• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பகுதி 5

Tharsan Thanu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
72
46
18
SRILANKA
பகுதி _ 5



சுபாங்கி அந்த வாழ்க்கை முறைக்கு தன்னை மெல்ல மெல்ல பழக்கபடுத்திக்கொண்டாள். காலையில் விழித்தவுடன் பின்புறம் மாட்டுக் கொட்டகை பக்கம் ஒரு வாக். அதன் பின் குளியல், உணவு.....



பின் பகல் முழுதும் பிரபாவதியின் புடவையைப் பிடித்துக்கொண்டு அத்தை.. அத்தை..என்று அவர் பின்னே சுற்றுவாள்.இரவும் அவருடன் அவர் அறையிலேயே உறங்கி விடுவாள். இரவானால் மிரண்ட குழந்தை போல தன்னிடம் ஒண்டிக்கொள்ளும் அவளை தனாவின் அறைக்கு போம்மான்னு சொல்லவும் அவருக்கு மனம் வரவில்லை. அவன் இயல்பாக இருந்தால் அனுப்பி இருப்பார் தான். அவன் தான் கடத்தி வந்து தாலி கட்டியதுடன் தன வேலை முடிந்தது என்பது போல் நடந்து கொண்டானே.பின்னும் ஏன் அவளை அனுப்ப வேண்டும்.. இருவருக்கும் சற்று காலம் தேவை என்பதை புரிந்து கொண்டவர் போல பிரபாவதியும் அவர்கள் தனிப்பட்ட விடயம் எதிலும் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை.




காலை உணவு.... அந்த நேரம் தான் அனேகமாக அவள் தனஞ்சயனை சந்திப்பது. சில வேளைகளில் முகிலனும் உடனிருப்பான்.அவன் இருந்தால் உணவு வேளை கலகலப்பாக கழியும்.



சுபிக்கு சரியாக அவனும் பேசுவான்.அவளுக்கு அவன் கூட பேசும் போது அவள் தம்பி பப்பு நினைவுக்கு வருவான்.அவள் கூட சரிக்கு சரி வாயடித்து போட்டி போடும் தம்பி......அவள் முகம் வாடினால் பொறுக்காத தம்பி......



ஹ்ம்ம்..அவன் இப்போது அவளைப் பற்றி என்ன நினைத்துக்கொண்டிருப்பான்...அவன் அக்கா இப்படி ஒரு செயலைச் செய்திருப்பாள் என்று நம்புவானா?? அப்புறம் விபு..விபாங்கி..அவள் தங்கை.இருவரும் நல்ல தோழிகள் போல எவ்ளோ க்ளோஸ் ஆக இருப்பார்கள்.அவள் அடி மனதின் அந்தரங்கம் தெரிந்த ஒரே ஆள் அவள்தானே!!!



அவர்கள் இருவரும் அவள் பேசினால் புரிந்துகொள்வார்கள்.ஆனால் அவர்கள் கூட அப்பாவைத் தாண்டி பேசுவது கடினம்.அதைவிடவும் கடினம் தனஞ்சயனைத் தாண்டி அவர்களுடன் அவள் பேச முயற்சிப்பது.



ஹ்ம்ம் இங்கு வந்த மறுநாள் இரவு பன்னிரண்டு மணிக்கு அனைவரும் தூங்கியபின் திருட்டுத்தனமாக வீட்டு லேன்ட் லைனில் இருந்து தங்கை விபுவின் எண்ணுக்கு அழைத்தாள்.ஆனால் மறுபுறம் கேட்டது தனாவின் குரல்.



என்னடா மேடம் அதிபுத்திசாலித்தனமாய் எந்த முயற்சியும் எடுக்க காணோமேன்னு நினைத்தேன் செய்துவிட்டாய்.ஏண்டி... என்னை என்ன அவ்ளோ கேனைன்னு நினைச்சியா?? என்று உறுமியவன் தொடர்ந்து



என்ன அப்பன் கூட பேசணும்னு தோணுதா?? நடந்த எல்லாம் சொல்லனும்னு தோணுதா?? ஒண்ணு பண்ணேன்... பேசாம உங்க வீட்டுக்கே போய் உங்க அப்பா கூட பேசிட்டே இரேன். எனக்கு நீ போறதில எந்த ஆட்சேபனையும் இல்ல. இந்த ஊருக்கு முன்னால உன்ன கல்யாணம் பண்ணனும்னு நினைச்சேன் பண்ணிட்டேன்.



இப்போ நீ போய் உங்க அப்பன் வீட்டில இருந்தாலும் உன் பேரு இனி தனஞ்சயன் பொண்டாட்டி தாண்டி. அது எனக்கு போதும். உன் அப்பனின் நிம்மதிய குலைக்கவும் அந்த ஒரு வார்த்தை போதும்டி. என்றான் வன்மத்துடன்.



இதுக்கு மேல உன் அப்பனோட பேசணுமா இல்லையான்னு நீயே முடிவு பண்ணிக்கோ என்று அழுத்தமாய் உரைத்தவன் போனை வைத்துவிட்டான்.



அதன் பிறகு சுபாங்கி எந்த முயற்சியும் எடுக்கவில்லை.எதற்கு சும்மா இருக்கும் சிங்கத்தை சொறிந்து விடணும் பின் அது மேலே விழுந்து பிறாண்டனும்.. வேணாம் என்று விட்டுவிட்டாள்.


தாய் தந்தை தம்பி தங்கை என்று வீட்டு நினைவு வரும் போது மிகவும் கஷ்டமாய் இருக்கும். அறையை பூட்டிவிட்டு உள்ளே இருந்து கண்ணீர் சிந்துவாள்.வெளியே அதுவும் தனா முன்பு கண்ணீர் சிந்திவிட்டால் அவள் சுய கௌரவம் என்னாவது?? அந்த முதல் நாளுக்கு பின் அவன் முன்பு தன வருத்தத்தை காட்டிவிடக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்தாள்



அப்படி அவள் மனது மிகவும் கஷ்டப்படும் வேளைகளில் பிரபாவதியின் அன்பும் பரிவும் முகிலனின் நகைச்சுவைப் பேச்சும் பெரிதும் இதம் கொடுத்தது நிஜம்.



முகிலனுக்கு அன்னை இல்லை.தந்தை மட்டும் தான். தனஞ்சயன் அளவுக்கு இல்லை என்றாலும் ஓரளவு வசதியான குடும்பமே. சிறுவயதில் இருந்து தனா கூடவே வளர்ந்தவன் மா.எனக்கும் அவன் ஒரு பிள்ளை போலத்தான்.....என்று பிரபாவதி கூறி இருக்கிறார்.


அவன் தனா போல இல்லை.மிகவும் கலகலப்பானவன்.அவன் கூட பழகுவது சுபாங்கிக்கும் இலகுவாக இருந்தது. சொல்லப்போனால் அவன் மீது ஒரு சகோதர பாசமே வந்துவிட்டது.



என்ன சுபாங்கி அம்மையாரே !!!! தனிமைத் தவமோ?? தனியே தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தவளை முகிலனின் குரல் கலைத்தது.


ஹ்ம்ம் ..வேறு என்ன செய்வது முகிலண்ணா. எவ்ளோ நேரம் தான் அத்தை பின்னாலேயே சுற்றுவது. பாவம் அவர்களும் ஓய்வெடுக்க வேணாமா??


ஹ்ம்ம் நீ பக்கத்தில் இருந்தால் அவர்களுக்கு ஓய்வே தேவை இல்லை என்பார்கள். பாவம் சுபாங்கி அவர்கள். தனிமையில் ரொம்பவும் தவித்து போய் இருந்தார்கள். இப்போது நீ வந்ததும் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள்.



ஹ்ம்ம்..ஏனாம் அத்தை கூட சற்று நேரம் அமர்ந்து பேச முடியாத அளவிற்கு உங்கள் உத்தம நண்பனுக்கு அப்படி என்ன வேலையாம்???



ஹ்ம்ம்...அவனுக்கு நிறைய வேலைகள் மா. தென்னத்தோப்பு, மாந்தோப்புன்னு அவற்றை பார்வையிடணும் அப்புறம் தும்புத்தொழிற்சாலை ,ஊறுகாய் பாக்டரி இதெல்லாம் பார்க்கணும் அதோட வயல்....இன்னும் வெளி வேலைகள் அவன் தனிப்பட்ட வேலைகள்னு..........






ஒஹ் ..உங்க பிரெண்ட் பெரிய ஆள்தான்னு சொல்லுங்க. அவள் குரலில் நக்கல் தெறித்தது.


ம்ம்... உன் புருஷன் ரொம்ப பெரிய ஆள் தான் மா.


காமெடி பண்ணாதீங்க முகிலண்ணா.


சுபாங்கி ...நீ புத்திசாலி. என்னதான் இருந்தாலும் நடந்தது நடந்துவிட்டது.


வெயிட் ....வெயிட்.. மீதிய நான் சொல்றேன்...அடித்தாலும் பிடித்தாலும் அவன் தான் இனி உன் கணவன். என்னவோ சொல்வாங்களே.....ஹ்ம்ம்....ஹான்... கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.... சோ ...அவன திருத்தி அவன் கூட நல்லபடியா வாழ ட்ரை பண்ணு. இது தான் இனி உன்னோட வாழ்க்கை...எக்ஸ்ட்ரா ..எக்ஸ்ட்ரா.... ..இத தானே சொல்ல வந்தீங்க??

சுபி....


வேணாம்..முகிலண்ணா..விட்டிருங்க....இப்போதைக்கு இத பத்தி எதுவும் பேச வேணாம்.


சரிம்மா உன் இஷ்டம். நீ புத்திசாலி பார்த்து நடந்துக்கோ..


அச்சோ ..அண்ணா..யார் இந்த பொய்ய உங்களுக்கு சொன்னது?? நா படு மொக்கு. லாஸ்ட் பெஞ்ச் பார்ட்டியாக்கும்.


ஹ ஹ.....சுபி..... தப்புதான் தாயே விட்டிரு. முகிலன் கைதூக்கி சரணடைவது போல் பாவனை செய்ய இருவரும் வாய்விட்டு சிரித்தனர்.


அந்த சிரிப்பை பார்த்தபடியே வீட்டினுள் நுழைந்த தனாவின் விழிகளில் சிறு குழப்பம் மின்னி மறைந்தது.


 
  • Like
Reactions: Vathani

Tharsan Thanu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
72
46
18
SRILANKA
என்ன பொண்ணு இவ?? எப்படி இவளால இப்படி இருக்க முடியுது. இவ நடந்துக்கிறத பார்த்தா இவள நாம கடத்திக்கிட்டு வந்து கட்டாயக் கல்யாணம் பண்ணோமா..இல்லையானே சந்தேகம் வருதுடா சாமி. ஹ்ம்ம் .. அப்படி கொஞ்சம் கூடவா கஷ்டம் இல்லாம இருக்கும். ஹ்ம்ம்..அம்மா தன் பொண்ண போல ஏன் அதைவிட மேலேயே பாசத்தை கொட்டுறாங்க தான்..ஆனால் என்னதான் பாசம் காட்டினாலும் அவ வீட்டு நினைவு வராமலா போகும்..

வரும்...கட்டாயம் வரும்.. ஆனா அத வெளிக்காட்டிக்க மாட்டாளாம்.. திமிர்... இருக்கட்டும்... இவ அப்படி மூலைல இருந்து அழுதுட்டே இருந்தா அவனுக்குமே பார்க்க எரிச்சலாய்த் தான் இருக்கும். அதைவிட இப்படி இருக்கறதே மேல். அலட்சியமான ஓர் தோள் குலுக்கலுடன் அவள் குறித்த எண்ணத்தை உதறினான் தனா.



சுபி இங்கு வந்து ஒரு வாரம் ஓடியிருந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை. வழக்கம் போல காலை உணவு முடிந்ததும் அன்று தனஞ்சயன் எங்கும் வெளியே கிளம்பவில்லை. கூடத்தில் அமர்ந்து ஏதோ கணக்கு வழக்குகள் பார்த்துக்கொண்டிருந்தான்.அவனுடன் கூடவே பிரபாவதியும் அமர்ந்து ஏதோ பேசியபடியிருக்கவே அந்த இடத்தில் தான் தனிமையாய் உணர்ந்த சுபாங்கி மெல்ல வீட்டின் பின்புறம் நழுவினாள்.



இங்கு வந்த நாளில் இருந்து பெரும்பாலும் அவள் தனிமைப் பொழுது கழிவது இங்கு தான். பிரபாவதி கூட வியப்புடன் கேட்டார். ஏன்டா சுபிக்குட்டி உனக்கு மாடுகள் என்றால் அவ்ளோ பிரியமா?? என்று. பிரியம் என்பதை விட அவள் தன் வீட்டினை மிகவும் மிஸ் பண்ணும் தருணங்களில் அவள் மனதை திசை திருப்ப அவை உதவுகின்றன என்பது தான் சரி.ஆனால் அதை கூறினால் அந்த அன்பான அத்தையின் மனது கஷ்டப்படும் என்பதனால் சிறு சிரிப்புடன் பேசாமல் இருந்துவிட்டாள்.



வீட்டின் பின்புறம் பசுவும் கன்றுமாக பத்து மாடுகளுக்கு மேல் இருந்தது.மாடுகளைப் பராமரிக்க என்று அங்கேயே ஒரு குடும்பம் குடி வைக்கப்பட்டிருந்தது. சாமிநாதனும் அவன் மனைவி மற்றும் இரு பிள்ளைகளும் அங்கு குடியிருந்தனர். சாமிநாதன் மாடுகளைப் பராமரிப்பதுடன் தனாவின் தோப்பிலும் வேலை செய்தான்.அவன் மனைவி பார்வதி.அக்மார்க் கிராமத்து பைங்கிளி. பெரிய பொட்டு, பூ, கணவன் வாயில் இருந்து விழும் வாக்கே வேதவாக்கு. என வாழ்பவள். அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் என கேள்வி. இதுவரை அவர்களை சுபி பார்த்ததில்லை.



சுபியின் மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சம் அங்கு அந்த மாடுகள் தான். இரண்டு மூன்று சிறு கன்றுகள். அவளைக் கொள்ளை கொள்பவை. மிகவும் தனிமையாய் உணரும் தருணங்களில் இவள் அவற்றைத் தான் நாடுவாள். அந்த வைக்கோலும் சாணமும் கலந்த ஏதோ ஓர் வாசனையும் அந்த சிறு கன்றுகளின் மிரண்ட பார்வையும் , அவை துள்ளி ஓடும் அழகும் அவற்றின் ஸ்பரிசமும் அவளுக்கு இதம் கொடுப்பவை.



இவளைக் கண்டதும் சிறு புன்னகையுடன் வாங்கம்மா.. அந்த சிவப்பி பக்கம் மட்டும் போய்டாதீங்க.அது கொஞ்சம் மூர்க்கம்.எப்போ என்ன செய்யும்னு தெரியாது. இங்கன கண்டுக கூடவே இருங்க என்று அவளை வழக்கம் போல எச்சரித்துவிட்டு சாமிநாதன் போய்விட மெல்ல அந்த கருப்பும் வெள்ளையும் கலந்த அவளுக்கு மிகவும் பிடித்த கன்றை மெல்ல வருடிக்கொடுத்தாள்.அது தலையை திருப்பி இவள் கையை நக்கியது. சிறு சிரிப்புடன் அருகில் இருந்த புல்லில் கொஞ்சத்தை அள்ளிக்கொடுக்க சமத்தாக அவள் கையிலிருந்து அதை ஆசையாக வாங்கி உண்டது.



சோ ஸ்வீட்.... என்று அதன் நெற்றியில் முத்தம் வைத்தவள். நிமிரும் போதே இவங்க தான் அந்த அக்கா போல டா. என்று ஒரு சிறுமியின் குரல் பின்னிருந்து கேட்டது. சிறு சிரிப்புடனே திரும்பினால் ஒரு சிறுமியும் அவளைவிட ஓரிரு ஆண்டுகள் பெரியவன் போல ஒரு சிறுவனும் அவளை ஆர்வத்துடன் பார்த்தபடி நின்றனர்.



இவள் சிரிப்புடன் ஹாய்...குட்டீஸ்... நீங்க யாருன்னு நான் தெரிஞ்சுக்கலாமா??? என்று கேக்கவும்


நான் பூவிழி.இவன் என் அண்ணன் கடம்பன்.அதோ அது தான் எங்க வீடு என்று படு துறுதுருப்பாய் பேசினாள் அந்த சிறுமி..


சாமிநாதன் பிள்ளைகளா என்று மனதினுள் எண்ணியவள் வாவ்....பூவிழியா உன் பேரு? ரொம்ப அழகா இருக்கே உன் பேர்....உன்ன போலவே..... என்று அவள் கன்னத்தில் தட்டினாள்.


கூச்சப்பட்டு நெளிந்த சிறுமி நீங்க தான் ரொம்ப அழகுக்கா.உங்களை தான் தனா மாமா கல்யாணம் செய்துக்கிட்டாரா?? என்று கேட்ட சிறுமி கூடவே நீங்க ஏங்கா அவரை கல்யாணம் பண்ணீங்க?? என்று ஒரு கேள்வியையும் கேட்டாள்.


திடுக்கிட்டு அந்த சிறுமியைப் பார்த்தவள் ஏன்மா அப்படி சொல்கிறாய் என்றாள்.


ஹ்ம்ம் எங்களுக்கு அவர பிடிக்கவே பிடிக்காது.எப்பவுமே கோபமா இருப்பாங்க.. எங்க பள்ளில மார்க் குறைஞ்சா எங்க பிரின்சிபல் ஐயா தனா மாமாகிட்ட சொல்லிடுவாங்க.அப்புறம் அவங்க எங்கள கூப்பிட்டு திட்டுவாங்க..


ஒஹ்...என்ற சுபிக்கு சிரிப்பு வந்தது. கூடவே சிறு குறும்பும் வர உங்களுக்கு தெரியுமா எனக்கு கூட அவர பிடிக்காது...என்றாள்.

நிஜமாவாக்கா?? என்று அவர்கள் வாய்பிளந்து கேக்க


ம்ம்ம் ..நிஜம்மா...எந்த நேரமும் சிடுசிடுன்னு இருக்கிறவங்கள யாருக்கு தான் பிடிக்கும்...உர்ர்ர்ர்.. என்று முகத்தைச் சுழித்து காட்டியவள் அவர்கள் கிளுக்கி சிரிக்கவும் தானும் புன்னகைத்தபடி.. ஹ்ம்ம்..ஆனால் ஒன்று எனக்கும் யாராவது குறைய மார்க்ஸ் எடுத்தால் பிடிக்காது. நான் எல்லாம் ஸ்கூல் படிக்கும் போது கிளாஸ் பர்ஸ்ட் ஆக்கும் என்று பெருமையடித்தாள்.

நிஜமாவாக்கா??

நிஜம்மா..

ஹ்ம்ம்... நான் முதல் ஐந்துக்குள்ள வருவேன் கா. இவன் மக்கு...முதல் பத்துக்குள்ள கூட வர மாட்டான்.


போடி... போன பரீட்சைல நான் எட்டாவதா வந்தேன். என்று கடம்பன் ரோசத்துடன் சொல்லவும் தன்னை மீறி சிரித்தவள்


ஹ்ம்ம் கடம்பா நீ சொல்லு உனக்கு என்ன பாடம் ரொம்ப பிடிக்கும்?? பூவிழி உனக்கு?? என்று விளையாட்டுப் போலவே இருவருடனும் பேசி அவர்களின் கல்வித் தரத்தை அறிந்துகொண்டாள்.


ஹ்ம்ம்.. ஒன்னு பண்ணுவோமா?? நா இனி தினமும் சாயந்தரம் இங்க வருவேனாம். அதோ அந்த வேப்பமரத்துக்கு கீழ இருந்து நாம பேசலாம்..அதோட உங்களுக்கு பாடமும் சொல்லி தருவேனாம்.


அப்போ விளையாட்டு...நானும் அண்ணாவும் விளையாடுவோமே சாய்ந்தரம்..


ஹ்ம்ம்...கொஞ்ச நேரம் படிக்கலாம்.அப்புறம் விளையாடலாம்.

ம்ம்ம்..ஹ்ம்ம்..


அரைமனதுடன் தலையாட்டியவர்களைப் பார்த்து சிறு சிரிப்புடன்.. அவர்கள் தலையை வருடியவள் டேய்.... வாழ்க்கைக்கு படிப்பு முக்கியம் டா. இப்போ நீங்க படிக்காட்டி வாழ்க்கை முழுசும் உங்க அம்மா அப்பா போல கஷ்டப்படனும்.இப்போ கஷ்டப்பட்டு படிச்சா அப்புறம் கஷ்டமில்லாம இருக்கலாம்.


ஹ்ம்ம்...எனக்கு புரியுது.உங்க வயசில விளையாட்டு தான் முக்கியமா தெரியும். நிச்சயமா அதுவும் தேவைதான்.அதுவும் ஓடி விளையாடுறது உடம்புக்கு ரொம்ப நல்லதும் கூட. ஹ்ம்ம்... ஒண்ணு பண்ணலாமா?? கொஞ்ச நேரம் படிக்கலாம்.அப்புறம் நானும் உங்க கூட சேர்ந்து விளையாடுவேனாம். டீல்??? தலை சரித்து கேட்ட அந்த அழகிய அக்காவை சிறுவர்கள் இருவருக்குமே மிகவும் பிடித்துவிட்டது.


நிஜமா நீங்க எங்க கூட விளையாடுவீங்களா?


ஹ்ம்ம்..நீங்க சமத்தா படிச்சா கண்டிப்பா விளையாடலாம்.என்று அவர்கள் கன்னம் தட்டி சிரித்தவள்.சரி ரொம்ப நேரமாச்சு.. நாளைக்கு சாயந்தரம் பார்க்கலாம்..என்று அவர்களை அனுப்பிவிட்டு வீடு நோக்கி நடந்த சுபாங்கியின் நடையில் ஒரு துள்ளல் இருந்தது. தன் தனிமையை தீர்க்க ஒரு வழி கண்டுவிட்ட உற்சாகம்.




சுபாங்கி தம்பி தங்கை அம்மா அப்பா என்று மிகவும் அன்னியோன்னியமான ஒரு குடும்ப சூழலில் வளர்ந்தவள்.அதுவும் அவளும் அவள் தங்கை விபாங்கியும் மிகவும் நெருக்கமான தோழிகள். அந்த வீட்டில் சற்று நேரம் தனிமையாய் ஒரு இடத்தில் அமர்வதென்பதே பெரிய விடயம்.



ஏதாவது சிந்தனையில் அவள் சோபாவில் சாய்ந்திருந்தால் என்னக்கா?? அப்படி என்ன யோசனை என்றபடி தம்பி பப்பு வந்து அருகில் அமர்வான். ஓயீ .. என்ன ட்ரீம்ஸ் அஹ ...ட்ரீம்ஸ்ல யாருடி என்று கண்ணைச் சிமிட்டியபடி தலையில் தட்டுவாள் தங்கை. என்ன கண்ணம்மா தலைவலியா என்று அன்னை நெற்றியை வருடுவார். என் சுபிக்குட்டிக்கு அப்படி என்ன சிந்தனை. காரில் ஒரு ரவுண்ட் போய் வரலாமா?? என்று அழைப்பார் தந்தை.



அப்படி தனிமை என்பதையே உணராமல் இருந்த சுபாங்கி இப்போது மிகவும் தனிமையாய் உணர்ந்தாள். அவள் மனது தன குடும்பத்தினரின் பாசத்துக்கும் அரவணைப்பிற்கும் ஏங்கியது. முடிந்தவரை அவள் தனியே இருந்து வருத்தப்பட வாய்ப்பில்லாமல் பிரபாவதி பார்த்துக்கொண்டார் தான். ஆனாலும் எவ்வளவு நேரம் தான் அவர் பின்னேயே சுற்றுவது. அதுவும் தனா வீட்டிலிருக்கும் சமயங்களில் சுபி தானாகவே அந்த இடத்தைவிட்டு விலகி விடுவாள். பிரபாவதி அழைத்தாலும் சற்று ஓய்வெடுக்க போகிறேன் அல்லது பின்னே சற்று நடக்க போகிறேன் என்றபடி விலகிவிடுவாள். தனஞ்சயன் எதையுமே கண்டுகொள்ள மாட்டான்.


ஹ்ம்ம்... அவன் ஏன் அவளைக் கண்டு கொள்ளப் போகிறான்.அவள் தந்தையை பழி வாங்கத்தானே அவளைத் திருமணம் செய்ய நினைத்தான். செய்துவிட்டான். அதற்கு மேல்.... அவனுக்கு அவளிடம் என்ன அக்கறை இருக்க போகிறது....?? ஹ்ம்ம்.. அவளுக்கும் அவனிடம் ஒன்றும் அப்படி எந்த அக்கறையும் இல்லை... மனதில் ஏதேதோ எண்ணியபடி தலையை சிலுப்பியவள் ..


பார்த்து... மெல்ல.. மெல்ல.. என்ற குரலில் சட்டென நனவுலகுக்கு வந்தாள்.தனஞ்சயன் தான்.



என்ன???


எதுக்கு தலையை அந்த சிலுப்பு சிலுப்புகிறாய்....


ஹலோ... என் தலை சார் அது. நான் என்ன வேண்டுமென்றாலும் செய்வேன். விட்டால் நான் மூச்சு விடுவதற்கு கூட உங்களிடம் அனுமதி கேட்க வேண்டும் என்று சொல்வீர்கள் போல.



ஹ்ம்ம்.. சொல்லலாம் தான். ஆனால் பாவம் போனால் போகட்டும் என்று விடுகிறேன்... அதுசரி சிட்டி கேர்ள்..ஸ்டைலிஷ் கேர்ள்.... இந்த மாடுகள் மேலயும் ..கிராமத்து அழுக்கு பசங்க மேலயும் அன்பு காட்டுறது ரொம்ப ஆச்சரியமா இருக்கே??


ஹலோ... என்னதான் சிட்டில படிச்சு வந்தாலும் எங்க வேரும் இந்த கிராமம் தான். அந்த பாசம் எங்களுக்கும் இருக்கு.


அடேங்கப்பா .... ஹ்ம்ம்.. பத்து வருஷமா இந்தப்பக்கம் எட்டியும் பார்க்காத நீ இத சொல்லி நான் கேக்க வேண்டியிருக்கு பாரு கொடுமடி..


நான் பத்து வருஷம் இந்த ஊருக்கு வரலன்னு கணக்கு வைச்சிருக்கீங்க?? விழி விரித்து இதைக் கேட்ட அவள் குரலில் எதுவோ இருந்தது.



ஆமா ..நீ பெரிய விஐபி பாரு நீ ஊருக்கு வந்ததை எல்லாம் கணக்கு வைச்சிருக்கோம்... எல்லாம் ஒரு குத்துமதிப்பா சொன்னது தான். அவனின் அலட்சியப் பேச்சில் அவள் முகம் சிவந்தது.



அவனை ஓர் வெட்டும் பார்வை பார்த்தாள்.


என்னடி முறைப்பு??? ஹ்ம்ம் ..உன் அப்பனின் ஒரிஜினல் வாரிசுடி நீ.. திமிரில் இருந்து முறைப்பு வரைக்கும் அப்படியே உன் அப்பன் தான்.


இதோ பாருங்கள்... என் முன்னாடி என் அப்பாவை மரியாதை இல்லாமல் அவன் இவன் என்று பேச வேணாம்.


சரிங்க மேடம்....என்று போலிப் பணிவு காட்டியவன் அடிங்க.... அப்படித்தாண்டி பேசுவேன்... பேசினால் என்னடி பண்ணுவ... என்று எகிறினான்.


ம்ம்ம்... ஹ்ம்ம்... நானும் மரியாதை இல்லாம பேசுவேன்...அவள் குரலிலும் கோபம் தொனித்தது.

யாரை?? என் அம்மாவையா??


இல்ல உங்களை.


என்ன???? அவன் அதிர்ச்சியுடன் கேட்க


ஆமாடா... உன்னைத் தான்டா... தனஞ்சயா.....என்றவள் அவன் ஏய்.... என கோபத்துடன் ஒரு எட்டு எடுத்து வைக்கவும் சிட்டாக பறந்து விட்டாள்.


போட்டிருந்த இளம்பச்சை நிற சல்வார் குடை போல காற்றில் விரிந்து பறக்க தேவதை போல் காற்றில் மிதந்தபடி ஓடியவளை சற்று நேரம் முறைத்தபடி நின்றவன் இதழ்களில் இறுதியாய்....சிறியதாய் மிக மிக சிறியதாய் ஒரு புன்னகை மலர்ந்து உடனே மறைந்தது.
 
  • Like
Reactions: Vathani