங்கி இருந்த பக்கமாக.............

சற்று நேரத்தில் கையில் இரண்டு குளிர்பானத்துடன் காரை நெருங்கிய முகிலன் அவன் நண்பன் உதட்டுக்கு கொடுத்த ஆறாவது விரலான சிகரெட்டுடன் காருக்கு வெளியே சற்று தள்ளி நின்று தூரத்துப் புள்ளியை வெறித்துக் கொண்டிருப்பதைக் கண்டவன் அவனை நெருங்கி தோளில் கை வைத்தான்.

தனஞ்செயனின் சுளித்திருந்த அடர்ந்த புருவங்கள் நண்பனைக் கண்டதும் மீண்டும் நேராகின.

என்ன தனா சிந்தனை?? செய்தது தவறென்று தோன்றுகிறதா?? எனக்கென்னவோ நீ தவறு பண்ணுகிறாய் என்று தோன்றுகிறது டா. இவள் அப்பா பண்ணிய தவறுக்கு இவள் என்னடா பண்ணுவாள்.

ஹ்ம்ம்..அந்த பெரிய மனுஷனுக்கு மகளாகப் பிறந்தது தான் இவள் செய்த தவறு டா. இதோ பார் முகில் நான் முன்பே உனக்கு அனைத்தையும் கூறிவிட்டேன்.உனக்கு இதில் உடன்பாடு இல்லாவிட்டால் நீ எனக்கு உதவி செய்யத் தேவை இல்லை என்றும் கூறிவிட்டேன். அப்படி இருந்தும் நீயாகவே தான் என்னுடன் இருக்கிறாய்.



டேய் தனா.நீ என் நண்பன் டா.உயிர் நண்பன்.என்னால் எப்படி உனக்கு உதவி செய்யாமல் இருக்க முடியும்?? துரியோதனன் செய்வது தவறு என்று தெரிந்தும் அவன் கூடவே இறுதிவரை இருந்தான் டா கர்ணன்.அவன் போலத்தான் என் நட்பும்.

ஹ ஹ ஹ....திடீரென தனஞ்செயன் பலமாக சிரிக்கவும் டேய்.. தனா...என்னடா எதுக்கு இப்படி சிரிக்கிறாய் என்றான் முகிலன்.


ஆக நீ என்னை துரியோதனன் போல என்கிறாய்?? உன் நட்பு எத்தகையது என்பதை நிரூபிக்க என்னை மிகவும் உயர்த்திவிட்டாய் டா. நண்பேண்டா..

தனஞ்செயன் சொல்லவும்தான் தான் கூறியதன் அர்த்தம் முகிலனுக்கு புரிந்தது. புரிந்ததும் அவனுக்கும் லேசாகச் சிரிப்பு வந்தது.

ம்ஹும் உன்னை துரியோதனனுக்கு உவமித்தது தப்பு தான் டா ஒத்துக்கிறேன்.உன்னை எல்லாம் இராவணனுக்கு உவமித்திருக்கணும்.அப்படிப்பட்ட வேலையைத் தானே நீ செய்திருக்கிறாய்.

ரொம்பவும் சரியாய் சொன்னாய்டா.உனக்கொன்று தெரியுமா முகில் எனக்கு இராமாயணத்தில் மிகவும் பிடித்த பாத்திரமே இராவணன் தான். அவனின் வீரம் பிடிக்கும்.சிவபக்தி பிடிக்கும்.எதைப்பற்றியும் யாரைப்பற்றியும் கவலை கொள்ளாத முரட்டுத் துணிச்சல் பிடிக்கும்...சீதையை கடத்தி வந்தாலும் அவள் சம்மதம் இன்றி அவளைத் தீண்டக்கூடாது என்று விலகி இருந்த அவனின் ஆண்மை கண்ணியம் பிடிக்கும்....

டேய்.... டேய்....போதும் நிறுத்து.விட்டால் இராவணனை ஹீரோவாக்கி மீண்டும் ஒரு இதிகாசம் படைத்துவிடுவாய் போல. உன்னிடம் இதைப்பற்றி பேசுவதும் கருங்கல்லில் தலையை மோதுவதும் ஒன்றென்று தெரிந்து கொண்டும் உன்னிடம் பேசியது என் தவறு தான்.வா முதலில் உன் மாமன் மகளைப் பார்ப்போம்.

டேய்..அவளை என் மனைவி என்று வேண்டுமானால் கூடச் சொல்லு.அதைவிட்டு அந்தாளை மாமன் அது இதுவென்றாய் நான் உன்னை என் நண்பன் என்றும் பார்க்காமல் கொலை செய்துவிடுவேன்.தனஞ்சயன் ஆத்திரத்துடன் பல்லைக்கடித்தான்.

சரி சரி..கோபப்படாதே டா வா.


என்னடா இந்த பெண் இன்னும் கண்விழிக்கவில்லை.மயக்கமருந்தை அதிகமாக போட்டுவிட்டோமோ!!

ம்ம்ம்..இப்படி ஒல்லிக்குச்சியாக இருந்தால் இப்படி தான்.அந்தாள்.அது தான் இவள் அப்பன்.அவனுக்கு வாய்கிழிய யாரையும் மட்டம் தட்டி பேசமட்டும் தான் தெரியும் போல பார் பெண்ணை எப்படி வளர்த்து வைத்திருக்கிறான் என்று.பத்துநாள் பச்சைத் தண்ணீர் கூட குடிக்காமல் பட்டினி கிடந்தவள் போல..

பார்பதற்கு அந்த பெண் சுபாங்கி ஒன்றும் அவ்வளவு மெலிவாக இல்லை.மெல்லிய பூங்கொடி போல அழகாகத் தான் இருந்தாள்.ஆனால் அவளின் தந்தையைத் திட்ட சாக்குத் தேடி தேடி அலையும் நண்பனிடம் இதைச் சொன்னால் அவனுக்கும் சேர்த்து திட்டு விழும் என்பதால் வாயை இறுக மூடிக்கொண்டு இருந்துவிட்டான் முகிலன்.

ம்ம் அந்த சோடாவ இங்க கொடுடா.நண்பனிடம் இருந்து அதை வாங்கியவன் சுபாங்கியின் முகத்தில் அதை சிறிது தெளித்தான்.பின் நன்றாக காற்று வருமாறு காரின் கதவைத் திறந்து வைத்தான்.

குறையத்தொடங்கிய மயக்கமருந்தின் வேகமும் முகத்தில் சில்லெனப்பட்ட திரவமும் இதமாக உடல் தழுவிய குளிர்காற்றும் திரிசங்கு சொர்க்கத்தில் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்த சுபாங்கியை மெல்ல மெல்ல பூமிக்கு கொண்டுவந்தன.

டேய் முகில் கண்விழி அசையுதுடா. இவ முழிக்கப் போறான்னு நினைக்கிறேன்.முழிச்சு கத்தினான்னா அவ வாயை அடைக்க ஒரு துணியை எடுத்து ரெடியா வைடா..

இந்தக் குரல்...இந்தக்குரல்...அவளுக்கு பரீட்சயமானது...சற்று முன்பு கூட இதே குரல் தான் டேய் அந்த மயக்கமருந்து ஸ்ப்ரே எடுடா அவ நெருங்கிட்டா..என்று பேசியது..அந்த குரலைக் கேட்டு அவள் சுதாரிப்பதற்கு முன்பே அவள் முகத்தில் ஏதோ திரவம் பீய்ச்சப்பட அதற்கு மேல் அவள் ...அவள்....

அட கடவுளே அவள்...சுபாங்கி கடத்தப்பட்டிருக்கிறாள்.... துள்ளி எழுந்தமர்ந்தாள் சுபாங்கி.அவள் விழிகள் இரண்டும் கலவரத்துடன் நாற்புறமும் மிரண்டு சுழன்றன.அங்கு கையில் ஒரு துணிச் சுருளுடன் அவள் அருகே வந்தவனைக் கண்டு அவள் விழிகள் வியப்புடன் விரிந்தன..




நீ...நீங்களா???
நா..நானே தான்.

ஆ..ஆனால் ஏன் இப்..... இப்படி???

அட பரவாயில்லையே!!! மயக்கத்தில் இருந்து விழிப்பவர்கள் எல்லாம் வழக்கமாக கேட்கும் நான் யார்?? நான் எங்கே இருக்கேன்??? என்ற டயலாக்கை பேசாம வித்தியாசமா ஏன்னு கேட்கிறாய்?? உன்னைக் கடத்தியிருக்கோம்னு இவ்ளோ சீக்கிரம் புரிஞ்சுகிட்டியே நீ புத்திசாலிதான். நக்கலாக உதடு வளைய பேசிய தனஞ்செயன் உடனேயே அது சரி நீ யார்..தர்மராஜின் பெண் ஆயிற்றே இந்தளவு கெட்டிக்காரத்தனம் இல்லாவிட்டால் எப்படி என்றான் உதடு வளைய .

நிச்சயம் அவன் குரலில் இருந்தது பாராட்டல்ல பூரணமான நக்கலே அதில் விரவி இருந்தது. ஹ்ம்ம் ...ஜென்ம சத்துரு போன்ற விரோதியான அவள் தந்தையை அவன் புகழ்ந்து பேசுவான் என அவள் எதிர்பார்க்கவும் இல்லைத்தான்.
ஆனால் அவளை எதற்கு இப்படிக் கடத்தி வந்திருக்கிறான்.இவன் இப்படி ஒரு செயலைச் செய்வான் என அவள் நினைத்தும் பார்த்ததில்லையே !!!!!

என் கேள்விக்கு பதில் வேணும் அ..தனஞ்செயன்..

அவளை ஒரு கணம் முறைத்தவன் தனஞ்சயனா?? என்றான் ஒரு மாதிரிக்குரலில்.

உங்கள் பெயர் அது தானே!! பின்னே அதைச் சொல்லித்தானே அழைக்க முடியும்.அவள் குரலில் சிறு கேலி இழையோடியதோ??

ஓஹோ !!!! யாராய் இருந்தாலும் பெயர் சொல்லித்தான் அழைப்பீர்கள் போல?? தனஞ்செயனின் கூர் பார்வை சுபாங்கியைத் துளைத்தது. ஹ்ம்ம்..தர்மராஜின் பெண் இல்லையா அவனின் திமிர் இல்லாமல் எப்படி இருக்கும்.

இதோ பாருங்கள் என்னை என்ன வேண்டுமென்றாலும் சொல்லுங்கள்.என் அப்பாவைப் பற்றி பேசாதீர்கள்.

ஓ...உன் அப்பன் என்றால் உனக்கு ரொம்ப பாசம் இல்லையா?? அவனுக்கும் அப்படித்தானே ?? ஹ ஹ ஹ...இது இது இதுக்கு தாண்டி உன்னைக் கடத்தினேன். இப்போ சொல்றேன் கேட்டுக்கோ இன்னைல இருந்து உன் அப்பனுக்கும் உனக்கும் ஏன் உன் குடும்பத்துக்கும் உனக்குமே எந்த தொடர்பும் இல்லை.ஒட்டும் இல்லை உறவும் இல்லை.புரிஞ்சுதா??

ஹலோ ..என் அப்பாவோட எனக்கு உறவில்லை என்று சொல்ல நீங்க யாரு சார் ??

ம்ம்..உன் புருஷன்.
வாட்???
இன்னும் கொஞ்ச நேரத்தில நடக்க போறத சொன்னேன்.

ஹ ஹ...குட் ஜோக். ஒரு பெண்ணோட சம்மதம் இல்லாம நீங்க அவளைக் கல்யாணம் பண்ணிக்க இது ஒன்றும் கற்காலம் இல்லை மிஸ்டர் தனஞ்சயன்.

பெண்ணோட சம்மதம் இல்லைன்னு யாரு சொன்னது.எல்லாம் இருக்கு.
என்ன உளர்றீங்க?? நான் எப்போ உங்களை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னேன்??
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,105
679
113
Ariyalur
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️
முதல் அத்தியாயத்திலேயே தலைப்புக்கு உரிய காரணம் தெரிஞ்சிடுச்சு சூப்பர் சகி. சுபாங்கி தனாக்கிட்ட கஷ்டப்படுவாளோ இல்ல தனா இவகிட்ட மாட்டிக்க போறானோ தெரியலையே 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔